புளிசேரி
தேவையானவை:
வெள்ளரிக்காய் – ஒன்று,
தேங்காய் துருவல் – ஒரு மூடி,
பச்சை மிளகாய் – 4,
சீரகம் – ஒரு டீஸ்பூன்,
மோர் – ஒரு கப்,
உப்பு – தேவையான அளவு.
செய்முறை:
வெள்ளரிக்காயை தோல் சீவி, துண்டுகளாக்கி வேகவிடவும். தேங்காய் துருவலுடன் சீரகம், உப்பு, பச்சை மிளகாய் சேர்த்து அரைக்கவும். வேக வைத்த காயுடன் அரைத்த விழுது சேர்த்து கொதிக்க விட்டு இறக்கி, மோருடன் கலந்தால்… புளிசேரி தயார்!