Home Blog Page 183

பொதிகை ரயிலை கவிழ்க்க முயற்சி: சட்டீஸ்கர் மாநில தொழிலாளர்கள் 2 பேர் கைது; விசாரணை!

podhigai train chatisgargh workers - 2026
#image_title

சங்கரன்கோவில் அருகே தண்டவாளத்தில் கல் வைத்து பொதிகை விரைவு ரயிலே கவுத்த முயன்ற விவகாரத்தில், சத்திஸ்கர் தொழிலாளர்கள் இருவரை கைது செய்து போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சங்கரன்கோவில் அருகே பாம்பகோவில்சந்தை ரயில் நிலையம் அருகே தண்டவாளத்தில் கல் வைத்து கவுத்த முயன்ற சத்திஸ்கர் மாநிலத்தை சேர்ந்த இரு தொழிலாளர்களை ஸ்ரீவில்லிபுத்தூர் ரயில்வே போலீஸார் கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர் .

செங்கோட்டை – சென்னை இடையே இயக்கப்படும் பொதிகை விரைவு ரயில் கடந்த 26-ம் தேதி சென்னை சென்ற போது, கடையநல்லூர் – பாம்பகோவில் சந்தை ரயில் நிலையங்களுக்கு இடையே சென்ற போது, தண்டவாளத்தில் இருந்த கல் மீது மோதி இன்ஜினின் முன் பக்க தகடு சேதமடைந்தது. இதுகுறித்து ஸ்ரீவில்லிபுத்தூர் ரயில்வே போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வந்தனர்.

தண்டவாளத்தில் கல் வைத்த சம்பவத்தில் அதே பகுதியில் உள்ள கல் குவாரியில் பணியாற்றி வரும், சத்திஸ்கர் மாநிலத்தை சேர்ந்த பால்சிங் பகேல்(21), ஈஸ்வர் மேடியா(23) ஆகிய இருவரை கைது செய்து ஸ்ரீவில்லிபுத்தூர் ரயில்வே போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர் .

தற்போது… பாரதம் முழுமையாக முன்னேறிய தேசம்!

old and new parliament building - 2026
#image_title

தெலுங்கில் – பிரம்மஸ்ரீ சாமவேதம் ஷண்முக சர்மா
தமிழில் – ராஜி ரகுநாதன்

எங்கு பார்த்தாலும் வகுப்புவாத போராட்டங்கள், வாக்குவாதங்கள், மோதல்கள், தமக்காக தனிப்பட்ட ஒதுக்கீடுகள்… போன்ற விஷயங்களே செய்தியாகவும், சர்ச்சையாகவும் பரவி வருகின்றன. ஆனால், நடந்துவரும் முன்னேற்றத்தையும் நல்லவற்றையும் அடையாளம் கண்டு பிரச்சாரம் செய்யும் உள்ளத் தூய்மை கொண்ட ஊடகத்துறையும், அரசியல் சாதுர்யமும் இன்று மிக முக்கியமான தேவை. இந்திய குடிமக்களும் வெளிநாட்டவரும் நம் தேசத்தில் நிகழும் மிக ஆச்சர்யமான முன்னேற்றங்களை அறிய வேண்டும். அறியச் செய்ய வேண்டும்.

அந்த வரிசையில் நம்முடையதேயான தேசியத்தை ஐயத்திற்கு இடமின்றி ஸ்தாபிக்க வேண்டியது முக்கியம். வந்தேறிகளின் ஆட்சி முடிந்துபோன பின்னும் அவர்களையே பின்பற்றி, அவர்களின் அடையாளத்தையே பெயர்களிலும் நடைமுறைகளிலும் காலச்சாரத்திலும் நிலைநாட்டி வருகிறோம்.

சுதந்திரம் கிடைத்து எழுபது ஆண்டுகள் தாண்டி எண்பதாவது தசாப்தத்தில் நுழைந்தாலும், தேசியம் என்ற எண்ணத்தை வலிமையாக நிலைநிறுத்துவதில் இத்தனை காலமாக சரியான முயற்சி நடைபெறவில்லை.

இத்தகு வெளிநாட்டு அடிமைத்தனமே தேசிய உணர்வை மேலெழ விடாமல் தடுத்து, யுக யுகங்களாக உள்ள நம் வரலாற்றையும் பாரம்பரியத்தையும் மறக்கச் செய்கிறது. வேறெந்த தேசத்திற்கும் இல்லத வரலாறு, விஞ்ஞானம், ராஜநீதி போன்றவை பண்டைய காலம் முதலே பெற்றுள்ள பாரதம், தனக்கு எதுவுமே இல்லாதது போல, மேலைநாட்டு ஆட்சியாளரின் முறைகளையே அமல்படுத்திவருவது சுயமரியாதை இன்மையைக் காட்டுகிறது.

சுமார் நூறாண்டு காலம் நடந்த சுதந்திர போராட்டங்களில் தேசிய உணர்வு,
சுயமரியாதை போன்றவையே முன்னிலை வகித்தன. பாரத தேசத்தை பாரதியர்களே ஆளுவது மட்டுமல்ல, பாரதியம் ஆள வேண்டும் என்ற உணர்வு கொண்டிருந்த போராட்ட வீரர்களும், மேதாவிகளும் அன்று அதிக எண்ணிக்கையில் இருந்தார்கள்.

ஆனால் சுதந்திம் கிடைத்தபின், மேலைநாட்டு அபிமானிகளும், மேலை நாட்டை வழிபடுபவர்களும் முக்கிய ஆட்சிப் பொறுப்பை ஏற்றார்கள். மேலைநாட்டு வழிமுறைகளையும், தேசத்தை துண்டாக்கிய ஆக்கிரமிப்பாளர்களையும் கௌரவித்து அவர்களின் வழிமுறையிலேயே ஆட்சி அமைப்பை ஏற்படுத்தினார்கள். ‘இந்த தேசம் என்றுமே சுதந்திர நாடாக முடியாது’ என்ற எண்ணத்தை குடிமக்களின் மனதில் விதைத்தார்கள்.

