டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.
2026 மக்கள் தொகைக் கணக்கெடுப்பு வந்தால், தெற்கின் நிலைமை இன்னும் மோசமாக இருக்கும்; குடும்பக் கட்டுப்பாடு விஷயங்களில் ஒழுக்கமாக இருப்பதற்காக அது மேலும் தண்டிக்கப்படும்.
இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி
கற்சிலையாக மாற்றப்பட்ட லோபமுத்ரா, தனது கணவரின் வருகைக்காகக் காத்திருக்கிறது. விந்திய மலை தலைவணங்கி, அதன் குருவான அகஸ்திய முனிவரின் வருகைக்காகக் காத்திருக்கிறது.
டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.
2026 மக்கள் தொகைக் கணக்கெடுப்பு வந்தால், தெற்கின் நிலைமை இன்னும் மோசமாக இருக்கும்; குடும்பக் கட்டுப்பாடு விஷயங்களில் ஒழுக்கமாக இருப்பதற்காக அது மேலும் தண்டிக்கப்படும்.
இதைத்தான் மத்திய அரசு தடுக்க நினைக்கிறது. பிரதமர் மோடி நாடாளுமன்ற உறுப்பினர்கள் எண்ணிக்கையை 850 ஆகவும் அதேபோல் மாநிலங்களின் பிரதிநிதித்துவத்தை சராசரியாக 50 சதவீதம் அதிகரிக்கும் செய்யும் திட்டத்தை முன் வைத்துள்ளார்.
பரிசோதனை மட்டுமே செய்து கொண்டார் என்றால் 'ஆஞ்சியோகிராம் செய்து கொண்டேன்' என்றும் அடைப்பை நீக்கும் சிகிச்சை செய்து கொண்டார் என்றால் 'ஆஞ்சியோபிளாஸ்டி செய்து கொண்டேன்' என்றும்
டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.
2026 மக்கள் தொகைக் கணக்கெடுப்பு வந்தால், தெற்கின் நிலைமை இன்னும் மோசமாக இருக்கும்; குடும்பக் கட்டுப்பாடு விஷயங்களில் ஒழுக்கமாக இருப்பதற்காக அது மேலும் தண்டிக்கப்படும்.
இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி
கற்சிலையாக மாற்றப்பட்ட லோபமுத்ரா, தனது கணவரின் வருகைக்காகக் காத்திருக்கிறது. விந்திய மலை தலைவணங்கி, அதன் குருவான அகஸ்திய முனிவரின் வருகைக்காகக் காத்திருக்கிறது.
டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.
2026 மக்கள் தொகைக் கணக்கெடுப்பு வந்தால், தெற்கின் நிலைமை இன்னும் மோசமாக இருக்கும்; குடும்பக் கட்டுப்பாடு விஷயங்களில் ஒழுக்கமாக இருப்பதற்காக அது மேலும் தண்டிக்கப்படும்.
இதைத்தான் மத்திய அரசு தடுக்க நினைக்கிறது. பிரதமர் மோடி நாடாளுமன்ற உறுப்பினர்கள் எண்ணிக்கையை 850 ஆகவும் அதேபோல் மாநிலங்களின் பிரதிநிதித்துவத்தை சராசரியாக 50 சதவீதம் அதிகரிக்கும் செய்யும் திட்டத்தை முன் வைத்துள்ளார்.
பரிசோதனை மட்டுமே செய்து கொண்டார் என்றால் 'ஆஞ்சியோகிராம் செய்து கொண்டேன்' என்றும் அடைப்பை நீக்கும் சிகிச்சை செய்து கொண்டார் என்றால் 'ஆஞ்சியோபிளாஸ்டி செய்து கொண்டேன்' என்றும்
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கூடுதல் சிறப்பு ரயில்களை திருநெல்வேலி மேட்டுப்பாளையம் போத்தனூர் செங்கோட்டை இடையே இயக்க தென்னக இரயில்வே அறிவித்துள்ளது. முன்பதிவு வரும் ஞாயிறு ஜனவரி 11 அன்று காலை 08:00 மணிக்கு துவங்கப்படும்
திருநெல்வேலி — மேட்டுப்பாளையம் வழி : கோவில்பட்டி சாத்தூர் விருதுநகர் மதுரை திண்டுக்கல் ஒட்டன்சத்திரம் பழனி உடுமலைப்பேட்டை பொள்ளாச்சி ….. கிணத்துக்கடவு கோயம்புத்தூர்
ஜனவரி 12 || திருநெல்வேலி ஜனவரி 13 || மேட்டுப்பாளையம்
போத்தனூர் — சென்னை — செங்கோட்டை
வழி : திருப்பூர் ஈரோடு சேலம் ஜோலார்பேட்டை காட்பாடி அரக்கோணம் பெரம்பூர் சென்னை எழும்பூர் தாம்பரம் செங்கல்பட்டு மேல்மருவத்தூர் விழுப்புரம் விருத்தாச்சலம் அரியலூர் ஸ்ரீரங்கம் திருச்சிராப்பள்ளி திண்டுக்கல் மதுரை விருதுநகர் சிவகாசி ஸ்ரீவில்லிபுத்தூர் ராஜபாளையம் சங்கரன்கோவில் கடையநல்லூர் தென்காசி ….
ஜனவரி 14 || போத்தனூர் & சென்னை ஜனவரி 15 || செங்கோட்டை
முன்பதிவு வரும் ஞாயிறு ஜனவரி 11 அன்று காலை 08:00 மணிக்கு துவங்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது
இந்த நாட்களில் இந்த வழித்தடங்களில் பயணிக்க கூடிய பயணிகள் இந்த ரயில்களை பயன்படுத்திக் கொள்ளுங்கள் முன்பதிவு வசதி உள்ளது திருநெல்வேலி மேட்டுப்பாளையம் ரயிலில் முன்பதிவு இல்லா பெட்டிகள் உள்ளது .
ஏற்கனவே 15 வழித்தடங்களில் சிறப்பு ரயில்கள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் !! கூடுதலாக இரண்டு வழித்தடங்களில் சிறப்பு ரயில்களை இயக்குவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
சபரிமலை ஐயப்பன் கோயில் வளாகத்தில் இருந்த விலைமதிப்பற்ற தங்க ஆபரணங்கள் மற்றும் பொருட்கள் காணாமல் போன விவகாரத்தில், கோயிலின் தலைமை தந்திரி கண்டரரு ராஜீவருவை கேரளா காவல்துறையின் சிறப்பு புலனாய்வுக் குழுவினர் வெள்ளிக்கிழமை கைது செய்து மேலும் இந்த வழக்கு தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த சில நாட்களுக்கு முன்னர், சபரிமலை கோயில் கருவூலத்திலிருந்து தங்க நகைகள் திருடப்பட்ட புகார் எழுந்ததைத் தொடர்ந்து தீவிர விசாரணை தொடங்கப்பட்டது.
இவ்வழக்கின் முக்கிய குற்றவாளியான உன்னிகிருஷ்ணன் போற்றி மற்றும் திருவிதாங்கூர் தேவஸ்வம் போர்டின் முன்னாள் தலைவர் பத்மகுமார் ஆகியோர் அளித்த வாக்குமூலங்களின் அடிப்படையில் இந்த அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
சிறப்பு புலனாய்வு குழுவின் விசாரணையும் நடவடிக்கையும் இதுவரை சிறப்புப் புலனாய்வு குழுவின் கண்டுபிடிப்புகளின்படி, தந்திரி ராஜீவருவுக்கும், உன்னிகிருஷ்ணன் பொட்டிக்கும் இடையே நெருங்கிய தொடர்பு இருந்தது தெரியவந்துள்ளது.
