Home Blog Page 134

பொங்கல் கொண்டாட்டம்; வருமான வரித் துறை அலுவலகத்தில் வடிவேலு!

vadivelu in madurai income taxt office pongal function - 2026

வருமானவரித் துறை அலுவலகத்தில் நடைபெற்ற பொங்கல் கொண்டாட்ட நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நடிகர் வடிவேலு.

மதுரை பீ.பீ.குளம் பகுதியில் உள்ள வருமான வரித்துறை  ரெக்ரேஷன் கிளப் சார்பில் வருமானவரித் துறை அலுவலகத்தில் நடைபெற்ற பொங்கல் கொண்டாட்ட நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நடிகர் வடிவேலு செய்தியாளர்களை சந்தித்து பேசிய போது …

வருமானவரித்துறை சார்பில் நடைபெற்ற இந்த பொங்கல் விழாவில் கலந்துகொண்டது மகிழ்ச்சியாக உள்ளது. நான்கு நாளுக்கு முன்பு எனக்கு பொங்கல் வந்தது போல உள்ளது. மக்களோடு மக்களாக சேர்ந்து கொண்டாட வேண்டும் என்ற ஆசைப்பட்டேன் அது நடந்துவிட்டது. அதனை இங்கே சிறப்பாக  கொண்டாடி விட்டேன். 

மாடு பிடிக்கிற ஆள் நான் கிடையாது. மாடு பிடிப்பதை வேண்டுமென்றால் பார்க்கலாம் என்னைய அதுல தள்ளிவிட்டு போயிராதிங்க என்றார். ஜல்லிக்கட்டு போட்டியை முடிந்தால் பார்க்க போவேன். பொங்கலை முடித்துவிட்டு மீண்டும் சென்னைக்கு போக வேண்டும் நிறைய வேலை இருக்கிறது. மாட பார்த்து ஓடிருவேன் தவிர புடிச்சது கிடையாது .  மாடு எங்க வருது என யாருக்கு தெரியும் இப்பெல்லாம் கண்ட்ரோல விடுகிறார்கள். 

அப்போது எல்லாம் மாடு விடும்போது பேசிக்கிட்டு இருப்போம் பின்னால குத்தி தூக்கிட்டு போட்ரும் கண்ட்ரோல் இல்லாம இருந்துச்சு இப்ப கண்ட்ரோல்ல போய்கிட்டு இருக்கு ஜல்லிக்கட்டு ரொம்ப சிறப்பாக பெரிய லெவல்ல போய்கிட்டு இருக்கு . 

போட்டியை  பார்க்க வேண்டிய சூழல் இருந்தால் போய் பார்ப்பேன். இல்லையென்றால் பொங்கலை சிறப்பாக முடித்துவிட்டு ஊரில் போய் மற்ற வேலை பார்க்க வேண்டும் அடுத்த படத்திற்கு தயாராகிக் கொண்டிருக்கிறேன். 

அடுத்து கேங்கர்ஸ் சுந்தர் சி படத்திலும்,  பகத் பாசிலோடு சேர்ந்து மாரிசன் படம் ஒன்று என இரண்டு படங்களும் ரெடியாக இருக்கிறது அடுத்த பிரபுதேவா நானும் சேர்ந்து ஒரு படம் பண்ணுகிறோம் என்றார். 

ஏழைகளுக்கு கொஞ்சம் பார்த்து வரி போடுங்கள் என சொன்னேன் அது ஒன்னும் ஜாலியான மேட்டர் தானே வடிவேல் சொன்னதுனால எதுவும் தப்பில்லை ஏழை பாழைகளுக்கு  கொஞ்சம் பார்த்து வரி போடுங்கன்னு சொன்னேன். வேற ஏதாவது பேசுவோமா?

23ஆம் புலிகேசி மாதிரியான எப்போது படங்களை எதிர்பார்க்கலாம் ?

இப்போதெல்லாம் தேர்வுசெய்து  படங்களை நடிக்கிறேன் மாமன்னன் ஒரு மாதிரியான கதாபாத்திரம் ,  கேங்கர்ஸ் முழு நீள நகைச்சுவை படம்  ரொம்ப சிறப்பாக இருக்கும் கேங்கர்ஸ் குழந்தைகுட்டிகளோடு சேர்ந்து எல்லாரும் ரசிக்கும் அளவிற்கு பிரமாதமாக வந்துள்ளது .

மூன்று பரிமாணங்களில் நடித்த வந்தேன் ராக் காமெடி விட்டுவிட்டேன் , டிராக் காமெடி பண்ணேன், ஹீரோக்கள் காம்பினேஷன் பண்ணினேன், தனியாக ஹீரோ என மூன்று கைவசம் வைத்திருக்கிறேன். தற்போது டிராக் காமெடி இல்லை அதனால் பல கதையோடு காமெடி வருகிறது. 

ஹேங்கர்ஸ் படம் என்பது ஆதவன் படம் மாதிரி முழுக்க முழுக்க இந்த மாதிரி கதைகளை செலக்ட் பண்ணிக்கிட்டு நடிச்சுகிட்டு இருக்கேன் என்றார்.

தேர்தல் நேரத்தில் குழு அமைத்தல் கண்துடைப்பு! பழைய பென்சன் திட்டத்தை அமல்படுத்துக!

tn secretariat - 2026
#image_title

தேர்தல் நெருங்கும் நேரத்தில் குழு அமைத்தல் என்பது வெறும் கண் துடைப்பு; பழைய பென்சன் திட்டத்தையே அமல்படுத்துங்கள் என்று கோரி, தேசிய ஆசிரியர் சங்கம் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளது. அதன் பொதுச் செயலர் மு.கந்தசாமி வெளியிட்ட அறிக்கையில் கோரியிருப்பதாவது…

பழைய பென்சன் திட்டத்தை உடனே அமல் படுத்த கோருகிறோம்.
தேசிய ஆசிரியர் சங்கம் உள்ளிட்ட சங்கங்களின் தொடர் போரட்டத்திற்குப் பின் ஆசிரியர்கள், அரசு ஊழியர்களின் வாழ்வாதார பிரச்சனையான பென்ஷன் திட்டம் பற்றி இன்றுதான் தமிழக நிதியமைச்சர் சட்டப் பேரவையில் மௌனம் கலைந்து சில வாரத்தைகள் கூறியுள்ளார். அதற்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.

