Home Blog Page 191

தீயை விட கொடுமையானது தீய பழக்கம்! வள்ளுவர் சிலை வழங்கி பேச்சு..!

karur ilakkia mandram function - 2026

மார்னிங்ஸ்டார் பள்ளியில் இலக்கிய மன்ற துவக்கவிழா!
பள்ளி இணைச் செயலாளர் சிவசங்கர் தலைமையில் , தலைமையாசிரியை சித்ரா , ஆசிரியர் பொன்னுசாமி, பாஸ்கர் முன்னிலை வகிக்க மேலை பழநியப்பன் பள்ளிக்கு திருவள்ளுவர் சிலை வழங்கி உரையாற்றினார்

2.07.20 24 மாலை கரூர் மார்னிங் ஸ்டார் பள்ளியில் நடைபெற்ற இலக்கிய மன்றத் துவக்க விழாவில் சிறப்பு விருந்தினராக பங்குபெற்ற திருக்குறள் பேரவைச் செயலாளர் மேலை பழநியப்பன் பள்ளிகளில் இலக்கிய மன்றங்கள் 50 ஆண்டுகளுக்கு முன் சிறப்பாகச் செயல்பட்டு வந்தன. அவை, மாணவர்களுக்கு வெற்றி இலக்கை , பண்பாட்டை , கலாட்சாரத்தை , மொழி நாட்டுப் பற்றை , ஒழுக்கத்தை பெரியோரை மதிக்க கற்றுக் கொடுக்கும் களங்களாக அமைந்தன.

காலப்போக்கில் காணாமல் போல இலக்கிய மன்ற கலாசாரத்தை இப்போது தொடங்குவதிலே மகிழ்வாக இருக்கிறது.

இன்றைய காலச்சூழல் மாணவர்கள் போதை ஒழுக்கக்கேடுகளில் ஈடுபடுவது வேதனையளிக்கிறது வான்புகழ் வள்ளுவம் மிக ஆழமாக தீயவை தீய பயத்தலால் தீயவை தீயினும் அஞ்சப்படும் என்கிறார்.

எரிமுன்னர் வைத்தூறு எனச் சொன்ன வள்ளுவன் தீய பழக்கங்களை மாணவர்கள் பின்பற்றினால் அவனை தீயை விட விரைவாக அழித்து விடும் என்கிறார். வள்ளுவர் இப்பழக்கத்திற்கு “நட்பு” காரணம் ஆகிவிடக்கூடாது எனவேதான் நட்பு அதிகாரத்திற்கு 40 குறள் தந்தார். நட்பு
நட்பு ஆராய்தல், தீ நட்பு, கூடா நட்பு.

எனவே பள்ளிப்பருவத்தில் வெற்றியின் இலக்கைக்காட்டும் இலக்கியங்களைக் கற்று, வழியொற்றி நல்ல ஒழுக்கமான மாணவர்களாக உயர வேண்டும் என்று பேசினார்.

மாணவர்களுக்கு வினாக்கள் கேட்டு வெள்ளிக் காசு, திருக்குறள் நூல்கள் பேனாக்களை அவர் பரிசாக வழங்கினார்.

3 ஆண்டு சட்டப் படிப்புக்கு நாளை முதல் விண்ணப்பிக்கலாம்!

school exams - 2026

3 ஆண்டு (LLB) சட்டப்படிப்புக்கு நாளை முதல் 24ஆம் தேதி வரை விண்ணப்பம்.

தமிழகத்தில் 3 ஆண்டு (LLB) சட்டப்படிப்புக்கு நாளை முதல் 24ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.

தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலை. இணைவுபெற்ற அனைத்து சட்டக்கல்லூரிகள், பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கி வரும் சீர்மிகு சட்டப்பள்ளி ஆகியவற்றில் மூன்றாண்டு LLB படிப்பிற்கு www.tndalu.ac.in இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம்.

அரசுக் கல்லூரிகளில் நிரம்பாத இடங்கள்-நாளை முதல் விண்ணப்பம்!

அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் நிரம்பாத இடங்களை நிரப்ப கூடுதல் அவகாசம் அளிக்கப் பட்டுள்ளது.

நாளை முதல் 5ஆம் தேதி வரை 3 நாட்களுக்கு TNGASA இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.

அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் 63% இடங்கள் மட்டுமே நிரம்பியுள்ளதால் மாணவர்களை கூடுதலாக சேர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

குற்றவியல் சட்ட திருத்தம் காலத்தின் கட்டாயம்!

bharathiya nyaya sanhitha - 2026

— ஆர். சுதாகர் —

ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் இயற்றப்பட்ட காலனித்துவ காலத்து சட்டங்களான இந்திய தண்டனைச் சட்டம் (IPC-1860) குற்றவியல் நடைமுறைச் சட்டம் (CrPC-1973) இந்திய சாட்சியங்கள் சட்டம் (IEA 1872) ஆகிய சட்டங்களுக்கு பதிலாக இந்திய சட்ட அமைப்பை நவீன மயமாக்குவதை நோக்கமாகக் கொண்டு முறையே பாரதிய நியாய சன்ஹிதா (BNS), பாரதிய நாகரிக் சுரக்ஷா சன்ஹீதா (BNSS), பாரதிய சாக்ஷிய அதினியம் (BSA) என மூன்று புதிய குற்றவியல் சட்டங்கள் ஜூலை 1 முதல் நடைமுறைக்கு வந்துள்ளன.

நமது நீதி மன்றங்களில் விசாரணை முடிந்து தீர்ப்பினை அடைவதற்கு நடைமுறை காரணங்களால் காலதாமதம் ஏற்படுகிறது. குற்ற வழக்குகளில் சாட்சியங்கள் மிக முக்கியம், தற்போதய நிலையில் சாட்சிகளுக்கு முழுமையான பாதுகாப்பு இல்லை.

