Home Blog Page 184

வியாச பூஜை – குரு பூர்ணிமா!

gurupoornima vyasa poojai - 2026

சந்நியாஸிகள் அனைவரும் அனுஷ்டிக்கும் பூஜைதான் வியாஸ பூஜை! சந்யாசிகள் அனைவரும் அனுஷ்டிக்கும் விரதமே சாதுர்மாஸ்ய விரதம்! எந்த விதமான வேறுபாடும் இல்லாமல் த்வைத, அத்வைத, விசிஷ்டாத்வைத ஆசார்யர்கள் அனைவருமே இந்த இரண்டையும் அனுஷ்டிக்கிறார்கள்.

வியாஸ பகவான், வேதத்தை நான்காகப் பிரித்து, தொகுத்தளித்து உலகத்துக்கு பேருதவி செய்திருக்கிறார். வேதக் கருத்துகளை தெளிவாக, சுலபமாக, விரிவாக விளக்குவதற்காகவே, சநாதன தர்மத்துக்குப் பிரமாணமாக எடுத்துக் கொள்ளக் கூடிய 18 புராணங்களைப் படைத்தார். மகாபாரதம் என்ற அரும்பெரும் இதிஹாஸத்தைப் படைத்தார்.

ஆத்ம தத்துவத்தை போதிக்கும் உபநிஷத் பாகங்களின் தாத்பர்யத்தை யுக்திகளால் விளக்கி நிறுவச் செய்த கிரந்தமே, ப்ரம்ஹ ஸ§த்ரம் . இந்த சூத்ரங்கள்தான் வேதாந்த ஸித்தாந்தத்தின் கண்ணாடியாகத் திகழ்கிறது. ப்ரம்ஹஸ¨த்ரங்களுக்கு உத்திர மீமாம்ஸா சாஸ்திரம் என்றும் பெயருண்டு. இதற்கு மூன்று மதாசார்யர்களும் வியாக்கியானம் செய்துள்ளார்கள். எனவே த்வைத, அத்வைத, விசிஷ்டாத்வைதமாகிய மும்மதஸ்தர்களுமே வியாஸ பகவானை பூஜிக்கின்றார்கள்..

ஆத்ம தத்துவத்தை சூத்ரங்கள் வாயிலாக விளக்கி அருளிய வியாஸரை ஆத்ம ஞானத்தில் ஈடுபட்ட ஸந்நியாஸிகள் வியாஸ பௌர்ணமி அன்று ஸ்ரீவியாஸ பகவானை பூஜித்து வருகிறார்கள். அன்று தங்களது மத குரு பரம்பரையில் தோன்றிய ரிஷிகளை பூஜிக்கிறார்கள்.

எப்போதும் யாத்திரையாகச் சென்று கொண்டேயிருக்கும் சந்நியாஸிகளுக்கு ‘பரிவ்ராஜகர்’ என்று பெயர். இவர்கள் ஆனி பௌர்ணமி தொடங்கி கடைப்பிடிக்கும் சாதுர்மாஸ்ய விரத காலம் மட்டுமே ஓரிடத்தில் தங்கியிருப்பர்.

மழைக்காலத்தில் ஜீவராசிகள் பெருகி அலையுமாதலின் தங்கள் நடமாட்டத்தால் அவற்றுக்கு ஹிம்சை நேராதவாறு ஒரே இடத்தில் தங்கியிருப்பது என்பது இதன் தாத்பரியம்.
அஹிம்ஸையை சிரமேற்கொண்ட யதிகள் எனவே தான் இந்தக் காலத்தில் பாத யாத்திரை எதுவும் செய்யாமல், ஓர் இடத்திலேயே தங்குகிறார்கள்.

பக்தர்களும், சிஷ்யர்களும், இந்த விஷயத்தை உணர்ந்து யதிகளை தாங்கள் மழைக்காலத்தில் இங்கேயே தங்கவேண்டும்; தங்களுக்கு வேண்டிய பணிவிடைகளைச் செய்கிறோம் என்று பிரார்த்தித்துக் கொள்வார்கள். யதிகளும் அவர்கள் பிரார்த்தனையை ஏற்று, அப்படியே தங்குவார்கள்.

இந்த நேரத்தில், விசேஷமான ஆகார நியமங்களுடன் 2 மாத காலம் தங்குவார்கள். இந்த விரதம் 4 மாதங்கள் செய்ய வேண்டியது. ஆனால் ஒரு மாதத்தை ஒரு பக்ஷமாக வைத்துக் கணக்கிட்டு, நான்கு பக்ஷங்கள் அல்லது இரண்டு மாதங்கள் அனுஷ்டிப்பது வழக்கத்தில் உள்ளது. இந்தக் காலங்களில் வேதாந்த கிரந்தங்களை யதிகள் விசேஷமாக அத்யாபனம் செய்விப்பார்கள்.

இதையே ‘குரு பௌர்ணமி’ என்பார்கள். எல்லோருக்குமே இந்த பௌர்ணமி உயர்ந்ததுதான்! அன்றைய தினம் அவரவரது ஆசிரியர், குரு ஸ்தானங்களில் உள்ளோரை வணங்குவது மிகச் சிறந்த நற்பலன் தரும். கல்வி, கலை, ஞானம் வளரும்!

தபோவனத்தில் வியாசபூஜை

ஒவ்வோர் ஆண்டும் ஆஷாட பௌர்ணமி \ வியாச பௌர்ணமி நாளில் சாதுர்மாஸ்ய விரதம் தொடங்கப்பட்டு, வியாச பூஜை நடத்துவது வழக்கம். பராசர முனிவரின் புதல்வரும், ஞானியருள் சிறந்தவருமான வேதவியாசருடைய இயற்பெயர் ‘கிருஷ்ண த்வைபாயனர்’ என்பது.

இந்து மதத்திற்கு ஆணிவேராகப் போற்றப் படுவதால் குரு பரம்பரை பல இருப்பினும், வேத வியாசர் இதில் முக்கியமானவர் ஆகிறார். பகவத் கீதையில் ஸ்ரீகிருஷ்ணர், ‘நான் ரிஷிகளில் வியாசராக இருக்கிறேன்’ என்று கூறியிருப்பதால், அந்த அடிப்படையில் கிருஷ்ண பரமாத்மாவை மத்தியில் வைத்து சாதுர்மாஸ்ய வியாஸ பூஜை நடத்துவது பொதுவான வழக்கம்.

இந்த பூஜை கிருஷ்ண பஞ்சகம், வியாச பஞ்சகம், பகவத்பாத பஞ்சகம், ஸனத் பஞ்சகம், திரவிட பஞ்சகம் என்று 5 பஞ்சகங்களை அமைத்து பக்கங்களில் 24 குருமார்களை ஆவாஹனம் செய்து 30 பேர் பூஜை செய்வது. இது மடங்களுக்கும் சம்ப்ரதாயங்களுக்கும் ஏற்ப மாறுபடும். இறுதியில் துறவிகள் சாதுர்மாஸ்ய விரத சங்கல்பம் செய்துகொள்வார்கள். உலக நலனுக்காக அனைத்து தேவதைகளுக்கும் பிரீதி செய்வதே வியாஸ பூஜையின் நோக்கம்.

கணபதி, «க்ஷத்ரபாலகர், துர்க்கை, ஸரஸ்வதி, சுகர், நாரதர் ஆகியோருடன், அஷ்ட திக்பாலர்களாக, ஈசானன், இந்திரன், அக்னி, யமன், நிருருதி, வருணன், வாயு, ஸோமன் ஆகியோரை ஆவாஹனம் செய்வர். வியாசர் அவரது சீடர்களான பைலர், ஜைமினி, வைசம்பாயனர், சுமந்து ஆகியோரும், ஆதி சங்கரர் அவரது சீடர்களான பத்ம பாதர், ஸ§ரேச்வர். ஹஸ்தா மலகர், தோடகர் ஆகி யோரும், மௌனகுரு சீடர் களான சனகர், சனந்தனர், ஸநாதனர், ஸநத்குமாரர் ஆகியோரும், நாரதர், சுகர், கௌடபாதர், கோவிந்த பகவத்பாதர் ஆகிய குருமார்களும், சுத்த சைதன்யம் என்ற பெயரில் சாளக்ராமமும் பூஜிக்கப்படுகின்றன.

