மரவள்ளிக்கிழங்கு முந்திரி கீர்
தேவையானவை:
மரவள்ளிக்கிழங்கு (வேக வைத்தது) – 100 கிராம்
ஊறவைத்த முந்திரி – 10
ஏலக்காய் – 2
ஐஸ் கட்டிகள் – 2
சர்க்கரை – 6 டீஸ்பூன்
செய்முறை:
வேகவைத்த மரவள்ளிக்கிழங்கைத் துருவிக்கொள்ளவும். மிக்ஸியில் ஏலக்காய், ஊறவைத்த முந்திரி, துருவிய மரவள்ளிக்கிழங்கு சேர்த்து நைஸாக அரைக்கவும். அதில் சர்க்கரை, ஐஸ் கட்டிகள் சேர்த்து ஒரு திருப்புத் திருப்பவும். பின்பு தேவையான அளவு தண்ணீர் சேர்க்கவும். கீர் பரிமாறும் டம்ளரில் பரிமாறவும்.
உடல் எடை அதிகரிக்க நினைப்பவர்கள் இதை அடிக்கடி பருகலாம்