Home Blog Page 132

சபரிமலை: குறையாத கூட்டம்! அகலாத குறைகள்! குமுறும் பக்தர்கள்!

sabarimalai crowd - 2026

சபரிமலைக்கு மகரவிளக்கு பூஜை முடிந்தும்கூட, இங்கு வரும் பக்தர்கள் கூட்டம் குறையவே இல்லை.

தற்போது சபரிமலைமில் நடைபெறும் படி பூஜை, உதயாஸ்தமன பூஜை உள்பட்ட பல்வேறு வழக்கமான பூஜைகள், அபிஷேகம் ஐயப்பனுக்கு நடைபெறுவதால் பக்தர்கள் வருகை குறையவே இல்லை. வரும் ஜன.19 வரை ஐயனை பக்தர்கள் தரிசனம் செய்து செல்லலாம்.

மகரஜோதி காலத்தில் சபரிமலை பகவானின் சந்நிதியில் பக்தர்களுக்கு நடக்கும் அநீதிகள் மிக அதிகமாக இருந்தது. மகரஜோதியை முன்னிட்டு சபரிமலைக்கு வரும் பக்தர்களுக்கு பாதுகாப்பு கருதி 40,000 நபர்களுக்கு மேல் அனுமதி இல்லை என்றும், ஸ்பாட் புக்கிங் இல்லை என்றும் தேவஸ்வம் போர்டு அறிவித்தது. இந்த பச்சைப் பொய்யை நம்பி சபரிமலைக்குச் சென்று சங்கடத்திற்கு ஆளான ஆயிரக்கணக்கான பக்தர்களின் குமுறல் இது.

ஏலத்திற்கு விடப்பட்டுள்ள கடைகளின், வியாபாரத்தையும் லாபத்தையும் மட்டுமே கருத்தில் கொண்டு அளவுக்கு அதிகமான பக்தர்களுக்கு அனுமதி அளித்துள்ளது தேவஸ்வம் போர்டு. ஆன்லைன் புக்கிங் 40,000 நபர்களுக்கு மட்டுமே அனுமதி, ஸ்பாட் புக்கிங் இல்லவே இல்லை. பிறகு எப்படி 1,50,000 முதல் இரண்டு லட்சம் பேருக்கு மேல் பக்தர்கள் குவிந்தார்கள்?

குழந்தைகளுடன் வந்தவர்களுக்கும், முதியோர்களுக்கும் திறக்காத மரக்கொட்டம் கேட், கேரள அரசுத் துறை மற்றும் தேவஸ்வம் போர்டு ஊழியர்களையும், அதிகாரிகளையும் கண்டால் தானாகவே திறப்பதுதான் இவர்களின் மனித நேயம்!

நீதிமன்றம் எத்தனை முறை கண்டித்தும், குழந்தைகளுக்கும் முதியோர்களுக்கும் தனி வழி அமைக்காதது, ஈவு இரக்கமற்ற, கண்டிக்க வேண்டிய கொடுஞ்செயல்! பனியிலும், மழையிலும், அவதிப்பட்டு 7 மணி நேரம் வரிசையில் நின்ற குழந்தைகளைக் காணும்போது நெஞ்சு பதைக்கிறது.

எவ்வளவு கெஞ்சிக் கேட்டும் மரக்கொட்டம் வழியாக அனுமதிக்காததால், 2 வயது குழந்தையுடன், சென்னை கொருக்குப்பேட்டையைச் சேர்ந்த ஒரு பக்தர் தன் குழந்தையுடன் 7 மணி நேரம் நீண்ட இன்னளுக்குப் பிறகு சுவாமி தரிசனம் செய்தார்.

இது தவிர, புண்ணியமான பதினெட்டாம் படி மேல் போலீஸ் காட்டுமிராண்டிகள் செய்வதுதான் அக்கிரமத்தின் உச்சம்!

பதினெட்டாம் படியேறும் சாமிமார்களில் சிலர், ஆர்வ மிகுதியில் ஒருவரை ஒருவர் முந்திச் செல்ல முயல்கின்றனர். அவர்களை முதுகில் அடித்து இழுத்துத் தள்ளுவது, கைகளால் ஓங்கிக் குத்துவது, எட்டி உதைப்பது போன்ற வன்முறைகளைச் செய்ய காவல்துறைக்கு யார் அனுமதி தந்தது?

காலையில் கணபதி ஹோமம் என்ற பெயரில் பக்தர்களைப் பிழிந்து வசூல் வேட்டை, சாதாரணமாக தினசரி நடக்கும் ஒரு பூஜை கணபதி ஹோமம், அதையும் காசாக்கும் நோக்கில், ஆன்லைன் மூலம் 375 ரூபாய் பெற்றுக்கொண்டு 15 பேருக்கு மேல் நிற்க முடியாத இடத்தில், 40 முதல் 100 பேருக்கு மேல் டிக்கெட் விற்று, சிறிய இடத்திற்குள் பக்தர்களை நசுக்கி, அப்படி வரும் பாவக்காசை வைத்து என்ன செய்யப்போகிறது?

தேவஸ்வம் போர்டு, ஆன்லைனில் ரூம் புக்கிங் செய்து ரசீது வைத்திருப்பவர்களை மீண்டும் அக்காமடேஷன் ஆபீஸ் வரச்சொல்லி அலைக்கழிப்பது; அங்கே எப்போது போனாலும் சர்வர் டவுன் எனக் காத்திருக்க வைப்பது; நீண்ட நேரம் கழித்து, நம்மிடம் உள்ள ஆன்லைன் ரசீதில் என்ன தகவல் இருக்கிறதோ, அதே விஷயத்தை பிரின்டிங் செய்த இன்னோர் ரசீதைக் கொடுப்பது; இதற்கு எதற்கு இரண்டு ரசீது என்று புரியவில்லை!

வரும் பக்தர்கள் மீது எந்த அக்கறையும், மனிதநேயமும் துளியும் இல்லாமல் நடந்து கொள்கிறது தேவஸ்வம் போர்டு. பிரசிடன்ட் திரு. பிரஷாந்த், அட்மினிஸ்ட்ரேடிவ் ஆபிசர் பிஜூ நாத் ஆகியோருக்கு தங்களை விளம்பரப்படுத்திக் கொள்ள வீடியோவிற்கு போஸ் கொடுக்கவே நேரம் சரியாக இருக்கிறது!

அனைவரும் சமம் என்று கம்யூனிஸம் பேசும் கேரள அரசாங்கம், இந்த விஷயத்தில் கண்டும் காணாமல் இருப்பதன் அரசியல் புரியாத புதிராகவே இருக்கிறது! போகிற போக்கைப் பார்த்தால், தமிழக இந்து சமய அறநிலையத்துறையை மிஞ்சி விடும் போலிருக்கிறது திருவிதாங்கூர் தேவஸ்வம் போர்டு!

இவை அனைத்தையும் குத்துக்காலிட்டு அமர்ந்து பார்த்துக் கொண்டிருக்கும் ஐயப்ப ஸ்வாமி என்ன முடிவெடுக்கிறார் என்று பார்ப்போம் என்றவாறு பக்தர்கள் குமுறியபடி செல்கின்றனர்.

இந்த நிலையில் சபரிமலையில் மகரஜோதி தரிசனம் முடித்து திரும்பிச் செல்ல பக்தர்கள் படாத பாடு பட்டனர். பம்பையில் இருந்து பத்தனம்திட்டா, புனலூர் வரையிலும், பம்பை, எரிமேலி, குமுளி தளத்திலும் வாகனங்கள் அளவுக்கு அதிகமாகச் சென்றதால், கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதற்கெல்லாம் தீர்வு காண, கேரளா போக்குவரத்துத் துறையும் திருமானூர் தேவசம் போடும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை!

