Home Blog Page 131

சபரிமலை படிபூஜை நிறைவு; ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு!

sabarimala aiyappa concluding pooja - 2026

சபரிமலை ஐய்யப்பன் கோவிலில் தற்போது மண்டல, மகர விளக்கு பூஜை வழிபாடுகள் விழாக்கள் முடிந்து மகரம் மாதபூஜை வழிபாடுகள் ஐயப்பனுக்கு நடந்து வருகிறது மளிகைபுறம் மஞ்சமாதாவுக்கு உற்சவம் நடத்தப் படுகின்றன.

சபரிமலை ஐயப்பனுக்கு மகரஜோதி விழா முடிந்ததும் கடந்த ஜன 15முதல் பிரசித்தி பெற்ற 18 படி பூஜை நடந்து வருகிறது. இன்று நடந்த படி பூஜையில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

சபரிமலையில் உஷ பூஜை, உச்சபூஜை, நித்ய பூஜை, சகஸ்ர கலச பூஜை, படி பூஜை, உதயாஸ்தமன பூஜை உள்பட பூஜைகளும், புஷ்பாபிஷேகம், களபாபிஷேகம், கலசாபிஷேகம் உள்பட ஏராளமான அபிஷேக ஆராதனைகள் நடத்தப்படுகின்றன.

இதில் படிபூஜைக்கு அதிகபட்சமாக ரூ.1 லட்சத்து 37 ஆயிரத்து 900 கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதற்கு அடுத்தபடியாக உதயாஸ்தமன பூஜை கட்டணமாக ரூ.61 ஆயிரத்து 800 நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அதிக கட்டணத்தில் நடத்தப்படும் படி பூஜைக்கு வருகிற 2038-ம் ஆண்டு வரை முன்பதிவு நிறைவடைந்து உள்ளது. இதேபோல் உதயாஸ்தமன பூஜைக்கு 2029-ம் ஆண்டு வரை முன்பதிவு முடிந்துள்ளது. இந்த இரு பூஜைகளும் நீண்ட நேரம் நடத்தப்படும் என்பதால் ஐய்யப்ப பக்தர்களின் சிரமத்தை தவிர்க்க, சீசன் காலங்களில் நடத்த விலக்கு அளிக்கப்பட்டு உள்ளது. அதாவது மாத பூஜை நாட்கள் மற்றும் விசேஷ நாட்களில் இந்த இரு பூஜைகளும் நடத்தப்படும்.

படி பூஜையையொட்டி 18 படிகளையும் கழுவி சுத்தம் செய்து, பட்டு விரித்து, பூக்களால் அலங்காரம் செய்து, 18 படிகளிலும் குத்துவிளக்கு ஏற்றி தந்திரி தலைமையில் படி பூஜை நடத்தப்படும்.

உதயாஸ்தமன பூஜையையொட்டி காலையில் நடை திறப்பு முதல் இரவு நடை அடைப்பு வரை 18 வகையான சிறப்பு பூஜைகள் நடத்தப்படும். அதன்படி ஒவ்வொரு முறையும் நடை திறந்து உதயாஸ்தமன பூஜை நடைபெறுவதால் பக்தர்கள் அந்த நேரத்தில் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்படும்.

இதைக் கருத்தில் கொண்டு இந்த 2 பூஜைகளும் மாத பூஜை நாட்களில் நடத்த திருவிதாங்கூர் தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது.

மகரஜோதி முடிந்ததால் தற்போது சபரிமலை ஐயப்பனுக்கு காலையில் உதயாஸ்தமன பூஜை, இரவு படி பூஜை நடந்து வருகிறது.

சபரிமலையில் ஜன.19 இரவு பக்தர்கள் தரிசனம் நிறைவு பெறும் நிலையில் இன்று நடந்த படி பூஜையில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

சபரிமலை பெருவழிப்பாதை மூடல்!

sabarimala peruvazhipathai - 2026

கல்லும் முள்ளும் காலுக்கு மெத்தையாய் நினைத்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தினமும் பயணித்து வந்த சபரிமலை பெருவழிப் பாதை நடை தற்போது மூடப்பட்டதால் பக்தர்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடி உள்ளது.

சபரிமலை செல்லும் பிரதான வழிகளில் பல நூறு ஆண்டுகளுக்கு முன்பு எருமேலியில் இருந்து அழுதா நதி, பெரியானைவட்டம் வழியாகச் செல்லும் சுமார் 40 கிலோ மீட்டர் தொலைவிலான பெருவழிப்பாதை, சபரிமலை பக்தர்கள் செல்லும் பிரதான பாதையாக உள்ளது.

கடுமையான ஏற்ற இறக்கங்களும் ஆறுகளும் இயற்கை எழில் கொஞ்சும் வளங்களும் கொண்ட இந்தப் பெருவழிப் பாதையில் பக்தர்கள் கடந்த கார்த்திகை மண்டல பூஜை துவங்கிய நாள் முதல் பயணிக்கத் தொடங்கினர். தற்போது வரை இந்தப் பெருவழி பாதையில் தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பயணித்து வந்தனர்.

சபரிமலைக்கு பெருவழிப்பாதையில் நடைப்பயணமாக மேற்கொள்ளும் பக்தர்கள், எரிமேலிக்கு வந்து, எரிமேலி சாஸ்தாவுக்கு பேட்டை துள்ளி, பிரசித்தி பெற்ற மணிமாலா நதியில் நீராடி, தங்களது பெருவழிப்பாதை பயணத்தை தொடங்குவார்கள்.

பெருவழிப் பாதையில் மிக முக்கிய வன இடங்களாக, கருமலை, அழுதாநதி, சிறியானை வட்டம், பெரிய யானை வட்டம் உட்பட பல முக்கிய பகுதிகள் உள்ளன. கல்லிடம்குன்று என பல மலைப்பகுதிகளும் உள்ளன. இங்கே பக்தர்கள் பயணிக்கும் போது அவர்களுக்கு கேரள வனத்துறையினர் போதிய பாதுகாப்பு அளிப்பதும், கேரள வன சமிதி குழுக்கள் சார்பில் ஐயப்ப பக்தர்களுக்கு உணவுகளை மலிவான விலையில் வழங்குவதும் பிரதான கொள்கையாக இருந்தது. மேலும், முக்கிய இடங்களில் ஐயப்ப சேவா சங்கத்தினரும் பக்தர்களுக்கு அன்னதானமும் வழங்கி வந்தனர். திருவாங்கூர் தேவசம் போர்டு முக்கிய மையங்களில் மருத்துவ முகாம்களும் நடத்தி வந்தது.

