December 7, 2025, 8:08 AM
24 C
Chennai

மோடி பற்றி அவதூறு வழக்கில் ராகுல் குற்றவாளி- சூரத் நீதிமன்றம்

500x300 1853823 rahu - 2025

பிரதமர் மோடி குறித்து அவதூறாக பேசியதாக தொடரப்பட்ட வழக்கில் காங்கிரஸ் எம்.பி.ராகுல் காந்தி குற்றவாளி என தீர்ப்பு வழங்கிய சூரத் நீதிமன்றம்  அவருக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தும் உத்தரவிடப்பட்டுள்ளது.

காங்கிரஸ் எம்.பி., ராகுல், 2019 லோக்சபா தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட போது, நீரவ் மோடி, லலித் மோடி, நரேந்திர மோடி என திருடர்கள் அனைவரின் பெயருக்கு பின்னால் ஏன் மோடி என்ற பெயர் இருக்கிறது’ எனப் பேசினார்.

இந்த பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக ராகுல் மீது நடவடிக்கை எடுக்ககோரி குஜராத் மாநிலம் சூரத் நீதிமன்றத்தில் பா.ஜ.க எம்.எல்.ஏ., புர்னேஷ் மோடி என்பவர் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கை விசாரித்த சூரத் ஜூடிசியல் மாஜிஸ்திரேட் எச்.எச்.வர்மா, ‘பிரதமரை அவதூறாக பேசிய வழக்கில் ராகுல் குற்றவாளி. அவருக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்படுகிறது  என தீர்ப்பு வழங்கினார்.

மேலும், 10 ஆயிரம் பிணையில் அவருக்கு ஜாமின் வழங்கியதுடன், இந்த வழக்கை எதிர்த்து மேல்முறையீடு செய்ய ஏதுவாக 30 நாட்கள் தண்டனையை நிறுத்தி வைத்தும் உத்தரவிட்டு உள்ளது.

1853887 dsc2861 - 2025

காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி மீது சூரத் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியதை கண்டித்து தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவர் கே.எஸ். அழகிரி தலைமையில் கும்பகோணத்தில் சென்னை செல்லும் சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் கும்பகோணம் மேற்கு மற்றும் ரெயில்வே போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுப்பட்ட தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவர் கே.எஸ்.அழகிரி, மாநில துணைத்தலைவர் ராஜேந்திரன், தஞ்சை வடக்கு மாவட்ட தலைவர் லோகநாதன் கும்பகோணம் மாநகரத் தலைவர் மிர்சாவூதீன்பொ துக்குழு உறுப்பினர் தியாகராஜன் உட்பட காங்கிரஸ் கட்சியிரை கைது செய்தனர்.

இதனால் கும்பகோணம் ரெயில் நிலையத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. மறியலுக்கு பிறகு சோழன் எக்ஸ்பிரஸ் ரெயில் சென்னைக்கு புறப்பட்டு சென்றது.

ராகுல் காந்திக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டதை கண்டித்து கும்பகோணத்தில் காங்கிரசார் ரெயிலை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தஞ்சை ரெயில் நிலையத்தில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

ரெயில்வே நிலைய நுழைவாயில் முன்பு பேரிகார்டு வைத்து தடுப்பு ஏற்படுத்தினர். ரெயில்வே நிலையத்தை சுற்றிலும் பல்வேறு இடங்களில் போலீசார் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

திருப்பரங்குன்றம் விவகாரம்; இந்து முன்னணி இன்று மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம்!

உச்ச நீதிமன்றம் தரும் தீர்ப்பை ஏற்குமா திமுக அரசு இல்லை அதற்கும் உள்நோக்கம் கற்பித்து தான்தோன்றி தனமாக செயல்படுமா?

மாணவர்களின் ‘ஜய் ஸ்ரீராம்’ கோஷத்தில் அதிர்ந்த அயோத்தி ராமர் கோவில்!

முதல் முறையாக, வட இந்தியாவின் நம்பிக்கை, பாரம்பரியம் மற்றும் பக்தியின் பரந்த கலாச்சாரத்தை நேரடியாக அனுபவிக்கும் வாய்ப்பு அவர்களுக்கு கிடைத்தது.

பஞ்சாங்கம் டிச.07 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

வாராணசியில் கைவினைப் பொருட்களின் தனித்துவக் கண்காட்சி!

இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒன்றிணைத்து அதன் கலாச்சார வேர்களை புதிய தலைமுறைகளுக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்ட காசி தமிழ் சங்கத்தின் உணர்வை இந்த அரங்கம் உண்மையிலேயே பிரதிபலிக்கிறது.

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

Entertainment News

Popular Categories