சபரிமலையில் மகரஜோதி உலா முடிந்தும் தற்போது ஜனவரி 19 வரை பக்தர்கள் ஐயப்பனை சேவிக்கலாம் என்பதால், பக்தர்கள் கூட்டம் வழக்கம் போல் மிக அதிக அளவில் வருகின்றது. தினமும் ஒரு லட்சத்திற்குக் குறையாத பக்தர்கள் தற்போது வந்து செல்கின்றனர். ஜனவரி 15 முதல் பிரசித்தி பெற்ற மகரஜோதி படி பூஜை விழா நடந்து வருகிறது.

பகலில் நெய்யபிஷேகம், அஷ்டாபிஷேகம் உட்பட நிறுத்தி வைக்கப்பட்ட பல்வேறு பூஜைகள் நடந்து வருகிறது. இந்த பூஜை கால வழிபாடுகளை காணவும், இரவு நடைபெறும் படி பூஜையை காணவும் பக்தர்கள் அதிக அளவில் சபரிமலைக்கு வந்த வண்ணம் உள்ளனர். ஆனால் பக்தர்களுக்கு போதிய வசதிகள் இல்லாதது பெரும் குறையாக உள்ளது. போக்குவரத்து வசதி, குடிநீர் வசதி, உணவு வசதி போன்ற அனைத்து வசதிகளையும் திருவாங்கூர் தேவசம் போர்டு தேவையான அளவு செய்து தர இனிவரும் காலங்களில் நடவடிக்கை எடுப்பது மிக அவசியமாகும்!

இந்த நிலையில் இந்த ஆண்டு சபரிமலையில் மகரஜோதி விழா முடிந்து சபரிமலை கோவில் வரும் ஜனவரி 20 காலை வரை நடை திறந்திருக்கும். பக்தர்கள் வரும் ஜனவரி 18 வரை நேயபிஷேகம் செய்யலாம். ஐயப்பனுக்கு பல்வேறு அபிஷேகங்கள், பூஜைகள், படி பூஜை உள்பட பல்வேறு பூஜை வழிபாடுகள் நடைபெறும். 19ஆம் தேதி ஐயப்பனுக்கு எந்த பூஜை வழிபாடும் நடைபெறாது. ஆனால் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப் படுவார்கள். அன்று இரவுடன் சபரிமலையில் பக்தர்கள் தரிசனம் நிறைவு பெறும்.

ஜனவரி 20ஆம் தேதி காலை பந்தள மன்னர் மட்டும் ஐயனை தரிசனம் செய்வார். அவர் தரிசனம் செய்ததும் காலை கோவில் நடை அடைக்கப்படும். பின்,சபரிமலை கோவில் சாவி சபரிமலை பந்தள மன்னர் பிரதிநிதியிடம் வழங்கப்படும். அவர் வழக்கம்போல் அடுத்து வரும் மாசி மாத பூஜைக்கு சபரிமலை நடை திறக்க சாவியை மேல் சாந்தியிடம் ஒப்படைத்து, தங்க திருவாபரணங்களுடன் பந்தளத்திற்கு திரும்பிச் செல்வார்.

காசி தமிழ் சங்கமம் 3.0; நீங்களும் விண்ணப்பிக்கலாமே!

kashi tamil sangamam - 2026

காசி தமிழ் சங்கமம் 3.0 பிப்ரவரி 14 முதல் நடக்கிறது.   காசி, ப்ரயாக்ராஜ், அயோத்தி இந்த 3 ஊர்களுக்கும் இலவசமாக சென்று வரலாம். இந்த லிங்கில் பதிவு செய்யவும். 

https://kashitamil.iitm.ac.in/registration

சென்ட்ரல் / பெரம்பூரில் ரயில் ஏறுவது முதல் மீண்டும் சென்னை வந்து சேருவது வரை, மத்திய கல்வித்துறை அமைச்சகம் பார்த்துக் கொள்ளும்.  மனம் நிறைய சுவாமி தரிசனம் செய்யலாம். 

ரயில் பயணம் போக 2 நாட்கள், அங்கு 4 நாட்கள், திரும்ப ரயில் 2 நாட்கள், மொத்தம் 8 நாட்கள் – உணவு, நட்சத்திர ஓட்டலில் தங்குமிடம், உள்ளூர் பயணம், தரிசனம் எல்லாமே பிரத்யேக ஏற்பாடு உண்டு.  பாதுகாப்பிற்கு போலீசும் உடன் வரும்.

நாமாக கடைகளில் ஏதாவது வாங்க விரும்பினால்  அந்த செலவு மட்டுமே.  தமிழ் தெரிந்த கைடுகள் நம்முடன் வருவார்கள். அரசு உயரதிகாரிகளும் உடன் இருப்பார்கள் . 

இந்த முறை விசேஷமாக கும்பமேளா நேரத்தில் திரிவேணி சங்கமத்தில் நீராடும் வாய்ப்பு உள்ளது. கூட்டத்தில் முட்டி மோதாமல், மிக நெருங்கி சென்று செய்ய ஏற்பாடு இருக்கும். காசி விஸ்வநாதர் கோவில் மற்றும் அயோத்தி ராமர் தரிசனமும் உண்டு.

விருப்பமுள்ளவர்கள் பதிவு செய்யவும். குலுக்கல் முறையில் பயனாளிகள் தேர்வு செய்யப்படுவார்கள்.  நாம் எந்த செலவும் செய்ய வேண்டியதில்லை, எல்லாம் மத்திய அரசே பார்த்துக் கொள்கிறது.  சுருக்கமாக சொன்னால் பாக்கெட்டில் 500 ரூபாய் பணத்துடன் கூட ரயில் ஏறலாம்.

விளையாட்டாக விண்ணப்பம் செய்வதை தடுக்க 2 விஷயங்கள் மட்டும் உள்ளன. 

குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்பட்டால்,  1500 ரூபாய் டெபாசிட் மட்டும் புறப்படுவதற்கு 2 நாட்கள் முன்பு ஆன்லனில் கட்ட வேண்டும், அந்த பணமும் நாம் சென்னை வருவதற்குள் நம் கணக்கிற்கு வந்துவிடும். 

சென்ற ஆண்டு வரை வினாடி வினா இல்லை, இந்த ஆண்டு புதிதாக கொண்டு வந்துள்ளார்கள். 

காசி மற்றும் ஆன்மீகம் பற்றிய சில கேள்விகள் ஆன்லைனில் இருக்கும், அதற்கு விடையளிக்க வேண்டும். அதற்கு வழிகாட்டும் புத்தகம் உள்ளது.

Thamizhar Marabil Kashi – Book

அந்த 8 பெட்டி வந்தே பாரத் ரயிலை ‘இங்கே’ இயக்கலாமே!

chennai nellai vandebharat express - 2026

நெல்லை- சென்னை-நெல்லை வந்தே பாரத் ரயில்.. இன்று முதல் 16 பெட்டிகளுடன் இயங்குகிறது‌.திருவனந்தபுரம்-காசர்கோடு வந்தே பாரத் ரயிலுக்கு அமோக வரவேற்பு கிடைத்து வரும் நிலையில் இந்த ரயில் கடந்த 10ஆம் தேதி முதல் புத்தம் புது அதிநவின 20பெட்டிகளுடன் இயக்கப்படுகிறது.இந்த வழித்தடத்தில் 16பெட்டிகளுடன் இயங்கிய வந்தே பாரத் ரயிலே நெல்லை சென்னை இடையே16 பெட்டிகளுடன். இயக்கப்படுகிறது.