மேலும் காவல்துறையால் குற்ற வழக்குகள் குறிப்பிட்ட காலத்தில் முடிக்கவேண்டும் என்ற விதிகளும் இல்லை மகளிர் மற்றும் குழந்தைகளுக்கான கொடும் குற்றங்களுக்கு உரிய தண்டனை பழைய சட்டங்களில் இல்லை. இது போன்று, மேலும் உள்ள குறைபாடுகளை களைந்து திருத்தப்பட்ட குற்றவியல் சட்டங்கள் நடைமுறைக்கு வந்துள்ளன.

மூன்று சட்டத்திருத்தின் முக்கிய அம்சங்கள்:

காலனித்துவ மரபுகளை அகற்றுத்தல்:

காலனித்துவ கால குற்றவியல் சட்டங்கள் குற்றம் சாட்டப்பட்டவர்களை தண்டிப்பதில் முதன்மையான கவனம் செலுத்தியது. ஆனால் இப்புதிய சட்டங்கள் வெறும் தண்டனை இல்லாமல் நீதி(NYAY) என்ற கருத்தை வலியுறுத்துகின்றது.

மேலும், இச்சட்டங்கள் வெளிப்படையானவை, அரசியலமைப்பில் கூறப்பட்டுள்ள சமூக பொருளாதார மற்றும் அரசியல் நீதி கொள்கைகளை பூர்த்தி செய்வதையே பிரதானமாக கருதுகிறது. மேலும் இந்தப் புதிய சட்டத்தில் தேசத் துரோகம் என்ற பழைய குற்றவியல் சட்டத்திலிருந்த வார்த்தை நீக்கப்படுள்ளது.

மாறாக, பிரிவினைவாதம், கிளர்ச்சி, நாட்டின் இறையாண்மை, ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாட்டுக்கு எதிராக தண்டனை வழங்கும் புதிய பிரிவு சேர்க்கப்பட்டுள்ளது.

பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களுக்கான புதிய அத்தியாயம்:

கூட்டு பாலியல் வன்கொடுமை செய்தால் மரண தண்டனை அல்லது ஆயுள்தண்டனை வழங்கப்படும் பாலியல் வழக்குகளில் பாதிக்கப்பட்ட பெண்ணின் வாக்குமூலத்தை அவரது உறவினர் அல்லது பாதுகாவலர் முன்னிலையில் பெண் போலீஸ் அதிகாரி ஆடியோ விடியோ பதிவாக பதிவு செய்தல் வேண்டும் மருத்துவ அறிக்கைகள் ஏழு நாட்களுக்குள் வரவேண்டும் பெண்களுக்கு எதிரான குற்றங்களில் பாதிக்கப்பட்ட நபருக்கு 90 நாட்களுக்குள் தான் சம்பந்தப்பட்ட வழக்கில் என்ன முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது என்பதை தெரிந்துகொள்ளும் உரிமை வழங்கப்பட்டுள்ளது.

சிறுவர்களை கூட்டு வன்கொடுமைக்கு உள்ளாக்குதல் மற்றும் கும்பலாக அடித்துக் கொலை செய்வதற்கு மரண தண்டனை வழங்க வழிவகை செய்கிறது.

திருமணம் செய்வதாக வாக்குறுதி அளித்து ஏமாற்றுதல், நகை பறிப்பு கவனக்குறைவால் ஏற்படும் விபத்துக்கள், போன்ற குற்றங்களுக்கு இதற்கு முன்பு இருந்த இந்திய தண்டனைச் சட்டத்தில் விதிகள் இல்லை. ஆனால் இப்புதிய சட்டத்தில் அதற்கான விதிகள் இயற்றப்பட்டுள்ளன.

குழந்தைகளை முறையான அனுமதி இல்லாமல் வாங்குவதும், விற்பதும் இச்சட்டத்தின் படி கடுமையான குற்றம். பாலினம் பற்றிக் குறிப்பிடுகையில் மாற்று பாலினத்தவரும் இனி சேர்த்துக்கொள்ளப்படுவர்.

நீதித்துறை சீர்திருத்தங்கள்:

காலம் கடந்த நீதி அநீதி என்பதை மையமாகக் கொண்டு இப்புதிய சட்டங்கள் நீதித்துறையில் பல்வேறு சீர்திருத்தங்களை மேற்கொண்டுள்ளது.

அவை பின்வருமாறு:

நீதிபதிகளை அதிகரிப்பது, நீதிமன்ற விடுமுறைகளை குறைப்பது. நிலுவைகளைக் கையாள்வது மற்றும் அனுமதிப்பது போன்றவற்றிற்கு வழி வகைச் செய்கிறது.

அதிகார வரம்பை பொருட்படுத்தாமல் எந்த ஒரு நபரும் எந்த காவல் நிலையத்திலும் ஜீரோ எஃப்.ஐ.ஆர் (Zero FIR) பதிவு செய்ய இச்சட்டம் அனுமதி அளிக்கிறது.

குற்ற வழக்குகளில் நீதிமன்ற விசாரணை நிறைவடைந்த நாளிலிருந்து 45 நாட்களுக்குள் தீர்ப்பு வழங்கப்பட வேண்டும். மேலும் அந்த வழக்குகளில் முதல் நீதிமன்ற விசாரணை நடைபெற்ற நாளில் இருந்து 60 நாட்களுக்குள் குற்றச்சாட்டுகளை பதிவு செய்ய வேண்டும்.

நீதிமன்றங்கள் அதிகபட்சமாக இரண்டு முறை மட்டுமே வழக்கு விசாரணை ஒத்தி வைக்க முடியும் என்ற காலக்கெடுவையும் அறிமுகப்படுத்தியுள்ளது. இது விரைவான நீதி வழங்குதலை உறுதி செய்கிறது.