ஆனால் இந்த அரசு தங்களது தேர்தல் வாக்குறுதி எண் 309 ல் பழைய பென்சன் திட்டம் கொண்டு வருவோம் என அறிவித்திருந்தது. ஆனால் தற்போது மத்திய அரசு அறிமுகப் படுத்தியுள்ள ஒருங்கிணைந்த பென்ஷன் திட்டத்தை (UPS) பரிசீலிப்பதாக அறிவித்திருப்பது ஆசிரியர்கள் மத்தியில் ஏமாற்றம் அளிக்கிறது.

தமிழக அரசு, ஆசிரியர்களிடம் CPS திட்டத்தில் பிடித்தம் செய்த தொகையை மத்திய அரசின் PFRDA நிதியில் செலுத்தவில்லை. PFRDA ல் நிதியை செலுத்திய மாநிலங்களுக்குத்தான் மத்திய அரசின் UPS திட்டம் பொருத்தமானது. எனவே ஆசிரியர்களிடம் பிடித்தம் செய்த தொகை எங்கு முதலீடு செய்யப்பட்டுள்ளது.

அதனை எப்படி மத்திய அரசின் திட்டத்தில் இணைக்கப்போகிறது என்பதை நிதியமைச்சர் தெளிவு படுத்த வேண்டும். அதை விடுத்து தேர்தல் நெருங்கும் போதெல்லாம் குழு அமைக்கும் அறிவிப்பை பார்த்து இனிமேலும் ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள், ஏமாற மாட்டார்கள்.

எனவே, இந்த அரசு, உண்மையிலேயே ஆசிரியர்கள் அரசு ஊழியர்கள் மீது அக்கறையுள்ள அரசு என்பதை நிரூபிக்க, சங்கங்களை அழைத்து எந்தப் பென்ஷன் திட்டத்தை? எப்போது? எப்படி? அமல் படுத்தப் போகிறது என்ற அரசின் நிலைப்பாட்டை தெளிவு படுத்தவேண்டும். இல்லையேல் இது வெற்று அறிவிப்பாகவே பார்க்கப்படும்.

ஆசிரியர்கள் அரசு ஊழியர்கள் எதிர்பார்ப்பது பழைய ஓய்வூதியத்திட்டமே தவிர குழு அமைப்பது அல்ல என்பதால் சொன்னதைச்செய்யும் அரசு எனக் கூறிக் கொள்ளும் தமிழக அரசு தேர்தல் வாக்குறுதிப்படி. பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த உத்தரவிட வேண்டுகிறோம்

கண் ஜாடை காட்டி அக்கிரமம் நிகழ்த்துபவரா ஸ்டாலின்? என்ன சொல்கிறார் சத்தியமூர்த்தி?

mkstalin chess.jpeg - 2026

— ஆர். வி. ஆர்

கவர்னர் ஆர். என். ரவி தமிழக சட்டசபையில் இருந்து சமீபத்தில் வெளிநடப்பு செய்தார். காரணம்: மத்திய அரசு உத்தரவை ஏற்று கவர்னரின் வருகையை ஒட்டி சட்டசபையில் தேசிய கீதம் இசைக்கப் படவில்லை, அவையில் அவர் கேட்டுக்கொண்ட பின்னும் அது நடக்கவில்லை. தேசிய கீதத்திற்கு அவமதிப்பு நேர்கிறது என்று கவர்னர் உடனே சபையை விட்டு வெளியேறினார்.

“முதல்வர் ஸ்டாலின் மட்டும் கண் ஜாடை காட்டி இருந்தால் சட்டசபையில் இருந்து வெளிநடப்பு செய்த கவர்னர் ரவியின் கோட்டு சூட்டைக் கிழித்து, டிராயருடன் அனுப்பி இருப்போம்” என்று ஒரு திமுக தலைவர் பின்னர் ராமநாதபுரத்தில் பேசினார். அவர் பெயர் சத்தியமூர்த்தி. முன்பு இவர் அதிமுக-வில் இருந்து அப்போது மாநில அமைச்சராகப் பதவி வகித்தவர்.

முதல்வர் கண் ஜாடையின் அர்த்தத்தை, அற்புத சக்தியை, இப்படி ஒரு தலைவர் விளக்குவதைக் கேட்கப் புல்லரிக்கிறது! இருந்தாலும், இதில் பலருக்கும் பிடிபடாத சில விஷயங்கள் உண்டு. முதல்வரின் கண் ஜாடை மகிமையை விவரித்த மனிதர்தான் இவை பற்றித் தெளிவுபடுத்த வேண்டும். அவருக்கான கேள்விகள் இவை.

கவர்னர் ரவி சட்டசபையில் பேசும்போதோ, அல்லது அங்கிருந்து வெளிநடப்பு செய்ய முயலும்போதோ, அவையிலுள்ள திமுக எம்.எல்.ஏ-க்கள் கவர்னரைப் பார்க்கக் கூடாது, அவர் பேச்சையும் கவனிக்கக் கூடாது, ஆனால் முதல்வரின் கண் ஜாடையை அறிவதற்காக முதல்வரின் கண்களைப் பார்த்தபடி இருக்க வேண்டும் என்று முன்பே அறிவுறுத்தப் பட்டார்களா?

கவர்னர் ரவி தொடர்பாக, முதல்வர் எத்தனை வகையான கண் ஜாடைகளை வெளிப்படுத்தக் கூடியவர், அவை ஒவ்வொன்றும் திமுக-வினருக்கு நன்றாகப் புரியுமா?

