டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.
2026 மக்கள் தொகைக் கணக்கெடுப்பு வந்தால், தெற்கின் நிலைமை இன்னும் மோசமாக இருக்கும்; குடும்பக் கட்டுப்பாடு விஷயங்களில் ஒழுக்கமாக இருப்பதற்காக அது மேலும் தண்டிக்கப்படும்.
இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி
கற்சிலையாக மாற்றப்பட்ட லோபமுத்ரா, தனது கணவரின் வருகைக்காகக் காத்திருக்கிறது. விந்திய மலை தலைவணங்கி, அதன் குருவான அகஸ்திய முனிவரின் வருகைக்காகக் காத்திருக்கிறது.
டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.
2026 மக்கள் தொகைக் கணக்கெடுப்பு வந்தால், தெற்கின் நிலைமை இன்னும் மோசமாக இருக்கும்; குடும்பக் கட்டுப்பாடு விஷயங்களில் ஒழுக்கமாக இருப்பதற்காக அது மேலும் தண்டிக்கப்படும்.
இதைத்தான் மத்திய அரசு தடுக்க நினைக்கிறது. பிரதமர் மோடி நாடாளுமன்ற உறுப்பினர்கள் எண்ணிக்கையை 850 ஆகவும் அதேபோல் மாநிலங்களின் பிரதிநிதித்துவத்தை சராசரியாக 50 சதவீதம் அதிகரிக்கும் செய்யும் திட்டத்தை முன் வைத்துள்ளார்.
பரிசோதனை மட்டுமே செய்து கொண்டார் என்றால் 'ஆஞ்சியோகிராம் செய்து கொண்டேன்' என்றும் அடைப்பை நீக்கும் சிகிச்சை செய்து கொண்டார் என்றால் 'ஆஞ்சியோபிளாஸ்டி செய்து கொண்டேன்' என்றும்
டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.
2026 மக்கள் தொகைக் கணக்கெடுப்பு வந்தால், தெற்கின் நிலைமை இன்னும் மோசமாக இருக்கும்; குடும்பக் கட்டுப்பாடு விஷயங்களில் ஒழுக்கமாக இருப்பதற்காக அது மேலும் தண்டிக்கப்படும்.
இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி
கற்சிலையாக மாற்றப்பட்ட லோபமுத்ரா, தனது கணவரின் வருகைக்காகக் காத்திருக்கிறது. விந்திய மலை தலைவணங்கி, அதன் குருவான அகஸ்திய முனிவரின் வருகைக்காகக் காத்திருக்கிறது.
டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.
2026 மக்கள் தொகைக் கணக்கெடுப்பு வந்தால், தெற்கின் நிலைமை இன்னும் மோசமாக இருக்கும்; குடும்பக் கட்டுப்பாடு விஷயங்களில் ஒழுக்கமாக இருப்பதற்காக அது மேலும் தண்டிக்கப்படும்.
இதைத்தான் மத்திய அரசு தடுக்க நினைக்கிறது. பிரதமர் மோடி நாடாளுமன்ற உறுப்பினர்கள் எண்ணிக்கையை 850 ஆகவும் அதேபோல் மாநிலங்களின் பிரதிநிதித்துவத்தை சராசரியாக 50 சதவீதம் அதிகரிக்கும் செய்யும் திட்டத்தை முன் வைத்துள்ளார்.
பரிசோதனை மட்டுமே செய்து கொண்டார் என்றால் 'ஆஞ்சியோகிராம் செய்து கொண்டேன்' என்றும் அடைப்பை நீக்கும் சிகிச்சை செய்து கொண்டார் என்றால் 'ஆஞ்சியோபிளாஸ்டி செய்து கொண்டேன்' என்றும்
வாசுதேவநல்லூரில் நம்ம ஊரு மோடி’ பொங்கல் விழா இன்று கோலாகலமாக நடைபெற்றது.திரளான பெண்கள் பொங்கல் இட்டனர்.
தென்காசி மாவட்ட பாஜக சாா்பில் 1,008 பானைகளில் பொங்கலிடும் விழா வாசுதேவநல்லூரில் ஜன. 13ஆம் தேதி நடைபெற்றது.
தென்காசி மாவட்ட பாஜக சாா்பில் 1,008 பானைகளில் பொங்கலிடும் விழா வாசுதேவநல்லூரில் ஜன. 13ஆம் தேதி நடைபெற்றது.