இந்தநிலையில் நெல்லை சென்னை இடையே 8கோச்சுகளுடன் இயங்கி வந்த வந்தே பாரத் ரயிலை செங்கோட்டை -தாம்பரம் அல்லது செங்கோட்டை- கோவை இடையே இயக்க பயணிகள் வலியுறுத்தி வருகின்றனர்.

திருநெல்வேலி – சென்னை வந்தே பாரத் ரயிலின் சேவைக்கான வரவேற்பு பயணிகளிடமிருந்து ஏராளமாக கிடைத்து வரும்நிலையில், இன்று முதல் திருநெல்வேலி -சென்னை எழும்பூர் – திருநெல்வேல் இடையே இயக்கப்படும் வந்தே பாரத் ரயிலை 16 பெட்டிகளுடன் இயக்கப்படுவதாக அறிவிப்பு வெளியாகியிருக்கிறது. இது தென்மாவட்ட மக்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியை தந்து வருகிறது.

தென் மாவட்டங்களில் இருந்து சென்னைக்கு, வந்தே பாரத் ரயில் சேவை தொடங்கி, சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இந்த ரயில் நெல்லையிலிருந்து இருந்து காலை 6:05 மணிக்கு திருநெல்வேலியில் இருந்து புறப்படும் ரயில் 7:50க்கு மதுரை, 9:45க்கு திருச்சி வழியாக மதியம் 1:55 மணிக்கு எழும்பூர் செல்கிறது

அதேபோல, மறுமார்க்கத்தில் மதியம்2:45 மணிக்கு புறப்படும் ரயில் மாலை 6:35க்கு திருச்சி, இரவு 8:20க்கு மதுரை வழியாக இரவு 10:30 மணிக்கு திருநெல்வேலி செல்கிறது. இந்த ரயிலில் 7 AC சேர் கார் பெட்டிகளும், ஒரு எக்ஸிகியூட்டிவ் சேர்கார் பெட்டியும் என மொத்தம் 8 பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ளன.

வாரத்தில் செவ்வாய் தவிர மற்ற நாட்களில் இந்த ரயில் இயக்கப்பட்டு வருகிறது. 650 கி.மீ. தூரத்தை 7 மணி நேரம் மற்றும் 50 நிமிடங்களில் இந்த ரயில் கடப்பதாலும், மற்ற ஊர்களுக்கும் செல்ல நேரம் ஒத்துப்போவதாலும், பயணிகளின் பேராதரவை இந்த ரயில் சேவை பெற்று வருகிறது.

அதனால்தான், இந்த ரயிலில், வெயிட்டிங் லிஸ்ட் மட்டும் 100க்கும் மேல் எப்போதுமே உள்ளது. பயணிகள் இந்த ரயிலின் சேவையை அதிகப்படுத்த வேண்டும் என்று எதிர்பார்த்தனர்.. கூடுதல் ரயிலை இயக்குவதைவி, இப்போதுள்ள 8 பெட்டிகளுக்கு பதிலாக 16 பெட்டிகளை இணைத்தால், மிகவும் வசதியாக இருக்கும் என்றும் கோரிக்கை விடுத்தபடி இருந்தனர்.

அதேபோல, திருநெல்வேலி – சென்னை எழும்பூர் வந்தே பாரத் ரயிலை 16 பெட்டிகளுடன் இயக்க வேண்டும் என்று என தென்னக ரயில்வே பயணிகள் சங்கப் பொதுச் செயலாளர் பத்மநாதனும் வலியுறுத்தி, ரயில்வே கூடுதல் பொது மேலாளர் கவுஷல் கிஷோரிடம் இதுகுறித்த வேண்டுகோளையும் எழுப்பியிருந்தார்.

 16 பெட்டிகளை இணைப்பதால், மக்கள் பலனடைவார்கள் என்பதுடன், ரயில்வே துறைக்கும் கூடுதல் வருமானம் கிடைக்கும் என்றும், மற்ற ரயில்களில் இடம் கிடைக்காதவர்கள் சென்னை செல்ல இந்த ரயிலை பயன்படுத்த முன்வருவார்கள்” என்றும் பத்மநாதன் கூறியிருந்தார்.

இந்நிலையில், பயணிகளின் கோரிக்கை ஏற்கப்பட்டுள்ளது.. அதன்படி இன்று அதாவது 15ம் தேதி முதல் பெட்டிகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டு, புதுப்பொலிவுடன் வந்தே பாரத் இயக்கப்பட உள்ளது.

 தென்மாவட்ட பயணிகளுக்கு பொங்கல் பரிசாக 16 பெட்டிகளோடு வந்தே பாரத் இயக்கப்படும் நிலையில், அதற்கான முன்பதிவுகளும் முன்கூட்டியே ஆரம்பமாகிவிட்டன. நாளை மறுநாள் 17ம் தேதி காலையில் சென்னைக்கு செல்வோர் மற்றும் 19ம் தேதி ஞாயிற்றுகிழமை சென்னைக்கு செல்ல, ரிசர்வேஷன்களும் நடந்து முடிந்துள்ளன..

நெல்லை வந்தே பாரத் எக்ஸ்பிரஸில் பெட்டிகளின் எண்ணிக்கையை அதிகப்படுத்தியிருப்பது, பயணிகளுக்கு பெரிதும் உதவிகரமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நெல்லை- சென்னை-நெல்லை வந்தே பாரத் ரயில்.. இன்று முதல் 16 பெட்டிகளுடன் இயங்குகிறது‌.திருவனந்தபுரம்-காசர்கோடு வந்தே பாரத் ரயிலுக்கு அமோக வரவேற்பு கிடைத்து வரும் நிலையில் இந்த ரயில் கடந்த 10ஆம் தேதி முதல் புத்தம் புது அதிநவின 20பெட்டிகளுடன் இயக்கப்படுகிறது.இந்த வழித்தடத்தில் 16பெட்டிகளுடன் இயங்கிய வந்தே பாரத் ரயிலே நெல்லை சென்னை இடையே16 பெட்டிகளுடன். இயக்கப்படுகிறது.

இந்த நிலையில் நெல்லை சென்னை இடையே 8கோச்சுகளுடன் இயங்கி வந்த வந்தே பாரத் ரயிலை செங்கோட்டை -தாம்பரம் அல்லது செங்கோட்டை- கோவை இடையே ராஜபாளையம் விருதுநகர் மதுரை வழியாக இயக்க பயணிகள் வலியுறுத்தி வருகின்றனர்.

இந்த வழியாக இயங்கும் பொதிகை சிலம்பு கொல்லம் சென்னை ரயில்களில் எப்போதும் கூட்டம் கூட்டமாக பயணிகள் உட்கார கூட இடமின்றி பயணிக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

பொங்கலை பொங்கல் திருநாளாகவே கொண்டாட விடுங்களேன்!

pongal - 2026

திருவள்ளுவர் தினம் என்று இன்று தமிழக அரசு சார்பில் கொண்டாடுகிறார்கள். ஆனால் உண்மையான திருவள்ளுவர் பிறந்த தினத்தை வைகாசி அனுஷம் என்று குறிப்பிட்டுள்ளதன் பேரில் வள்ளுவ அன்பர்கள் அன்று மரபாகக் கொண்டாடிக் கொள்கிறார்கள். வள்ளுவ நாயனார் என்று  போற்றப்படுவதால் சைவம் அவருக்கு கோயில் எடுத்து அபிஷேக ஆராதனைகள் செய்து வைகாசி அனுஷத்தை சிறப்பாக்குகிறது. நிற்க.