இந்த பெருவழிப்பாதை கடந்த இரு மாதங்களாக பெரும் பரபரப்புடன் இரவு பகலாக சரண கோஷம் மட்டுமே கேட்கும் வகையில் பரபரப்பாக இருந்தது. தற்போது சபரிமலையில் ஜனவரி 14 மகரஜோதி விழா முடிந்ததும், இந்த நடைபாதை அடைக்கப்பட்டு விட்டது. இதனால் தற்போது இந்த பெருவழிப் பாதையில் உள்ள கழிவுகளை சுத்தம் செய்யும் பணியில் வனத்துறை ஈடுபட்டு வருகிறது.

பக்தர்களின் சரண கோஷம் முழங்கிய இந்தப் பெருவழிப்பாதையில் தற்போது பறவைகளின் சத்தமும் யானை புலி போன்றவைகளின் சத்தமும்தான் கேட்கத் துவங்கியுள்ளது. இனி இந்தப் பெருவழிப்பாதையில், அடுத்த கார்த்திகை மண்டல பூஜை விழாக்காலத்தில்தான் பக்தர்கள் செல்ல அனுமதிக்கப்படுவார்கள்.

தற்போது சபரிமலைக்கு செல்லும் பக்தர்கள், பம்பை நதி வழியில் மட்டுமே செல்ல அனுமதிக்கப்படுகிறார்கள். பம்பையில் இருந்து நீலிமலை ஏற்றம், சரங்குத்தி, சபரிபீடம் வழியாக பக்தர்கள் செல்கின்றனர். உப்பு பாறை வழி பாதை தற்போது மூடப்பட்டு விட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

பம்பையில் வரும் 19ஆம் தேதி வரை மட்டுமே பக்தர்கள் மலையேற அனுமதிக்கப்படுவார்கள். 20 ஆம் தேதி காலை நடை அடைக்கப்படுவதால், சபரிமலைக்கு பக்தர்கள் யாரும் செல்ல அனுமதிக்கப்பட மாட்டார்கள். பந்தள மன்னர் பிரதிநிதி மட்டுமே ஐயப்பனை தரிசனம் செய்வார்.

இன்று நெய் அபிஷேகம், நாளை தரிசனத்துடன் மகரவிளக்கு கால வழிபாடு நிறைவு!

sabarimalai jan18 crowd - 2026

சபரிமலையில் நாளை (ஜன.19) இரவு வரை பக்தர்கள் சுவாமி ஐயப்பனை தரிசனம் செய்யலாம் என்ற நிலையில், இன்று காலை நெய்யபிஷேகத்துக்காக பக்தர்கள் கூட்டம் மிக அதிகமாகவே இருந்தது.

சபரிமலையில் நெய் அபிஷேகம் இன்று நிறைவடைய உள்ள நிலையில் இன்று அதிகாலை நேரத்தில் இருந்தே பம்பை – சபரிமலையில் பக்தர்கள் கூட்டம் மிக அதிகமாக இருந்தது. நெய் அபிஷேகம் செய்ய இன்று அதிகாலை 2 மணிக்கே பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து காலை வரை நெய் அபிஷேகம் செய்து சென்றனர். ஜன.19ல் ஐயப்பனுக்கு எந்த அபிஷேகமும் கிடையாது. பக்தர்கள் சுவாமி தரிசனம் மட்டும் செய்யலாம்.

சபரிமலை மகரவிளக்கு மஹோத்ஸவத்தின் ஓர் அங்கமான தரிசனம் ஜனவரி 19ம் தேதி இரவு முடிவடைகிறது. இன்று மாலை 6 மணி வரை பக்தர்கள் பம்பை வழியாக செல்ல அனுமதிக்கப்படுவார்கள்.

சன்னிதானத்தில் இரவு 10 மணி வரை மட்டுமே ஐயனை தரிசனம் செய்ய முடியும். 19ம் தேதி இரவு அத்தாழ பூஜைக்கு பின் மணிமண்டபம் முன் நடக்கும் குருதி பூஜையுடன் மகரவிளக்கு உத்ஸவம் நிறைவு பெறும்.

ஜனவரி 20ம் தேதி பந்தளம் பிரதிநிதி மட்டும் வருகை தருவார். காலை 5.30 மணிக்கு கணபதி ஹோமம் முடிந்து திருவாபரண ஊர்வலம் புறப்படும். மன்னர் பிரதிநிதி தரிசனம் முடிந்து, 6:30 மணிக்கு மேல்சாந்தி ஐயப்பன் சிலைக்கு விபூதி அபிஷேகம் செய்து, ஹரிவராசனம் அணிவித்து திருநடையை அடைப்பார்.

ஜனவரி 18ம் தேதி இன்று காலை 10.30 மணிக்கு நெய் அபிஷேகம் நிறைவடைகிறது. பின்னர் பந்தளம் அரச பிரதிநிதி முன்னிலையில் களபாபிஷேகம் நடைபெறும்.

இன்றிரவு மணிமண்டபம் களைகட்டுதல், சந்நிதிக்கு தீபம் ஏற்றுதல் ஆகிய வழிபாடுகளுடன் நிறைவடையும். நாளை ஜன.19ம் தேதி இரவு சரம்குத்தியில் சிறப்பு வழிபாடு, இரவு மளிகைபுறம் மஞ்சமாதாவுக்கு குருதி பூஜை வழிபாடு ஆகியவை நடைபெறும்!

செகந்திராபாத் – கொல்லம் ரயில் மேலும் ஒரு சேவை நீட்டிப்பு!

railway news - 2026
#image_title

தென்காசி வழியாக செல்லும் செகந்திராபாத் – கொல்லம் – செகந்திராபாத் சபரிமலை சிறப்பு ரயில் மேலும் ஒரு சேவை நீட்டிக்கப்பட்டுள்ளது.