தென்காசி மாவட்ட பாஜக சாா்பில் வாசுதேவநல்லூா் பழைய பேருந்து நிலையம் அருகே காலை 9 மணிக்கு ‘நம்ம ஊரு மோடி பொங்கல்’ திருவிழா 1,008 பானைகளில் பொங்கலிட்டு கொண்டாடப்பட்டது
இவ்விழாவுக்கு ஆனந்த் அய்யாசாமி தலைமை வகித்தார்.பாஜக மாநிலத் தலைவா் நயினாா்நாகேந்திரன் எம்எல்ஏ,ஏற்பாட்டில் முன்னாள் மாநிலத் தலைவா் அண்ணாமலை பொங்கல் விழாவை தொடங்கிவைத்தார்.
இதில், தென்காசி மாவட்டத்தைச் சோ்ந்த பாஜகவினா் மற்றும் கூட்டணி கட்சியினா் திரளாக கலந்து கொண்டனர்.
விழாவில் அண்ணாமலை பேசியதாவது இன்றைய தினம் இந்த தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூரில் தமிழக பாஜக தென்காசி மாவட்ட தலைவர் திரு. ஆனந்தன் அய்யாசாமி அவர்களின் ஏற்பாட்டில் நடைபெற்ற “நம்ம ஊரு மோடி பொங்கல்” பெருவிழாவில், தென்னிந்திய பார்வர்டு பிளாக் கட்சியின் நிறுவன தலைவர் KC திருமாறன் அவர்கள், மரியாதைக்குரிய அய்யா ஸ்ரீகுரு சிவச்சந்திரன் சுவாமிகள் அவர்கள், தமிழக பாஜக மாவட்ட நிர்வாகிகள், சகோதர சகோதரிகளுடன் இணைந்து பங்கேற்றதில் பெருமகிழ்ச்சி அடைந்தேன்
தென்காசி மக்களின் பல ஆண்டுகால கோரிக்கையான செண்பகவல்லி அணையை சீரமைப்பது உள்ளிட்ட தென்காசி மக்களுக்கு கொடுத்த எந்த வாக்குறுதியையும் நிறைவேற்றாமல் வஞ்சித்து வருகிறது திமுக அரசு. அதே சமயம், புளியங்குடி எலுமிச்சைக்கு புவிசார் குறியீடு வழங்கி அங்கீகாரம் வழங்கியது மத்திய பாஜக அரசு.
தென்காசியில் கனிமவளங்களை கொள்ளையடித்து கேரளாவிற்கு கடத்துவது அதிகரித்து வருகிறது. அதை தடுக்க திமுக அரசால் முடியவில்லை என்று மனமுவந்து திமுக நிர்வாகியே தனது கட்சி பதவியை ராஜினாமா செய்யும் அளவிற்கு நிர்வாக தோல்வி அடைந்திருக்கிறார் முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள். தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்படும்போது இந்நிலையை நாம் ஒன்றிணைந்து மாற்றி காட்டுவோம். அதற்கு வரவுள்ள தேர்தலில் தேசியவாத சிந்தனை கொண்ட தென்காசி மண்ணை சார்ந்த ஒருவரை நாம் சட்டமன்றத்திற்கு அனுப்ப வேண்டும்.
சூரியனையும், பஞ்சபூதங்களையும் முன்னிறுத்தி நடத்தப்படும் பொங்கல் பெருவிழாவில் எல்லாம் வல்ல இறைவனின் அருளோடு அனைத்து உயிர்களுக்கும் நலமும், வளமும் கிடைத்திட மனமார்ந்த நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.
மகாபாரதத்தை வியாசர் சொல்லச் சொல்ல விநாயகர் எழுதினார். ஆனால் மகாபாரதக்கதை கதை சொல்லிகளால் வளர்ந்தது. இதனை முதன் முதலில் வைசம்பாயனர் ஜனமேஜயனுக்குச் சொன்னார். இந்த வைசம்பாயனர் வியாசரின் சீடர் ஆவார். இவர் கதை சொன்ன ஜனமேஜயனோ பரீக்ஷித்தின் மகன். பரிக்ஷித் அபிமன்யுவின் மகன்; அர்ச்சுனனின் பேரன். இப்படி அனைவரும் மகாபாரதத்தோடு நேரடியாகத் தொடர்புடையவர்கள்.