மேலும் சாட்சி பாதுகாப்பு மற்றும் பாதிக்கப்பட்டவர்களை மையப்படுத்தி அவர்களது கண்ணியம் உரிமை மற்றும் பாதுகாப்பை உறுதி செய்வதற்கும் இப் புதிய சட்டங்கள் வழிவகைச் செய்கிறது எனவே புதிய சட்டத்தின்படி நீதி விரைவாக வழங்குவதற்கும் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் குற்றவாளிகள் இருவருக்கும் சமச்சீர் நீதி வழங்குதலை இது உறுதிச்செய்கிறது

மின்னணு அல்லது டிஜிட்டல் ஆதாரங்களை ஏற்றுக் கொள்ளுதல்:

இப்புதிய சட்டம் நவீன டிஜிட்டல் யுகத்திற்கு ஏற்ப நீதிமன்றங்களில் மின்னணு அல்லது டிஜிட்டல் ஆவணங்கள் சான்றாக ஏற்றுக் கொள்ளப்படும் என்கிறது.
வழக்கு ஆவணம், முதல் தகவல் அறிக்கை, குற்றப் பத்திரிக்கை மற்றும் தீர்ப்புகள் டிஜிட்டல் மயம் ஆக்கப்படும். மின்னணு பதிவுகள் காகித பதிவுகள் போல செல்லுபடி ஆகும் என்பதை இது கோடிட்டுக் காட்டுகிறது.

ஆதாரங்களின் தரத்தை வலுப்படுத்த ஆடியோ விடியோ பதிவுகளும் இதில் அடங்கும். மேலும் குற்றச்சம்பவங்கள் பற்றி மின்னணு சாதனங்கள் வாயிலாகவும் புகார் தெரிவிக்கலாம், இதன் மூலம் காவல் நிலையத்துக்கு தான் நேரில் செல்ல வேண்டும் என்ற கட்டாயம் தவிர்க்கப்பட்டு எளிமையாக புகார் அளிக்க வழிவகை செய்கிறது.

மிகவும் மோசமான கிரிமினல் குற்ற சம்பவங்களின் போது நிகழ்விடத்துக்கு தடையவியல் நிபுணர்கள் செல்வது கட்டாயமாக்கப்படுகிறது சம்மன்களை மின்னணு உபகரணங்கள் வாயிலாகவும் அனுப்பலாம், இதன் மூலம் வழக்கு விசாரணையில் ஏற்படும் வீண் தொய்வை தடுக்க இயலும். அதே போல் மிக மோசமான குற்றச்செயல்களில் உள்ள நிகழ்விடத்தினை விடியோ பதிவு செய்வது கட்டாயமாக்கப்படுகிறது.

தடுப்புக் காவலில் உள்ள குற்றம் சாட்டப்பட்ட நபர்களை மாஜிஸ்ட்ரேட் விடியோ மூலம் விசாரிக்க முடியும் இதனால் விரைவாக நீதி வழங்க இது வழிவகை செய்கிறது.

விசாரணை தரம் மேம்படுத்துதல்:

குற்றவாளி என்று அறிவிக்கப்பட்ட ஒருவர் விசாரணையை தவிர்க்க தலைமறைவாகிவிட்டால் அவரை உடனடியாக கைது செய்ய வாய்ப்பில்லை என்றால் அவர் இல்லாத நேரத்தில் விசாரணை நடத்தப்பட்டு தீர்ப்பு வழங்கப்படலாம்.

மாதிரி கையொப்பங்கள் அல்லது கையெழுத்துடன் விசாரணை அல்லது நடவடிக்கைகளுக்காக விரல் பதிவுகள் மற்றும் குரல் மாதிரிகள் சேகரிக்கப்படலாம், கைது செய்யப்படாத ஒருவரிடம் இருந்து மாதிரிகள் எடுக்கப்படலாம்.

தற்போதைய 15 நாள் வரம்பிலிருந்து 90 நாட்கள் வரை போலீஸ் காவலில் தடுப்பு காவலை இச்சட்டம் நீடிக்கிறது. குற்றத்திற்கான அதிகபட்ச சிறைத் தண்டனையில் பாதி சிறை தண்டனை விதிக்கப்பட்ட ஒரு குற்றவாளிக்கு CrPC ஜாமீன் வழங்குகிறது. ஆனால் பல குற்றச்சாட்டுகளை எதிர்கொள்ளும் எவருக்கும் ஜாமீன் வசதியை இப்ப புதிய சட்டம் மறுக்கிறது.

கைது நடவடிக்கையின் போது கைது செய்யப்படுபவர் தான் விரும்பும் ஒரு நபருக்கு தனது கைதுப் பற்றிய தகவலை அளிக்கலாம் கைது செய்யப்பட்ட விவரங்கள் சம்பந்தப்பட்ட காவல் நிலையத்திலும் மாவட்ட தலைமையகத்தில் பொது பார்வைக்கு வைக்க வேண்டும்.

பண மோசடி தடுப்புச் சட்டத்தில் வழங்கப்பட்ட குற்றத்தின் வருமானத்திலிருந்து சொத்துக்களை பறிமுதல் செய்யும் அதிகாரங்களுக்கு இப் புதிய சட்டத்தில் பாதுகாப்பு இல்லை
கொலை, பாலியல் வன்கொடுமை, அரசுக்கு எதிராக குற்றம் புரிந்தவர்கள், உச்சநீதிமன்ற உத்தரவுக்கு முரணான பொருளாதார குற்றங்களை செய்தவர்கள் உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் கை விலங்குகளை பயன்படுத்துவது அனுமதி அளிக்கப்படுகிறது.

பிரிட்டிஷ் காலனித்துவ காலத்தில் வேரூன்றிய பழையச்சட்டங்கள் திருத்தங்கள் இருந்தபோதிலும் நவீன இந்தியாவின் ஆற்றல் மிக்க சவால்களை எதிர்கொள்ள முடியாமல் போய்விட்டன.

தற்போதைய சமூக மதிப்பு, தொழில்நுட்ப முன்னேற்றங்களை கருத்தில் கொண்டு 21 ஆம் நூற்றாண்டிற்கான நீதித்துறை செயல்முறைகளை நெறிப்படுத்தவும், குடிமக்களின் பாதுகாப்பை மேம்படுத்தவும், காலம் தாழ்த்தாத நீதி வழங்கவும், தொழில்நுட்ப முன்னேற்றங்களை சட்ட கட்டமைப்பில் உட்பொதிக்கவும் இம் மூன்று புதிய சட்டங்கள் காரணமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.