‘கவர்னரை ஒன்றும் செய்யவேண்டாம், அவர் பாட்டுக்கு வெளிநடப்பு செய்யட்டும்’ என்று முதல்வர் கருணை கூர்ந்து தெரிவிக்கும் கண் ஜாடை ஒன்று உண்டா? உதாரணமாக: முதல்வர் வெறுமனே கண்களை மூடியபடி அமர்ந்திருப்பது, அல்லது மோட்டு வளையைப் பார்த்தபடி இருப்பது, என்பதாக?

கவர்னர் சட்டசபையிலிருந்து வெளிநடப்பு செய்யும்போது அவருடைய கோட்டு சூட்டைக் கிழிக்காமல், அவர் கையை மட்டும் இழுத்து விடுவது, காலை மட்டும் இடறி விடுவது, என்பதற்கும் முதல்வர் சில கண் ஜடைகளை வைத்திருக்கிறாரா?

கிழிக்க வேண்டும் என்றால், கவர்னரின் கோட்டை மட்டும் கிழித்துவிட்டு, அல்லது பேண்டை மட்டும் கிழித்து விட்டு, அவருடைய மற்ற உடைகளுக்கு சேதாரம் ஆகாமல் அவரை அனுப்பிவிட முதல்வரிடம் விசேஷ கண் ஜாடை உண்டா?

முதல்வரின் கண் ஜாடை உத்தரவுகளைத் தவறாகப் புரிந்துகொண்டு ஒன்றுக்குப் பதில் மற்றதைச் செய்துவிடக் கூடாது, ஒன்றுக்குப் பதில் மற்றதைக் கிழிக்காமல் இருக்கவேண்டும், என்பதற்காக சம்பத்தப்பட திமுக-வினருக்கு ‘முதல்வரின் கண் ஜாடைப் பயிற்சி வகுப்புகள்’ நடந்திருக்குமா?

சத்தியமூர்த்தி பேசியதைப் போல், ‘லோக் சபையில் மோடி கண் ஜாடை காட்டினால் ராகுல் காந்தியின் – அல்லது ஒரு திமுக உறுப்பினரின் – ஆடைகளைக் கிழிப்போம்’ என்று எந்த பாஜக தலைவரும் பேசியதில்லை, அப்படி அவருக்குப் பேசவும் தோன்றாது, அதற்கான தைரியமும் வராது.

ஒரு அரசியல் கட்சியின் பிரதான தலைவருடைய பண்புகள் எத்தகையவை, நாட்டைப் பற்றிய அவருடைய சிந்தனை என்ன, அரசியலில் அவர் நீடிப்பதின் நோக்கம் எது, அந்த நோக்கத்திற்கான அவரது வழிமுறைகள் யாவை – இவற்றைப் பொறுத்துதான் அந்தக் கட்சிக்கு இரண்டாம், மூன்றாம் கட்டத் தலைவர்கள் வந்து சேருவார்கள். அதற்கு ஏற்பதான் அந்தக் கட்சிக்கு லோக்கல் பிரமுகர்களும் அமைவார்கள்.

நமது நாட்டின் அப்பாவி மக்களுக்கு – ஏழ்மையில் அல்லது குறைவான வருமானத்தில் வைக்கப் பட்டிருக்கும் பெருவாரியான மக்களுக்கு – பொது வாழ்வில் அப்பட்டமாக நிகழும் அவலங்களே சரியாக, ழுவதுமாக, பிடிபடுவதில்லை. ஆனால் சட்டசபையில் ஒரு முதல்வரின் கண் ஜாடையைக் கவனித்தே அவர் கட்சி உறுப்பினர்கள் அந்த சபையில் ஒரு அடாவடியை, அக்கிரமத்தை, நிறைவேற்றுவார்கள் என்று திமுக-வின் இரண்டாம் கட்டத் தலைவர் சத்தியமூர்த்தி பேசுகிறார். திமுக தலைமை அவர் பேசியதை நிராகரிக்கவில்லை, அவரைக் கண்டிக்கவில்லை. இது இன்னும் கவலைக்குரியது.

நாம் இப்போதைக்கு என்ன செய்யலாம்?

இறைவனின் கண் பார்வை தமிழகத்தின் மீது பரவட்டும், அரசியல் உலகில் தீய கண் ஜாடைகள், கெட்ட நோக்கங்கள், செயலிழக்கட்டும் என்று தானே நாம் பிரார்த்திக்க முடியும்?

Author: R Veera Raghavan, Advocate, Chennai
veera.rvr@gmail.com
https://rvr-india.blogspot.com

கோயில்களுக்கு அருகே இறைச்சிக் கடைகள்; அகற்ற நடவடிக்கை எடுக்க இந்து முன்னணி கோரிக்கை!

protest near pollachi for supporting bjp man - 2026

மாரியம்மன் கோவில் அருகே மாட்டுக் கறி பிரியாணி கடை – கேள்வி கேட்டவர் மீது பொய் வழக்கு – போராடத் திரண்ட ஊர் மக்கள் – தமிழகம் முழுக்க கோவில்களுக்கு அருகில் உள்ள இறைச்சி கடைகளை உடனே அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று, இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா C. சுப்பிரமணியம் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

கோவை மாவட்டம், உடையாம்பாளையம் பகுதியில் மிகவும் பழமையான மாரியம்மன் கோவில் உள்ளது. மக்கள் அன்றாடம் வழிபட்டு வருகின்ற கோவிலின் அருகே இறைச்சி கடைகள் இருக்கக் கூடாது என்பது அந்த ஊரின் கட்டுப்பாடு. அதையும் மீறி சில மாதங்களாக அங்கே முஸ்லிம் தம்பதியினர் மாட்டுக்கறி பிரியாணிக் கடையை நடத்தி வந்தனர்.

