இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரரான ரோஹித் சர்மாவும் விரைவில் தனது காதலியை மணம் முடிக்க இருக்கிறார். தோனி, ரெய்னாவைத் தொடர்ந்து, தனது காதலியை கரம் பற்றி, ரோஹித்தும் திருமண பந்தத்தில் இணையவுள்ளார். இந்திய அணியின் நட்சத்திர ஆட்டக்காரர்களில் ஒருவர் ரோஹித் சர்மா. இவர் தற்போது இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரராகவும், ஐபிஎல் மும்பை அணியின் கேப்டனாகவும் திறம்பட செயலாற்றி வருகிறார். இந்நிலையில் ரோகித் சர்மா தனது வாழ்க்கையின் அடுத்த கட்டத்துக்குச் செல்கிறார். இதுவரை தனியாளாக வலம் வந்துகொண்டிருந்த ரோஹித் சர்மா விரைவில் திருமண பந்தத்தில் இணைந்து ஜோடியாகவுள்ளார். ரோஹித்தின் காதலி பெயர் ரித்திகா சஜ்தே. கடந்த சில ஆண்டுகளாகவே ரோகித் சர்மாவின் விளம்பர மேலாளர் பணியை அவர் திறம்பட நிர்வகித்து வருகிறார். தொடக்கத்தில் நட்பாக இருந்த இவர்களது பந்தம் பின்னாளில் காதலாக மாறியதாம். இவர்கள் இருவருக்கும் நிச்சயதார்த்தம் முடிந்துள்ள நிலையில் விரைவில் திருமண தேதியை அறிவிப்பேன் என ‘டுவிட்டரில் தகவல்’ தெரிவித்துள்ளார் ரோஹித் சர்மா.
ரோஹித் சர்மாவும் விரைவில் காதலியை மணமுடிக்கிறார்
உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari