Home Blog Page 110

சோழவந்தான் ஜெனக நாராயண பெருமாள் கோவில் பிரம்மோத்ஸவ விழா கொடியேற்றம்!

janagai mariamman temple kodiyetram - 2026

சோழவந்தான் ஜெனக நாராயண பெருமாள் கோவில் பிரம்மோற்சவ விழா கொடியேற்றம் நடைபெற்றது.

சோழவந்தான் ஜெனக நாராயணபெருமாள் கோவில் திருவிழா கொடியேற்றம் நடைபெற்றது. கொடியேற்றத்தை முன்னிட்டு காலை கோவிலில் இருந்து அர்ச்சகர் பார்த்தசாரதி திருவிழாகொடி மற்றும் பொருட்களை எடுத்து சோழவந்தானின் நான்கு விதிகளில் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு கோவில் வந்தடைந்தது.

தொடர்ந்து கோவில் முன்பு உள்ள கொடிக்கம்பத்தில் திருவிழா கொடியேற்றப்பட்டது. நிகழ்ச்சியில் உபயதாரர் கன்னியப்பன் முதலியார் சார்பாக பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

அறங்காவலர் குழுத் தலைவர் எஸ். எஸ். ராஜாங்கம், கோவில் செயல் அலுவலர் பொறுப்பு இளமதி,ஆய்வாளர் ஜெயலட்சுமி, மற்றும் அறங்காவலர்கள் பெரியசாமி, எஸ் எம் பாண்டியன், ஆண்டியப்பன், மங்கையர்கரசி உட்படபக்தர்கள் கலந்து கொண்டனர். சோழவந்தான்
போலீசார் பாதுகாப்பு ஏற்பாடு செய்திருந்தனர்.

இவர்களில் யார்… எப்படி?!

annamalai stalin edappadi
அண்ணாமலை – ஸ்டாலின் – எடப்பாடி பழனிசாமி

அண்ணாமலை, ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமி, ராமதாஸ், சீமான், விஜய் – இவர்களில் யார் எப்படி?

— ஆர். வி. ஆர்

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலைக்கு, மக்கள் செல்வாக்கு நாளுக்கு நாள் ஒரு அலாதியான காரணத்தினால் கூடுகிறது. அது என்ன?

திமுக-விலிருந்து ஆரம்பிக்கலாம்.

மு. க. ஸ்டாலின் தலைமை தாங்கும் திமுக ஒரு அராஜகக் கட்சி என்பது தமிழக மக்களின் பரவலான எண்ணம். வேண்டாதவர்களிடம் முஷ்டி வீசுதல், எட்டி உதைத்தல், காது கூசும் சொற்கள் பேசுதல் போன்ற அநாகரிகச் செயல்கள் அக் கட்சியின் கீழ் மட்டத்திலும் நடு மட்டத்திலும் இயல்பாகப் பரவியிருக்கிறது என்பது தமிழ்நாட்டில் பலரின் கருத்து. அந்தக் கட்சியினரைப் பகைக்கிற மாதிரி வெளியில் பேசவோ செயல்படவோ சாதாரண மக்கள் பயப்படுவார்கள்.

தமிழ்நாட்டில் சில அரசியல் தலைவர்கள் திமுக-வை எதிர்க்கலாம், ஆனால் தமது சுயலாபத்திற்காக மட்டும் எதிர்க்கிறார்கள், அல்லது அவர்கள் திமுக மாதிரி தில்லானவர்கள் கிடையாது, சமத்து சாதுப் பேர்வழிகள், அவர்களை நம்பிப் பயனில்லை, என்பதும் பெருவாரியான சாதாரண மக்களின் கருத்து. இந்த நிலையில் தமது அறியாமையால், இயலாமையால், அடாவடிக் கட்சி திமுக-வுக்கு ஓட்டுப் போடுவது பாதுகாப்பானது என்ற ஒரு எண்ணத்தில் சாதாரண மக்கள் அந்தக் கட்சியை வேறு வழி தெரியாமல் ஆதரிக்கிறார்கள். இருக்கிற ஏழ்மையில் வருகிற பணத்தை அவர்கள் தேர்தல் காலங்களில் வாங்கிக் கொள்வது வேறு விஷயம். திமுக-வுக்கு அநேக சாதாரண மக்கள் வாக்களிப்பதன் பிரதான காரணம் பணம் அல்ல.

எம்.ஜி.ஆர் மீதுள்ள பற்றால், அவரது இரட்டை இலை சின்னத்திற்கு ஓட்டுப் போடும் 55+ வயதுள்ள வாக்காளர்கள் இன்றும் அதிமுக-வை ஆதரிக்கிறார்கள் – தலைமைக் குணம் இல்லாத, தகுதிக்கு மீறிய பேராசைகள் நிறைந்த, எடப்பாடி பழனிசாமிக்காக அல்ல. பழனிசாமியோ அல்லது அதிமுக-வின் வேறு முன்னாள் இந்நாள் தலைவரோ இன்று மக்களை ஈர்க்கும் தலைவர்கள் அல்ல. அவர்கள் இரட்டை இலையின் நிழலில் இளைப்பாறுகிறவர்கள்.

ராமதாஸின் பாமக, அடிப்படையில் ஒரு ஜாதிக் கட்சியாகவே தெரிகிறது. அதனால் பிற ஜாதி மக்கள் பலரும் அந்தக் கட்சியிலிருந்து தள்ளி இருக்க விரும்புவார்கள். மற்ற மக்களுக்கும் அவரவர் ஜாதிகள் மேல் பிடிப்பு இருப்பதால், அவர்களில் பலரும் பாமக-வில் சேர, அந்தக் கட்சியை நேரடியாக ஆதரிக்க, விரும்ப மாட்டார்கள். தன் ஜாதி மக்களை முக்கியமாக ஈர்த்திருக்கும் ராமதாஸ், ஒவ்வொரு தேர்தல் நிலவரப்படியும் திமுக மற்றும் அதிமுக-வுடன் மாறி மாறிக் கூட்டணி வைத்தாலும் தன் கட்சியினரின் ஆதரவை அவர் இழக்க மாட்டார்.

நாம் தமிழர் கட்சியின் சீமான் மேடைகளில், பத்திரிகையாளர் சந்திப்புகளில், கைகள் வீசி, முக பாவங்கள் மாற்றி, குரலை ஏற்றி இறக்கி, பஞ்ச் டயலாக் பேசி, நாடகத் தனம் செய்கிறார். துடிப்பான உணர்ச்சி மிகுந்த இள வயதினரை, அதுவும் ஆண்களை, அவர் கவர்கிறார். போட்டிக் கட்சிகளின் அரசியல் தலைவர்களிடம் சீமான் டெக்னிக் இல்லை. மற்றபடி அவர் ஒரு திமுக பாணி கட்சியாகவும், திமுக-வுக்குப் போட்டியாகவும், வளர நினைக்கிறார். மற்ற யாரும் கவுரமான தலைவர்களாக அவர் கட்சியில் உருவாக முடியாது. அவர்தான் கட்சி.

நடிகர் விஜய்க்கு சினிமா ரசிகர்கள் ஏராளம். அரசியலுக்கு வந்து அரசியல்வாதியாக உழைத்துச் செயல்பட்டு மக்கள் ஆதரவைத் திரட்டியவர் அல்ல விஜய். தனக்கு ரெடிமேடாக இருக்கும் சினிமா ரசிகர்களின் ஆதரவை, தமிழக வெற்றிக் கழகத்தின் வாக்காளர் ஆதரவாகப் பெற்றவர் அவர். அவர் எந்தக் கட்சியை ஆதரித்தாலும் எதிர்த்தாலும் அவரது ரசிகர்களின் ஆதரவு அவருக்கு உண்டு. அவரிடம் முதிர்ச்சி ஏதும் காணப்படவில்லை. அரசியலில் விஜய் நிலைப்பாரா, வெற்றி அடைவாரா, என்று தெரியாது. அவர் இன்னொரு எம். ஜி. ஆரும் அல்ல.

இவர்கள் அனைவரிலிருந்தும் வேறுபட்டவர் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை. 41 வயதுதான் ஆகப் போகிறது. கட்சியில் சேர்ந்த பதினோரு மாதங்களில் தமிழக பாஜக தலைவர் ஆக்கப் பட்டார். அதைத் தொடர்ந்து, கடந்த மூன்றே முக்கால் வருடங்களில் அவர் மக்களிடம் தனக்கென்று ஒரு அபரிதமான செல்வாக்கை வளர்த்துக் கொண்டிருக்கிறார்.

தமிழகத்தில் ஏற்கனவே மிகப் பிரபலமான ஒரு கட்சித் தலைவரின் மடியில் தவழ்ந்தோ, காலில் விழுந்தோ, விரல் பிடித்தோ, அடியொற்றி நடந்தோ மக்களிடம் அறிமுகமாகி வளர்ந்தவர் அல்ல அண்ணாமலை. அவர் ஒரு சுயம்பு – அதை சரியாக அடையாளம் கண்டவர் பிரதமர் மோடி.

அண்ணாமலை மற்றும் தமிழக பாஜக-வின் ‘அநியாய அக்கிரம அராஜகத்திற்கு’ப் பயந்து, அதன் காரணமாக அதிகமான மக்கள் அண்ணாமலையை ஏற்கிறார்கள் என்பதில்லை. எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா மாதிரி, தோற்றக் கவர்ச்சியும் இல்லாத தலைவர் அண்ணாமலை. ராமதாஸ் மாதிரி, தன் ஜாதி மக்களை நம்பி, தன் ஜாதி மக்களுக்காக அரசியலுக்கு வந்தவர் அல்ல அண்ணாமலை. சீமானின் நாடகப் பாசாங்கும் அவரிடம் கிடையாது. விஜய் மாதிரி தமிழகத்தில் ரெடிமேட் ஆதரவாளர்கள் கொண்டவரும் அல்ல அவர். ஏற்கனவே உள்ள பாஜக-வில் சேர்ந்து, எப்படி அவரால் தமிழக பாஜக-வுக்குப் புத்துயிர் அளிக்க முடிந்தது, அவரும் நாளுக்கு நாள் அதிகம் பிரபலம் அடைகிறார்?

அண்ணாமலையின் தனிப்பட்ட மக்கள் செல்வாக்கிற்கான காரணம் இதுதான். ‘அராஜக திமுக-வை, முறைகேடுகள் நிறைந்த திமுக-வை, தைரியமாக, தில்லாக, தெனாவெட்டாக, நேருக்கு நேர், வார்த்தைக்கு வார்த்தை, பளீர் சுளீரென்று எதிர்க்க வல்ல ஒரே தமிழகத் தலைவர் அண்ணாமலை, அதையும் அவர் தனது சுயலாபத்திற்காகச் செய்யவில்லை, நமக்காகச் செய்கிறார். அவர் பேச்சும் தெளிவாக, நேராக, நியாயமாக, நச்சென்று இருக்கிறது. இந்த மனிதர் நமக்குப் பாதுகாப்பாகவும் இருப்பார். இவரை நம்பலாம்’ என்ற எண்ணம் அதிகமான தமிழர்களின் மனதில் பதிகிறது. இதுதான் அண்ணாமலையின் தனிப்பட்ட மக்கள் செல்வாக்கின் அடித்தளம்.

ஒரு காலத்தில் காஷ்மீரில் இந்திய ராணுவத்தினரை நோக்கிக் கல்லெறிந்தனர் சாதாரண மக்கள். ஏனென்றால் அப்போது காஷ்மீரில் தீவிரவாதிகளின் கை ஓங்கி இருந்தது. தில்லான தீவிரவாதிகள்தான் தமக்கு அதிகப் பாதுகாப்பு என்று நினைத்து, தீவிரவாதிகளின் கட்டளைப்படி காஷ்மீரில் அன்று சாதாரண மக்கள், கைகள் கட்டப்பட்ட நமது ராணுவத்தினர் மீது கல் வீசினர். ஆனால் அரசியல் சட்டப் பிரிவு 370 நீக்கப் பட்ட பிறகு, தீவிரவாதிகளை அடித்து நொறுக்கி துவம்சம் செய்யும் ராணுவத்தை வைத்திருக்கும் மத்திய அரசின் மீது இப்போது காஷ்மீர் மக்கள் அதிக நம்பிக்கை வைக்கிறார்கள்.

யார் தில்லானவர்களோ, யார் சக்தி மிக்கவர்களோ, அவர்களை ஆதரிக்கும், அவர்களுக்கு ஓட்டுப் போடும் இந்தியர்கள் அதிகம். அந்த சக்திமான்கள் நல்லவர்களாகவும் இருந்துவிட்டால் சாதாரண மக்கள் இரட்டிப்பு மகிழ்ச்சியுடன் அந்த நல்ல வல்லவர்களின் பின்னால் நிற்பார்கள். அப்படியாகத்தான் திமுக-வைத் துணிவோடு எதிர்த்துப் பேசி, அதற்கான காரண காரியங்களை விரிவாக, பொறுமையாக, எடுத்துச் சொல்லும் அண்ணாமலையைத் தமிழக மக்கள் பலரும் ஆதரிக்கிறார்கள்.

ஒரு அரசியல் கட்சியைக் குறியாக, தில்லாக, தளராமல் எதிர்ப்பதால் மட்டும் ஒரு புதிய பெரிய தலைவர் மக்களிடையே உருவாக முடியும் என்று காண்பித்தவர் அண்ணாமலை. அது ஏன் சாத்தியம் என்பதற்கு இரண்டு காரணங்கள். ஒன்று, அப்படி ஒதுக்கப்பட வேண்டிய பெரும் தீய சக்தி திமுக என்று சாதாரண மக்களே பரவலாக நினைக்கிறார்கள். இரண்டு, அந்த நினைப்பை அரசியல் உலகில் செயல்படுத்தக் கூடிய நேர்மையான, உறுதியான, நெஞ்சுரம் மிக்க, ஒரே தலைவர் அண்ணாமலை என்றும் மக்கள் நம்புகிறார்கள்.

தமிழகத்தில் பாஜக ஒரு கூட்டணி அமைத்து ஆட்சிக்கு வருவது, வரமுடியாமல் போவது, வேறு விஷயம். ஏனென்றால் தேர்தல் வெற்றிக்கான சரியான கூட்டணிக் கணக்குகள் தனியானவை, அவை மெய்ப்பட வேண்டும். ஆனால் அண்ணாமலை தமிழக அரசியலில் ஒரு விடிவெள்ளி, தமிழக பாஜக-வுக்கும் தமிழக மக்களுக்கும் ஒரு வரப் பிரசாதம் என்பது நிச்சயம் தானே?

