திருநெல்வேலி மாவட்டம் தென்காசியை அடுத்த பாவூர்சத்திரம் காவல் நிலையத்தை சேர்ந்த ஏட்டு ஒருவர் இரவில் ஒரு பெண்ணுடன் தனியறையில் பேசிக்கொண்டிருந்த போது அவர்களை சிலர் எச்சரிப்பது போன்ற வீடியோ போன்ற வீடியோ வாட்ஸ்அப்பில் வைரலாக பரவியதையடுத்து விசாரணை நடத்திய போலீசார் இச்சம்பவத்தில் ஈடுபட்ட 2 பேர் கைது செய்தனர். மேலும் இச்சம்பவத்தில் ஈடுபட்ட 15க்கும் மேற்பட்டோர் மீது 9 பிரிவுகளின் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கைது மற்றும் 15 பேர் வழக்குப்பதிவுக்கு எதிர்ப்பு எதிர்ப்பு தெரிவித்து அவர்களது உறவினர்கள் காவல் நிலையத்தில் திரண்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
பாவூர்சத்திரம் காவல் நிலையத்தில் ஏட்டாக பணிபுரிந்து வந்தவர் நடராஜன். இவர் கீழப்பாவூரில் ராஜேஸ்வரி நகரில் பணி நிமித்தமாக தனியாக வீடு எடுத்து அங்கே தங்கியிருந்து வருகிறார்
இந்நிலையில் நேற்று முன்தினம் இரவில் இவரது வீட்டிற்கு வந்த பாவூர்சத்திரம் பகுதியை சேர்ந்த ஒரு இளம் பெண்ணிடம் தனியறையில் பேசிக்கொண்டிருந்துள்ளார். அப்போது அந்த வழியாக வந்த பொதுமக்கள் சிலர் உள்ளே சென்று ஏட்டு நடராஜனிடம் வாக்கு வாதத்தில் ஈடுபபட்டுள்ளனர்.
இதனை சிலர் தங்களது செல்போனில் பதிவு செய்து வாட்ஸ்அப் மூலம் பிறருக்கு அனுப்பிவைத்துள்ளனர். இதை பலரும் சமூக வலைதளங்களில் பரவ விட வைரலாக பரவியது. சம்பவம் அறிந்து அங்கு வந்த பாவூர்சத்திரம் போலீசார் ஏட்டு நடராஜன் மற்றும் அந்த இளம் பெண்ணை மீட்டு பாவூர்சத்திரம் காவல் நிலையத்திற்கு கொண்டு வந்தனர்.
இதுபற்றி ஆலங்குளம் டிஎஸ்பி ரமேசுக்கு தகவல் தெரிவித்தனர்.
அவர் வந்து இருவரிடம் விசாரனை நடத்தினார்.
இதனை தொடர்ந்து அந்த பெண் கொடுத்த புகாரின் பேரில் இச்சம்பவத்தில் ஈடுபட்ட குறும்பலாப்பேரி, ஆவுடையானூரை சேர்ந்த 15 பேர் மீது இளம் பெண்ணை அவதுறாக பேசியது, கொலைமிரட்டல் விடுத்தல், வீட்டிற்கு அத்து மீறி நுழைந்தது உட்பட 9 பிரிவுகளில் பாவூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
மேலும் இச்சம்பவம் தொடர்பாக குறும்பலாப்பேரி பூபாலசமுத்திரம் தெருவை சேர்ந்த ஜெயகாந்தன் (47) மற்றும் அதே தெருவை சேர்ந்த சுடலைமாடன் (65) ஆகிய இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இதனை தொடர்ந்து இந்த வழக்கில் தொடர்புடையவர்கள் கிடைக்காததால் அவர்களின் குடும்பத்தினரை பாவூர்சத்திரம் போலீசார் காவல் நிலையத்திற்கு விசாரணைக்காக அழைத்து வந்தனர்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கைது செய்யப்பட்டவர்களின் உறவினர்கள் பாவூர்சத்திரம் காவல் நிலையத்தை முற்றுகையிட இருப்பதாகவும் நெல்லை & தென்காசி தேசிய நெடுஞ்சாலையில் மறியல் செய்ய இருப்பதாகவும் தகவல் பரவியதால் பாவூர்சத்திரம் காவல் நிலையத்தில் பெருமளவில் போலீசார் குவிக்கப்பட்டனர்.
இச்சம்பவத்தில் ஈடுபட்ட தலைமை காவலர் நடராஜனை சஸ்பெண்ட் செய்து நெல்லை மாவட்ட எஸ்பி அருண்சக்தி குமார் உத்தரவிட்டார்
மேலும் இந்த வழக்கில் தொடர்புடடையவர்கள் கிடைக்காததால் அவர்கள் குடும்பத்தினர் போலீசார் விசாரணைக்கு வருமாறு அழைத்ததால் பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்கள் இதுபற்றி தென்காசி சட்டமன்ற உறுப்பினர் செல்வ மோகன்தாஸ் பாண்டியன்னிடம் இந்த வழக்கில் சம்பந்தமில்லாதவர்களை போலீசார் கைது செய்யக்கூடாது என்று கூறி ஆண்கள் பெண்கள் உட்பட 100க்கும் மேற்பட்டோர் திரண்டு புகார் தெரிவித்தனர்.
எம்.எல்.ஏ., ஆலங்குளம் டிஎஸ்பி ரமேஷ், ஆலங்குளம் இன்ஸ்பெக்டர் மற்றும் பாவூர்சத்திரம் இன்ஸ்பெக்டர் ஆகியோரிடம் பேச்சு வார்த்தை நடத்தினார். பேச்சு வார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர்.
இந்த சம்பவத்தால் பாவூர்சத்திரத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.