பொங்கல் திருநாள் என்பது மகர சங்கராந்தி எனப்படும் சூரியனின் பாதை மாற்றத்தை குறிப்பிடும் நாளன்று செய்யப்படும் பூஜைக்குரிய திருநாள்.  ஆதிகாலம் தொட்டு தமிழர்கள் ஆகிய இந்துக்கள்  நிலங்களையும்  நிலத்துக்கென தெய்வங்களையும்  மரங்கள் ஆறுகள்  மலைகள் உள்ளிட்ட இயற்கையையும்  தெய்வாம்சமாகப் பார்த்து வணங்கிய  செய்திகள், தொல்காப்பியம் தொட்டு உண்டு.  அன்று பகலவனை பகவானெனப் போற்றி வழிபடும் தொன்ம மரபு நம் முன்னோரின் மரபு. இது நாடு முழுதுமே ஒவ்வொரு பெயரில் இருந்தாலும் அண்மைக்காலமாக தமிழர் திருநாள் என்று அடையாளப்படுத்தப்பட்டு வழிபாட்டைச் சிதைக்கும் போக்கு மேலோங்கி நிற்கிறது. இதை ஆன்ம உணர்வுள்ள ஹிந்துக்கள் புரிந்து கொள்ள வேண்டும். 

செருப்பைப் போட்டுக் கொண்டு, நெருப்பில்லா புகையில்லா அடுப்பில், விருப்பில்லா வேற்று மதப் பெண்களை வைத்து, இருப்பில்லா திராவிடத்தை அரசின் கொள்கையெனக் காட்டும் முகமாக, சினிமாவால் சினிமாவில் வளர்ந்த நாடகத்தன திராவிடம் காட்டும் படப்பிடிப்புகளை, தெய்வாம்சம் பொருந்திய பொங்கல் நாளில் வைத்துக் கொள்வது, நம் பாரம்பரியத்தை சிதறடிக்கும் இன அழிப்பு, மரபு ஒழிப்புச் செயல்களே! 

இதற்கு பின்னணியில் குரல் கொடுக்கும் வேற்று மத அரசியல் அமைப்புகள், இந்நாளை தமிழர் திருநாளெனக் கொண்டாடும் போது, ஒரே இறைக் கொள்கை கொண்ட எங்களுக்கு மனம் புண்படுகிறது எனவே சூரிய வழிபாட்டைத் தவிர்த்து இப் பொங்கல் கொண்டாடப்பட வேண்டும் என கோருவது, தமிழராகிய ஹிந்துக்களின் மரபை ஒழிக்கும் உள்நோக்க வேலையே! 

எனவே… திராவிடக் கொள்கையைத் தூக்கிப் பிடிக்கும் அரசுகள் இந்தப் பொங்கல் திருநாளை மக்கள் அவர்கள் மரபுப் படி கொண்டாடிக் கொள்ள விட்டுவிட்டு, அரசின் சார்பில் வேறொரு நாளை – அது ஈவேரா நாயக்கர், அண்ணாதுரை, கருணாநிதி பிறந்தநாள்களில் அல்லது மறைந்த நாள்களில் கூட வைத்துக் கொள்ளட்டும் – தேர்ந்தெடுத்து, பொங்கல் வைத்து, ஷூட்டிங் நடத்தி, சமத்துவப் பொங்கலாய்க் கொண்டாடிக் கொள்ளட்டும்! நமக்கு மறுப்பேதுமில்லை!  

காரணம்…

ஹிந்துக்களின் பாரம்பரிய வழிபாட்டு முறைகளைத் திருடும் கிறிஸ்துவம் – கோயிலில் கொடிமரம் போல் சர்ச்சுகளில் வைத்து… ஹிந்துக்களின் ஆன்மிகத் திருவிழாக்கள் போல்… அனைத்தையும் பிரதி எடுத்து அவற்றில் தெய்வங்களையும் கதைகளையும் மட்டும் மற்றி…  ஹிந்துக்களின் தனித்துவத்தை திட்டமிட்டு அழிப்பது போல்… 

ஹிந்துக்களின் பாரம்பரிய விழாக்களை திட்டமிட்டு அழிக்கும் கிறிஸ்துவ இசுலாமிய திராவிடம் – தமிழர் திருநாள் என்று வேறு ஒரு நாளை தேர்ந்தெடுத்துக் கொண்டாடட்டும்! அன்று ஆன்மிக உணர்வுள்ள ஹிந்து எவரையேனும் பொங்கல் கிண்ட கரண்டி பிடிக்க அழைத்தாலும், அவர் செருப்பை கழற்றி வைத்து நெற்றியில் திலகம் / நீறணிந்து வருவார்! வரவேற்போம்!

எதற்காக மகர சங்கராந்தி எனும் சூரிய வழிபாட்டுப் பொங்கல் திருநாளில் நீங்கள் கை வைக்கிறீர்கள்? 

மேற்படி தமிழின அழிப்பு, மரபொழிப்பு செயல்திட்டத்தில் தானே! 

#பாசிஸ_திராவிடம்

ஆட்சியின் அவலத்தைச் சரி செய்யாமல், அப்பாவி மக்களைத் துரத்துவது ஏன்?

annamalai bjp tn leader - 2026

“முதலமைச்சர் ஸ்டாலின், தங்கள் ஆட்சியின் அவலத்தைச் சரி செய்யாமல், அப்பாவி பொதுமக்களைத் துரத்துவது ஏன்? என்று கேள்வி எழுப்பியுள்ள தமிழக பாஜக., தலைவர் அண்ணாமலை, இருவேல்பட்டு கிராம மக்கள் மீதான அடக்குமுறை நடவடிக்கையைக் கைவிட வேண்டும் என்று கோரியிருக்கிறார். இது குறித்து தமது சமூகத் தளப் பக்கத்தில் பதிவு செய்திருப்பதாவது…

மெட்ரோ தூணில் ஒட்டப்பட்ட முதலமைச்சர் ஸ்டாலின் போஸ்டர் மீது செருப்பால் அடித்த வயதான தாயார் ஒருவரைத் தேடி அலைந்தார்கள். தற்போது, அமைச்சர் பொன்முடி மீது சேற்றை வீசிய பொதுமக்களைத் தேடி அலைகிறார்கள். திமுக ஆட்சி நடக்கும் லட்சணத்திற்கு, இனி இதுவே முழு நேர வேலையாக இருக்கும் எனத் தெரிகிறது.

கடந்த டிசம்பர் மாதம் விழுப்புரம் மாவட்டம் இருவேல்பட்டு கிராமத்தில், ஃபெஞ்சல் புயல் பாதிப்புகளைப் பார்வையிடச் சென்ற அமைச்சர் பொன்முடி, காரில் இருந்து இறங்காமல், பாதிப்பு குறித்து விசாரித்ததால், அவர் மீது சேறு வீசப்பட்டிருக்கிறது.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பொதுமக்கள், தங்களுக்கு உரிய நிவாரணம் கிடைக்காததால் ஏற்பட்ட ஆதங்கத்தாலும், இயலாமையினாலும் நடைபெற்ற நிகழ்வே தவிர, தனிப்பட்ட காரணங்களுக்காக அல்ல. இதனைப் பெருந்தன்மையாக விட்டு விடுவதாக அமைச்சர் பொன்முடி அப்போது கூறிவிட்டு, தற்போது, அந்தக் கிராம மக்கள் மீது காவல்துறையை ஏவி விட்டு வெறியாட்டம் நடத்திக் கொண்டிருக்கிறார்கள். விசாரணை என்ற பெயரில், கிராம மக்களைக் காவல் நிலையம் அழைத்துத் துன்புறுத்துவதை எதிர்த்து ஆர்ப்பாட்டம் நடத்திய பெண்கள் உட்பட அனைவரையும் பலவந்தமாகக் கைது செய்திருக்கிறார்கள்.

