Home Blog Page 133

மதுரை கோயில்களில் திருவாதிரை ஆருத்ரா தரிசனம்!

margazhi thiruvadhirai - 2026

மதுரை.

மதுரை மாவட்ட கோயில்களில், திருவாதிரை யை முன்னிட்டு ஆருத்ரா தரிசனம் நடைபெற்றது.

மதுரை அருகே விசாக நட்சத்திர ஸ்தலமாக விளங்கும் பிரளயநாத சிவன் ஆலயத்தில், திருவாதிரை யை முன்னிட்டு, நடராசர், அம்பாள், மாணிக்க வாசகருக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.

இதையடுத்து சுவாமி, அம்பாள், மாணிக்க வாசகர் அலங்கரிக்கப்பட்டு, கோயில் பிரகாரத்தில் கோமாதா பூஜை நடைபெற்றது. ஏராளமான பெண்கள், பசுவை வலம் வந்து வழிபட்டனர். இதையடுத்து நடராஜர், சிவகாமி அம்மன், மாணிக்க வாசகர் முன்பாக திருவெம்பாவை பாராயணம் நடைபெற்றது.

இதில் கோயில் செயல் அலுவலர் ச. இளமதி, தொழிலதிபர் எம். வி. எம். மணி, கவுன்சிலர் வள்ளி மயில், கோயில் கணக்கர் சி. பூபதி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இதேபோல, திருவேடகம் ஏடகநாதர் சுவாமி, தென்கரை மூல நாதர், மதுரை அண்ணாநகர், தாசில்தார் நகர் செபாக் விநாயகர், சித்தி விநாயகர், மதுரை யாணைக்குழாய் முத்து மாரியம்மன் ஆலயம், வைகை காலனி வைகை விநாயகர் ஆலயத்தில் திருவாதிரை நடைபெற்றது.

மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயத்தில், ஆருத்ரா தரிசனத்தை முன்னிட்டு நடராசருக்கு சிறப்பு பூஜைகள் அதிகாலை நடைபெற்றது.

ஃபேன்ஸி ட்ரெஸ் காம்பெடிஷன்

pongal fancy dress competition - 2026

பொங்கல் ஃபேன்ஸி ட்ரெஸ் காம்பெடிஷன் –

***

பொங்கலுக்காக… கொத்து மஞ்சள் அறுவடை தீவிரம்!

manjal aruvadai turmeric for pongal - 2026

தை திருநாளை முன்னிட்டு மதுரை பாலமேடு பகுதியில் கொத்து மஞ்சள் அறுவடை தீவிரம்

தை திருநாளை முன்னிட்டு, மதுரை மாவட்டத்தின் ஒரு சில பகுதிகளில் கொத்து மஞ்சள் அறுவடை தீவிரமாக நடைபெற்று வருகிறது. மதுரை மாவட்டம், பாலமேடு அருகே அய்யூர் எர்ரம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் கொத்துமஞ்சள் அதிக அளவில் பயிரிடப்பட்டு தற்போது அறுவடை நடைபெற்று வருகிறது.

இது குறித்து, கொத்து மஞ்சள் அறுவடை செய்யும் விவசாயிகள் கூறுகையில்:
தைத்திருநாளை முன்னிட்டு , வருடம் தோறும் கொத்து மஞ்சள் நடவு செய்து மார்கழி 25ஆம் தேதிக்கு பிறகு அறுவடை நடைபெறும் தற்போது அறுவடை நடைபெற்று வருகிறது ஆடி மாசம் பயிரிடுவோம் ஒரு ஏக்கர் கொத்து மஞ்சள் பயிரிடுவதற்கு 45 ஆயிரம் செலவு செய்கிறோம் அறுவடை செய்த கொத்து மஞ்சள் ஏக்கர் ஒரு லட்சம் முதல் ஒன்னறை லட்சம் வரை விலை போகும் ஆகையால் , இதில் நல்ல லாபம் உள்ளது .

மதுரை மாவட்டத்தின் பல பகுதிகள் மற்றும் பாம்பே உள்ளிட்ட வெளி மாநிலங்களுக்கும் ஏற்றுமதி செய்கிறோம் மழை நேரங்களில் நோய் திரும்பத் தாக்கினால் மகசூல் குறையும் வாய்ப்பு உள்ளது அப்போது எதிர்பார்க்கும் லாபம் கிடைக்காது சென்ற ஆண்டை காட்டிலும் இந்த ஆண்டு கொத்து மஞ்சள் மகசூல் குறைவாகவே உள்ளது

பொங்கல் தொகுப்பில் கொத்து மஞ்சள் கொடுத்திருந்தால் விவசாயிகளுக்கு பயனுள்ளதாக இருக்கும்.

கரும்புடன் சேர்த்து கொத்து மஞ்சள் கொடுத்திருந்தால் மகிழ்ச்சியாக இருந்திருக்கும். ஒரு நேரம் மகசூல் அதிகம் கிடைக்கும் ஒரு நேரம் விளைச்சல் குறைவாக இருக்கும் நேரத்தில் நஷ்டம் ஏற்படும் பொங்கள் தொகுப்பில் கொத்துமஞ்சள் கொடுத்திருந்தால் நஷ்டத்தை சரி கட்டி இருப்போம்

மாட்டுப் பொங்கலை முன்னிட்டு வீட்டில் பொங்கல் வைக்கும் அனைவரும் கொத்து மஞ்சள் இல்லாமல் பொங்கல் வைக்க மாட்டார்கள் ஆகையால், பொங்கலுக்கு கொத்துமஞ்சள் மிகவும் அவசியமாக தேவைப்படுகிறது இவ்வாறு  கூறினார்.

பிரயாக்ராஜில் களைகட்டிய மகாகும்பமேளா; முதல் நாள் காலையிலேயே 60 லட்சம் பேர் புனித நீராடல்!

2025 kumbamela - 2026

மஹா கும்பமேளா முதல் நாள் காலை 8.00 மணிக்கே சுமார் 35 லட்சம் பக்தர்கள் திரிவேணி சங்கமத்தில் புனித நீராடியுள்ளனர். காலை 9.30 மணி அளவில் 60 லட்சம் பேர் புனித நீராடியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

உத்தரப் பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் நகரின் திரிவேணி சங்கமத்தில் இன்று மகா கும்பமேளா தொடங்கியது. இன்று காலையிலேயே சுமார் 60 லட்சம் பேர் திரிவேணி சங்கமத்தில் புனித நீராடினர். 

உத்தரப் பிரதேச மாநிலம், பிரயாக்ராஜ் நகரின் திரிவேணி சங்கமத்தில், மஹா கும்பமேளா இன்று கோலாகலமாகத் தொடங்கியது. இதை அடுத்து பிரயாக்ராஜ் நகரே விழாக்கோலம் பூண்டுள்ளது. இந்த மகாகும்பமேளா, ஜன.13ம் தேதி இன்று தொடங்கி பிப்.26 மஹாசிவராத்திரி நாள் வரை 44 நாட்களுக்கு நடைபெறுகிறது.

மஹாகும்பமேளாவின் சிறப்பு:

பொதுவாக 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை கும்பமேளா நடத்தப்படும். 144 ஆண்டுகளுக்கு ஒரு முறை குறிப்பிட்ட சில கிரகங்கள் நேர்கோட்டில் வரும்போது மகா கும்பமேளா நடக்கும். அத்தகைய சிறப்பு வாய்ந்த மகா கும்பமேளா 144 ஆண்டுகளுக்கு ஒருமுறை வரும் என்பதால், இன்று தொடங்கியுள்ள மஹாகும்பமேளாவுக்கு, வாழ்நாளில் ஒருமுறை தான் வரும் என்பதால் அதிக அளவிலான அன்பர்கள் சிரத்தையுடன் வந்து குவிந்துள்ளனர். 

உலகம் முழுவதும் இருந்து பல கோடி பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக 40 கோடி பேர் இந்த மகா கும்பமேளாவுக்கு வருவார்கள் என்று எதிர்பார்த்து, விழாவுக்கான சிறப்பு ஏற்பாடுகளை செய்துள்ளதாக உ.பி., முதல்வர் யோகி ஆதித்யநாத் குறிப்பிட்டிருந்தார். 

இந்த மகா கும்பமேளாவுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள், பக்தர்களுக்கான வசதிகளைச் செய்து கொடுத்தல் உள்ளிட்டவற்றை உத்தரப் பிரதேச அரசு தீவிரமாக செய்துள்ளது. தேசிய பேரிடர் மீட்புப் படை அதிகாரிகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையினை மேற்கொண்டுள்ளனர். 

திரிவேணி சங்கமத்தில், காலை 9.30 மணி வரை 60 லட்சம் பக்தர்கள் புனித நீராடி மகிழ்ந்தனர். இதனால் விழாக்கோலம் பூண்டுள்ளது.

பல்வேறு ஆன்மீக அம்சங்களுடன், கலாசார, சுற்றுலா விழாவாக கும்பமேளா திகழ்கிறது.  கும்பமேளா நடைபெறும் நாட்களில் பிரயாக்ராஜ் நகரின் திரிவேணி சங்கமத்தில் நீராடுவதை ஹிந்துக்கள் புனிதமாகக் கருதுகிறார்கள்.