1.வண்டி எண் 07175
செகந்திராபாத் – கொல்லம் (23ம் தேதி வியாழன்)

செகந்திராபாத் : இரவு 08:00 மணி
தென்காசி : வெள்ளி இரவு 09:15 மணி
கொல்லம் : காலை 01:30 மணி

2.வண்டி எண் 07176
கொல்லம் – செகந்திராபாத் ( 25ம் தேதி சனிக்கிழமை )

கொல்லம் : அதிகாலை 05:00 மணி
தென்காசி : காலை 09:05 மணி
செகந்திராபாத் : 01:30 PM

வழி: ரேணிகுண்டா (திருப்பதி) திருவண்ணாமலை, விழுப்புரம், திருச்சி, மதுரை, விருதுநகர் தென்காசி, புனலூர்

ஹைதராபாத், திருப்பதி (ரேணிகுண்டா), திருவண்ணாமலை போன்ற நகரங்களுக்கு நேரடியாக சென்று/வர முடியும்.

முன்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. விரைவில் உங்கள் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யவும். தென்காசி, விருதுநகர் மாவட்ட பயணிகளுக்கு இந்த சேவை மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

ஹிந்துத்துவமே ஒரே தீர்வு!

hindu
ohm

குல்தீப் நய்யார் இங்கிலாந்தில் இந்திய தூதராக இருந்தார். அவர் தன்னுடைய அனுபவம் ஒன்றை எழுதியுள்ளார்.

சோவியத் ரஷ்யா உடைந்து போகும் நிலையில், அதன் அதிபராக இருந்த கோர்பச்சேவ் , கிளாஸ்நோஸ்த் மற்றும் ப்ரெஸ்தொரெய்கா ஆகிய இரண்டு கோட்பாடுகளைத் தொடங்கி யிருந்தார். அப்போது இங்கிலாந்தின் பிரதமராக இருந்த மார்கரெட் தாட்சர் ரஷ்யாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுடிருந்தார். அவர் நாடு திரும்பிய பிறகு லண்டனில் இரவு விருந்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

அந்த விருந்து நிகழ்ச்சியில் சந்தித்தபோது தாட்சரிடம் உங்களது சுற்றுப்பயணம் எப்படி இருந்தது என்று நய்யார் கேட்டார். நன்றாக இருந்தது என்று அவர் பதில் அளித்தார். பேச்சுவார்த்தை எப்படி நடைபெற்றது என்று நய்யார் மீண்டும் கேட்டார் .

அதற்கு தாட்சர் கூறினார் : ” கோர்ப்பச்சேவ் மிகவும் சோகமாகவும் மகிழ்ச்சியற்றவராகவும் இருந்தார். எதனால் இப்படி இருக்கிறீர்கள்? என்று அவரிடம் கேட்டேன். அதற்கு அவர் இங்குள்ள பல்வேறு இனக் குழுக்களுக்கு இடையே மிகுந்த கசப்பு நிலவுகிறது, கடுமையான மோதல் நிகழ்கிறது. ஆகவே அவர்களால் ஒன்றாக வாழ முடியாது என்றே எனக்கு தோன்றுகிறது என்று பதில் அளித்தார். அவர் கூறிய விதத்தைப் பார்த்தால் ரஷ்யா சிதறுண்டு போகும் என்றே எனக்கு தோன்றியது “.

குல்தீப் நய்யார் , தாட்சரிடம் கேட்டார்: ” பிறகு நீங்கள் என்ன சொன்னீர்கள்?” “இப்படிப்பட்ட நேரத்தில், உங்கள் நட்பு நாடான இந்தியாவிடம் நீங்கள் ஏன் அறிவுரை கேட்கவில்லை. அந்நாடு இத்தனை ஆயிரம் ஆண்டுகளாக, பல்வேறு ஜாதிகள், பல்வேறு மதங்கள், பல்வேறு மொழிகளை கொண்ட மக்கள் அனைவரையும் அரவணைத்துச் செல்கிறதே? என்று கோர்பச்சேவிடம் கூறினேன்” என்று தாட்சர் தெரிவித்தார்.

தாட்சர் இவ்வாறு பதிலளித்தது தன்னை அறியாமலேயே தனக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியதாக குல்தீப் நய்யார் எழுதியுள்ளார்.

ரஷ்யாவில் 15 சமூக குழுக்களை ஒன்றாக வைத்திருக்க முடியவில்லை. அவர்கள் பிரிந்து சென்றனர். ஆங்கிலேயர்கள் இந்தியாவை விட்டு வெளியேறிய போது அவர்கள் இந்தியா, பாகிஸ்தான் என்று இரண்டாக பிரித்து விட்டுச் சென்றார்கள் என்று நாம் நினைக்கிறோம். இதற்கும் மேல் மூன்றாவது விஷயமும் இருந்தது.

அப்போது இங்கே 565 சமஸ்தானங்கள் (சிற்றரசுகள்) இருந்தன. நீங்கள் எங்கு வேண்டுமானாலும் போகலாம் என்று அந்த சமஸ்தானங்களை அவர்கள் விருப்பத்திற்கு ஆங்கிலேயர்கள் விட்டுச் சென்றனர். ரஷ்யாவில் 15 தனி அடையாளங்கள், 15 தனி நாடுகளாக உருவாகின. ஆனால் இங்கோ வாய்ப்பு கிடைத்த போதிலும் 565 சமஸ்தானங்களும் ஒரே நாடாக ஆகின.

— சுரேஷ் சோனி
தற்காலச் சூழலில் ஹிந்துத்துவ தெளிவுரை (பக் — 66-67)

ஆன்மீகம் – வாழ்வின் நோக்கம்

dalai lama - 2026

— பூஜ்ய தலாய் லாமா

வாழ்க்கையின் நோக்கம் என்ன ? இது மகத்தான கேள்வி. நீங்கள் விழிப்புணர்வுடனோ அல்லது தெரியாமலோ இதை கேட்டிருக்கலாம். நம் அனுபவத்தின் அடித்தளமாக இந்த கேள்வி உள்ளது.

மகிழ்ச்சியாக இருக்க வேண்டும். இதுதான் பதிலென நான் நம்புகிறேன். பிறந்த கணம் முதல் ஒவ்வொரு மனிதனும் மகிழ்ச்சியே விரும்புகிறார். துன்பத்தை விரும்பவில்லை. படிப்போ, சமூக சூழலோ, கருத்தியலோ எதுவும் இந்த பதிலுக்கு முரணாக இல்லை. ஆழ்ந்து பார்க்கும் போது, நாம் நிறைவுடன் வாழ விரும்புகிறோம்.

பிரபஞ்சத்திற்கு ஆழ்ந்த பொருள் இருக்கிறதா, இல்லையா என்று எனக்கு தெரியவில்லை. ஆனால், எனக்குத் தெரிந்து, குறைந்த பட்சம் நாம் எல்லோரும் மகிழ்ச்சியாக வாழவே விரும்புகிறோம். எனவே அதிகபட்ச மகிழ்ச்சியை தருவது எது என்பதை கண்டுபிடிப்பது முக்கியமானது.