காவல்துறை ஆய்வாளர் ஒருவர், ஒரு சகோதரியின் கைகளைப் பிடித்து இழுக்கும் காணொளியைக் காண நேர்ந்தது. இது பெண்களைக் கைது செய்யும்போது, மகளிர் காவலர்கள் இருக்க வேண்டும் என்ற அடிப்படை வரைமுறையை முற்றிலும் மீறியிருப்பதாகும்.

புயல் பாதிப்பினால் பெரிதும் பாதிக்கப்பட்ட மக்கள், இன்னும் முழுமையாக மீண்டெழவில்லை. திமுக அரசு புயல் பாதிப்புகளைச் சரியாகக் கணிக்கத் தவறியதோடு, மிகவும் மெத்தனப் போக்கில் நிவாரணப் பணிகளை மேற்கொண்டதைத் தமிழக மக்கள் அறிவார்கள். நான்கு பேரை வைத்து சினிமா ஷூட்டிங் நடத்தி, நல்லாட்சி நடக்கிறது என்று தங்களைத் தாங்களே ஏமாற்றிக் கொண்டிருக்கும் முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையிலான அமைச்சர்களுக்கு, பொதுமக்களிடையே இருக்கும் எதிர்ப்பை எதிர்கொள்ள முடியாமல், பொதுமக்கள் மீது அதிகார வன்முறையைப் பிரயோகிக்கிறார்கள்.

முதலமைச்சர் ஸ்டாலின், தங்கள் ஆட்சியின் அவலத்தைச் சரி செய்யாமல், அப்பாவி பொதுமக்களைத் துரத்துவது ஏன்? திமுக அரசு, இந்த உளுத்துப் போன காரணங்களைச் சொல்லி பொதுமக்களைப் பழிவாங்குவதை நிறுத்தி விட்டு, ஃபெஞ்சல் புயல் நிவாரணப் பணிகள், பாதிக்கப்பட்ட மக்கள் அனைவருக்கும் கிடைத்திருக்கிறதா என்பதை உறுதி செய்யும் பணிகளில் உடனடியாக கவனத்தைச் செலுத்த வேண்டும் என்றும், இருவேல்பட்டு கிராம மக்கள் மீதான நடவடிக்கைகளை உடனடியாகக் கைவிட வேண்டும் என்றும் வலியுறுத்துகிறேன்.

https://twitter.com/annamalai_k/status/1879120922298519921

சபரிமலை மகரஜோதி; ஒன்றரை லட்சம் பக்தர்கள் தரிசனம்!

sabarimalai makara jodhi - 2026
  • சபரிமலை ஐயப்பன் கோயிலில் மகர ஜோதி தரிசனம்; பக்தர்கள் பரவச முழக்கம்.
  • பந்தள மகாராஜா வழங்கிய தங்க ஆபரணங்கள், ஐயப்பனுக்கு அணிவிக்கப்பட்டு தீபாராதனை.
  • அரச கோளத்தில் ஜொலிக்கும் ஐயப்பனுக்கு மகா தீபாராதனை; பக்தர்கள் பரவசம்.

உலக பிரசித்தி பெற்ற கேரள மாநிலம் சபரிமலை ஐயப்பன் கோயிலில் பக்தர்கள் சரண கோஷம் முழங்க ஐயப்பனுக்கு திருபாவரணம் அணிவிக்கப்பட்டு, பூஜைகள் சிறப்பாக செய்யப்பட, எதிரே பொன்னம்பல மேட்டில் ஜோதி தரிசனம் தெரிந்தது. சுமார் ஒன்றரை லட்சம் பக்தர்கள் ஜோதி தரிசனம் கண்டு பக்திப் பரவசம் அடைந்தனர்.

சபரிமலை ஐயப்பன் கோயிலில் மகரவிளக்கு காலம் நிறைவு கட்டத்தை நெருங்கியது. இதையொட்டி மகர விளக்கு பெருவிழாவும், பொன்னம்பலமேட்டில் மகரஜோதி தரிசனமும் விமரிசையாக நடைபெற்றன.

பந்தளத்திலிருந்து புறப்பட்ட திருவாபரண பவனி இன்று மாலையில் சரங்குத்தி வந்தடைந்தது. அங்கு தேவசம் போர்டு அதிகாரிகளின் வரவேற்புக்கு பின் பெரிய நடை பந்தல் வழியாக சன்னிதானத்தை அடைந்தது.

தந்திரியும் மேல் சாந்தியும் திருவாபரண பெட்டியை வாங்கி நடை அடைத்து ஆபரணங்கள் அணிவித்து நடை திறந்து தீபாராதனை நடத்தினர்.

இந்த நேரத்தில் கோயில் நேர் எதிரே கிழக்கு பக்கத்தில் மகர நட்சத்திரம் ஒளிவிட்டு பிரகாசித்தது. இதை பக்தர்கள் சரண கோஷத்துடன் தரிசனம் செய்தனர். தொடர்ந்து பொன்னம்பலமேட்டில் மூன்று முறை ஜோதி காட்சி காட்சியளித்தது.

அப்போது சரண கோஷம் விண்ணை பிளக்க பக்தர்கள் மனமுருகி வழிபட்டனர். மகர ஜோதி தரிசனத்தில் லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.

இன்று முதல் பாரம்பரிய மளிகை புறம் மஞ்சமாதா கோயில் உற்சவம் துவங்கியது

முட்டாள்தனமான முதலாளித்துவம்!

mumbai stock exchange
#image_title

பத்மன்

“பூக்களில் இருந்து தேனீக்கள் தேனை உறிஞ்சுவதைப் போல மிக மென்மையாகவும், மகரந்தச் சேர்க்கைக்கு உதவுதல் என்பதைப் போல் வளத்தைப் பகிர்தல் என்ற உப பயன்பாட்டுக்காகவும் வரி வசூலிப்பு இருக்க வேண்டும்” என்று, ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பே அறிவுறுத்தியுள்ளார் பொருளாதார மாமேதை சாணக்கியர்.

ஆனால் அவர் பிறந்த நாட்டில் வாழும் எல் அண்ட் டி சேர்மன் எஸ்.என். சுப்ரமணியன் போன்ற முதலாளி வர்க்கத்தினருக்கு, முட்டைப்பூச்சியை விட மோசமாக தொழிலாளர் உழைப்புத்திறனை உறிஞ்ச வேண்டும் என்ற ஆவல் பிறந்திருப்பது ஆச்சரியத்தை அல்ல, “அடடா! விநாஸ காலே விபரீத புத்தி” என்ற அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. வாரத்துக்கு 90 மணி நேரம் தொழிலாளர்கள் உழைக்க வேண்டும் என்ற அவரது வாதம் விதண்டாவாதம் அல்ல, அதைவிட மோசமான வக்கிரவாதம்.

ஒருவேளை எங்களது லாபத்தில் இருந்து வசூலிக்கப்படும் வரிக்கு வேண்டுமானால் சாணக்கியரின் தேனீ உதாரணம் பொருந்தும். ஆனால் எங்களுக்குத் தேவையான தொழிலாளர் ரத்தத்தை உறிஞ்ச இது சரிவராது என்று அவரையொத்த முதலாளிகள் எல்லாம் கருதுகிறார்களோ?

அப்படியல்ல! ஆர்பிஜி சேர்மன் ஹர்ஷ் கோயங்கா, மஹிந்திரா குழுமத் தலைவர் ஆனந்த் மஹிந்திரா, பஜாஜ் ஆட்டோ நிர்வாக இயக்குநர் ராஜீவ் பஜாஜ் போன்றோர் இந்த மடத்தனமான யோசனையை மறுதலித்திருப்பது ஆறுதல் அளிக்கிறது.