Author: R. Veera Raghavan
Advocate, Chennai
veera.rvr@gmail.com
https://rvr-india.blogspot.com

நிறங்களின் வழியே உலகம்; ஓவியக் கண்காட்சி திறப்பு!

art exhibition in madurai - 2026

மதுரை இ.எம்.ஜி. யாதவா பெண்கள் கல்லூரி பிபிஏ இரண்டாம் ஆண்டு மாணவி க.அருந்தமிழ் இலக்கியாவின் ” நிறங்களின் வழியே உலகம்” ஓவியக் கண்காட்சி திறப்பு விழா நடைபெற்றது.

மதுரை காந்தி மியூசியத்தில் உள்ள அரசு அருங்காட்சியகத்தில் நடைபெற்ற இந்நிகழ்விற்கு, கதைசொல்லி பசுமலை பாரதி தலைமை வகித்தார். கவிஞர் செ.தமிழ்ராஜ் வரவேற்புரையாற்றினார்.

ஓவியக் கண்காட்சியை, ஓவியர், சிற்பக்கலைஞர் வ.சரண்ராஜ் திறந்து வைத்தார். அரசு அருங்காட்சியக காப்பாட்சியர் முனைவர் மீ.மருதுபாண்டியன், சோக்கோ இணை இயக்குநர் செல்வகோமதி, தமுஎகச மதுரை புறநகர் மாவட்ட தலைவர் ஓவியர் வெண்புறா, மதுரை மாநகர் மாவட்டச் செயலாளர் ஓவியர் ஸ்ரீரசா, ஆகியோர் குத்து விளக்கேற்றி வைத்து வாழ்த்துரை வழங்கினர்.

நாவலாசிரியர் பொன். விக்ரம், எழுத்தாளர் மதுரை நம்பி, ஓவியர் வெண்ணிலா ஆகியோர் ஓவியம் குறித்துப் பேசினர். ஊடகவியலாளர் ப கவிதா குமார் நன்றி கூறினார். ஞாயிற்றுக் கிழமையும் (மார்ச் 30) ஓவியக் கண்காட்சி நடைபெற்றது.

IPL 2025: கடைசி இடம் பிடிப்பதில் சென்னை, மும்பை அணிகளுக்கு இடையே போட்டியா?

ipl 2025 games - 2026

ஐ.பி.எல் 2025 – 30.03.2025
இன்று இரண்டு ஆட்டங்கள்

முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன்

முதல் ஆட்டம் – ஹைதராபாத் vs டெல்லி

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை (18.4 ஓவர்களில் 163. அனிகேத் வர்மா 74, ஹென்றி கிளாசன் 32, ட்ராவிஸ் ஹெட் 22, மிட்சல் ஸ்டார்க் 5/35, குல்தீப் யாதவ் 3/22, மோஹித் ஷர்மா 1/25) டெல்லி கேபிடல்ஸ் அணி (ஓவர்களில் 166/3, டியு பிளேசிஸ் 50, ஜேக் ஃப்ரேசர் மெகர்க் 38, அபிஷேக போரல் ஆட்டமிழக்காமல் 34, கேல் ராகுல் 15, ட்ரிஸ்டன் ஸ்டப்ஸ் ஆட்டமிழக்காமல் 21, சீஷன் அன்சாரி 3/42) 7 விக்கட்டுகள் வித்தியாசத்தில் வென்றது.

          பூவா தலையா வென்ற ஹைதராபாத் அணி முதலில் மட்டையாடத் தீர்மானித்தது. அந்த அணியின் தொடக்க வீரர் அபிஷேக ஷர்மா (1 ரன்) ஒரு மேசமான ரன் அவுட்டில் ஆட்டமிழந்தார். இல்லாத ஒரு ரன்னுக்கு ட்ராவிஸ் ஹெட் ஓட, அபிஷேக் தனது ஓட்டத்தில் வேகம் காட்டாததால் நிகம் வீசிய பந்து ஸ்டம்பில் நேராக அடித்ததால் ஆட்டமிழந்தார்.

மற்றொரு தொடக்க வீரரான ட்ராவிஸ் ஹெட் (12 பந்துகளில் 22 ரன், 4 ஃபோர்) அதற்கடுத்து வந்த இஷான் கிஷன்  (5 ரன்), நிதீஷ் குமார் ரெட்டி (பூஜ்யம் ரன்) என சன்ரைசர்ஸ் அணியின் வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழந்து அணியின் ஸ்கோர் 37/4 என ஆகியது. அவர்களுக்குப் பின்னர் ஆட வந்த அனிகேத் வர்மா (41 பந்துகளில் 74 ரன், 5 ஃபோர், 6 சிக்சர்), ஹென்றி கிளாசன் (19 பந்துகளில் 32 ரன், 2 ஃபோர், 2 சிக்சர்) இருவரும் சிறப்பாக ஆடினர்.

அதற்குப் பிறகு ஆடவந்த அபினவ் மனோகர் (4 ரன்), பேட் கம்மின்ஸ் (2 ரன்), வியன் முல்டர் (9 ரன்), ஹர்ஷல் படேல் (5 ரன்) ஆகியோர் சிறப்பாக ஆடவில்லை. இதனால் ஹைதராபாத் அணி 18.4 ஓவர்களில் அனைத்து விக்கட்டுகளையும் இழந்து 163 ரன் மட்டுமே எடுத்தது.

          167 ரன் என்ற வெற்றி இலக்கை அடைய இரண்டாவதாக ஆடவந்த டெல்லி அணியின் தொடக்க வீரர்கள் ஜேக் ஃப்ரேசர் மெகர்க் (32 பந்துகளில் 38 ரன், 4 ஃபோர், 2 சிக்சர்), மற்றும் டியு பிளேசிஸ் (27 பந்துகளில் 50 ரன், 3 ஃபோர், 3 சிக்சர்) மூன்றாவதாகக் களமிறங்கிய அபிஷேக் போரல் (18 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 34 ரன், 2 ஃபோர், 2 சிக்சர்), கே.எல். ராகுல் (5 பந்துகளில் 15 ரன், 2 ஃபோர், 1 சிக்சர்), ட்ரிஸ்டன் ஸ்டப்ஸ் (14 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 21 ரன்) ஆகியோர் அதிரடியாக ஆடி, 16 ஓவர்களில் 3 விக்கட் இழப்பிற்கு 166 ரன் எடுத்து அணிக்கு வெற்றியைப் பெற்றுத்தந்தனர். 

          அதிரடி பேட்டிங்க் அனி எனப் பெயர் பெற்றிருக்கும் சன்ரைசர்ஸ் அணியை இன்று டெல்லி அணி வென்றது அந்த அணிக்கு உற்சாகத்தை அளிக்கும்.

          டெல்லி அணியின் வேகப் பந்துவீச்சாளர் மிட்சல் ஸ்டார்க்  ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார்.

இரண்டாவது ஆட்டம் – ராஜஸ்தான் vs சென்னை

ராஜஸ்தான் ராயல்ஸ் அணி (182/9, நிதீஷ் ராணா 81, ரியான் பராக் 37, சஞ்சு சாம்சன் 20, ஷிம்ரன் ஹெட்மயர் 19, கலீல் அகமது 2/38, நூர் அகமது 2/28, மதீஷா பதிரனா 2/28, அஷ்வின் 1/46, ஜதேஜா 1/10) சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணியை ( 176/6, ருதுராஜ் கெய்க்வாட் 63, ரவீந்தர ஜதேஜா ஆட்டமிழக்காமல் 32, ராகுல் திரிபாதி 23, ஷிவம் துபே 18, தோனி 16, ஜாமி ஓவர்டன் ஆட்டமிழக்காமல் 11, வனிந்து ஹசரங்கா 4/35, ஆர்ச்சர் 1/13, சந்தீப் ஷர்மா 1/42) ஆறு ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.

          பூவாதலையா வென்ற சென்னை அணி முதலில் பந்துவீசத்தீர்மானித்தது. ராஜஸ்தான் அணியின் தொடக்க வீரர் யசஷ்வீ ஜெய்ஸ்வால் (4 ரன்) இன்றும் சோபிக்கவில்லை. மற்றொரு தொடக்க வீரரான சஞ்சு சாம்சன் (16 பந்துகளில் 20 ரன்) எட்டாவது ஓவரில் ஆட்டமிழந்தார். மூன்றாவதாகக் களமிறங்கிய நிதீஷ் ராணா (36 பந்துகளில் 81 ரன், 10 ஃபோர், 5 சிக்சர்) 12ஆவது ஓவர் வரை விளையாடினார்.

அவருக்குத் துணையாக அணித்தலைவர் ரியான் பராக் (28 பந்துகளில் 37 ரன், 2 ஃபோர், 2 சிக்சர்) 18ஆவது ஓவர் வரை விளையாடினார். ஆயினும் மற்ற வீரர்களான துருவ் ஜுரல் (3 ரன்), வனிந்து ஹசரங்கா (4 ரன்), ஷிம்ரன் ஹெட்மயர் (16 பந்துகளில் 19 ரன்), ஆர்ச்சர் (பூஜ்யம் ரன்), குமார் கார்த்திகெய சிங் (1 ரன்), மஹேஷ் தீக்ஷணா (2 ரன்), துஷார் தேஷ்பாண்டே (1 ரன்) ஆகியோர் விரைவாக ரன் சேர்க்க முயன்று விரைவில் ஆட்டமிழந்தனர். இதனால் ராஜஸ்தான் அணி 20 ஓவர் முடிவில் 9 விக்கட் இழப்பிற்கு 182 ரன் எடுத்தது.

          183 ரன் என்ற கடினமான வெற்றி இலக்கை அடைய இரண்டாவதாக ஆடவந்த சென்னை அணியின் தொடக்க வீரர் ரச்சின் ரவீந்திரா (பூஜ்யம் ரன்) முதல் ஓவரிலேயே ஆட்டமிழந்தார். அதற்கடுத்து விளையாட வந்த ராகுல் திரிபாதி (19 பந்துகளில் 23 ரன், 3 ஃபோர், 1 சிக்சர்), ருதுராஜ் கெய்க்வாட் (44 பந்துகளில் 63 ரன், 7 ஃபோர், 1 சிக்சர்), ஷிவம் துபே (10 பந்துகளில் 18 ரன், 1 ஃபோர், 2 சிக்சர்) ஆகியோர் சிறப்பாக ஆடினர்.

ஆயினும் ரன்ரேட் ராஜஸ்தான் அணியின் ரன்ரேட்டைவிடக் குறைவாகவே இருந்தது. 15.5ஆவது ஓவரில் ருதுராஜ் ஆட்டமிழக்கும்போது அனியின் ஸ்கொர் 129ஆக் இருந்தது. மீதமுள்ள 4 ஓவர்களில் 54 ரன் எடுக்க வேண்டியிருந்தது. ரவீந்திர ஜதேஜா (22 பந்துகளில் 32 ரன்) எம்.எஸ். தோனி (11 பந்துகளில் 16 ரன்) களத்தில் இருந்தபோதும். 20 ஓவர் வரை ஆடியபோதும் வெற்றி இலக்கை சென்னை அணி அடைய முடியவில்லை. எனவே ராஜஸ்தான் அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

          ராஜஸ்தான் அணியின் நிதீஷ் ராணா தனது அற்புதமான பேட்டிங்கிற்காக ஆட்டநாயகன் விருது பெற்றார்.

கோடையில் குளிர்ச்சி: மனதின் குரலில் பிரதமர் மோடி!

manadhinkural - 2026
#image_title

மனதின் குரல், 120ஆவது பகுதி /ஒலிபரப்பு நாள் : 30.03.2025/ தமிழில்: ராமஸ்வாமி சுதர்ஸன்

எனதருமை நாட்டுமக்களே, வணக்கம்.  இன்று மிகவும் புனிதமான தினம், இன்றைய தினத்தன்று மனதின் குரலை ஒலிக்கச் செய்யும் சந்தர்ப்பம் எனக்கு வாய்த்திருக்கிறது.  இன்று சைத்ர மாத சுக்ல பக்ஷத்தின் பிரதிபதா திதியாகும்.  இன்றிலிருந்து சைத்ர நவராத்திரி தொடங்குகிறது.  இன்றிலிருந்து பாரதிய நவவருஷமும் தொடங்குகிறது.  இந்த முறை விக்ரம் சம்வந்த் 2082 தொடங்குகிறது. 

பிஹாரிலிருந்தும், மேற்கு வங்கத்திலிருந்தும், தமிழ்நாட்டிலிருந்தும், குஜராத்திலிருந்தும் என, இந்த வேளையிலே என் முன்பாக உங்களுடைய ஏராளமான கடிதங்கள் வைக்கப்பட்டிருக்கின்றன.  இவற்றிலே பல கடிதங்கள் சுவாரசியமான முறையிலே மக்களுக்குத் தங்களுடைய மனதின் குரலைப் பதிவு செய்கின்றன.  பல கடிதங்களில் நல்வாழ்த்துக்களும் உண்டு, பாராட்டுச் செய்திகளும் உண்டு.  ஆனால் இன்று சில செய்திகளை உங்களுக்கு ஒலிக்கச் செய்யவேண்டும் என்று என் மனம் ஆசைப்படுகிறது.  

முதல் செய்தி கன்னடத்தில் – சர்வாரிகி உகாதி ஹப்பத, ஹார்திக சுபாஷயகளு.  அடுத்த செய்தி தெலுகுவில் – அந்தரிகி உகாதி சுபாகான்ஷலு.  அடுத்த கடிதம் கொங்கணியில் புத்தாண்டு வாழ்த்தினைத் தெரிவிக்கிறது.  சம்வஸா பாடவயார்ச்சி பர்பி. 

அடுத்த செய்தி மராட்டி மொழியிலே, குடி பாடிவா நிமித்த ஹார்திக் சுபேச்சா.  நம்முடைய ஒரு நண்பர் மலையாளத்திலே, எல்லாவருக்கும் விஷு ஆஷம்ஷகள்.  மேலும் ஒரு செய்தி தமிழிலே, அனைவருக்கும் புத்தாண்டு நல்வாழ்த்துகள்.

நண்பர்களே, இன்று நீங்கள் புரிந்து கொண்டிருப்பீர்கள், பல்வேறு மொழிகளிலும் செய்திகள் அனுப்பப்பட்டிருக்கின்றன.  ஆனால் இதன் காரணம் என்னவாக இருக்கும் என்று உங்களால் ஊகிக்க முடிகிறதா?  இந்தச் சிறப்பினைப் பற்றித் தான் நான் உங்களோடு கலந்து கொள்ள இருக்கிறேன். 

