இட்லி பொடி சாதம்
தேவையான பொருட்கள்
சாதம் – 1 கப்
இட்லி பொடி – 2 மேசைக் கரண்டி
தாளிக்க:
நல்லெண்ணெய் – 2 தேக்கரண்டி
கடுகு – தாளிக்க
கடலைப் பருப்பு – 1 தேக்கரண்டி
கறிவேப்பில்லை – 4 இலை
செய்முறை
முதலில் கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு போட்டு பின் கடலைப் பருப்பு சேர்த்து வறுத்து கடைசியில் கறிவேப்பில்லை போட்டு தாளிக்கவும்.
தாளித்த பொருட்களை சாதம் மற்றும் இட்லி பொடியுடன் சேர்த்து கிளறவும்.
இப்பொழுது சுவையான இட்லி பொடி சாதம் ரெடி
இட்லி பொடியிலேயே உப்பு இருப்பதால் உப்பு சேர்க்க தேவையில்லை.