எல் அண்ட் டி சேர்மன் சுப்ரமண்யன், தனது நிறுவன ஊழியர்களுடன் கலந்துரையாடியது தொடர்பாக, அண்மையில் சமூக வளைதலத்தில் வெளியான ஒரு வீடியோவே இத்தனைப் பரபரப்புக்கும் காரணம். அந்த வீடீயோவில், சனிக்கிழமையும் வேலை பார்க்க வேண்டுமா என்று ஒருவர் கேட்டதற்கு, ஞாயிற்றுக்கிழமையும் வேலை பார்க்கச் செய்ய முடியவில்லையே என்று வருத்தமாக இருக்கிறது என்று பதிலளித்துள்ளார் சுப்ரமண்யன்.

தொழிலாளர்கள் குறைந்தபட்சம் வாரத்துக்கு 90 மணி நேரம் வேலை பார்க்க வேண்டும் என்று திருவாய் மலர்ந்தருளிய அவர், “வீட்டில் உட்கார்ந்து கொண்டு மனைவியின் முகத்தையே எத்தனை மணி நேரம் பார்த்துக் கொண்டிருப்பது?” என்ற அற்புதமான கேள்வியையும் எழுப்பியுள்ளார்.

அவர் சொன்னபடி வாரத்துக்கு 90 மணி நேரம் வேலை பார்த்தால், வேலையைப் பார்த்துக்கொண்டுதான் இருக்க முடியுமே தவிர, ஒழுங்காகச் செய்ய முடியாது. ஞாயிற்றுக்கிழமை போக, வாரத்துக்கு 90 மணி நேரம் என்றால், தினசரி 15 மணி நேரம் அலுவலகத்திலோ தொழிற்சாலையிலோ உழைக்க வேண்டும். உடல் அசதியை, மன அழுத்தத்தைப் போக்கும் உறக்கத்துக்கு 6 முதல் 8 மணி நேரம் தேவை. குறைவான 6 மணி நேரத்தையே இதற்கென ஒதுக்கினாலும்கூட மீதி 3 மணி நேரம் மட்டுமே, குளிக்க, சாப்பிட, அலுவலகம் வந்துபோக ஆகியவற்றுக்குக் கிடைக்கும். தொலைவில் உள்ளவர்கள் அலுவலகமே கதி என்று தங்கிவிட வேண்டியதுதான்.

ஞாயிற்றுக்கிழமையும் வேலைக்கு வர வேண்டுமென்றால் தினசரி 13 மணி நேரத்துக்கும் மேல் உழைக்க வேண்டும். விடுப்புக்கு விடுப்புக் கொடுத்துவிட்டு, புதுவிதமான கொத்தடிமைத்தனத்துக்குள் புகுந்து கொள்ள வேண்டுமா?

அதுசரி, மனிதர்கள் உழைப்பதன், வேலை செய்வதன் அடிப்படை நோக்கம் என்பது யாரோ முதலாளிக்கு லாபம் சம்பாதித்துக் கொடுப்பதற்காகவா? அல்ல. தங்களது குடும்பத்தைக் காப்பாற்றுவதற்காக, கிடைக்கும் வருமானத்தைக் கண்டு குடும்பத்தினரோடு மகிழ்ச்சியுடன் வாழ்வதற்காக. அந்த வாழ்வியல் நோக்கத்தைக் காவு கொடுத்துவிட்டு எதற்காக உழைக்க வேண்டும்?

தற்காலத்தில் அதிக அளவில் பெண்களும் வேலைக்கு வந்து உழைப்புச் சக்தியை வழங்குகிறார்கள் என்ற அடிப்படை அறிவுகூட இல்லாமல், எத்தனை மணி நேரத்துக்கு மனைவியின் முகத்தையே பார்த்துக் கொண்டிருப்பது என்ற கேள்வியை எழுப்பியுள்ளார் எல் அண்ட் டி சேர்மன்.

அதுசரி, சுரங்கங்கள், உலைகள், ஆலைகள் போன்ற இடங்களில், ஏற்கெனவே கடினமான உழைப்பைத் தருகின்ற தொழிலாளர்களின் பாதுகாப்புக்குத் தேவையான நடவடிக்கைகளை எத்தனை நிறுவனங்கள் எடுத்துள்ளன? எத்தனை நிறுவனங்களில் தொழிலாளர்களுக்கு ஏற்படும் பணிசார் நோய்கள், பிரச்சனைகளைத் தீர்ப்பதற்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது?

எத்தனை நிறுவனங்களில் உழைக்கும் மகளிரின் உரிமைகளையும், பாதுகாப்பையும் உறுதி செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப் படுகின்றன? இதுபோன்ற கேள்விகள் எல்லாம் எல் அண்ட் டி சேர்மன் போன்றோரின் நெஞ்சைச் சுடவில்லையா?

லாபத்தை மட்டுமே இலக்காகக் கொண்டு வாரத்துக்கு 90 மணி நேரம் வேலை செய்தால், உற்பத்தித் திறன் உருச்சிதைந்து போகாதா? “உள்ளதும் போச்சுடா நொள்ளைக்கண்ணா” என்று வருந்துவதற்கு அல்லவோ அது வழிவகுக்கும்? கசக்கிப் பிழியப்பட்ட கரும்புச் சக்கையில் இருந்தா சாறு கிடைக்கும்? மனிதன் என்ன மெஷினா? இயந்திரங்கள்கூட குறிப்பிட்ட நேரத்துக்கு மேல் தொடர்ந்து இயங்கினால் கோளாறு ஆகுமே? உணர்வற்ற மெஷினுக்குக் கிடைக்கும் உபசரிப்புகூட உயிருள்ள, உணர்வுள்ள மனிதனுக்குக் கிடையாதா?

மனிதர்கள் பிறப்பெடுத்ததே யாருக்கோ பணிசெய்து கிடப்பதற்காகவா? வாழ்வியலின் மற்ற அம்சங்கள் என்னாவது? படிப்பது, விளையாடுவது, நண்பர்களுடன் கலந்துரையாடுவது, கலை- கேளிக்கைகளில் களிப்பது போன்ற புத்துணர்வு அம்சங்கள் எல்லாம் பொசுங்கிப் போய்விட்டால், தொடர்ந்து உழைப்பதுதான் எவ்வாறு சாத்தியம்?

மனிதர்கள் எல்லோரும் ஓய்வின்றி, விடுமுறையின்றி உழைக்கும் ‘உயிருள்ள பொம்மைகள்’ ஆகிவிட்டால், நாடே மனநோயாளிகளின் கூடாரமாக மாறிவிடதா? ஒவ்வொரு மனிதரும் பணிச்சுமை மற்றும் தனிப்பட்ட வாழ்க்கை ஆகியவற்றுக்கு இடையேயான சமநிலையைப் பராமரிப்பது தவிர்க்க இயலாத அத்தியாவசியமல்லவா?

உழைப்பை உறிஞ்சுவதற்கு ஓர் வரையறை இல்லையா? தானாக விரும்பிக் கொடுத்தால் தானம், தியாகம். வன்மையாகப் பிடுங்கினால் அது கொள்ளை, கொடூரம்.