நம்முடைய தேசத்தின் பல்வேறு மாநிலங்களில் இன்றோ, அடுத்த சில நாட்களிலோ புத்தாண்டு தொடங்கவிருக்கின்றது.  இந்த அனைத்துச் செய்திகளும் புத்தாண்டு மற்றும் பல்வேறு நன்னாட்களுக்கான வாழ்த்துக்கள்.  ஆகையால் தான் எனக்கு இன்று பலப்பல மொழிகளில் மக்கள் தங்களின் நல்வாழ்த்துக்களை அனுப்பியிருக்கிறார்கள்.

நண்பர்களே, இன்று கர்நாடகத்திலே, ஆந்திராவிலே, தெலங்கானாவிலே உகாதிப் பண்டிகை மிகவும் கோலாகலத்தோடு கொண்டாடப்பட்டு வருகின்றது.  இன்றே தான் மகாராஷ்டிரத்திலும் குடிபடுவா கொண்டாடப்படுகிறது. 

பன்முகத்தன்மை நிறைந்த நமது தேசத்திலே, பல்வேறு மாநிலங்களிலும் அடுத்த சில நாட்களில் அசாமிலே ரோங்காலி பிஹு, வங்காளத்தில் போயிலா போய்ஷாக், கஷ்மீரத்திலே நவரேஹ் விழாக்கள் கொண்டாடப்படும்.  இதைப் போலவே 13 முதல் 15 ஏப்ரலுக்கு இடைப்பட்ட காலத்தில் தேசத்தின் பல்வேறு பாகங்களில் பல பண்டிகைகள் கோலாகலமாகக் கொண்டாடப்பட இருக்கின்றன.  

மேலும் ஈத் பண்டிகையும் வந்து கொண்டிருக்கிறது.  அதாவது இந்த மாதம் முழுவதும் பண்டிகைகளுக்கான மாதம், திருநாட்களுக்கான மாதம்.  நான் நாட்டுமக்கள் அனைவருக்கும் இந்தப் பண்டிகைகளின் பொருட்டு பலப்பல வாழ்த்துக்களைத் தெரிவிக்கிறேன். 

நமது இந்தப் பண்டிகைகள் பல்வேறு பகுதிகளில் கொண்டாடப்பட்டாலும், பாரதத்தின் வேற்றுமையில் எவ்வாறு ஒற்றுமை இழைந்தோடுகிறது என்பதைக் காண முடிகிறது.  இந்த ஒற்றுமை உணர்வைத் தான் நாம் மேலும்மேலும் பலப்படுத்திக் கொண்டிருக்க வேண்டும்.  

நண்பர்களே, தேர்வுகள் நெருங்கும் போது இளைய சமூகத்தோடு தேர்வுகளை எதிர்கொள்வோம் நிகழ்ச்சியை நான் செய்கிறேன்.  இப்போது தேர்வுகளோ முடிந்துவிட்டன.  பல பள்ளிகளில் மீண்டும் வகுப்புகள் தொடங்கப்பட தயாரிப்புகள் நடந்து வருகின்றன.  இதன் பிறகு கோடை விடுமுறைக்காலம் வந்துவிடும்.  ஆண்டின் இந்த வேளைக்குத் தான் குழந்தைகள் மிகவும் காத்துக் கிடப்பார்கள்.  எனக்கும் என்னுடைய சிறுவயது நாட்கள் நிழலாடுகின்றன, என்னுடைய நண்பனோடு நாள் முழுவதும் ஏதாவது கும்மாளம் அடித்துக் கொண்டிருப்பேன். 

ஆனால் அதோடு நின்று போகாமல் ஏதோ ஒரு வகையான ஆக்கப்பூர்வமானதையும் செய்வோம், கற்போம்.  கோடைக்காலப் பகல்வேளை அதிகமாக இருக்கும், இதிலே குழந்தைகளிடம் செய்வதற்கு நிறைய இருக்கும்.  இந்தச் சமயத்தில்தான் ஏதோவொரு புதிய பொழுதுபோக்கினைத் தனதாக்கிக் கொள்வதோடு நம்முடைய திறன்களை மேலும் கூர்மைப்படுத்திக் கொள்ள வேண்டும்.  இன்று பிள்ளைகளுக்கு இப்படிப்பட்ட தளங்களுக்குக் குறைவே கிடையாது. 

இவற்றிலிருந்து நிறைய இவர்களால் கற்றுக் கொள்ள முடியும்.  எடுத்துக்காட்டாக ஒரு அமைப்பு தொழில்நுட்ப முகாம் ஒன்றை நடத்தினால், அதில் பிள்ளைகள் செயலியை ஏற்படுத்துவதோடு கூடவே, ஓபன் சோர்ஸ் சாஃப்ட்வேர் அதாவது கட்டற்ற மென்பொருள் பற்றித் தெரிந்து கொள்ளலாம்.  வேறு எங்காவது சுற்றுச்சூழல், மேடைநாடகம் பற்றி, அல்லது தலைமைப்பண்பு, இப்படி பல்வேறுபட்ட விஷயங்கள் குறித்துப் பாடங்கள் நடந்த வண்ணம் இருக்கின்றன, இதோடு நீங்கள் உங்களை இணைத்துக் கொள்ளலாமே!! 

அந்த வகையில் பல்வேறு பள்ளிகளில் பேச்சு அல்லது நாடகம் பற்றிக் கற்பிக்கிறார்கள், இது பிள்ளைகளுக்கு மிகவும் பயனுடையதாக இருக்கிறது.  இவையனைத்தையும் தவிர, உங்களிடம் இந்த விடுமுறையில் பல இடங்களுக்குச் சென்று தன்னார்வச் செயல்பாடுகளில், சேவைகளோடு உங்களை இணைத்துக் கொள்ளும் சந்தர்ப்பம் இருக்கிறது. 

இத்தகைய நிகழ்ச்சிகள் தொடர்பாக என்னுடைய சிறப்பான வேண்டுகோள் என்னவென்றால், எந்த அமைப்பாவது, ஏதோ ஒரு பள்ளியோ, சமூக அமைப்புகளோ, அல்லது அறிவியல் மையமோ, இப்படிப்பட்ட கோடைக்கால நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்பவர்களோ யாராக இருந்தாலும், நீங்கள் செய்பவனவற்றை #MyHolidays என்பதோடு கண்டிப்பாகப் பகிருங்கள்.  இதனால் தேசமெங்கும் இருக்கும் குழந்தைகளுக்கும் அவர்களின் பெற்றோருக்கும் இவைபற்றிய தகவல்கள் எளிதில் கிடைக்கும்.

எனது இளைய நண்பர்களே, நான் இன்று உங்களோடு MY-Bharatஇன் சிறப்பான அட்டவணை பற்றியும் விவாதிக்க விரும்புகிறேன்.  ஏனென்றால், இது கோடைக்கால விடுமுறைக்காகத் தயார் செய்யப்பட்டிருக்கிறது.  இந்த அட்டவணையின் ஒரு படி, இப்போது என் முன்னால் வைக்கப்பட்டிருக்கிறது.  நான் இந்த அட்டவணையின் சில வித்தியாசமான முயற்சிகளைப் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன்.  எடுத்துக்காட்டாக MY-Bharatஇன் கல்விச் சுற்றுலாவில், நமது மக்கள் மருந்தகங்கள் எவ்வாறு செயல்படுகின்றன என்பதை நீங்கள் அறிந்து கொள்ளலாம்.  துடிப்புநிறை கிராமம் இயக்கத்தின் அங்கமாக ஆகி நீங்கள் எல்லைப்புறக் கிராமங்களின் ஒரு வித்தியாசமான அனுபவத்தைப் பெற முடியும். 

இதோடு கூடவே அங்கே கலாச்சாரம் மற்றும் விளையாட்டு நடவடிக்கைகளில் நீங்கள் கண்டிப்பாகப் பங்கெடுத்துக் கொள்ள இயலும்.  அதே போல அம்பேட்கர் ஜயந்தியின் போதான பாதயாத்திரையில் பங்கெடுத்துக் கொண்டு நீங்கள் அரசியல் சட்டத்தின் விழுமியங்கள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த இயலும்.  குழந்தைகளிடமும் அவர்கள்தம் பெற்றோரிடமும் என்னுடைய வேண்டுகோள் என்னவென்றால் நீங்கள் விடுமுறை நாட்களின் உங்களுடைய அனுபவங்களை  #HolidayMemoriesஉடன் கண்டிப்பாகப் பகிருங்கள்.  நான் உங்களுடைய அனுபவங்களை அடுத்துவரும் மனதின் குரலிலே இடம்பெறச் செய்ய முயற்சிக்கிறேன்.

எனதருமை நாட்டுமக்களே, கோடைக்காலம் தொடங்கியவுடனேயே நகரம்தோறும், கிராமந்தோறும், நீரைச் சேமிக்கும் தயாரிப்புகள் தொடங்கி விடுகின்றன.  பல மாநிலங்களில் நீர் சேகரிப்போடு தொடர்புடைய பணிகள், நீர் பாதுகாப்போடு தொடர்புடைய பணிகளுக்குப் புதிய வேகம் பிடித்திருக்கின்றன.   ஜலசக்தி அமைச்சகமும் பல்வேறு தன்னார்வ அமைப்புகளும் இந்த நோக்கில் பணியாற்றி வருகின்றார்கள்.  தேசத்தின் ஆயிரக்கணக்கான செயற்கைக் குளங்கள், தடுப்பணைகள், ஆழ்குழாய்க் கிணறுகளின் மறுசெறிவு, சமூக ஊறல்குழி ஆகியவை நிர்மாணிக்கப்பட்டு வருகின்றன. 

ஒவ்வோர் ஆண்டினைப் போலவே இந்த முறையும், கேட்ச் தி ரெயின், அதாவது மழை நீரைச் சேகரிப்போம் இயக்கத்திற்காக தயாரிப்புகள் செய்யப்பட்டு விட்டன.  இந்த இயக்கமும் கூட அரசினுடையது அல்ல, சமூகத்தினுடையது, மக்களுடையது.  நீர் பாதுகாப்போடு அதிக அளவு மக்களை இணைப்பதற்காக நீர் சேகரிப்புக்கான மக்கள் பங்கெடுக்கும் இயக்கங்களும் நடத்தப்பட்டு வருகின்றன.  நம்மிடத்திலே இருக்கும் இயற்கை ஆதாரங்களை எவ்வாறு அடுத்த தலைமுறையினரிடம், பாதுகாப்பாக கொண்டு சேர்ப்பது என்பது தான் முயற்சி.

நண்பர்களே, மழைநீர்த் துளிகளைச் சேகரிப்பதன் மூலம் நாம் நிறைய நீரை வீணாகாமல் சேமிக்க முடியும்.  கடந்த சில ஆண்டுகளில் இந்த இயக்கத்தின்படி, தேசத்தின் பல பாகங்களில் நீர் பாதுகாப்பு தொடர்பான இதுவரை காணாத அளவு செயல்கள் நடந்திருக்கின்றன.  நான் உங்களுக்கு சுவாரசியமான ஒரு புள்ளிவிவரத்தை அளிக்கிறேன்.  கடந்த 7-8 ஆண்டுகளில் புதிதாக உருவாக்கப்பட்ட கண்மாய்கள்-குளங்கள் மற்றும் நீர் மறுசெறிவு அமைப்புகளால் 11 பில்லியன் க்யூபிக் மீட்டரை விட அதிக அளவு நீர் பாதுகாக்கப்பட்டிருக்கிறது.  ஆமாம், இந்த 11 பில்லியன் க்யூபிக் மீட்டர் நீர் என்றால் எவ்வளவு என்று நீங்கள் யோசிக்கலாம்? 

நண்பர்களே, பாக்ரா நங்கல் அணையில் திரளும் நீர் தொடர்பான படங்களை நீங்கள் கண்டிப்பாகப் பார்த்திருப்பீர்கள்.  இந்த நீர், கோவிந்த் சாகர் ஏரியை நிறைக்கிறது.   இந்த ஏரியின் நீளம் 90 கிலோ மீட்டருக்கும் அதிகமானது.  இந்த ஏரியிலும் கூட 9-10 பில்லியன் க்யூபிக் மீட்டருக்கு அதிகமான நீரைச் சேமிக்க முடியாது.  வெறும் 9-10 பில்லியன் க்யூபிக் மீட்டர் மட்டுமே!!  ஆனால் நாட்டுமக்களின் சின்னச்சின்ன முயற்சிகள் காரணமாக, தேசத்தின் பல்வேறு பாகங்களில் 11 பில்லியன் க்யூபிக் மீட்டர் நீர் பாதுகாக்கப்படும் ஏற்பாடுகள் செய்யப்பட்டு விட்டன.  அற்புதமான முயற்சி தானே இது!!  

நண்பர்களே, இந்தக் கோணத்தில் கர்நாடகத்திலே கடக் மாவட்டத்தைச் சேர்ந்த மக்களும் எடுத்துக்காட்டாய் விளங்குகிறார்கள்.  சில ஆண்டுகள் முன்பாக இங்கே இரு கிராமங்களில் இருந்த ஏரிகள் முழுமையாக வறண்டு விட்டன.  ஒரு சமயத்தில் கால்நடைகள் அருந்தக்கூட நீர் இல்லாமல் போனது என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்!!  மெல்லமெல்ல, ஏரியில் புற்களும் புதர்களும் ஆக்கிரமிக்கத் தொடங்கின.  ஆனால் கிராமவாசிகள் சிலரோ, ஏரிக்குப் புத்துயிர் அளிக்க வேண்டும் என்ற முடிவைச் செய்தார்கள், பணியில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டார்கள்.  எதை விரும்பினார்களோ, அதைச் செய்து முடித்தார்கள். 

கிராமவாசிகளின் முயற்சிகளைப் பார்த்து அக்கம்பக்கத்து சமூகசேவை அமைப்புகளும் இவர்களோடு தங்களை இணைத்துக் கொண்டன.  அனைவரும் இணைந்து குப்பைக்கூளங்களை அகற்றி, சில காலத்திற்குள்ளாகவே ஏரியை முழுமையாகச் சுத்தம் செய்து விட்டார்கள்.  இப்போது மழைக்காலத்திற்காக மக்கள் காத்துக் கொண்டிருக்கிறார்கள்.  உண்மையிலேயே மழைநீரைச் சேகரிப்போம் இயக்கத்துக்கான அருமையான எடுத்துக்காட்டு இது. 

நண்பர்களே, நீங்களும் கூட சமூக அளவிலான இப்படிப்பட்ட முயற்சிகளோடு உங்களை இணைத்துக் கொள்ளுங்கள்.  இந்த மக்கள் இயக்கத்தை முன்னெடுத்துச் செல்ல நீங்கள் அனைவரும் இப்போதிலிருந்து திட்டங்களைத் தீட்டுங்கள், ஆனால் நீங்கள் ஒரு விஷயத்தை நினைவில் கொள்ள வேண்டும். 

