ஏர் இந்தியா இணையத்தில் ஹேக்கர்ஸ்! உடனே பாஸ்வேர்டு மாத்துங்க… கசிந்தது பயணிகளின் விபரங்கள்!

இந்தியா சற்றுமுன்
hacker
hacker

ஏர் இந்தியா இணையதளத்தில் மிகப்பெரிய சைபர் தாக்குதல் நடந்துள்ளது. 2011 முதல் 2021 வரையில் பயணம் செய்தவர்களின் பாஸ்போர்ட் எண், பிறந்த தேதி, கிரெடிட் கார்டு விவரங்கள் போன்ற அனைத்தும் கசிந்துள்ளன.

இது தொடர்பாக ஏர் இந்தியா வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: ஆகஸ்ட் 26 மற்றும் 2011 முதல் பிப்ரவரி 3 முதல் 2021 வரை பதிவு செய்யப்பட்டிருந்த தகவல்கள் கசிந்துள்ளன.

அதில் பெயர், பிறந்த தேதி, தொடர்புத் தகவல், பாஸ்போர்ட் தகவல், டிக்கெட் தகவல், ஸ்டார் அலையன்ஸ் மற்றும் ஏர் இந்தியாவில் அடிக்கடி பயணிக்கும் பயணியர் தகவல்கள், அத்துடன் கிரெடிட் கார்டுகளின் விவரங்களும் கசிந்துள்ளன.

indian airlines
indian airlines

பயணிகளின் விவரங்களை சேமிக்கும் எங்களின் டேட்டா பிராசசர் நிறுவனத்திடமிருந்து இது தொடர்பான முதல் அறிவிப்பை பிப்., 25, 2021 அன்று பெற்றோம்.

இச்சம்பவம் உலகளவில் 45 லட்சம் தரவுகளை பாதித்துள்ளது. கிரெடிட் கார்டு சி.வி.வி., விவரங்கள் டேட்டா பிராசசர் நிறுவனம் வைத்தில்லாததால் அத்தகவல்கள் வெளியாகவில்லை.
பாஸ்வேர்டுகள் எதுவும் வெளியாகவில்லை. இருப்பினும் பயணிகள் பாதுகாப்பை உறுதி செய்ய பாஸ்வேர்டை மாற்றிக்கொள்ள அறிவுறுத்தப்படுகின்றனர்.

இச்சம்பவம் குறித்து விசாரணை நடத்துகிறோம். சர்வர்களின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு அவ்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.