நடிகர் சஞ்சீவின் பேட்டி வீடீயோ ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது.
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகரான தளபதி விஜய்யின் நெருங்கிய நண்பர் தான் சஞ்சீவ்.
இவர் சின்னத்திரை சீரியல்களில் நடித்து வருகிறார். அந்த வகையில் இவர் சன் டிவியில் ஒளிபரப்பான திருமதி செல்வம் என்ற சீரியலில் நடித்ததின் மூலம் மக்களிடையே மிகவும் பிரபலமானார்.
அதனைத் தொடர்ந்து அவள், இதயம், யாரடி நீ மோகினி போன்ற சீரியல்களிலும் நடித்துள்ளார். அதுமட்டுமல்லாமல் ஒரு சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.
இந்த நிலையில் தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் வைல்ட் கார்ட் என்ட்ரியாக நுழைந்துள்ளார்.
இந்நிலையில் தற்போது இவர் தனியார் யூட்யூப் சேனலுக்கு பேட்டியளித்த பழைய வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.
அதில், நடிகர் விஜய்க்கு டான்ஸ் சொல்லிக் கொடுத்ததே நான் தான் என்று அவர் தெரிவித்துள்ளார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
https://www.instagram.com/tv/CXz7tYJlyg8/?utm_source=ig_embed&utm_campaign=loading