கட்டுரையாளர்: வழக்கறிஞர், மாவட்ட நீதிமன்றம், திருநெல்வேலி


ஆளுநர் விருதுகள் 2024: விண்ணப்பங்கள், பரிந்துரைகளை அனுப்பலாம்!

tn governor rn ravi - 2026

தமிழ்நாடு ஆளுநர் மாளிகையின் சார்பாக “ஆளுநர் விருதுகள் 2024”-க்கான விண்ணப்பங்கள் மற்றும் பரிந்துரைகள் வரவேற்கப்படுகின்றன.

தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி அறிமுகப்படுத்திய இந்த விருதுகள், ‘சமூக சேவை’ மற்றும் ‘சுற்றுச்சூழல் பாதுகாப்பு’ ஆகிய இரண்டு பிரிவுகளில் சமூக நல்வாழ்வை மேம்படுத்துவதற்கும், சுற்றுச்சூழல் பாதுகாப்பை ஊக்குவிப்பதற்கும் முன்மாதிரியான பங்களிப்புகளை அளித்த தனிநபர்கள் மற்றும் நிறுவனங்களின் தன்னலமற்ற சேவைகளை அங்கீகரிக்கும் வகையில் அறிவிக்கப் பட்டுள்ளது.

விண்ணப்பங்கள் தலைசிறந்த நிபுணர்கள் அடங்கிய குழுவால் பரிசீலிக்கப்படும். விண்ணப்பங்களை சமர்பிப்பதற்கான கடைசி நாள் ஆகஸ்ட் 09, 2024 மாலை 05:00 மணி.

‘சமூக சேவை’, ‘சுற்றுச்சூழல் பாதுகாப்பு’ ஆகிய இரண்டு பிரிவுகளிலும் தலா நான்கு வெற்றியாளர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர். நிறுவனங்கள் பிரிவில் தேர்ந்தெடுக்கப்படும் தொண்டு நிறுவனத்திற்கு ரூபாய் ஐந்து இலட்சம் ரொக்கப் பரிசும், விருதும் மற்றும் தனிநபர் பிரிவில் தேர்தெடுக்கப்படும் நபருக்கு ரூபாய் இரண்டு இலட்சம் ரொக்கப் பரிசும், விருதும் தமிழ்நாடு ஆளுநரால் குடியரசு தினத்தன்று (ஜனவரி 26, 2025) வழங்கப்படும்.

தனிநபர்கள் அல்லது நிறுவனங்கள் தங்களது விண்ணப்பங்களை சுயமாக பரிந்துரைக்கலாம். ஓய்வு பெற்ற இந்திய மற்றும் தமிழ்நாடு அரசு உயர் அலுவலர்கள், அரசு செயலாளர்கள், அரசு இணை செயலாளர்கள், இந்திய அரசு, தமிழ்நாடு மாநில மற்றும் தனியார் பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள், பத்ம விருது பெற்றவர்கள் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர்கள் மேலே குறிப்பிடப்பட்ட இரு பிரிவுகளில் சிறந்த வகையில் பணியாற்றிய தகுதியான தனிநபர்கள் / நிறுவனங்களை பரிந்துரைக்கலாம்.

விண்ணப்பதாரர்கள் அல்லது பரிந்துரைக்கப்பட்டவர்கள் அந்தந்தத் துறையில் தமிழ்நாட்டில் குறைந்தபட்சம் 10 வருட காலத்திற்கு சிறப்பான சேவையை வெளிப்படுத்தியிருக்க வேண்டும். அரசு சாரா அமைப்புகள் மற்றும் நிறுவனங்களும் இதற்கு விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள் ஆவார்கள்.

விண்ணப்பங்களை, தமிழ்நாடு ஆளுநர் மாளிகை இணையதளத்தில் ( https://tnrajbhavan.gov.in/ ) வெளியிடப்பட்டுள்ள பரிந்துரைக்கப்பட்ட படிவத்தில் பூர்த்தி செய்து, awardsrajbhavantamilnadu@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு குறிப்பிட்ட கால நேரத்திற்குள் அனுப்பிவைக்க வேண்டும்.

மேலும், விண்ணப்பத்துடன் துணை ஆவணங்களை இணைத்து, “ஆளுநரின் துணைச் செயலாளர் மற்றும் கணக்காயர், ஆளுநர் செயலகம், ஆளுநர் மாளிகை, கிண்டி,
சென்னை – 600 000”
என்ற முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்:

மயிலாடுதுறை பகுதியில் நிலஅதிர்வா? காவல் துறை அளித்த விளக்கம் என்ன?

mayiladuthurai thirulokki - 2026

மயிலாடுதுறை பகுதியில் இன்று காலை நிலநடுக்கம் ஏற்பட்டதாக பொதுமக்களிடம் செய்தி பரவியது. இப்பகுதி மக்கள் திடீரென பெரும் நில அதிர்வை உணர்ந்தனர். இதனால் பொது மக்கள் மத்தியில் இது குறித்த செய்திகளும் அதிகம் பகிரப்பட்டன. 

இது குறித்து மயிலாடுதுறை மாவட்டம் திருலோக்கி பகுதியில் வசிக்கும் ஒருவர் கூறியபோது, இன்று காலை சுமார் பதினோரு மணி அளவில் மயிலாடுதுறை பகுதியில் அதிபயங்கர வெடி சத்தம்போல் பெரும் சத்தம் கேட்டது. அப்பொழுது சுமார் 20 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள எல்லா ஊர்களிலும் நிலம் அதிர்ந்துள்ளதாகத் தெரியவந்தது. நண்பர்கள் இது குறித்து தகவல்கள் பரிமாறிக் கொண்டனர். இப்பொழுது எங்களுக்கு, மயிலாடுதுறை, குத்தாலம் பகுதியில் நிலநடுக்கம் உணரப்பட்டதாக தகவல்கள் வந்திருக்கின்றன. 