ஒரு துவக்கமாக, எல்லா இன்ப துன்பங்களையும் இரண்டு வகைக்குள்ளாக்க முடியும். ஒன்று, உடல் ரீதியானது. மற்றது மனம் சார்ந்தது. இந்த இரண்டில் மனம் சார்ந்தவை அதிக தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. நாம் மிகவும் நோய்வாய்ப்பட்டிருந்தாலோ அல்லது உணவு உடை போன்ற அடிப்படை தேவைகளே கிடைக்காத நிலையில் இருந்தாலோ அன்றி, வாழ்க்கையில் உடல் ரீதியான விஷயங்கள் இரண்டாம் பட்சமாக உள்ளன. உடலுக்கு தேவைப்படும் அடிப்படையான விஷயங்கள் கிடைத்துவிட்டால், நாம் பொதுவாக இந்த விஷயத்தில் அலட்சியமாக இருந்து விடுகிறோம்.

ஆனால் மனம் அப்படியல்ல. அது ஒவ்வொரு நிகழ்வையும், அது எவ்வளவு சிறியதாக இருந்தாலும் கூட, அதை பதிவு செய்கிறது. எனவே நாம் மன அமைதிக்கு, மன நிறைவுக்கு அதிக கவனம் கொடுக்க வேண்டும். அதற்காக தீவிர முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.

அன்பை, பரிவை வளர்க்கும் போது நம்முள் ஆழ்ந்த நிறைவு, மிகுந்த மகிழ்ச்சி ஏற்படுவதை நான் கண்டுள்ளேன். மற்றவர்களின் மகிழ்ச்சி குறித்து நாம் அக்கறை படும்போது நமக்குள் பெருத்த சந்தோஷமும் நிறைவும் ஏற்படுகிறது.

மற்றவர்களுடன் நெருக்கமான, பரிவான தொடர்பை வளர்க்கும் போது இயல்பாகவே நம் மனம் லேசாகிறது. இதனால் நம்முடைய பயம், பாதுகாப்பின்மை அகன்று எந்த தடைகளையும் எதிர்கொள்ளும் வல்லமை கிடைக்கிறது. இதுதான் வெற்றிகரமான வாழ்க்கைக்கு ஆதாரம்.

நாம் இந்த உலகில் வாழும் வரையிலும் பிரச்சனைகளை எதிர்கொண்டு தான் ஆக வேண்டும். பிரச்சனைகள் வரும்போது நாம் நம்பிக்கை இழந்து விட்டால் அது நம்முடைய துன்பங்களை எதிர்கொள்ளும் ஆற்றலை குறைத்து விடுகிறது. அதற்கு மாறாக, எல்லோரும் தான் துன்பப்படுகிறார்கள் என்ற நடைமுறை உண்மை நமக்கு நினைவிருந்தால் அது பிரச்சனைகளை எதிர் கொள்ளும் திறமையையும் உறுதியையும் அதிகரி க்கும்.

இந்த அணுகுமுறை நாம் எதிர்கொள்ளும் ஒவ்வொரு பிரச்சினையையும் நம் மனதை மேம்படுத்தும் வாய்ப்பாக பார்க்கத் தூண்டும். நாம் மற்றவர்கள் துன்பப்படும் போது பரிவுடன் பார்த்து , அவர்களது நோவை போக்க உதவி செய்யும்போது, மேலும் மேலும் பரிவுள்ளவர்களாகிறோம்.

நாம் அன்பும் பரிவும் உள்ளவர்களாக இருக்கும்போது நமக்கு பெருத்த மகிழ்ச்சி ஏற்படுவதற்கு காரணம் என்னவென்றால், அன்பைத்தான் இயற்கை எல்லாவற்றையும் விட மேலானதாக போற்றுகிறது.

சாதாரணமான பேச்சில் கூட யாராவது மனிதநேயத்துடன் பேசினால் நாம் அதை மகிழ்ச்சியுடன் கவனிக்கிறோம். அதற்கு ஏற்ப வினையாற்றுகிறோம். அதற்கு மாறாக ஒருவர் கடுமையாகவோ அல்லது அக்கறை இல்லாமல் அலட்சியமாக பேசினால் நாம் சங்கடப் படுகிறோம். உடனே தொடர்பை முடித்துக் கொள்ள முனைகிறோம். சாதாரணமானது தொடங்கி முக்கியமான நிகழ்வுகள் வரை எல்லாவற்றிலும் பிறரிடம் பரிவும் மரியாதையும் வெளிப்படுத்துவது நம்முடைய மகிழ்ச்சிக்கு முக்கியமாகிறது.

அன்பிற்கு, பரிவுக்கு பெரும் தடையாக இருப்பது கோபமும் வெறுப்பும். இதை போக்க நாம் முனைய வேண்டும். இவை வலிமையான உணர்வுகள். நம் ஒட்டு மொத்த மனத்தையும் ஆக்கிரமிக்க கூடிய வல்லமை வாய்ந்தவை. இருந்தாலும் இவற்றை நாம் கட்டுப்படுத்தியாக வேண்டும். இல்லாவிட்டால் இந்த எதிர்மறையான உணர்வுகள் எளிதில் நம்மை சூழ்ந்து கொண்டுவிடும் . மகிழ்ச்சியான மனத்தையடைய நாம் மேற்கொள்ளும் முயற்சிகளுக்கு பெரும் தடையாகிவிடும்.

உங்கள் எதிராளிகள் உங்களுக்கு ஊறு செய்வதாக தெரிந்தாலும் இறுதியில் அவர்களுக்கு அவர்களே கேடு ஏற்படுத்திக் கொள்கிறார்கள் என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். பதிலடி கொடுக்க வேண்டும் என்று உங்கள் தன் உணர்வு தூண்டலாம். அன்பை பயில வேண்டும் என்ற உங்கள் ஆவலையும், பிறரிடம் பரிவுடன் இருக்க வேண்டும் என்ற உங்கள் உறுதியையும், நினைவுக்கு கொண்டு வந்து, அந்த பதிலடி கொடுக்க தூண்டும் தன்னுணர்வுக்கு தடை போட வேண்டும். அவருடைய செயல்களின் விளைவால் அவருக்கு ஏற்படும் துன்பத்தைப் போக்கும் பொறுப்பையும் நீங்கள் ஏற்க வேண்டும்.