உடையாம்பாளையம் கிராமத்தின் ஊர் பெரியவர்களில் ஒருவரும், பாரதிய ஜனதா கட்சியினுடைய பொறுப்பாளருமான சுப்பிரமணியம் அவர்கள் மாரியம்மன் கோவில் அருகே இறைச்சி கடை இருக்கக் கூடாது என்பது பல ஆண்டுகளாக கட்டுப்பாடு. அதன் அருகே நீங்கள் மாட்டுக்கறி வியாபாரம் செய்ய கூடாது எனவும் அந்த கடை உரிமையாளரிடம் வேண்டுகோள் விடுத்தார்.

பிரியாணி வியாபாரம் செய்து வரும் முஸ்லிம் தம்பதியினர் சில முஸ்லிம் அமைப்புகளை திரட்டி கொண்டு கோவை மாநகர காவல் துறை ஆணையாளரிடம் சுப்பிரமணியம் அவர்கள் எங்களை மாட்டுக்கறி பிரியாணி கடை நடத்தக் கூடாது என மிரட்டுகிறார் என புகார் அளித்தனர். மாட்டுக்கறி பிரியாணி வியாபாரம் செய்யக்கூடாது என்று சொல்ல இவர் யார்? என்றும் மாட்டிறைச்சி தடை செய்யப்பட்டதா? என்றும் பத்திரிக்கைகளுக்கு பேட்டி அளித்தனர்.

நடந்ததை முழுமையாக விசாரிக்காமல் காவல்துறையும் சுப்பிரமணியம் அவர்கள் மீது நான்கு பிரிவுகளில் பொய்வழக்கு பதிவு செய்தது.
இரண்டு நாட்களாக சில ஊடகங்கள் நடந்தது என்னவென்று தெரியாமல் சுப்பிரமணியம் அவர்கள் தான் பிரியாணி கடை வைத்திருப்பவர்களை மிரட்டினார் என செய்தி வெளியிடுகின்றன.

சிறுபான்மைக்கு ஆதரவாக குரல் கொடுக்கிறோம் என்ற பெயரில் எப்பொழுதும் போல தமிழக அரசும் காவல்துறையும் அதிகார துஷ்பிரயோகத்தை பயன்படுத்தி வழக்குப் பதிவு செய்திருக்கிறது.

கோவில்கள் என்பது புனிதமான இடம். கோவில்களின் முன்பு இறைச்சி பிரியாணிக் கடை நடத்துவது என்பது பக்தர்களுடைய மனதை புண்படுத்துவதாக அமைகிறது. கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பாக சேலம் மாவட்டத்தில் கோவில் முன்பாக இறைச்சி கடை நடத்தி வந்ததை பொதுமக்களும் பக்தர்களும் திரண்டு கேள்வி கேட்டனர். இந்த விவகாரத்தில் இந்து முன்னணி பேரியக்கம் தலையிட்டு அதிகாரிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி இறைச்சிக் கடையை அப்புறப்படுத்த உதவியது.

இதே போல தமிழகம் முழுக்க பல்வேறு கோவில்களின் முன்பாக இறைச்சி கடைகள் செயல்பட்டு வருகின்றது. இந்துக்களின் சமய நம்பிக்கைக்கு மரியாதை அளிக்காத அரசு இதைக் கண்டு கொள்வதில்லை. இது போன்ற சம்பவங்கள்தான் சமுதாயத்தில் ஜாதி மதக் கலவரங்களை உருவாக்கும் என்பதை அரசாங்கம் உணர வேண்டும்.

தமிழகத்தில் பல கோவில் இடங்களில் கூட அனுமதி இல்லாமல் பல இறைச்சிகடைகளும் பிரியாணி கடைகளும் நடந்து வருகின்றன. இவர்களுக்கு யார் அனுமதி கொடுத்தது? இது சுகாதாரமானது தானா? என்பது பற்றி எல்லாம் அரசாங்கமும் நிர்வாகமும் கவலைப்படுவதில்லை.

பசுக்களை தெய்வமாக வணங்கும் இந்துக்கள் அதிகம் வசிக்கின்ற பகுதியில் திட்டமிட்டே மாட்டிறைச்சி உணவுகள் விற்கப்படுகின்றன என்பதையும் இந்த அரசாங்கம் கவனத்தில் கொள்ள வேண்டும்.

தமிழகத்தில் எங்கெல்லாம் கோவில்கள் முன்பு இது போன்ற அசைவ உணவு கடைகள் இருக்கிறதோ அதையெல்லாம் தமிழக அரசு உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும்.

இந்நிலையில் கோவை – உடையாம்பாளையத்தில் மாரியம்மன் கோவில் அருகே மாட்டு கறி பிரியாணி கடை நடத்திய விவகாரம், இந்துக்கள் மத்திய மிகப்பெரிய கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. நேற்று அந்த கிராமத்தில் உள்ள அனைத்து மக்களும் இந்த மாட்டுக்கறி பிரியாணி கடையை உடனே அகற்ற வேண்டும் எனவும் அந்தக் கடையை அப்புறப்படுத்த கோரிய சுப்பிரமணியம் அவர்கள் மீது பதிவு செய்த பொய் வழக்கை உடனே திரும்ப பெற வேண்டும் எனவும் போராட்டத்தை கையில் எடுத்துள்ளனர். அந்த கிராமத்தில் உள்ள அனைத்து பெண்களும் குடும்பத்தோடு வீதியில் அமர்ந்து போராட்டம் நடத்தியுள்ளனர்.

ஆகவே பெரும்பான்மை இந்து மக்களின் உணர்வுகளுக்கு இந்த அரசாங்கம் மதிப்பளிக்க வேண்டும் எனவும் சுப்பிரமணியம் அவர்கள் மீது பதிவு செய்த வழக்கை உடனடியாக திரும்ப பெற வேண்டும் எனவும் இந்து முன்னணி பேரியக்கத்தின் வலியுறுத்துகிறது.