பிரம்மா, ருத்ரன், லிங்கோத் பவர், குரு பஞ்சகத்தில், குரு, பரம குரு, பரமாத்ம குரு, பரமேஷ்டி குரு, சம்ப்ரதாய போத குரு ஆகியோரும், கிருஷ்ண பஞ்சகத்தில், ஸ்ரீகிருஷ்ணன், வாஸ§தேவன், சங்கர்ஷணன், பிரத்யும்னன், அநிருத்தன் ஆகியோருமாக பூஜிக்கப் படுவது தபோவன நடைமுறை.
அட்சதையைப் பரப்பி பழங்கள், வெற்றிலை, எலுமிச்சம் பழங்கள் கொண்டு பூஜிக்கப் படுகிறது.

வியாச பூஜை (குரு பூர்ணிமா)

gurupoornima vyasa poojai - 2026
  • கிருஷ்ணா ராமலிங்கம்

வ்யாஸம் வஶிஶ்ட நப்தாரம் ஶக்தே பௌத்ரம் அகல்மஶம் |
பராஶராத்மஜம் வந்தே ஶுக தாதம் தபோ நிதிம் ||

வசிஷ்டரின் கொள்ளுப்பேரரும், சக்தியின் பேரரும், பராசரரின் புதல்வரும், சுகரின் தந்தையும், மாசற்றவரும், தவத்தில் சிறந்தவருமான முனிவர் வியாசரை வணங்குகிறேன்.


வியாச பூஜை என்பதும், சாதுர் மாஸ்ய விரதம் (சாதுர்யம் மாஸ்ய விரதம் கடந்த வெள்ளிக்கிழமை அன்று ஆரம்பமானது) சாந்திரமானப்படி ஆஷாட பவுர்ணமி (இந்த வருடம்: 21.7.2024) அன்று வருவது. இதையே ‘குரு பவுர்ணமி’ என்றும் சொல்வர். எல்லோருக்குமே இந்த பவுர்ணமி உயர்ந்தது.

ஆஷாட பெளர்ணமியும் மூல நட்சத்திரம் சேர்ந்து வருவது விஷேசமான ஒரு நிகழ்வாக ஜோதிட சாஸ்திரத்தில் பார்க்கப்படுகிறது, அடுத்த ஆஷாட பெளர்ணமி மூல நட்சத்திரம் அறுபத்து நான்கு ஆண்டுகளுக்கு பிறகு தான் வருகிறது என்று இன்று வேத வகுப்பில் குருஜி மூலமாக தெரிய வந்தது.

குருப்ரம்மா குரு விஷ்ணு குரு தேவோ மகேஷ்வரா, குரு சாட்சாத் பரப்ரம்ஹ தஸ்மை ஸ்ரீ குரவே நம:

தேஹிமே குரு ஸ்மரணம்
தேஹிமே குரு கீர்த்தனம்
தேஹிமே குரு தர்ஷணம்
தேஹிமே குரு ஸாமீப்யம்
தேஹிமே குரு பதஸேவனம்
தேஹிமே குரு உபதேசம்
தேஹிமே குரு ஸாயுஜ்யம்

குரு பூர்ணிமா, ஒவ்வொரு வருடமும் ஆஷாட (ஆடி) மாத பௌர்ணமி அன்று கொண்டாடப்படுகிறது. நமக்கு கல்விக் கண் திறந்து, நாம் வாழ்வில் உயர வழி வகுத்த குருமார்களை, ஆசிரியர்களை இந்த நன்னாளில் வணங்குதல் சிறந்தது.

இந்த வியாச பூஜையை முதன் முதலில், துவக்கியவர், வேதவியாச மஹரிஷி அவர்களின் புதல்வரும், ஸ்ரீமத் பாகவதத்தை மன்னர் பரீக்ஷித் மஹாராஜாவுக்கு உபதேசித்தவருமான, ஸ்ரீ சுகப்பிரம்மரிஷியாவார்.

அவரை அடுத்து, ஸ்ரீ சூதமுனிவர் ஸ்ரீசுகப்பிரம்மரிஷிக்கு ‘வியாச பூஜை’யை, த‌ம் குருவை ஆராதிக்கும் முகமாகச் செய்தார். இது இரண்டாவது வியாச பூஜையாகச் சொல்லப்படுகிறது. அதற்குப் பிறகு, வியாச பூஜை, குருவை ஆராதிக்கும் முகமாக, வழிவழியாக கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.

பகவான் உறங்க ஆரம்பித்தது முதல் எழுந்திருக்கும் வரை ஆற்ற வேண்டிய விரதம் சாதுர்மாஸ்ய விரதம். ஒவ்வொரு ஆண்டும் வரும் ஆஷாட பவுர்ணமி – வியாச பவுர்ணமி என்ற நாளில் இந்த விரதம் அனுஷ்டிக்கப்பட்டு ‘வியாஸ பூஜை’ நடத்துவது துறவிகளின் பணி.

பகவத் கீதையில் கிருஷ்ண பரமாத்மா, ‘நான் ரிஷிகளில் வியாசராக இருக்கிறேன்’ என்று கூறியிருப்பதால், அந்த அடிப்படையில் கிருஷ்ண பரமாத்மாவை மத்தியில் வைத்து சாதுர்மாஸ்ய வியாஸ பூஜை நடத்துவது ஆதிசங்கர பகவத்பாதாள் தொடங்கி குரு பரம்பரையில் அவரால் ஸ்தாபிக்கப்பட்ட மடங்களில் வழக்கமாக கடைப்பிடித்து வருகிறார்கள். .

இந்த பூஜை கிருஷ்ண பஞ்சகம், வியாச பஞ்சகம், பகவத்பாத பஞ்சகம், ஸனச பஞ்சகம், திரவிட பஞ்சகம் என்று 5 பஞ்சகங்களை அமைத்து பக்கங்களில் 24 குருமார்களை ஆவாஹனம் செய்து 30 பேர் பூஜை செய்வது, இறுதியில் துறவிகள் சாதுர்மாஸ்ய விரத சங்கல்பம் செய்துகொள்வார்கள். உலகநலனுக்காக அனைத்து தேவதைகளுக்கும் பிரீதி செய்வதே வியாஸ பூஜையின் நோக்கமாகும்.

இந்து மதத்திற்கு மூல புருஷராக விளங்கும் வியாச பகவானுக்கு ஆண்டு தோறும் சாதுர்மாஸ்ய விரதத்தின் முதலில் சிறப்பு வழிபாடு வியாச பூஜை என்ற பெயரில் நடைபெறுகிறது.

பராசரா முனிவரின் புதல்வரும், ஞானியருள் சிறந்தவருமான வேத வியாசருடைய இயற்பெயர் ‘கிருஷ்ண த்வைபாயனர்’ என்பதாகும். வேதம், மகாபாரதம் மற்றும் பதினெண் புராணங்களை அருளியவரும், வேதாந்த சூத்திரத்தைத் தொகுத்தவர் இவர்தான்.

இந்து மதத்திற்கு ஆணிவேராக இவர் போற்றப்படுவதால் குரு பரம்பரை பல இருப்பினும், வேத வியாசர் பெயர் இதில் முக்கியமாகச் சொல்லப்படுகிறது.

இந்த வியாச பூஜையில் வியாசர் அவரது நான்கு சீடர்களான பைலர், ஜைமினி, வைசம்பாயனர், சுமந்து ஆகியோரும், ஆதிசங்கரர் அவரது சீடர்களான பத்மபாதர், ஸுரேச்வர், ஹஸ்தாமலகர், தோடகர் ஆகியோரும், மவுனகுருவின் சீடர்களான சனகர், சனந்தனர், ஸநாதனர், ஸநத்குமார் ஆகியோரும் நாரதர், சுகர், கவுடபாதர், கோவிந்த பகவத் பாதர் ஆகிய குருமார்களும், கடைசியாக சுத்த சைதன்யம் என்ற பெயரில் சாளக்ராமமும் பூஜிக்கப் படுகின்றன.