அந்நேரம், பல பகுதிகளில் கண்ணாடிகள் சிதறி விழுந்தன. ஓட்டு வீடுகளில் ஓடுகள் சரிந்தன. சிமெண்ட் ஷீட் போட்ட இடங்களில் அதிரும் சப்தம் அதிகமாகக் கேட்டது. தீவிரமான நிலநடுக்கம் என்றுதான் மக்கள் பேசிக் கொள்கிறார்கள். குறிப்பாக மயிலாடுதுறை, குத்தாலம் பகுதியில்  இந்த நில அதிர்வு உணரப்பட்டுள்ளது.

இந்த அதிபயங்கர சப்தத்தால், சுற்றுப் பகுதியில் உள்ள கிராம மக்கள் என்ன ஏது என்று தெரியாமல் குழம்பிப் போய் திணறினார்கள். இது குறித்து உடனடியாக அரசு அதிகாரிகளிடம் கேட்டோம். அவர்களும் உரிய பதில் ஏதும் சொல்லவில்லை. எனினும் போலீஸார் நில அதிர்வு குறித்து தங்களுக்கும் பொதுமக்களின் புகார்கள் வந்ததாகக் கூறினார்கள். உறுதியான தகவல் தெரியவில்லை…” என்றார்.  

நில அதிர்வு ஏற்பட்டதா என்பது குறித்த கூடுதல் தகவல்களுக்காக அரசுத் தரப்பில் இருந்து வரும் செய்திகளுக்காகக் காத்திருக்கிறோம் என்று செய்தியாளர்கள் தெரிவித்தனர்.

இதனிடையே, ஜெட் விமானம் பறந்ததால் ஏற்பட்ட நில அதிர்வு தான் அது என்று காவல் துறை தகவல் தெரிவித்தது.

தஞ்சாவூர் விமானப்படை ஏவுதளத்தில் இருந்து மயிலாடுதுறை வழியாக ஜெட் விமானத்தின் சோதனை ஓட்டம் இன்று நடைபெற்றது. இதனால் மயிலாடுதுறை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நில அதிர்வு ஏற்பட்டது போன்று உணரப்பட்டது. இது குறித்து பொதுமக்கள் அச்சப்படத் தேவையில்லை என்று மாவட்ட காவல்துறை தகவல் வெளியிட்டது. மேலும் ஜெட் விமானங்கள் தாழ்வாகப் பறக்கும் போது சில நேரம் நிலம் அதிரும் என்று அவர்கள் விளக்கம் அளித்தனர்.

திடீரென ஏற்பட்ட இந்த பலத்த சத்தம் மற்றும் அதிர்வால் மயிலாடுதுறை மாவட்டத்தின் சில பகுதிகளில் மக்கள் மனதில் கலவரமடைந்தனர்!

ராகுல், காங். கட்சியின் ஹிந்து மத வெறுப்பு அரசியல்; மன்னிப்பு கேட்க வலியுறுத்தல்!

kadeswara subramaniam hindu munnani - 2026

ராகுல் மற்றும் காங்கிரஸ் கட்சியின் ஹிந்து மத வெறுப்பு அரசியல். ஹிந்துக்களிடம் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என்று, இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் அறிக்கை வெளியிட்டுள்ளார். இது குறித்த அவரது அறிக்கை:

பாராளுமன்றத்தில் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி அவர்கள் தன்னை ஹிந்து என்று கூறிக் கொள்பவர்கள் வன்முறையாளர்கள், பிறரை வெறுப்பவர்கள் , பொய் பேசுபவர்கள் என ஒட்டுமொத்த ஹிந்து சமுதாயத்தை இழிவுபடுத்தி பேசி உள்ளார்.

உலக வரலாற்றிலேயே மதத்தின் பெயரில் போர் செய்யாத, தன் மதத்திற்கு தீங்கு செய்பவர்களுக்கு கூட நன்மை செய்யக்கூடிய மதம் சனாதன ஹிந்து தர்மம் (மதம்).

ஹிந்துக்கள் அனைத்து மத கடவுள் படங்களை கூட தனது வணிக நிறுவனங்களில் வைத்து வணங்கக்கூடிய அளவில் நல்லிணக்கத்தோடு இருக்கக்கூடியவர்கள்.

உலகின் பல நாடுகளில் வசிக்கக் கூடிய ஹிந்துக்களால் அந்த நாட்டில் எந்தவிதமான பிரச்சனைகளும் இல்லை. அந்த நாட்டில் உள்ள மக்களோடு இணக்கமாக வாழ்ந்து வருகிறார்கள்.

அதனால் தான் உலகத் தலைவர்கள் ஹிந்து இதிகாச புராணங்கள் மற்றும் கடவுள்களை போற்றி பெருமைப்படும் வகையில் பேசி வருகிறார்கள்.

ஹிந்துமத நூல்கள் அனைத்தும் உண்மை,சத்தியம் போன்ற உயர்ந்த தத்துவங்களையே வலியுறுத்துகிறது. காந்தியடிகள் கூட ஹிந்து மதத்தில் உள்ள அஹிம்சை ,சத்தியம் போன்றவற்றையே அனைவருக்கும் வலியுறுத்தி வந்தார்.

தற்போது அந்த காந்தி பெயரை பொய்யாக தன் பெயருக்கு பின்னால் பொருத்தியிருக்கும் ராகுல் ஹிந்து மத தத்துவங்கள், பண்பாடு, கலாச்சாரம், பழக்க வழக்கம் ஏதும் அறியாமல் இழிவுபடுத்தி பாராளுமன்றத்தில் பேசி இருப்பது வேதனைக்குரியது.

ஆயிரக்கணக்கான சீக்கியர்களை கொன்று வன்முறை வெறியாட்டம் ஆடிய காங்கிரஸ் தலைவர் இந்துக்களை வன்முறையாளர்கள் என்று கூறுவது வெட்கம்.

கிறிஸ்தவ மற்றும் முஸ்லிம் மத சிறுபான்மையினரை தாஜா செய்து அதன் மூலம் அவர்களின் ஓட்டுக்களை பெற வேண்டும் என்பதற்காக பாரத தேசத்தில் பெரும்பான்மையாக வசித்து வரும் ஹிந்துக்களை வன்முறையாளராகவும், வெறுப்பு உணர்வாளர்களாகவும், பொய்யர்களாகவும் சித்தரித்து இழிவு படுத்திய ராகுல்காந்தியை இந்து முன்னணி வன்மையாக கண்டிக்கிறது. ஹிந்துக்களிடம் அவர் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என வலியுறுத்துகிறது.