பரிக்ஷித் ஒருநாள் வேட்டைக்குச் சென்றபோது தன் படையினரிடமிருந்து வெகுதொலைவு சென்றுவிட்டான். அங்கிருந்து திரும்பிச்செல்ல வழி தெரியவில்லை. அப்போது அங்கே தவம் செய்துகொண்டிருந்த ஒரு முனிவரிடம் திரும்பிச் செல்ல வழி கேட்டான். அவர் தவத்தில் இருந்த்ததால் பதில் தரவில்லை. இதனால் கோபமுற்ற பரிக்ஷித் ஒரு செத்த பாம்பை அந்த முனிவரின் கழுத்தில் பொட்டுவிட்டுச் சென்றான்.
சிறிதுநேரம் கழித்து அங்கே வந்த முனிவரின் மகன் ஞானதிருஷ்டியால் நடந்ததி அறிந்து, இன்றிலிருந்து ஏழாம் நாளில் பரிக்ஷித் தக்ஷகன் என்ற நாகத்தால் கடிபட்டு இறந்துபோவான் எனச் சாபமிட்டார். அச்சாபத்தின்படி பரிக்ஷித் இறந்தார்.
அவரது மகனான ஜனமேஜயன் தக்ஷ்கனையும் நாகங்களையும் பழிவாங்க ஜனமேஜயன் சர்ப்ப யாகம் என்ற யாகத்தைத் தொடங்கினார். அப்போது அஸ்தீகர் என்ற முனிவர் யாகத்தைத் தடுத்து நிறுத்தினார். இதனை நினைவுபடுத்தும் ஸ்லோகம் ஒன்றினை நாம் சந்தியாவந்தனம் செய்யும்போது தினமும் மூன்று முறை சொல்லுகிறோம்.
மகாபாரதத்தின் தொடக்கத்தில் நஹுஷன் என்ற அரசர் ஒருவரின் கதை வருகிறது. இவர் தான் செய்த யாக பலன்களின் விளைவாக இந்திரன் ஆகிறார். ஆனால் இந்திராணியைப் பார்க்கச் செல்லும் அவசரத்தில், தன் பல்லாக்கைத் தூக்கிச் செல்லும் முனிவர்களை வேகமாகச் செல்லுங்கள் என்று கூற ‘சர்ப்ப, சர்ப்ப’ என விரட்டுகிறார். இதனால் கோபமடைந்த முனிவர் ஒருவர் அவரை சர்ப்பமாக சாபமிடுகிறார்.
அர்ச்சுனன் காண்டவ வனத்தை எரிக்கும்போது அதில் இருந்த தக்ஷகனுடைய குடும்பமும் இறந்துபோகிறது. அதில் தப்பிப் பிழைத்த தக்ஷகனின் மகன் அஸ்வசேனன் கர்ணனிடத்தில் நாகாஸ்திரமாக அடைக்கலம் புகுந்து அர்ச்சுனனைக் கொல்ல ஏவப்படுகின்றான்.
ஜனமேஜயனின் ஆலோசகர்கள் ராஜாவிடம் அவரது தந்தையின் மரணத்திற்கான சூழ்நிலைகளைப் பற்றிச் சொல்லவில்லை. உத்தங்கன் சொன்னான், அவன் ஜனமேஜயனின் அரசவைக்குச் சென்று, தன் தந்தையான பரீக்ஷித்தின் மரணத்திற்குக் காரணமான தக்ஷகனைப் பழிவாங்குவதற்குப் பதிலாக அற்பமான காரியங்களில் நேரத்தை வீணடித்ததற்காக ராஜாவைத் திட்டினான்.
உத்தங்கர் யார், ஜனமேஜயனை ஏன் தூண்டினார்?
உத்தங்கர் அயோத-தௌமிய முனிவரின் சீடர்களில் ஒருவர். அயோத-தௌமியரின் மற்றொரு சீடரான வேதர் ஒரு யாகத்தில் ஈடுபடுவதற்காக வெளியேற வேண்டியிருந்தபோது, உத்தங்கர் தனது ஆசானின் வீட்டில் தங்கி சேவை செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டார். பின்னர் அவர் தனது ஆசானின் மனைவிக்கு பரிசாக தனது ராணியின் காதணிகளைப் பெறுவதற்காக மன்னர் பௌசியரிடம் சென்றார். அவற்றைப் பெற்ற பிறகு, உத்தங்கர் வீடு திரும்பியதும், அந்தக் காதணிகளை தக்ஷகன் திருடிச் சென்றுவிட்டார். சுருக்கமாகச் சொன்னால், உத்தங்கர் இந்தக் காதணிகளை மீட்டு, தனது ஆசானின் மனைவிக்கு பரிசளித்தார், ஆனால் தக்ஷகரின் மீதான அவரது வெறுப்பு நீடித்தது. பழிவாங்குவதற்காக, உத்தங்கர் ஜனமேஜயனிடம் சென்றார்.
