Brave lady
Brave lady

கொரோனா தொற்று பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த பெண் ஒருவர், பாடலுக்கு ஏற்றபடி அசைவுகள் செய்து உற்சாகமூட்டிய நிலையில், அவர் உயிரிழந்துள்ளார்.

மே 8-ம் தேதி முதல் வீடியோ ஒன்று வைரலாகி வந்தது. அதில், 30 வயது பெண் ஒருவருக்குச் சிகிச்சைக்கு ஐசியு பெட் கிடைக்காத நிலையில், வெளியில் ஆக்சிஜன் சிகிச்சை மட்டும் கொடுக்கப்பட்டு வைக்கப்பட்டுள்ளார்.

அவர் சில பாடல்கள் பிளே செய்து அதற்கு ஏற்றபடி உடல் அசைவு செய்து வருகிறார். “நம்பிக்கை இழக்காமல் போராடுகிறார்” என்று குறிப்பிட்டு வீடியோ பதிவிடப்பட்டிருந்தது. அதன்பின் 10-ம் தேதி அவருக்கு ஐசியு பெட் கிடைத்துவிட்டது.

lady
lady

அவருக்காகக் கடவுளிடம் வேண்டுங்கள். சிறிய குழந்தை ஒன்று வீட்டில் காத்திருக்கிறது என்று மருத்துவர் மோனிகா பதிவிட்டிருந்தார்.

இதனைத் தொடர்ந்து 13-ம் தேதி “மன்னிக்கவும் தைரியமிருக்க அந்த ஆன்மாவை இழந்துவிட்டோம். அவரது குடும்பத்திற்காகவும், குழந்தைக்காகவும் கடவுளிடம் வேண்டிக்கொள்ளுங்கள்” என்று குறிப்பிட்டுள்ளார்.

அவரது வீடியோ பெரிய அளவில் வைரலாகி பலருக்கு, நம்பிக்கை அளித்திருந்தது.

ALSO READ:  இலவச பஸ் வேண்டாம்; கட்டண பஸ் அனுப்பி உரிய மரியாதை கொடுங்க போதும்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Trending