குறிப்பாக, கருவறையின் கதவு சட்டங்கள் மற்றும் துவாரபாலகர் சிலைகளுக்குத் தங்க முலாம் பூசும் பணிகளை மேற்கொள்ள தந்திரி பரிந்துரை செய்துள்ளார். இந்த நடைமுறைகளின் போது முறைகேடுகள் நடந்திருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படுகிறது.
முன்னதாக, இரகசிய இடத்தில் வைத்து தந்திரியிடம் விசாரணை நடத்திய அதிகாரிகள், பின்னர் அவரைத் தங்களது அலுவலகத்திற்கு அழைத்து சென்று கைது நடவடிக்கையை முறைப்படி பதிவு செய்தனர்.
சபரிமலை போன்ற புனிதத் தலத்தின் மிக உயரிய பொறுப்பில் உள்ள ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளது ஐயப்ப பக்தர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்திற்கு மூன்று புதிய நீண்ட வழித்தடத்தில் அம்ரித் பாரத் ரயில்கள் இயக்கப்படுகின்றன.
திருச்சியிலிருந்து நியூ ஜல்பைகுரி, தாம்பரம்-சந்த்ராகச்சி மற்றும் நாகர்கோவில்-நியூ ஜல்பைகுரி ஆகிய வழித்தடங்களில் மூன்று புதிய அம்ரித் பாரத் ரயில்கள் இயக்க ரயில்வே வாரியம் ஒப்புதல் அளித்துள்ளது; இவை, மலிவான மற்றும் நவீன பயண அனுபவத்தை வழங்கும் வகையில், நீண்ட தூர இணைப்பை மேம்படுத்தும் நோக்கில் அறிமுகப்படுத்தப்படுகின்றன.
அம்ரித் பாரத் ரயில்கள்: திருச்சி-நியூ ஜல்பைகுரி: இந்த சேவை திருச்சி ஜங்ஷனில் தொடங்கி, தஞ்சாவூர், கும்பகோணம், மயிலாடுதுறை, சிதம்பரம், விழுப்புரம் மற்றும் சென்னை வழியாக நியூ ஜல்பைகுரிக்குச் செல்லும்.
தாம்பரம்-சந்த்ராகச்சி: தாம்பரத்தில் இருந்து சென்னை எழும்பூர், விஜயவாடா, புவனேஷ்வர் வழியாக சந்த்ராகச்சி வரை இயக்கப்படும்.
நாகர்கோவில்-நியூ ஜல்பைகுரி: நாகர்கோவிலில் இருந்து மதுரை, கோயம்புத்தூர், காட்பாடி, விஜயவாடா, புவனேஷ்வர் போன்ற முக்கிய நகரங்கள் வழியாக நியூ ஜல்பைகுரி வரை செல்லும் நீண்ட தூர வழித்தடம் இதுவாகும்.
இந்த ரயிலில் சிறப்பம்சங்களாக குளிர்சாதன வசதி இல்லை. இந்த ரயில்கள் குளிர்சாதன வசதி இல்லாத ஸ்லீப்பர் மற்றும் ஜெனரல் பெட்டிகளுடன் கூடியவை, இது பயணச் செலவைக் குறைக்கிறது.
புஷ்-புல் தொழில்நுட்பம்: இரட்டைப் பெட்டிகள் (Locomotives) ரயிலின் இரு முனைகளிலும் இணைக்கப்பட்டு, தள்ளு-இழுக்கும் (Push-Pull) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துகின்றன.
நவீன வசதிகளாக மேம்படுத்தப்பட்ட இருக்கைகள், அவசரப் பிரேக் அமைப்பு, மற்றும் நவீன வசதிகளுடன் கூடியவை.
இந்த புதிய ரயில்கள் தமிழகத்தில் இருந்து வடகிழக்கு மாநிலங்களுக்கு இடையேயான இணைப்பை வலுப்படுத்துவதோடு, ஏழை எளிய மக்களுக்கான பயணத்தை எளிதாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பகவத்கீதை பகுதி 11 – மகாபாரதக் கதை – குட்டு ஸ்லோகங்கள்
முனைவர் கு.வை.பாலசுப்பிரமணியன்
வியாசர் பாரதக்கதையை எழுத நினைக்கிறார். எப்படி எழுதுவது என அவருக்குத் தெரியவில்லை. அதனால் அவர் பிரம்மனை வேண்டுகிறார். பிரம்மா அவரை விநாயகரை வேண்டுமாறு பணிக்கிறார்.
விநாயகரின் நிபந்தனை
வியாசரும் விநாயகரை வேண்டி தவமிருக்கிறார். விநாயகர் அவர் முன் தோன்றி மகாபாரதத்தை அவர் சொல்லச் சொல்ல தான் எழுதுவதாக வாக்களிக்கிறார். ஆனால் ஒரு நிபந்தனை விதிக்கிறார். தன் எழுத்தாணி இடைவிடாமல் செயல்படும்படி வியாசர் சுலோகம் சொல்ல வேண்டும் எனக் கூறுகிறார்.
அதற்கு வியாசர் ஒரு எதிர் நிபந்தனை விதிக்கிறார். அதாவது பொருள் புரிந்து கொண்டே சுலோகங்களை எழுத வேண்டும் என்று சொல்கிறார். தான் அடுத்துவரும் ஸ்லோகங்களை யோசிப்பதற்காக இடையிடையே ஒரு கடினமான பொருளுடைய ஸ்லோகத்தை வியாசர் வைக்கிறார். இவை குட்டு ஸ்லோகங்கள் எனப்படும். மிகவும் கடினமான சாதாரணமாக எளிதில் அர்த்தம் புரியாத சிலேடைகளுடன் நிறைந்த சுலோகங்கள் இவை. இவற்றை வியாஸர் அவ்வப்பொழுது சொல்ல ஆரம்பித்தார். விநாயகர் இதன் உண்மைப் பொருள் என்ன என்று யோசிக்க வேண்டி இருந்தது. அதற்குள் வியாஸர் பல சுலோகங்களை மனதில் கவனம் செய்து கொண்டார். இப்படிப்பட்ட சுலோகங்களுக்கு குட்டு சுலோகங்கள் என்று பெயர். சுமார் 8000 குட்டு சுலோகங்கள் மஹாபாரதத்தில் உள்ளன.
“கேசவரின் (கிருஷ்ணன்) வீழ்ச்சியைக் கண்டு பாண்டவர்கள் மகிழ்ச்சியில் ஆழ்ந்தனர், கௌரவர்கள் அனைவரும் ‘ஹா கேசவ்’ ‘ஹா கேசவ்’ என்று அழத் தொடங்கினர்” என்பது முதல் பார்வையில் இதன் பொருள். கிருஷ்ணனின் வீழ்ச்சியைக் கண்டு, பாண்டவர்கள் எப்படி மகிழ்ச்சியில் திளைப்பார்கள், கௌரவர்கள் ஏன் அழத் தொடங்குவார்கள்? மகாபாரதப் போரில் கிருஷ்ணர் போர் புரியவே இல்லை. அப்படியானால் அவர் எப்படி இறந்து விழுவார்?