கும்பமேளாவுக்கு வந்துள்ள ரஷ்யநாட்டைச் சேர்ந்த பெண்மணி குறிப்பிடுகையில், மேரா பாரத் மஹான். இந்தியா மிகச் சிறப்பான தேசம். நாங்கள் இங்கே கும்பமேளாவுக்கு முதல்முறையாக வந்துள்ளோம். இங்கே இந்தியாவின் உண்மையான முகத்தைப் பார்க்கிறோம். இந்தியாவின் உண்மையான சக்தி இம்மக்களிடம் உள்ளது. இங்கே புனிதமான இடத்தில் மக்களிடம் காணும் உற்சாகத்தைக் கண்டு சிலிர்க்கிறேன். இந்தியாவை நேசிக்கிறேன்… என்று அவர் குறிப்பிட்டார். 

மஹாகும்பமேளா ஏற்பாடுகள் குறித்து பிரெஞ்சு பத்திரிகையாளர்  மிலானி கூறியபோது… கும்பமேளா நிகழ்ச்சி பற்றி கேள்விப்பட்டேன். நான் இப்போதுதான் முதல்முறையாக வந்துள்ளேன். நிகழ்ச்சி ஏற்பாடுகள் மிகவும் நன்றாக இருக்கிறது. சாதுக்கள் மற்றும் ஆன்மீக குருக்களை சந்திப்பதில் மிகவும் மகிழ்ச்சி… என்றார்.

இந்துக்கள் மட்டுமல்லாது உலகெங்கிலும் இருந்து வந்துள்ள பெருவாரியான மக்களும் இன்று காலை திரிவேணி சங்கமத்தில் புனித நீராடினர்.    

பிரயாக்ராஜ் கும்பமேளா:

உலகின் மிகப் பெரிய விழாவாகவும், அதிகமான மக்கள் கூடும் விழாவாகவும் யுனெஸ்கோவால் அங்கிகரிக்கப்பட்டுள்ள விழா இந்தியாவின் பிரயாக்ராஜில் நடைபெறும் கும்பமேளா தான். சன்னியாசிகள், துறவிகள், சாமானிய மக்கள். ஆண்கள், பெண்கள், வேத பண்டிதர்கள் என கோடிக் கணக்கான மக்கள் கலந்து கொள்ளும் திருவிழாவாக கும்பமேளா கருதப்படுகிறது. கும்பமேளா திருவிழா ஹரித்வார், பிரயாக்ராஜ், உஜ்ஜைனி மற்றும் நாசிக் ஆகிய நான்கு இடங்களில் தான் நடத்தப்படும். இருந்தாலும் பிரயாக்ராஜில் நடைபெறும் கும்பமேளா தான் பிரசித்தி பெற்றதாக திகழ்கிறது.

கும்பமேளா வகைகள் :

மொத்தம் நான்கு வகையான கும்பமேளாக்கள் உள்ளன. அதாவது ஆர்த் கும்மேளா, பூர்ண கும்பமேளா, மக் கும்பமேளா மற்றும் மகா கும்பமேளா உள்ளன. இவை ஒவ்வொன்றிற்கும் வித்தியாசம் உள்ளது.

* ஆர்த் கும்பமேளா – 6 வருடங்களுக்கு ஒருமுறை நடத்தப்படுவது. இது ஹரித்வார் மற்றும் பிரயாக்ராஜில் நடத்தப்படும்.

* பூர்ண கும்பமேளா – இது 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஹரித்வார், பிரயாக்ராஜ், நாசிக், உஜ்ஜைனி ஆகிய நான்கு இடங்களிலும் நடத்தப்படும்.

* மக் கும்பமேளா – இது ஆண்டுதோறும் ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களில் நடத்தப்படும். இது பிரயாக்ராஜில் மட்டுமே நடத்தப்படும். இதை சேட்டா கும்பமேளா என்றும் சொல்லுவதுண்டு.

* மகா கும்பமேளா – இது தான் 144 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படுவது. 12 பூர்ண கும்பமேளாக்களுக்கு பிறகு நடத்தப்படும். இது பிரயாக்ராஜில் மட்டுமே நடத்தப்படும்.

கும்பமேளா தோன்றிய வரலாறு:

அமிர்தத்தை பெறுவதற்காக தேவர்களும், அசுரர்களும் பாற்கடலை கடைந்த போது பல்வேறு தெய்வீக தன்மை கொண்ட பொருட்களைத் தொடர்ந்து அமிர்தம் கிடைத்தது. அது அசுரர்களுக்கு கிடைத்து விடக் கூடாது என்பதற்காக மகாவிஷ்ணு, மோகினி அவதாரம் எடுத்து அமிர்த கலசத்தை (கும்பம்) எடுத்துச் சென்றார். அப்போது அமிர்தத்தின் சில துளிகள் பூமியில் சிந்தி, அவைகள் ஹரித்வார், பிரயாக்ராஜ், உஜ்ஜைனி, காசி ஆகிய நான்கு புனித நகரங்கள் தோன்றிய. இதன் நினைவாக கொண்டாடப்படுவதே கும்மேளா ஆகும். கும்பமேளா அன்று திரிவேணி சங்கமத்தில் புனித நீராடுவது மிக மிக சிறப்பானதாகும்.

மகா கும்பமேளா 2025 தேதி :

மகர சங்கராந்தி துவங்கி, மகா சிவராத்திரி வரையிலான 44 நாட்கள் இந்த மகா கும்பமேளா நடத்தப்படும். நவகிரகங்களில் சில குறிப்பிட்ட சுப கிரகங்கள், நட்சத்திரங்கள் ஒரே நாளில் ஒரே நேர்க்கோட்டில் இணையும் நாளிலேயே இந்த மகா கும்பமேளா நடத்தப்படும். அப்படி ஒரு அற்புதமான நாள் இந்த ஆண்டு வர உள்ளது. ஜனவரி 13ம் தேதி துவங்கி, பிப்ரவரி 26ம் தேதி வரை நடைபெறும் மகா கும்பமேளாவின் போது கங்கை, யமுனை, சரஸ்வதி ஆகிய மூன்று நதிகள் சங்கமிக்கும் திரிவேணி சங்கமத்தில் புனித நீராடினால் அனைத்து விதமான பாவங்களும் நீங்கும். மோட்சம் கிடைக்கும் என்பது நம்பிக்கை.

மகா கும்பமேளா 2025 நிகழ்வுகள் :

மகா கும்பமேளாவின் போது பலவிதமான சடங்குகள் நடத்தப்படும். யானைகள், குதுிரைகள், ரதங்கள், மின்னும் வாள்கள் ஆகியவற்றிற்கு பூஜை செய்து ஊர்வலமாக எடுத்து செல்வார்கள். ஜனவரி 13ம் தேதி பெளர்ணமி ஸ்நானத்துடன் துவங்கும் மகா கும்பமேளாவில் ஜனவரி 15ம் தேதி மகர சங்கராந்தி ஸ்நானம், ஜனவரி 29ல் அமாவாசை ஸ்நானம், பிப்ரவரி 3ல் வசந்த பஞ்சமி ஸ்நானம், பிப்ரரவரி 12ல் மகி பெளர்ணமி ஸ்நானம், பிப்ரவரி 26ம் தேதி மகா சிவராத்திரி ஸ்நானம் ஆகியவற்றுடன் மகா கும்பமேளா இந்த ஆண்டு நிறைவடைய உள்ளது.

கும்பமேளாவில் கலந்து கொள்ள முடியாதவர்கள் செய்ய வேண்டியது :

இந்த ஆண்டு மகா கும்பமேளாவில் 35 முதல் 40 கோடி வரையிலான மக்கள் கலந்து கொள்வார்கள் கலந்து கொள்ளலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே அகோரிகளும், சாதுக்களும், துறவிகளும் பிரயாக்ராஜில் குவிய துவங்கி விட்டனர். கலாச்சார நிகழ்ச்சிகள், கண்காட்சிகள், உணவு கடைகள் என கோலாகலமாக நடைபெற உள்ள மகா கும்பமேளாவில் கலந்து கொண்டு கோடிக்கணக்கானவர்கள் புனித நீராட உள்ளனர். இதனால் பிரயாக்ராஜ் முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள், கட்டுப்பாடுகள் ஏற்படுத்தப் பட்டுள்ளது. 144 வருடங்களுக்கு ஒருமுறை நடைபெறும் மகா கும்பமேளாவில் கலந்து கொண்டு நாமும் புனித நீராடினால் நம்முடைய பாவங்கள் நீங்கி, மோட்சம் கிடைக்கும் என்பது நம்பிக்கை. பிரயாக்ராஜ் செல்ல முடியாதவர்கள் தங்கள் பகுதியில் உள்ள புனித நதிகள், திரிவேணி சங்கமங்களில் புனித நீராடி, மகா கும்பமேளாவில் கலந்து கொண்ட பலனை பெறலாம்.

ரோஹிங்யா முஸ்லிம்களை வெளியேற்றுக; இலங்கை சிவசேனை கோரிக்கை!

tgte srilanka 3 - 2026

உரோகிங்கியா முகமதியரை உடனே வெளியேற்றுக என்று, இலங்கை சிவசேனையின் மறவன்புலவு க. சச்சிதானந்தன் கோரியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கை:

மியான்மார் நாட்டில் மேற்கு மாநிலம் அரக்கன். வங்கதேசத்தை ஒட்டிய மாநிலம். வங்கதேசத்து முகமதியர் மியன்மாருக்குள் ஊடுருவினர். கடந்த 100 ஆண்டுகளாக தொடர்ச்சியாக நடைபெற்ற நிகழ்ச்சி. அரக்கன் மாநிலத்தில் எண்ணிக்கையில் பெருகினர்.