அஸ்தீகர் யார்?
இந்த சர்ப்ப யாகத்தை நிறுத்திய அஸ்தீகர் யார்? அவரைப் பற்றி நாம் ருருவுக்கு அவரது தந்தை பிரமதி சொன்ன கதையின் மூலம் அறிந்து கொள்கிறோம். ஜனமேஜயனின் பாம்பு யாகத்தில் அஸ்திகர் என்ற பிராமணரால் பாம்புகள் காப்பாற்றப்பட்ட கதையை ருரு ஏன் பிரமதியிடம் கேட்டார்? ஏனெனில் சஹஸ்ரபாதன் என்ற பிராமணன் துந்துபாவாக (விஷமற்ற பாம்பாக) மாற சபிக்கப்பட்டான்.
பிராமணரான சஹஸ்ரபாதன் ஏன் பாம்பாக மாறும்படி சபிக்கப்பட்டான் தெரியுமா? இளம் சஹஸ்ரபாதன் ஒரு காலத்தில் தனது பிராமண நண்பன் சுகாமாவை புல் கத்திகளால் ஆன பாம்பைக் கொண்டு பயமுறுத்தி ஒரு குறும்பு செய்தான். பயந்துபோன ககாமா சஹஸ்ரபாதனை பாம்பாக மாறவும், ருரு என்பவரால் மட்டுமே சாபத்திலிருந்து விடுவிக்கப்படவும் சபித்தான்.
பின்னர் ருருவால் சாபவிமோசனம் பெற்ற சஹரஸ்ரபாதன் ஜனமேஜயன் செய்த சர்ப்ப யாக எப்படி அஸ்தீகரால் நிறுத்தப்பட்டது என்ற கதையை ருருவிற்குச் சொன்னான்.
பீமன் சிறுவயதினனாக இருக்கும்போது துரியோதனனால் விஷம் கலந்த உணவு கொடுக்கப்பட்டு கங்கையில் தூக்கி எறியப்படுகிறான். அவனை நாகர்கள் தூக்கிச் சென்று காப்பாற்றுகிறார்கள். அவனுக்கு அமிர்தத்தைக் கொடுத்து அவன் மேலும் பலமுடையவனாக மாற்றுகிறார்கள்.
அர்ச்சுனன் தனது தீர்த்த யாத்திரையின் போது நாக லோகத்திற்குச் சென்று அங்கு உலூபி என்ற பெண்ணை மணக்கிறான். அவர்களுக்கு அரவான் என்ற மகன் பிறக்கிறான்.
இவ்வாறு பாம்புகள் முடிவில்லா காவியமான மகாபாரதத்தில் பல இடங்களில் தொடர்புடையதாக இருக்கின்றன.
பிரதமர் நரேந்திர மோடி குஜராத் மாநிலத்திற்கு 3 நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அப்போது புகழ் பெற்ற சோமநாத் கோவிலுக்குச் சென்றார். இந்தக் கோவில் முதல் முறையாக தாக்கப்பட்டு 1000 ஆண்டுக்குப் பிறகும் நிலைத்து நிற்பதை கொண்டாடும் வகையில் சோமநாத் சுயமரியாதை திருவிழா நடத்தப்பட்டது. இதன் நிறைவு விழாவின் சிறப்பு பூஜையில் பிரதமர் மோடி பங்கேற்றார்.
கோவில் தாக்கப்பட்டபோது அதை எதிர்த்து உயிர்த்தியாகம் செய்தவர்களை நினைவுகூரும் வகையில் சௌரியா யாத்திரையிலும் பங்கேற்றார். இதில் 108 குதிரைகள் ஊர்வலத்தை மேளம் அடித்து மோடி தொடங்கி வைத்தார். அதன்பின், பிரதமர் மோடி பேசியபோது குறிப்பிட்டதாவது:
நண்பர்களே, சோமநாத் சுயமரியாதைத் திருநாள், வரலாற்றின் சுயமரியாதைக் கொண்டாட்டம் என்பது ஒருபக்கம். இது கடந்த காலப் பயணத்தின் எதிர்காலத்திற்காக, உயிர்ப்புடையதாக வைத்திருக்கும் ஊடகமும் கூட. நாம் இந்தச் சந்தர்ப்பத்தை, நமது இருப்பினை, நமது அடையாளத்தை, வலுவுள்ளதாக்கப் பயன்படுத்த வேண்டும்.