முடிந்தால் கோடையில் உங்கள் வீட்டிற்கு முன்பாக பானையில் நீரைக் கண்டிப்பாக வைத்திருங்கள்.  வீட்டின் மாடியிலோ, முற்றத்திலோ பறவைகளுக்காக நீர் வையுங்கள்.  இந்தப் புண்ணிய கார்யம் உங்கள் மனதை எத்தனை வருடும் என்பதை நீங்களே உணரலாம்.  

நண்பர்களே, மனதின் குரலில் இப்போது சிறகு விரிக்கும் மனோவலிமை பற்றி!!  சவால்களைத் தாண்டி உறுதியை வெளிப்படுத்தல் பற்றி!!  சில நாட்கள் முன்பாக முடிவடைந்த கேலோ இண்டியா பேரா விளையாடுக்களில் மீண்டும் ஒருமுறை விளையாட்டு வீரர்கள் தங்களுடைய ஈடுபாடு மற்றும் திறமைகளை வெளிப்படுத்தி நம்மனைவரையும் மலைக்கச் செய்து விட்டார்கள். 

இந்த முறை முன்பைவிட அதிக அளவில் விளையாட்டு வீரர்கள் இந்த விளையாட்டுக்களில் பங்கெடுத்தார்கள்.  பேரா ஸ்போர்ட்ஸ் என்பது எத்தனை பிரபலமாக இருக்கிறது என்பதை நாம் இதிலிருந்து தெரிந்து கொள்ளலாம்.  கேலோ இண்டியா பேரா கேம்ஸிலே பங்கெடுத்துக் கொண்ட அனைத்து விளையாட்டு வீரர்களுக்கும், அவர்களின் அருமையான முயற்சிகளுக்கும் நான் என் பாராட்டுக்களைத் தெரிவிக்கிறேன். 

ஹரியாணா, தமிழ்நாடு மற்றும் உத்திர பிரதேசத்தின் விளையாட்டு வீரர்கள் முறையே முதல், இரண்டாவது, மூன்றாவது இடங்களைப் பெற்றமைக்காக நல்வாழ்த்துக்களை அளிக்கிறேன்.  இந்த விளையாட்டுக்களின் வாயிலாக நமது மாற்றுத் திறனாளி விளையாட்டு வீரர்கள், 18 தேசிய சாதனைகளையும் உருவாக்கியிருக்கின்றார்கள்.  இவற்றிலே பன்னிரெண்டினை நமது பெண் விளையாட்டு வீரர்கள் ஏற்படுத்தியிருக்கின்றார்கள்.  இந்த முறை கேலோ இண்டியா பேரா கேம்ஸில் தங்கப் பதக்கம் வென்ற மல்யுத்த வீர ரான ஜாபி மேத்யூ எனக்கு எழுதியிருக்கும் கடிதத்தின் சில பகுதிகளை உங்களிடம் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

”பதக்கம் வெல்வது மிகவும் விசேஷமானது ஆனால், எங்களுடைய போராட்டம் பதக்க மேடையிலே ஏறி நிற்பதோடு முடிந்து போவதில்லை. நாங்கள் ஒவ்வொரு நாளும் ஒரு போராட்டத்தை எதிர்கொண்டு வருகிறோம்.  வாழ்க்கை பல வகையாக எங்களை சோதித்துப் பார்க்கிறது.  மிகவும் குறைவானவர்களால் மட்டுமே எங்களின் போராட்டம் பற்றிப் புரிந்து கொள்ள முடிகிறது.  இதனைத் தாண்டி நாங்கள் நெஞ்சுரத்தோடு முன்னேறி வருகிறோம்.  நாங்கள் எங்களுடைய கனவுகளை நிறைவேற்றுவதில் ஈடுபட்டிருக்கிறோம்.  நாங்கள் யாருக்கும் குறைவானவர்கள் அல்ல என்பதே எங்களுடைய நம்பிக்கையாக இருக்கிறது.”

சபாஷ்!!  ஜாபி மேத்யூ அவர்களே, நீங்கள் அற்புதமாக எழுதியிருக்கிறீர்கள், அருமை, அருமை.  இந்தக் கடிதத்திற்காக மட்டுமே கூட நான் உங்களுக்கு என் நன்றிகளைத் தெரிவிக்கிறேன்.  நான் ஜாபி மேத்யூவோடு கூட, நம்முடைய அனைத்து மாற்றுத்திறனாளி நண்பர்களுக்கும் கூற விரும்புவது என்னவென்றால் உங்களுடைய முயற்சிகள் அனைத்துமே எங்கள் அனைவருக்கும் உத்வேகங்கள்.

நண்பர்களே, தில்லியில் மேலும் ஒரு மிகப்பெரிய ஏற்பாடு மக்களுக்கு மிகவும் உத்வேகமளித்திருக்கிறது, உற்சாகத்தை அளித்திருக்கிறது.  முதன்முறையாக ஃபிட் இண்டியா கார்னிவல், அதாவது உடலுறுதி இந்தியா விழா என்ற ஒரு நூதனமான எண்ணத்திற்கு வடிவம் கொடுக்கப்பட்டிருக்கிறது.  இதிலே பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த 25,000த்திற்கும் மேற்பட்டவர்கள் பங்கெடுத்தார்கள். 

இவர்கள் அனைவரின் இலக்கு ஒன்று தான் – உடலுறுதியோடு இருத்தல், உடலுறுதி தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தல்.   இந்த ஏற்பாட்டில் பங்கெடுத்தவர்கள் அனைவருக்கும் அவர்களின் உடல்நலத்தோடு கூடவே ஊட்டச்சத்டோடு தொடர்புடைய தகவல்களும் கிடைத்தன.  நீங்களும் கூட அவரவர் பகுதிகளிலும் இப்படிப்பட்ட விழாக்களை ஏற்பாடு செய்ய வேண்டும் என்று நான் வேண்டிக் கொள்கிறேன்.  இந்த முன்முயற்சியில் MY-Bharat உங்களுக்கு மிகவும் உதவிகரமாக ஆக முடியும். 

நண்பர்களே, நமது உள்நாட்டு விளையாட்டுக்கள் இப்போது பிரபலமான கலாச்சாரம் என்ற வகையிலே மாறி வருகின்றன.  பிரபலமான ரேப்பரான ஹனுமான்கைண்ட், இவரைப் பற்றி அனைவரும் அறிவார்கள் தானே!!  இப்போதெல்லாம் அவருடைய புதிய பாடலான ரன் இட் அப், மிகவும் பிரபலமாகி வருகிறது.  இதிலே களறிப்பாயட்டு, கத்கா மற்றும் தாங்க்-தா போன்ற நம்முடைய பாரம்பரியமான போர்க்கலைகள் இடம் பெற்றிருக்கின்றன.   நான் ஹனுமான் கைண்டுக்கு என் பாராட்டுக்களைத் தெரிவிக்கிறேன், அவருடைய முயற்சியால் நமது பாரம்பரியப் போர்க்கலைகள் குறித்து உலகத்தோருக்குத் தெரியவரும்.

என் மனம்நிறை நாட்டுமக்களே, ஒவ்வோர் மாதமும் மைகவ் மற்றும் நமோ செயலியில் உங்களுடைய ஏராளமான செய்திகளும் தகவல்களும் எனக்குக் கிடைத்து வருகின்றன.  பல செய்திகள் என் மனதைத் தொட்டு விடுகின்றன, சில பெருமிதம் கொள்ளச் செய்கின்றன.  பல வேளைகளில் இந்தச் செய்திகள் நமது கலாச்சாரம் மற்றும் பாரம்பரியங்கள் குறித்து வித்தியாசமான தகவல்களை அளிக்கின்றன. 

இந்த முறை என் கவனத்தைக் கவர்ந்த செய்தியை நான் அவசியம் உங்களோடு பகிர்ந்து கொண்டே ஆக வேண்டும்.   வாராணசியின் அதர்வ் கபூர், மும்பையின் ஆர்யஷ் லீகா, அத்ரேய் மான் ஆகியோர் சில நாட்கள் முன்பு நான் மேற்கொண்ட மௌரீஷியஸ் பயணம் குறித்த தங்களுடைய உணர்வுகளை எழுதி அனுப்பியிருக்கிறார்கள்.  இந்தப் பயணத்தின் போது நடைபெற்ற கீத் கவயி பாட்டு நிகழ்ச்சி அவர்களுக்கு மிகவும் பிடித்திருந்ததாக அவர்கள் எழுதியிருக்கிறார்கள்.  கிழக்கு உத்திர பிரதேசம் மற்றும் பிஹாரிலிருந்து வந்த பல கடிதங்களிலும் கூட இதே உணர்வு தான் வெளிப்படுகிறது.  மௌரீஷியசில் கீத் கவயி பாடல்களின் அருமையான வெளிப்பாட்டினை நானுமே உணர்ந்தேன், மிகவும் சிறப்பாக இருந்தது.

நண்பர்களே, நாம் வேர்களோடு இணையும் போது, எத்தனை பெரிய புயல் வந்தாலும், நம்மை அசைத்துக் கூடப் பார்க்க முடியாது.  கற்பனை செய்து கொள்ளுங்கள், 200 ஆண்டுகள் முன்பாக, பாரதத்தைச் சேர்ந்த பலர் ஒப்பந்தத் தொழிலாளிகளாக மௌரீஷியஸ் சென்றார்கள்.  அடுத்து என்ன ஆகும் என்று யாருக்கும் ஒன்றும் தெரியாது.  ஆனால் காலப்போக்கில் அங்கே அவர்கள் கலந்து விட்டார்கள்.  மௌரீஷியசில் அவர்கள் தங்களுக்கென தனியொரு அடையாளத்தை ஏற்படுத்திக் கொண்டார்கள்.  அவர்கள் தங்களுடைய பாரம்பரியத்தைப் பாதுகாப்பாக வைத்திருந்தார்கள், தங்களுடைய வேர்களோடு இணைந்திருந்தார்கள்.  மௌரீஷியஸ் மட்டுமே இதற்கு உதாரணமல்ல.  கடந்த ஆண்டு நான் கயானா சென்ற போது, அங்கே சௌதால் அரங்கேற்றப்பட்டு, அது என்னை மிகவும் கவர்ந்தது.  

நண்பர்களே, இப்போது நான் உங்களுக்கு ஒரு ஒலிக்குறிப்பை இசைக்கிறேன்.

  • ஃபிஜி பற்றிய ஒலிக்குறிப்பு – 

இது ஏதோ நமது தேசத்தின் ஒரு பகுதியைச் சேர்ந்தது என்று தான் நீங்கள் நினைப்பீர்கள்.  ஆனால் இது ஃபிஜியோடு தொடர்புடையது என்று நான் சொன்னால் அது உங்களுக்கு பேராச்சரியத்தை ஏற்படுத்தலாம்.  இது ஃபிஜி நாட்டின் மிகவும் பிரபலமான ஃபக்வா சௌதால் ஆகும்.  இந்தப் பாடலும், இசையும் கேட்கும் அனைவரின் உள்ளங்களிலும் உற்சாகத்தைக் கொட்டி நிரப்பும்.  நான் உங்களுக்கு மேலும் ஒரு ஒலிக்குறிப்பை இசைத்துக் காட்டுகிறேன்.  

  • சூரினாம் பற்றிய ஒலிக்குறிப்பு –

இந்த ஒலிக்குறிப்பு சூரினாமின் சௌதால் ஆகும்.  இந்த நிகழ்ச்சியை தொலைக்காட்சியில் பார்த்த நாட்டுமக்கள், சூரினாமின் குடியரசுத் தலைவர் மற்றும் என்னுடைய நண்பரான சான் சந்தோகி அவர்கள் இதை எப்படி அனுபவித்துப் பார்த்துக் கொண்டிருக்கிறார் என்பதையும் கவனிக்கலாம்.  ஆட்டம் பாட்டங்களின் இந்தப் பாரம்பரியம், ட்ரினிடாட் மற்றும் டொபாகோவிலும் கூட மிகவும் புகழ்பெற்றதாக இருக்கிறது.  இந்த அனைத்து நாடுகளிலும் மக்கள் இராமாயணத்தைச் சிறப்பாகப் படிக்கிறார்கள்.  இங்கே ஃபக்வா மிகவும் பிரபலமான ஒன்று, அனைத்து பாரதிய திருவிழாக்கள்-பண்டிகைகளையும், முழு உற்சாகத்தோடு கொண்டாடுகிறார்கள்.   இவர்களுடைய பல பாடல்கள் போஜ்புரி, அவதி அல்லது கலந்துபட்ட மொழியில் இருக்கின்றன, சில வேளைகளில் ப்ரஜ் மற்றும் மைதிலியையும் பயன்படுத்துகிறார்கள்.  இந்த தேசங்களில் நமது பாரம்பரியங்களைப் பாதுகாப்பாக வைத்திருக்கும் அனைவரும் பாராட்டுதல்களுக்குச் சொந்தக்காரர்கள்.

நண்பர்களே, பல்லாண்டுகளாக பாரத நாட்டுக் கலாச்சாரத்தைப் போற்றிப் பராமரித்துவரும் பல அமைப்புகள் உலகத்தில் இருக்கின்றன.  இப்படிப்பட்ட ஒரு அமைப்புத் தான் சிங்கப்பூர் இண்டியன் ஃபைன் ஆர்ட்ஸ் சொஸைட்டி.  பாரதநாட்டு நடனம், இசை மற்றும் கலாச்சாரத்தைப் பேணிப் பாதுகாப்பதில் ஈடுபட்டிருக்கும் இந்த அமைப்பு, தனது பெருமைமிகு 75 ஆண்டுக்கால பயணத்தை நிறைவு செய்திருக்கிறது. 

இந்தச் சந்தர்ப்பத்தோடு தொடர்புடைய நிகழ்ச்சிகளில், சிங்கப்பூரின் குடியரசுத் தலைவரான திருவாளர் தர்மன் ஷண்முகரத்தினம் கௌரவ விருந்தினராகக் கலந்து கொண்டார்.  இந்த அமைப்பின் முயற்சிகளை அவர் மிகவும் பாராட்டி உரையாற்றினார்.  நான் இந்தக் குழுவினருக்கு என்னுடைய ஏராளமான நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.  

நண்பர்களே, மனதின் குரலில் நாம் நமது தேசத்து மக்களின் சாதனைகளோடு கூடவே பலவேளைகளில் சமூக விஷயங்களையும் கையிலெடுக்கிறோம்.  பல வேளைகளில் சவால்கள் குறித்தும் பேசுகிறோம். 

