
சாமை அதிரசம்
தேவையானவை:
சாமை அரிசி மாவு – 2 கப்,
துருவிய வெல்லம் – 2 கப்,
ஏலக்காய்த்தூள் – கால் டீஸ்பூன்,
எண்ணெய் – பொரிக்க.
செய்முறை:

சாமை அரிசியை 2 மணி நேரம் ஊறவைத்து, நிழலில் உலரவைத்து, மெஷினில் கொடுத்து அரைக்கவும். வெல்லத் துடன் 2 கப் தண்ணீர் சேர்த்துக் கொதிக்கவைத்து பாகு காய்ச்சி இறக்கி, சாமை அரிசி மாவை சிறிது சிறிதாக அதில் சேர்த்துக் கிளறவும் (அடுப்பில் வைத்துக் கிளறக் கூடாது).
இதனுடன் ஏலக்காய்த்தூள் சேர்த்துக் கலக்கவும். இந்த மாவை 2 நாட்கள் அப்படியே வைத்து, பின்னர் வாழை இலை அல்லது பிளாஸ்டிக் கவரில் வட்டமாகத் தட்டி, எண்ணெயில் பொரிக்கவும்.