துறவிகளாலேயே செய்யப்படும் இந்த பூஜையானது முளையில்லாத அட்சதையைப் பரப்பி நடுவில் கிருஷ்ண விக்ரகமும் சாளக்ராமமும் வைத்து எலுமிச்சம் பழத்தை ஆங்காங்கு வைத்து முறைப்படி ‘குருபரம்பரை ’ பூஜையாக நடத்தப்பெறுகிறது.

எப்போதும் யாத்திரையாகச் சென்று கொண்டேயிருக்கும் துறவிகளுக்கு – சன்னியாசிகளுக்கு ‘பரிவ்ராஜகர்’ என்று பெயர். இவர்கள் ஆனி பவுர்ணமி தொடங்கிக் கடைப்பிடிக்கும் சாதுர்மாஸ்ய விரதகாலம் மட்டுமே ஓரிடத்தில் தங்கியிருப்பர். மற்ற காலங்களில் பல பகுதிகளிலும் எப்போதும் யாத்திரையிலேயே இருந்து வருவர்.

மழைக்காலத்தில் ஜீவராசிகள் பெருகி அலையுமாதலின் தங்கள் நடமாட்டத்தால் அவற்றுக்கு இம்சை நேராதவாறு ஒரே இடத்தில் தங்கியிருப்பர். நான்கு மாதங்கள் இவ்வாறு தங்கியிருக்கும் விரதமே ‘சாதுர் மாஸ்ய விரதம்’ எனப்படும். ஆனி மாதம் பவுர்ணமி முதல் இவ்விரதம் தொடங்குகிறது. இக்காலத்தில் வேத, வேதாந்த, உபநிஷத விஷயங்களில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டு வசிப்பார்கள்.

வியாச பூஜை தினத்தன்று, ஆதி குருவான ஸ்ரீமந் நாராயணருக்கும், ஸ்ரீ வேத வியாசருக்கும், பூஜை செய்து விரதம் துவங்கப்படும். இவ்விரதத்தை நான்கு மாதங்கள் அல்லது நான்கு பட்சங்கள் கடைப்பிடிக்க வேண்டும் என்பது சாஸ்திரம். ஆகவே, அம்மாதிரி ஒரே இடத்தில் தங்கி இருப்பதாகச் சங்கல்பம் செய்து கொள்வார்கள்.

இவ்வாறு அவர்கள் ஒரே இடத்தில் தங்கியிருக்கும் போது, புராணத் தத்துவங்களையும், வேதாந்த ரஹஸ்யங்களையும் அவர்கள் உபதேசிப்பார்கள். அவர்கள் விரதத்தால் அவர்கள் இருக்கும் இடமே புனிதப்பட்டு, நன்மை விளையும். அந்த இடத்தில் வசிக்கும் கிருஹஸ்தர்கள், சன்யாசிகளுக்கு பூஜைக்குத் தேவையான பொருட்களை அளித்தல், பிக்ஷாவந்தனம் செய்தல் போன்ற புண்ணியச் செயல்களைச் செய்வதால், அவர்கள் தலைமுறையே நலமடையும்.

இவ்வாறு சாதுர்மாஸ்ய விரதம் மேற்கொண்ட சன்யாசிகளுக்குச் சேவை செய்த சிறுவன், அதன் பலனாக, மறு பிறவியில் நாரத மஹரிஷியாகப் பிறந்தார். ஆகவே, இவ்வாறு விரதம் இருக்கும் சன்யாசிகளுக்கு உதவுவதும், அவர்களது உபதேச மொழிகளைக் கேட்பதும் மிக்க நலம் பயக்கும்.

குருவை வணங்கி வாழ்வில் உயர்ந்தோர் பலர். தன் அவையில் நுழைந்த வியாழ பகவானை வணங்கி, ஆசனமளிக்காமல் நிந்தனை செய்ததன் பலனாக, தேவேந்திரன் தன் செல்வம் முழுவதையும் இழந்து துன்புற்று, பின் அவர் கருணையை மீண்டும் பெற்று, தன் செல்வம் முழுவதையும் அடைந்து மகிழ்ந்தான்.

சாதுர் மாஸ்ய விரதம் தனிப்பட்ட உணவு நியமங்களைக் கொண்டது. முதல் மாதம், காய், கிழங்கு வகைகள் தவிர்க்கப்பட வேண்டும். இரண்டாவது மாதம், தயிர், மூன்றாவது மாதம் பால், நான்காவது மாதம் பருப்பு வகைகள் தவிர்க்கப் படுவது வழக்கம். சன்யாசிகள் மட்டுமல்லாமல், சில வயது முதிர்ந்த பெரியோர்களும் இன்றளவும் இவ்விரதத்தை கடைபிடிக்கின்றனர்.

இந்த நன்னாளில், ஆச்சாரியப் பெருமக்களுக்கு, இயன்ற பொருட்களை சமர்ப்பித்து ஆசி பெறுதல் சிறந்தது. பொருட்களோடு, ‘தான்’ எனும் ஆணவம் இல்லாமல், பணிவு, குருபக்தி எனும் மிகவுயர்ந்த பொருட்களை குருவுக்குச் சமர்ப்பித்தலே உண்மையான சமர்ப்பணமாகும். வியாச பூஜையின் தத்துவம் இதுவே.

அன்றைய தினம் அவரவரது ஆசிரியர், குரு ஸ்தானங்களில் உள்ளோரை வணங்குவது மிகச் சிறந்த நற்பலன் தரும். கல்வி, கலை, ஞானம் வளரும்.

குருவும் தெய்வமும் ஒருவரே ஆவர். ஆகவே, நமது குல ஆச்சாரியர்களை, நமக்குக் கல்வி கற்பித்த குருமார்களை, நேரில் செல்ல முடியாவிட்டாலும், மனதால் வணங்கி வழிபடுவது சிறந்தது.

மாணவர்கள் இந்த நாளில் தமது ஆசிரியப் பெருமக்களை வணங்குதல் அவர்கள் கல்வியில் மேன்மேலும் சிறக்க வழி செய்யும்.

மேலும், தக்ஷிணாமூர்த்தி வழிபாடு, ஆசாரியர்களின் பிருந்தாவனங்களில் சென்று வழிபாடு செய்தல் சிறந்தது. ஆகவே, வியாச பூஜை தினத்தன்று, குருமார்களை வணங்கி நலம் பல பெறுவோம்!!!!!

ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர
ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர

சமூக வலைத்தள வேலைவாய்ப்பு விளம்பரங்களை நம்பி ஏமாறாதீர்!

employment career opportunities - 2026
#image_title

‘சமூக வலைதளங்களில் வெளியாகும், வேலைவாய்ப்பு குறித்த விளம்பரங்களை நம்பி, முன்பணம் செலுத்தி ஏமாற வேண்டாம்’ என, மின்வாரியம் எச்சரித்து உள்ளது.

மின்வாரியம் வெளியிட்டுள்ள அறிவிப்பு:

சமூக வலைதளங்கள், போலி இணையதளங்கள் போன்றவற்றில் வெளியாகும், மின் வாரியத்தில் வேலைவாய்ப்பு என்ற விளம்பரங்களை நம்ப வேண்டாம். பொதுமக்கள் விழிப்புடன் இருந்து, வேலை வாய்ப்பு மோசடிகளில் சிக்காமல் இருக்க வேண்டும்.

சந்தேகத்திற்கு இடமான செயல்பாடு ஏதேனும் இருந்தால், சைபர் கிரைம் இணையதளத்தை, https://cybercrime.gov.in என்ற முகவரியில் தொடர்பு கொண்டு, புகார் அளிக்கலாம். மேலும், 1930 என்ற கட்டணமில்லாத தொலைபேசி எண்ணிலும் புகார் அளிக்கலாம். வேலைக்காக முன்பணம் எதுவும் கட்ட வேண்டாம். இவ்வாறு, அதில் கூறப்பட்டு உள்ளது.


