சோளிங்கர் கோயிலில் பூஜையை தடுத்த கிறிப்டோ ‘கிறிஸ்துவ ஊழிய’ஸ்தருக்கு வலுக்கும் எதிர்ப்பு!

Published:

sholingertemple pooja - 2026

அறநிலையத்துறையில் உள்ள கிரிப்டோ கிறிஸ்தவ ஊழியர் ஒருவரால் சோளிங்கர் கோயிலில் வழக்கமான பூஜை நடத்தப்படாமல் நிறுத்தப் பட்டது பெரும் பிரச்னையை ஏற்படுத்தியுள்ளது.

ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள சோளிங்கர் ஸ்ரீலட்சுமி நரசிம்ம சுவாமி திருக்கோயிலில் வழக்கமாக நடைபெறும் திருவோணத் திருமஞ்சனம் நடத்தப்படாமல் தடுக்கப்பட்டது பக்தர்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது!

கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் வகையில் வரும் மே மாதம் மூன்றாம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மக்கள் பெருமளவில் கூடும் காய்கறி சந்தை பள்ளி மைதானங்களிலும் பேருந்து நிலையங்களிலும் நடந்து வருகின்றன. மளிகைக் கடைகள் உட்பட மக்களின் அத்தியாவசிய தேவைகளுக்கான அங்காடிகளுக்கும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. சினிமா தியேட்டர்கள் மால்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன.

இதே போல் அனைத்து வழிபாட்டுத் தலங்களுக்கும் கட்டுப்பாடுகள் விதிக்கப் பட்டுள்ளன. கூட்டத்தைத் தவிர்க்க வேண்டும் என்ற இந்த விஷயத்தில் மத வழிபாட்டுத் தலங்களுக்கு விலக்கு அளிக்கப்படவில்லை. இருப்பினும் கோவில்களில் வழக்கமாக நடைபெற வேண்டிய பூஜைகள் அபிஷேக ஆராதனைகள் ஆகியவற்றை அந்தந்த ஆலயங்களில் அர்ச்சகர்கள் மட்டும் சென்று நடத்த நெறிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன. அதன்படி அர்ச்சகர்கள் மட்டும் ஆலயங்களுக்குச் சென்று பூஜைகளை நடத்தி வருகின்றனர். பக்தர்களுக்கு கோயில்களில் தரிசனத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

108 வைணவ திவ்ய தலங்களில் ஒன்றான திரு கடிகாசலம் என்ற அழைக்கப்படும் சோளிங்கர் லட்சுமி நரசிம்ம சுவாமி திருக்கோயிலிலும் பக்தர்கள் தரிசனத்துக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது. ஆயினும் அறநிலையத்துறை வழிகாட்டுதலில் வழக்கமான பூஜைகள் நடத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அதனை அர்ச்சகர்கள் சென்று நடத்தி வருகின்றனர்.

ALSO READ:  எனக்கு வந்தால் ரத்தம், உனக்கு வந்தால் தக்காளிச் சட்னி!

இந்நிலையில் கோயிலில் தனி சன்னதியில் அருள்பாலித்து வரும் ஆதி கேசவப் பெருமாளுக்கு ஒவ்வொரு மாதமும் திருவோண நட்சத்திரத்தன்று நடைபெறும் சிறப்பு திருமஞ்சனம் கடந்த 16ஆம் தேதி வந்த திருவோண நட்சத்திர நாளில் நடத்தப் படவில்லை. அதுபோல மறுநாள் காலை 17ஆம் தேதி மூலவர் லட்சுமி நரசிம்ம ஸ்வாமி அமிர்தவல்லி தாயாருக்கு நடைபெற வேண்டிய திருமஞ்சனமும் நடைபெறவில்லை.

இது குறித்த தகவல் வெளியானதும், அதிர்ச்சி அடைந்த பக்தர்கள் கோவில் உதவி ஆணையரிடம் புகார் அளித்தனர். இதை அடுத்து காலை நடைபெற வேண்டிய திருமஞ்சனம் மதியம் 12 மணிக்குப் பிறகு நடைபெற்றது. ஆயினும் திருவோண திருமஞ்சனம் நடத்தப் படாமல் போனது பக்தர்களுக்கு பெரும் மனவேதனையையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

இதுகுறித்து பக்தர்கள் கூறுகையில் கோயிலில் முறைப்படி நடத்தப்பட வேண்டிய பூஜைகளை நிறுத்திய நிர்வாக பொறுப்பில் இருந்த கிளார்க் அந்தோணி என்கிற நரசிங்க ராஜன் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் அதோடு அவரை வேறு துறைக்கு மாற்ற வேண்டும் அறநிலையத்துறையில் கிறிஸ்தவர்களின் ஆதிக்கம் இருப்பதால் இதுபோன்று வேண்டுமென்றே பூஜைகளை நடத்தாமல் செய்கின்றனர் என்று புகார் தெரிவித்தனர்

ஆலயத்தில் பணிபுரியும் ராஜா ஸ்வாமிகள் இது குறித்து தெரிவித்த போது, உதவி ஆணையர் மோகனசுந்தரத்திடம் புகார் அளித்தோம். ஆனால் அவரோ பார்த்துக் கொள்கிறேன் என்று சொல்கிறாரே தவிர, எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்து சமய அறநிலையத்துறை இது போன்ற வேற்று மதத்தைப் பின்பற்றும் நபர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், இவர்கள் ஆலய நிர்வாகத்தில் இருந்து கொண்டு ஆலய வழிபாட்டைத் தடுப்பதற்கு எந்த அதிகாரமும் இல்லை என்று கூறினார். இதுபோல், தொட்டயாசார்ய ஸ்வாமிகளின் வழி சீடர்களும் கோரிக்கை விடுத்தனர்.

ALSO READ:  காஷ்மீர் பண்டிட் நர்ஸ் கொலை; 36 ஆண்டுகள் கழித்து மீண்டும் விசாரணை... முக்கியத்துவம் என்ன?

சமூக தளங்களில் இந்த விவகாரம் பெரிதும் விவாதிக்கப் பட்டது. பிரபல உபந்யாசகர் வேளுக்குடி கிருஷ்ணனும் தமது எதிர்ப்பைப் பதிவு செய்தார்…

அடியேனும் ஸ்வாமி தொட்டையாசார்யர் சிஷ்யன். திருவோணத்தன்று கேசவப் பெருமாள் திருமஞ்ஜனம் நிறுத்தப்பட்டது தவறு. காரணமானவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். ஆசார்ய ஸ்வாமிகள் எடுத்துச் சொல்லி வெள்ளிக்கிழமை பெரிய மலையிலும் ஞாயிற்றுக்கிழமை (இன்று) சின்ன மலையிலும் திருமஞ்ஜனம் நடந்தது.

செங்கோட்டை ஸ்ரீராம்
செங்கோட்டை ஸ்ரீராம்https://www.dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img