இந்த முறை மனதின் குரலில், நான் பேசவிருக்கும் ஒரு சவால், இது நேரடியாக நம்முடன் தொடர்புடையது.  இந்தச் சவால், ஜவுளித்துறைக் கழிவுகள் பற்றியது.  என்ன இது, ஜவுளித்துறைக் கழிவுகளில் என்ன பெரிய சவால் என்று நீங்கள் எண்ணமிடுவீர்கள் தானே!!  உண்மையில், ஜவுளித்துறைக் கழிவுகள், ஒட்டுமொத்த உலகத்தையும் கவலைக்குள்ளாக்கும் பெரிய காரணமாக ஆகிவிட்டது. 

இப்போதெல்லாம் உலகெங்கிலும் பழைய துணிகளை விரைவாக நீக்கி, புதிய ஆடைகளை வாங்கும் வழக்கம் அதிகரித்து வருகிறது.  பழைய துணிகளை அணிந்து நீக்கிய பிறகு அதற்கு என்னவாகிறது என்று நீங்கள் சிந்தித்ததுண்டா?  இவை ஜவுளித்துறைக் கழிவுகள் ஆகின்றன.  இந்த விஷயம் தொடர்பாக உலகெங்கிலும் கணிசமான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.  ஓர் ஆய்வின்படி, பழைய துணிகளின் ஒரு சதவீதத்திற்கும் குறைவாக மட்டுமே மறுசுழற்சி செய்யப்படுகின்றனவாம், ஒரு சதவீதத்திற்கும் குறைவாக.   ஜவுளித்துறைக் கழிவுகளை ஏற்படுத்தும் உலகின் 3ஆவது மிகப்பெரிய நாடாக பாரதம் விளங்குகிறது. 

அதாவது நம் முன்பாக இருக்கும் சவால் மிகப்பெரியது.  ஆனால், நமது தேசத்திலே இந்தச் சவாலை எதிர்கொள்ள பல பாராட்டத்தக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்பது எனக்கு மகிழ்ச்சியை அளிக்கிறது.  பல பாரத நாட்டு ஸ்டார்ட் அப்புகள், ஜவுளிகளின் மீட்டெடுப்பு வசதிகள் தொடர்பாகப் பணிகளைத் தொடங்கியிருக்கின்றன.  பல குழுக்கள், துணிக்கழிவுகளை நெய்யும் நமது சகோதர சகோதரிகளுக்கு அதிகாரமளிக்கும் வகையில் பணிகளைச் செய்து வருகின்றன.  பல இளைய நண்பர்களும் கூட நீடித்த ஃபேஷன் முயற்சிகளோடு இணைந்திருக்கின்றார்கள்.  இவர்கள் பழைய துணிகளையும், காலணிகளையும் மறுசுழற்சி செய்து, தேவையானவர்கள் வரை கொண்டு சேர்க்கிறார்கள்.  ஜவுளித்துறைக் கழிவுகளிலிருந்து அழகுப் பொருட்கள், கைப்பைகள், காகிதங்கள், விளையாட்டுப் பொருட்கள் போன்ற பல பொருட்கள் உருவாக்கப்பட்டு வருகின்றன. 

பல அமைப்புகள் இப்போதெல்லாம் சர்குலர் ஃபேஷன் ப்ராண்டை பிரபலப்படுத்த முனைந்திருக்கிறார்கள்.  புதியபுதிய வாடகைத் தளங்களும் திறக்கப்பட்டிருக்கின்றன, இங்கே நூதனமாக வடிவமைக்கப்பட்ட துணிகள் வாடகைக்குக் கிடைத்து வருகின்றன.  சில அமைப்புகள் பழைய துணிகளைக் கொண்டு, அவற்றை மீண்டும் பயன்படுத்தும் வகையில் தயார்படுத்தி, ஏழைகளுக்குக் கொண்டு சேர்க்கின்றார்கள். 

நண்பர்களே, ஜவுளித்துறைக் கழிவுகளைச் சமாளிப்பதில் சில நகரங்களும் கூட தங்களுக்கென புதிய அடையாளங்களை ஏற்படுத்தி வருகின்றன.   ஹரியாணாவின் பானீபத்தில் உள்ள ஜவுளிகளின் மறுசுழற்சியானது உலக மையமாக ஆகி வருகின்றது.  பெங்களூரூவிலும் கூட நூதனமான தொழில்நுட்பத் தீர்வுகளின் உதவியோடு தனக்கென பிரத்யேகமான அடையாளத்தை உருவாக்கி வருகிறது. 

இங்கே பாதிக்கும் மேற்பட்ட ஜவுளித்துறைக் கழிவுகள் ஒன்றுதிரட்டப்படுவது, நமது மற்ற நகரங்களுக்கும் ஒரு எடுத்துக்காட்டாய் விளங்குகிறது.  இதைப் போலவே தமிழ்நாட்டின் திருப்பூர் கழிவுநீர் சுத்திகரிப்பு மற்றும் புதுப்பிக்கவல்ல எரிசக்தி வாயிலாக, ஜவுளித்துறை கழிவுகளின் மேலாண்மை மேற்கொள்ளப்படுகிறது.  

என் கனிவான நாட்டுமக்களே, இன்று உடலுறுதியோடு கூடவே, கவுண்ட், அதாவது எண்ணிக்கையின் பங்கும் அதிகரித்திருக்கிறது.  ஓர் நாளில் எத்தனை அடிகள் நடக்க வேண்டும் என்பதன் எண்ணிக்கை, ஓர் நாளில் எத்தனை கலோரிகள் உண்ணப்பட்டிருக்கிறதோ இதன் எண்ணிக்கை, எத்தனை கலோரிகள் எரிக்கப்பட்டிருக்கின்றன என்பதன் எண்ணிக்கை, இத்தனை அளவு எண்ணிக்கைக்கு இடையே, மேலும் ஒரு கவுண்ட்டவுன் தொடங்க இருக்கிறது. 

சர்வதேச யோகா தினத்தின் கவுண்ட்டவுன்.  யோகா தினத்திற்கு இன்னும் 100 நாட்களுக்கும் குறைவாகவே நாட்கள் இருக்கின்றன.   இன்னும் உங்கள் வாழ்க்கையில் நீங்கள் யோகாவைப் பழகத் தொடங்கவில்லை என்றால், கண்டிப்பாக இப்போது தொடங்குங்கள், இன்னும் காலம் கடக்கவில்லை.  பத்தாண்டுகள் முன்பாக, 2015ஆம் ஆண்டு ஜூன் மாதம் 21ஆம் தேதியன்று முதல் சர்வதேச யோகா தினம் கொண்டாடப்பட்டது. 

இப்போதோ இந்த தினம், மகத்தானதொரு பெருவிழாவாக உருவெடுத்து விட்டது.  மனித சமூகத்திற்கு பாரதத்தின் தரப்பிலிருந்து மேலும் ஒரு விலைமதிப்பில்லா வெகுமதியான இது, வருங்காலச் சந்ததியினருக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.  2025ஆம் ஆண்டின் யோகா தினத்தின் கருவாக, யோகா ஃபார் ஒன் எர்த், ஒன் ஹெல்த், அதாவது ஒரு பூமி, ஒரு உடல்நலத்திற்கு யோகக்கலை.  யோகாவின் வாயிலாக ஒட்டுமொத்த உலகையும் ஆரோக்கியம் மிக்கதாக ஆக்க விரும்புகிறோம்.

நண்பர்களே, இன்று நமது யோகக்கலையும், பாரம்பரிய மருந்துகளும் தொடர்பாக உலகெங்கும் ஆர்வம் அதிகரித்து வருவது நம்மனைவருக்கும் பெருமை அளிக்கும் விஷயம்.  பெரும் எண்ணிக்கையில் இளைய நண்பர்கள், யோகக்கலை மற்றும் ஆயுர்வேதத்தின் நல்வாழ்வு தொடர்பான மிகச் சிறப்பான ஊடகங்களாகத் தங்களுடையதாக்கி வருகிறார்கள். 

எடுத்துக்காட்டாக, தென்னமெரிக்காவின் நாடான சிலேயில், ஆயுர்வேதம் விரைவாகப் பிரபலமடைந்து வருகிறது.  கடந்த ஆண்டு ப்ராசீலுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்ட போது, சீலேயின் குடியரசுத் தலைவரைச் சந்திக்க நேர்ந்தது. ஆயுர்வேதத்தின் புகழ் குறித்து எங்களுக்கிடையே கணிசமாக நாங்கள் உரையாடினோம்.  சோமோஸ் இண்டியா என்ற பெயர் கொண்ட ஒரு அணியைப் பற்றித் தெரிய வந்தது.  ஸ்பானிஷ் மொழியில் இதன் பொருள் – நாங்கள் இந்தியா என்பதாகும்.  இந்தக் குழு, சுமார் பத்தாண்டுகளாக யோகம் மற்றும் ஆயுர்வேதத்திற்கு ஊக்கமளிப்பதில் இணைந்திருக்கிறது.  அவர்களுடைய கவனம் சிகிச்சையோடு கூடவே, கல்வி நிகழ்ச்சிகளின் மீதும் இருக்கின்றது.  இவர்கள் ஆயுர்வேதம் மற்றும் யோகக்கலையோடு தொடர்புடைய தகவல்களை, ஸ்பானிஷ் மொழியில் மொழியாக்கமும் செய்து வருகின்றார்கள்.  

கடந்த ஆண்டுகளைப் பற்றி மட்டும் பேசுவோமேயானால், இவர்களின் பல்வேறு நிகழ்ச்சிகளிலும், படிப்புகளிலும் சுமார் 9000 மக்கள் பங்கெடுத்துக் கொண்டார்கள்.  நான் இந்தக் குழுவோடு தொடர்புடைய அனைவருக்கும் அவர்களின் இந்த முயற்சிக்காகப் பலப்பல பாராட்டுக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். 

எனதருமை நாட்டுமக்களே, மனதின் குரலில் இப்போது ஒரு சுவாரசியமான, விறுவிறுப்பான வினா!!  மலர்களின் பயணம் பற்றி நீங்கள் இதுவரை கேள்விப்பட்டதுண்டா?  மரங்கள்-செடிகளிலிருந்து எடுக்கப்பட்ட சில மலர்களின் பயணம் ஆலயங்கள் வரை தொடர்கிறது.  சில மலர்கள், இல்லங்களை அழகுபடுத்தப் பயனாகின்றன, சில மலர்களோ, வாசனை திரவியங்களாகத் தயாரிக்கப்பட்டு, அனைத்து இடங்களிலும் மணத்தைப் பரப்புகின்றன. 

ஆனால் இன்று, நான் மலர்களின் மேலும் ஒரு பயணம் பற்றித் தெரிவிக்க இருக்கிறேன்.  நீங்கள் மஹுவா மலர்களைப் பற்றிக் கண்டிப்பாக கேள்விப்பட்டிருக்கலாம்.  அதாவது இலுப்பை மலர்கள்.  நமது கிராமங்களில், குறிப்பாக பழங்குடியினத்தவர்கள் இவற்றின் மகத்துவம் பற்றி நன்கு அறிந்திருக்கின்றார்கள்.  தேசத்தின் பல பாகங்களில் இலுப்பை மலர்களின் பயணம், இப்போது ஒரு புதிய பாதையைத் தேர்ந்தெடுத்திருக்கிறது.  மத்திய பிரதேசத்தின் சிந்த்வாடா மாவட்டத்தில், இலுப்பை மலர்களாலான சுவையான தின்பண்டங்கள் தயாராகின்றன. 

ராஜாகோஹ் கிராமத்தின் நான்கு சகோதரிகளின் முயற்சியால் இந்தச் சுவையான தின்பண்டங்கள் மிகவும் பிரபலமடைந்து வருகின்றன.  இந்தப் பெண்களின் பேரவாவைப் பார்த்து, ஒரு பெரிய நிறுவனமானது, இவர்களுக்குத் தொழிற்சாலையில் பணியாற்றும் பயிற்சியை அளித்தது.  இவர்களால் உள்ளுயிர்ப்படைந்த கிராமத்தின் பல பெண்களும் இவர்களோடு இணைந்தார்கள்.  இவர்கள் தயாரித்த இலுப்பைச் சுவை தின்பண்டங்களின் தேவை இப்போது அதிகரித்து வருகிறது.  தெலங்காணாவின் ஆதிலாபாத் மாவட்டத்திலும் கூட, இரு சகோதரிகள், இலுப்பை மலர்களைக் கொண்டு புதியதொரு பரிசோதனையை மேற்கொண்டார்கள். 

இவற்றைக் கொண்டு பலவகையான பண்டங்களைத் தயாரிக்கிறார்கள், இவற்றை மக்கள் பெரிதும் விரும்புகிறார்கள்.  இவர்களின் பண்டங்களிலே பழங்குடிக் கலாச்சாரத்தின் இனிப்பும் கலந்திருக்கிறது.  

நண்பர்களே, நான் உங்களுக்கு மேலும் ஒரு அருமையான மலரைப் பற்றித் தெரிவிக்க விரும்புகிறேன், இதன் பெயர் கிருஷ்ண கமல், அதாவது தக்கபூண்டு மலர்கள்.  குஜராத்தின் ஒற்றுமை நகரத்தில், ஒற்றுமைச் சிலையைப் பார்க்கச் சென்றிருக்கிறீர்களா?  இந்த ஒற்றுமைச்சிலைக்கு அருகிலே, நீங்கள் அதிக எண்ணிக்கையில் தக்கபூண்டு மலர்களைக் காணலாம்.  இந்த மலர், சுற்றுலாப் பயணிகளைக் கவர்ந்து இழுக்கிறது.  இந்த தக்கபூண்டு மலர், ஒற்றுமை நகரின் ஆரோக்கிய வனம், ஒற்றுமை நாற்றுப்பண்ணை, உலக வனம் மற்றும் மியாவாக்கி காடுகளையும் ஈர்க்கும் மையங்களாக ஆகிவிட்டன.  இங்கே திட்டமிட்ட முறையில், இலட்சக்கணக்கான எண்ணிக்கையில் தக்கபூண்டு மலர்களின் செடிகள் நடப்பட்டிருக்கின்றன.  நீங்களும் கூட உங்களுக்கு அருகே கவனித்தால், உங்களுக்கு மலர்களின் சுவாரசியமான பயணங்கள் தென்படும்.  நீங்கள் உங்கள் பகுதிகளில் மலர்களின் இப்படிப்பட்ட பயணம் குறித்து எனக்கும் எழுதி அனுப்புங்கள்.

