ஐதராபாத் மெட்ரோ ரயில் திட்டம் நாட்டிலேயே இரண்டாவது பெரிய மெட்ரோ ரயில் திட்டமாக விளங்குகிறது. ஐதராபாத் மெட்ரோ ரயில் திட்டத்தில் முதற்கட்டமாகக் கடந்த நவம்பர் மாதத்தில் நாகோல் – அமீர்ப்பேட்டை – மியாபூர் இடையிலான முப்பது கிலோமீட்டர் பாதையைப் பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார்.
இதையடுத்து இரண்டாம் கட்டமாக அமீர்ப்பேட்டை – எல்.பி.நகர் இடையிலான 16கிலோமீட்டர் தொலைவிலான பாதையில் மெட்ரோ ரயில் போக்குவரத்தை ஆளுநர் நரசிம்மன் தொடக்கி வைத்தார்.
ரயிலிலேயே பயணம் செய்த ஆளுநர் நரசிம்மன் அங்கிருந்து மிதிவண்டியில் ஆளுநர் மாளிகைக்குச் சென்றார். 46கிலோமீட்டர் நீளப் பாதையுடன் ஐதராபாத் மெட்ரோ ரயில் நாட்டிலேயே இரண்டாவது பெரிய மெட்ரோ ரயில் திட்டமாக திகழ்கிறது. டெல்லி மெட்ரோ ரயில் நாட்டில் மிகப்பெரிய மெட்ரோ ரயில் திட்டமாகும்.