கற்கண்டு பொங்கல்
தேவையான பொருட்கள்
கற்கண்டு – 200 கிராம்
பச்சரிசி – 500 கிராம்
பயறு – 100 கிராம்
ஏலக்காய்த்தூள் – 1 தேக்கரண்டி
காய்ந்ததிராட்சை – 50 கிராம்
முந்திரிப்பருப்பு – 50 கிராம்
நெய் – 3 மேசைக்கரண்டி
பால் – 2 டம்ளர்
செய்முறை
கற்கண்டை பொடி செய்து வைக்கவும்.
அரிசி, பயறை கழுவி 5 டம்ளர் தண்ணீருடன் பால் சேர்த்து குக்கரில் வேக விடவும்.
சாதம் வெந்தவுடன் கற்கண்டு, ஏலக்காய் சேர்த்து கிளறவும்.
பின்பு நெய்யில் முந்திரி, திராட்சை வறுத்துக் கொட்டி கிளறவும்.
சுவையான கற்கண்டு பொங்கல் தயார்.