நீங்கள் கவனித்திருக்கலாம், எந்த ஒரு தேசத்திடத்திலே, சில நூறு ஆண்டுக்காலப் பாரம்பரியம் இருந்தாலும் கூட, அந்த தேசம், அதனைத் தனது அடையாளமாக உலகின் முன்பாக காட்சிப்படுத்துகிறது. ஆனால் பாரதத்திடமோ, சோமநாதரைப் போன்ற ஆயிரமாயிரம் ஆண்டுப் பழமையான இடங்கள் இருக்கின்றன. இந்த இடம், நமது வல்லமை, நம்முடைய எதிர்ப்பு, மற்றும் பாரம்பரியத்தின் அடையாளமாக இருக்கிறது.
ஆனால் துரதிர்ஷ்டவசமாக….. விடுதலைக்குப் பிறகு, அடிமைத்தன மனோபாவம் உடைய மனிதர்கள், அதை ஒழித்துக் கட்டுவதில் குறியாய் இருந்தார்கள். அந்த வரலாற்றை மறக்கடிக்க முழுவீச்சில் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. நாம் நன்கறிவோம், சோமநாதரின் பாதுகாப்பிற்காக, தேசம் எப்படிப்பட்ட உயிர்த்தியாகங்கள் எல்லாம் செய்தது என்று.
ஜாலோரின் கன்ஹாத்தேவன், போன்ற ஆட்சியாளர்களின் முயற்சிகள், வீர் ஹமீர்ஜி கோஹிலுடைய பராக்கிரமம், வேகடாஜி பீல்லுடைய வீரம், இப்படி எத்தனையோ நாயகர்களின் வரலாறு, சோமநாதரின் ஆலயத்தோடு இணைந்திருக்கிறது. ஆனால் துரதிர்ஷ்டவசமாக, இவர்களுக்கு அந்த அளவுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டதேயில்லை.
நம்மீது தாக்குதல் தொடுக்கப்பட்ட வரலாற்றினைக்கூட, சில வரலாற்றாசிரியர்களும் தலைவர்களும், இருட்டடிப்பு செய்ய முயற்சி செய்தார்கள். மதவெறி என்ற மனோபாவத்தை வெறும், சாதாரணமான கொள்ளை என்றுசொல்லி, மூடிமறைக்க புத்தகங்கள் எழுதப்பட்டன. சோமநாதர் ஆலயம் ஒருமுறை அல்ல, பலப்பல முறைகள் தகர்க்கப்பட்டது.
ஒருவேளை சோமநாதரின் மீது, தாக்குதல், கொள்ளையடிக்க மட்டுமே நடத்தப்பட்டது என்று சொன்னால், 1000 ஆண்டுகள் முன்பாக, முதல் பெரிய கொள்ளைக்குப் பிறகு, நின்று போயிருக்கும். ஆனால் அப்படி நடக்கவில்லையே!! சோமநாத்தின் பவித்திரமான விக்கிரகம் தகர்க்கப்பட்டது. மறுபடிமறுபடி ஆலயத்தின் அமைப்பை மாற்றும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.
ஆனால் நமக்கு என்ன கற்பிக்கப்பட்டது? சோமநாத் ஆலயம் கொள்ளையடிக்கவே தகர்க்கப்பட்டது என்று? வெறுப்பு, அடக்குமுறை, மற்றும் பயங்கரவாதத்தின் கொடூரமான வரலாறு, நம்மிடமிருந்து மறைக்கப்பட்டது. நண்பர்களே, நம்முடைய தர்மத்திலே, நாணயமான எந்த ஒரு மனிதனும், இப்படிப்பட்ட தீவிரவாத எண்ணத்தை ஆதரிக்கவே மாட்டார்கள்.
ஆனால் தாஜா செய்வதிலே வல்லவர்கள் எல்லாம் எப்போதுமே, இந்த பயங்கரவாத சிந்தனைக்கு முன்பாக மண்டியிட்டார்கள். நம் பாரதம் அடிமைத்தளைகளிலிருந்து விடுதலை அடைந்த போது, அப்போது சர்தார் வல்லப்பாய் படேல் அவர்கள் சோமநாதர் ஆலயத்தை மீளெழுப்ப உறுதி பூண்டார். அவரையுமே கூட, தடுக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டது.