இந்த ஸ்லோகம் விநாயகரைக் குழப்புவதற்காக வியாசர் எழுதிய ஸ்லோகம். இதன் அர்த்தம் – கே (அ) – தண்ணீரில், ஶவம் – பிணம், பதிதம் – விழுந்து, த்ருஷ்ட்வா – பார்த்தல் பாண்டவர் – மீன்கள், ஹர்ஷனிர்வா – மகிழ்ச்சியால் நிறைந்தது, ரோதந்தி – அழ ஆரம்பித்தார்கள், ஸர்வே – அனைத்து, கௌரவர்கள் – காகங்கள், ஹா கேசவ் – தண்ணீரில் இறந்த உடல். அதாவது தண்ணீரில் விழுந்து கிடப்பதைக் கண்டு நீர்வாழ் மீன்கள் மகிழ்ச்சியில் திளைத்து, காகங்கள் அனைத்தும் இறந்தது தண்ணீரில் மூழ்கிவிட்டதாக அழ ஆரம்பித்தன.
வியாசரின் இந்தக் கூற்றில், விநாயகரும் சிந்தனையில் இருந்ததாகக் கூறப்படுகிறது. கிருஷ்ணர் மகாபாரதத்தில் எங்கும் விழுந்ததில்லை, அவர் விழுந்தாலும், கிருஷ்ணர் விழுந்ததைக் கண்டு பாண்டவர் மகிழ்ச்சியில் குதிப்பது ஏன்? மேலும், எதிரி தரப்பின் தீய கௌரவர்களே! ஹா! கேசவ்! கேசவ்! அவரை விழவைத்துவிட்டு ஏன் அழ வேண்டும்?
ஆனால் இங்கு கேசவன் என்றால் நீரில் பிணம் (கே (எரிந்த) ஷவம்), துரோணன் என்றால் காகம், கௌரவர் என்றால் குள்ளநரி என்று பொருள். இப்போது வசனத்தின் அர்த்தத்தை விளக்குங்கள். இது மகாபாரதப் போரின் கொடூரத்தை விவரிக்கிறது. எரிக்கவோ, புதைக்கவோ நேரமில்லாத அளவுக்கு ஒரே நாளில் பல சடலங்கள் விழுந்தன. சடலங்கள் தண்ணீரில் வீசப்பட்டன. காக்கைகள் ஆஹா! இப்போது இறந்த உடலில் அமர்ந்து மாதக்கணக்கில் இறைச்சி சாப்பிடலாம் என எண்ணின. ஆனால் மற்றொரு மாமிச உண்ணி குள்ளநரிக்கு நீச்சல் தெரியாது… அதனால் அது தண்ணீரில் விழுகின்ற பிணங்களைப் பார்த்தன. அதனால் சாப்பிட முடியாதே என்ற ஏக்கத்தில் ஐயோ பிணங்கள் போகின்றனவே என ஹா!..ஹா…! தண்ணீரில் சடலம்! தண்ணீரில் சடலம்! எனக் கதறுகின்றன.
டிஏபிஎஸ் – உறுதியளிக்கப்பட்ட புதிய ஓய்வூதிய திட்டத்துக்கு தமிழக அமைச்சரவை இன்று ஒப்புதல் வழங்கியுள்ளது.
தமிழகத்தில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்டு வந்த பழைய ஓய்வூதிய திட்டத்துக்கு பதில் புதிய திட்டம் உருவாக்கப்பட்டது. தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டம் – டிஏபிஎஸ் என பெயரிடப்பட்ட இந்தத் திட்டத்தை ஜன.3ல் தமிழக முதல் அமைச்சர் ஸ்டாலின் அறிவித்தார். இதை அடுத்து, தமிழக அமைச்சரவை இந்த திட்டத்துக்கு இன்று ஒப்புதல் வழங்கியுள்ளது. இதனை அடுத்து, புதிய ஓய்வூதிய திட்டத்துக்கான விதிமுறைகள் வகுக்கப்பட்டு, வரும் நிதியாண்டு முதல் இது பயன்பாட்டுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
புதிய ஓய்வூதியத் திட்டம் அறிவிக்கப்பட்டதும் போராட்டத்தை பெரும்பாலான ஆசிரியர்கள் கைவிட்டனர். எனினும் இடைநிலை ஆசிரியர்கள் சம வேலைக்கு சம ஊதியம் என்று போராட்டத்தை தொடர்ந்தனர்.
முன்னதாக, அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் செயல்படுத்த வேண்டும் என்று பல ஆண்டுகளாக தொடர்ந்து கோரி வருகின்றனர். கடந்த சட்டமன்றத் தேர்தலுக்கு முன், திமுக., தனது தேர்தல் வாக்குறுதியாக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டம் மீண்டும் செயல்படுத்தப்படும் என்று உறுதி அளித்தது.
ஆனால், ஆட்சிக்கு வந்த பின், வழக்கம்போல் அதைக் கிடப்பில் போட்டு விட்டது. நான்கே முக்கால் ஆண்டுகளுக்குப் பிறகு தேர்தல் வரும் நிலையில் மீண்டும் அதே பல்லவியை தூக்கும் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. வாக்குறுதி கொடுத்து ஏமாற்றிய நிலையில் திமுக அரசு மீது அரசு ஊழியர், ஆசிரியர்கள் பெரும் கோபத்திலும் ஏமாற்றத்திலும் இருந்தனர். இதனால் அவ்வப்போது போராட்டங்களை நடத்தி வந்த அவர்கள், ஜன.6 முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம் செய்யப் போவதாக அறிவித்தனர்.
இந்த நிலையில் தங்கள் வாக்குறுதிக்கு மாறாக இப்போது புதிய ஓய்வூதிய திட்டத்தை திமுக அரசு அறிவித்துள்ளது. பழைய ஓய்வூதிய திட்டத்தில் இருந்த அம்சங்கள் புதிய திட்டத்தில் இருப்பதாக அரசு தெரிவித்தது. இந்தப் புதிய ஓய்வூதிய திட்டத்தின் படி…
மாநில அரசு அலுவலர்கள் பெற்ற கடைசி மாத ஊதியத்தில் 50% உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியமாக வழங்கப்படும். இவ்வாறு 50 சதவீதத்திற்கு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியம் வழங்க, பணியாளர்களின் 10 சதவீத பங்களிப்போடு, ஓய்வூதிய நிதியத்திற்குத் தேவைப்படும் கூடுதல் நிதியை தமிழக அரசு ஏற்கும்.
50 % உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியம் பெறும் ஓய்வூதியதாரர்களுக்கு ஆண்டுதோறும் ஆறு மாதத்திற்கு ஒருமுறை அரசு அலுவலர்களுக்கு வழங்கப்படுவதற்கு இணையான அகவிலைப்படி உயர்வு அளிக்கப்படும். ஓய்வூதியதாரர் இறந்துவிட்டால் அவர் ஏற்கெனவே பரிந்துரைத்த குடும்ப உறுப்பினர்களுக்கு அவர் பெற்று வந்த ஓய்வூதியத்தில் 60 % குடும்ப ஓய்வூதியமாக வழங்கப்படும்.