இந்தியா போஸ்ட் ஆபீஸ் பெயரில் மோசடி – விழிப்புடன் இருங்கள்…

இந்தியா போஸ்ட் ஆபீஸ் பெயரில் குறிப்பிட்ட சில செல்போன் எண்களுக்கும், இ-மெயிலுக்கும் மோசடி கும்பல் SMS அனுப்பி மோசடியில் ஈடுபடுவதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.

உங்கள் பார்சலை சரியான முகவரி இல்லாததால், டெலிவிரி செய்ய முடியவில்லை. எனவே, பார்சல் திரும்ப பெறப்படுவதை தவிர்க்க, 48 மணி நேரத்தில் முகவரியை அப்டேட் செய்யுங்கள் என லிங்க் அனுப்பி, அந்தரங்க தகவல்களை திருடி மோசடியில் ஈடுபடுவதாக எச்சரிக்கப்பட்டுள்ளது. எனவே உஷார்!

இதேபோல் இ-செலான் பெயரிலும் மோசடி நடக்கிறது. கவனம் தேவை. வி

பயங்கரவாதத்தை வேரறுப்பதில் உளவு அமைப்புகள் இடையே ஒத்துழைப்பு தேவை: அமித் ஷா!

1723147 amith sha - 2026

உள்துறை அமைச்சக பாதுகாப்பு அமைப்புகளின் தலைவர்களுடன் உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆலோசனை மேற்கொண்டார். அதில் பயங்கரவாதத்தை வேரறுப்பதில் நாட்டின் உளவு அமைப்புகள் இடையே ஒத்துழைப்பு தேவை என்று குறிப்பிட்டார்.

நாட்டின் பாதுகாப்பு சவால்களை எதிர்கொண்டு வரும் புலனாய்வு அமைப்பின் பன் முகமை மையத்தின் செயல்பாடுகள் குறித்து பல்வேறு பாதுகாப்பு அமைப்புகள் மற்றும் சட்ட அமலாக்க முகமைகளின் தலைவர்களுடன், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, புதுதில்லியில் இன்று (19.07.2024) ஆலோசனை நடத்தினார்.

கூட்டத்தில் பேசிய அமித் ஷா, தேசப் பாதுகாப்பில் மத்திய அரசின் ஒட்டுமொத்த அணுகுமுறையை பின்பற்றுமாறு, நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் வந்திருந்த பாதுகாப்பு அமைப்புகள், புலனாய்வு மற்றும் அமலாக்க அமைப்புகளின் தலைவர்களிடம் அறிவுறுத்தினார்.

பயங்கரவாத கட்டமைப்புகள் மற்றும் அவர்களுக்கு உதவி செய்வோரை வேரறுப்பதில் பாதுகாப்பு அமைப்புகளிடையே நெருங்கிய ஒத்துழைப்பு தேவை என்று வலியுறுத்தினார்.

இதன் மூலம் தான் நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் நிலையை தடுக்க முடியும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

ஒட்டுமொத்த உள்நாட்டு பாதுகாப்பு நிலவரம் குறித்து பேசிய உள்துறை அமைச்சர், அனைத்து பாதுகாப்பு அமைப்புகளும், பன்முகமை மையத்துடனான ஈடுபாட்டை அதிகரித்து, இணைந்து செயல்படும் அமைப்பாக மாற்ற வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.

அனைத்து சட்ட அமலாக்க அமைப்புகள், போதைப் பொருள் ஒழிப்பு முகமைகள், இணையப் பாதுகாப்பு, புலனாய்வு அமைப்புகள், உறுதியான மற்றும் சரியான நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார்.

Is Trump win a Done Deal?

 By   Narasimhan Vijayaraghavan

donald tump shot - 2026

The loud debate in America post Biden-Trump debate on 27th June,2024 has now pivoted. Biden has been rescued from facing an onslaught from within and without that he must go. But the Covid-19 impact on him on 17th July,2024 may have again ignited the embers to a higher temperature.

The assassination attempt by the now killed 20 year old Thomas Matthew Ctooks has moved the needle irrefutably in favour of Donald J Trump,  as the odds on  favourite, on his way to  the Oval Office, for a second term, in the Nov 5,2024 POTUS elections. Trump accepting the nomination in the RNC Convention on 18th July,2024, amidst huge fanfare was a powerful show  of strength and Unity with a capital U. The debate on who will win at the hustings  now  seems to be done and dusted (?) since voters basically vote on feelings and emotions, as Malcolm Gladwell and Yuval Noah Harari concur.

In Indian general elections 2024 ,  Modi  3.0 was perceived as a done deal, even before the seven phase elections were announced. Of course, matters went  overboard with the cacophony from Modi & Co that it would clear ‘chaar so paar’ (400 +). And the Exit polls went horribly worse . It turned out to be a Modi  Miscalibration Moment.

Modi 3.0 is now a BJP led NDA coalition government, as BJP fell short by 32 seats of an outright party majority, unlike  in 2014 and 2019. Yet, Modi did return as Prime  Minister, emulating Jawaharlal Nehru’s record in 1952. The Victor was predicted, even if the vanquished’s performance against the run of play,  has led them to behave as if they were the winners.

The chaar so paar which Modi failed to accomplish, the labour leader in Keir  Starmer, comfortably achieved on July  4,2024, defeating the incumbent Conservatives,  in office for 14 years, by 411:121 majority. Overwhelmingly,  the opinion polls had predicted this result. And the Exit Polls in UK were  spot on at 400 plus.

The repetitive and multiple  opinion polls in the US of A have consistently indicated , thus far, a close race between Biden and Trump. But Trump takes it away in the five swing states such as Arizona, Georgia, Michigan, Pennsylvania and Wisconsin.

Remember that Trump beat Hilary Clinton in 2016 POTUS contest by 304 to 227 electoral college votes. Electoral College is a unique beast, peculiar to USA, where the candidate winning the popular vote could still lose the election.Since 198&, Republicans  had become President  despite losing the popular election vote count.

Democrats have lost the elections, upon failure to clear the Electoral College hurdle on more occasions. However, Electoral College route is not going away,  as  the US Constitution has been amended just 27 times ( last of them in 1992) since 1788. It can be ruled out for all practical purposes in the present polarised times with wafer thin majorities in Senate and/or House of Representatives, for either Democratic or Republican parties.

The Democrat Hilary Clinton  was ahead of President-elect Donald Trump by almost 2.9 million votes, with 65,844,954 (48.2%) to his 62,979,879 (46.1%), according to certified final election results from all 50 states and the District of Columbia in 2016.

In 2020, though Josef R Biden won the popular vote too, his lead in the Electoral College, came up from his wafer thin majorities in the  above cited swing States. It was a close call for Biden and not a th(r)umping  win.

Biden gaffes are now legion. His age is showing up,  as Father Time is marching relentlessly. The first and possibly the only debate this season on 27th June,2024 brutally exposed Biden’s tortured mental acuity. All his explanations as repeated travels to Europe and suffering cold did not wash.  Mounting pressure on Biden to quit his candidacy  commenced with New York Times Editotial and it was becoming  a viral movement over Biden’s defiance, and suddenly surfaced this Trump assasination attempt.

And on 15th July,2024, as if timed  to perfection,  commenced the Republican National Convention, at Milvaukee in the State of Wisconsin. Ian Bremmer, who is a political scientist and president and founder of Eurasia Group, the leading geopolitical risk advisory firm, compared the appearance of Trump before RNC, as if a Lazarus, from the miraculous story of Jesus brining him back to life!

Add all these potions, be it in numbers or chemistry or charisma, it would not require a political scientist or a pollster to predict a possible  win for Donald Trump J Trump. Earlier,  it was an election that was Biden’s to lose. Now, it is Trump’s to win. Trump has to simply turn up on chosen platforms. And utter that he was in it  to win it to make America  ‘ A more perfect Union’. He is sure to be inaugurated as POTUS on Jan 20,2025.

Notwithstanding the convicted felon status he is facing, possible sentencing and at least three more indictments related to 2020 elections and classified documents’ cases, July 13th,1024 may be the true turning or inflexion point to move the needle towards Trump, beyond retrievability for Biden.