1951ஆம் ஆண்டிலே, அப்போதிருந்த குடியரசுத் தலைவர், டாக்டர் ராஜேந்திர பிரசாத் இங்கே வருவதற்குகூட, ஆட்சேபணை தெரிவிக்கப்பட்டது. அந்த வேளையிலே, சௌராஷ்ட்டிரத்தின், மிகவும் பிரபலமான, நம்முடைய ஜாம்சாகேப் மகாராஜா திக்விஜய் சிங்ஜி, அவர் முன்னே வந்தார்.
நில ஆர்ஜிதம் தொடங்கி, பாதுகாப்பு முறைமை வரை, அவர் தேசத்தின் கௌரவத்தை அனைத்திற்கும் மேலாக கருதினார். அந்தக்காலத்திலே, சோமநாதர் ஆலயத்திற்காக ஜாம்சாப் அவர்கள், ஒரு இலட்சம் ரூபாய் தானமாக அளித்தார். மேலும் அவர், அறக்கட்டளையின் முதல் தலைவர் என்ற முறையிலே, பெரும் பொறுப்பினை நிறைவேற்றினார்.
சகோதர சகோதரிகளே, துரதிர்ஷ்டவசமாக இன்றும் கூட, நம்முடைய தேசத்திலே, அந்தச் சக்திகள் இருக்கின்றன, முழுமையாக இயங்கிக் கொண்டிருக்கின்றன, இவர்கள்தாம், சோமநாதர் ஆலயத்தை மீளெழுப்புவதை எதிர்ப்புத் தெரிவித்தார்கள். இன்று வாட்களுக்கு பதிலாக, இன்னபிற, ரகசியமான முறையிலே பாரதத்திற்கு எதிரான சூழ்ச்சிகள் பின்னப்படுகின்றன.
ஆகையினால் தான், நாம் மிகவும் எச்சரிக்கையோடு இருக்க வேண்டும். நமக்கு நாமே, சக்தி படைத்தவர்களாக ஆக வேண்டும். நாம் ஒன்றுபட்டு இருக்க வேண்டும். ஒற்றுமையாக இருக்க வேண்டும். நம்மைப் பிரிக்கும் சூழ்ச்சிகளில் ஈடுபடும், அந்தச் சக்திகளை நாம் தோற்கடித்தே ஆக வேண்டும்.
நண்பர்களே, நாம் நமது நம்பிக்கைகளோடு இணைந்து இருக்கும் போது, நம்முடைய வேர்களோடு இணைந்து இருக்கும் போது, முழு சுயமரியாதையோடு, நம்முடைய பாரம்பரியத்தைப் பாதுகாக்கும் போது, நம்முடைய பாரம்பரியம் தொடர்பாக விழிப்போடு இருக்கும் போது, நம்முடைய நாகரீகத்தின் வேர்களும் மேலும் பலமடைகின்றன.
ஆகையினால் அந்த வகையிலே, கடந்த ஓராயிரம் ஆண்டுக்காலப் பயணம், நமக்கெல்லாம், அடுத்த ஆயிரம் ஆண்டுகளுக்கான பயணத்தை மேற்கொள்ளும் உத்வேகத்தை அளிக்கிறது.
மதுரை, உசிலம்பட்டி அருகே பாஜக பிரச்சாரப் பிரிவு சார்பில் பொதுமக்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு- 100 நாள் வேலை திட்டத்தை 125 நாள் வேலை திட்டமாக அறிவித்த பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக பொங்கல் வைத்து நன்றி தெரிவித்தனர்.
சூரிய பகவானுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் தமிழகத்தில் கொண்டாடப்படும் தமிழர்களின் திருநாளான தை திருநாள் வரும் 15 ஆம் தேதி கொண்டாடப் படுகின்றது. இந்தச் சூழலில் பல்வேறு இடங்களில் அரசியல் கட்சியினர், அரசு அலுவலகங்கள், பள்ளி,கல்லூரிகளில் பொங்கல் வைத்து கொண்டாடப்பட்டு வருகின்றது.