அரசு அலுவலர்கள் ஓய்வு பெறும் போதும், பணிக்காலத்தில் இறக்க நேரிடும் போதும், அவரவரின் பணிக்காலத்திற்கேற்ப 25 லட்ச ரூபாய்க்கு மிகாமல் பணிக்கொடை வழங்கப்படும்.
புதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டம் செயல்படுத்தப்பட்ட பின், ஓய்வூதியம் பெறுவதற்கான தகுதிப் பணிக் காலத்தை நிறைவு செய்யாமல் பணி ஓய்வு பெறும் அனைத்து அலுவலர்களுக்கும் குறைந்தபட்ச ஓய்வூதியம் வழங்கப்படும்.
பங்களிப்புடன் கூடிய ஓய்வூதியத் திட்டத்தின் (Contributory Pension Scheme) கீழ் பணியில் சேர்ந்து, புதிய ஓய்வூதிய திட்டம் செயல்படுத்தப்படுவதற்கு முன்னர் இடைப்பட்ட காலத்தில் ஓய்வூதியம் இன்றி பணி ஓய்வு பெற்றவர்களுக்கு சிறப்பு கருணை ஓய்வூதியம் வழங்கப்படும்.
தமிழக முதல் அமைச்சரின் இந்த அறிவிப்பை அரசு ஊழியர்களுக்கு தமிழக அரசு அள்ளிக் கொடுப்பதாக ஊடகங்கள் செய்திகளை வெளியிட்டன.
இவ்வாறு அறிவிக்கப்பட்டிருந்தாலும் இது தங்களை ஏமாற்றம் செயல் என்று அரசு ஊழியர்கள் பெரும்பாலானோர் உள்ள குமுறலில் கருத்துக்களை வெளியிட்டு வந்தனர்.
தங்களது பணத்தை தங்களுக்கு தராமல் அரசு எடுத்துக்கொண்டு ஏமாற்றுவதாக அவர்கள் கணக்குகளை வெளியிட்டனர். எனினும் ஜாக்டோ ஜியோ நம்பி தங்கள் எதிர்காலத்தை இழந்து விட்டதாக பலரும் ஊடகங்களில் கருத்துக்களை வெளியிட்டனர்.
அரசு அள்ளிக் கொடுக்கிறதா? வாரிச் சுருட்டுகிறதா?
இந்நிலையில் அரசு ஊழியர் ஆசிரியர்களின் உள்ளக் குமறலை வெளிப்படுத்தும் விதமாக சமூக வலைதள பதிவு ஒன்று வைரலானது. அதில் குறிப்பிடப்பட்டிருப்பதாவது…
மாதாந்திர சம்பளத்தில் 10% பிடித்தம் செய்யப்பட்டு, ஓய்வு பெறும் போது பென்ஷன் வழங்கப்படும்.
CPS ஊழியர், பணி ஓய்வு பெறும் போது.. நாம் செலுத்திய 10% அரசு செலுத்திய 10% இதற்கு வட்டி 8% எல்லாம் சேர்த்து, சுமாரா ரூபாய் ஒரு கோடி கையில் வாங்கிக் கொண்டு போகலாம் என்ற நிலை இனி இல்லை.
தமிழ்நாடு அரசு சிறப்பு பென்ஷன் திட்டத்தின் படி, 60 வயதில் ஓய்வு பெற்ற ஒருவர் 61ம் வயதில் இறந்தால் அந்த ஓராண்டில் சுமாராக 6 லட்சம் (மாதம் 1 லட்சம் என வைத்துக் கொண்டால்) பென்ஷன் வாங்கி இருப்பார். பழைய CPS திட்டத்தில் நீடித்திருந்தால் ஒரு கோடி ரூபாய் கையில் வைத்திருக்கலாம்.
உங்களை எல்லாம் ஏமாற்றுவது மிகவும் எளிது.
என் பனிக்காலத்தில் என்னுடைய சம்பளத்தில் 10% மட்டுமே பிடித்தால் அரசு பங்களிப்பு + வட்டியுடன் ஒரு கோடி ரூபாய் வரும். ஒரு கோடி ரூபாய் அரசு வைத்துக் கொண்டு எனக்கு மாதம் ஒரு லட்சம் பென்ஷன் தரும். இது விபூதி அடிக்கும் வேலை.
ஒவ்வொரு ஊழியரும் CPS Account slip ஐ வச்சுக்கிட்டு, இவ்வளவு பணம் சேர்ந்துருக்கு, அவ்வளவு பணம் சேர்ந்துருக்கு… ஓய்வு பெறும் போது லம்ப்பா கிடைக்கும் என்று இனிமேல் உதார் விட முடியாது .
60 ம் வயதில் ஓய்வு பெற்று, பெரும்பாலானவர்கள், அடுத்த 10 ஆண்டுகளில் மண்டையை போட்டு விடுவார்கள். எனவே அரசுக்கு கொழுத்த லாபம் வரும். இது IAS படிச்சவனுக்கு தெரியாதா ?
இப்பவும், எனக்கு CPS போதும்; அரசு தரும் பென்ஷன் வேண்டாம் என்று முடிவு எடுக்க ஒரு ஆப்ஷன் கொடுத்தால் CPS – ஐ தேர்ந்தெடுப்பவன் தான் புத்திசாலி.
இன்று வரை ஊழியர்கள் CPS க்கு கட்டிய சந்தா தொகையை, அப்படியே GPF அக்கவுண்டில் மாற்றி விடுகிறேன். அதற்குரிய வட்டியும் கணக்கில் சேர்த்து விடுகிறேன். அரசாங்கம் போட்ட காண்ட்ரிபியூஷனை அரசாங்கமே எடுத்துக் கொள்ளும். என்று சொல்லி, இதே பென்சன் ஸ்கீம் அறிவித்திருந்தால், சங்கங்கள் ஜெயித்ததாக அர்த்தம்.
இப்போ உங்களுக்கு நேந்திரம் வாழைப்பழத்தை சாலட் போட்டு கொடுத்திருக்காங்க என்று தான் எனக்கு தோன்றுகிறது. உங்க பணத்தை அரசாங்கம் தன் கணக்குக்கு மாற்றி விடும். அதிலிருந்து மகளிர் உரிமைத்தொகை, இலவச பேருந்து போன்றவைக்கு அப்பணம் செலவிடப்படும்.
100% ரிசல்ட், ஆவரேஜ் மார்க் பிக்கப், இல்லம் தேடி கல்வி, திறன்… இப்படி புதுசு புதுசா 10 ஸ்கீம் கொண்டு வந்து பிரஷர் ஏத்தினம்னா சர்வீஸ்லயே பாதிப்பேர் செத்துப் போயிருவான். பென்ஷன் தரத் தேவை இல்லை. நேரடியா ஃபேமிலி பென்ஷனை கொடுத்து விடலாம். அரசுக்கு ஆயிரம் கோடி ரூபாய் லாபம்.
*எலிப் பொறியில் மசால் வடை வைச்சாச்சு. ஆபத்தை அறியாமல் எலி வந்து கடிச்சிருச்சு. இனி ஊர்ல இருக்குறவன் எல்லாம் ‘இவருக்கென்னப்பா பென்ஷன் வந்துருச்சு’ என்று வயிறு எரிஞ்சு பேசுவானுங்க. வரவிருந்த ஒரு கோடியை விட்டுட்டு, கடைசியா வாங்குன Basic pay ல, பாதியை அதாவது 50,000 ஐ பென்ஷன்கற பெயரில் வாங்கனும். பணி ஓய்வு பெற்று 20 ஆண்டுகள் உயிரோடு இருந்தால் அசல் கிடைக்கும்.
