December 7, 2025, 11:50 PM
24.6 C
Chennai

ஒமிக்ரான்: சிறார்களிடம் ஏற்படுத்தும் மாறுபாடு.. ஆபத்தை எச்சரிக்கும் எய்ம்ஸ் மருத்துவர்..!

dr thanmai - 2025

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 1 லட்சத்து 40 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பாதிப்பு பதிவாகியுள்ளது.

கடந்த சில வாரங்களுக்கு முன்பு வெறும் 10 ஆயிரம் மட்டுமே பாதிப்பு ஏற்பட்டது. ஆனால் நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு எகிறி அடிக்கிறது கொரோனா. இதற்குக் காரணம் ஒமைக்ரான். புதிதாக வந்த ஒமைக்ரான் ஏற்கெனவே உள்ள டெல்டாவுடன் ஜோடி சேர்ந்துள்ளது. இதனால் தான் இந்தளவுக்கான ஏற்றம் கண்டுள்ளது.

இப்படியே போனால் இன்னும் சில தினங்களில் தினசரி 5 லட்சத்திற்கும் அதிகமான பாதிப்பு ஏற்படலாம் என உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது.

எண்ணிக்கையைக் கண்டு அதிர்ந்துபோனாலும் ஒமைக்ரான் அவ்வளவாக பெரிய பாதிப்பை உண்டாக்குவதில்லை என சொல்லப்படுகிறது.

முதன்முதலில் கண்டறியப்பட்ட தென்னாப்பிரிக்காவில் மற்ற கொரோனா அலைகளை விட ஒமைக்ரானால் ஏற்பட்ட அலை பெரிதாக தாக்கத்தை ஏற்படுத்தவில்லை.

மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவோர் கூட மிகக் குறைவாகவே இருந்தது என அந்நாட்டு நிபுணர்கள் கூறினர்.

அபாயகரமான டெல்டாவை விட வேகமாகப் பரவினாலும், 2 டோஸ் போட்டுக்கொண்டவர்களை தாக்கினாலும் 3 நாட்களில் ஓடி விடுகிறது ஒமைக்ரான். இதெல்லாம் முதற்கட்ட தகவல்கள் தான்.

ஒமிக்ரான் அறிகுறி ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளில் ஓமிக்ரான் மாறுபாட்டின் புதிய அறிகுறியை அமெரிக்க மருத்துவ நிபுணர்கள் கண்டறிந்துள்ளனர்.

ஒருவகை வறட்டு இருமல் என குறிப்பிட்டுள்ள மருத்துவர்கள், பெற்றோர்கள் அதைக் கேட்கும் போது பயமுறுத்தப்படலாம் என தெரிவித்துள்ளனர்.

ஐந்து வயதுக்குட்பட்ட சில கொரோனா நோயாளிகளில் இதுபோன்ற வறட்டு இருமல் காணப்படுவதாக மருத்துவ நிபுணர் ஒருவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும், தடுப்பூசிகளுக்கு இன்னும் தகுதி பெறாத இளம் குழந்தைகளைப் பாதுகாப்பதற்கான சிறந்த வழி, அவர்களை தடுப்பூசி போட்டுக் கொண்டவர்கள் அருகாமையில் வைத்துக்கொள்வதே சிறந்தது என்றார் அவர்.

கொரோனா தொற்று பரவல் தொடங்கிய நாள் முதல் இதுவரை அமெரிக்காவை பொறுத்தமட்டில் 7.9 மில்லியன் சிறார்களுக்கு தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஆனால் சிறார்களில் பாதிப்பு மிக லேசானதாகவே இதுவரை காணப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

ஒரே சமயத்தில் டெல்டா 10 பேருக்கு பாதிப்பை ஏற்படுத்தினால் ஒமைக்ரான் 100 பேருக்கு பாதிப்பை உண்டாக்குகிறது. இதில் இரண்டுமே 1% பேரை மிக தீவிரமாக தாக்குவதாக வைத்துக் கொள்வோம்.

பத்தில் ஒருவரை டெல்டா அதிகமாக பாதித்தால் ஒமைக்ரான் 10 பேரை மிக மோசமாக பாதிப்புக்குள்ளாக்குகிறது. ஆகவே இங்கே சதவீத கணக்கெல்லாம் வேலைக்கு ஆகாது.

ஒமைக்ரானை லேசாக எடை போட்டுவிடக் கூடாது. எய்ம்ஸ் மருத்துவர் தன்மய் மோதிவாலாவும் கூறியுள்ளார். அண்மையில் தான் அவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது.

வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டுள்ள அவர் ஊடகம் ஒன்றுக்கு பேட்டியளிக்கையில், “முதல் இரு அலைகளில் மருத்துவர்களுக்கு தொற்று ஏற்பட்டது தான்.

ஆனால் 3ஆம் அலையில் அதிக எண்ணிக்கையிலான மருத்துவ பணியாளர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இது வேதனையளிக்கிறது.

பேரிடர் காலங்களில் அதிக எண்ணிக்கையிலான மக்கள் கொரோனாவால் பாதிக்கப்படும் வேளையில், மருத்துவர்களுக்கும் தொற்று ஏற்பட்டால் என்ன செய்வது? சுகாதார துறைக்கு பெரும் சுமை தான். ஆகவே மக்கள் கொரோனா கட்டுப்பாடுகளை தவறாது பின்பற்ற வேண்டும்.