செங்கோட்டை அரசு மருத்துவமனையில் சமத்துவ பொங்கல் விழா

samathuva pongal in sengottai hospital - 2026

செங்கோட்டை, ஜன, 10: செங்கோட்டை அரசு மருத்துவமனை வளாகத்தில் வைத்து பொங்கல் பண்டிகைக்கு ஒரு சில நாட்களில் இருக்கும் நிலையில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் சமத்துவ பொங்கல் விழா உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டு வருகிறது.

அந்த வகையில் தென்காசி மாவட்டம் செங்கோட்டை அரசு மருத்துவமனையில் புகையில்லா சமத்துவ பொங்கல் விழா மிக விமர்சையாக கொண்டாடப்பட்டது விழாவிற்கு தலைமை மருத்துவர் டாக்டர் ராஜேஷ்கண்ணா தலைமைதாங்கினார்.

மருத்துவர்கள் செவிலியர்கள் முன்னிலை வகித்தனா். ஆய்வக ஆய்வக நுட்பனர் ஹரிஹரநாராயணன் அனைவரையும் வரவேற்று பேசினார்.

பின்னா் மருத்துவமனை வளாகத்தில் படையலிட்டு புகையில்லா பொங்கல் வைத்து அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது. அதனைதொடா்ந்து செவிலியா், மருத்துவா்கள், பணியாளா்களுக்கான பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு அதில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற அனைவருக்கும் பரிசுகள் வழங்கப்பட்டது.

போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு செங்கோட்டை செல்வகணபதி மார்க்கெட்டிங் உரிமையாளர் ராஜி செல்வகணேஷ் மற்றும் தொழிலதிபர்கள் ரேகா, ரமேஷ், கணக்கப்பிள்ளைவலசை சண்முகத்தாய் ஆகியோர் பரிசுகளை வழங்கினர். டாக்டர்சுரேஷ், நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினர்.

முடிவில் மருந்தாளுநர் அப்பாஸ் மீரான் நன்றி கூறினார். விழாவில் மருத்துவா்கள், செவிலியா்கள், அலுவலக பணியாளர்கள் சமூக ஆர்வலா்கள், மருத்துவமனை ஆலோசனைக்குழு உறுப்பினா்கள், பொதுமக்கள் உள்பட பலா் கலந்து கொண்டனர்.

மதுரை மாவட்ட கோவில்களில் நாளை சனி மஹா பிரதோஷம்!

sani pradosham in pralayanathar temple - 2026

மதுரை மாவட்டத்தில் உள்ள சிவன் கோவில்களில், ஜன 11 சனிக்கிழமை மாலை 4:00 மணிக்கு சனி மகா பிரதோஷ விழா நடைபெறுகிறது. கோயில்களில் மாதந்தோறும் இரண்டு பிரதோஷம்  நடைபெறுவது வழக்கம். அதன்படி, மதுரை மாவட்ட கோயில்களில், சனி மகா பிரதோஷ ம் மாலை ,4 மணிக்கு நடைபெறுகிறது.

 இதை ஒட்டி, கோயில்கள் அமைந்துள்ள நந்திகேஸ்வரன் , சிவபெருமான் ஆகியோர்களுக்கு சிறப்பு அபிஷேகங்கள் பூஜைகள் நடைபெறும். இதை அடுத்து, சிவ பெருமான்  அம்பாள் ரிஷப வாகனத்தில் அலங்காரமாகி கோவில் பிரகாரத்தில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலிப்பார் .

இதே போல சனி மகா பிரதோஷம் முன்னிட்டு சிவபெருமானுக்கு சிறப்பு அபிஷேக பூஜைகள் பக்தர்கள் நடத்தப்படுகிறது. அடுத்து கோயில் சார்பில்,  பக்தர்களுக்கு பிரசாதங்கள் வழங்கப்படும்.

மதுரை அருகே விசாக நட்சத்திர ஸ்தலமான கருதப்படும் பிரளயநாத சிவன் ஆலயத்தில், ஜன.11.ம் தேதி சனிக்கிழமை மாலை 4.15..மணிக்கு சனிமஹா பிரதோஷம் அபிஷேகம், பூஜகள் நடைபெறுகிறது.

இதற்கான ஏற்பாடுகளை, தொழிலதிபர் எம்.வி.எம். மணி, பள்ளித் தாளாளர் எம். மருதுபாண்டியன்,  கோயில் நிர்வாக அதிகாரி இளமதி, கவுன்சிலர் வள்ளி,  கணக்கர் சி. பூபதி ஆகியோர்கள் செய்து வருகின்றனர்.

மதுரை மீனாட்சி அம்மன் கோவில், தெப்பக்குளம் முத்தீஸ்வரர் கோவில்  திருவேடகம் ஏடகநாதர் சுவாமி ஆலயம், தென்கரை மூலநாதர் சுவாமி ஆலயம், மதுரை அண்ணா நகர், தாசில்தார் நகர்,  சௌபாக்கிய விநாயகர் திருக்கோவில்,  சித்தி விநாயகர் கோவில், வரசித்தி விநாயகர்,  மதுரை பாண்டி கோவில் ஜெ. ஜெ.நகர், வரசக்தி விநாயகர் கோவில், மதுரை வைகை காலனி வைகை விநாயகர் ஆலயம், மதுரை அண்ணாநகர், யாருக்குதான் முத்து மாரியம்மன் ஆலயம் உள்ளிட்ட கோயில்களில், சனி மகா பிரதோஷம் சிறப்பாக நடைபெறுகிறது.

இதற்கான ஏற்பாடுகளை ,கோயில் நிர்வாகிகள் மற்றும் ஆலய பணியாளர்கள் பிரதோஷ விழா கமிட்டியினர் சிறப்பாக செய்து வருகின்றனர்.

வைகுண்ட ஏகாதசி விழா; ஸ்ரீரங்கம் உள்ளிட்ட தலங்களில் பரமபதவாசல் திறப்பு!

srirangam vaikuntavasal thiruappu - 2026

ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாத சுவாமி திருக்கோயில் நம்பெருமாள் வைகுந்த ஏகாதசி பெருவிழா பரமபத வாசல் திறப்பு சிறப்பாக நடைபெற்றது.