மியான்மார் புத்த சமயப் பெரும்பான்மை நாடு. புத்தர்களை முகமதியர்களாக்கும் நோக்குடன் மியன்ன்மார் நகரங்களுள் அரக்கன் மாநிலத்தவரான உரோகிங்க முகமதியர் ஊடுருவினர். வணிகக் கடைகளை அமைத்தனர்.

இதனால் கடந்த நூறு ஆண்டுகளாக மியன்மார் புத்தருக்கும் அரக்கன் மாநில உரோகிங்கருக்கும் இடையே தொடர்ச்சியான முரண்பாடுகள் மோதல்கள் கலவரங்கள்.

மியன்மாரின் அரக்கன் மாநிலத்தில் இந்துக்கள் பரந்து வாழ்கின்றனர். அவர்களையும் புத்தர்களையும் முகமதியர்களாக்க முயற்சித்தனர். 2017இல் கலவரம் வெடித்தது. படையினர் தலையிட்டனர். புத்தர்களையும் இந்துக்களையும் மதமாற்ற முயற்சித்த முகமதியர் தமது தலையில் தாமே கொள்ளி வைத்தனர்.

மியான்மார் படைகள் முகமதியரின் மதமாற்ற முயற்சியை முறியடிக்க நடவடிக்கை எடுத்தனர். பத்து இலட்சம் முகமதியர் அகதிகளாக வங்காளதேசத்திற்கு ஓடினர். இந்தியாவுக்கு ஓடினர். தாய்லாந்துக்கு ஓடினர். மலேசியாவுக்கு ஓடினர். இந்தோனேசியாவுக்கு ஓடினர்.

2017க்கு பின்பு அரக்கன் மாநிலம் கலவர பூமி. வீடுகள் எரிந்தன. ஊர்கள் எரிந்தன. முகமதியர்களின் வாழ்வு எரிமலை ஆயிற்று. தொடர்ச்சியாக அரக்கன் மாநிலத்தை விட்டு வெளியேறிய முகமதியர் இப்பொழுது இலங்கைக்குள் புகுந்துள்ளனர்.

இலங்கையிலுள்ள சிலரின் ஊக்கத்தினால் அவர்கள் வந்துள்ளார்கள் என்ற கோணத்திலும் விசாரணைகள் நடைபெறுகின்றன. மேலும் வருவதற்கான படகுகளைத் தயார் நிலையில் வைத்திருப்பதாக இங்குள்ள அவர்களுடைய முகவர்கள் கூறுகிறார்களாம்!

கதிர்காமத்திலிருந்து காங்கேயன்துறை வரையான நீண்ட கிழக்குக் கரையோர ஊர்கள் நகரங்கள் மாநகரங்கள் துறைகள் யாவற்றையும் முகமதிய மயமாக்கும் முயற்சியில் ஒரு திட்டமே மியன்மார் அரக்கன் மாநில முகமதியர்களை இலங்கைக்குள் கொண்டு வருவதாகும்.

இந்த முயற்சியில் ஏற்கனவே அம்பாறை மாவட்டம் 45% முகம்மதியப் பெரும்பான்மை மாவட்டமாகியது. இந்த முயற்சியின் அடுத்த நிலையாக திருகோணமலை மாவட்டம் 45% முகமதியப் பெரும்பான்மை மாவட்டம் ஆகியது. மட்டக்களப்பு முல்லைத்தீவு கிளிநொச்சி யாழ்ப்பாணம் மன்னார் ஆகிய மாவட்டங்கள் முகமதியரின் அடுத்த இலக்குகளாக உள்ளன.

வாடைக் காற்றோடு ஐராவதி பிரம்மபுத்திரா கங்கை மகாநதிக் கரைகளில் இருந்து படகில், வங்கக் கடலின் வலசை நீரோட்டத்தோடு பெயர்ந்து வந்த குடியேறிகளால் சிவ பூமி ஆன இலங்கை படிப்படியாக மாறிக் கொண்டு வந்தமை வரலாறு.

அந்த வரலாற்றின் தொடர்ச்சியே மீண்டும் வாடைக்காற்றின் துணையோடு படகில் அரக்கன் மாநில உரோகிங்கியா முகமதியர்கள் 115 பேர் வந்திறங்கி உள்ளனர். மியன்மாரில் இந்துக்களையும் புத்தர்களையும் மதமாற்ற முயற்சித்ததாலேயே இவர்கள் ஏதிலிகளாயினர். அமைதியாக வாழ்ந்து இருந்தால் அங்கேயே தொடர்ந்திருக்கலாம்.

இவர்கள் ஏதிலிகளா மதமாற்றிகளா? என்பதைக் கண்டறிய வேண்டும். சிவ பூமியை அல்லாவின் பூமியாக்கும் முயற்சியின் படிக்கட்டுகளா? இவர்கள் என்பதையும் கண்டறிய வேண்டும். இவர்களை இலங்கையில் வாழ்வதற்கு ஏற்றுக் கொண்டால் மியன்மாரின் அரக்கன் மாநிலத்தில் நடந்ததே இலங்கையின் கிழக்கு மாகாணத்திலும் நடைபெறும்.

கதிர்காமம் தொடக்கம் காங்கேயன்துறை வரையுள்ள இலங்கையின் கிழக்குக் கரையோரத்தை முகமதிய மயமாக்கும் தீவிரவாத முகமதிய முயற்சியாளரின் செயல்திட்டத்தின் ஒரு பகுதியே உரோகிங்கியா முகமதியரின் வருகை. இலங்கையின் இனப் பரம்பல் விகிதாசாரத்தை மாற்றுவதற்கான முயற்சியின் படிக்கட்டாக அமைய உள்ள முகமதியரின் இந்த வருகையை சைவத் தமிழர்களாகிய நாங்கள் வரவேற்கவில்லை.

115 உரோகிங்கியா முகமதியர்களும் புறப்பட்ட இடத்திற்கே மீண்டும் திருப்பி அனுப்ப வேண்டும் என்பதே சைவத் தமிழரின் வேண்டுகோள்.

மதுரை கோயில்களில் சனி மகா பிரதோஷம்: திரண்ட பக்தர்கள்!

chozhavanthan pralayanathar temple pradhosam - 2026

மதுரை மாவட்டத்தில் உள்ள கோயில்களில் சனி மஹா பிரதோஷம் வெகு சிறப்பாக நடைபெற்றது.

மதுரை அருகே சோழவந்தான் பிரளயநாதர், திருவேடகம் ஏடகநாதர், தென்கரை மூல நாதர் கோயில்களிலும், மதுரை அண்ணாநகர், தாசில்தார் நகர் செபாக் விநாயகர், வரசித்தி விநாயகர், யாணைக்குழாய் முத்துமாரியம்மன் ஆலயம், வைகை காலனியில் உள்ள வைகை விநாயகர், மதுரை ஜெ. ஜெ. நகர் வர சக்தி விநாயகர், கோமதி புரம், ஜீப்பில் டவுன் ஞான சக்தி விநாயகர் ஆலயங்களில் சனி மஹா பிரதோசம் பூஜைகள்
நடைபெற்றது.

சோழவந்தான் விசாக நட்சத்திர ஸ்தலமாக விளங்கும் பிரளயநாத சுவாமி ஆலயத்தில், சனி மஹா பிர தோஷத்தை ஒட்டி, சனீஸ்வரலிங்கம், நந்திகேஷ்வரர், சிவபெருமான், நரசிம்மர் ஆகியோருக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. சுவாமி, அம்பாள் ரிஷப வாகனத்தில் அலங்காரமாகி, கோயில் பிரகாரத்தில் அலங்காரமாகி வலம் வந்தார்.

இந்த விழாவில், தொழிலதிபர் எம். வி. எம். மணி, கோயில் நிர்வாக அதிகாரி இளமதி, பள்ளித் தாளாளர் டாக்டர் எம். மருது பாண்டியன், கவுன்சிலர் எம். வள்ளி மயில், கணக்கர் சி. பூபதி, வசந்த் மற்றும் ஆலயப் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

இக் கோயிலில் ஜன. 13..ம் தேதி திங்கள்கிழமை அதிகாலை 5.15..மணி திருவாதிரை யை ஒட்டி, நடராஜர், சிவகாமி அம்மன், மாணிக்க வாசகர் ஆகியோருக்கு பக்தர்களால் சிறப்பு அபிஷேகம், பூஜைகள் நடைபெறுகிறது.
இதற்கான ஏற்பாடுகளை, கோயில் செயல் அலுவலர் ச. இளமதி மற்றும் பக்தர்கள் குழுவினர் செய்து இருந்தனர்.