மதமாற்றங்கள் தொடர அனுமதித்தால் நாட்டின் பெரும்பான்மையினர் சிறுபான்மையினர் ஆகிவிடுவர்: நீதிமன்றம்

allahabad high court judges agarwal - 2026

மதக் கூட்டங்களின் போது, மதமாற்றம் செய்யும் தற்போதைய போக்கு தொடர அனுமதித்தால், நாட்டின் பெரும்பான்மை மக்கள் ஒரு நாள் சிறுபான்மையினராக மாறிவிடுவார்கள் என்று அலகாபாத் உயர்நீதிமன்றம் கூறியுள்ளது.

நீதிபதி ரோஹித் ரஞ்சன் அகர்வால் பெஞ்ச், மதமாற்றங்கள் நடக்கும் இடங்களிலும், இந்திய குடிமக்களின் மதங்கள் மாற்றப்படும் மதக் கூட்டங்களையும் உடனடியாக நிறுத்த வேண்டும் என்று கூறியது.

“இந்த செயல்முறையை தொடர்ந்து செயல்படுத்த அனுமதித்தால், இந்த நாட்டின் பெரும்பான்மை மக்கள் ஒரு நாள் சிறுபான்மையினராக இருப்பார்கள். மேலும் மதமாற்றம் மற்றும் இந்தியக் குடிமகனின் மதத்தை மாற்றும் இடங்களில் இதுபோன்ற மதக் கூட்டங்கள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும்” என்று நீதிமன்றம் கூறியது.

அரசியல் அமைப்பின் 25வது சட்டப்பிரிவின்படி, ஒரு மதத்தை பின்பற்றவும், அதனை பரப்பவும் உரிமை உள்ளது. ஆனால், ஒரு மத நம்பிக்கையில் இருந்து மற்றொரு மத நம்பிக்கைக்கு மாற்ற உரிமை வழங்கப்படவில்லை. ‛ புரோபோகேசன்’ – பிரசாரம் என்ற வார்த்தைக்கு, ஊக்குவிக்கலாம் என அர்த்தம் கூறலாம். ஆனால், ஒரு மதத்தில் இருந்து வேறு மதத்திற்கு மாற்றலாம் என அர்த்தம் இல்லை. எனவே இதுபோன்ற மதமாற்றங்கள் இந்திய அரசியலமைப்பின் 25வது பிரிவின் அரசியலமைப்பு ஆணைக்கு எதிரானது. 

முக்கியமாக, உத்தரப்பிரதேச மாநிலம் முழுவதும் எஸ்சி/எஸ்டி மற்றும் பொருளாதாரத்தில் பின்தங்கிய பிற பிரிவினரை சட்டவிரோதமாக கிறிஸ்தவ மதத்திற்கு மாற்றுவது “அதிகமான வேகத்தில்” நடப்பது பல வழக்குகளில் தனது கவனத்திற்கு வந்துள்ளது என்றும் பெஞ்ச் குறிப்பிட்டது.

ஐபிசி பிரிவு 365 & உ.பி.யின் பிரிவு 3/5(1) ஆகியவற்றின் கீழ் உ.பி காவல்துறையால் பதிவு செய்யப்பட்ட கைலாஷ் என்பவர் முன்வைத்த ஜாமீன் மனுவை நிராகரிக்கும் போது நீதிமன்றத்தால் இந்த கருத்துகள் முன்வைக்கப்பட்டன. 

உ.பி., மாநிலத்தைச் சேர்ந்த ராம்காலி பிரஜாபதி என்பவர் போலீசில் அளித்த புகாரில், ‛‛எனது சகோதரர் ராம்பால் மனநிலை பாதிக்கப்பட்டவர். அவரை கைலாஷ் என்பவர் தில்லிக்கு அழைத்துச் சென்றார். சகோதரர் வீடு திரும்பவில்லை. கைலாஷிடம் கேட்டதற்கு, அவர் உரிய பதில் தரவில்லை. எங்கள் கிராமத்தைச் சேர்ந்த பலரை தில்லிக்கு அழைத்துச் சென்று கிறிஸ்தவ மதத்திற்கு கைலாஷ் மாற்றி உள்ளார் ” எனக்கூறி இருந்தார். 

இதனையடுத்து, ஆள்கடத்தல் மற்றும் உ.பி., மாநில மதமாற்ற தடைச்சட்டத்தின் கீழ் கைலாஷ் கைது செய்யப்பட்டார். மனநலம் பாதிக்கப்பட்டுள்ள தனது சகோதரருக்கு சிகிச்சை அளித்து, ஒரு வாரத்தில் அவரது சொந்த கிராமத்திற்குத் திரும்புவதாகத் தகவல் அளித்தவருக்கு உறுதியளித்துள்ளார். ஆனால், அதற்கு பதிலாக அவர் கிறிஸ்துவ மதத்திற்கு மாற்றப்பட்டுள்ளார். இவ்வகையில் விண்ணப்பதாரர் பலரை கிறிஸ்தவ மதத்திற்கு மாற்றியதாக கைலாஷ் எஃப்.ஐ.ஆர். பதிவானது. 

இதை அடுத்து, கைலாஷ் ஜாமின் கேட்டு அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், மதக்கூட்டங்களில் பங்கேற்கும் ஏராளமானோர் கிறிஸ்தவ மதத்திற்கு மாற்றப்படுகின்றனர். இதற்காக கைலாஷ் பணம் வாங்கி வருகிறார் என்றார்.

இதனையடுத்தே நீதிபதி ரோகித் ரஞ்சன் அகர்வால் தனது உத்தரவில் இந்தக் கருத்துகளை முன்வைத்தார். மேலும், இந்த வழக்கில் ராம்பால் வீடு திரும்பவில்லை. பலர் மதமாற்றத்திற்காக அழைத்துச் செல்லப்படுகின்றனர். இதனைத் தொடர அனுமதித்தால், நாட்டின் பெரும்பான்மை மக்கள், சிறுபான்மையினராக மாறி விடுவர். மதமாற்றம் நடப்பதற்குக் காரணமாக அமையும் மதக்கூட்டங்களை உடனடியாக நிறுத்த வேண்டும் என்று, அந்த உத்தரவில் நீதிபதி கூறினார்.