தனி மனிதர்களின் மகிழ்ச்சி ஒட்டுமொத்த மனித இனத்தின் மேம்பாட்டிற்கு ஆழ்ந்த பங்களிப்பை அளிக்கக்கூடியது. ஏனெனில், நாம் ஒவ்வொருவரும் அன்பை எதிர்பார்ப்பவர்கள். நாம் எந்த சந்தர்ப்பத்தில் எவரை சந்தித்தாலும் அவர்களை சகோதரனாக, சகோதரியாக உணர முடியும்.

சுருக்கமாக சொன்னால் ஒட்டுமொத்த மனித இனமே ஒன்றுதான். இந்த சின்ன உலகம் தான் நம்முடைய ஒரே வீடு. நம்முடைய இந்த வீட்டை பாதுகாக்க வேண்டும் என்றால் சகோதரத்துவத்தை, பெருந்தன்மையை நாம் மேற்கொள்ள வேண்டியது அவசியம்.

நாம் நம்முடைய மதத்தில் பற்றுள்ளவராகவோ அல்லது ஒரு கருத்தியலில் தீவிரமானவராகவோ இருப்பதை விட , ஒவ்வொருவரிடமும் நல்ல மனித தன்மையை வளர்ப்பது அவசியம்.

(ராஜீவ் மல்ஹோத்ராவிடம் கூறியது)
நன்றி – டிரிபியூன் நாளேடு

கோயிலுக்கு பாதை விட மறுக்கும் தனியார் நிறுவனம்; அரசு தலையிட கோரிக்கை!

temple path occupied by industries - 2026

மதுரை சோளங்குருணியில் 500 ஆண்டு பழமை வாய்ந்த கோவிலுக்கு பாதை விட மறுக்கும் தனியார் நிறுவனம் தொடர்பில் பிரச்னை ஏற்பட்டது.

கிராம மக்கள் – தனியார் நிறுவனம் இரு தரப்பினரிடையே மோதல் ஏற்படும் சூழ்நிலையில் போலீசார் அமைதிப் பேச்சுவார்த்தை நடத்தி சாமிகும்பிட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

மதுரை மாவட்டம் மதுரை தெற்கு தாலுகா, சோளங்குருணி கிராமத்தில் அருள்மிகு போத்தி ராஜா – வள்ளியம்மை திருக்கோவில் உள்ளது. சோளங்குருணி கிராமத்தைச் சேர்ந்த சுமார் 6 ஆயிரம் பேர் இக்கோவிலில் வழிபாடு செய்து வருகின்றனர். கடந்த 500 வருடங்களாக வண்டி பாதை வழியாக கோவிலுக்கு சென்று வழிபாடு செய்து வருகின்றனர்.

இந் நிலையில், ருத்ரா ப்ரமோட்டர்ஸ் மற்றும் ஆர் ஆர் கன்ஸ்ட்ரக்சன் ஆகிய நிறுவனம் சோளங்குருணி பகுதியில் 1000 ஏக்கர் பரப்பளவில் இடம் வாங்கி பதிவு செய்துள்ளனர். கடந்த 2006 ஆம் ஆண்டு ருத்ரா ப்ரமோட்டர்ஸ் மற்றும் ஆர்.ஆர். பில்டர்ஸ் அன்று முதல் வழிபாடு நடத்த தங்கள் இடத்தின் வழியாக அனுமதி அளித்துள்ளனர்.

ஆனால், இன்று கிராம மக்கள் கும்பாபிஷேகம் செய்வதற்கு முன்னோட்டமாக பெட்டி சாமி வைத்து பூஜை செய்ய 100 க்கும் மேற்பட்டோர் சென்ற போது ருத்ரா பிரமோட்டர்ஸ் மேலாளர் இஸ்மாயில் பாதையில் உள்ள கதவை திறக்க மறுத்துள்ளார்.

இதனால், சோளங்குருணி மக்கள் கதவை உடைத்து உள்ளே சென்றனர். சோளிங்குருணி கிராம மக்கள் – மற்றும் தனியார் நிறுவனம் ஆகிய இரு தரப்பினர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு மோதல் ஏற்படும் சூழ்நிலை உருவானது.

இது குறித்து, பெருங்குடி போலீஸாருக்கு பொதுமக்கள் தகவல் தெரிவித்தனர். பெருங்குடி சார்பு ஆய்வாளர் பாஸ்கரன் தலைமையில் போலீசார் போத்தி ராஜா – வள்ளியம்மாள் கோவிலுக்கு சென்று இரு தரப்பினரிடையே பேச்சுவார்த்தை நடத்தினர் . அதனைத் தொடர்ந்து, சோளங்குருணி கிராம மக்கள் பூஜை நடத்தி செல்லலாம் என, கூறினர்.

அதனைத் தொடர்ந்து , இரு தரப்பினர் இடையே முதல் ஏற்படாமல் சாமி கும்பிட்டு புறப்பட்டு சென்றனர். தனியார் நிறுவன ஊழியர்களின் செயலால் இரு தரப்பினரிடையே மோதல் ஏற்படும் சூழ்நிலை உள்ளது. இது குறித்து, அரசு உடனடியாக தலையிட்டு தங்களுக்கு சாமி கும்பிட பாதை ஒதுக்கி தருமாறு மாவட்ட நிர்வாகத்தை பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர் .

அதானியைக் குறிவைத்த அமெரிக்க ஹிண்டன்பெர்க் – இழுத்து மூடல்!

adani - 2026

பாரதத்தை – குறிப்பாக அதானியை – குறி வைத்த ஹிண்டன்பர்க் பயல் கடையை மூடி ஓட்டம்…. டிரம்ப் வருவதற்குள் டீப் ஸ்டேட் கூட்டங்கள் ஓடத் துவங்கியிருக்கின்றன.

அதானிக்கு எதிராக வழக்கு தொடுத்த அட்டர்னி ஜெனரல் ராஜினாமா செய்திருப்பதையும் கவனிக்கவும். அது தவிர, Indian Rare Earths Limited (IREL), Indira Gandhi Atomic Research Center (IGCAR), and Bhabha Atomic Research Center (BARC) ஆகியவை மீது பைடன் அரசு விதித்திருந்த தடைகளும் நீக்கப் பட்டிருக்கின்றன.

