திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பிப்ரவரி மாத காணிக்கை
ரூ.3 கோடியே 4 லட்சத்து 16 ஆயிரத்து 275 கிடைத்தது. தங்கம் 2 ஆயிரத்து 284 கிராமும், வெள்ளி 26 ஆயிரத்து 517 கிராமும், வெளிநாட்டு கரன்சி நோட்டுகள் 132-ம் கிடைத்தது.
பிப்ரவரி மாதம் 7-ந் தேதி முதல் 18-ந் தேதி மாசி உற்சவ திருவிழா நடந்தது குறிப்பிடத்தக்கது. இக்கோயில் காணிக்கை வருவாய் முதல்முறையாக ரூ3கோடிக்கு மேல் கிடைத்துள்ளது.
உண்டியல் காணிக்கை எண்ணும் பணியில் சிவகாசி பதினெண் சித்தர் மடம் பீடம் குருகுல வேதபாடசாலை உழவார பணிக்குழுவினர் மற்றும் கோவில் பணியாளர் பங்கேற்றனர்.
