62 கிலோ ராட்சத சேனைக்கிழங்கை விளைவித்து சாதித்த விவசாயி:

1808754 farmer - 2026
ராட்சத சேனைகிழங்குகளுடன் விவசாயி வில்சன்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் 62 கிலோ எடையுள்ள ராட்சத சேனைக்கிழங்கை விளைவித்து விவசாயி ஒருவர் உலக சாதனை படைத்த நிகழ்வு பெரும் ஆரவாரத்தை ஏற்படுத்தி உள்ளது.

குமரி மாவட்டம் திருவட்டார் அருகே உள்ள வேர்கிளம்பி கல்லங்குழி பகுதியை சேர்ந்தவர் வில்சன்(72). இவர் திருவட்டார் ஒன்றிய அலுவலகத்தில் வட்டார வளர்ச்சி அலுவலராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். விவசாயத்தில் அதிக ஆர்வம் கொண்ட இவர் தனது தோட்டத்தில் சேனைக்கிழங்கு, கூவைக்கிழங்கு, சேம்பு, வாழை, தென்னை போன்ற பயிர்களை சாகுபடி செய்து வருகிறார்.

கடந்த ஆண்டு தோட்டத்தில் சேனைக்கிழங்கு பயிரிடத் தொடங்கினார். அதன்படி அந்த ஆளுயர இலை பரப்பி வளர்ந்த சேனைக்கிழங்கு செடிகள் அறுவடைக்கு தயாரான நிலையில் காணப்பட்டது. அந்த செடிகளில் இருந்து அறுவடை செய்தபோது நான்கு சேனைக்கிழங்குகள் பிரமாண்டமான அளவில் இருப்பதை கண்டு பூரிப்படைந்தார். அவற்றை எடை போட்டபோது 61.700 கிலோ, 55.900 கிலோ, 37 கிலோ, 29 கிலோ எடை கொண்டவைகளாக இருந்தது. அதிகபட்ச எடை கொண்டது 61.700 கிலோ ஆகும்.

ALSO READ:  இந்த ரயில்கள் எல்லாம் எழும்பூர் வராது; தாம்பரத்தோடு சரி

இதுகுறித்து வில்சன் கூறுகையில், “நான் அரசு வேலையில் இருக்கும்போதே விவசாயத்தில் அதிக ஈடுபாடு கொண்டிருப்பேன். என்னுடைய வீட்டைச்சுற்றி தென்னை, வாழை, நல்லமிளகு, இஞ்சி, கூவைக்கிழங்கு, சீனிக்கிழங்கு ஆகியவை பயிரிட்டுள்ளேன். 14 ஆண்டுகளுக்கு முன்பு வேலையில் இருந்து ஓய்வு பெற்று முழுநேர விவசாயி ஆகிவிட்டேன். இயற்கை விவசாயத்தில் எனக்கு முழுமையான நம்பிக்கை உண்டு. பொதுவாக சேனைக்கிழங்கு 5 முதல் 10, 12 கிலோ எடை கொண்டவையாக இருக்கும். கடந்த ஆண்டு இந்திய சாதனைப்புத்தகத்தில் கேரளாவை சேர்ந்த ஒருவர் 56.100 கிலோ எடை கொண்ட சேனையை அறுவடை செய்த தகவல் வெளியானது. அதை முறியடிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் கடந்த ஆண்டு நான் சேனைக்கிழங்கு பயிரிட்டேன்.

சேனைக்கிழங்கு பொதுவாக பத்து மாத பயிர். பங்குனி மாதம் பயிர் செய்து கார்த்திகையில் அறுவடை செய்வார்கள். நான் சேனை மற்றும் என்னுடைய தோட்டப்பயிர்களுக்கு இலை தழை, மாட்டுச்சாணி, ஆட்டுப்புழுக்கை, கோழிக்காரம் ஆகிய இயற்கையான உரங்களை மட்டுமே வைப்பேன். தண்ணீர் தவறாமல் பாய்ச்சுவேன். மேலும், அருகில் குளம் இருப்பதால் எப்போதும் ஈரப்பதமாகவே எனது தோட்டம் இருக்கும்.

ALSO READ:  சாவர்க்கரும் ஜனநாயகமும்

இப்போது 61.700 எடையில் சேனைக்கிழங்கு கிடைத்திருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது. வரும் ஆண்டில் 75 கிலோ எடை கொண்ட சேனையை விளைவிப்பேன்” என்றார். இந்த பிரமாண்ட எடை கொண்ட சேனைக்கிழங்குகளை அப்பகுதியில் உள்ள மக்கள் அதிசயமாக பார்த்துச் செல்கின்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

டெட் மறு ஆய்வு மனு மீதான தீர்ப்பில் உடனடி சட்ட நிவாரணம் தேவை!

ஆசிரியர் சமூகத்தின் கவலைகளுக்கு மதிப்பளித்து, அரசாங்கம் இந்த விஷயத்தில் இரக்கத்துடனும் உறுதியுடனும் செயல்படும் என்று நாங்கள் உறுதியாக நம்புகிறோம்.

பஞ்சாங்கம் மே 30 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் மே 29 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ஒரு துரதிர்ஷ்டவசமான பிரதமர்

நரேந்திர மோதிஜி பிரதமராகப் பதவியேற்று 12 வருடங்கள் நிறைவடைவதையொட்டி சிறப்புப் பதிவு:

பஞ்சாங்கம் மே 28 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Topics

டெட் மறு ஆய்வு மனு மீதான தீர்ப்பில் உடனடி சட்ட நிவாரணம் தேவை!

ஆசிரியர் சமூகத்தின் கவலைகளுக்கு மதிப்பளித்து, அரசாங்கம் இந்த விஷயத்தில் இரக்கத்துடனும் உறுதியுடனும் செயல்படும் என்று நாங்கள் உறுதியாக நம்புகிறோம்.

பஞ்சாங்கம் மே 30 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் மே 29 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ஒரு துரதிர்ஷ்டவசமான பிரதமர்

நரேந்திர மோதிஜி பிரதமராகப் பதவியேற்று 12 வருடங்கள் நிறைவடைவதையொட்டி சிறப்புப் பதிவு:

பஞ்சாங்கம் மே 28 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – மே 27 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

சாவர்க்கரும் ஜனநாயகமும்

சாவர்க்கரை தூற்றும் கம்யூனிஸ்ட்களும் மம்தா பானர்ஜியும் அவரது புரட்சிகர வன்முறை பாதையை பின்பற்றுகிறார்கள். சாவர்க்கரை போற்றும் பாஜக வன்முறை வழியை தவிர்த்து விட்டு ஜனநாயக வழியில் பயணித்து வாகை சூடுகிறது. இது முரணாக இல்லையா ? யார் சாவர்க்கரை பின்பற்றுகிறார்கள் ?

பஞ்சாங்கம் மே 26 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

Entertainment News

Popular Categories