No wonder Trump is ‘altered  his prepared speech’ for the RNC meet in Milwaukee , in the wake of the assassination attempt. The other special invitees/speakers too also hurriedly tweaked  their presentations to align with the expected ‘Unity’ theme’. It is now infectious.

Trump does need not be the polarised and divisive face, he has been to his base. He can comfortably elevate himself  to the status of a Statesman,  he may not be  or is not. It is perception that pays not reality in electoral politics. He can truly play the actor he was in The Apprentice.

If Trump delivers a teleprompter driven  speech on ‘A more Perfect Union’ as their Constitution conceived, on every single platform till Nov 5,2024, he should be  home and dry. No matter how unified a message Biden delivers,  as in 2020 or in his message from the Oval Office, while condemning the assassination attempt, the needle is unlikely to come back to  where it was before 13th July, 2024, for a close  or meaningful  contest in POTUS elections. That is  a given,  as the sympathy factor sway in favour of Trump may become more entrenched,  and not dissipate,  before the voting commences in September 2024 itself, which is another uniqueness about the US election calendar.

(Writer is practicing advocate in the Madras High Court)

ஆடி வருகுது காண்!

ambal dev - 2026

ஆடி மாத சிறப்புகள்

  1. ஆடி மாதம் பிறந்ததும் தட்சணாயனம் ஆரம்பமாகிறது. ஆடி முதல் மார்கழி வரை தட்சணாயன காலமாகும்.
  2. இந்த புண்ணிய கால கட்டங்களில் புனித நதிகளில் நீராடுவது மிகவும் விஷேம்.
  3. ஆடி மாதத்தைக் கணக்கிட்டுத்தான் பண்டிகைகளின் தொடக்கம் ஏற்படுகிறது.
  4. ஆடி மாதம் முழுவதும் கிராமப்புறத்தில் காவல் தெய்வமாக விளங்கும் மாரியம்மன், அய்யனாரப்பன், மதுரை வீரன், மாடசாமி, கருப்பண்ணசாமி போன்ற கிராம தேவதைகளுக்கு பூஜைகளும், விழாக்களும் நடைபெறும்.
  5. ஆடி மாதத்தில் நெல்லை மாவட்டம் சங்கரன்கோவிலில் பன்னிரண்டு நாட்கள் அம்மனின் ஆடி தபசு திருநாள் மிகக் கோலாகலமாக கொண்டாடப் படுகிறது. ஹரியும் சிவனும் ஒன்றே என்ற தத்துவத்தை உலகிற்கு உணர்த்த இந்த விழா நடத்தப்படுகிறது.
  6. ஆறு, மக்களின் ஜீவ நாடியாதலால், அதில் ஆடி மாதம் புதுநீர் வருவதைக் கொண்டாடுவது பல நூற்றாண்டுகளாக தமிழர் மரபாக உள்ளது.
  7. ஆடி மாதத்தில் சிவனின் சக்தியை விட பார்வதியின் சக்தி அதிகமாக இருக்கும் என்பது ஐதீகம்.
  8. தமிழ் மாதங்களில் ஆடி மாதத்தில் தான் அதிகபட்ச அளவுக்கு அம்மன் கோவில்களில் திருவிழா நடக்கிறது. எனவே ஆடி மாதத்துக்கு அம்மன் பக்தர்களிடம் தனி மரியாதை உண்டு.
  9. கேரளாவில் ஆடி மாதத்தை இராமாயண மாத மாக அம்மாநில மக்கள் கருதுகிறார்கள்.
  10. ஆடி அமாவாசை அன்று மறைந்த முன்னோர்களுக்கு பிதுர் கடமைகளை செய்தால், ஆண்டு முழுவதும் பித்ருக்களுக்கு கடன் கொடுத்த பலன் கிடைக்கும்.
  11. ஆடி பவுர்ணமி தினத்தன்று தான் ஹயக்ரீவர் அவதாரம் நிகழ்ந்தது. எனவே ஆடி பவுர்ணமி தினத்தன்று வைணவ தலங்களில் சிறப்பு வழிபாட நடைபெறும்.
  12. தமிழ்நாட்டின் பல பகுதிகளில் அம்மனுக்கு பல வித காய்கறிகளால் ஆன கதம்ப சாதத்தை படைப்பது ஐதீகமாக உள்ளது.
  13. ஆடி மாதம் சுக்ல தசமியில் திக் தேவதா விரதம் இருக்க வேண்டும். அன்று திக் தேவதைகளை அந்தந்த திக்குகளில் வணங்கி பூஜித்தால் நினைத்தது நடக்கும்.
  14. ஆடி மாதம் சுக்லபட்ச ஏகாதசி முதல் கார்த்திகை மாத சுக்லபட்ச ஏகாதசி வரை மாச உப வாசம் இருப்பது குடும்பத்தில் அமைதி ஏற்படுத்தும்.
  15. ஆடி மாதம் கிராம தேவைதை கோவில்கள் உள்பட திறக்காத எல்லா கோவில்களும் திறக்கப்பட்டு பூஜைகள் நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.
  16. ஆடி செவ்வாய்க்கிழமைகளில் கோவிலில் எலுமிச்சம் பழ விளக்கு ஏற்றினால் கூடுதல் பலன்கள் கிடைக்கும். ஆனால் எலுமிச்சம் பழ விளக்குகளை ஒரு போதும் வீட்டில் ஏற்றக் கூடாது.
  17. ஆடி மாதம் வளர்பிறை துவாதசி நாளில் தொடங்கி கார்த்திகை மாதம் வளர்பிறை துவாதசி நாள் வரை பெண்கள் துளசி பூஜை செய்து வந்தால், நினைத்தது நடைபெறும். வீட்டில் சகல செல்வங்களும் குவியும்.
  18. கன்னியாகுமரி மாவட்டம் தோவாளை என்ற ஊரில் முருகன் கோவில் உள்ளது. ஆடி மாதம் கடைசி வெள்ளிக்கிழமை அங்குள்ள முருகனுக்கு கூடை, கூடையாக மலர்களை கொட்டி மலர் அபிஷேகம் செய்வார்கள். இதை அந்த பகுதி மக்கள் ஆடியில் மலர் முழுக்கு, அழகு வேல்முருகனுக்கு என்று சொல்வார்கள்.
  19. ஆடிப்பெருக்கு திருவிழா ஸ்ரீரங்கம் அம்மா மண்டபத்தில் விமரிசையாக நடைபெறும். அப்போது பெருமாள் மண்டபத்துக்கு எழுந்தருள்வார்.
  20. ஆடி மாதம் செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் காமாட்சியை வணங்கினால் திருமண தடைகள் விலகி சுபம் உண்டாகும்.
  21. ஆடி மாதம் முழுவதும் மீனாட்சியை வழிபட்டால் குடும்பத்தில் அமைதி ஏற்படும்.
  22. ஆடி மாதம் முத்து மாரியம்மனை மனம் உருக வழிபட்டால் திருஷ்டிகள் விலகி விடும்.
  23. ஆடி மாதம் சுக்ல துவாதசியில் மகா விஷ்ணுவை நினைத்து விரதம் இருந்தால் செல்வம் பெருகும்.
  24. ஆடி மாதம் சுக்ல பட்ச ஏகாதசி தினத்தன்று அன்னதானம் செய்தால் சகல பாக்கியங்களும் கிடைக்கும்.
  25. ஆடி மாதம் சுக்லபட்ச திரயோதசியில் பார்வதி தேவியை நினைத்து விரதம் இருந்தால் நினைத்தது நடக்கும்.
  26. கஜேந்திரன் என்ற யானையை முதலை கவ்வியபோது அந்த யானை ஆதிமூலமே என்ற கதற உடனே திருமால் சக்ராயுதத்தை ஏவி யானையை காப்பாற்றினார். இதனை நினைவுப்படுத்தும் வகையில் ஆடி மாதம் எல்லா திருமால் தலங்களிலும் கஜேந்திர மோட்ச வைபவம் நடத்தப்படுகிறது.
  27. ஆடி மாதம் ஏகாதசி, துவாதசி நாட்களில் அரச மரத்தை சுற்றி வந்து வழிப்டால் வாழ்வில் மகிழ்ச்சி உண்டாகும்.
  28. தஞ்சாவூரில் நிசும் சூதனி உக்கிர காளியம்மன் கோவில் உள்ளது. ஆடி பதினெட்டாம் பெருக்கு தினத்தன்று தஞ்சை மாவட்ட கிறிஸ்தவர்கள் அங்கு ரொட்டி, ஆட்டுக்கறி படையலிட்டு வழிபடுவதை வழக்கத்தில் வைத்துள்ளனர்.
  29. ஆடி மாத வெள்ளிக் கிழமைகளில் மகாலட்சுமியை வழிபட்டால் வீட்டில் செல்வம் சேரும்.
  30. ஆடி மாதம் ஏதாவது ஒரு வெள்ளிக்கிழமை அம்மனை ஆவாகனம் செய்து வீட்டுக்கு வரவழைத்து வழிபடுவது சிறப்பை தரும்.
  31. ஆடி மாதம் குத்துவிளக்கை லட்சுமியாக பாவித்து அலங்கரித்து வழிபடுதல் வேண்டும்.
  32. ஆடி மாதம் அம்மனுக்கு பால் பாயாசம், சர்க்கரைப் பொங்கல் வைத்து வணங்குதல் வேண்டும்.
  33. அம்மனை வழிபடும் போது மறக்காமல் லலிதா சகஸ்ரநாமம் சொல்ல வேண்டும்.
  34. ஆடி மாதம் வீட்டில் சிறப்பு பூஜைகள் செய்யும் போது சிறு பெண் குழந்தைகளை அம்மனாக பாவித்து, உணவு கொடுத்து, ரவிக்கை, சீப்பு, குங்குமச்சிமிழ், கண்ணாடி, வளையல், தாம்பூலம் கொடுக்க வேண்டும்.
  35. ஆடிப்பூரத்தன்று ஆண்டாள் பிறந்தாள் என்பது உங்களுக்குத் தெரிந்து இருக்கும். ஸ்ரீவில்லிப்புத்தூர் கோவிலில் ஆடிப்பூரத்தன்று ஆண்டாளை நந்தவனத்துக்கு எழுந்தருள செய்வார்கள். அப்போது திருப்பாவை, நாச்சியார் திருமொழி, திருப்பல்லாண்டு பாசுரங்கள் பாடப்படும். இதனால் ஆண்டாள் மனம் குளிர்ந்து இருப்பாள். அந்த சமயத்தில் ஆண்டாளை வழிபட்டால், உங்களது எல்லா பிரார்த்தனைகளும் நிறைவேறும்.
  36. ஆடி மாதம் அம்மனுக்கு சாற்றப்படும் வளையல் களைப் பெண்கள் அணிந்து கொண்டால் திருமண பாக்கியம், குழந்தை பாக்கியம், சகல நலன்களையும், நீங்காத செல்வத்தை பெறலாம் என்பது ஐதீகம்.
  37. ஆடி மாத வெள்ளிக் கிழமைகளில் அதிகாலையில் எழுந்து குளித்து, தூய ஆடை அணிந்து, சாணத்தைப் பிள்ளையாராகப் பிடித்து, செவ்வரளி, செம்பருத்தி, அறுகு கொண்டு சூர்யோதயத்திற்கு முன்னர் விநாயகரை பூஜிக்க வேண்டும். வாழையிலை மீது நெல்லைப்பரப்பி அதன் மீது கொழுக்கட்டை வைத்து விநாயகரை வழிபட செல்வம் கொழிக்கும்.
  38. ஆடி மாதத்தை “பீடை மாதம்” என்று ஒதுக்குவது, அறியாமையால் வந்த பழக்கம். உண்மையில், “பீட மாதம்” என்றுதான் பெயர். அதாவது மனமாகிய பீடத்தில் இறைவனை வைத்து வழிபடவேண்டிய மாதம் என்பதே சரியானது.
  39. ஆடி பவுர்ணமியன்று சிவபெருமானுக்கு திரட்டுப்பால் அபிஷேகம் செய்து, கருப்புப் பட்டாடை, நூறு முத்துக்கள் கோர்த்த மணிமாலை, கருஊமத்தம் பூமாலை அணிவித்து, மூங்கில் அரிசிப் பாயாசம் படைத்து வழிபட்டால் எப்பேர்ப்பட்ட பகையும் விலகும்.
  40. பொதுவாகவே வெள்ளிக் கிழமைகள் அம்பாளுக்குரிய சிறந்த நாட்களாகும். இதனோடு அயனத்துக்குரிய சிறப்பும் சேருவதால் ஆடி மாதத்தில் வரும் வெள்ளிக் கிழமைகள் அம்பாளுக்குத் தனிச்சிறப்பு கொண்டவையாகக் கருதப்படுகின்றன.