முருகன் கோயில்களில் ஆனி கிருத்திகை வழிபாடு!

sivagiri kuuduparai murugan temple - 2026

தென்காசி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற முருகன் கோவில்களில் இன்று ஆனி கார்த்திகை வழிபாடு விமர்சையாக நடைபெற்றது. .திரளான பக்தர்கள் பல்வேறு நேர்ச்சைகள் செலுத்தி முருகப்பெருமானை வழிபாடு செய்து சென்றனர் .

தென்காசி மாவட்டம் என்றாலே இயற்கை எழில் கொஞ்சும் மேற்குத் தொடர்ச்சி மலை மற்றும் அருவிகள், ஆறுகள், அணைக்கட்டுகள், பச்சைப் பசேல் விவசாய விளை நிலங்கள் என பார்க்கப் பார்க்க ரம்மியமாக இருக்கும்.

அதுவும் இந்த தென்மேற்குப் பருவ மழைக்காலத்தில் தென்காசி மாவட்டம் முழுவதுமே இதமான தட்பவெப்ப நிலையும் சாரல் மழையும் தென்றல் காற்றும் வீசும்.

இந்த தென்காசி மாவட்டத்தில் இயற்கை வளங்கள் மட்டுமல்லாது, ஆன்மீகத் தலங்களும் அதிக அளவில் உள்ளது குறிப்பிடத்தக்கது. அதுவும் இங்கு தமிழ்க் கடவுள் முருகனுக்கு பிரசித்தி பெற்ற பல வரலாற்றுச் சிறப்புமிக்க ஆலயங்கள் உள்ளன. அவற்றில் பல குன்றும் மலையும் சூழந்த இயற்கைச் சூழலில் அமைந்திருக்கின்றன.

இந்த ஆலயங்களில் ஒவ்வொரு மாத கார்த்திகை தினத்திலும் சிறப்பு பூஜை வழிபாடுகள் நடைபெறும். பக்தர்கள் பால்குடம் எடுத்தும் பல்வேறு நேர்ச்சைகள் செலுத்தியும் ஆனி ஆடி மாத கார்த்திகை தினங்களில் வழிபாடு நடத்துவது சிறப்பம்சம் ஆகும்.

இன்று ஆனி கார்த்திகை நாளையொட்டி சிவகிரியில் பிரபலமான கூடாரப்பாறை பாலசுப்பிரமணிய சுவாமி கோவிலில் முருகப்பெருமானுக்கு சிறப்பு அபிஷேகங்கள் அலங்கார பூஜை வழிபாடுகள் விமர்சையாக நடைபெற்றது .

மூலவர் பாலசுப்பிரமணியர் உத்ஸவர் ஆறுமுகக் கடவுள் ஆகியோருக்கு அபிஷேகம் சிறப்பு அலங்காரம் பூஜைகள் நடைபெற்றது. விருதுநகர் மற்றும் தென்காசி மாவட்டங்களின் பல்வேறு பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் இந்த பூஜை வழிபாட்டில் பங்கெடுத்தனர் .

இதுபோல் அருகில் உள்ள மிகப் பிரபலமான முருகன் கோயிலாக ராயகிரி கூடலூர் நாதகிரி முருகன் கோவில் உள்ளது. இதுவும் மலை மீது உள்ள கோவில்! இக்கோவிலிலும் பாலசுப்பிரமணியருக்கு சிறப்பு அபிஷேகம் பூஜை வழிபாடுகள் அதி விமர்சையாக நடைபெற்றது.

சங்கரன்கோவில், சிவகிரி, தென்காசி, செங்கோட்டை தவிர கேரளாவிலிருந்தும் கோவிலுக்கு பக்தர்கள் அதிக அளவில் வருகின்றனர்.

இதுபோல் புளியங்குடியில் உள்ள பாலசுப்பிரமணிய சுவாமி கோவில், ஆய்குடி முருகன் கோவில் ஆகியவற்றில் பாலசுப்ரமணியருக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றது.

குற்றாலம் அருகில் உள்ள இலஞ்சி குமாரகோவில், செங்கோட்டை அருகே மலை மீது அமர்ந்துள்ள திருமலைக்கோவில் குமாரசாமிக்கும் சிறப்பு அபிஷேகங்கள் அதி விமர்சையாக ஆனி கார்த்திகையை ஒட்டி நடைபெற்றது.

மேலும் தென்காசி அருகில் உள்ள தோரணமாலை முருகன் கோவில், தென்காசி காசி விஸ்வநாதர் கோவிலில் உள்ள பாலசுப்ரமணியருக்கும் ஆனி கார்த்திகை வழிபாடு விமர்சையாக நடைபெற்றது.

திரளான பக்தர்கள் விரதம் இருந்து முருகப் பெருமானுக்கு பல்வேறு நேர்ச்சைகள் செலுத்தி சிறப்பு வழிபாடுகள் நடத்தினர். பக்தர்களுக்கு பிரசாதங்கள் விநியோகிக்கப்பட்டன.

இந்திய ராணுவத்துக்கு உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட கைபேசி நிலையம்!

signaltran cell - 2026

உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட ‘சிப்’ இணைக்கப்பட்ட 4ஜி கைபேசி நிலையத்தை முதல்முறையாக இந்திய ராணுவம் தனது பயன்பாட்டுக்குக் கொண்டுவந்துள்ளது. இந்த சாதனத்தை பெங்களூரைச் சோ்ந்த சிக்னல்ட்ரான் நிறுவனத்திடமிருந்து அரசின் இணைய வா்த்தக வலைதளம் மூலமாக ராணுவம் வாங்கியுள்ளது.