ரூபாய் ஒரு கோடியை வங்கியில் டெபாசிட் செய்தாலே ஆண்டுக்கு 9 லட்சம் வருமானம். வாங்க போற பென்ஷன் என்பது வட்டி மட்டுமே. அசல்?….
அரசு ஊழியரிடம் ஒரு கோடி ரூபாய் கடன் வாங்கிக் கொண்டு, அதற்கு மாதம் ஒரு லட்ச ரூபாய் வட்டி அரசு தரும். அந்த அரசு ஊழியர் இறந்த பிறகு அவருடைய மனைவிக்கு அதில் 60% தரும். அவருடைய மனைவியும் இறந்த பிறகு அரசு அப்படியே அந்த ஒரு கோடி ரூபாயை ஆட்டைய போட்டுவிடும். அரசு ஊழியரின் மனைவி அரசு ஊழியருக்கு முன்பே இறந்துவிட்டால் நிலைமை இன்னும் மோசம்.
இதுதான் புதிய பென்சன் திட்டத்தின் சிறப்பு திருநெல்வேலி அல்வா. இதற்காகத்தான், அரசுக்கு ஆதரவாக, அரசின் வருமானத்தை உயர்த்த, சங்கங்கள் இதுநாள் வரை நடத்திய நாடகம். இப்ப அதிருப்தியில் இருந்த அரசு ஊழியர்கள், அரசுக்கு ஆதரவாக திருப்பியதற்கான சன்மானத்தோடு, நன்றி அறிவிப்பு கூட்டங்கள் இனிதே நடக்கும்.
சங்கங்களை நம்பிய ஆசிரியர்களையும் அரசு ஊழியர்களையும் இன்று சவப்பெட்டியில் அடைத்த தினம். அரசு ஊழியர்களின் வாழ்க்கையில் இன்றைய தினம் கருப்பு நாள்.
மஹர சங்கராந்தி தை பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கூடுதலாக ஐந்து வழித்தடங்களில் சிறப்பு ரயில்களை இயக்கப் போவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது .
திருநெல்வேலி தாம்பரம் / செங்கல்பட்டு இன்டர்சிட்டி பகல் நேர சிறப்பு ரயில்
வழி : கோவில்பட்டி சாத்தூர் விருதுநகர் திருமங்கலம் மதுரை சோழவந்தான் கொடைக்கானல் ரோடு திண்டுக்கல் மணப்பாறை திருச்சி ஸ்ரீரங்கம் அரியலூர் விருதாச்சலம் விழுப்புரம் மேல்மருவத்தூர் செங்கல்பட்டு
திருநெல்வேலி தாம்பரம் || ஜனவரி 13 & 20
திருநெல்வேலி செங்கல்பட்டு || ஜனவரி 14
2 நாட்கள் தாம்பரம் வரையிலும் // 1 நாள் செங்கல்பட்டு வரையிலும் இயக்கப்படுகிறது
போத்தனூர் சென்னை சென்ட்ரல் இடையே ஏசி சிறப்பு ரயில் கூடுதலாக ஜனவரி 8 / 9 தேதிகளில் இயக்கப்படுகிறது
திருநெல்வேலி தாம்பரம் இடையே சிறப்பு ரயில் கோவில்பட்டி சாத்தூர் விருதுநகர் மதுரை திண்டுக்கல் திருச்சி திருவெறும்பூர் தஞ்சாவூர் பாபநாசம் கும்பகோணம் மயிலாடுதுறை சீர்காழி சிதம்பரம் பரங்கிப்பேட்டை திருப்பாதிரிப்புலியூர் பண்ருட்டி விழுப்புரம் மேல்மருவத்தூர் செங்கல்பட்டு || ஜனவரி 12 / 19 = 2 நாள்
சென்னை சென்ட்ரல் — தூத்துக்குடி இடையேயும் சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது
வழி : பெரம்பூர் திருவள்ளூர் அரக்கோணம் காட்பாடி ஜோலார்பேட்டை சேலம் நாமக்கல் கரூர் திண்டுக்கல் கொடைக்கானல் ரோடு மதுரை விருதுநகர் சாத்தூர் கோவில்பட்டி தூத்துக்குடி மேலூர்
இந்த வழித்தடங்களில் கூடுதல் சிறப்பு ரயில்களை இயக்குவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது . இதற்கான முன்பதிவுகள் மிக விரைவில் துவங்கப்படும்
திருப்பூர் குமரன்குன்று கோவிலை அகற்ற முயற்சித்த அரசுத்துறைக்கு எதிராகப் போராடிய ஹிந்து முன்னணியினர் இருநூறு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
திருப்பூர் மாவட்டம் ஈட்டிவீரம்பாளையம் குமரன் குன்று முருகன் கோவிலை அகற்ற முயற்சித்தபோது , ஹிந்து முன்னணியினருக்கும் போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது . இதில் ஹிந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் காயம் அடைந்தார் . நிர்வாகிகள் உட்பட இருநூறு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் .
இந்தக் கோவில் வருவாய்த்துறை புறம்போக்கு நிலத்தில் இருப்பதாகக் கூறி அதை அகற்றும்படி அரசு அதிகாரிகள் தெரிவித்தனர். இதற்கு பக்தர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்நிலையில் கோவிலில் இருக்கும் சிலைகளை அகற்ற இன்று காலை வருவாய்த்துறையினர் சென்றனர். அதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஊர் மக்கள் , பக்தர்கள் , ஹிந்து முன்னணியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது நடந்த தள்ளுமுள்ளு சம்பவத்தில், சிலர் காயம் அடைந்தனர். ஹிந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் காயம் அடைந்து திருப்பூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில், காவல்துறையும், தமிழக அரசும் திட்டமிட்டு இந்துக்கள் மீது தாக்குதல் நடத்தியதாகவும், இந்து முன்னணி மாநிலத் தலைவர் மீது போலீஸ் தாக்கி அவமதித்துள்ளதாகவும் குறிப்பிட்டு, இந்து முன்னணி கடுமையான கண்டனத்தை தெரிவித்துள்ளது. இது குறித்து அதன் மாநில அமைப்பாளர் ச. ராஜேஷ் வெளியிட்ட அறிக்கை:
இன்று திருப்பூர், பெருமாநல்லூர் அருகில் உள்ள கல்லாங்குன்றம் பகுதியில் நூறு வருடங்களுக்கு மேலாக மக்கள் வழிபடும் முருகன் கோவிலை தமிழக அரசு அதிகாரிகள், போலீசுடன் வந்து இடித்துள்ளனர்.
இந்தக் கோவில் இடத்தை தனியாருக்கு பட்டா வாங்கித் தருவதாக கம்யூனிஸ்ட் கட்சியினர் வசூல் வேட்டை நடத்தினர். இதனை எதிர்த்து கோவிலைப் பாதுகாக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு போட்டதில், கோவில் இருப்பதை உறுதி செய்தது.