இதற்கிடையில், காஸா பயங்கரவாதிகள் தாங்கள் பிடித்து வைத்திருந்த இஸ்ரேல் பிரஜைகளை விடுவிக்க ஒப்புக் கொண்டிருக்கிறார்கள் நேற்று. இன்னும் 4 நாட்களில் டிரம்ப் பதவியேற்கிறார். இன்னும் என்னென்ன மாற்றங்கள் வருமோ?

  • செல்வ நாயகம்

As I’ve shared with family, friends and our team since late last year, I have made the decision to disband Hindenburg Research. The plan has been to wind up after we finished the pipeline of ideas we were working on. And as of the last Ponzi cases we just completed and are sharing with regulators, that day is today. – Nate Anderson, Hindenburg


பாரத நாட்டின் நடுத்தர மக்களின் ஒரே நம்பிக்கையாக இருந்த பங்கு சந்தை முதலீட்டார்களை படுகுழியில் தள்ளி – மோடியை அவமானப்படுத்துவதாக கருதி காங்கிரஸ் கலவணிகளின் கை பாவையாக செயல் பட்ட ஹிண்டன்பர்க் நிறுவனம் மூடப்பட்டு விட்டது ..

கிராமத்தில் – ஒரு பொண்ணை திருமணம் பண்ண வேண்டி பொண்ணு தர மறுத்தால் – அந்த பெண்ணை வேறு எவனும் கட்ட முடியாதபடி பொய் கதைகளை புனைந்து கேவலப்படுத்தி அவளை நான் கட்டி கொள்கிறேன் என்கின்ற பழைய கேவல பாணி வேலை செய்தவன் இந்த கம்பெனி முதலாளி நாதன் ஆண்டர்சன்!!

இந்தியாவில் அதானி கம்பெனி ஒரு ஊழல் கம்பெனி என்றும் அமெரிகாவில் மின்சார டிரக் தயாரிப்பாளர் நிகோலா என்கின்ற கம்பெனியையும் கேவலாமாக எழுதி அதன் பங்குகள் விலையை வீழ செய்து – அதை முன்னமே குறைந்த விலைக்கு வாங்க செய்து பின்னர் விற்கின்ற – முறையில் லாபம் சம்பாதிதாக குற்றம் சாட்டப்பட்ட (ஷார்ட்-செல்லிங் ) இந்த கொலைகாரன் தனது கடையை மூடுகிறான் !!!

இந்தியா வெளியுறவு துறை அமைச்சர் மற்றும் இந்திய பாதுகாப்பு ஆலோசகர் இருவரும் அண்ணன் ட்ரம்ப் அவர்களின் பதவி ஏற்புக்கு செல்ல இருக்கும் வேலையில் இந்த பாரத நாட்டின் எதிரிகள் மறைந்து ஓடி ஒழிவதை காண முடிகிறது !!

காங்கிரஸ்காராணுங்க மற்றும் பல எதிர் கட்சி காரணுங்க இந்த திருடனை நம்பி அதானி அயோகியன் மோடி ஊழல் வாதி என்று பாராளுமன்றத்தில் சவுண்ட் விட்டானுங்க !!!

சத்தமில்லாமல் எதிரிகளை ஒழிப்பதில் மோடி அவர்கள் கில்லாடி – என்பதை இது காட்டுகிறது

  • விஜயராகவன் கிருஷ்ணன்

வாழ்த்துகள் கௌதம் அதானி-

இந்தியாவையும் அதானியையு ம் குறி வைத்து 2022 ல் இருந்து தவறான தகவல்களை அளித்து இந்திய மக்களிடையே குழப்பத் தை உருவாக்கி இந்திய பொரு ளாதாரத்தின் மீது தாக்குதல்க ளை நடத்தி வந்த அமெரிக்காவி ன் ஹின்டன்பெர்க் ஆராய்ச்சி நிறுவனத்தை மூடுவதாக அதன் நிறுவனர் நேட் ஆண்டர்சன் இன்று அறிவித்து இருக்கிறார்.

அதனானி குழுமத்தை மூட வை த்து இந்திய பொருளாதாரத் தை அழிக்க நினைத்த இந்திய எதிர்ப்பு சக்திகளுக்கு துணை நின்ற ஹிண்டன்பைர்க் நிறு வனம் மூடப்படுவதன் மூலமாக இந்திய எதிர்ப்பு சக்திகளுக்கு அதானியின் பவர் புரிய வைக்க ப்பட்டு இருக்கிறது..

அமெரிக்க அதிபராக டொனால் ட் ட்ரம்ப் பதவி ஏற்க உள்ள சில நாட்களுக்கு முன் ஹிண்டன் பெர்க் நிறுவனம் மூடப்பட இருப்பது இனி இந்தியா அமெரிக்கா அரசியலில் நடத்த இருக்கும் சர்ஜிகல் ஸ்ட்ரைக்கின் அடையாளம் என்றே கூறலாம்..

ஹிண்டன்பெர்க் மூடப்படுவ தாக அறிவிக்கப்பட்டதால் இந்தி ய பங்கு சந்தைகளில் அதானி குழுமத்தின் பங்குகளின் மதிப்பு உயர்ந்து கொண்டு இருக்கின்றன.அதானி அமெரிக்காவை ஆட்டி படைக்கிறார் என்பதை நி னைத்து ஒவ்வொரு இந்தியனு ம் பெருமைப்பட வேண்டும்.

  • விஜயகுமார் அருணகிரி

பிப்.9ல் நெட்டாங்கோடு பத்ரகாளி அம்மன் கோயில் பொங்கல் விழா பஜனாம்ருதம் போட்டிகள்!

nettancode pongal vizha - 2026

கன்யாகுமரி மாவட்டம் நெட்டாங்கோடு அருள்மிகு பத்திரகாளி அம்மன் திருக்கோயில் பொங்கல் விழா-2025

நேதாஜி இளைஞர் இயக்கம் மற்றும் ஜான்சி ராணி மகளிர் மன்றம் இணைந்து நடத்தும் மாவட்ட அளவிலான பஜனை போட்டி

பஜனாம்ருதம் – 2025 நடைபெற இருக்கிறது.

நாள்: 09/02/2025 ஞாயிற்றுக்கிழமை
*நேரம் : காலை 9.00 மணி
*இடம்: நெட்டாங்கோடு தேவி கலையரங்கம்.

குறிப்பு :

⚫ பஜனைப் போட்டியில் கலந்து கொள்ளும் அணிகள், தங்களின் பெயர்களை 07/02/2025 – ஆம் தேதி, இரவு 9.00 மணிக்கு முன்பாக முன்பதிவு செய்யவேண்டும்.