பசுவுக்குப் பால் சுரப்பது, வேறு யாரோ பருகுவதற்காக அல்ல, அதன் கன்றுக்குட்டிப் பசியாற. அதனால்தான் கன்றுக்குட்டியை முதலில் சிறிது பால் அருந்த விட்டுவிட்டு, பால் கறக்கிறார்கள். தனது கன்றுக்குட்டி இல்லையென்றால் பசுவுக்குப் பால் சுரப்பது நின்றுவிடும். ஆகையால்தான் செத்துப்போன கன்றுக்குட்டியின் தோலில் வைக்கோலைத் திணித்து, வைக்கோல் கன்றுக்குட்டியைத் தாய்ப் பசுவின் கண்களில் காட்டி ஏமாற்றி, பால் கரக்கிறார்கள். அப்படியிருக்க, ஓர் தொழிலாளி குடும்பத்தாரையே எத்தனை மணி நேரம் பார்த்துக்கொண்டிருப்பது என்று எல் அண்ட் டி சேர்மன் எழுப்பியிருக்கும் கேள்வி, மகா குரூரம் மட்டுல்ல, அடிப்படை அறிவோ, இரக்க உணர்வோ இல்லாத அடிமுட்டாள்தனம்!

ஒவ்வோர் ஆண்டும் பொங்கல் கொண்டாடுகிறோம். பொங்கல் திருநாளுக்கு அடுத்த மாட்டுப் பொங்கல் தினத்தன்று, அனைத்து விவசாயிகளும் தங்களது உழவுக்கு உதவிய மாடுகளைக் கடவுளாக பாவித்து வணங்குகிறார்கள், மரியாதை செலுத்துகிறார்கள்.

இவ்விதம் நன்றி பாராட்டுவது நம் பாரம்பரியம். முதலாளிமார்களே, உங்களுக்குத் தொழிலாளிகளே அத்தகைய தெய்வம். அவர்களுக்கு நல்லது செய்ய முடியாவிட்டாலும் அல்லது செய்யாமல் இருங்கள்! 

🪷 பத்மன்

பிரதமர், ஆளுநர் தமிழில் பொங்கல் வாழ்த்து!

pongal greetings from pm modi ji - 2026

தமிழகத்தில் நாளை கொண்டாடப்படவுள்ள மகர சங்கராந்தி, தைப்பொங்கல் பண்டிகை தொடர்பில், பிரதமர் நரேந்திர மோடி, தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, மத்திய இணையமைச்சர் எல்.முருகன் உள்ளிட்டோர் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனர்.

பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்ட பொங்கல் செய்தி:

எனது அமைச்சரவை சகாவான திரு ஜி கிஷன் ரெட்டி அவர்களின் இல்லத்தில் நடைபெற்ற சங்கராந்தி மற்றும் பொங்கல் பண்டிகை கொண்டாட்டங்களில் பங்கேற்றேன். மிகச்சிறந்த கலாச்சார நிகழ்வையும் கண்டுகளித்தேன். இந்தியா முழுவதும் உள்ள மக்கள் சங்கராந்தியையும், பொங்கல் பண்டிகையையும் மிகுந்த உற்சாகத்துடன் கொண்டாடுகின்றனர்.

நமது கலாச்சாரத்தின் வேளாண் பாரம்பரியத்தில் ஆழமாக வேரூன்றியுள்ள ஏராளமானதும், புதுப்பிக்கத்தக்கதுமான நன்றியின் கொண்டாட்டமாக இது விளங்குகிறது. சங்கராந்திக்கும், பொங்கல் பண்டிகைக்கும் எனது நல்வாழ்த்துகள். வரவிருக்கும் அறுவடை பருவத்தில் அனைவருக்கும் மகிழ்ச்சியும், நல்ல ஆரோக்கியமும், வளமும் கிடைக்க வாழ்த்துகிறேன்.

ஆளுநர் ரவீந்த்ர நாராயண் ரவி வெளியிட்ட வாழ்த்து செய்தி:

இந்த பொங்கல் திருநாளில், அனைவருக்கும், குறிப்பாக உலகெங்கிலும் உள்ள தமிழ் சகோதரிகள் மற்றும் சகோதரர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள். நாம் அறுவடையை கொண்டாடி, பூமித்தாயின் அளவற்ற ஆசீர்வாதங்களுக்காக மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். பழங்கால மரபுகளில் வேரூன்றி, உற்சாகத்துடன் கொண்டாடப்படும் பொங்கல் பண்டிகை, நமது வளமான ஆன்மிக மற்றும் கலாசார பாரம்பரியத்தை பிரதிபலிப்பதுடன், பகிரப்பட்ட மதிப்புகள் மற்றும் பழக்கவழக்கங்களைப் பேணும் பக்தியில் நம்மை ஒன்றிணைக்கிறது. பொங்கல் உணர்வு அமைதி, நல்லிணக்கம் மற்றும் வளத்தை ஊக்குவிக்கட்டும், மகிழ்ச்சி, நல்ல ஆரோக்கியம் மற்றும் வெற்றியால் நம் வாழ்க்கையை வளப்படுத்தட்டும்.

மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் வெளியிட்ட பொங்கல் செய்தி:

“தைத் திங்கள் பிறக்கட்டும், நம்மை சூழ்ந்துள்ள இருள் விலகட்டும்!”

தமிழகத்தின் எழுச்சிமிக்க கலாச்சார அடையாளமாக திகழும் பொங்கலை கொண்டாடும் உலகெங்கும் உள்ள அனைத்து தமிழ் சொந்தங்களுக்கும் எனது மனமார்ந்த பொங்கல் திருநாள் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

“சுழன்றும்ஏர்ப் பின்னது உலகம் அதனால்
உழந்தும் உழவே தலை” — என்றான் வள்ளுவன். பல தொழில் செய்து சுழலும் இவ்வுலகத்தில் ஏர்ப்பிடிக்கும் தொழிலை பின்பற்றி தான் உலகம் சுற்ற வேண்டியிருக்கிறது என்பது வள்ளுவன் வாக்கு.

விவசாயம் செய்து வாழும் நம் மக்கள் பயிர்களை அறுவடை செய்யும் காலத்தில் இயற்கைக்கு நன்றி செலுத்தும் விதமாக பொங்கலிட்டு வழிபடுகின்றனர். உழவுத் தொழிலுக்கு உறுதுணையாக விளங்கும் கால்நடைகளுக்கு நன்றி கூறும் விழாவாகவும் பொங்கல் திகழ்கிறது.

போகிப் பண்டிகை தொடங்கி, தைப் பொங்கல், மாட்டுப் பொங்கல், உழவர் திருநாள் என நான்கு நாட்கள் பொங்கல் திருநாளை மக்கள் ஒவ்வொரு ஆண்டும் விமரிசையாகக் கொண்டாடி மகிழ்கின்றனர்.

இயற்கையை போற்றி வணங்கும் நமது பாரத நாட்டின் கலாச்சார பெருமைமிகு பண்டிகையான பொங்கல் தினத்தை, வழக்கம்போல் இந்த ஆண்டும் உற்சாகமாக நாம் அனைவரும் கொண்டாடிக் கொண்டிருக்கிறோம்.

தைப்பிறந்தால் வழி பிறக்கும் என்பது நமது நம்பிக்கை. கல்வி, தொழில், வணிகம் என அனைத்து துறைகளிலும் புதிய வழிகளை தைத் திருநாள் நமக்கு உருவாக்கித் தரும் என நம்புகிறேன். இந்த தைத் திங்கள் நாளில் நாட்டில் நலம், வளம், அமைதி, மகிழ்ச்சி, சகோதரத்துவம் செழிக்க வேண்டும்.

தமிழகத்தில் கடந்த மூன்றரை ஆண்டுகளாக போலி திராவிட மாடல் ஆட்சியில் மக்கள் படும் கஷ்டங்கள் சொல்லி மாளாது. பெண்கள், இளைஞர்கள், விவசாயிகள், வர்த்தகர்கள், ஏழை எளிய மக்கள் என ஒவ்வொருவரும் அனுபவிக்கும் துயரங்கள் ஏராளம். பொங்கல் பண்டிகையை மக்கள் சிரமமின்றி கொண்டாட ஆண்டுதோறும் வழங்கும் பொங்கல் பரிசு பணத்தை கூட இந்த ஆண்டு திமுக அரசு வழங்க மறுத்துள்ளது. பொங்கல் பண்டிகையை கொண்டாட பணமின்றி தவிக்கும் மக்கள் ரேஷன் கடைக்கு சென்று வாடிய முகத்துடன் திரும்பி வரும் காட்சிகள் ஊடகங்களில் வெளியாகி நமது உள்ளத்தை உலுக்குகின்றன.