மேலும் மாவட்ட ஆட்சியரிடம் பேச்சுவார்த்தை மூலம் சுமூகமான தீர்வு காண வழிகாட்டியது. கலெக்டரிடம் மனு கொடுக்கப்பட்டது. ஆனால் அதற்குள் ஆளும்கட்சி மற்றும் அதன் கூட்டணி கட்சியான கம்யூனிஸ்ட் தூண்டுதலால் தாசில்தார் தலைமையில் கோவிலை அதிகாரிகள் இடித்துள்ளனர்.
இதற்கு அப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராடியுள்ளனர். மக்களின் கோரிக்கையை ஏற்று அதிகாரிகளிடம் பேச சென்ற இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சி. சுப்பிரமணியம் அவர்கள் மீது அருவருக்கத்தக்க வகையில் தாக்குதல் நடத்தியதில், அவரது கைகளில், பாதங்களில் அடிபட்டு இரத்தம் கொட்டி உள்ளது. அவர் திருப்பூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார்.
மேலும் , இந்த போராட்டத்தில் இந்துமுன்னணி மாநில பொதுச்செயலாளர்கள் ஜே.எஸ். கிஷோர்குமார், வி.எஸ். செந்தில்குமார் மற்றும் நூற்றுக்கணக்கான முருக பக்தர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நூறு ஆண்டுகள் பழமையான எந்த வழிபாட்டு இடத்தையும் இடிக்கக் கூடாது என்ற சட்டத்திற்கு எதிராக, கோவிலை இடிக்க உத்தரவு போடுவதே வழிபாட்டு பாதுகாப்பு சட்டப்படி, சிறைத்தண்டனைக்குரிய குற்றம் ஆகும்.
தமிழக அரசு, சட்டத்தை காலில் போட்டு மிதிப்பது போல நடந்து கொள்கிறது. அரசே சட்டத்திற்குப் புறம்பாக நடந்தால் சாதாரண மக்களுக்கு சட்டத்தின் மீது எவ்வாறு நம்பிக்கை வரும்?
திமுக ஆட்சிக்கு வந்த பிறகு ஏதாவது காரணம் கூறி மக்களின் உணர்வுகளை புண்படுத்தும் விதமாக நூற்றுக்கணக்கான கோவில்களை இடித்து உள்ளது.
ஆனால் கோர்ட் உத்தரவு இருந்தும் மசூதி, சர்ச் போன்றவற்றை அகற்றாமல் அவற்றை காப்பாற்றி வருகிறது. இத்தகைய இரட்டை நிலைப்பாடு, அரசின் ஒருதலைப்பட்சமான செயல்பாட்டையே எடுத்துக் காட்டுகிறது.
மனிதாபிமானமற்ற முறையில் இந்து முன்னணி மாநிலத் தலைவர் தாக்கப்பட்டதை இந்து முன்னணி வன்மையாக கண்டிக்கிறது. மனித உரிமை மீறல்களில் ஈடுபட்ட காவல்துறை அதிகாரிகள் மீது காவல்துறையை கையில் வைத்து இருக்கும் முதல்வர் துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கின்றேம்
அறிவிக்கப்பட்ட மூன்றாவது நாளிலேயே தமிழ்நாடு ஓய்வூதியத் திட்டம் பல்லிளித்து விட்டதாகவும், அரசு ஊழியர்களே விழித்துக் கொள்ளுங்கள் என்றும் குறிப்பிட்டு பாமக., தலைவர் அன்புமணி ராமதாஸ் அறிக்கை வெளியிட்டுள்ளார். அவர் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது …
திமுக அரசு அறிவித்திருக்கும் தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டம் சவலைக் குழந்தையாக இருக்கிறது என்றும், திமுக அரசை நம்பிய அரசு ஊழியர்கள் ஏமாற்றப்பட்டு விட்டதாகவும் அரசு ஊழியர்கள் சங்கங்கள் விமர்சிக்கத் தொடங்கியுள்ளன. அரசு ஊழியர்களுக்கு இதுவரை எந்த அரசும் செய்யாத சாதனையை செய்து விட்டதாக திமுக அரசு பொய்யளந்த நிலையில், ஆட்சியாளர்களின் மோசடி 3 நாளில் அம்பலமாகியுள்ளது.
தமிழ்நாட்டில் 2003&ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் அறிமுகம் செய்யப்பட்ட புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து விட்டு, ஏற்கனவே இருந்த பழைய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று அரசு ஊழியர்கள் கடந்த 23 ஆண்டுகளாக வலியுறுத்தி வருகின்றனர். அவர்களுக்கு ஆதரவாக பாட்டாளி மக்கள் கட்சியும் குரல் கொடுத்து வருகிறது. பழைய ஓய்வூதியத் திட்டம் உள்ளிட்ட 10 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 6&ஆம் தேதி முதல் தொடர் வேலைநிறுத்தப் போராட்டம் நடத்தப்போவதாக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் சங்கத்தினர் அறிவித்திருந்தினர். கடந்த காலங்களில் இத்தகைய வேலைநிறுத்த அறிவிப்புகளைக் கண்டு கொள்ளாமல் இருந்த திமுக அரசு, இன்னும் சில வாரங்களில் தேர்தல் தேதி அறிவிக்கப்படவிருப்பதால், கடந்த 2&ஆம் தேதி அரசு ஊழியர் சங்கங்களை அழைத்துப் பேசி, அதற்கு அடுத்த நாள் ஜனவரி 3&ஆம் தேதி, அரசு ஊழியர்களுக்கு தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டம் செயல்படுத்தப்படும் என அறிவித்தது.
தமிழக அரசின் அறிவிப்பு வெளியான சில நிமிடங்களிலேயே, திமுக அரசு அறிவித்துள்ள ஓய்வூதியத் திட்டம் மோசடியானது என்பதையும், அரசு ஊழியர்களின் வேலைநிறுத்தத்தை தவிர்ப்பதற்காகவே இந்த நாடகத்தை திமுக அரசு நடத்துவதையும் ஆதாரங்களுடன் அம்பலப்படுத்தினேன். ஆனால், ஆட்சியாளர்களோ, ஒவ்வொரு அரசு ஊழியர் அமைப்பிலும் உள்ள திமுக ஆதரவு நிர்வாகிகள் மூலம் சங்க நிர்வாகிகளை கோட்டைக்கு அழைத்துச் சென்று முதலமைச்சருக்கு நன்றி தெரிவிக்கச் செய்ததுடன், எந்தவித ஆலோசனையும் நடத்தாமல் 6&ஆம் தேதி முதல் நடைபெறவிருந்த வேலைநிறுத்தப் போராட்டத்தை கைவிடுவதாகவும் அறிவிக்கச் செய்தனர். அரசு ஊழியர்களை ஏமாற்றுவதற்கான இந்த மோசடி நாடகத்தில் திமுக அரசுக்கு தற்காலிக வெற்றி கிடைத்தது.