முதல் முறையாக கரும்பு பயிரிட்டு அசத்திய விவசாயி; பொங்கலுக்கு விளைச்சல் அமோகம்!

sugarcane farmers for pongal yeild - 2026

பொங்கல் கரும்பு சாகுபடி: விவசாயிகள் ஆர்வம்

மதுரை, உசிலம்பட்டி பகுதியில் முதன் முறையாக பொங்கல் கரும்பு சாகுபடி செய்து அசத்திய விவசாயி – பொங்கல் திருநாளை முன்னிட்டு அறுவடை பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகே கள்ளபட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் பாண்டி, விவசாயியான இவர், விவசாயத்தோடு உசிலம்பட்டி சந்தை பகுதியில் காய்கறி கடை நடத்தி வருகிறார்.

ஒவ்வொரு ஆண்டும் தை பொங்கல் திருநாளன்று கரும்பு வியாபாரம் செய்ய தேனி, கம்பம், மேலூர் பகுதிகளுக்கு சென்று பொங்கல் கரும்புகளை கொள்முதல் செய்து வந்து விற்பனை செய்து வந்துள்ளார்.

இந்நிலையில், தனது விவசாய நிலத்திலும் பொங்கல் கரும்பை சாகுபடி செய்து பார்க்கலாம் என எண்ணிய விவசாயி, கடந்த ஆண்டு ஒன்றரை ஏக்கரில் பொங்கல் கரும்பு சாகுபடி செய்து பராமரித்து அறுவடை செய்த போது ஏக்கருக்கு ஒரு லட்சத்திற்கும் அதிகமாக லாபம் கிடைத்தால் மகிழ்ச்சியடைந்துள்ளார்.

தொடர்ந்து, இந்த ஆண்டும் சாகுபடி செய்து தற்போது பொங்கல் திருநாளை முன்னிட்டு அறுவடை பணிகளில் தீவரமாக ஈடுபட்டு வருகிறார்.

உசிலம்பட்டி பகுதியிலேயே முதன்முறையாக பொங்கல் கரும்பு சாகுபடி செய்து அறுவடைக்கு பின் இந்த ஆண்டும் ஏக்கருக்கு 1 லட்சத்திற்கும் அதிகமாக லாபம் கிடைத்துள்ளதாக தெரிவித்தார்.

தண்ணீர் பற்றாக்குறை காரணமாகவே, உசிலம்பட்டி பகுதியில் பொங்கல் கரும்பு சாகுபடி செய்வதில் விவசாயிகள் பெரிதும் ஆர்வம் காட்டுவதில்லை என்றும் தற்போது, 58 கால்வாய் நீரின் காரணமாகவும், தொடர் மழை காரணமாகவும் கண்மாய்கள் நிரம்பி காணப்படும் சூழலில் இனி வரும் காலத்தில் நல்ல லாபம் தரும் இந்த பொங்கல் கரும்பை சாகுபடி செய்ய விவசாயிகள் ஆர்வம் காட்டுவார்கள் என, வேளாண் அலுவலர்களும் தெரிவித்தனர்.

சம்ஸ்கிருத நியாயமும் விளக்கமும் (47): வேதஸ ந்யாய:

samskrita nyaya - 2026

சம்ஸ்கிருத நியாயமும் விளக்கமும் – 47
தெலுங்கில் – பி.எஸ். சர்மா
தமிழில் – ராஜி ரகுநாதன்

வேதஸ ந்யாய: – வேதஸ – நாணல்

நதிக் கரைகளில் வளரும் நாணலுக்கு ஒரு இயல்பு உண்டு. நதிப் பிரவாகத்தில் இந்தச்  செடி முழுமையாக வளைந்து கொடுக்கும். வெள்ளம் குறைந்தவுடன் மீண்டும் மேலெழுந்து நிற்கும்.

பிரதிகூலமான சூழ்நிலையில் அமைதியாக இருந்து, அனுகூலமான சூழ்நிலையில் பொங்கி எழவேண்டும் என்று கூறும் நியாயம் இது. ‘வளையாவிடில் உடைந்து விடுவாய்’ என்ற கூற்று கூட உண்டு. ‘உடைந்தால் முருங்கை. வளைந்தால் நாணல்’ என்ற சொலவடை உள்ளது. சாணக்கிய நீதி சாஸ்த்திரத்தில் வரும் இந்த சுலோகம் இதே கருத்தைக் கூறுகிறது.

நமந்தி பலினோ வ்ருக்ஷா: நமந்தி குணினோ ஜனா:|
சுஷ்க காஷ்ட்ஸ்ச மூர்கஸ்ச பித்யதே ந து நம்யதே ||

பொருள் – பழங்கள் நிறைந்த மரம் வளைந்திருக்கும். குணங்கள் நிறைந்தவர் பணிவோடிருப்பார். நற்குணங்கள் அற்ற மூர்க்கர், பழங்கள் இல்லாத மரங்களைப் போல வணங்காதிருப்பார். அதனால் உடைந்து விடுவார்.

இயற்கையை ஆராய்ந்து மனித இனத்திற்குப் பயன்படும் சூத்திரங்களை அளித்த நியாயங்களில் இதுவும் ஒன்று.

தேவையைப் பொறுத்து அடங்கி இருக்கவேண்டும். ‘நான் எதற்கும் அடங்காதவன்’ என்ற வீம்பு வசனம் எல்லா நேரங்களிலும் வேலை செய்யாது என்று கூறும் நியாயம் இது. ‘தலை குனிய மாட்டேன்’ என்றால் வாசல் நிலை இடித்து தலைக்குக் கட்டுப் போட வேண்டி வரும். இந்த நியாயம் கூறும் நீதியை, கவி வேமனா இயற்றிய சதகத்தில் வரும் செய்யுளும் எடுத்துரைக்கிறது.

அனுவுகானி சோட்ட அதிகுலமனராது
கொஞ்செமுண்டுடெல்ல கொதுவ காது
கொண்ட அத்தமந்து கொஞ்சமை உண்டதா
விஸ்வதாபிராம வினுர வேமா |

பொருள் – நமக்குத் தகுந்ததல்லாத இடத்தில் நாம் சிறந்தவர் என்றும் உயர்ந்தவர் என்றும்  கூறிக் கொள்வது நல்லதல்ல. நம் உயர்வைக் காட்டிக் கொள்ளாவிட்டாலும் நம் வாழ்க்கைக்கு எந்த குறைவும் ஏற்பட்டு விடாது. மலை எத்தனை பெரியதாக இருந்தாலும் கண்ணாடியில் பார்த்தால், சிறியதாகவே தென்படும் அல்லவா!  

சிலரிடம் வினயம் இருக்காது. சிலரிடம் வினய குணம் இருந்தாலும் வினயத்தைக் காட்டுவதற்கு சங்கோஜம் கொள்வர். பணிவோடிருந்தால் தன்னை உபயோகமற்றவன் என்று எண்ணிவிடுவர்களோ, முட்டாளாக நினைத்து விடுவார்களோ என்று அஞ்சுவர்.  ஆனால் வினயம் என்பது ஒரு நல்ல குணம். எத்தனை நல்ல குணங்கள் இருந்தாலும் பணிவு இருந்தால்தான் சிறப்பு.

ஸ்ரீகிருஷ்ணர் –

தேவையானபோது வீரத்தைக் காட்டி பொங்கி எழுந்த ஸ்ரீ கிருஷ்ணர், ‘ரணசோர்’ என்றும் பெயர் பெற்றார். போர்க்களத்திலிருந்து ஓடியவன் என்று இதற்குப் பொருள். சிலர்    ‘ரணசோரன்’ என்று கூட பெயர் வைத்துக் கொள்வார்கள். வெற்றியை அடைவதில் தலைவனுக்கு இப்படிப்பட்ட வியூகம் தேவை. என்பது இந்த நியாயத்தின் உட்பொருள். லீலாமானுட வேடதாரியான ஸ்ரீ கிருஷ்ணருக்கும் காலயவனனுக்கும் இடையே நடந்த போரில் இது போன்ற சம்பவம் நடந்தது இது தெலங்காணாவில் உள்ள ‘ராக்கமசர்ல’ என்ற குகைகளில் நடந்ததாக வரலாறு கூறுகிறது.

ஜராசந்தனின் நண்பனான அசுர அரசன் காலயவனன், தனக்கிருந்த வரத்தால் கர்வமடைந்து, துவாரகை மீது படைஎடுத்தான். அந்தப் போரில் இருந்து பயந்து ஓடி ஒளிவது போல ஸ்ரீ கிருஷ்ணர் நடித்தார். அது ஒரு போர் வியூகம். காலயவனன் துரத்தி வந்த போது, ஸ்ரீகிருஷ்ணர் தப்பித்துக் கொண்டு ‘ரணசோர்’ லீலையாக ஒரு குகைக்குள் நுழைந்தார். அங்கு கோசல அரசரான முசுகுந்த சக்ரவர்த்தி, ஆழ்ந்த உறக்கம் என்ற வரத்தை அனுபவித்துக் கொண்டிருந்தார். அவருடைய உறக்கத்தைக் கலைப்பவர் சாம்பலாகிப் போவார் என்பது அவருக்குக் கிடைத்த வரம். காலயவனன், முசுகுந்தரை ஸ்ரீகிருஷ்ணர் என்று நினைத்து உறக்கத்தைக் கலைத்து எரிந்து சாம்பலானான். காலயவணன் சாம்பலான இடம் தெலங்காணாவில் ஆனந்தகிரி மலையில் இருக்கும் ‘ராக்கமசர்ல’ குகைகளில் இருப்பதாக புராண வரலாறு. முசுகுந்தரின் பெயரால் தோன்றிய நதி ‘முசிகுந்தா நதி. அதுவே மூஸி நதியாக இன்று காணப்படுகிறது.

