australia ind test - 2026

மெல்பர்ன்: இந்திய ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான 3வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியில், ஆஸ்திரேலிய அணி தனது முதல் இன்னிங்ஸில் 151 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸில் 7 விக்கெட் இழந்து 443 ரன்கள் எடுத்த போது டிக்ளேர் செய்தது. தொடர்ந்து தனது முதல் இன்னிங்க்ஸை ஆடிய ஆஸ்திரேலிய அணி, 66.5 ஓவரில் 151 ரன்களே எடுத்தது. துவக்க வீரர் மார்கஸ் ஹாரிஸ் மற்றும் டிம் பெய்னி இருவரும் எடுத்த 22 ரன்களே அந்த அணியில் ஒரு வீரர் எடுத்த அதிகபட்ச ரன்களாக இருந்தது.

உஸ்மான் கவாஜா 21 ரன்னும், மற்ற வீரர்கள் சொற்ப ரன்களிலும் ஆட்டம் இழந்தனர். இந்திய தரப்பில் ஜஸ்ப்ரித் பும்ரா 6 விக்கெட்களையும், ரவீந்திர ஜடேஜா 2 விக்கெட்டையும் இஷாந்த் சர்மா, ஷமி இருவரும் தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.

இதை அடுத்து இந்திய அணி முதல் இன்னிங்ஸில் ஆஸ்திரேலியாவை விட 292 ரன்கள் முன்னிலை பெற்றது. தொடர்ந்து இந்திய அணி தனது இரண்டாவது இன்னிங்க்ஸை ஆடத் தொடங்கியது.

லைவ் ஸ்கோர், கிரிக்கெட் நியூஸ், மேலும் காண்க… https://dhinasari.com/cricket/

ALSO READ:  ஒரு கைத்தறி தயாரிப்பையாவது வாங்கி, அதுகுறித்த வீடியோவை பகிருங்கள்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Trending