எனக்குப் பிடித்தமான நாட்டுமக்களே, நீங்கள் எப்போதும் போலவே உங்களுடைய கருத்துக்கள், அனுபவங்கள், தகவல்கள் ஆகியவற்றை என்னோடு பகிர்ந்து வாருங்கள்.  உங்களுக்கு அருகே சாதாரணமானவையாக உங்களுக்குத் தோன்றக்கூடியதாக இருக்கலாம், ஆனால் மற்றவர்களுக்கு அந்த விஷயம் மிகவும் சுவாரசியமாகவும், புதியதாகவும் விளங்கும். 

அடுத்த மாதம் நாம் மீண்டும் இணைவோம், நாட்டுமக்களின் உள்ளெழுச்சியூட்டக்கூடிய விஷயங்கள் குறித்து உரையாடி மகிழ்வோம்.   உங்கள் அனைவருக்கும் பலப்பல நன்றிகள்.  வணக்கம்.

Dr Keshav Baliram Hedgewar: THE ‘MAN’ HE WAS

0
dr keshav baliram hedgewar rss - 2026

Dr Keshav Baliram Hedgewar , popularly known as ‘Doctorji’ was born in Nagpur on Varsha Pratipada Day on April 1st , 1889. After receiving his early education at the Neel City School, Nagpur, Keshav joined Rashtriya Vidyalaya of Yeotmal. Since it was inculcating a nationalist feeling among the students it was eventually closed down. But Keshav remained unperturbed.

He went to Pune to continue his studies. Thereafter, he took up the entrance examination of Calcutta Rashtriya Vidyapeeth at Amaravati in Maharashtra.Since he had steeped in poverty after the demise of his parents, Dr. Moonje came forward to provide the necessary help for Keshav’s further education. He was sent to the National Medical College of Calcutta . After passing the L.M.&S. Examination from the National Medical College in June 1914, he completed one year apprenticeship and returned to Nagpur in 1915 as a doctor.

What caused Keshav immense sorrow was that his Motherland was under an oppressive foreign rule. Influenced by Veer Savarkar he came to the conclusion that creation of nationalist feelings and self-confidence that cohesion amongst the Hindus was essential pre-requisite for wresting freedom from the British.Rashtriya Swayamsevak Sangh( RSS) founded by him in Nagpur on Vijaya Dashmi Day in 1925 was to be the instrument to achieve this end.

Dr Hedgewar never used to impose his ideologies on others. In fact, even for naming of Sangh, Doctorji arranged a baithak in his house . Three names were suggested after elaborate discussions. They were: 1. Rashtriya Swayamsevak Sangh (RSS); 2. Jaripataka Mandal; 3. Bharatoddharak Mandal. The name RSS was finally decided upon. 

Had he lived longer , he might have given a new direction to the national politics and freedom movement , but destiny wished otherwise. He breathed his last on June 21,1940 in Nagpur..

Such was Keshav On June 22 1897 on the occasion of Queen Victoria completing 60 years of her ascent to the British Throne sweets were being distributed in schools. Children were rushing to their schools to have sweets. But amidst all this, one young boy was not happy. He threw away the sweets given to him, and sat alone in a corner brooding.

His elder brother came and asked him, “Why are you downcast? Didn’t you get the sweets? What’s there in that sweet?” – the boy pointed to the sweets thrown away by him and added, “Why should we celebrate the jubilee of the Queen who has snatched away our Bhonsle’s kingdom?”

The sweets, which were sweet to others, were bitter for this boy of eight years. Patriotism had found lodgement in his heart at such a tender age.

A true patriot

Keshav was deeply inspired from the heroic life of Shivaji.At the time when patriotic personalities like Lokmanya Tilak, Mahatma Gandhi, etc., were fighting to put an end to the oppressive rule of the British, Keshav eagerly used to listen to the their speeches. He took pledge to liberate Bharatmata from the clutches of British imperialism.

In 1905 Lord Curzon, the then Viceroy of Bharat, partitioned the Bengal Province into two. This provoked thousands of youths to revolt against the British. This was the time when Vande Mataram had become the refrain of the freedom struggle.
Keshav was then studying in Neel City High School of Nagpur. The very mention of Vande Mataram used to enrage the British.

One day an officer of the Department of Education arrived for inspection of the Neel City High School. The Inspector set out for inspection along with the Headmaster of the school. Barely had they reached the threshold of the classroom when, like a bolt from the blue, a deafening cry of Vande Mataram rang out of that classroom piercing the ears of the duo. The Inspector was angry beyond words. The Inspector thundered, “This is treason. Who is singing Vande Mataram? Debar these students from the school. They should be punished mercilessly.” Passing strict orders, he left the school in a huff.

As none disclosed the name of their leader, all the students of both the classes which had sung Vande Mataram were suspended from the school. It was Keshav who had kindled the flame of patriotism in the bosoms of his fellow-students to sing Vande Mataram. Keshav never set foot in that school again.

Adventurous by nature

Hedgewar was adventurous by nature. His spirit rose whenever he was confronted with a challenging task. Once the well in his backyard was to be readied for an annual worship. It was full of dirt and mire. Keshav along with his two brothers took it upon themselves to clean the well. They did not inform about this plan to the elders in the house, fearing that they might prevent them. Then the trio drew out all the soiled muddy water from the well, removed the accumulated dirt at night and quietly went to bed before morning. The others in the house were surprised to find fresh and clean water shining in the well the next morning.

A devoted student 

At the close of the nineteenth century, Keshav’s parents died due to plague. Keshav was just thirteen then. After the sudden demise of his parents, Keshav’s hardship knew no bounds. All the household chores like cutting wood, drawing water, cooking, etc., fell on Keshav’s shoulders and his elder brother Sitarampant.

Sometimes they had to go without food and had to roam about with torn clothes on their person. But Keshav was full of self-respect. Often even when he was hungry, he would not approach his friends for food. It was not in his nature to stretch his hand before anybody. Despite travails, his attention to his studies was never affected. 

He was always ahead in his class and a favourite student of his teachers. He was sober and spoke sparingly. He established instant rapport with others, and others too longed for his company. The daily four-mile run to the school never proved to be a problem for him.

அந்த உரிமையை உங்களுக்கு யார் கொடுத்தது?!

stalin kanimozhi - 2026

தமிழகம் பற்றி பேச உ.பி முதல்வருக்கு எவ்வித உரிமையும் இல்லை – திமுக எம்பி கனிமொழி – செய்தி.

(யக்கோவ் காஷ்மீர்- மணிப்பூர் வரை அமெரிக்கா – இலங்கை வரை நீங்க பேசலாம் ஆனா உபி முதல்வர் தமிழகம் பத்தி பேச உரிமை இல்லையா? என்னதான் உங்களுக்கு பாத சனியானாலும் பேச்சுல ஒரு நாயம் வேணாமாக்கா?)

தமிழகத்தை பற்றி உத்திரபிரதேச முதல்வர் பேசுவதற்கு எந்த வித உரிமையும் இல்லை என்று கனிமொழி பேசுவது நியாயம் எனில் காஷ்மீர் மாநில சிறப்பு அந்தஸ்து பற்றி பேசுவதற்கு திமுகவிற்கு எங்கிருந்து உரிமை வந்தது?.

மணிப்பூர் மாநிலம் அதன் அமைதி தேச பாதுகாப்பு பற்றிய விஷயங்களில் திமுக தலையிடவும் நாடாளுமன்றத்தில் தேவையற்ற கூச்சல் குழப்பம் ஏற்படுத்த கனிமொழிக்கு எங்கிருந்து உரிமை வந்தது.?

புது தில்லியில் நடந்த குடியுரிமை திருத்த சட்டம் எதிரான போராட்டம் – விவசாய மசோதா எதிர்ப்பு போராட்டம் பற்றி எல்லாம் ேசவும் அதை ஆதரிக்கவும் திமுகவிற்கு யார் உரிமை கொடுத்தது?

காஷ்மீரின் ஆசிஃபாவிற்கு நீதி வேண்டும் என்று வீதியில் இறங்கி கருப்பு சேலை மெழுகுவர்த்தி சகிதம் போராடுவதற்கு திமுக மகளிர் அணிக்கும் கனிமொழி எம்பிக்கும் யார் உரிமை கொடுத்தது.?

கேரள மாநிலத்தின் சபரிமலை விவகாரத்தில் கேரள மக்கள், நாடு முழுவதும் இருந்த ஐயப்ப பக்தர்களின் உணர்வுகளுக்கு எதிராக எல்லா வயது பெண்களையும் சபரிமலையில் அனுமதிக்க வேண்டும் என்று பேசவும் போராடவும் திமுகவிற்கு யார் அதிகாரம் கொடுத்தது.?

லடாக் – லே – ஸ்ரீநகர் எங்கிருக்கிறது ? என்றே தெரியாமல் அந்த மாநிலத்தின் சிறப்பு அந்தஸ்து விலக்கம் பற்றி பேசி லடாக் எம்பியிடம் செருப்படி வாங்கி தமிழகத்தை அவமதிக்கும் உரிமையை திமுக எம்பிக்களுக்கு யார் கொடுத்தது.?

கடந்த பத்து ஆண்டுகளில் அரசியல் ஆதாயம் தேடி காங்கிரஸ் உள்ளிட்ட கூட்டணி கட்சிகளோடு கை கோர்த்து தினமும் நாடாளுமன்றத்தில் வீண் கூச்சல் குழப்பம் செய்து நாட்டு மக்களின் வரிப்பணத்தை வீணடித்து நாட்டை தலை குனிய செய்ய திமுகவிற்கு எங்கிருந்து உரிமை வந்தது?.

வடகிழக்கு மாநிலங்களின் மக்கள் நாய் கறி சாப்பிடுபவர்கள் என்று ஏளனமாக பேசுவதற்கு திமுகவின் ஆர் எஸ் பாரதிக்கு என்ன உரிமை இருந்தது?

வடமாநிலத்தவர்கள் நான்கு ஐந்து திருமணம் செய்பவர்கள். ஒழுக்கம் இல்லாதவர்கள். குளிக்காமல் நாற்றம் அடிப்பவர்கள் என்று பேசுவதற்கு திமுக அமைச்சருக்கு எங்கிருந்து உரிமை வந்தது.?

உத்திரபிரதேசத்தின் ப்ரயாகையில் பூர்ண கும்பமேளா நடைபெறும் போது அங்கு ஏற்பட்ட ஒரு சிறு விபத்தை காரணம் காட்டி அந்த விழாவையும் உத்தரபிரதேச அரசு நிர்வாகத்தையும் சிறுமைப்படுத்தி பேசுவதற்கு திமுக மற்றும் தமிழக அரசுக்கு எங்கிருந்து உரிமை வந்தது.?

திமுகவின் மும்மொழி கல்வி கொள்கை எதிர்ப்பை பற்றி உத்திரபிரதேச முதல்வர் பேசுவதற்கு உரிமை இல்லை எனில் அயோத்தி ராமஜென்ம பூமி பற்றி பேச திமுகவிற்கு எங்கிருந்து உரிமை வந்தது?

தமிழகம் பற்றி பேச உபி முதல்வர்களுக்கு உரிமை இல்லை எனில் கர்நாடகா தெலுங்கானா மேற்கு வங்கம் பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்களின் முதல்வர்களை அழைத்து தொகுதி சீரமைப்பு எதிர்ப்பு என்ற பெயரில் இல்லாத ஒன்றை இட்டுக்கட்டி குழப்ப அரசியல் செய்வதற்கு திமுக தலைவருக்கு தமிழக முதல்வருக்கு எங்கிருந்து உரிமை வந்தது.?

தேசிய மும்மொழி கல்விக் கொள்கையை எதிர்ப்பதற்கு திமுகவிற்கு உரிமை உண்டு எனில் அதை ஆதரித்து பேசுவதற்கும் அந்த நிலைப்பாட்டில் திமுகவின் தவறுகளை துரோகங்களை சுட்டிக்காட்டுவதற்கும் உத்தரபிரதேச முதல்வருக்கு நிச்சயம் உரிமை உண்டு. இந்திய பிரஜையாக அது அவரின் தார்மீக கடமையாகிறது. அதைத்தான் உத்தரபிரதேச முதல்வர் செய்திருக்கிறார்.

உபி முதல்வர் உங்கள் தவறை சுட்டிக் காட்டி பேசுவது உரிமை மீறல் எனில் முன்மொழி கொள்கை பற்றிய தவறான புரிதலை விஷம பிரச்சாரமாக செய்து வரும் திமுகவின் அரசியலை பிரிவினைவாத அரசியல் செய்ய என்று கனிமொழி ஒப்புக் கொள்வதாகவே அர்த்தம்.

அப்படியானால் இந்த பிரிவினை அரசியல் – கல்வி உள்ளிட்ட முக்கியமான விஷயங்களில் விஷம பிரச்சாரம் என்ற காரணங்களை கொண்டு திமுகவின் மீது மத்திய அரசு சட்டபூர்வமான எதிர் நடவடிக்கைகளை நீதிமன்றம் மூலம் எடுக்கலாம் தானே.?

பாரதம் எனும் ஒன்றுபட்ட தேசத்தில் இருக்கும் ஒரு மாநிலம் தமிழகம் அதன் மாநிலஅரசு பொறுப்பில் இருக்கும் திமுகவிற்கு நாடு முழுவதிலும் இருக்கும் எந்த மாநிலத்தையும் பற்றி பேசவும் கேள்வி எழுப்பவும் விமர்சனம் செய்யவும் உரிமை இருக்கும். அதை பற்றி நாடாளுமன்றத்தில் கூச்சல் குழப்பம் எழுப்பி நாடாளுமன்றத்தில் தமிழகத்தை தலைகுனிய வைக்கவும் உரிமை இருக்கும். ஆனால் உங்களின் தவறுகளை சுட்டிக் காட்ட மட்டும் யாருக்கும் உரிமை இருக்காது. எனில் நீங்கள் எந்த வேற்றுநாட்டவர்களா? தமிழகம் தனி நாடு என்ற நினைப்பில் இருக்கிறீர்களா? அல்லது நீங்கள் கேள்வி விமர்சனங்களுக்கு அப்பாற்பட்டவர்களா?.

நீங்கள் செய்யும் பிரிவினை அரசியலை சுட்டிக்காட்ட வேறு எந்த மாநில முதல்வருக்கும் உரிமை இல்லை. உங்களின் துரோகத்தை வெளிச்சம் போட்டு காட்ட வேறு எந்த மாநில அரசுக்கும் அதிகாரம் இல்லை. என்றால் உங்களின் தவறுகளை சுட்டிக்காட்ட வேறு யாருக்கு அதிகாரம் இருக்கிறது? மற்ற மாநிலம் சார்ந்த விஷயம் பற்றி பேச அவர்களுக்கு ஒதுக்கப்படும் நிதி அளவீடு மற்ற மாநிலங்களில் நடைபெறும் தேசிய மாநில அரசியல் நகர்வுகள் பற்றி பேசுவதற்கும் விமர்சனம் செய்வதற்கும் திமுகவிற்கு தமிழக அரசுக்கு யார் அதிகாரம் கொடுத்தது.?

