டூ வீலரில் சென்ற நண்பர்கள்! நேர்ந்த விபரீதம்!

சற்றுமுன் தமிழகம்
manimaran karthik - 2026

ராமநாதபுரம் அருகே நடந்த விபத்தில் டூவீலரில் சென்ற வாலிபர்கள் இருவர் உயிரிழந்துள்ளனர். ராமநாதபுரம் அல்லிக்கண்மாய் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த கர்ணன் மகன் மணி என்ற மணிமாறன் (24) அதே பகுதி காளியப்பன் மகன் கார்த்திக் (25) நண்பர்களான இருவரும் தனியார் நிறுவனத்தில் பணிபுரிகின்றனர்.

நேற்று காலை தேர்போகி கோயிலுக்கு மாசிக்களரி விழாவிற்கு ஒரே டூவீலரில் சென்றனர்.

திருவிழா முடிந்து மாலையில் ராமநாதபுரம் திரும்பினர். மணிமாறன் டூவீலரை ஓட்டினார் (ஹெல்மெட் அணியவில்லை). கிழக்கு கடற்கரை சாலையில் கோகிலாவாடி வளைவில் வந்த போது கட்டுப்பாட்டை இழந்து மரத்தில் மோதி விபத்திற்குள்ளாகினர். இதில் மணிமாறன், கார்த்திக் காயமடைந்தனர்.

அவர்களை அங்கிருந்தோர் மீட்டு ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரிமருத்துவமனைக்கு கொண்டு வந்தனர். பரிசோதித்த டாக்டர்கள் இருவரும் இறந்துவிட்டதாக தெரிவித்தனர். தேவிப்பட்டினம் போலீசார் விசாரிக்கின்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.