
குடித்து விட்டு குடியிருப்பிற்கு வந்த பெண்ணிற்கு காவலாளி ஒருவர் அறிவுரை கூறியதால் ஆத்திரத்தில் அவர் செய்த காரியம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
லட்சுமி பிரியா என்ற இளம்பெண் சென்னை ஆவடி அடுத்த சேக்காடு பகுதியில் இருக்கும் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் வசித்து வருகிறார்.
நேற்று இரவு குடி போதையில் இருந்த இவர், தனது காதலன், தோழி மற்றும் அவரது ஆண் நண்பருடன் போதையில் தள்ளாடியபடியே சென்றுள்ளார்.
இதை கவனித்த புருஷோத்தமன் என்ற அடுக்குமாடி குடியிருப்பின் காவலாளி, குடிபோதையில் இருந்த லட்சுமி பிரியாவிடம், குடியிருப்பு பகுதியில் இப்படி எல்லாம் நடந்துக்கொள்ள கூடாது என்றும், இளம் வயதில் இப்படி நடந்து கொள்வது தவறு, இது பற்றி தெரிந்தால் உங்களின் பெற்றோர் வேதனை படுவார்கள் என்று அறிவுரை கூறியுள்ளார்.
வீட்டுக்குள் சென்று உல்லாசமாக இருக்க வேண்டும் என்று நினைத்து வந்தவர்களுக்கு, எதிரே வந்து அவர்கள் உல்லாசத்துக்கு இடையூறாக இருந்து புருஷோத்தமன் அறிவுரை சொல்லிக் கொண்டிருந்ததால் எரிச்சல் அடைந்த கும்பல் ஆத்திரத்தில் அருகில் இருந்த இரும்பு பைப்பை எடுத்து புருஷோத்தமன் தலையிலும் முகத்திலும் பலமாக அடித்து இருக்கிறார்கள்.
இதில் பலத்த காயமடைந்த புருசோத்தமன் மயங்கி விழுந்திருக்கிறார். இதன் பின்னர் 4 பேரும் வீட்டிற்குள் சென்றுள்ளனர். பின்னர் எழுந்த புருஷோத்தமன் போலீசிடம் சென்று புகார் கொடுத்திருக்கிறார்.
போலீசார் வழக்குப்பதிவு செய்து வீட்டிற்கு வந்தபோது லட்சுமி பிரியாவும் காதலர் விக்னேஷும் மட்டுமே சிக்கியிருக்கின்றனர். மற்ற 2 பேரும் தலைமறைவாகியதை அடுத்து, அவர்களையும் பிடிக்க போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர்.