அனைவரும் முகக்கவசம் அணிந்து தங்கள் வீடுகளில் அமர்ந்தால் தான் ஹீரோவாக முடியுமே தவிர, வெளியில் வந்து தானும் கொரோனாவை விலைக்கு வாங்கி ஏராளமானோருக்கு பரப்பவும் கூடாது.

தடுப்பூசிகளை எடுத்துக் கொள்வது மிகச்சிறந்த பாதுகாப்பு. நல்ல நோய் எதிர்ப்பு சக்தி உள்ள சிலர் ஒமைக்ரானால் பாதிக்கப்பட்டால், அறிகுறிகள் லேசாக இருக்கலாம்.

ஆனால் ஏற்கெனவே இணை நோய் உள்ளவர்கள், முதியவர்கள், நோய் எதிர்ப்பு சக்தி குறைபாடு உடையவர்கள் போன்ற ஆபத்தில் உள்ளவர்களுக்கு இது மிகவும் ஆபத்தானது என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும்.

உங்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி இருக்கிறது என நினைக்காதீர்கள். உங்கள் குடும்ப உறுப்பினர்களையும் நினைவில் கொள்ளுங்கள்” என்றார்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

கங்கைக்கும் காவிரிக்கும் இடையிலான ஞானச் சந்திப்பு!

 கற்சிலையாக மாற்றப்பட்ட லோபமுத்ரா, தனது கணவரின் வருகைக்காகக் காத்திருக்கிறது. விந்திய மலை தலைவணங்கி, அதன் குருவான அகஸ்திய முனிவரின் வருகைக்காகக் காத்திருக்கிறது.

அர்ச்சனைப் பூக்களை மறு சுழற்சி செய்யும் ‘ஸ்டார்ட் அப்’! காசியில் கலக்கல்!

காசியைச் சேர்ந்த ஸ்டார்ட் நிறுவனமான  'ஆராத்ய கிருபா', நமோ காட்டில் புதுமை...

IND vs SA ODI: தொடரை வென்ற இந்தியா!

இந்தியா-தென் ஆப்பிரிக்கா டெஸ்ட் தொடரைத் தொடர்ந்து ஒருநாள் போட்டித் தொடர் நடைபெற்றது. இத்டொடரில் முதல் ஆட்டம் ராஞ்சியில் நடைபெற்றது.

திருப்பரங்குன்றம் விவகாரம்; இந்து முன்னணி இன்று மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம்!

உச்ச நீதிமன்றம் தரும் தீர்ப்பை ஏற்குமா திமுக அரசு இல்லை அதற்கும் உள்நோக்கம் கற்பித்து தான்தோன்றி தனமாக செயல்படுமா?

மாணவர்களின் ‘ஜய் ஸ்ரீராம்’ கோஷத்தில் அதிர்ந்த அயோத்தி ராமர் கோவில்!

முதல் முறையாக, வட இந்தியாவின் நம்பிக்கை, பாரம்பரியம் மற்றும் பக்தியின் பரந்த கலாச்சாரத்தை நேரடியாக அனுபவிக்கும் வாய்ப்பு அவர்களுக்கு கிடைத்தது.

Topics

கங்கைக்கும் காவிரிக்கும் இடையிலான ஞானச் சந்திப்பு!

 கற்சிலையாக மாற்றப்பட்ட லோபமுத்ரா, தனது கணவரின் வருகைக்காகக் காத்திருக்கிறது. விந்திய மலை தலைவணங்கி, அதன் குருவான அகஸ்திய முனிவரின் வருகைக்காகக் காத்திருக்கிறது.

அர்ச்சனைப் பூக்களை மறு சுழற்சி செய்யும் ‘ஸ்டார்ட் அப்’! காசியில் கலக்கல்!

காசியைச் சேர்ந்த ஸ்டார்ட் நிறுவனமான  'ஆராத்ய கிருபா', நமோ காட்டில் புதுமை...

IND vs SA ODI: தொடரை வென்ற இந்தியா!

இந்தியா-தென் ஆப்பிரிக்கா டெஸ்ட் தொடரைத் தொடர்ந்து ஒருநாள் போட்டித் தொடர் நடைபெற்றது. இத்டொடரில் முதல் ஆட்டம் ராஞ்சியில் நடைபெற்றது.

திருப்பரங்குன்றம் விவகாரம்; இந்து முன்னணி இன்று மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம்!

உச்ச நீதிமன்றம் தரும் தீர்ப்பை ஏற்குமா திமுக அரசு இல்லை அதற்கும் உள்நோக்கம் கற்பித்து தான்தோன்றி தனமாக செயல்படுமா?

மாணவர்களின் ‘ஜய் ஸ்ரீராம்’ கோஷத்தில் அதிர்ந்த அயோத்தி ராமர் கோவில்!

முதல் முறையாக, வட இந்தியாவின் நம்பிக்கை, பாரம்பரியம் மற்றும் பக்தியின் பரந்த கலாச்சாரத்தை நேரடியாக அனுபவிக்கும் வாய்ப்பு அவர்களுக்கு கிடைத்தது.

பஞ்சாங்கம் டிச.07 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

வாராணசியில் கைவினைப் பொருட்களின் தனித்துவக் கண்காட்சி!

இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒன்றிணைத்து அதன் கலாச்சார வேர்களை புதிய தலைமுறைகளுக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்ட காசி தமிழ் சங்கத்தின் உணர்வை இந்த அரங்கம் உண்மையிலேயே பிரதிபலிக்கிறது.

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

Entertainment News

Popular Categories