அடங்க வேண்டிய இடத்தில் அடங்குவது வெற்றிக்கான ஒரு மார்க்கம். சமயத்திற்கேற்ப நடந்து கொள்வது என்பது புத்திசாலித்தனம். சத்ரபதி சிவாஜியின் வாழ்க்கையின் நடந்த  ஒரு முக்கிய சம்பவம், எதிரியின் திட்டத்தை எப்படி தவிடு பொடியாக்கினார் என்பதைத் தெரிவிக்கிறது.

சத்திரபதி சிவாஜி, அப்ஜல்கானின் படையெடுப்புக்கு அஞ்சுவது போல் நடித்து, ஒரு வியூகம் வகுத்தார். சிறந்த வீரனான அப்ஜல்கானோடு தான் போரிடுவது நடக்காத செயல் என்றும், பீஜப்பூர் அரசாங்கம் தன்னை மன்னிக்கும்படி பார்த்துக் கொள்ளும்படியும் செய்தி அனுப்பினார். பெருந்தன்மையும் சிறப்பும் மிக்க அப்ஜல்கானுக்குத் தன்னிடமிருக்கும் அனைத்தையும் சமர்ப்பணம் செய்வவதற்குத் தயாராக இருப்பதாக நம்பிக்கை ஏற்படுத்தினார். தான் ஆக்கிரமித்த கோட்டைகளை எல்லாம் பீஜப்பூரிடம்  ஒப்படைப்பதாகவும் தனக்கு வெறும் மன்னிப்பு மட்டும் அருளும்படியும் கூறி நம்பவைத்தார். அப்ஜல்கானின் துரோகத்தைத் தன் வியூகத்தால் முறியடித்தார். அதன் பிறகு நடந்த கதை அனைவரும் அறிந்ததே.

ஒரு புறம் நட்பாக இருந்தபடியே, மறு புறம் முதுகில் குத்தும் நரரூப ராட்சசன், ஹிந்துக்களைத் துன்புறுத்தி வதைத்த சதிகாரன் அப்ஜல்கானை, சிவாஜி சாதுர்யமாகக் கொன்றார்.

தேவையேற்பட்டபோது அடங்கி, காலம் அனுகூலமானபோது புலிநகம் தரித்த நரசிம்மராக மாறிய சிவாஜியின் வாழ்க்கையில் நடந்த சம்பவம் இந்த ‘வேதஸ’ நியாயத்திற்குச் சிறந்த எடுத்துக்காட்டு.

நாணலோடு தொடர்புடைய இந்த நியாயத்திற்கு மற்றொரு கோணம் உள்ளதென்று அறிஞர் கூறுவர்.

துர்ஜன: ப்ரியவாதீ ச நைதத்விஸ்வாஸகாரணம் |
மது திஷ்டதி ஜிஹ்வாக்ரே, ஹ்ருதயே து ஹலாஹலம்||

பொருள் – தீய மனிதன், மிகவும் இனிமையாகப் பேசுவான். ஆனாலும் அந்த சொற்களை நம்பக் கூடாது. நாவின் மீது தேன் இருக்கும். உள்ளத்தில் விஷம் இருக்கும். அதிக வினயம் காட்டுபவர்களை நம்பக் கூடாது என்றும், ஆஷாடபூதியிடம் கவனமாக இருக்கும்படியும் இது தெரிவிக்கிறது.
யாருக்கும் தலை குனியமாட்டேன் என்ற மன நிலை, தன்மானம் என்று தோன்றலாமே தவிர அது அனைத்து இடங்களிலும், எல்லோரிடமும், எல்லா நேரத்திலும் பயன்படும்  சூத்திரம் அல்ல என்பர் ஆய்வாளர். ஞானிகளிடம் தலை வணங்க வேண்டும் என்கிறார் மனு. வேதச நியாயத்தின் மற்றொரு கோணம் இது.

அபிவாதன சீலஸ்ய நித்யம் வ்ருத்தோபசேவின:
சத்வாரி பரிவர்தந்தே ஆயுர்வித்யா யஸோபலம் ||

– (மனுஸ்ம்ருதி: 2- 121)

பொருள் – ஞானத்தில் பழுத்தவர்களை எப்போதும் வணங்கி, அவர்களுக்கு சேவை  செய்து வருபவர்களின் ஆயுள், கல்வி, புகழ், வலிமை என்ற நான்கு குணங்களும் வளர்ச்சி அடையும்.

தேசிய இளைஞர் தின ஸ்பெஷல்: சுவாமிஜியைக் கண்டெடுத்த தமிழகம்!

vivekananda swami - 2026

கட்டுரை : பத்மன்

ஓர் அருள் பேரலை, நூற்றைம்பது ஆண்டுகளுக்கு முன் பாரதத்தில் இருந்து எழுந்து, அமெரிக்காவில் பொங்கிப் பிரவாகித்து, பார் முழுதும் பயன்பெறும் வகையில் பாய்ந்தோடியது. அந்த அருள் வெள்ளம் இன்றளவும், என்றளவும் வற்றாத ஜீவநதி. வங்கத்தில் தோன்றிய அந்த வெள்ளப் பெருக்கால், பாரதத்தில் இன்னமும் வேதாந்த ஞானம், ஹிந்து மதாபிமானம், மனிதாபிமானம், தேசப்பற்று, சமுதாயத் தொண்டு, சமூகச் சீர்திருத்தம், ஒற்றுமை உணர்வு, உலக சகோதரத்துவம் ஆகிய பயிர்கள் செழித்து வளர்ந்து வருகின்றன. அந்த அருள் பேரலைதான் சுவாமி விவேகானந்தர் என்பதைச் சொல்லவும் வேண்டுமா?

அந்த அருள்ஞானப் பேரொளியை, இளஞ்சிங்கத் துறவியைப் பெற்றெடுத்தது வேண்டுமானால் வங்காளமாக இருக்கலாம், கண்டெடுத்தது நமது தங்கத் தமிழகம்தான். சுவாமி விவேகானந்தர் என்ற ஞானப் பொக்கிஷத்தின் மாண்பை உணர்ந்து உலகுக்கு முதன்முதலில் உரைத்தது மட்டுமின்றி, அவர் தமது ஞானப் பெட்டகத்தைத் திறந்து உலகுக்கு எடுத்து உரைக்கவும் உதவியது நமது தமிழகமே.

சுவாமிஜி ஒரே நாளில் உலகப் புகழ் பெறவும், உலகில் பாரதம் மற்றும் ஹிந்து மதத்தின் பெருமை உணரப்பட்டு புகழ் பரவவும் காரணமாக அமைந்த, 1893-ல் சிகாகோவில் நடைபெற்ற உலக மதங்களின் நாடாளுமன்றத்தில் (சர்வ சமய மாநாட்டில்) அவர் பங்கேற்க வழிவகை செய்து உறுதுணை புரிந்தது, தமிழகத்தின் ராமநாதபுரத்து மன்னர் பாஸ்கர சேதுபதிதான். அந்த ஒரு நிகழ்வு மட்டுமல்ல, சுவாமிஜியின் வாழ்க்கையில் நிகழ்ந்த முக்கியமான பல்வேறு நிகழ்வுகளின் பின்னணியில் நமது தமிழகமே நிழலாய் நிற்கிறது.

சுவாமிஜி, தமது குருநாதர் ஸ்ரீ ராமகிருஷ்ணரின் மறைவுக்குப் பின்னர், பரிவ்ராஜகராக கடந்த 1888 முதல் 1892 முற்பாதி வரை வாராணசி (காசி) தொடங்கி, வடக்கு மற்றும் மேற்கு இந்தியப் பகுதிகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஆன்மீக விழிப்புணர்வு ஏற்படுத்திவந்தார். ஆயினும், 1892 இறுதியில் தமிழகத்தில் சுவாமிஜி பாதம் பதித்த போதுதான், அவரது வாழ்வில் புதிய திருப்புமுனை நேரிட்டது. பாழ்பட்டு நின்றிருந்த பாரதத்தின் வாழ்விலும் பொற்கால விடியல் புலப்பட்டது.

1892 டிசம்பர் மாதம், பாரதத்தின் கடைக்கோடிப் பகுதியான கன்யாகுமரியில் சுவாமி விவேகானந்தர் காலடி எடுத்து வைத்தார். அதுவரை உலக நாடுகளின் மிதியடியாய் கிடந்த பாரதம், உலகின் மணிமகுடம் என்பதை உணர்த்துவதற்கான விதை அங்கேதான் ஊன்றப்பட்டது.

கன்யாகுமரி கடலின் நடுவே, பகவதி அம்மன் குமரி வடிவில் தவம் புரிந்த பாறையொன்றில், சுவாமி விவேகானந்தர் அன்னையின் அருளோடு மூன்று நாள் தவமிருந்தார். (1892 டிசம்பர் 25,26,27). இங்கேதான் ஆன்மீகத்தில் மட்டுமல்ல, சமூகப் பொருளாதார முன்னேற்றத்திலும் இந்தியர்களைத் தட்டியெழுப்பி, மீண்டும் முந்தைய மகோன்னத நிலைக்கு உயர்த்தத் தாம் பாடுபட வேண்டும் என்ற கைவல்ய ஞானத்தை சுவாமிஜி பெற்றார். இதுதான் சுவாமிஜியின் கன்யாகுமரி பிரதிக்ஞை எனப் புகழ்பெற்றது. (இந்த உலகப் புகழ் பெற்ற பாறையில் தான் 1970-ல் விவேகானந்தர் பாறை நினைவு மண்டபம் எழுந்தது.)