திருச்சி ஸ்ரீரங்கம் அரங்கநாதர் சுவாமி திருக்கோயிலில் நடபெற்ற வைகுண்ட ஏகாதசி பரமபத வாசல் திறப்பு விழாவில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு நம்பெருமாளை தரிசனம் செய்தனர்.

திருச்சி மாவட்டம், ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோவிலில் இன்று காலை 5.15க்கு பரமபதவாசல் திறக்கப்பட்டது. நம்பெருமாள் பாண்டியன் கொண்டை, கிளிமாலை, ரத்தின அங்கி அலங்காரத்தில் பரமபத வாசலைக் கடந்து எழுந்தருளினார். பக்தர்கள் ரங்கா ரங்கா என்ற முழக்கத்துடன் நம்பெருமாளை தரிசித்தனர்.

வைகுண்ட ஏகாதசித் திருவிழாவின் முக்கிய நிகழ்வான பரமபத வாசல் திறப்பு நிகழ்ச்சி, தமிழகத்தில் உள்ள பெரும்பாலான பெருமாள் திருக்கோயில்களில் இன்று நடைபெற்றது. பகல்பத்து உத்ஸவம் காணும் ஆலயங்களில் காலையும், இராப்பத்து உத்ஸவம் காணும் ஆலயங்களில் இன்று மாலையும் பரமபத வாசல் திறப்பு நிகழ்ச்சி நடைபெறுவது வழக்கம். 

பூலோக வைகுண்டம் என்று அழைக்கப்படும் ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோவிலில் பகல்பத்து எனப்படும் பத்து நாட்களில் திருமங்கையாழ்வாரின் திருமொழிப் பாசுரங்கள் அரையர் சேவையாக சேவிக்கப்படும். அடுத்து இராப்பத்து எனப்படும் நம்மாழ்வாரின் திருவாய்மொழி பாசுரங்கள் ஆயிரமும் வைகுண்ட ஏகாதசியை அடுத்து வரும் பத்து நாட்களில் சேவிக்கப்படும். இவையே திருமொழித் திருநாள், திருவாய்மொழித் திருநாளென ஸ்ரீரங்கத்தில் பகல்பத்து இராபத்து என இருபது நாட்களும் நடத்தப்பெறும். 

ஸ்ரீரங்கத்தில், வைகுண்ட ஏகாதசிப் பெருவிழா திருநெடுந்தாண்டகம் நிகழ்ச்சியுடன் கடந்த டிசம்பர் 30 ஆம் தேதி தொடங்கியது. தொடர்ந்து நடந்த பகல் பத்து திருவிழாயில் ஒவ்வொரு நாளும் நம்பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். காலை வேளைகளில் அர்ச்சுன மண்டபத்தில் ஆழ்வார்கள் ஆசார்யர்கள் சகிதம் எழுந்தருளி, அரையர்களின் தீந்தமிழ்ப் பாசுரங்களை செவிமடுத்து அருளினார். 

வைகுண்ட ஏகாதசி விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பரமபத வாசல் திறப்பை முன்னிட்டு, விரஜாநதி மண்டபத்தில் பெருமாள் வேத விண்ணப்பம் கேட்டருளினார். தொடர்ந்து காலை 5.15 மணி அளவில் பரமபத வாசல் திறக்கப்பட்டது. பரமபத வாசலைக் கடந்த நம்பெருமாளை லட்சக்கணக்கான பக்தர்கள், ரங்கா ரங்கா என்ற முழக்கம் மேலிட தரிசனம் செய்தனர். அதன் பின்னர் ஆயிரங்கால் மண்டபம் பகுதிக்கு நம்பெருமாள் எழுந்தருளினார். இன்று பக்தர்களுக்கு அங்கே சேவை சாதிக்கிறார்.

ஸ்ரீரங்கத்தை அடுத்து, திருப்பதி வேங்கடாசலபதி திருக்கோவிலிலும், சென்னை திருவல்லிக்கேணி, காஞ்சிபுரம் உள்ளிட்ட திவ்யதேசங்களில் உள்ள கோயில்களிலும், தமிழகம் முழுவதும் உள்ள பெரும்பாலான பெருமாள் கோவில்களிலும், பரமபதவாசல் திறப்பு நிகழ்ச்சி வெகு சிறப்பாக நடந்து வருகிறது.

நெல்லை வரதராஜ பெருமாள் கோயில் பரமபத வாசல் திறப்பு ரத்து; இந்து முன்னணி கண்டனம்!

hindumunnani
hindumunnani

திருநெல்வேலி சந்திப்பு வரதராஜ பெருமாள் கோவில் சொர்க்கவாசல் நிகழ்ச்சி ரத்து செய்யப் பட்டதற்கு, இந்து சமய அறநிலையத்துறைக்கு இந்து முன்னணி கண்டனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக, இந்து முன்னணி மாநில செயலாளர் கா.குற்றாலநாதன் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது…

திருநெல்வேலி மாநகரம் திருநெல்வேலி சந்திப்பு அருள்மிகு வரதராஜ பெருமாள் திருக்கோவில் மிகவும் பிரசித்தி பெற்ற வைணவ திருத்தலங்களில் ஒன்றாகும். ஆண்டுதோறும் இங்கு வைகுண்ட ஏகாதசி திருவிழா மிகவும் சிறப்பாக நடைபெறும். வைகுண்ட ஏகாதசி திருவிழாவின் முக்கிய நிகழ்வான சொர்க்கவாசல் திறப்பு வைபவமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்க விமர்சியாக நடைபெறும்.

ஆனால் இந்த ஆண்டு (2025) சொர்க்கவாசல் திறப்பு விழா இல்லை என திருக்கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது பக்தர்களிடையே மிகுந்த வேதனையும் அதிர்ச்சியும் ஏற்படுத்தி உள்ளது.