உலகனைத்தும் தொழில்நுட்ப விஞ்ஞான வளர்ச்சியில் முன்னேறிக்
கொண்டிருந்த காலம் வந்த பின்னும், நம் தேசத்தில் தகுந்த மாற்றங்களைச்
செய்யவில்லை. ஆனால் தற்போது நிலைமை மாறியுள்ளது. ஒரு பத்தாண்டு காலத்திற்கு முன்பிருந்து தேசிய உணர்வும், தேசிய சிந்தனையும் பாரத தேசத்தை உலகிலேயே பிரத்தியேக இடத்தில் நிறுத்தி வருகிறது. தேசிய ஞானத்தாலும் வளங்களாலும் உலகமே வியக்கும் வண்ணம் முன்னேற்றத்தை அனைத்துத் துறைகளிலும் சாதித்து வருகிறோம்.

ரயில்வே, தொழிற்சாலை, சாலை வசதி, மலைகளிலும் நீர்நிலைகளிலும் கூட சிறந்த போக்குவரத்து வசதிகள், சுயசார்பு, மீள்தன்மை போன்றவை வெற்றி கரமாக விஸ்வரூபமாக கண்ணெதிரில் காட்சியளிக்கின்றன. பாதுகாப்புத் துறையிலும் அதிநவீனமான வலுவான பரிணாமங்கள் நடந்து வருகின்றன.

இந்தப் பின்னணியில் சட்டம், நியாயம் போன்ற அம்சங்களிலும் தேசியமான வழிமுறைகள், நவீன மாற்றங்கள் ஆகியவற்றை எடுத்து வரும் விதமாக முயற்சி மேற்கொள்ளப்படுகிறது.

பாரத நீதித்துறையில் நூதன அத்தியாயத்திற்கு வழி பிறந்தது என்று அனைவரும் புகழும் விதமாக புதிய செக்ஷன்களும் நல்ல திருத்தங்களும் எடுத்து வந்துள்ளார்கள்.

எந்த போலீஸ் ஸ்டேஷனில் புகார் கொடுத்தாலும் உடனே எடுத்துக் கொள்ளவேண்டும் என்ற நிபந்தனை, பெண்கள் மற்றும் சிறுமிகளின் மீது அதிகரிக்கும் குற்றங்களுக்கான விசாரணையை விரைவாக முடிக்க வேண்டும் என்ற சட்டம் போன்றவை நல்ல தீர்மானங்கள்.

‘இந்தியன் பீனல் கோட் 1860’ – என்பது “பாரதிய நியாய சம்ஹிதை 2023” ஆக
மாறியது. ‘கிரிமினல் ப்ரோசீஜர் கோட் 1973’ – “பாரதிய நாகரிக சுரக்ஷா சம்ஹிதா 2023 “ என்றும் ‘தி இந்தியன் எவிடென்ஸ் ஆக்ட் 1872’ – “பாரதிய சாக்ஷியா அதினியம் 2023” என்றும் மாறியது. இவ்விதமாக நம் தேசிய சொற்களால் மாற்றம் நிகழ்வது குறிப்பிடத்தக்கது.

அந்தமான் நிகோபார் தீவுகளின் தலைநகர் போர்ட்பிளேர், ஸ்ரீவிஜயபுரம் என்று
மாறியது. இப்படிப்பட்ட பெயர் மற்றங்களும் தேசிய உணர்வை பிரகாசிக்கச்
செய்யும். நல்ல உற்சாகத்தை ஏற்படுத்தும்.

பலப்பல சிறந்த பரிணாமங்களோடு அனைத்து துறைகளிலும் முன்னேறி வந்தாலும் இந்த தேசத்திலேயே இருந்து வாழ்ந்து தின்று வரும் தேச துரோகிகள் தலைவர்காளாக வலம் வந்து உலக அளவில் பொய்ப் பிரச்சாரங்களை மேற்கொண்டு வருகிறார்கள்.

இந்தப் பின்னணியில் தேசிய உணர்வுள்ளவர்கள் அனைவரும் உண்மையை அடையாளம் கண்டு தேசத்தின் உயர்வை பெருமையாக கர்வமத்தோடு பரப்ப வேண்டிய தேவை உள்ளது.


(ருஷிபீடம், மாத இதழ், தலையங்கம், அக்டோபர், 2024)


செங்கோட்டை: காங்கிரஸ் சார்பில் மகாத்மா காந்தியின் 156வது பிறந்தநாள் விழா!

DSC 0072 scaled e1727879807712 - 2026

செங்கோட்டையில் நகர காங்கிரஸ் கட்சியின் சார்பில் மகாத்மாகாந்தியின் 156வது பிறந்தநாள் விழா.

செங்கோட்டை மேலபஜார் வாகைமரத்திடலில் அமைந்துள்ள காந்தி சிலை முன்பு வைத்து நகர காங்கிரஸ் கட்சியின் சார்பில் தேசபிதா மகாத்மா காந்தியின் 156வது பிறந்நாள் மற்றும் முன்னாள் தமிழக முதல்வா் கர்மவீரர் காமராஜரின் 49ஆம் ஆண்டு நினைவு தினம் நிகழ்ச்சி நடந்தது.

நிகழ்ச்சிக்கு நகரத்ததலைவா் இராமர் தலைமைதாங்கினார். மாவட்ட செயற்குழு உறுப்பினா் செண்பகம், நகர்மன்ற உறுப்பினா் முருகையா, நகரப்பொதுச்செயலாளா்கள் சுடலைமுத்து, இசக்கியப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனா். மாவட்ட தகவல் தொழில்நுட்பம் மற்றும் சமூக ஊடகத்துறை பொதுச்செயலாளா் ராஜீவ்காந்தி அனைவரையும் வரவேற்று பேசினார்.