இந்த உறுதி வந்தபின்னர், அதற்கான உத்வேகம் சுவாமிஜியின் மதுரைப் பயணத்தின்போது கிடைத்தது. அங்கே ராமநாதபுரம் மன்னர் அரண்மனையில் மன்னர் பாஸ்கர சேதுபதியைச் சந்தித்தபோது, சிகாகோ சர்வ சமய மாநாட்டில் சுவாமிஜி பங்கேற்று உரை நிகழ்த்த வேண்டும் என்பதை வலியுறுத்திய மன்னர், அதற்கான அறிமுகக் கடிதத்தையும் தந்தார். அதன்படி அமெரிக்கா சென்று உரையாற்றி, அந்தப் புகழோடு மேலை நாடுகளை வலம்வந்து, உலகைக் கவர்ந்த ஒப்பற்ற துறவியாய் 1897-ல் தாய் நாடு திரும்பிய சுவாமிஜிக்கு பாம்பன், ராமேஸ்வரம், ராமநாதபுரம், மதுரை, கும்பகோணம், சென்னை என தமிழகத்தில்தான் நாட்டிலேயே முதன்முறையாக வரவேற்பு ஊர்வலங்கள் நடத்தப்பட்டன.

சமயம் மற்றும் சமூகத் தொண்டு ஆற்றுவதற்கான ராமகிருஷ்ண மிஷன் எனப்படும் ராமகிருஷ்ண அறக்கட்டளை அமைப்பை நிறுவ வேண்டும் என்ற சுவாமிஜியின் எண்ணத்திற்கு பிள்ளையார்சுழி போட்டதும் தமிழகம்தான். 1897-ல் சுவாமிஜி நாடு திரும்பியபோது சென்னையில் பிலிகிரி ஐயங்கார் என்பவருக்குச் சொந்தமான ஐஸ் ஹவுஸ் எனப்படும் கெர்னான் கோட்டையில் பிப்ரவரி 6 முதல் 14-ம் தேதி வரை ஒன்பது தினங்கள் தங்கியிருந்து நாள்தோறும் பல்வேறு இடங்களில் சொற்பொழிவு ஆற்றிவந்தார். அப்போது சுவாமிஜியின் தமிழக சீடர்களும், அன்பர்களும் ஓர் அமைப்பை நிறுவ வேண்டும் என வலியுறுத்தினர். கொல்கத்தா சென்றதும் இதற்கு வழி செய்வதாகக் கூறிய சுவாமிஜி அப்படியே செய்தார்.

1897 மார்ச் மாதத்தில், பகவான் ஸ்ரீ ராமகிருஷ்ணரின் அன்புக்குரிய சீடரும், சகோதரத் துறவியுமான சசி எனப்படும் ராமகிருஷ்ணானந்தரை சென்னைக்கு அனுப்பினார் சுவாமிஜி. பிலிகிரி ஐயங்காரின் ஐஸ் ஹவுஸ் கட்டடத்திலேயே தென்னிந்தியாவின் முதல் ராமகிருஷ்ண மடம் ஸ்தாபிக்கப்பட்டது. தென்னிந்தியாவில் மட்டுமல்ல, இந்தியாவிலேயே பேலூர் (கொல்கத்தா) மடத்தைத் தவிர்த்து, முதன்முறையாக அமைக்கப்பட்ட ராமகிருஷ்ண மடம் இதுதான். ஸ்ரீ ராமகிருஷ்ணரின் மறைவுக்குப் பின்னர் 1886-ல் பேலூர் மடத்தை சுவாமிஜி உருவாக்கியபோதிலும், சென்னை மடத்துக்குப் பின்னர்தான் அது புனரமைக்கப்பட்டது, ராமகிருஷ்ண மிஷன் அமைப்பும் நிறுவப்பட்டது. 1907-க்குப் பிறகு ,மயிலாப்பூர் பகுதிக்கு ராமகிருஷ்ண மடம் இடம் மாறியது. தற்போது ஐஸ் ஹவுஸ் கட்டடம், தமிழக அரசின் ஆதரவோடு விவேகானந்தர் இல்லம் ஆகப் பரிமளிக்கிறது.

சுவாமிஜியின் லட்சியங்களான வேதாந்த ஞானம், சமூகத் தொண்டு ஆகிய கருத்துகளைப் பரப்புவதற்காக முதன்முறையாகப் பத்திரிகைகள் தோன்றியதும் தமிழகத்தில்தான். சுவாமி விவேகானந்தர் மீது அபிமானம் கொண்ட தமிழர்களான அளசிங்கப் பெருமாள், ஜி. வெங்கடரங்கா ராவ், எம்.சி. நஞ்சுண்ட ராவ் ஆகியோர் 1895 செப்டம்பர் மாதத்தில் “பிரம்மவாதின்” என்ற ஆங்கிலப் பத்திரிகையைத் தொடங்கினர். 14 ஆண்டுகள் வெளிவந்த இந்த ஆன்மிக, கலாசாரப் பத்திரிகை 1909-ல் அளசிங்கப் பெருமாளின் மரணத்தோடு நின்றுபோனது. எனினும், இந்தப் பத்திரிகையை சென்னை ராமகிருஷ்ண மடமே ஏற்று, 1914 முதல் “வேதாந்த கேசரி” என்ற பெயரில் தொடர்ந்து வெளியிட்டு வருகிறது.

சுவாமிஜியின் பரிபூர்ண ஆசியோடு தொடங்கப்பட்ட மற்றொரு முக்கிய இதழ் “பிரபுத்த பாரத”. விழிப்படைந்த பாரதம் என்ற பொருள் பொதிந்த இந்தப் பெயரைச் சூட்டியதே சுவாமிஜிதான். 115 ஆண்டுகளைக் கடந்து தற்போதும் வெளிவந்து கொண்டிருக்கும் இந்த ஆங்கிலப் பத்திரிகையை, கடந்த 1896- ஜூலையில் சுவாமிஜியின் தமிழகச் சீடர்களான எழுத்தாளர் பி.ஆர். ராஜம் ஐயர் (தமிழின் இரண்டாவது நாவலான கமலாம்பாள் சரித்திரத்தை எழுதியவர்), பி. அய்யாசாமி, ஜி.ஜி. நரசிம்மாசார்யா, பி.வி. காமேஸ்வர ஐயர் ஆகியோர் சென்னையில் தொடங்கினர். 24 வயதே நிரம்பிய பி.ஆர். ராஜம் ஐயர் இதன் முதலாவது ஆசிரியராகப் பொறுப்பேற்று திறம்பட நடத்திவந்த நிலையில், இரண்டாண்டுகளில் திடீரென இறந்துவிடவே, பின்னர் அல்மோராவுக்கு பத்திரிகை அலுவலகம் இடம் மாறியது.

தமது தமிழ்ச் சீடர்கள் “பிரபுத்த பாரத” என்ற பெயரில் தொடங்கிய, ராமகிருஷ்ண இயக்கத்தின் இந்த ஆங்கிலப் பத்திரிகை மீது சுவாமிஜி மிகுந்த ஆர்வமும், அபிமானமும் கொண்டிருந்தார். இதனை சுவாமிஜியின் சிஷ்யை சகோதரி நிவேதிதா இவ்விதம் கூறியுள்ளார்: “சுவாமிஜி இந்தப் பத்திரிகை மீது தனி அன்பு கொண்டிருந்தார். இப்பத்திரிகைக்கு அவர் சூட்டிய பெயரே இதற்குச் சான்று. தமது அமைப்புகள் மீது அவருக்கு தணியாத ஆர்வம் உண்டு. நவீன இந்தியாவை வடிவமைப்பதில் இந்தப் பத்திரிகையின் பங்கு சுவாமிஜிக்கு ஓர் ஆதாரமாக அமைந்தது. தமது குருநாதரின் கருத்துகள் பிரச்சாரங்களின் மூலமும், பணிகளின் மூலமும் கொண்டு செல்லப்படுவதைப்போல இதுபோன்ற பத்திரிகைகள் மூலமும் பொதுமக்களைச் சென்றடைய வேண்டும் என சுவாமிஜி விரும்பினார்.” இந்த பிரபுத்த பாரத பத்திரிகையில், “To the Awakened India” (விழிப்படைந்த பாரதத்திற்கு) என்ற தலைப்பில் கவிதை ஒன்றையும் சுவாமி விவேகானந்தர் எழுதியுள்ளார்.