வைகுண்ட ஏகாதசி திருவிழா நிகழ்வுகளே துவங்கப்படவில்லை என்பது தற்போது தான் பக்தர்களுக்கு தெரிய வருகிறது. சொர்க்கவாசல் அருகே பழைய அலுவலக கட்டிடம் இருந்த இடத்தில் மின் கசிவு இருப்பதை காரணம் காட்டி திருவிழாவையே நிறுத்தி வைத்துள்ளது திருக்கோவில் நிர்வாகம் இந்து சமய அறநிலைய துறையின் நிர்வாக சீர்கேட்டை வெளிப்படுத்துகிறது. மின் கசிவு என்பது சில மணி நேரங்களில் சரி செய்யக்கூடிய ஒரு சாதாரண பிரச்சனை இதற்காக பத்து நாள் திருவிழாவையே நிறுத்தி வைத்து வைணவ திருத்தலங்களில் மிக முக்கியமான திருவிழாவாக கருதப்படும் வைகுண்ட ஏகாதசி திருவிழாவை நிறுத்தி வைத்துள்ளது அறநிலையத்துறையின் அலட்சியப் போக்கையே வெளிப்படுத்துகிறது.

இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் இந்து ஆலயங்கள் சிக்கி சீரழிந்து பாரம்பரியம் அழிக்கப்பட்டு வருகிறது என்பதற்கு இந்த சம்பவமே உதாரணமாகும். சனாதன ஒழிப்பு என்ற திமுகவின் செயல் திட்டத்தை இந்து சமய அறநிலையத்துறையை கையில் வைத்துக்கொண்டு தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது என பொதுமக்கள் கருதுகின்றனர்

பாரம்பரியமான சொர்க்கவாசல் திருவிழாவை உடனடியாக நடத்த வேண்டும் , வைகுண்ட ஏகாதசி திருவிழாவை நடத்தாமல் நிறுத்திய திருக்கோவில் செயல் அலுவலர் மற்றும் திருக்கோவில் பணியாளர்கள் திருக்கோவிலின் தக்கார் உதவி ஆணையாளர் ஆகியோர் மீது இந்து சமய அறநிலையத் துறையும் தமிழக அரசும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்து முன்னணி கேட்டுக்கொள்கிறது

வைகுண்ட ஏகாதசி; தமிழ்மறை போற்ற ஓர் உத்ஸவம்!

srirangam day 3 - 2026

வைகுண்ட ஏகாதசி உற்ஸவம் என்றால் அது திருவரங்கன் கோயிலே! மார்கழி சுக்ல பட்ச ஏகாதசியிலிருந்து 10 நாட்கள் வேத மந்திரம் முழங்க பெருமாளை பூஜிக்க வேண்டும். ஆகமக் கட்டளையான இதன்படி பெருமாளின் சந்நிதிகளில் நடத்தப்படும் விழாவை வைகுண்டோத்ஸவம், மோட்ச உற்ஸவம் என்கிறோம். அனைத்து வைணவ ஆலயங்களிலுமே அந்த தினத்தன்று வடக்குக் கோபுரம் வழியாக உற்ஸவரை எழுந்தருளச் செய்து வணங்குதல் பெரிய பாக்கியம் என்கிறது சாஸ்திரம்.

“வேதம் தமிழ் செய்த மாறன்’ எனப் போற்றப்படுபவர் நம்மாழ்வார். வேதபூர்வமாக நடந்து வந்த இந்தத் திருவிழா, நம்மாழ்வாருக்காக, தமிழ் வேதத்தின் செழுமையைப் பறைசாற்ற நம்பெருமாளின் உத்தரவுப்படி “திருவாய்மொழித் திருநாள்’ என்று

ஆனது.

சாதாரணமாக திருநாட்களின்போது, ஏழாம் திருநாளில் தாயார் சந்நிதி சென்று அங்குள்ள நவராத்ரி மண்டபத்தில் திருமஞ்சனம் கண்டருளி, தாயாருடன் மாலை மாற்றி பிறகு கருவறையை அடைவது அரங்கனின் வழக்கம். ஆனால் இந்தத் திருவாய்மொழித் திருநாளில் மட்டும் அரங்கன் தாயார் சந்நிதி பக்கமே செல்வதில்லை. திருமாமணி மண்டபத்தில் அரையர்களுடன் அரங்கனின் சேவைக்காகக் காத்திருக்கும் ஆழ்வாருக்காக இங்கே எழுந்தருள்வார். ஆழ்வார்களின் அருளிச் செயலில் அவ்வளவு ஈடுபாடு

அரங்கனுக்கு.

இந்த நாட்களில், நம்மாழ்வாரின் பாசுரங்களைப் பாடிக் களிக்கும் பேறு பக்தர்க்கு வாய்க்கிறது. 10 நாள் நடக்கும் உற்ஸவம் இராப்பத்து என வழங்கப்படுகிறது.

இதே விதத்தில், மற்ற ஆழ்வார்களின் பாசுரங்களையும் பாடி மகிழ, ஸ்ரீமந் நாதமுனிகள் தோற்றுவித்ததே திருமொழித் திருநாளான பகல்பத்து என்ற 10 நாள் உற்ஸவம்.

நம்மாழ்வார், “சூழ்விசும் பணி முகில்’ என்ற பத்துப் பாசுரங்களில், தாமே விண்ணுலகு சென்று மீளும் அனுபவத்தைப் பாடினார்.