அதனை தொடா்ந்து மகாத்மா காந்தியின் முழுஉருவ சிலை மற்றும் காமராஜா் திருவுருவ படத்திற்கு நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செய்தனா். நிகழ்ச்சியில் நகரத் துணைத் தலைவா்கள் காதர்அலி, மாரியப்பன், முன்னாள் நகர்மன்ற துணைத் தலைவா் ஆதிமூலம் செயலாளா்கள் நடராஜன், சுடலையாண்டி, நகர எஸ்சிஎடி பிரிவு தலைவா்
சிவன், துணைத்தலைவா் ரவி, நகர சிறுபான்மை பிரிவு தலைவா் முகம்மது சித்திக், வார்டு நிர்வாகி முகம்மதுசர்புதின், ஷேக்மைதீன், வாவாகனி, திருமலைக்குமார், ஜேம்ஸ், ஆதினம் உள்பட பலா் கலந்து கொண்டனா். முடிவில் நகரப்பொருளாளா் சங்கரலிங்கம் நன்றி கூறினார்

ஆவரம்பாளையம் சர்வோதய சங்கம் சார்பில் காந்தி ஜெயந்தி விழா!

2k - 2026


செங்கோட்டையில் ஆவரம்பாளையம் சர்வோதய சங்கம் சார்பில் காந்தி ஜெயந்தி விழா.

செங்கோட்டை கீழபஜார் மெயின் ரோட்டில் அமைந்துள்ள ஆவரம்பாளையம் சர்வோதய சங்க கிளை விற்பனை நிலையத்தில் வைத்து தேசபிதா மகாத்மா காந்தியின் 155வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. விழாவிற்கு அகில இந்திய காந்தி இயக்கத்தலைவா் வி.விவேகானந்தன் தலைமை தாங்கினார்.

ரோட்டரி கிளப் (கேலக்ஸி) தலைவா் வழக்கறிஞா் கோபிநாத், மனித உரிமைகள் கழக திருநெல்வேலி மண்டலச்செயலாளா் முருகையா ஆகியோர் சமூக ஆர்வலா் மணிகண்டன் முன்னிலைவகித்தனா். கிளை மேலாளா் மாரியப்பன் அனைவரையும் வரவேற்று பேசினார்.

அரசு மருத்துவமனை முதுநிலை நுட்பநர் ஹரிஹரநாராயணன் தொகுப்புரையாற்றினார். முன்னாள் நகர்மன்ற துணைத்தலைவா் ஆதிமூலம், குற்றாலம் பராசக்தி கல்லுாரி முன்னாள் பேராசிரியா் கயற்கன்னி, ரோட்டரி கிளப் மாவட்ட துணை ஆளுநர் பால்ராஜ் ஆகியோர் சிறப்புரையாற்றினா்.

அதனைதொடா்ந்து நல்லாசிரியா் விருது பெற்ற ஆக்னஸ்மேரி, கலைச்செல்வி ஆகியோருக்கு பரிசு வழங்கி கௌரவிக்கப்பட்டது. முன்னதாக முத்துசாமி பூங்கா, நகராட்சி அலுவலகம், வாகைமரத்திடல் பகுதிகளில் அமைந்துள்ள காந்தி சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது.

நிகழ்ச்சியில் ரோட்டரி கிளப் கேலக்ஸி முன்னாள் தலைவா் ரவி செயலா் பொன்னுத்துரை, உறுப்பினா்கள் மாரியப்பன், பிச்சையாபிள்ளை, புருஷோத்தமன், சுந்தரம், சுப்ரமணியன், இசக்கிமுத்து, கணேசன், முத்துக்குமார், மற்றும் சங்க நிர்வாகிகள் ஊழியா்கள் செல்வக்குமார், வேல்சாமி, இசக்கிபாண்டியன், ரமேஷ், சண்முகசுந்தரம், ராஜ்குமார், மாரியப்பன், வெங்கடாசலமூர்த்தி, வெள்ளத்துரை மற்றும் அரசியல் பிரமுகர்கள், சமூக ஆர்வலா்கள், பொதுமக்கள் உள்பட பலா் கலந்து கொண்டனா். முடிவில் உதவியாளா் வேல்சாமி நன்றி கூறினார்.

பொதுக் கழிப்பறைகளில் அதிக கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை: மதுரை மாநகராட்சி எச்சரிக்கை!

bus - 2026
#image_title

மதுரை, மாநகராட்சி பொது கழிப்பறைகளில், நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தை விட அதிக கட்டணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை என, தகவல் வெளியாகி உள்ளது.

மதுரை மாநகராட்சி மண்டலம் 2 வார்டு எண்.32 மாட்டுத்தாவணி எம்.ஜி.ஆர். பேருந்து நிலையத்தில் அமைந்துள்ள பொது கழிப்பறைகளை, பொதுமக்கள் பயன்படுத்திட மாநகராட்சியால் நிர்ணயிக்கப்பட்ட கட்டணமாக சீறுநீர் கழிப்பதற்கு ரூ.2, மலம் கழிப்பதற்கு ரூ.5, குளிப்பதற்கு ரூ.10 என தனியார் ஒப்பந்த நிறுவனம் மூலம் இயக்குதல் மற்றும் பராமரித்தல் பணி மேற்
கொள்ளப்பட்டு வருகிறது.

மேற்கண்ட பொது கழிப்பறைகளில் மாநகராட்சி நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தை விட கூடுதலாக வசூலிப்பதாக பொது மக்களிடமிருந்து தொடர்ச்சியாக புகார்கள் வரப்பெற்றது.

அதன் அடிப்படையில், காலை 7 மணியளவில் மாநகர்நல அலுவலர்,
ஒரு பொது பயனானியாக கழிப்பறைக்கு சென்று பயன்படுத்த கேட்டபோது, கழிப்பறை கட்டணம் வசூலிப்பவர் சிறுநீர் கழிப்பதற்கு நிர்ணயம் கட்டணத்தை விட கூடுதலாக ரூ.10 தருமாறு கோரினார்.