சுவாமி விவேகானந்தரின் காலத்திலேயே, அவரது ஆங்கிலச் சொற்பொழிவுகளைத் தொகுத்து முதன்முறையாக இந்திய மொழி ஒன்றில் மொழிபெயர்த்து வெளியிட்ட பெருமையும் தமிழுக்கே உரியது. இவ்விஷயத்தில் வங்கத்தையும் விஞ்சிவிட்டது தமிழகம். தமிழகத்தில் வெளிவந்த மிகச் சிறந்த தேசபக்திப் பத்திரிகைகளில் ஒன்றான லோகோபகாரியின் ஆசிரியராகச் செயல்பட்டவர் வி. நடராஜ ஐயர். இவர் கடந்த 1898-ல் சுவாமிஜியின் ஆங்கிலச் சொற்பொழிவுகளைத் திரட்டி, தமிழில் மொழிபெயர்த்து இரண்டு தொகுதிகளாக வெளியிட்டார். ‘ஞானத் திரட்டு’ என்னும் பெயர்கொண்ட இந்த நூலின் முதல் தொகுதியை சுவாமிஜிக்கே அனுப்பினார், நடராஜ ஐயர்.

அதனைப் பெற்றுக்கொண்டு சுவாமிஜி டார்ஜிலிங்கில் இருந்து 1898 ஏப்ரல் 15-ம் தேதி அனுப்பிய வாழ்த்துக் கடிதம் இதோ:

“அன்புடையீர்! உங்கள் ஏழாம் தேதி கடிதமும், எனது சொற்பொழிவுகளில் சிலவற்றின் தமிழ் மொழிபெயர்ப்பு நூலும் கிடைத்தன. மிக்க மகிழ்ச்சி. பொதுவாக தமிழ் மக்களுக்கும், குறிப்பாக உங்களது பத்திரிகையின் சந்தாதாரர்களுக்கும் உண்மையிலேயே நீங்கள் சேவை செய்திருக்கிறீர்கள். நான் கூறிய கருத்துகளை எல்லா இடங்களிலும் பரவுமாறு செய்யவேண்டும் என்பதில் சந்தேகமில்லை. அதற்கு ஏற்ற வழி அவற்றை மாநில மொழிகளில் மொழிபெயர்ப்பதே. இதில் நீங்கள் முன்னோடியாக அமைந்ததற்கு நான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். உங்கள் முயற்சியில் எல்லா வெற்றிகளும் கிடைக்குமாறு வாழ்த்துகிறேன். ஆசிகளை ஏற்றுக்கொள்ளுங்கள்.”

சுவாமிஜியைப் பெருமைப்படுத்துவதில் தமிழர்களின் முதன்மை இதனோடு நின்றுவிடவில்லை. சுவாமி விவேகானந்தர் வாழ்ந்த காலத்திலேயே அவரது பெயரில் முதன்முதலாக சங்கம் அமைத்ததும் தமிழகம்தான். அதிலும் ஒரு புதுமை. பொய்யான பகுத்தறிவுக்கும், போலி சீர்திருத்தவாதிகளின் கருத்துகளுக்கும் மயங்கிக் கிடந்த ஒரு தன்மானத் தமிழர்தான், சுவாமி விவேகானந்தரின் உண்மைப் பகுத்தறிவையும், சத்தியமான சீர்திருத்தங்களையும் உணர்ந்துகொண்டு, அவருக்கு முதல் சங்கத்தை நிறுவினார்.

வேலூர் மாவட்டம் வாணியம்பாடியைச் சேர்ந்தவர் வெங்கடசாமி நாயுடு. சுயமரியாதை இயக்கத்தில் சிறிது காலம் தொடர்பு கொண்டிருந்த இவர், சுவாமி விவேகானந்தர் அமெரிக்காவில் நிகழ்த்திய ஆங்கிலச் சொற்பொழிவுகளின் தமிழாக்கத்தையும், சுவாமிஜியின் கம்பீரமான படத்தையும் காண நேர்ந்ததால் ஞானக்கண் திறக்கப் பெற்றார். சுவாமிஜியின் கருத்துகளைப் பரப்புவதையே தனது நோக்கமாக வரித்துக்கொண்ட இவருக்கு அபார நினைவாற்றல் இருந்தது. சுவாமிஜியின் பேச்சுகளை எல்லாம் மனப்பாடம் செய்துகொண்டு, பின்னர் அவரைப் போலவே வேடமணிந்துகொண்டு, மேடைகளில் ஏறி வீர முழக்கமிடுவார் வெங்கடசாமி நாயுடு. இறுதியில், இவ்வாறு சுவாமிஜி அமெரிக்காவில் பேசினார் என்று கூறி முடிப்பார்.

அத்தகு விவேகானந்த அபிமானியான வெங்கடசாமி நாயுடு, சுவாமிஜியைப் போலவே ஏழைகளுக்காகத் துயருற்று, அவர்களுக்குப் பல்வேறு தொண்டுகளைச் செய்துவந்தார். இந்த நோக்கத்திற்காகவே “விவேகானந்த வேதாந்த சங்கம்” என்ற அமைப்பை நிறுவினார். சுவாமிஜி காலத்தில் அவரது பெயரிலேயே தொடங்கப்பட்ட முதல் சங்கம் இதுதான் என்பதற்கு, சுவாமிஜி எழுதிய கடிதமே சான்று. தமது பெயரில் தொடங்கப்பட்ட சங்கம் என்பதால், பெறுனர் பகுதியில் சங்கத்தின் முழுப்பெயரைப் போடாமல், சற்று கூச்சத்துடன், Viv. Society என்றே சுருக்கமாகக் குறிப்பிட்டு, கலிபோர்னியாவில் இருந்து சுவாமிஜி 1900-ம் ஆண்டு ஜனவரி 23-ம் தேதி எழுதிய கடிதம் இதோ:

“அன்புடையீர்! உங்கள் அன்பான வார்த்தைகளுக்கு நன்றி. வேத மதத்தைப் பரப்புவதற்காக நீங்கள் வெற்றிகரமாக ஒரு சங்கத்தை ஆரம்பித்திருப்பதற்கு எனது நல்வாழ்த்துகளை ஏற்றுக்கொள்ளுங்கள். உங்கள் முயற்சிகள் எல்லாம் வெற்றிவாகை சூடட்டும். எல்லா அங்கத்தினருக்கும் எனது நன்றி. நல்வாழ்த்துகள். இறைவனில் என்றும் உங்கள் விவேகானந்த.” (இந்த வேங்கடசாமி நாயுடு, பின்னாளில் நாட்டறம்பள்ளியில் ராமகிருஷ்ண மடத்தின் கிளை அமைவதற்கும் உறுதுணையாக இருந்தார்.)

சுவாமிஜியைக் கொண்டாடுவதில் அக்காலத்திலிருந்தே தமிழகம்தான் முதன்மை பெற்றுத் திகழ்கிறது. அவரது 150-வது ஜெயந்திக் கொண்டாட்டத்திலும் முதன்மை வகித்து, பல புதுமைகளைத் தமிழர்களாகிய நாம் படைப்போம். சுவாமிஜியின் லட்சியக் கனவாகிய, அனைத்துத் துறைகளிலும் உலகின் குருவாய் பாரதம் ஆகிட தமிழர்களாகிய நாம் தயாராவோம். மகாகவி பாரதியின் வாக்குப்படி, பாரதம் வையத் தலைமை கொள்ள, சுவாமிஜியின் கருத்துகளைப் பரப்பி, தமிழர்கள் வைரநெஞ்சுடன் தோள்கொடுப்போம்.

🕉 பத்மன் (ஜன.12 விவேகானந்தர் ஜயந்தியை ஒட்டி, ‘விவேகானந்தம் 150’ சிறப்பு இணையதளத்தில் 2013 ஜனவரி 12-ல் வெளியான கட்டுரை)

வெறுப்புணர்வே அன்பும் அமைதியுமாய் பிரசாரம் செய்யப் படுவது ஏனோ?

christian missioneries propaganda - 2026
#image_title

வெறுப்பு தர்மமாகாது!


தெலுங்கில் – பிரம்மஸ்ரீ சாமவேதம் ஷண்முக சர்மா
தமிழில் – ராஜி ரகுநாதன்

அண்மையில் ஆந்திரபிரதேசத்தில் ஒரு இடத்தில் இஸ்கான் அமைப்பைச் சேர்ந்த ஒருவர் பகவத்கீதை நூலை விநியோகித்துக் கொண்டிருந்த போது இந்துவல்லாத பிறமதப் பெண்மணியான ஒரு அரசியல் கட்சித் தலைவி, அந்த மனிதரை போலீசாரின் உதவியோடு அங்கிருந்து விரட்டினார். அதனைப் பாராட்டி அவருடைய மதத்தவர், “மத வெறி நூல்களைப் பற்றி பிரசாரம் செய்து வந்த மதவெறி பிடித்த மதத்தவரை விரட்டியடித்ததற்குப் பாராட்டுகிறோம்” என்று அவரைப் புகழ்ந்தனர்.

அதாவது அவருடைய பார்வையில் ஹிந்து மதம், ‘மத வெறி பிடித்த மதம்’. பகவத்கீதை ‘மதவெறி நூல்’. அவர்களுடைய மதம், ‘அன்பு மதம்’ என்பது அந்த அரசியல் தலைவியின்  கூற்று.

பிற மதத்திற்கு மாறியவர்கள், தம் முன்னாள் மதமான ஹிந்து மதத்தைப் பற்றி எங்கு பேசினாலும், ‘மத வெறி பிடித்த மதம்’ என்றே குறிப்பிடுகின்றவர். அவர்களுடைய ‘பரிபாஷை’ இது.