⚫ கீழே உள்ள MOBILE எண்களில் ஏதேனும் ஒன்றில் WHATSAPP MESSAGE செய்து, தங்கள் அணியின் பெயர், ஊர் பெயர், தொடர்பு கொள்ளவேண்டிய எண்ணை தெரிவித்துக் கொள்ளவேண்டும்.

⚫ ஒரு நாள் நிகழ்ச்சி என்பதால் நேரத்தை கணக்கில் கொண்டு முதலில் முன்பதிவு செய்யும் 35 அணிகள் மட்டுமே போட்டியில் பங்குகொள்ள முடியும்.

⚫ ஆண், பெண் இருப்பாலரும் கலந்து கொள்ளலாம்.

⚫ பஜனைப் போட்டியானது சரியாக, காலை 9.00 மணிக்கு துவங்கும்.

⚫ ஒரு அணிக்கு 10 நிமிடங்கள் மட்டுமே வழங்கப்படும்.

⚫ ஒரு அணியில் 7 முதல் 13 நபர்கள் வரை பங்குபெறலாம்.

⚫ ஒரு அணியானது தெய்வபக்தி பாடல்கள் மற்றும் தேசபக்தி பாடல்கள் பாடலாம் தேசபக்தி பாடல் கட்டாயம் , ஒருவர் ஒரு பாடல் மட்டுமே பாட அனுமதி உண்டு.

⚫ ஒரு ஊரில் இருந்து ஒரு அணி மட்டுமே கலந்துகொள்ளலாம். அனைவரும் ஒரே ஊரை சேர்ந்தவர்களாக இருக்கவேண்டும். (தபேலா மட்டும் விதி விலக்கு)

⚫ இசை உபகரணங்கள், அந்தந்த அணியினரே
கொண்டு வரவேண்டும்.

⚫ இசைபள்ளி சார்பாக கலந்து கொள்ளும் அணியினருக்கு அனுமதி கிடையாது.

⚫ போட்டியில் கலந்து கொள்ளும் அனைத்து அணிகளுக்கும் ஊக்கப்பரிசு உண்டு.

⚫ நடுவர்களின் தீர்ப்பே இறுதியானது.

தொடர்புக்கு ☎ : 9791582807, 8438188798, 9944830506, 8098967653.

முதல் பரிசு : ₹ 7501
இரண்டாம்பரிசு : ₹ 6001
மூன்றாம் பரிசு: ₹ 5001
நான்காம் பரிசு: ₹ 4001
ஐந்தாம் பரிசு :₹ 3001
ஆறாம் பரிசு : ₹ 2501
ஏழாம் பரிசு : ₹ 2001
எட்டாம் பரிசு : ₹ 1501
ஒன்பதாம் பரிசு : ₹ 1251
பத்தாம் பரிசு : ₹ 1001

கலந்து கொள்ளும் அனைத்து அணிகளுக்கும் ஊக்கப்பரிசு ரூ.501 வழங்கப்படும். பஜனை போட்டியினை சிறப்பிக்க அனைவரையும் வரவேற்கிறோம்.

பெரியாரைத் துணைக் கொள்! அரசியலில் புது அர்த்தங்கள்!

srirangam evr statue - 2026

— ஆர். வி. ஆர்

திராவிட அரசியல் கட்சிகளால் – முக்கியமாக, திமுக-வால் – ‘பெரியார்‘ என்று புகழப் படுகிறவர், திராவிடர் கழகத்தின் நிறுவனர் ஈ.வெ. ராமசாமி. எப்படியானவராக இருந்தார் ஈ.வெ.ரா?

பேச்சிலும் எழுத்திலும் தமிழ் மொழியை, அதைத் தாய்மொழியாகக் கொண்டவர்களை, இகழ்ந்தவர் ஈ.வெ.ரா. தமிழை ‘சனியன்‘ என்றும் வைதவர். தமிழர்களை ஆங்கிலத்தில் பேசச் சொன்னவர். கடவுளை நம்புகிறவர்களை, வணங்குபவர்களை, முட்டாள், அயோக்கியன், காட்டுமிரண்டி, என்று வசை பாடியவர் ஈ.வெ.ரா.

ஆண்-பெண் திருமண உறவை நகைத்தவர் ஈ.வெ.ரா. அவர் பெண்மையின் விசேஷத்தை, பெருமையை, உணராமல் பெண்களைச் சிறுமைப் படுத்திப் பேசியவர். அவர் பேசிய, எழுதிய, கீழான எண்ணங்கள் பலவற்றை அப்படியே பொதுவில் சொல்வதற்குப் பலரும் நாகரிகம் கருதித் தயங்குவார்கள்.

இவை அனைத்தும் திமுக, அதிமுக மற்றும் பெரியாரை மதிக்கும் சில சிறு கட்சிகளுக்குத் தெரியும். இருந்தாலும் அக் கட்சிகள், குறிப்பாக திமுக, ஏன் ஈ.வெ.ரா-வை உயர்த்திப் பிடிக்கின்றன?

எல்லாம் தெரிந்தும் முன்பு அவரைப் போற்றிய நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான், இப்போது ஏன் திடீரென்று ஈ.வெ.ரா-வைக் கடுமையாக விமரிசனம் செய்து இகழ்கிறார்?

கருணாநிதியின் திமுக ஆட்சியில் அவர் ஈ.வெ.ரா-வைக் கொண்டாட ஆரம்பித்தார். ஈ.வெ.ரா-வை உயர்த்திப் பிடித்தால், அரசியலில் தான் இயங்குவது தனது லாபத்திற்காக அல்ல, ‘ஒரு சமூக சீர்திருத்தவாதியின் கொள்கைகளைப் பின்பற்ற, நடைமுறைப்படுத்த, நான் இருக்கிறேன்’ என்று சிறிது காட்டிக் கொள்வதற்காக ஈ.வெ.ரா அவருக்குப் பயன்பட்டார். அந்தப் போற்றுதல் திமுக-வில் இன்றும் தொடர்கிறது. ஏதோ ‘காட்டிக் கொள்ள’ப் பயன்படும் வெளிவேஷம் இது. மலிவு அரசியலில் ‘ஷோ’ வேண்டுமே!