“”ஸ்ரீவைகுந்தம் செல்லும்போது, மேகம் நிறைந்தன. தூரியம் முழக்கின. ஆழ்கடல் அலை ததும்பி கையெடுத்துக் கும்பிட்டு வரவேற்றன. வானவர் தேவர் எதிர் நின்று வரவேற்றனர். மாதவன் அடியார் எனத் தெரிந்ததும் வானவர் “எம் இல்லத்தே தங்குங்கள், எங்கள் இருப்பிடம் வாருங்கள்’ என்று வற்புறுத்தி அழைத்தனர்” என்றெல்லாம் தாம் கண்ட காட்சியைக் கூறும் நம்மாழ்வார், ஸ்ரீவைகுந்த விரஜா நதியையும், கமுகும் மரங்களும் தோரணங்களும் கட்டப்பட்டு வரவேற்பு அளிக்கப்பட்டதையும், பெருமானின் இடத்தே கொண்டு சேர்க்கப்பட்டதையும் தம் அனுபவத்தால் பாடிவைத்தார். அதாவது, ஒரு ஜீவன் எப்படி பரமனின் திருவடி புகுகிறது என்பதை இவ்வாறு நம்மாழ்வார் தாம் ஞான திருஷ்டியால் கண்டதைப் பாடினார்.

இதற்கு “அர்ச்சித்ராதி மார்க்கம்’ என்று பெயர் வைத்தார். இந்த மார்க்கத்தில், ஒரு ஜீவன் மண்ணுலகு விட்டு விண்ணுலகு செல்லும் அனுபவத்தைக் கூறுகிறார் நம்மாழ்வார்.

இந்த அனுபவத்தை உலகத்தார் எல்லோரும் தெரிந்துகொள்ள அதனை நம்பெருமாளை முன்னிட்டு நடத்திக்காட்ட வேண்டினார் திருமங்கையாழ்வார். அவரது வேண்டுகோளை ஏற்ற அரங்கன், அதனைத் தாமே நடத்திக் காட்ட முன்வந்தார்.

ஒரு ஜீவன் பகவானை அவனது அருளால் அடைவது முக்தி என்ற மோட்சம். இதை அடைவதற்கான வழி அர்ச்சித்ராதி வழி. பிறவாப் பெருநிலை. மீண்டும் பிறவி எடுக்கும் நிலையை தூமாதிகதி என்பர்.

மோட்சம் செல்லும் வழியில் முதலில் “விரஜா நதி’ என்னும் புண்ணிய நதி ஓடுகின்றது. இதில் ஒரு ஜீவன் முங்கி திருக்குளியல் செய்து பின்பே மோட்சம் அடைகிறது.

திருவரங்கம் கோயிலில், வைகுண்ட ஏகாதசியன்று நம்பெருமாள் போர்வை சாற்றிக் கொண்டு கருவறையில் இருந்து வெளியே வருகிறார். கோயிலில் மூன்றாவது பிராகாரமான துரை பிரதட்சிணம் என்பதே பிரக்ருதி மண்டலமான பூமி. பரமபத வாசலுக்கு உட்புறம் உள்ள நாலுகால் மண்டபம் விரஜா நதி மண்டபம். இது விரஜா நதிக்கு ஒப்பாகும். இங்கேதான் பெருமாள் வேத விண்ணப்பங்களைக் கேட்கிறார்.

இந்த வேத விண்ணப்பமானது வைகுண்டத்தில் வாசம் செய்யும் நித்ய சூரிகளின் வரவேற்புக்கு ஒப்பாகும். இதைத் தாண்டியவுடன், வடக்கே உள்ள பரமபத வாசலுக்கு முன்னர் நம்பெருமாள் போர்வைû யக் களைந்து, திருமாலையைச் சாற்றிக் கொள்கிறார். இது, ஒரு ஜீவன் திவ்ய சரீரத்தை அடைவதற்கு ஒப்பானது.

பரமபத வாசலைக் கடந்து, நம்பெருமாள் வேகமாக ஆயிரங்கால் மண்டபமான திருமாமணி மண்டபத்தை அடைகிறார். இது, பரமபதத்துக்கு ஒப்பானது.

பக்தன் ஒருவன் பரமபதத்தை அடைவதை, தானே முக்தி அளிக்கும் முக்தனாக இருந்து அரங்கன் காட்டும் அற்புத உற்ஸவம் இது. இந்த உற்ஸவத்தை தரிசிக்கும் பக்தர்க்கு இந்த பாக்கியம் கைகூட பிரார்த்திப்போம்.

விருதுநகரிலும்… ‘யார் அந்த சார்?’ ஸ்டிக்கர்ஸ்!

yaar antha sir stickers in virudhunagar - 2026

இன்று விருதுநகர் கிழக்கு மாவட்ட கழக இளைஞர் மற்றும் இளம்பெண் பாசறை சார்பில் யார் அந்த சார் ?? வாசகம் அடங்கிய ஸ்டிக்கர் ஒட்டி விழிப்புணர்வு நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது.

இந்நிகழ்வில் விருதுநகர் கிழக்கு மாவட்ட கழக செயலாளர் மண்ணின் மைந்தர் ஆர்.கே ரவிச்சந்திரன் மற்றும் முன்னாள் அமைச்சர் வைகைசெல்வன் ஆகியோர் தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் ராஜவர்மன், எதிர்க்கோட்டை சுப்ரமணியம் நகர கழக செயலாளர் சோலை சேதுபதி, திருச்சுழி ஒன்றிய கழக செயலாளர்கள் முனியாண்டி, முத்து ராமலிங்கம், கருப்பசாமி மற்றும் சாத்தூர் ஒன்றிய கழக செயலாளர்கள் குருசாமி, சீத்தாராமன் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

நிகழ்ச்சி ஏற்பாட்டை இளைஞர் இளம்பெண் பாசறை செயலாளர் இரா.சக்ரவர்த்தி சங்கர் செய்திருந்தார்.

இந்நிகழ்வில் மகளிர் அணி நிர்வாகி பிரேமா, சீரணி ரமேஷ்,அண்டா நாகராஜ், இ.சுப்ரமணி மற்றும் பாசறை நிர்வாகிகள் க.பாலாஜி, s.பாலாஜி, இரா.சக்திராஜா, விக்னேஷ், கேப்டன் பிரபாகரன், சங்கர் பிரபு, சண்முகராஜன், உடனிருந்தனர்