இச்செயல் குறித்து, உடனடியாக மாட்டுத்தாவணி எம்.ஜி..ஆர்.பேருந்து நிலையத்தில் அமைந்துள்ள புறக்காவல் நிலையத்தில் சம்பந்தப்பட்ட ஒப்பந்ததாரர் மற்றும் பணியாளர் மீது புகார் தெரிவித்து காவல்துறை மூலம் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

மேலும், இது போன்ற செயல்களில் ஈடுபடும் ஒப்பந்த நிறுவனத்தின் மீது மதுரை மாநகராட்சி நிர்வாகத்தால் கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என, எச்சரிக்கை செய்யப்படுகிறது.

மதுரை மாநகராட்சி பொது கழிப்பறைகளில், மாநகராட்சி நிர்ணயம் செய்யப்பட்ட கட்டணத்தை விட கூடுதலாக வசூலிக்கப் பட்டால், பொதுமக்கள் உடனடியாக மதுரை மாநகராட்சி புகார் மையம் எண்.78716 61787 என்ற எண்ணிற்கு தொலை பேசி (அல்லது) வாட்ஸ்அப் வாயிலாக புகார் தெரிவிக்கலாம் என, மதுரை மாநகராட்சி ஆணையாளர் ச.தினேஷ்குமார், தெரிவித்துத்துள்ளார்.

கட்டுமானப் பொருள்களின் விலை உயர்வு: லாரிகள் ஸ்டிரைக்.

lorry strike in madurai - 2026
#image_title

எம்.சாண்ட், ஜல்லி உள்ளிட்ட கட்டுமான பொருட்களின் விலை உயர்வை கண்டித்து, உசிலம்பட்டி வட்டார அளவிலான லாரி உரிமையாளர்கள், ஓட்டுநர்கள் வேலை நிறுத்த போராட்டத்தை துவங்கியுள்ளனர்.

கட்டுமான பணிகளில் எம்.சாண்ட் மற்றும் ஜல்லி முக்கிய பங்கு வகிக்கின்றது. இந்த எம்.சாண்ட், பி.சாண்ட், ஜல்லி உள்ளிட்ட கட்டுமான பொருட்களுக்கு மதுரை, தேனி மாவட்டங்களில் உள்ள குவாரி மற்றும் கிரஷர்களில் திடீரென தலா ஆயிரம் ரூபாய் வரை விலை உயர்த்தப்பட்டுள்ளது.

அதன்படி, ஒரு யூனிட் எம்.சாண்ட் – 3 ஆயிரத்தில் இருந்தது தற்போது 4 ஆயிரம் ரூபாய்க்கும், பி.சாண்ட் – 4 ஆயிரத்தில் இருந்து 5 ஆயிரம் ரூபாய்க்கும், ஜல்லி – 2200 ல் இருந்து 3000 ரூபாய்க்கும் என தலா ஆயிரம் ரூபாய் வரை விலை உயர்த்தப்பட்டுள்ளது.

இந்த திடீர் விலை உயர்வைக் கண்டித்து, மதுரை மாவட்டம், உசிலம்பட்டி பசும்பொன் முத்து ராமலிங்க தேவர் கல்லூரி முன்பு உசிலம்பட்டி வட்டார அளவிலான டிப்பர் லாரி, டிராக்டர் உரிமையாளர்கள், ஓட்டுநர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இன்று முதல் தொடரும் இந்த வேலை நிறுத்த போராட்டம் 06 ஆம் தேதி வரை 6 நாட்களுக்கு நடைபெறும் என, சுமார் 60க்கும் மேற்பட்ட லாரிகள், டிராக்டர்களை வரிசையாக நிறுத்தி வைத்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.

மதுரை தேனி மாவட்டங்களில் பெரும்பாலான பகுதிகள் கிராமப்புற பகுதி என்பதால், விலை உயர்வு காரணமாக வீடுகளின் கட்டுமான பணி செய்ய முடியாத அளவிற்கு ஒரு யூனிடிற்கு தலா ஆயிரம் ரூபாய் வரை அதிகப்படியாக உயர்த்தப்பட்டுள்ள இந்த விலை உயர்வை அரசு கவனத்தில் எடுத்துக் கொண்டு கட்டுமான பொருட்களின் விலையை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.

மதுரை கோயில்களில் பிரதோஷ வழிபாடு !

chozhavanthan pralayanatha swami - 2026

மதுரை மாவட்ட கோயில்களில், சோமவார பிரதோஷ விழா நடைபெற்றது. மதுரை மீனாட்சி சுந்தரேசர் கோவில், மதுரை இம்மையில் நன்மை தருவார், தெப்பக்குளம் முத்தீஸ்வரர் , சிம்மக்கல் பழைய சொக்கநாதர், திருமங்கலம் மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவில், துவரிமான் மீனாட்சி சுந்தரர் கோவில், சோழவந்தான் அருகே ஏடகநாத சுவாமி திருக்கோவில், தென்கரி மூலநாதர் சுவாமி ஆகிய கோவில்களில் ,சோமார பிரதோஷ விழா நடைபெற்றது .

விழாவை முன்னிட்டு, இக்கோவில் அமைந்துள்ள மற்றும் சுவாமி, அம்பாளுக்கு பக்தர்களால் சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டது . இதை அடுத்து சுவாமி அம்பாள் ரிஷப வாகனத்தில் அலங்காரமாகி கோவில் பிரகாரத்தில் வளர்ந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்

இதில் ஏராளமான பக்தர் கலந்து கொண்டு சிவன் அம்பாளை வழிபட்டனர். இதை அடுத்து கோயில் நிர்வாகத்தின் சார்பில் பக்தர்களுக்கு பிரசாதங்கள் வழங்கப்பட்டன சோழவந்தான் சிவன் ஆலயத்தில் நந்திகேஸ்வரர் நரசிம்மர் சனீஸ் லிங்கம் சிவபெருமானுக்கு சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டன

இதற்கான ஏற்பாடுகளை, தொழில் அதிபர் எம் .வி. எம். மணி, கவுன்சிலர்கள் டாக்டர் மருதுபாண்டியன், வள்ளிமயில் , கோவில் நிர்வாக அதிகாரி இளமதி கணக்கர் சி பூபதி மற்றும் ஆலய பணியாளர்கள் செய்திருந்தனர்.