இங்கு கவனிக்க வேண்டியது என்னவென்றால், ஹிந்துக்களைத் தவிர பிற மதத்தவரிடம் உள்ள முக்கியமான குணம், வெறுப்பு. இந்த வெறுப்பு அவர்களுடைய ஒவ்வொரு அணுவிலும் செயல்பட்டுக் கொண்டேயிருக்கும். அடுத்தவருடைய மதத்தை அவர்களால் சகித்துக் கொள்ள இயலாது. இந்த குணம் ஹிந்துவல்லாத பிற இரு மதத்தவரிடமும்  காணப்படுகிறது.

குருதியின் சுவையை அறிந்த கொடூர மிருகத்திற்கு எந்த பிராணியைப் பார்த்தாலும் அடித்துக் கொன்று தின்ன வேண்டும் என்ற உணர்வே ஏற்படும். அதே போல் ஹிந்துவல்லாத மதங்களுக்குப் பிற மதத்தவரைப் பார்த்தால் வெறுப்பும், அவர்களைத் தம் மதத்திற்கு மாற்ற வேண்டும் என்ற எண்ணமும் பொங்கி வருகிறது. இதை கவனிக்காத நிலையில் ஹிந்துக்கள் இருக்கிறார்கள்.

எதை ஆதாரமாகக் கொண்டு ஹிந்து தர்மத்தை, ‘மதவெறி மதம்’ என்று கூறுகிறார்கள்?  தம் மதத்தில் தாம் இருப்பவர் ஹிந்து. மதம் மாற்றுவது என்பதை அறியாதவர் ஹிந்து. பிற மதங்களை நிந்திக்க மாட்டார். அதுமட்டுமின்றி, எல்லா மதங்களும் ஒன்றே என்று எண்ணும் அப்பாவி.  

மத மாற்றங்களும் இகழ்ச்சியும் நடக்கையில் யாரோ ஒரு ஹிந்து, எங்கோ ஓரிடத்தில் அதற்கு எதிர்வினையாற்றுவர். அதுவும் மிகக் குறைவே.

இதன் மூலம், பிற மதத்தவர் எப்போதுமே ஹிந்து மதத்தை வெறுப்போடு பார்த்து   எரிச்சலடைந்து ஹிந்துக்களிடம் அருவருப்போடு நடந்து கொள்கிறார்கள் என்பது தெளிவாகிறது. வாய்ப்பு கிடைத்தால், தம் மதத்திற்கு மாறாத ஹிந்துக்களை, ஒரு கால்மணி நேரத்தில் அழித்து விடவேண்டும் என்று காத்திருப்பவர்கள் அதிகம். இதனை அவர்களுடைய அறிவிப்புகளே தெரிவிக்கின்றன.    

இத்தனை துவேஷமும் வெறுப்பும் கொண்ட மதங்கள் தம்மை அன்பு மதங்கள் என்றும் அமைதி மதங்கள் என்றும் கூறிக்கொள்வது நகைப்புகுரியது.

இந்த வெறுப்புகள் இவ்வாறு இருக்கையில், ஹிந்து மதத்திற்குள்ளேயே ஒருவரை ஒருவர் வெறுப்பது வருத்தத்திற்கு உரியது. பிற மதங்களின் மீது கூட இரக்கம் கொள்வார்களோ என்னவோ, ஆனால் சொந்த மதத்தில் இருக்கும் மற்றொரு சம்பிரத்தாயத்தின் மீது வெறுப்பு கொண்டிருக்கும் பெரியவர்கள் ஹிந்து மதத்திலேயே உள்ளார்கள். விஷ்ணு பக்தர்கள் என்பர் கூறிக் கொண்டு சிவ துவேஷத்தையும், சிவ பக்தர்கள் என்று கூறிக் கொண்டு விஷ்ணு துவேஷத்தையும் பரப்பும் சிகாமணிகள்  இன்றைய கால கட்டத்திலும் உள்ளார்கள்.

அதுமட்டுமல்ல, ஒரே சம்பிரதாயத்தைச் சேர்ந்த அமைப்பிலும், ஒருவரைக் கண்டால் ஒருவருக்குப் பிடிக்காத மடங்கள் உருவாகுகின்றன. உண்மையில், அந்த அமைப்புகளில் ஒரே சித்தாந்தம், உயர்ந்த ஆச்சார்ய பரம்பரை, வேத சாஸ்த்திரங்களைப் படித்துப் பரப்புதல் போன்றவை சரியாக நடக்கின்றன. சனாதன தர்மத்தை விரும்புபவர்களுக்கு வேறு என்ன வேண்டும்? ஆனால், எங்களுடையதுதான் சரியானது என்ற தவறான அபிப்பிராயத்தால் அடுத்தவரை பாரபட்ச நோக்கத்தோடு சமூக வலைதளங்களில் வசைபாடுவதற்கும், மட்டம் தட்டிப் பேசுவதற்கும் கூட பின்வாங்காத நிலையைப் பார்க்க முடிகிறது.

உண்மையில், ஆச்சார்யர் என்ற தகுதியில் இருப்பவர்களிடம் இத்தகைய வேற்றுமைகளோ விமரிசனங்களோ இருக்காது. தவறான அபிப்பிராயத்தோடு ஒரு அமைப்பிற்கு கொம்பு சீவுபவர்கள், உண்மையில் சனாதன தர்மத்தையும், ஒரு நல்ல சம்பிரதாயத்தையும் அவமதிக்கிறோம் என்ற விஷயத்தை உணர்வதில்லை.

ஹிந்து மதத்தின் மீது தாக்குதல், ஆக்கிரமிப்புகள், வெறுப்புகள் எல்லாம் நடந்து வரும் நேரத்தில், சுயநலத்தோடு பரம்பரையாக வரும் சிறந்த தார்மிக அமைப்புகளின் மீதும், ஆச்சார்யர்களின் மீதும் விவாதங்களின் ஈடுபடுவது வருத்தத்திற்கு உரியது.

ஆச்சார்யர்களின் முன்னிலையில், தர்ம சாஸ்த்திர அறிஞர்களின் கோஷ்டியில்  தெளிவிக்க வேண்டிய கருத்துக்களை, பத்திரிகையாளர்களின் முன்னிலையிலும் சமூக வலைதளைகளிலும் வெறுப்பு வாக்கியங்களைக் கொண்டு இகழ்ந்து பேசி, நடுத்தெருவுக்கு இழுப்பது எவ்விதத்தில் தர்மத்தை ரட்சிப்பதாகும்? சாமானிய ஹிந்துவுக்கு குழப்பமும்,  ஹிந்து வெறுப்பாளர்களுக்கும் நாத்திகர்களுக்கும் திருப்தியும் அளிக்கும் இத்தகு செயல்களில் ஈடுபடும் ஹிந்து முக்கியஸ்தர்கள் சிந்திக்க வேண்டும்.

இவற்றைத் தமக்கு சாதகமாக எடுத்துக் கொண்டு, ஹிந்து எதிர்ப்பாளர்களைப் பரப்பும் மதமாற்று வெறியர்கள் மேலும் உற்சாகமடைகிறார்கள்.

‘முழுமையான தர்ம ரட்சணை’ என்ற ஒற்றைப் பெரிய லட்சியத்தை மறந்து விட்டு ஆதிக்கம் செலுத்துவதில் நாட்டம் கொண்டு, சமரசத்திற்குச் சற்றும் முயலாமல், வெறுப்புகளை மேலும் தூண்டுகிறார்கள்.

ஜாதிக்காக ஒற்றுமையாகப் போராடுபவர்கள், சனாதன தர்மத்திற்காக ஒன்றுபடுவதில்லை.  

எங்கு பார்த்தாலும் வேற்றுமை, வேறுபாடு. இவற்றால் தர்மம் புறக்கணிக்கப்படுகிறது     என்பதை உணர்வதில்லை. நம் தேசத்திலிருந்து துண்டாகப் பிரிந்த பக்கத்து தேசத்தில் ஹிந்துக்களின் மீது அதி பயங்கரமாகத் தாக்குதல்கள் நடத்தினாலும், அதேபோல் பாரத தேசத்திலும் நிகழ்த்துவோம் என்று அச்சுறுத்தி எச்சரித்தாலும், எந்த வித எதிர்வினையும்  காட்டாத ஹிந்துக்களின் ஒற்றுமையின்மையால் ஹிந்துமதம் மேலும் சீர்குலைகிறது.

ஒன்றுபட்ட ஹிந்து சக்தியை சாதிக்கப் போகிறோமா? மதங்களுக்கு வெறுப்பு  இருக்கலாமே தவிர, தர்மத்திற்கு வெறுப்பு கிடையாது. நம்முடையது மதமல்ல. தர்மம். இதனை ஹிந்துக்கள் அனைவரும் உணரவேண்டும்.

தேச நலனுக்கு மிக முக்கியமானவை ஹிந்து மத ஒற்றுமையும், சமரச நிலைப்பாடும்.  இவை சாத்தியமாக வேண்டும் என்று பரமேஸ்வரனை பிரார்த்தனை செய்வோம். சுயநலத்தோடு கூடிய வேறுபாடுகள் முடிவுக்கு வரவேண்டும் என்று விரும்புவோம்.  

(Source – ருஷிபீடம் ஆன்மீக மாத இதழ், ஜனவரி, 2025)