வெற்று விளம்பரங்களுக்கு பணத்தை வாரியிறைத்து வீண் செலவு செய்யும் திமுக அரசுக்கு ஏழை எளிய மக்களை பற்றி கவலை இல்லை. யாருக்கும் பயனற்ற ஒரு குடும்ப ஆட்சிதான் தமிழகத்தில் நடந்து கொண்டிருக்கிறது. தமிழகத்தின் திறமை, தொழில், பொருளாதாரம், மனித வளம் அனைத்தும் வீணாகி வருகிறது. ஒரு கட்சியை சேர்ந்த, ஒரு சிலர் மட்டும் பணம் குவிப்பதற்காக நடக்கும் இந்த ஆட்சி, அடுத்தாண்டு நடைபெறும் சட்டமன்ற தேர்தலில் மக்களால் தூக்கி எறியப்படுவது உறுதி. தமிழகத்தை சூழ்ந்துள்ள தீய அரசியல் சக்தியை வீழ்த்தி தேசியத்தின் பாதையில் தமிழக மக்கள் அணிவகுத்து நிற்பார்கள்.

விரைவில் நல்லதொரு விடிவு காலம் பிறந்து தமிழகம் இழந்த பெருமைகளை எல்லாம் மீட்டெடுக்க பொங்கல் திருநாள் நமக்கு உத்வேகத்தை அளிக்கட்டும். அனைவரின் துயரங்களும் தீர வேண்டும். அனைவரும் எல்லா நலமும் வளமும் பெற்று வாழ வேண்டும். தைப்பொங்கல் திருநாள் எல்லா நன்மைகளையும் மக்களுக்கு வழங்கட்டும் என வேண்டி மக்கள் அனைவருக்கும் தை பொங்கல் வாழ்த்துக்களை மீண்டும் ஒருமுறை தெரிவித்துக் கொள்கிறேன்.

தேவகோட்டை பள்ளியில் தேசிய இளைஞர் தினம் போட்டிகள்!

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் தேசிய இளைஞர் தின விழாவினையொட்டி நடைபெற்ற ஓவியம் வரைதல் மற்றும் விவேகானந்தரின் பொன்மொழிகள் சொல்லுதல் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு தேவகோட்டை வட்டார கல்வி அலுவலர் லெட்சுமி தேவி தலைமை தாங்கி பரிசுகளை வழங்கினார்.பள்ளி தலைமை ஆசிரியர் லெ.சொக்கலிங்கம் முன்னிலை வகித்தார்

தேசிய இளைஞர் தினம்; விவேகானந்தரின் பொன் மொழிகளை பின்பற்றுங்கள் என்று, தேவகோட்டை வட்டார கல்வி அலுவலர் பேசினார். விவேகானந்தரின் பிறந்த நாளான தேசிய இளைஞர் தினத்தில், விவேகானந்தரின் பொன்மொழிகள் ஒப்புவித்தல், ஓவியப் போட்டிகள் ஆகியவை நடைபெற்றன.

தேவகோட்டை – சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் தேசிய இளைஞர் தின விழா நடைபெற்றது. ஆசிரியர் ஸ்ரீதர் வரவேற்றார். பள்ளி தலைமை ஆசிரியர் லெ.சொக்கலிங்கம் முன்னிலை வகித்தார் .

தேவகோட்டை வட்டார கல்வி அலுவலர் லெட்சுமி தேவி தலைமை தாங்கி போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கி பேசுகையில், மாணர்கள் விவேகானந்தர் கூறியவற்றை பின்பற்ற வேண்டும். அப்போதுதான் வாழ்க்கையில் வெற்றி பெற முடியும்.நல்ல விசயங்களை இளம் வயது முதலே வாழ்க்கையில் கற்று கொண்டு அதனை பின்பற்ற பழகி கொள்ள வேண்டும் என்றார்.

விழாவில் விவேகானந்தர் தொடர்பான ஓவிய போட்டியில் வெற்றி பெற்ற பிரணவி ,முகிலன், மாலினி , சாதனாஸ்ரீ ஆகியோர்க்கும், விவேகானந்தரின் பொன்மொழிகள் சொல்லுதல் போட்டியில் வெற்றி பெற்ற ரித்திகா,நந்தனா ஆகியோர்க்கும் பரிசுகள் பரிசுகள் வழங்கப்பட்டன.

மாணவ,மாணவியர் ஆர்வமுடன் விவேகானந்தர் பொன்மொழிகளை எடுத்துக்கூறினார்கள். மழலை மொழியில் மாணவர்கள் பேசியது அனைவரையும் ஆச்சரியப்படுத்தியது.நிறைவாக ஆசிரியை முத்துலெட்சுமி நன்றி கூறினார்.

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் தேசிய இளைஞர் தின விழாவினையொட்டி நடைபெற்ற ஓவியம் வரைதல் மற்றும் விவேகானந்தரின் பொன்மொழிகள் சொல்லுதல் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு தேவகோட்டை வட்டார கல்வி அலுவலர் லெட்சுமி தேவி தலைமை தாங்கி பரிசுகளை வழங்கினார்.பள்ளி தலைமை ஆசிரியர் லெ.சொக்கலிங்கம் முன்னிலை வகித்தார்

வீடியோ :

மதுரை கோயில்களில் திருவாதிரை ஆருத்ரா தரிசனம்!

margazhi thiruvadhirai - 2026

மதுரை.

மதுரை மாவட்ட கோயில்களில், திருவாதிரை யை முன்னிட்டு ஆருத்ரா தரிசனம் நடைபெற்றது.

மதுரை அருகே விசாக நட்சத்திர ஸ்தலமாக விளங்கும் பிரளயநாத சிவன் ஆலயத்தில், திருவாதிரை யை முன்னிட்டு, நடராசர், அம்பாள், மாணிக்க வாசகருக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.

இதையடுத்து சுவாமி, அம்பாள், மாணிக்க வாசகர் அலங்கரிக்கப்பட்டு, கோயில் பிரகாரத்தில் கோமாதா பூஜை நடைபெற்றது. ஏராளமான பெண்கள், பசுவை வலம் வந்து வழிபட்டனர். இதையடுத்து நடராஜர், சிவகாமி அம்மன், மாணிக்க வாசகர் முன்பாக திருவெம்பாவை பாராயணம் நடைபெற்றது.

இதில் கோயில் செயல் அலுவலர் ச. இளமதி, தொழிலதிபர் எம். வி. எம். மணி, கவுன்சிலர் வள்ளி மயில், கோயில் கணக்கர் சி. பூபதி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இதேபோல, திருவேடகம் ஏடகநாதர் சுவாமி, தென்கரை மூல நாதர், மதுரை அண்ணாநகர், தாசில்தார் நகர் செபாக் விநாயகர், சித்தி விநாயகர், மதுரை யாணைக்குழாய் முத்து மாரியம்மன் ஆலயம், வைகை காலனி வைகை விநாயகர் ஆலயத்தில் திருவாதிரை நடைபெற்றது.

மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயத்தில், ஆருத்ரா தரிசனத்தை முன்னிட்டு நடராசருக்கு சிறப்பு பூஜைகள் அதிகாலை நடைபெற்றது.