மதுரை பகுதியில் மஹாளய அமாவாசை!

மதுரை மாவட்டத்தில் இம் மாதம் 2-ம் தேதி புதன்கிழமை காலை மஹாளய அமாவாசையை, ஒட்டி, ஆலயங்களில் தர்பணம் பிதுர்களுக்கு முன்னோர்களுக்கு செய்து வைக்கப்படுகிறது.

பொதுவாக, தை அமாவாசை, ஆடி அமாவாசை, மஹாளய அமாவாசை நாள்களில், பெரிய அளவில் வைகை நதிக்கரை ஓரம்,ஆலயங்களில் தர்பணம் முன்னோர்களுக்காக, வேதியர்களால், செய்து வைக்கப்படும்.

பெண்கள்,பலர் வேதியர்களுக்கு காய்கறிகள், வஸ்திரங்கள் தானம் செய்வர்.
மதுரை நகரில் பல கோயில்களில் தர்பணம் காலை நடைபெறும். கீழ்க்காணும் ஆலயங்களில் தர்பணம் செய்துவைக்கப்படுகிறது.

2.10.24.. புதன்கிழமை மஹாளய அமாவாசை தர்பணம் செய்து வைக்கப்படும் ஆலயங்கள்.

மதுரை அண்ணாநகர், யாணைக்குழாய் முத்துமாரியம்மன் ஆலயத்தில், காலை 6.10..7..மணி வரை.
மதுரை அண்ணாநகர் வைகை காலனி, வைகை விநாயகர் ஆலயத்தில், காலை 7.15..8.10..மணி வரை.
மதுரை அண்ணாநகர், தாசில்தார் நகர் சௌபாக்ய விநாயகர் ஆலயத்தில், காலை 8.30..மணி முதல் 9.20..மணி வரை தர்பணம் செய்து வைக்கப்படும்.
தர்பணத்துக்கு வரும் பக்தர்கள், கறுப்பு எள் பாக்கெட்..1, வாழைப்பழம்..2.,
பூக்கள், விளக்கு,
தர்பணம் செய்ய தட்டு, டம்ளர் கொண்டு வரவேண்டும்.

IND Vs BAN Test: இரண்டாவது டெஸ்டையும் வென்று இந்திய அணி அசத்தல்!

ind vs ban test - 2026
#image_title

இந்தியா-வங்கதேசம் இரண்டாவது டெஸ்ட் – கான்பூர் – ஐந்தாம் நாள் – 01.10.2024

முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன்

வங்கதேசம்
முதல் இன்னிங்க்ஸ் 233 (மோமினுல்107*, பும்ரா 3-50, ஆகாஷ் தீப் 2-43)
இரண்டாவது இன்னிங்க்ஸ் (146, ஷத்மன்50, பும்ரா 3/17, ஜதேஜா 3/34, அஷ்வின் 3/50)
இந்திய அணி
முதல் இன்னிங்க்ஸ் 285க்கு 9 டிக்ளேர்டு (ஜெய்ஸ்வால் 72, ராகுல் 68, மெஹிதி 4 -41, ஷகிப் 4-78),
இரண்டாவது இன்னிங்க்ஸ் மூன்று விக்கட்இழப்பிற்கு 98 (ஜெய்ஸ்வால் 51, கோலி ஆட்டமிழக்காமல் 29, மெஹிதி 2/44).

இந்திய அணி 7 விக்கட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. தொடரை 2-0 என்ற கணக்கில் வென்றது.  

நான்காம் நாள் முடிவில் வங்கதேசம்2 விக்கெட் இழப்புக்கு 26 ரன்களுடன் இருந்தது. பும்ராவும் அஷ்வினும் இன்றுபந்துவீச்சைத் தொடங்கினர். இன்றைய முதல் வங்கதேச விக்கட் அஷ்வின் பந்துவீச்சில் விழுந்தது.அடுத்தவிக்கட் 28ஆவது ஓவரில் ஜதேஜவுக்குக் கிடைத்தது.

29ஆவது ஓவரில் அதுவரை சிறப்பாகஆடிக்கொண்டிருந்த ஷத்மன் ஆட்டமிழந்தார். 30ஆவது ஓவரில் லிட்டன் தாஸ், 32ஆவது ஓவரில்ஷாகிப் அல் ஹசன் ஆட்டமிழந்தனர். 37ஆவது ஓவரில் பும்ரா ஒரு விக்கட் எடுத்தார். 41ஆவதுஓவரில் மேலும் ஒரு விக்கட் எடுத்தார்.

47ஆவது ஓவர் கடைசி பந்தில் கடைசி விக்கட்டையும் பும்ரா எடுத்தார். வங்கதேச அணி 146 ரன்னுக்கு அனைத்து விக்கட்டுகளையும் இழந்தது. இந்திய அணி 95 ரன் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் ஐந்தாம் நாள் உணவு இடைவேளை வந்தது.

வங்கதேசம் இந்திய அணியின் விக்கெட்டுகளை எடுக்கும் வகையில் பந்து வீசாததால் இந்தியா மீண்டும் அனைத்து துப்பாக்கிகளையும் வெடிக்கச் செய்தது.

ரோஹித் முதல் ஓவரில் லெக் சைடுக்கு ஒருபெரிய ஸ்விங்கை தவறவிட்டார், அவர் ஒரு ஸ்வீப்பை மிடில் செய்தபோது, ​​மெஹிடியின் இரண்டாவது ஓவரில் டீப் பேக்வர்ட் ஸ்கொயர்-லெக்கிடம் கேட்ச் கொடுத்தார்.

