
பெரம்பூர் பெரவள்ளூர் பேப்பர் மில் சாலையில், பிசியோதெரபி கிளினிக் ஒன்றில் பாலியல் தொழில் நடைபெற்று வந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவில் பல பகுதிகளில் பாலியல் தொழிலில் ஈடுபடுபவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வந்த வண்ணமே உள்ளது.
அதுவும் இந்த ஊரடங்கு காலத்தில், பெண்களின் வறுமையை பயன்படுத்தி பலரும் அவர்களை பாலியல் தொழில் ஈடுபடுத்துகின்றனர்.
அதுமட்டுமில்லாமல், பியூட்டி பார்லர், மசாஜ் சென்டர் என்ற பெயரில் பாலியல்தொழில் செய்யும் சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து கொண்டு வருகின்றது. காவல்துறையினரும் இந்த சம்பவங்களில் ஈடுபடுபவர்கள் மீது
நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
அது போன்று ஒரு சம்பவம் தான் தற்போது அரங்கேறியுள்ளது. பெரம்பூர் பெரவள்ளூர் பேப்பர் மில் சாலையில், பிசியோதெரபி கிளினிக் ஒன்றில் பாலியல் தொழில் நடைபெறுவதாக காவல்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து அங்கு சென்று சோதனை செய்து பார்த்தபோது மசாஜ் மேஜை, ஆணுறைகள் உள்ளிட்ட பொருள்கள் கண்டறியப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டன.
இதுதொடர்பாக ஜெகதீஸ் என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர். அங்கிருந்து இரண்டு பெண்கள் மீட்கப்பட்டு அருகிலுள்ள காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.