என்கௌண்டர் செய்து நான்கு பேர் கொல்லப் பட்ட சம்பவத்தைக் கண்டும் பயமில்லாதது போல், திசா மாதிரியான மற்றுமொரு சம்பவம் ஹைதராபாதில் நடந்துள்ளது.
ரங்கா ரெட்டி மாவட்டம் ‘சேவெள்ள’ மண்டலம் தங்கடபல்லியில் திசா போன்றதே மற்றுமொரு வன்கொடுமை கொலை நடைபெற்றுள்ளது.
ஒரு இளம்பெண்ணை வன்கொடுமை செய்து அதன் பின் தலையில் பாறாங்கல்லை போட்டு கொலை செய்துள்ள சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
செவ்வாய் அன்று காலையில் தங்கடபல்லி எல்லையில் உள்ள பாலத்தின் கீழ் அடையாளம் தெரியாத பெண்ணின் (30) உயிரற்ற சடலத்தை அடையாளம் கண்ட உள்ளூர் வாசிகள் போலீசாருக்கு செய்தி தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
பெண்ணின் சடலத்தின் மீது துளி கூட துணையில்லை. பாராங்கல்லைப் போட்டு தலையை உடைத்து மூஞ்சியை சிதைத்து அடையாளம் தெரியாமல் செய்துள்ளார்கள். உடலில் துணி இல்லாததால் வன்கொடுமை செய்து அதன்பின் வேறு எங்கோ கொலை செய்து இங்கு கொண்டு வந்து போட்டுள்ளதாக போலிஸார் தெரிவித்தனர். ஒருவர் அல்ல. இரண்டு அல்லது அதற்கு மேற்பட்டோர் சம்பந்தப்பட்டிருக்க வேண்டும் என்று போலீசார் கருதுகின்றனர்.
ஆதாரங்களுக்காக சுற்றுப்புறங்களில் உள்ள சிசிடிவி கேமராக்களை சோதனை செய்து வருகிறார்கள். பெண்ணுக்குத் தொடர்பான எந்த ஒரு பொருளும் பக்கத்தில் கிடைக்காததால் விவரங்களைச் சேகரிப்பதில் போலீசார் சிரமத்துக்கு ஆளாகின்றனர்.
சேவெள்ள டிஎஸ்பி ரவீந்தர் ரெட்டி சம்பவ இடத்திற்கு வந்து சோதனை நடத்துகிறார். க்ளூஸ் டீம், டாக் ஸ்குவாடு உதவியோடு போலீசார் ஆதாரங்களை சேகரிப்பதில் ஈடுபட்டுள்ளனர்.