ஷுப்மான்கில் 6 ரன்களில் மெஹிடியால் எல்பிடபிள்யூவில் சிக்கினார், அதேபோன்ற ஒரு பந்து வீச்சில்திங்களன்று ரோஹித்தை ஆட்டமிழக்கச் செய்திருந்தார்.

மற்றபடி தொடரில் ஜெய்ஸ்வாலின் மூன்றாவது அரை சதத்தால் இந்தியா அசத்தலாக இலக்கைத் துரத்தியது.விராட் கோலியுடன் 58 ரன்கள் எடுத்த அவரது விறுவிறுப்பான பார்ட்னர்ஷிப் இந்தியாவை ஏறக்குறைய வெற்றி காணச் செய்தது. ஆனால் அச்சமயத்தில் ஜெய்ஸ்வால் ஆட்டமிழந்தார். அப்போது வெற்றிக்கு மூன்று ரன்கள் மட்டுமே தேவைப்பட்டது.

அதற்கடுத்த இரண்டாவது ஓவரில் ரிஷப் பந்த் ஒரு பவுண்டரி அடித்து இந்தியாவின் வெற்றியை 18ஆவது ஓவரில் பெற்றுத் தந்தார்.

ஜெய்ஸ்வால் ஆட்ட நாயகனாகவும் அஷ்வின் தொடர் நாயகனாகவும் அறிவிக்கப்பட்டனர்.

உலக டெஸ்ட் தொடரில் புள்ளிப் பட்டியல்

அணி | மேட்சு | வெற்றி | தோல்வி | ட்ரா | புள்ளி | %
இந்தியா | 11 | 8 | 2 | 1 | 98 | 74.24 |
ஆஸ்திரேலியா | 12 | 8 | 3 | 1 | 90 | 62.50
இலங்கை | 9 | 5 | 4 | 0 | 60 | 55.56
இங்கிலாந்து | 16 | 8 | 7 | 1 | 81 | 42.19
தென் ஆப்பிரிக்கா | 6 | 2 | 3 | 1 | 28 | 38.89
நியூசிலாந்து | 8 | 3 | 5 | 0 | 36 | 37.50 |
வங்கதேசம் | 8 | 3 | 5 | 0 | 33 | 34.38 |
பாகிஸ்தான் | 7 | 2 | 5 | 0 | 16 | 19.05
மேற்கு இந்தியத் தீவுகள் | 9 | 1 | 6 | 2 | 20 | 18.52

நாங்கள் எவரையும் திருமணமோ துறவறமோ மேற்கொள்ள வற்புறுத்துவதில்லை: ஈஷா யோக மையம் விளக்கம்!

yogaisha - 2026
#image_title
  • சென்னை உயர்நீதிமன்றத்தில் ஈஷா யோக மையம் தொடர்பாக நடைபெற்று வரும் வழக்கில் மனுதாரரால் எழுப்பபட்டுள்ள குற்றச்சாட்டுகள் அனைத்தும் பொய்யானவை!
  • ஈஷா யோக மையம் எவரையும் திருமணமோ அல்லது துறவறமோ மேற்கொள்ள வற்புறுத்துவதில்லை! – ஈஷா யோக மையம் விளக்கம்!

ஈஷா யோக மையம் வெளியிட்ட அறிக்கை:

‘ஈஷா அறக்கட்டளை சத்குரு அவர்களால் யோகா மற்றும் ஆன்மீகத்தை மக்களுக்கு வழங்குவதற்காக நிறுவப்பட்டது. இந்திய அரசியலமைப்பு சட்டம் ஒவ்வொரு தனிமனிதனும் குறிப்பிட்ட வயதுக்கு பிறகு அவரவர் வாழ்க்கை பாதையைத் தேர்ந்தெடுக்கும் சுதந்திரத்தையும், ஞானத்தையும் வழங்கி உள்ளது. ஈஷா யோகா மையம் எவரையும் திருமணம் செய்து கொள்வதற்கோ அல்லது துறவறம் மேற்கொள்வதற்கோ கட்டாயப்படுத்துவதோ, உற்சாகப்படுத்தி உந்தி தள்ளவோ செய்வதில்லை. ஏனெனில் இவை அனைத்தும் தனிமனித சுதந்திரம் மற்றும் விருப்பம், இதில் தலையிட எவருக்கும் உரிமையில்லை என உறுதியாக நம்புகிறோம்.

ஈஷா யோகா மையம் திருமணம் ஆன, ஆகாத ஆயிரக்கணக்கான மனிதர்கள் மற்றும் பிரம்மச்சரிய பாதையில் இருக்கும் ஒரு சிலரின் இருப்பிடமாக இருக்கிறது. உண்மை இவ்வாறு இருக்கையில் 2 பெண் பிரம்மச்சாரிகளின் பெற்றோர் கடந்த 8 வருடங்களாக பல்வேறு பொய் வழக்குகளை பதிவு செய்தும், உள்நோக்கம் கொண்ட சிலரின் தூண்டுதலால் போராட்டங்களை நடத்தி தேவையில்லாத சச்சரவுகளையும் ஏற்படுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் பிரம்மச்சரிய பாதையில் இருக்கும் தனது மகள்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டும் என்று கோரி அவர்களின் தந்தை காமராஜ் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்து இருந்தார். இதனைத் தொடர்ந்து இரண்டு பிரம்மசாரிகளும் நீதிமன்றத்தில் ஆஜராகி, தங்களின் சொந்த விருப்பத்தின் பேரில்தான் ஈஷா யோகா மையத்தில் தங்கியுள்ளோம் என்று தெளிவுபடுத்தியுள்ளனர்.

