surakai samai rice
surakai samai rice

சுரைக்காய் சாமை சாதம்

தேவை:
சாமை – 200 கிராம்,
சுரைக்காய் (நறுக்கியது) – ஒரு கப்,
பெரிய வெங்காயம், பச்சை மிளகாய், தக்காளி – தலா ஒன்று (நறுக்கவும்), சீரகத்தூள் – அரை டீஸ்பூன்,
பூண்டு – 7 பல்,
சாம்பார் பொடி – அரை டீஸ்பூன், மஞ்சள்தூள் – கால் டீஸ்பூன், கடுகு, கறிவேப்பிலை – தாளிக்கத் தேவையான அளவு,
கொத்தமல்லி இலைகள் – சிறிதளவு, எண்ணெய் – 5 டீஸ்பூன்,
உப்பு – தேவைக்கேற்ப.

செய்முறை:

மில்லெட் மேஜிக்! – 30 வகை சிறுதானிய ரெசிப்பிகள்
சாமையைப் பத்து நிமிடங்கள் ஊறவைத்துக் களைந்து தண்ணீரை வடித்துவைக்கவும். பிறகு ஒரு குக்கரை அடுப்பில் ஏற்றி எண்ணெய் ஊற்றிக் கடுகு, கறிவேப்பிலை தாளித்து வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும். இதனுடன் தக்காளி, சாம்பார் பொடி, சீரகத்தூள், பூண்டு, மஞ்சள்தூள் மற்றும் உப்பு சேர்த்து, சுரைக்காயையும் சேர்த்து சுருள வதக்கவும்.

பிறகு ஒரு பங்கு சாமைக்கு இரண்டரை பங்கு என்கிற கணக்கில் தண்ணீரை இதனுடன் சேர்த்துக் கொதிக்கவிடவும். தண்ணீர் கொதிக்கும்போது ஊறவைத்த சாமையையும் சேர்த்து, குக்கரை மூடி இரண்டு விசில்விட்டு இறக்கவும். சுரைக்காய் சாமை சாதம் ரெடி. குக்கரில் ஆவி அடங்கியதும் திறந்து கொத்தமல்லி இலைகளைத் தூவிப் பரிமாறவும்.

ALSO READ:  கட்டுப்பாடற்ற நடத்தை பண்பாடு ஆகாது!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Trending