ஒரு தேசத்தில் ஒரு தேசிய கல்விக் கொள்கை பற்றி நாங்கள் என்ன வேண்டுமானாலும் பேசுவோம். விஷம பிரச்சாரங்கள் போய் பிரச்சாரங்கள் மூலம் மலிவான பிரிவினை அரசியல் செய்வோம். ஆனால் அதன் உண்மை தன்மை பற்றி பேசவும் எங்களின் துரோகத்தை தோலுரித்து பேசவும் உத்திர பிரதேச முதல்வருக்கு உரிமை இல்லை என்று பேசும் திமுக கனிமொழிக்கு இலங்கை என்னும் வேறொரு நாட்டின் இறையாண்மை மீதும் அந்நாட்டின் உள் விவகாரம் பற்றி பேசுவதற்கும் எப்படி உரிமை வந்தது?

கனிமொழி கருணாநிதி ஸ்டாலின் திமுகவிற்கு இலங்கை பற்றி பேச உரிமை இருந்ததா?

தேசத்தின் வெளியுறவு கொள்கையில் தாக்கத்தை ஏற்படுத்தும் தேசத்தின் கேந்திரிய பாதுகாப்பில் பாதிப்பை ஏற்படுத்தும் என்ற குறைந்தபட்ச அக்கறை இல்லாமல் தேசிய இறையாண்மை மத்திய அரசின் வெளிவகார நிலைப்பாடு அத்தனையும் காற்றில் பறக்க விட்டு உங்களின் கட்சியின் மொழி அரசியல் உங்களின் இன அரசியல் மட்டுமே முக்கியம். அதன் மூலம் வரும் அரசியல் ஆதாயம் மட்டுமே முக்கியம் என்று இலங்கை விவகாரத்தை வைத்து நீங்களும் உங்களின் தந்தையாரும் அவரின் கட்சி கூட்டணி கட்சிகள் ஆதரவாளர்கள் எல்லாம் சேர்ந்து செய்த அராஜகம் மறந்து போனதா?அதற்கெல்லாம் திமுகவிற்கு எங்கிருந்து உரிமை வந்தது.?

உங்களுக்கு அரசியல் ஆதாயம் என்றால் காஷ்மீர் மாநிலத்தின் சிறப்பு அந்தஸ்து பற்றி பேசலாம். சிறப்பு அந்தஸ்து நீக்கத்தை எதிர்ப்பீர்கள். உங்களுக்கு அரசியல் ஆதாயம் இருக்கும் எனில் அமெரிக்காவின் அதிபர் தேர்தலில் கமலா ஹாரிஸ் ஆதரவாகஅடிபொடிகள் மூலம் ஆட்டம் போடுவீர்கள்.

உங்களுக்கு மலிவான அரசியல் ஆதாயம் கிடைக்கும் எனில் இஸ்ரேல் – பாலஸ்தீன விவகாரத்தில் கூட நீங்கள் கருத்து சொல்லலாம். உங்களின் கட்சிக்காரர்கள் சேவ் பாலஸ்தீனம் என்று போராட்டம் கூட செய்யலாம். கேட்டால் அதெல்லாம் மனிதாபிமானம் என்று சொல்வீர்கள்.

ஆனால் உங்களின் பொய்யான மொழிப் பிரச்சாரத்தை மொழி – இனம் என்னும் செய்யும் பிரிவினை அரசியலை தேசிய கல்விக் கொள்கை பற்றிய விஷம பிரச்சாரத்தை ஒருவர் முறியடித்து உங்களின் துரோக அரசியலையும் தேசத்திற்கு மாணவர்களுக்கு நலன் சேர்க்கும் தேசிய கல்விக் கொள்கை பற்றியும் பொது வெளியில் பேசினால் அது உங்களுக்கு உரிமை மீறலாக தெரியுமா ?

அப்படி எனில் பிரச்சனை தேசிய முன்னோடி கல்விக் கொள்கையிலும் உத்தரபிரதேச முதல்வரின் பேச்சிலும் இல்லை. உங்களின் எண்ணம் – சிந்தனை – உங்கள் அரசியல் நிலைப்பாடு எல்லாவற்றிலும் சந்தர்ப்பவாதமும், பொய்யும் -புரட்டும் நயவஞ்சகமும், பிரிவினை அரசியலும் மட்டுமே நிறைந்திருக்கிறது என்று அர்த்தம்.

சுற்றுலா போன நாட்டில் தமிழ் தமிழர் என்று வீர வசனம் பேசி இனி இந்த நாட்டின் பக்கம் கூட திரும்பாதீர்கள் என்று கேவலப்பட்டு வந்த பிறகும் இன்று வரை தமிழ் தமிழர் என்று சொல்லி தமிழகத்தை உருப்படாமல் செய்வதற்கு உங்களுக்கு முழு உரிமை இருக்கிறது. ஆனால் தேசிய கல்வி கொள்கை பற்றிய உண்மையை பேச வேறு மாநில முதல்வருக்கு உரிமை இல்லை.

உங்களின் தவறுகளை நீங்கள் செய்யும் அராஜகங்களை தட்டிக் கேட்கவும் அதை மக்கள் மத்தியில் வெளிகொனரவும் யாருக்கும் உரிமை இல்லை எனில் நீங்கள் ஒன்றும் ஆகாயத்தில் இருந்து இறங்கி வந்தவர்கள் அல்ல. நீங்களும் உங்கள் கட்சியினரும் கேள்விகளுக்கும் விமர்சனங்களுக்கும் அப்பாற்பட்டவர்களும் அல்ல.

உங்களைப் பற்றி யாரும் பேசவும் கேள்வி எழுப்பவும் உரிமை இல்லை என்றால் வேறொரு மாநிலத்தில் இருந்து நதிநீர் வேண்டும் என்று கேட்பதற்கு உங்கள் மாநிலத்திற்கு உரிமை இல்லை என்று அண்டை மாநிலங்கள் தமிழகத்தை பார்த்து பேச எவ்வளவு நேரம் பிடிக்கும்? அதைத்தான் எதிர்பார்க்கிறீர்களா? அதை வைத்து காவேரி பிரச்சனையில் ஒரு பெரும் கலகத்தை செய்து ஆதாயம் அடைந்து விடலாம் என்று அரசியல் கணக்கு போடுகிறீர்களா? உங்களின் அரசியல் கணக்குகள் எதுவும் கடந்த காலங்களில் பலித்திருக்கலாம். மோடி அமித்ஷாவிடம் பலிக்காது.

நீங்களும் உங்கள் கட்சிக்காரர்களும் நாடு முழுவதும் சொத்துக்களை வாங்கி குவிக்கலாம். உங்களின் குடும்ப தொலைக்காட்சிகள் நாடு முழுவதும் தொலைக்காட்சி சேனல்களை நடத்தலாம். கோடிகளில் புரளலாம். அதில் எல்லாம் உங்களுக்கு முழு உரிமை உண்டு. அதில் எல்லாம் இந்திய தேசிய சட்டம் இறையாண்மை போர்வையில் உங்களை பாதுகாத்துக் கொள்வீர்கள்.

ஆனால் உண்மைக்கு மாறாக தேசிய கல்விக் கொள்கை பற்றி நீங்கள் பேசும் விஷயத்தை தட்டிக் கேட்டு அதில் உங்களில் பொய் முகத்தை தோலுரிக்கும் உத்தர பிரதேச முதல்வரின் பேச்சு மட்டும் உரிமை மீறலா?

அப்படி எனில் இனி உங்களுக்கு தமிழகத்தை கடந்து வேறு எந்த மாநிலம் அதன் விவகாரம் பற்றி பேசவும் அருகதை இல்லை . உங்கள் அரசியல் ஆதாயத்திற்கு கூட தமிழகத்தில் இருக்கும் இதர கட்சிகளுடன் மட்டும் தான் கூட்டணி சேர முடியும் பரவாயில்லையா.

தேசிய கட்சியான காங்கிரசோடு எந்த உரிமையில் கூட்டணி சேர்கிறீர்கள்.? மற்ற மாநில கட்சிகளோடு எந்த உரிமையில் கூட்டம் போட்டீர்கள்?. நாடு முழுவதும் இருக்கும் பெண் அரசியல்வாதிகளை அழைத்து பெண்கள் உரிமை பாதுகாப்பு மாநாடு நடத்த உங்களுக்கு எங்கிருந்து உரிமை வந்தது? .

உங்களின் ஆதாயம் என்று வந்தால் மேற்குவங்க மம்தா உங்களுக்கு தீதி . புது தில்லியில் இருக்கும் அரவிந்த் கெஜ்ரிவால் உங்களுக்கு சகோதரர். கேரளத்தில் இருக்கும் சேட்டன்கள் உங்களுக்கு தோழர்கள். ஆனால் உங்களை எதிர்த்து கேள்வி கேட்கும் உபி முதல்வர் தமிழகத்தின் மீது உரிமையற்றவர்.

உங்கள் கருத்துக்கு மாற்று கருத்து பேசக் கூட வேறு மாநில முதல்வருக்கு உரிமை இல்லை எனில் பிரதமர் வருகையை எதிர்க்க உங்களுக்கு உங்கள் கட்சிக்கு எங்கிருந்து உரிமை வந்தது?

தமிழக முதல்வர் கருத்து பற்றி பேச உபி முதல்வர்களுக்கு உரிமை இல்லை எனில் பாரதத்தின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் கொலையாளிகளை விடுவிக்க வேண்டும் என்று தீர்மானம் போடவும் அவர்களின் விடுதலைக்காக போராடி அவர்களின் விடுதலையை கொண்டாடி கொலை குற்றவாளிகளை கட்டி அணைக்க உங்களுக்கு எங்கிருந்து உரிமை வந்தது?

உங்களைவிட கேவலமான அரசியல் கட்சியும் உங்களை உங்கள் குடும்பத்தாரை விட கேடுகெட்ட ஜென்மங்களும் நிச்சயம் இந்த உலகத்தில் மட்டும் இல்லை வேறு எந்த கிரகத்திலும் கூட இருக்காது.

பாரதத்தின் தேசியக்கொடி இருக்க வேண்டிய இடத்தில் சீன கொடி இருந்ததனால் என்ன கெட்டுப் போய்விட்டது? என்று கேட்கும் உன்னை போல மலிவான நாலாந்தர அரசியல்வாதியிடம் தேசிய இறையாண்மை – ஒருமைப்பாடு பற்றிய அடிப்படை புரிதல் எள்ளளவும் இருக்காது இன்று எங்களுக்குத் தெரியும். ஆனால் இதுபோன்ற சூழ்நிலைகளில் தான் அப்பாவி மக்களுக்கு உங்களின் ஓநாய் முகம் தெரிய வரும். அவ்வகையில் நடப்பதெல்லாம் எங்களுக்கு நன்மையே.

இத்தனை காலம் மோடியை வம்பு இழுத்தோம் . அவரே நம்மை ஒன்றும் செய்யவில்லை. உத்தரப்பிரதேச முதல்வரை வம்பு இழுத்தால் என்னவாகி விட போகிறது? என்ற இறுமாப்பில் தான் இன்று யோகியை வம்பிழுக்கிறீர்கள்.
இதில் காவிகளுக்கு முழு மகிழ்ச்சி தான்.

ஏனெனில் மோடி தருமராஜனின் சாயல். இறுதிவரை பொறுமை காத்து முடிவில் தான் திருப்பி அடிப்பவர். ஆனால் யோகி பீமனின் சாயல். சீண்டிய அடுத்த கணம் தூக்கிப்போட்டு மிதிக்கும் ரகம். அதனால் இத்தனை காலம் நாங்கள் அனுபவித்த மனக்காயங்களுக்கு எல்லாம் யோகி உங்களை துவம்சம் செய்து எங்களுக்கு நல்மருந்தை வழங்குவார் என்று காத்திருக்கிறோம் .

ஜெய் ஹனுமான்! ஜெய் மாகாளி!

  • தேசிய பணியில் !
    ஜான்சி ராணி ஹிந்துஸ்தானி

IPL 2025: 18 ஆண்டுகளில் பெங்களூரு பெற்ற முதல் வெற்றி

ipl 2025 games - 2026

ஐ.பி.எல் 2025 – பெங்களூர்ய் vs சென்னை – சென்னை – 28.03.2025

முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன்

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி (196/7, ரஜத் படிதர் 51, பில் சால்ட் 32, விராட் கோலி 31, தேவ்தத் படிக்கல் 27, டிம் டேவிட் 22, நூர் அகமது 3/36, பதிரனா 2/36, கலீல் அகமது 1/28, அஷ்வின் 1/22) சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணியை (146/8, ரச்சின் ரவீந்திரா 41, தோனி 30, ஜதேஜா 25, ஷிவம் துபே 19, ஹேசல்வுட் 3/21, யஷ் தயாள் 2/18, லியம் லிவிங்க்ஸ்டோன் 2/28, புவனேஷ் குமார் 1/20) 50 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.

பூவா தலையா வென்ற சென்னை அணி முதலில் பந்துவீசத் தீர்மானித்தது. பெங்களூரு அணியின் தொடக்க வீரர்கள் பில் சால்ட் (16 பந்துகளில் 32 ரன், 5 ஃபோர், 1 சிக்சர்), மற்றும் விராட் கோலி (30 பந்துகளில் 31, 2 ஃபோர், 1 சிக்சர்) அதற்கடுத்து வந்த தேவதத் படிக்கல்  (14 பந்துகளில் 27 ரன், 2 ஃபோர், 2 சிக்சர்), அவரோடு இணைந்து ஆடிய ரஜத் படிதர் (32 பந்துகளில் 51 ரன், 4 ஃபோர், 3 சிக்சர்) ஆகியோர் அதிரடியாக ரன் குவித்தனர். 

அதன் பின்னர் வந்த லிவிங்க்ஸ்டொன் (9 பந்துகளில் 10 ரன்,) ஜித்தேஷ் ஷர்மா (6 பந்துகளில் 6 ரன்), இறுதியில் டிம் டேவிட் (8 பந்துகளில் 22 ரன், 1 ஃபோர், 3 சிக்சர்) ஆகியோரும் சிறப்பாக ஆடினர். இதனால் பெங்களூரு அணி 20 ஓவர்களில் ஏழு விக்கட்டுகள் இழப்பிற்கு 196 ரன் எடுத்தது. 