அது மட்டுமில்லாமல் மிக சமீபத்தில் காமராஜ் ஈஷா யோக மையம் சென்று தன்னுடைய மகள்களை சந்தித்த CCTV காட்சிகளும் ஆதாரங்களாக நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப் பட்டு உள்ளது. மேலும் இந்த விவகாரம் நீதிமன்றத்தில் இருப்பதால், தேவையான அனைத்து ஆதாரங்களையும் வழங்கி உள்ளதால் உறுதியாக உண்மை வெல்லும் என்று நம்புகிறோம். மேலும் இதுவரை போலியாக உருவாக்கப்பட்ட அனைத்து தேவையற்ற சர்ச்சைகளும் முடிவுக்கு வரும் என்று எதிர்பார்க்கிறோம்.

மேலும் 2016-ஆம் ஆண்டு இதே காமராஜ் தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனுவை தீர விசாரித்த சென்னை உயர்நீதிமன்றத்தின் வழிகாட்டுதலின் படி கோவை மாவட்ட நீதிபதிகள் அடங்கிய குழு ஒன்று கோவை ஈஷா யோகா மையத்தில் மா மதி மற்றும் மா மாயு ஆகிய இருவரையும் சந்தித்து நீதி விசாரணை நடத்தியது. அவர்களின் அறிக்கையின் படி தீர்ப்பு அளிக்கப்பட்டு அந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது.

அந்த தீர்ப்பில் நீதிபதிகள் “பெற்றோர் தொடுத்த வழக்கில் உண்மையில்லை, பிடித்து வைக்கப்பட்டிருக்கிறார்கள் என்று சொல்லப்பட்டவர்கள் அந்த மையத்தில் தங்களது சுயவிருப்பத்திலேயே தங்கி இருக்கிறார்கள் என்று திட்டவட்டமாக தெரிவிக்கிறோம்,” என்று கூறியுள்ளார்கள் என்பதை தற்போது நினைவுக் கூற விரும்புகிறோம்.

முன்னதாக, காமராஜ் ஈஷாவிற்கு எதிராக செயல்படும் பிற உதிரி அமைப்புகள் மற்றும் நபர்களுடன் சேர்ந்து, ஈஷா அறக்கட்டளையால் சுற்றுப்புற கிராம மற்றும் பழங்குடியின மக்களின் நன்மைக்காக கட்டப்பட்டு வரும் தகன மேடை குறித்து தொடர் பிரச்சினைகளில் ஈடுபட்டு வந்தார். மேலும் அரசு அனுமதியோ, அங்கீகாரமோ இல்லாமல் தான்தோன்றித் தனமாக உண்மை கண்டறியும் குழு என்ற பெயரில் குழுவாக ஈஷா வளாகத்திற்குள்6 அத்துமீறி நுழைய முயன்று காவல்துறையால் தடுக்கப்பட்டனர்.

பின்னர் எவ்வித முகாந்திரமும் இன்றி ஈஷா தன்னார்வலர்கள் மீது கிரிமினல் புகாரும் அளித்தனர். இது தொடர்பான வழக்கில் காவல்துறையின் இறுதி அறிக்கையை சமர்ப்பிக்க சென்னை உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது. இது தவிர, மனுதாரர் பொய்யாக குறிப்பிட்டதை போன்று அறக்கட்டளைக்கு எதிராக வேறு எந்த கிரிமினல் வழக்குகளும் இல்லை.

ஆகவே ஈஷா அறக்கட்டளைக்கு எதிராக தவறான தகவல்களை பரப்புவதில் ஈடுபடுபவர்கள் மீது சட்டப்படி மிக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.

லெபனானில் பங்கரவாத தலைவன் கொலையானதற்கு சென்னையில் அஞ்சலி போஸ்டர்! இந்து முன்னணி எச்சரிக்கை!

kadeswara subramaniam hindu munnani - 2026
  • லெபனானில் பயங்கரவாத இயக்கத் தலைவன் ஹசன் நஸ்ருல்லாவிற்கு தமிழகத்தில் அஞ்சலி.
  • தமிழகத்தில் மீண்டும் தலை தூக்குகிறதா இஸ்லாமிய பயங்கரவாதம்!
  • தமிழகம் பயங்கரவாதிகளின் கூடாரமாக மாறி வருகிறது. தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்
  • இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா C.சுப்ரமணியம் அறிக்கை!

இந்து முன்னணி தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் வெளியிட்ட அறிக்கை:

லெபனான் நாட்டில் செயல்படும் பயங்கரவாத அமைப்பான ஹிஸ்புல்லா இயக்கத்தின் தலைவனான ஹசன் நஸ்ருல்லா இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் கொல்லப்பட்ட நிலையில், பயங்கரவாதிக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக சென்னை மிர்சாகிப் பேட்டை பள்ளிவாசல் முன்பு பேனர் வைத்து அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.இது கடும் கண்டனத்திற்குரிய செயலாகும்.

1992 ஆம் ஆண்டு முதல் லெபனானில் பல பயங்கரவாத தாக்குதல்களை நடத்திய பயங்கரவாதி மறைவிற்கு மதக் கலவரத்தை தூண்டும் வகையில்
வாசகங்களுடன் சென்னையில் பேனர் வைக்கப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சி மற்றும் அச்சுறுத்தல் ஏற்படுத்தக் கூடிய செயலாகும்.

இச்செயலை செய்தவர்களை தமிழக அரசும் உளவுத்துறையும் உடனடியாக கைது செய்து விசாரிக்க வேண்டும்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு தான் மீர் சாகிப் பேட்டைக்கு அருகில் உள்ள ராயப்பேட்டையில் சர்வதேச அளவில் தடை செய்யப்பட்ட பயங்கரவாத அமைப்பான ஹிஸ்ப் -உத் -தஹீர் அமைப்புக்கு ஆட்களை சேர்த்து பயிற்சி மையம் அமைத்த செய்தி அம்பலமானதை அடுத்து தேசிய புலனாய்வு முகமை விசாரித்து வருகிறது.

இதைத் தொடர்ந்து ஹிஸ்புல்லா பயங்கரவாதிகளுக்கு ஆதரவான நபர்கள் இந்த பகுதியில் இருக்கலாம் என விசாரணை நடைபெற்று வருகிறது.

