
வனவிலங்குகளின் சில வீடியோக்கள் மக்களை முற்றிலும் அதிர்ச்சிக்குள்ளாக்குகின்றன. சில வீடியோக்களை பார்த்தால் நம்மால் நம் கண்களையே நம்ப முடியாது.
தற்போது சமூக ஊடகங்களில் வைரல் ஆகி வரும் வீடியோவில், ஒரு பெண் 6 சிங்கங்களுடன் காட்டில் சாவகாசமாக நடந்து செல்வதைக் காண முடிகின்றது. இந்த வீடியோவைப் பார்த்தது அனைவரும் அதிர்ச்சியடைவார்கள் என்பது உறுதி.
பொதுவாக சிங்கத்தை தூரத்தில் இருந்து பார்த்தாலே மக்கள் அச்சப்படுவது உண்டு. அருகில் செல்ல யாரும் எண்ணிக்கூட பார்க்கமாட்டார்கள்.
ஆனால் இந்த வீடியோவில், ஒரு பெண், ஆடு மாடை மேய்த்துக்கொண்டு போவதுபோல, சிங்களுக்கு பின்னால் மிகவும் சாதாரணமாக நடந்து செல்வதைக் காண முடிகின்றது.
சிங்கங்களை கட்டுப்படுத்தி அவர் நடந்துசெல்லும் விதம் பார்க்க வேண்டியதொரு அற்புத காட்சியாக உள்ளது.
வைரலாகி வரும் இந்த வீடியோவில் (Viral Video), காட்டில் ஒரு பெண் 6 பெண் சிங்கங்களுடன் சாலையில் செல்வதைக் காண முடிகிறது.
பெண் சிங்கங்களும் அந்த பெண்ணுக்கு எந்த ஆபத்தையும் ஏற்படுத்தாமல், அவர் வார்த்தைகளுக்கு கீழ்படிந்து செல்கின்றன. சிங்கங்கள் பெண்ணுக்கு கட்டுப்பட்டு இருப்பதைப் பார்ப்பதற்கு ஆச்சரியமாக உள்ளது.
இந்த வீடியோ ஒரு காட்டில் படமாக்கப்பட்டுள்ளது. சிறுமியுடன் இணைந்து இந்த காட்சியை எந்த பயமும் இல்லாமல் படமாக்கிய கேமராமேனை நெட்டிசன்கள் (Netizens) வெகுவாகப் பாராட்டி வருகின்றனர்.
இந்த வீடியோவை பார்த்த மக்கள் பல வித கமெண்டுகளை அள்ளி வீசி வருகின்றனர். வனவிலங்குகள் தொடர்பான இந்த வீடியோ safarigallery என்ற இன்ஸ்டாகிராம் கணக்கில் வெளியிடப்பட்டுள்ளது.
வீடியோவின் தலைப்பில், “ஒவ்வொரு முறையும் உங்கள் வாழ்க்கையில் இருந்து பயத்தை நீக்கும் ஒரு செயலை செய்து பாருங்கள். முயற்சி செய்வீர்களா?” என்று எழுதப்பட்டுள்ளது.
வீடியோவுடன் பல தகவல்களும் கொடுக்கப்பட்டுள்ளன. முதலில் சிங்கங்கள், ஆப்பிரிக்கா, ஆசியா மற்றும் ஐரோப்பாவில் காணப்பட்டதாகவும், ஆனால் இப்போது சில வகைகள் ஆப்பிரிக்காவில் மட்டுமே காணப்படுகின்றன என்றும், மீதமுள்ள ஆசிய சிங்கங்கள் இந்தியாவில் உள்ள சாசன்-கிர் தேசிய பூங்காவில் காணப்படுகின்றன என்றும் இந்த பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
https://www.instagram.com/reel/CYjT_CJpftW/?utm_source=ig_embed&utm_campaign=loading