இது தொடா்பாக நிறுவனத்தின் தலைவா் ஹிமம்ஷு கஸ்னிஸ் செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில், ‘இந்திய ராணுவத்தின் சஹயாத்ரி தளத்தில் பயன்படுத்தப்படும் சிப்பானது ‘சிக்னல்சிப்’ என்ற நிறுவனத்தால் வடிவமைக்கப்பட்டது. 4ஜி மற்றும் 5ஜி சேவைகளுக்காக உள்நாட்டிலேயே சிப்களைத் தயாரிக்கும் பணியில் சிக்னல்சிப் ஈடுபட்டுள்ளது. அதேபோல் சிக்கலான தொலைத்தொடா்பு சேவைகளை வழங்குவதற்காக உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட சிப் ஒன்று ராணுவத்துக்குப் பயன்படுத்தப்படுவதும் இதுவே முதல்முறையாகும். இதன்மூலம் நாட்டின் பாதுகாப்பு மேம்படுத்தப்படவுள்ளது.

இந்தச் சாதனத்தை தயாா் செய்வதற்கான ஏல விண்ணப்பத்தை அரசின் இணைய வா்த்தக வலைதளத்தில் ராணுவம் கடந்த ஆண்டு பதிவிட்டது. இதைத் தொடா்ந்து, இந்தப் பணியை வெற்றிகரமாக சிக்னல்டிரான் நிறுவனம் முடித்துவிட்டது. சஹயாத்ரிக்கு அனுப்பப்பட்டுள்ள இந்த வலைபின்னல் பெட்டி (என்ஐபி) 7 கிலோ எடை கொண்டது. இது உயா்தர ஆடியோ, விடியோக்களை வயா்லெஸ் சேவை மூலம் வழங்குகிறது. இது தங்குதடையற்ற தொலைதொடா்பு சேவைகளை வழங்கும் திறனுடையது.

இந்திய ராணுவத்துக்கு இதுபோன்ற 20 சாதனங்களை சிக்னல்டிரான் வழங்கியுள்ளது. இது மிகவும் குறைவான எடைகொண்ட சாதனம் என்பதால் தங்களின் வசதிக்கேற்ப தேவையான பகுதிகளுக்கு ராணுவத்தினா் இதை இடமாற்றம் செய்துகொள்ளலாம்.

பாதுகாப்புத் துறை, ரயில்வே போன்ற பல துறைகளை நவீனமயமாக்கும் முயற்சிகளை அரசு மேற்கொண்டு வருகிறது. எனவே, வருங்காலத்தில் இந்தத் தொழில்நுட்ப சாதனங்களின் சந்தை மதிப்பு மிகப்பெரும் அளவில் உயா்வதற்கான வாய்ப்புகள் உள்ளன. உள்நாட்டிலேயே சிப்கள் தயாரிக்கப்படுவதால் மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) அதிகரிக்க வழிவகுப்பதோடு அந்நியச் செலாவணி சேமிப்புக்கும் உதவுகிறது.

தொலைத்தொடா்பு சேவைகளை வழங்கும் இந்தக் கைப்பேசி நிலையத்தின் சந்தை மதிப்பு இந்தியாவில் 2029-க்குள் ரூ.2 லட்சம் கோடி வரை உயரும் என எதிா்பாா்க்கப்படுகிறது’ என்றாா்.

சிக்னல்சிப் நிறுவனத்தை கடந்த 2010-ஆம் ஆண்டு ஹிமம்ஷு கஸ்னிஸ் மற்றும் அவரது குழுவினா் நிறுவினா் என்பது குறிப்பிடத்தக்கது.

மகளிர் டெஸ்ட் போட்டி: தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிராக இந்திய அணி அபார வெற்றி!

indian women cricket beaten south africa in chennai - 2026

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான மகளிர் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இந்திய மற்றும் தென்னாப்பிரிக்க அணிகளுக்கு இடையினான மகளிர் டெஸ்ட் போட்டி கடந்த ஜூன் 28 ஆம் தேதி சென்னை சேப்பாக்கத்தில் தொடங்கியது.

இந்தப் போட்டியில் முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 6 விக்கெட் இழப்புக்கு 603 ரன் சேர்த்து டிக்ளேர் செய்தது. அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஷஃபாலி வர்மா இரட்டை சதம் விளாசி அசத்தினார். அவரைத் தொடர்ந்து, அதிகபட்சமாக ஸ்மிருதி மந்தனா 149 ரன் எடுத்தார்.

இதன் பின்னர் முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய தென்னாப்பிரிக்க அணி 266 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அதிகபட்சமாக மரிஷேன் கப் 74 ரன் எடுத்தார். இந்தியா தரப்பில் ஸ்நே ராணா 8 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார்.

தென் ஆப்பிரிக்க அணி ஃபாலோ ஆன் ஆனதைத் தொடர்ந்து, இரண்டாவது இன்னிங்ஸில் விளையாடியது. அதில் தென்னாப்பிரிக்க அணி 373 ரன்னுக்கு ஆட்டமிழந்தது. கேப்டன் வோல்வர்ட் மற்றும் ஷுன் லூஸ் இருவரும் சதம் விளாசி அசத்தினார். வோல்வர்ட் 122 ரன், ஷுன் லூஸ் 109 ரன் எடுத்து ஆட்டமிழந்தனர். இதில் ஸ்நே ராணா 2 விக்கெட் எடுத்தார்.

தென்னாப்பிரிக்க அணி 36 ரன் முன்னிலை பெற்றதால், இந்திய அணிக்கு 37 ரன் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. எளிய இலக்கை நோக்கி களமிறங்கிய இந்திய அணி 9.2 ஓவர்களில் இலக்கை எட்டி 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. ஷஃபாலி வர்மா 24 ரன்களுடனும், சுபா சதீஷ் 13 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.

போட்டியில் இரு இன்னிங்ஸிலும் சேர்த்து பத்து விக்கெட் எடுத்து, தனது அபார பந்து வீச்சால் தென் ஆப்பிரிக்க அணியை சுருட்டிய ஸ்நே ராணாவுக்கு ஆட்ட நாயகர் விருது வழங்கப்பட்டது.