ஆனாலும், தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டம் ஒரு மோசடி என்பதை அது அறிவிக்கப்பட்ட மூன்றாவது நாளிலேயே அரசு ஊழியர் அமைப்புகள் புரிந்து கொள்ளத் தொடங்கி விட்டன. சென்னையில் நடைபெற்ற செயற்குழுக் கூட்டத்தில் இத்திட்டம் குறித்து விவாதித்த தமிழ்நாடு தலைமைச் செயலகச் சங்கம், தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்தை சவலைக் குழந்தை என்று குற்றஞ்சாட்டியுள்ளது. இந்தத் திட்டத்தை பழைய ஓய்வூதியத் திட்டத்திற்கு இணையாக வலுப்படுத்த வேண்டும் என்று அரசை வலியுறுத்தியுள்ள அச்சங்கம்,‘‘ஓய்வூதியத்திற்காக ஊதியத்தில் 10% தொகை பிடிப்பதை கைவிட வேண்டும்; இதுவரை பிடித்தம் செய்யப்பட்ட தொகையை பழைய ஓய்வூதியத் திட்டத்தில் இருப்பதைப் போல பொது வருங்கால வைப்பு நிதியாக (ஜி.பி.எஃப்) மாற்ற வேண்டும்; பொது வருங்கால வைப்பு நிதியில் முன்பணம் பெற அனுமதிக்க வேண்டும்; ஓய்வு பெறும் போது அந்த நிதியை வட்டியுடன் வழங்க வேண்டும்’’ என்பன உள்ளிட்ட அம்சங்களை தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்தில் சேர்க்க வேண்டும் என்று திமுக அரசை கேட்டுக் கொண்டுள்ளது.
அதேபோல், தமிழ்நாடு அரசு கல்லூரி ஆசிரியர் கழகமும் திமுக அரசின் ஓய்வூதியத் திட்டத்தை கடுமையாக விமர்சித்துள்ளது. புதிய ஓய்வூதியத் திட்டம் அறி\முகம் செய்யப்பட்ட பிறகு கடந்த 23 ஆண்டுகளில் ஒவ்வொரு பேராசிரியரிடமிருந்தும் ரூ. 1 கோடி வரை வசூலிக்கப்பட்டிருப்பதாகவும், அந்தத் தொகையை பங்களிப்பு என்ற பெயரில் அரசே வைத்துக் கொள்வதை அனுமதிக்க முடியாது என்று கூறியுள்ள பேராசிரியர்கள், அந்தத் தொகையை உடனடியாக திருப்பித் தர வேண்டும் என்று வலியுறுத்தியிருக்கிறார்கள். ஒருவேளை பிடித்தம் செய்யப்பட்ட தொகையை திரும்பத் தர அரசு மறுத்தால் மிகப்பெரிய அளவில் போராட்டம் நடத்தவும் தாங்கள் தயாராக இருப்பதாக திமுக அரசுக்கு தமிழ்நாடு அரசு கல்லூரி ஆசிரியர் கழகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
திமுக அரசு அறிமுகம் செய்துள்ள ஓய்வூதியத் திட்டம் குறித்து 3 நாள்களுக்கு முன் நான் என்னென்ன குற்றச்சாட்டுகளையெல்லாம் முன்வைத்தேனோ, அவை அனைத்தும் உண்மை என்பதை அரசு ஊழியர்கள் இப்போது உணரத் தொடங்கியுள்ளனர். திமுகவின் ஓய்வூதியத் திட்ட மோசடி பல்லிளிக்கத் தொடங்கி விட்டது.
இதையும் தாண்டி திமுக அரசின் ஓய்வூதியத் திட்டம் தொடர்பாக அதிர்ச்சியூட்டும் தகவல்கள் ஏராளமாக உள்ளன. ஓய்வூதியத் திட்டத்தை திமுக அரசு அறிவித்து விட்டாலும் கூட, அதற்கான அரசாணை இன்னும் பிறப்பிக்கப்படவில்லை. எனவே, தேர்தலுக்கு முன்பாக இந்தத் திட்டம் நடைமுறைக்கு வரப்போவதில்லை. இந்தத் தேர்தலில் அரசு ஊழியர்களின் வாக்குகளை ஏமாற்றி வாங்கி வெற்றி பெற்று விட வேண்டும் என்பதற்காகத் தான் இந்தத் திட்டத்தை திமுக அறிவித்துள்ளது. ஒருவேளை திமுக மீண்டும் வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்தாலும் கூட ஓய்வூதியத் திட்டத்தைச் செயல்படுத்த முன்வராது என்பது தான் உண்மை ஆகும்.
அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களை நான் அன்புடன் கேட்டுக்கொள்வது என்னவென்றால், ஓய்வூதியத் திட்டத்தை திமுக அரசு அறிவித்தாலும், அது செயல்பாட்டுக்கு வரப்போவதில்லை. எனவே, எவரும் திமுக அரசை நம்பி ஏமாந்து விடாதீர்கள். உங்களை ஏமாற்றிய திமுக அரசை வரும் தேர்தலில் வீழ்த்துங்கள். அதன் பிறகு அமையும் ஆட்சியில் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டம் நடைமுறைப்படுத்தப்படுவதை பாட்டாளி மக்கள் கட்சி உறுதி செய்யும் என்று உங்களுக்கு உறுதியளிக்கிறேன்.
சபரிமலையில் மகரஜோதி விழா-பக்தர்கள் வருகை இரு மடங்காக அதிகரித்து வருகிறது.இதனால் பம்பையில் பக்தர்கள் தடுத்து நிறுத்தப்பட்டனர். 10 மணி நேரம் வரை காத்து நின்ற பின்னரே 18 படிகளில் ஏற முடிகிறது
சபரிமலையில் நடந்துவரும் மகரஜோதி விழாவுக்கு பக்தர் கூட்டம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இன்று பம்பையில் பக்தர்கள் தடுத்து நிறுத்தப்பட்டனர். 10 மணி நேரம் வரை காத்து நின்ற பின்னரே 18 படிகளில் ஏற முடிகிறது. படியில் பக்தர்கள் ஏறுவதை வேகப்படுத்தி நிலைமையை சீராக்க போலீசார் முயற்சி செய்து வருகின்றனர்.
பிற கோயில்கள் போல சபரிமலை ஐயப்பன் கோயில் அனைத்து நாட்களும் திறக்கப்படாது. கேரள மாநிலத்தில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோயில் மிகவும் பிரசித்தி பெற்றவையாகும். இந்த கோயிலுக்குச் செல்ல மாலை அணிந்து கடுமையான விரதம் இருந்து மலையேறி பக்தர்கள் ஐயப்பன் சாமியை வழிபடுவார்கள். ஒவ்வொரு மாதத்தின் 5 நாட்களும் சபரிமலை ஐயப்பன் கோயிலின் நடை திறக்கப்படுவது வழக்கம். சபரிமலையில் ஐயப்பனுக்கு 41 நாட்கள் நடைபெற்ற சிறப்பு பூஜைகளுக்கு பின்னர் தங்க அங்கி அணிவிக்கப்பட்டு மண்டலபூஜை நடைபெறும்.
இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சரண கோஷத்துடன் தரிசனம் செய்வார்கள். திருவிதாங்கூர் தேவசம்போர்டு கட்டுப்பாட்டில் இயங்கி வரும் இந்த கோயிலுக்கு நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர்.