இந்நிலையில், மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகே பெருமாள்கோவில்பட்டியில் பாஜக பிரச்சார பிரிவு சார்பில் தை திருநாளை முன்னிட்டு பொதுமக்களுக்கு அரிசி,சர்க்கரை, நெய், ஏலக்காய், முந்திரி, கரும்பு உள்ளிட்டவைகள் அடங்கிய பொங்கல் பரிசு தொகுப்பினை பாஜக மாவட்ட தலைவர் சிவலிங்கம் தலைமையில் கட்சி நிர்வாகிகள் வழங்கினர்.
தொடர்ந்து, பெருமாள்கோவில்பட்டி ஊரணியில் 100 நாள் வேலை திட்டத்தை 125 நாள் வேலை திட்டமாக அறிவித்த பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக பொங்கல் வைத்து பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்தனர்.
மகர விளக்கு பூஜை- சபரிமலையில் ஜன 14ல் மகர சங்கிரம பூஜை பகல் 3.8மணிக்குநடைபெறும்.பல்வேறு கட்டுப்பாடுகளை தேவசம்போர்டு அறிவித்துள்ளது.
சபரிமலை ஐயப்பன் கோயிலில் மகர விளக்கு பூஜைக்கான முன்னேற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. சபரிமலை கோயிலில் சிகர நிகழ்வான மகரவிளக்கு பூஜை மற்றும் மகரஜோதி தரிசனம் வரும் ஜன 14 ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்த நிலையில், பக்தர்களின் பாதுகாப்பிற்கு, திருவிதாங்கூர் தேவஸ்வம் போர்டு சிறப்பு ஏற்பாடுகளை செய்து வருகிறது.
மருத்துவ வசதிகள், தற்காலிக உணவகங்கள், போக்குவரத்து வசதிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. கூட்ட நெரிசலை கட்டுப்படுத்த, ஆன்லைன் முன்பதிவு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. எருமேலி, நிலக்கல் ஆகிய இடங்களில் இருந்து பம்பாவிற்கு செல்வோருக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. மேலும், வனப்பகுதிகளில் சமைப்பதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு பணிக்காக, மத்திய பாதுகாப்பு படையுடன் கூடுதல் காவலர்கள் குவிக்கப்பட்டுள்ளனர். தேசிய பேரிடர் மீட்புக் குழுவினரும் தயார் நிலையில் உள்ளனர்.
சபரிமலையில் 14-ந்தேதி மகர சங்கிரம பூஜை – சன்னிதானத்தில் நிரம்பி வழியும் பக்தர்கள் கூட்டம்!
மகர விளக்கையொட்டி சபரிமலை அய்யப்பன் கோவில் நடை கடந்த 30-ந் தேதி திறக்கப்பட்டது. 31-ம் தேதி முதல் வழக்கமான பூஜை வழிபாடுகள் நடந்து வருகிறது. உடனடி தரிசன முன்பதிவில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள நிலையிலும் தற்போது, தினசரி 1 லட்சத்துக்கும் அதிகமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகிறார்கள்.
இதன் காரணமாக, பம்பை முதல் சன்னிதானம் வரையில்,5 கி.மீ. தூரத்துக்கு பக்தர்கள் 10 மணி முதல் 12 மணி நேரம் வரை காத்திருந்து தரிசனம் செய்து வருகிறார்கள்.
மகர விளக்கு நெருங்குவதை முன்னிட்டு, ஜோதியை காண, சாமி தரிசனத்துக்கு வரும் அய்யப்ப பக்தர்கள் இப்போதிருந்தே சபரிமலையில் ஆங்காங்கே முகாமிட்டு தங்கி வருகின்றனர். இதனால் சன்னிதானம் முழுவதும் பக்தர்கள் கூட்டம் 24 மணி நேரமும் நிரம்பி வழிகிறது.
இந்த நிலையில், மகர விளக்கையொட்டி 14-ந் தேதி பிற்பகல் 3.08 மணிக்கு மகர சங்கிரம பூஜை நடைபெறும். சூரியன் தனுசு ராசியில் இருந்து மகர ராசிக்கு மாறும் போது மகர சங்கிரம பூஜை வழிபாடும், அபிஷேகமும் நடைபெறும். அபிஷேகத்துக்கு, திருவனந்தபுரம் கவடியார் கொட்டாரத்தில் இருந்து கொண்டு வரப்படும் சிறப்பு நெய் மூலம் சிறப்பு அபிஷேகம் நடைபெறும். இந்த சிறப்பு பூஜை மற்றும் அபிஷேக வழிபாட்டை முன்னிட்டுஅன்றைய தினம் பிற்பகல் 2.50 மணிக்கு நடை திறக்கப்படும். இந்த ஆண்டு (2026) மகரவிளக்குக்காக சுவாமி ஐயப்பனுக்குப் படைக்கப்படும் ஆபரணங்களை எடுத்துச் செல்லும் ஊர்வலம், தனு 28 (ஜனவரி 12) அன்று மதியம் 1 மணிக்கு பந்தளம் வலிய கோய்க்கல் ஸ்ரீ தர்மசாஸ்தா கோயிலில் இருந்து தொடங்கும்.