மசூதி வாசலில் இஸ்லாமிய பயங்கரவாதிக்கு அஞ்சலி பேனர் வைக்கப்பட்டுள்ளது என்றால் ஜமாத்தின் ஆதரவு இல்லாமல் செய்திருக்க வாய்ப்பில்லை. எனவே மசூதியை நிர்வகிக்கும் ஜமாத் நிர்வாகிகளையும் காவல்துறை நுண்ணறிவு பிரிவு கண்காணிக்க வேண்டடியது அவசியமென தோன்றுகிறது.

உலகத்தின் எந்த நாட்டில் பயங்கரவாத செயல்கள் நடந்தாலும் அதில் ஈடுபடும் குற்றவாளிகளுக்கு ஆதரவாக தமிழகத்தில் உள்ள சில அமைப்புகள் செயல்படுகின்றன. அது மட்டுமன்றி வெளிநாடுகளில் பயங்கரவாதிகள் கொல்லப்படும் போது அதற்கு தமிழகத்தில் எதிர்ப்பு குரல் தமிழகத்திற்கு நல்லதல்ல.

2011 ஆம் ஆண்டு ஒசாமா பின்லேடன் கொல்லப்பட்ட போது
சென்னையில் உள்ள மசூதியில் தொழுகை நடந்தது குறிப்பிடத்தக்கது.
ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பிற்கு ஆள் சேர்க்கும் நிகழ்வுகளும் தமிழகத்தில் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

இதை ஆரம்பத்திலேயே தமிழக ஆட்சியாளர்கள் கண்டு கொள்ளாத காரணத்தினால் ஏற்கனவே சார்பு ஆய்வாளர் வில்சன் உட்பட பல உயிர்களை இழந்துள்ளோம்.

2014 ஆம் ஆண்டு ராமநாதபுரம் மாவட்டம் தொண்டியில் 20க்கும் மேற்பட்ட இளைஞர்கள் ஐ.எஸ்.ஐ.எஸ் என அச்சிடப்பட்ட டி ஷர்ட் அணிந்து புகைப்படம் எடுத்து சமூக வலைத்தளங்களில் வெளியிட்டனர். அவர்களது இருபதுக்கும் மேற்பட்ட சமூக வலைத்தள கணக்குகள் கண்டுபிடிக்கப்பட்டது.அவர்கள் அனைவரும் சிறுவர்கள் என்ற காரணத்திற்காக விடுவிக்கப்பட்டனர்.

2019 ஆம் ஆண்டு இலங்கை தலைநகர் கொழும்பில் தேவாலயத்தில் நடைபெற்ற மாபெரும் குண்டு வெடிப்பு நிகழ்த்திய பயங்கரவாதிகளுக்கும் தமிழகத்தில் உள்ள பயங்கரவாதிகளுக்கும் உள்ள தொடர்பு கண்டறியப்பட்டது. அவர்களது அலைபேசி உரையாடல்களும் கண்டுபிடிக்கப்பட்ட பின்பும் கூட பயங்கரவாதிகள் மிக சுலபமாக தமிழகத்தில் சுற்றி திரிந்து வருவதாக சொல்லப்படுகிறது..

கடந்த சில மாதங்களுக்கு முன்பு பாலஸ்தீன இஸ்ரேல் போர் நடைபெற்ற போது சில முஸ்லிம் அமைப்புகள் பாலஸ்தீன கொடியுடன் தமிழகத்தின் பல பகுதிகளில் வலம் வந்தனர். இதையும் தமிழக உளவுத்துறை கவனிக்க தவறியது.

அதேபோல கர்நாடகாவில் நடைபெற்ற ராமேஸ்வரம் கபே குண்டு வெடிப்பிற்கும் தமிழகத்தில் உள்ள பயங்கரவாதிகளோடு நெருங்கிய தொடர்பு இருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.NIA இவர்களை எல்லாம் விசாரணை வளையத்திற்குள் கொண்டு வந்தது. ஆனால் தமிழக உளவுத்துறையோ உறங்கிக் கொண்டிருந்தது.

பயங்கரவாதிகள் மற்றும் அவர்களுக்கு ஆதரவு அளிக்கும் நபர்களை கவனிக்க தவறியதால் தான் தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு கேள்விக்குறியாகி வருவது கண்கூடு.

மனிதநேய மக்கள் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் ஜிவாஹிருல்லா அவர்கள் பாலஸ்தீனத்தில் கொல்லப்பட்ட ஹசன் நஸ்ருல்லாவிற்கு போராளிகள் புதைக்கப்படவில்லை விதைக்கப்பட்டு இருக்கிறார்கள் என்று பேசி உள்ளதையும் இந்து முன்னணி பேரியக்கம் வன்மையாக கண்டிக்கிறது .அனைத்து மதத்தினரும் வாக்களித்து தேர்ந்தெடுக்கப்பட்ட இவர் பயங்கரவாதிகளுக்கு ஆதரவாக பேசுவதை தமிழக அரசு வேடிக்கை பார்க்கிறதா ? என்பதை தெளிவுபடுத்த வேண்டும் .

மண்டியிட்டு வாழ்வதை விட சத்தியத்திற்காக நிமிர்ந்து நின்று மடிவது மேல் என்ற வாசகங்களுடன் இறந்து போன பயங்கரவாதிக்கு சென்னையில் பேனர் வைத்தவர்கள் யார் ? அவர்களது பின்னணி என்ன என்பதைப் பற்றியும் முழுமையாக தமிழக அரசும் உளவுத்துறையும் விசாரிக்க வேண்டும் .அவர்களுக்கு ஆதரவாக யார் பேசினாலும் அவர்களையும் கைது செய்ய வேண்டும்.

இனி இது போன்ற பயங்கரவாத ஆதரவு சம்பவங்கள் தமிழகத்தில் நடைபெறாமல் இருக்க தமிழக அரசு கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்து முன்னணி பேரியக்கம் கேட்டுக் கொள்கிறது.