சபரிமலையில் நடப்பு மகர விளக்கு கால சீசன் கடந்த டிசம்பர் 30-ம் தேதி மாலை தொடங்கியது. 31-ம் தேதி முதல் நெய்யபிஷேகம் தொடங்கியது. அன்று முதல் தினமும் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது. இன்று காலை முதல் பக்தர்கள் கூட்டம் மிக அதிகமாக வரத் தொடங்கியது. பம்பையில் கூட்டம் நிரம்பி வழிந்தது. இதனால் பம்பையில் இருந்து பக்தர்கள் மலை ஏறுவதில் கட்டுப்பாடுகள் ஏற்படுத்தப்பட்டது. பக்தர்கள் பம்பை மணல் பரப்பில் தடுத்து நிறுத்தப்பட்டு கட்டம் கட்டமாக மலையேற அனுமதிக்கப்பட்டனர். அதன் பின்னர் நீலிமலை, அப்பாச்சி மேடு, மரக்கூட்டம் வழியாக சன்னிதானம் வரும் வழியில் மீண்டும் சரங்குத்தியில் சியூ காம்ப்ளக்ஸ் கட்டிடங்களில் தங்க வைக்கப்பட்ட பின்னர் சன்னிதானத்திற்கு அனுப்பப்பட்டனர். இதனால் ஒரு பக்தர் பம்பையில் இருந்து சன்னிதானம் வருவதற்கு 8 முதல் 10 மணி நேரம் வரை ஆவதாக தெரிவித்தனர். பக்தர்களுக்கு ஆங்காங்கே மூலிகை குடிநீர், பிஸ்கட் போன்றவை வழங்கப்பட்டது. இது ஆறுதலாக இருந்தாலும் குழந்தைகளுடன் நீண்ட நேர காத்திருப்பில் இருந்த பக்தர்கள் சிரமப்பட்டனர்.
இதற்கிடையில் 18 படிகளில் பக்தர்களை வேகமாக ஏற்றி நிலைமையை சீராக்கும் முயற்சியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர். ஒரு நிமிடத்திற்கு 4000 முதல் 4200 பக்தர்கள் வரை ஏற்றப்படுவதாக போலீசார் தெரிவிக்கின்றனர். எனினும் வயது முதியவர்கள், குழந்தைகள், பெண்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் வரும்போது இதில் தொய்வு ஏற்படுவதாக போலீசார் கூறுகின்றனர். பொதுவாக போலீசாரின் ஒருநாள் பணி மூன்று கட்டங்களாக பிரிக்கப்பட்டுள்ளது.
ஆனால் 18 படிகளில் மட்டும் நான்கு கட்டங்களாக பிரிக்கப்பட்டு போலீசார் பணியமர்த்தப்பட்டுள்ளனர். ஒரே நேரத்தில் 18 படிகளின் இரு பக்கத்திலும் 15 போலீசார் பணியமர்த்தப்பட்டுள்ளனர். 15 நிமிடம் இவர்கள் பணி நேரமாகும் மொத்தம் 6 முறை இவர்கள் படிகளில் பணியில் ஈடுபடுவார்கள். படிகளில் பக்தர்கள் வேகமாக ஏறினால் மட்டுமே வரிசையின் நீளத்தையும், காத்திருப்பு நேரத்தையும் குறைக்க முடியும் என்பதால் அதற்கான முயற்சியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.
இந்த ஆண்டு முதல் சபரிமலை அன்னதானத்தில் கேரளாவின் பாரம்பரிய உணவான சத்யா பரிமாறப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதன் படி கடந்த சில நாட்களாக ஐயப்ப பக்தர்களுக்கு சத்யா பரிமாறப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு மண்டல காலம் துவங்கியது முதல் ஜனவரி 01ம் தேதி வரை 8,74,500 பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டுள்ளதாக தேவசம் போர்டு புள்ளி விபரம் வெளியிட்டுள்ளது. இவர்களில் 3,01,309 பேருக்கு காலை உணவும், 3.40 லட்சம் பேருக்கு இரவு உணவும் வழங்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. ஒரு நாளைக்கு 23,000 பேருக்கு சத்யா வழங்கப்படுவதாக சொல்லப்படுகிறது.
கேரள சத்யாவில் பொன்னி சாதம், பருப்பு, பப்படம், அவியல், தோரன், சாம்பார், ரசம், பாயசம் போன்ற உணவுகளும் அடங்கும். ஒவ்வொரு நாளும3் பல்வேறு பாயச வகைகள் வழங்கப்படுகின்றன. பிற மாநிலங்களில் இருந்து வரும் ஐயப்ப பக்தர்களிடம் கேரளா சத்யாவிற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தைத்திருநாளையொட்டி முன் பதிவில்லாத பகல் நேர மெமு சிறப்பு இரயில்களை இயக்க வேண்டுமென பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தமிழகம் முழுவதும் வரும் ஜனவரி 15ஆம் தேதி தைப் பொங்கல் கொண்டாடப்பட உள்ளது. இந்நிலையில் கடந்த நவ.,14 இல் தைத் திருநாளுக்கான இரயில் முன் பதிவு தொடங்கியது. பதிவு துவங்கிய 10 நிமிடங்களில் அனைத்து முன் பதிவு டிக்கெட்டுகளும் விற்றுத் தீர்ந்தன. பலர் காத்திருப்போர் பட்டியலில் உள்ளனர். இதனால் ஏராளமான பயணிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். எனவே, முன் பதிவற்ற பகல் நேர மெமு இரயில்களை இயக்கிட வேண்டுமென ஏராளமானோர் இரயில்வே நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
தென் மாவட்டங்களைச் சேர்ந்த ஏராளமானோர் தங்களது பணி நிமித்தமாக சென்னை, கோவை, திருப்பூர் ஆகிய பகுதிகளில் வசித்து வருகின்றனர். இவர்கள் அனைவரும், பொங்கல் திருநாளை தங்களது சொந்த ஊரில் குடும்பத்துடன் கொண்டாடுவதை வழக்கமாக கொண்டுள்ளனர். மேலும், தென் மாவட்டங்களில் மதுரை, சிவகங்களை உள்ளிட்ட பல்வேறு ஊர்களில் தைப் பொங்கலை முன்னிட்டு தமிழர்களின் பாரம்பரிய வீர விளையாட்டுக்களான ஜல்லிக்கட்டு, மஞ்சுவிரட்டு ஆகியவை நடைபெறுவது வழக்கம். இதனைக் கண்டு களிக்கவும் ஏராளமான பொது மக்கள் ஆர்வத்துடன் ஆண்டுதோறும் சென்று வருகின்றனர்.
கடந்த ஆண்டு, தீபாவளி பண்டிகை மற்றும் தைத்திருநாளையொட்டி சென்னை-மதுரை, சென்னை-திருநெல்வேலி ஆகிய ஊர்களுக்கு பகல் நேர சிறப்பு மெமு ரயில்களை இரயில்வே நிர்வாகம் இயக்கியது. ஆகவே, சென்னை -செங்கோட்டை சென்னை-தூத்துக்குடி, சென்னை-கோவை, கோவை-தூத்துக்குடி, திருநெல்வேலி, நாகர்கோவில் ஆகிய பகுதிகளுக்கு மெமு சிறப்பு இரயில்களை இயக்க வேண்டுமென பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். எனவே, இரயில்வே நிர்வாகமானது, ஜனவரி 10 ஆம் தேதி முதல் 18 ஆம் தேதி வரை சிறப்பு இரயில்களை இயக்குவதற்கான முன் அறிவிப்புகளை வெளியிட வேண்டுமென பயணிகள் மிகுந்த எதிர்ப்பார்ப்பில் உள்ளனர்.