தடுப்பூசி விவரங்களைக் காண… இணைய தளம்!

china websites - 2026

நாடு முழுதும், வழக்கமாக செலுத்தப்படும் தடுப்பூசிகள் குறித்த விவரங்களை, டிஜிட்டல் முறையில் பராமரிக்கும் வகையில், ஆகஸ்ட் இறுதியில், ‘யு – வின்’ இணையதளம் நடைமுறைக்கு வரும் என, தகவல் வெளியாகி உள்ளது.

மத்திய அரசு முடிவு : கொரோனா தடுப்பூசி விபரங்களை பதிவு செய்ய, மத்திய அரசின் சார்பில், கோ – வின் என்ற இணையதளம் துவங்கப்பட்டது. இதையடுத்து, வழக்கமாக செலுத்தப்படும் தடுப்பூசிகள் குறித்த விபரங்களை பதிவு செய்ய புதிய இணைய தளத்தை துவக்க மத்திய அரசு முடிவு செய்தது.

அதன்படி, மேற்கு வங்கத்தை தவிர, நாட்டின் அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில், தடுப்பூசிகள் செலுத்தப்படும் விபரங்களை பதிவு செய்ய, யு – வின் என்ற இணையதளம், சோதனை அடிப்படையில், கடந்த ஜனவரியில் துவங்கப்பட்டது.

கடந்த 9ம் தேதி நிலவரப்படி, யு – வின் இணையதளத்தில், 5.33 கோடி பயனாளிகள் பதிவு செய்துள்ளனர். மேலும், 83.55 லட்சம் தடுப்பூசி முகாம்கள் டிஜிட்டல் முறையில் நடத்தப்பட்டு, 18.15 கோடி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.

இந்நிலையில், இந்த நடைமுறையை, அடுத்த மாத இறுதியில், நாடு முழுதும் அறிமுகப்படுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இது குறித்து, மத்திய அரசு வட்டாரங்கள் கூறியதாவது:

நாடு தழுவிய தடுப்பூசி திட்டத்தில், தடுப்பூசி செலுத்தப்படும் பதிவுகள் கையேடுகளில் பராமரிக்கப்படுகின்றன. இவற்றை பராமரிப்பது கடினமாக உள்ளது.

மேலும், தனியார் மருத்துவமனைகளில் தடுப்பூசி செலுத்தப்படும் விபரங்கள் பதிவு செய்யப்படுவதில்லை. இந்த பிரச்னைகளை, யு- – வின் இணையதளம் போக்கும்.

கொரோனா தடுப்பூசி சான்றிதழைப் போலவே, கியூ.ஆர்., குறியீடு அடிப்படையில், டிஜிட்டல் முறையில் சரிபார்க்கக்கூடிய -தடுப்பூசி சான்றிதழை, இந்த இணையதளம் வழங்கும். இதை குடிமக்கள் எந்த நேரத்திலும் அணுகலாம்.

நோய்த் தடுப்புத் திட்டத்தின் கீழ், கர்ப்பிணியர் மற்றும் குழந்தைகளுக்கான தடுப்பூசி நிகழ்வை, யு – வின் இணையதளம் பதிவு செய்கிறது.