197 ரன் என்ற கடினமான வெற்றி இலக்கை அடைய சொந்த மண்ணில் இரண்டாவதாக ஆடவந்த சென்னை அணியின் தொடக்க வீரர் ரச்சின் ரவீந்திரா (31 பந்துகளில் 41 ரன், 5 ஃபோர்) மட்டும் சிறப்பாக ஆடினார்.

அவரோடு களமிறங்கிய ராகுல் திரிபாதி (5 ரன்), அவருக்குப் பின் வந்தவர்களான ருதுராஜ் கெய்க்வாட் (பூஜ்யம் ரன்), தீபக் ஹூடா 4 ரன்), சாம் கரன் (8 ரன்) ஆகியோர் சரியாக ஆடவில்லை. இவர்களுக்குப் பின்னர் ஆட வந்த ஷிவம் துபே (15 பந்துகளில் 19 ரன்), ரவீந்தர் ஜதேஜா (19 பந்துகளில் 25 ரன்) அஷ்வின் (8 பந்துகளில் 11 ரன்), தோனி (16 பந்துகளில் 30 ரன்) ஆகியோர் சேர்த்த ரன்களால் சென்னை அணி 20 ஓவர் முடிவில் எட்டு விக்கட் இழப்பிற்கு 146 ரன் எடுத்தது.

இதனால் ஐபிஎல் வரலாற்றில் முதன் முறையாக பெங்களூரு அணி சென்னை அணியை வென்றது.

பெங்களூரு அணியின் அணித்தலைவர் ரஜத் படிதர்  ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார். 

IPL 2025: திக்குத் தெரியாத காட்டில் மும்பை அணி

ipl 2025 games - 2026

ஐ.பி.எல் 2025 – குஜராத் vs மும்பை – அகமதாபாத் – 29.03.2025

முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன்

குஜராத் டைடன்ஸ் அணி (196/8, சாய் சுதர்ஷன் 63, ஷுப்மன் கில் 38, ஜாச் பட்லர் 39, ரூதர்ஃபோர்ட் 18, ஹார்திக் பாண்ட்யா 2/29, ட்ரண்ட் போல்ட், தீபக் சாஹர், முஜீபுர் ரஹமான், சத்யநாராயண ராஜு தலா ஒரு விக்கட்) மும்பைய் இந்தியன்ஸ் அணியை (160/6, சூர்யகுமார் யாதவ் 48, திலக் வர்மா 39, நமன் திர் 18, மிட்சல் சாண்ட்னர் 18, சிராஜ் 2/34, பிரசித் கிருஷ்ணா 2/18, ரபாடா 1/42, சார் கிஷோர் 1/37) 36 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.

பூவா தலையா வென்ற மும்பை அணி முதலில் பந்துவீசத் தீர்மானித்தது. குஜராத் அணியின் தொடக்க வீரர்கள் சாய் சுதர்ஷன் (41 பந்துகளில் 63 ரன், 4 ஃபோர், 2 சிக்சர்), மற்றும் ஷுப்மன் கில் (27 பந்துகளில் 38, 4 ஃபோர், 1 சிக்சர்) அதற்கடுத்து வந்த ஜாஸ் பட்லர்  (24 பந்துகளில் 39 ரன், 5 ஃபோர், 1 சிக்சர்) ஆகியோர் சிறப்பான தொடக்கம் தந்தனர்.

சாய் சுதர்ஷன் 18ஆவது ஓவர் வரை விளையாடினார். ஷுப்மன் கில் 9ஆவது ஓவரிலும் ஜாஸ் பட்லர் 14ஆவது ஓவரில் ஆட்டமிழந்தனர். அவர்களுக்குப் பின்னர் ஆட வந்த தமிழகத்தின் ஷாருக் கான் (9 ரன்), ரூதர்ஃபோர்டு (18 ரன்), ராகுல் திவாத்தியா (பூஜ்யம் ரன்), ரஷீத் கான் (6 ரன்), சாய் கிஷோர் (1 ரன்) ஆகியோர் சிறப்பாக ஆடவில்லை. இதனால் குஜராத் அணி 20 ஓவர்களில் எட்டு விக்கட்டுகள் இழப்பிற்கு 196 ரன் எடுத்தது. 

197 ரன் என்ற கடினமான வெற்றி இலக்கை அடைய இரண்டாவதாக ஆடவந்த மும்பை அணியின் தொடக்க வீரர் ரோஹித் ஷர்மா (4 பந்துகளில் 8 ரன்), அவரோடு களமிறங்கிய ரியன் ரிக்கிள்டன் (6 ரன்) என சொற்ப ரன் களில் ஆட்டமிழந்தனர்.

அவருக்குப் பின் வந்த சூர்யகுமார் யாதவ் (28 பந்துகளில் 48 ரன், 1 ஃபோர், 4 சிக்சர்), திலக் வர்மா (36 பந்துகளில் 39 ரன், 3 ஃபோர், 1 சிக்சர்) இருவரும் அணியின் ஸ்கோரை வலுப்படுத்தினர்.

ஆனால் அதன் பின்னர் ராபின் மின்ஸ் (3 ரன்), ஹிருதிக் பாண்ட்யா (11 ரன்), நமன் திர் (ஆட்டமிழக்காமல் 18 ரன்), மிட்சல் சாண்ட்னர் (ஆட்டமிழக்காமல் 18 ரன்) ஆகியோர் சுமாராக ஆடியும் 20 ஓவர்களில் மும்பை அணியால் 6 விக்கட் இழப்பிற்கு 160 ரன் மட்டுமே எடுக்க முடிந்தது. இதனால் இந்த ஐபிஎல் போட்டியில் இரண்டாவது முறையாக மும்பை அணி தோல்வியைச் சந்தித்தது. 

பேட்டிங் பவுலிங் இரண்டிலும் எந்த நேரத்தில் எப்படி செயல்பட வேண்டும் எனத் தெரியாமல் மும்பை அணி தடுமாறுகிறது. ரோஹித் ஷர்மா ஃபார்மில் இல்லை. பும்ரா இல்லாத குறை பந்துவீச்சில் தெரிகிறது. 

குஜராத் அணியின் வேகப் பந்துவீச்சாளர் பிரசித் கிருஷ்ணா  ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார். 

சமஸ்க்ருத நியாயமும் விளக்கமும் (50): கனக குண்டல நியாய:

samskrita nyaya - 2026

சமஸ்கிருத நியாயமும் விளக்கமும் – 5௦

தெலுங்கில் – பி.எஸ். சர்மா
தமிழில் – ராஜி ரகுநாதன்

கனக குண்டல நியாய: – கனகம் – பொன், குண்டலம் – காதில் அணியும் நகை.

வேதாந்த பரிபாஷையை எளிதாகப் புரிந்து கொள்வதற்காக முனிவர்கள் அளித்த பல உதாரணங்களில் இதுவும் ஒன்று.

வேதாந்த நூல்களில், காரியத்திற்கும் காரணத்திற்குள் இடையேயான தொடர்பைக் குறிப்பதற்கு ‘கனக குண்டல நியாயத்தை முனிவர்கள் பயன்படுத்துவார்கள். இது ஒரு அற்புதமான சிந்தனை.

‘ஈசாவாஸ்யம் இதம் சர்வம்’ என்ற உபநிடத வாக்கியம் கூறும் செய்தி, ‘இந்த உலகம் அனைத்தும் ஈஸ்வரன் மயம்’ என்பது. அதேபோல், நான்கு மகாவாக்கியங்களான ப்ரக்ஞானம் ப்ரஹ்மா (ருக்வேதம்), அஹம் ப்ரஹ்மாஸ்மி (யஜுர் வேதம்), தத்வமசி (சாமவேதம்), அயமாத்மா ப்ரஹ்மா (அதர்வண வேதம்) ஆகிய இவற்றை சீடர்களுக்கு உபதேசிக்கும் போது, ‘கனக குண்டலம், கட ம்ருத்திகம் (மண் பானை)’ போன்ற நியாயங்களை எடுத்துக்காட்டுவார்கள்.

ஒரு இடத்தில் ஒரு பெரிய மரம் இருந்தது. அதில் கிளைகளும், மலர்களும், காய்களும் நிறைந்திருந்தன. அந்த மரத்தின் இருப்பிற்கு முக்கியமான காரணம் என்ன? இந்தக் கேள்வியைக் கடைந்துத் தேடினால், அந்த மண்ணில் புதைந்த விதைதான் காரணம் என்பது புரியவரும்.

அதே போல் இந்த சிருஷ்டி உள்ளது. கண்ணுக்குத் தென்படுகிறது. அதனால் யாரோ ஒருவர் இதனைப் படைத்திருக்க வேண்டும். இந்தச் சிந்தனை நம் முனிவர்களுக்கு ஏற்பட்டது. அந்த யோசனையில் இருந்து உற்பத்தியானதே ‘காரண, காரிய சம்பந்தம்’ என்ற சித்தாந்தம். இது அத்தனை எளிதாகப் புரியக் கூடிய விஷயம் அல்ல. அதனால்தான் பல வித உதாரணங்களோடு குருமார்கள் பாடம் நடத்தினார்கள்.

வேதாந்த நூல்கள், இந்த ‘காரிய, காரண’ விளக்கத்தை மூன்று விதமாகப் பிரித்தன.

  • காரணமில்லாவிடில் காரியம் இல்லை. (No effect without cause).
  • படைத்தவரின் சொரூபமே இந்த பிரபஞ்சம்.  (Creation is not different from creator )
  • காரணம் ஒன்றுதான். காரியங்கள் வெவ்வேறு.

ரிஷிகள் இந்த சித்தாந்தத்தை அழகாக விளக்கியுள்ளார்கள். சிருஷ்டி மொத்தமும் ஒரே பதார்த்தத்தில் இருந்து புனையப்பட்டது. அதுவே பிரம்மம்.

‘இந்த்ரோ மாமுபி: புருரூப ஈயதே’ – (ருக்வேதம், 6-47-18)

சிருஷ்டி நடப்பதற்குப் பதார்த்தம் வேண்டுமல்லாவா? படைப்பிற்கு முன்பே பதார்த்தம் எங்கிருந்து வந்தது? தர்ம சாஸ்திரம் இவ்வாறு கூறுகிறது,

‘யதா லூதா தந்துகார்யம் ப்ரதி ஸ்வப்ரதானதயா நிமித்தம் ஸ்வஸரீர ப்ரதானதயோபாதானம் ச பவதி’ – (வேதாந்த சாரம் 56)

பொருள் – சிலந்திப் பூச்சி தன் வாயிலிருந்து வெளிவரும் நூலைக் கொண்டு கூட்டைப்  பின்னுகிறது. அதாவது, ‘நிமித்தம் (நோக்கம்), உபாதானம் (காரணம்) இரண்டும் ஒன்றே.

படைப்பு எவ்வாறு தொடங்கியது ?

‘ஏகோஹம் பஹுஸ்யாம:’ – ‘ஒன்றேயாகிய நான் அனேகமாக ஆவேனாக’. என்ற இறைவனின் விருப்பம் படைப்புக்குக் காரணமானது. தன் சங்கல்பத்தால் பரபிரம்மம் படைப்பைச் செய்தார் என்று வேத ரிஷிகள் கண்டுணர்ந்தார்கள்.

சிருஷ்டியை எதைக் கொண்டு நியமித்தார்? ஒரு ஜடப் பொருள், மற்றொரு ஜடப் பொருளைப் படைக்க முடியாது. மண்ணைப் பானையாக மாற்றிய குயவன், சைதன்யம் நிரம்பிய மனிதன். பொன்னைக் குண்டலமாக மாற்றிய பொற்கொல்லன், சைதன்யம் நிரம்பிய மனிதன். ஆனால், பரப்ரம்மம் படைத்தது, படைத்தவனிடமிருந்து வேறுபட்டது அல்ல. குண்டலமும் பொன்தான். குண்டலத்திலிருந்து பொன்னை நீக்கி விட்டால்? பானையில் இருந்து மண்ணை நீக்கி விட்டால்? என்ன மிஞ்சும்?

நம்முடைய பெயரையும், உருவத்தையும் பெரிதாக எண்ணிக் கொண்டிருப்பது சரியல்ல  என்று கூறும் சித்தாந்தத்தை, இன்னும் கொஞ்சும் தெளிவாகப் புரிந்து கொள்வதற்காக வந்தது இந்த ‘கனக குண்டல நியாயம்’ என்ற உதாரணம்.

எல்லா இடத்திலும், எப்போதும் வணங்கப்படும் இறைவன், ‘என் சொரூபமே’ என்று புரிந்து கொள்வது மிகவும் கடினம். பொன், பலவித ஆபரணங்களாகத் தோற்றமளிப்பது போல, பிரம்மமே, சகல ஜீவராசிகளிடமும் தோற்றமளிக்கிறார் என்னும் உணர்வைப் பெற வேண்டும் என்று இந்த நியாயம் கற்றுத் தருகிறது. 

இந்தப் புரிதலால் படைப்பின் மீது அளவுக்கதிகமான கருணை ஏற்படுகிறது. உடல் உணர்வு நீங்கி, பயமற்றவர் ஆகிறோம். ‘பிரம்மமே நான்’ என்று அறிந்தவர், பிரம்ம ஞானியாகிறார். 

நகை சத்தியமல்ல. அது மித்யை. உண்மையில் இருப்பது பொன்தான். ‘நான் பிறந்து, மறையும் உடல் அல்ல. நான் பரமாத்வாவின் அம்சம். நான் பரிபூரணமானவன்’. என்ற புரிதல் சுகத்தையும் அமைதியையும் அளிக்கும். ‘கனக குண்டல நியாயம்’ முக்திக்கு வழி காட்டக் கூடிய வேதாந்தப் பாடத்தைப் புரியச்செய்கிறது.

காரணம் ஒன்றுதான். காரியங்கள் பல –

மண் ஒன்றுதான். பொருட்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதம். பானை, சட்டி, மடக்கு முதலானவை. அதேபோல் பொன் ஒன்றுதான். குண்டலம், மோதிரம், வளையல், ஒட்டியாணம் என்று ஆபரணங்கள் பல.

பெயர், உருவம் என்ற மாயையில் சிக்கி, நாம் ஆபரணங்களின் அழகை கவனிக்கிறோமே தவிர, கடைக்காரருக்கு அவை எல்லாம் பொன் என்ற புரிதல் எப்போதும் இருக்கும். இருக்க வேண்டும் கூட.

இவ்விதம், வெவ்வேறு பெயர்களால் அழைக்கப்படும் நகைகளில் இருந்து பொன்னை எடுத்து விட்டால், மீதியிருப்பது சூன்யமே.