ஈ.வெ.ரா இகழ்ந்த திருக்குறளின் ஆசிரியர் திருவள்ளுவர். கடவுள்
வாழ்த்து, கள்ளுண்ணாமை, ஒழுக்கமுடைமை, செங்கோன்மை போன்ற அதிகாரங்களில் குறள் எழுதியவர். அந்தத் திருவள்ளுவருக்குக் கன்னியாகுமரியில் கடல்பாறை மீது பெரிய சிலை வைத்துப் பெருமை கண்டது கருணாநிதியின் திமுக ஆட்சி. திருக்குறளை இகழ்ந்த ஈ.வெ.ரா-வுக்கும் தமிழகத்தில் ஊர் ஊராகச் சிலைகள் வைத்துப் பெருமிதம் கொண்டது அவருடைய திமுக ஆட்சி.

ஈ.வெ.ரா-வைப் போற்றி மகிழ்ந்த கருணாநிதி, திருக்குறளுக்கு உரையும் எழுதியவர்.

கருணாநிதியின் இந்தப் பெரிய முரண்பாடுகள், பெருவாரியான தமிழக மக்களைப் பாதிக்கவில்லை. ஒரு வளர்ந்த ஜனநாயகத்தில் இந்த முரண்கள் எளிதில் சாத்தியமில்லை. இந்தியாவில் இவை சர்வ சாதாரணம்.

சீமான் விஷயத்தில், அவர் இப்போது பெரியாரைக் கடுமையாக விமரிசனம் செய்வதும் அவரது சுய அரசியல் லாபத்திற்காக மட்டும்தான். நேரான காரணத்திற்காக அல்ல. இதைக் காட்டும் சில உண்மைகள் இவை.

இலங்கையில் அந்த நாட்டு அரசை எதிர்த்து, தனி நாடு கேட்டு, ஆயுதமேந்திப் போர் புரிந்தவர் தமிழீழ விடுதலைப் புலிகளின் (LTTE) தலைவர் பிரபாகரன். அந்த இயக்கம் அந்த நாட்டில் தீவிரவாதச் செயல்கள் புரிந்தது. இறுதியில் அந்த நாட்டு ராணுவ நடவடிக்கையால் அந்த இயக்கம் வீழ்ந்தது, பிரபாகரனும் மடிந்தார்.

இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தியை இந்திய மண்ணில், அதுவும் தமிழகத்தில், குரூரமாகக் கொன்றதில் பிரபாகரன் தலைமையிலான விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கு முக்கியப் பங்குண்டு. இப்படியான பிரபாகரனை முன்னிறுத்தி – அதுவும் தமிழ்நாட்டில் சிறந்த முன்னுதாரணமான அரசியல் தலைவர்களை விட்டுவிட்டு – “பிரபகரன்தான் என் தலைவன்” என்று முழக்கமிடுகிறார் சீமான். சீமானின் இந்தச் செயலும், இந்த அப்பட்டமான தேச விரோதப் போக்கும், அவரது ஆதரவாளர்களைப் பாதிக்கவில்லை.

ஈ.வெ.ரா-வைப் போற்றும் அறிவீனத்துக்கு நிகரானது சீமான் வெளிப்படுத்தும் பிரபாகர பக்தி. இதனால் வெளிநாடுகளில் வாழும் அப்பாவி இலங்கைத் தமிழர்களிடம் சீமானுக்கு என்ன பயனோ?

அரசியல் மேடைகளில் சீமான் பேசுவது வசீகரமானது. கைகளைப் பலவாறு வீசி, இரண்டு உள்ளங் கைகளையும் அடிக்கடி தட்டி, முகத்தைக் பல கோணங்களில் திருப்பி, தன் தெளிவான உரத்த குரலை ஏற்றி இறக்கி, மக்களின் உணர்ச்சிகளைக் கவர்ந்து தடையில்லாமல் ஆக்ரோஷமாகப் பேசுபவர் அவர். சாதாரண மக்களை, அதுவும் மிக இள வயதினரை, தனது உணர்ச்சி மிகுந்த பேச்சுக்களால் அவரைப் போல திசை திருப்பி ஈர்க்கும் ஒரு அரசியல் தலைவர் இப்போது தமிழகத்தில் இல்லை.

பெரிய கட்சி திமுக-வை எதிர்த்து அரசியல் செய்து வளர்ந்தால் தான் பெரிதாகலாம் என்று பொறுமையாகத் திட்டமிட்டு அரசியல் செய்கிறார் சீமான். அதன் ஒரு பகுதியாக, திமுக போற்றும் ஈ.வெ.ரா-வை இப்போது எதிர்க்கிறார். சீமானிடம் பெரிய எண்ணங்களோ விசாலமான பார்வையோ உயர்ந்த தேச சிந்தனையோ காணப்படவில்லை. திமுக-வை மிஞ்சி அவர் திமுக பாணி அரசியல் செய்ய விரும்புகிறார். அதுதான் சீமான்.

பொதுவாக நமது நாட்டில் விவரம் அறியாத மக்கள், எளிதில் ஏமாறக் கூடிய சாதாரண மக்கள், எண்ணிக்கையில் அதிகம். குறைந்த வருமானத்தில், பொருளாதார ஏக்கத்தில், எப்போதும் வைக்கப் பட்டிருக்கும் அந்த மக்கள், ஏதோ அரிசி பருப்பு வங்க முடிகிறதா, அரசிடமிருந்து ஆயிரம் ரண்டாயிரம் பணம் கிடைக்குமா, அரசு இலவசங்கள் வேறென்ன கிடைக்கும், என்ற எதிர்பார்ப்பு நிலையில் வைக்கப்பட்டவர்கள். மற்றபடி யார் ஈ.வெ.ரா-வைப் போற்றினால் என்ன, தூற்றினால் என்ன என்றுதான் அவர்களால் இருக்க முடியும்.

அரசியல் விஷயங்களில் முதிர்ச்சி குறைந்து வாழ்க்கையில் அல்லாடும் அப்பாவி மக்கள், குயுக்தி நிரம்பிய குரூர அரசியல் தலைவர்கள். இது இந்தியா!

ஈ.வெ.ரா-வைத் திமுக ஆதரித்தால் என்ன, சீமான் கட்சி எதிர்த்தால் என்ன? இரண்டு கட்சிகளும் கோணலான அர்த்தத்தில் ஒளவையாரின் ஆத்திசூடி சொற்களை ஏற்கின்றன: பெரியாரைத் துணைக் கொள்!

Author: R Veera Raghavan, Advocate, Chennai
veera.rvr@gmail.com
https://rvr-india.blogspot.com