மகான்களை மன சுத்தியுடன் வழிபட வேண்டும்: கீழாம்பூர் பேச்சு

kizhambur speech at madurai anusham - 2026
#image_title

மதுரை: அவதார புருஷர்களை வழிபட செல்கிற போது மனம் சுத்தமாக இருக்க வேண்டும். அப்போது இறையருள் பெறலாம் என்று அனுஷம் உத்ஸவ விழாவில் கலைமகள் இதழின் ஆசிரியர் கீழாம்பூர் சங்கர சுப்பிரமணியன் பேசினார்

மதுரை அனுஷத்தின் அனுக்கிரகம் அமைப்பு சார்பில் காஞ்சி ஸ்ரீ மகா பெரியவரின் அனுஷ உத்ஸவத்தை முன்னிட்டு மதுரை எஸ் எஸ் காலனி எஸ் எம் கே திருமண மண்டபத்தில் கலைமகள் ஆசிரியர் கீழாம்பூர் சங்கர சுப்பிரமணியன் குரு அருளும் திரு அருளும் என்ற தலைப்பில் பக்தி சொற்பொழிவு ஆற்றினார். அப்போது அவர் பேசியதாவது…

மகான்களிடம் போகும்போது நமது மனம் சுத்தமாக இருக்க வேண்டும். அப்போதுதான் நமக்கு பலன் கிடைக்கும். எப்பொழுதும் தினமும் குருவை வணங்கி விட்டு தான் நமது காரியத்தை தொடங்க வேண்டும். அப்போது சௌக்கியம் கிடைக்கும்.

நாம் தினமும் பசுவை இரட்சிக்க வேண்டும். கங்கையில் குளிப்பதை விட பசுவை பராமரித்தால் அது புண்ணியம் என்று தாமிரபரணி புராணம் கூறுகிறது. இதையே மகா பெரியவர் பசுவை காப்பாற்றுவது மிகப்பெரிய புண்ணியம் என்கிறார்.

மகா பெரியவர் 1922 ஆம் ஆண்டு மதுரைக்கு வந்துவிட்டு தொடர்ந்து நெல்லை சென்றார். இதயம் பேசுகிறது மணியன் மகா பெரியவரை சந்தித்த பொழுது நெல்லை பாபநாசத்திற்கும் தஞ்சாவூர் பாபநாசத்திற்கும் ஏதாவது கனெக்சன் உண்டா என்று கேட்டார்.

எப்போதுமே பெரியவரிடம் நாம் ஏதாவது கேட்டால் அவர் எதிர் கேள்வி கேட்பார். நம்முடைய கோவில் கதைகள் தல புராணங்களை நாம் அறிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக அவர் கேட்டார்.

இன்றும் பாபநாசம் கோவிலில் உச்சி காலை பூஜை முடிந்த உடன் மீன்களுக்கு அந்த உணவை போடுவது வழக்கம். உலகில் மற்ற ஜீவராசிகளையும் நாம் இரட்சிக்க வேண்டும் என்பதற்காக மீனுக்கு சாப்பாடு போடுகிறார்கள்

ராமனின் வாழ்க்கையில் நடந்த விஷயங்களை நாம் பின்பற்றி நடக்க வேண்டும்.

மகா பெரியவர் தமிழ் இலக்கியம், தொல்லியல், இசை, ஆங்கில நுண்ணறிவு, மற்றும் அனைத்து புலமைகளும் உடையவர். குருவிற்கு எப்பொழுதும் சிஷ்யர்கள் மீது அன்பும் பரிவும் இருக்கும் .

தமிழ் பாட்டி ஔவை. தமிழ்த் தாத்தா உ.வே.சாமிநாத ஐயர். இன்று நாம் ஒழுங்காக தமிழ் படிப்பதற்கு மூல காரணம் உ. வே. சாமிநாத ஐயர் அவர்களின் முயற்சிதான்.

அனுஷ பூஜை நடத்துவதின் நோக்கம் எப்படிப்பட்ட தவ வாழ்க்கை வாழ்ந்த மகா பெரியவர் சொன்ன நல்ல விஷயங்களை நாம் கடைபிடிக்க வேண்டும். திருமணத்தை எளிதாக நடத்துவது, பட்டுப் புடவையை பயன்படுத்தக் கூடாது, லஞ்சம் வாங்க கூடாது, போதைப் பொருட்களை பயன்படுத்தக் கூடாது போன்று அவர் சொன்ன நல்ல விஷயங்களை நாம் வாழ்க்கையில் கடைபிடிக்க வேண்டும்.

இறைவனை வழிபடுவதோடு இறைவனின் அருளை பெற்ற அவதார புருஷர்களை வழிபட்டால் நமக்கு வாழ்க்கையில் சித்திகள் உண்டாகும். அவதார புருஷர்களின் அருளால் வீடும் நாடும் செழிக்கும்.

இவ்வாறு கீராம்பூர் சங்கர சுப்பிரமணியன் பேசினர். முன்னதாக கீழம்பூர் சங்கர சுப்பிரமணியனுக்கு மதுரை அனுஷத்தின் அனுகிரகம் அமைப்பு சார்பில் ஸ்ரீ மகா பெரியவர் விருதினை எழுத்தாளர் இந்திரா சௌந்தரராஜன் வழங்கி பாராட்டி பேசினார்.

அதனை தொடர்ந்து மஹா பெரியவர் விக்ரகம் மற்றும் வெள்ளிப் பாதுகைக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் மகா தீப ஆராதனை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டினை மதுரை அனுஷத்தின் அனுக்கிரகம் நிறுவனர் நெல்லை பாலு செய்திருந்தார்

கோயிலை விட்டு அரசு வெளியேற வலியுறுத்தி இந்து முன்னணி ஜூலை 21ல் ஆர்பாட்டம்!

hindumunnani - 2026

கோயில்களை மட்டும் சீரழிக்கும் அரசே! கோயிலை விட்டு வெளியேறு என்று வலியுறுத்தி, ஜூலை 21 ஞாயிறு அன்று, இந்து முன்னணி அமைப்பு மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் நடத்தவுள்ளது.

இது குறித்து அந்த அமைப்பு வெளியிட்ட துண்டறிக்கையில் குறிப்பிடப்பட்டிருப்பதாவது…

***

கோயில்களை மட்டும் சீரழிக்கும் அரசே!
கோயிலை விட்டு வெளியேறு!

தமிழகத்தில் தமிழர்களின் பண்பாடு கலாச்சாரம் இவற்றின் மையமாக விளங்கும் கோவில்களை நாத்திக ஹிந்து விரோத திராவிட மாடல் அரசு தொடர்ந்து சீரழித்து வருகிறது.

1.தமிழக அரசின் கட்டுப்பாட்டில் உள்ள பல ஆயிரம் கோவில்கள் இடிந்த நிலையில் சிதிலமடைந்து சீரழிந்து கிடக்கிறது.

2.பல ஆயிரம் கோவில்களில் விளக்கு இல்லை வழியாடு இல்லை ஒரு கால பூஜை கூட நடைபெறுவதில்லை.

3.தரிசன கட்டணம் அர்ச்சனை கட்டணம் நேர்த்திக்கடன் கட்டணம் விளக்கு பூஜை கட்டணம் மொட்டை அடிக்க கட்டணம்காது குத்த கட்டணம் என பல பெயர்களில் கோவில்களில் கட்டண கொள்ளை அடிக்கப்படுகிறது.

4.இந்து கோவில் திருவிழாவிற்கு கூடுதல் கட்டணத்துடன் அரசு பேருந்துகள் ஆனால் முஸ்லிம்கள் ஹஜ் யாத்திரை செல்ல ஒரு நபருக்கு 12,000 ரூபாயிலிருந்து 25 ஆயிரம் ஆக மானியத்தை உயர்த்தி தமிழக அரசு வழங்கியுள்ளது.

5.மக்கள் வரிப்பணத்தில் சர்ச் மசூதி ஊழியர்களுக்கு இரு சக்கர வாகனம் ஆனால் கோவில் ஊழியர்களுக்கு எதுவும் இல்லை.

6.நாகூர் சந்தனக்கூடு நடத்த 45 கிலோ சந்தன மரம் இலவசம் ரம்ஜான் நோன்பு கஞ்சி கொடுக்க 70 லட்சம் கிலோ அரிசி இலவசம் ஆனால் ஆடி மாதம் அம்மனுக்கு கூழ் ஊற்ற அரசு எதுவும் தருவதில்லை.

7.மசூதி சர்ச் சீரமைக்க கோடிக்கணக்கில் மக்கள் வரிப்பணத்தை தமிழக அரசு செலவிடுகிறது கோவில்களை பராமரிக்க அரசு எதுவும் தருவதில்லை.

8. கோவில் நிலத்தில் பஸ் ஸ்டாண்ட் நீதிமன்றம் ஆட்சியர் அலுவலகம் காவல்துறை அலுவலகம் என பல அரசு அலுவலகங்கள் ஆனால் அரசு நிலத்தில் சிறு கோவில் இருந்தாலும் அரசால் இடித்து தள்ளப்படுகிறது.

9. திமுக அரசு பொறுப்பேற்ற பின்பு நூற்றுக்கணக்கான கோவில்கள் இடிக்கப்பட்டுள்ளது ஆனால் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்ட பின்பும் சட்டவிரோத அந்நிய சர்ச், மசூதிகளை அகற்ற தமிழக அரசு அஞ்சுகிறது.

10.கோவில் வருமானத்தில் அதிகாரிகள் மற்றும் ஆளும் கட்சியினர் ஆடம்பர கார் விமானப்பயணம் நட்சத்திர ஓட்டலில் கூட்டம் அசைவ உணவு என சொகுசு வாழ்க்கை வாழ்கிறார்கள்.

11. இந்து கோவில்களில் விலை உயர்ந்த விக்கிரகங்கள் திருடப்பட்டு உள்ளது அதை மீட்க எந்த நடவடிக்கையும் இல்லை கோவில் விக்ரகங்கள் சமூக விரோதிகளால் உடைக்கப்படுவதையும் அரசு கண்டு கொள்வதில்லை.

12.கோவில் நகைகளை உருக்கி அடமானம் வைப்பதாக கூறி, விஞ்ஞான பூர்வமாக ஊழல் மூலம் கொள்ளை நடைபெறுகிறது.

13.அந்நிய கிறிஸ்தவ, இஸ்லாமிய மதங்களை பரப்ப பள்ளி கல்லூரி நடத்த அரசு மானியம் வழங்குகிறது. ஹிந்து கோவில்கள் மூலமாக சமய கருத்துக்களை கற்பிக்க ஏற்பாடு இல்லை.

14.அரசு நிர்வாகத்தால் உண்டியல் பணம் திருடப்படுகிறது. காணிக்கை நகைகள் களவாடப்படுகிறது.

15.கோவிலை அழித்து அதன் சொத்துக்களை புறம்போக்கு சொத்துக்களாகவும் தனியார் சொத்துக்களாகவும் பட்டா மாற்றம் செய்யும் மோசடி தொடர்கிறது.

16.கடந்த மூன்று ஆண்டுகளில் அரசின் உதாசீனத்தால் தேர் திருவிழாக்களில் தேர் கவிழ்ந்து 15 பேர் பலியாகி உள்ளனர். மேலும் பலர் படுகாயம் அடைந்துள்ளனர்.

17.கோவில் கும்பாபிஷேகம் நடத்திட அனுமதி பெறவே லஞ்சம் தர வேண்டியுள்ளது. தவிர அரசு அதிகாரிகள் கும்பாபிஷேக திருப்பணிகளை காரணம் காட்டி வசூல் கொள்ளையில் ஈடுபடுகிறார்கள்.

தமிழகத்தில் ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாக நம் முன்னோர்கள் பாதுகாத்து, பராமரித்து வந்த கோவில்களின் புனிதத்தை காத்திட லட்சக்கணக்கான ஏக்கர் நிலங்கள் மற்றும் சொத்துக்களை பாதுகாத்திட பக்தர்கள் ஓரணியில் திரண்டு போராட்டத்தில் திரளாக கலந்து கொள்ள வேண்டுகிறோம்.

மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர நிர்வாகிகள் சிறப்புரையாற்றுவார்கள்.

மத்திய அரசுப் பணி; 8,326 காலி பணியிடங்கள் அறிவிப்பு!

employment career opportunities - 2026
#image_title

மத்திய அரசில் 8,326 காலி பணியிடங்கள் அறிவிப்பு!

மத்திய அரசின் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள 8,326 எம்டிஎஸ் மற்றும் ஹவால்தார் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற இளைஞர்களிடம் இருந்து வரும் 31 ஆம் தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: Multi Tasking Staff (MTS) (Non-Technical)

காலியிடங்கள்: 4887

சம்பளம்: 7- ஆவது ஊதியக்குழு விதிமுறைப்படி சம்பளம் வழங்கப்படும்.

தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயதுவரம்: 1.8.2024 தேதியின்படி 18 முதல் 25 வயதிற்குள் இருக்க வேண்டும்.

பணி: Havaldar(CBIC & CBN)

காலியிடங்கள்: 3439

சம்பளம்: 7- ஆவது ஊதியக்குழு விதிமுறைப்படி சம்பளம் வழங்கப்படும்.

வயதுவரம்பு: 1.8.2024 தேதியின்படி 18 முதல் 25 வயதிற்குள் இருக்க வேண்டும்.

தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: எஸ்எஸ்சி -ஆல் நடத்தப்படும் ஆன்லை வழி எழுத்துத் தேர்வு, உடற்தகுதித் தேர்வு, உடற்திறன் தேர்வு ஆகியவற்றின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

எழுத்துத் தேர்வு நடைபெறும் நாள் போன்ற விவரங்கள் மின்னஞ்சல் மூலம் தகுதியானவர்களுக்கு தெரிவிக்கப்படும்.

எழுத்துத் தேர்வு: எழுத்துத் தேர்வு இரண்டு தாள்களை கொண்டது. முதல் தாள் கொள்குறி வகையில் கேள்விகள் அமைந்திருக்கும். தாள்-2 -இல் ஆங்கில மொழியில் கட்டுரைகள், கடிதம் எழுதுவது போன்ற விரிவாக விடை எழுதும் வகையில் கேள்விகள் அமைந்திருக்கும்.

எழுத்துத் தேர்வு நடைபெறும் மாதம்: அக்டோபர், நவம்பர்- 2024

தமிழ்நாட்டில் தேர்வு நடைபெறும் இடங்கள்: சென்னை, கோவை, மதுரை, சேலம், திருச்சி, திருநெல்வேலி மற்றும் வேலூர்.

உடற்தகுதி (ஹவால்தார்) ஆண்கள்: குறைந்தபட்சம் 157.5 செ.மீ உயரம், மார்பளவு சாதாரண நிலையில் 76 செ.மீ., விரிவடைந்த நிலையில் 81 செ.மீ இருக்க வேண்டும்.

பெண்கள்: குறைந்தபட்சம் 152 செ.மீ உயரமும், 48 கிலோ எடையும் இருக்க வேண்டும்.

உடற்திறன் தகுதிகள் (ஹவால்தார்)

ஆண்கள்: 1600 மீட்டர் தூரத்தை 15 நிமிடங்களில் நடந்து முடிக்க வேண்டும்.

பெண்கள்: ஒரு கிலோ மீட்டர் தூரத்தை 20 நிமிடங்களில் நடந்து முடிக்க வேண்டும்.

விண்ணப்பக் கட்டணம்: ரூ.100. இதனை ஆன்லைன் மூலம் செலுத்த வேண்டும். பெண்கள், எஸ்சி, எஸ்டி மற்றும் மாற்றுத்திறனாளிகள், முன்னாள் ராணுவத்தினர் பிரிவைச் சேர்ந்த விண்ணப்பத்தாரர்களுக்கு விண்ணப்பக் கட்டணம் கிடையாது.

விண்ணப்பிக்கும் முறை: www.ssc.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 31.7.2024