ராஜபிரத்நிதி புனர்த்தம் நாளே நாராயண வர்மா தலைமையில் ஊர்வலம் நடைபெறும்.
மருதமண சிவன்குட்டி குருஸ்வாமி தலைமையிலான 26 பேர் கொண்ட ஊர்வலமும், 4 உதவியாளர்கள் கொண்ட 30 பேர் கொண்ட குழுவும் ஆபரணங்களை சபரிமலைக்கு கொண்டு வரும்.
பழங்கு வாகன சங்கத்தின் குருஸ்வாமி குருஸ்வாமி அஜயகுமார் தலைமையிலான 12 பேர் மற்றும் வாள் மற்றும் கேடயத்துடன் குருப் அனில் குமார் ஆகியோர் ஊர்வலத்தில் கலந்து கொள்வார்கள். ஊர்வலம் மூன்றாம் நாள் சபரிமலையை அடையும், அன்று மாலை 6:30 மணிக்கு ஆபரணங்களை வழங்கிய பிறகு தீபாராதனை நடைபெறும். ஜனவரி 18 ஆம் தேதி அரண்மனையில் களபாபிஷேகம் நடைபெறும், 19 ஆம் தேதி ராஜபிரதி திதியின் முன்னிலையில் குருதி நடைபெறும். 19 ஆம் தேதி இரவு வரை பக்தர்கள் தரிசனம் செய்வார்கள். ஜனவரி 20 ஆம் தேதி காலை 6 மணிக்கு கோயில் மூடப்பட்டு, ராஜபிரதிநிதி திருவாபரணத்துடன் படிகளில் இறங்கி திரும்பும். 21 ஆம் தேதி பெருநாடு ஐயப்பன் கோயிலில் திருவாபரணம் வைக்கப்பட்டு, மதியம் 1.30 மணிக்கு தரிசனம் தொடங்கி மதியம் 2 மணி வரை தொடரும். 22 ஆம் தேதி அரண்முலா அரண்மனையில் திருவாபரணம் வைக்கப்படும். 23 ஆம் தேதி காலை 8 மணிக்கு பந்தளத்தை அடையும் ஊர்வலக் குழுவிற்கு பிரமாண்ட வரவேற்பு அளிக்கப்படும். பந்தளத்தை அடையும் திருவாபரணம் நேராக அரண்மனை பாதுகாப்பு அறைக்கு கொண்டு செல்லப்படும்.
பந்தள மன்னர் சபரிமலையில் உள்ள ஸ்ரீ தர்மசாஸ்தா தங்கக் கடலில் மூழ்குவதற்காக அனுப்பிய புனித நகைகளை எடுத்துச் செல்லும் ஊர்வலம் பந்தளத்தில் உள்ள வலியகோய்க்கல் ஸ்ரீ தர்மசாஸ்தா கோவிலில் இருந்து இன்று தொடங்கி, 14 ஆம் தேதி மூன்று நாட்கள் கால்நடையாக சபரிமலையை அடைந்து, பழங்கால காட்டுப் பாதைகளைக் கடந்து, கரிமலை மற்றும் நீலிமலை வழியாக சபரிமலை செல்லும். அன்று மாலையில், ஐயப்பனுக்கு தங்க ஆபரணங்கள் அணிவிக்கப்பட்டு ராஜாவாக ஐயப்பன் காட்சி தர வானில் நட்சத்திரம் உதிக்க பொன்னம்பலமேட்டில் மகரவிளக்கு தீபஜோதி தெரியும்
இன்று புறப்பட்ட திருவாபரண ஊர்வலம் 12-ந் தேதி இரவு ஆயிரூர் புதியகாவு தேவி கோவிலிலும், 13-ந் தேதி லாகா வனத்துறை சத்திரத்திலும் தங்கும்.ஜன 14ல் சபரிமலை பொன்னம்பலமேட்டில் 3 முறை ஜோதி வடிவாய் ஐயப்பன் பக்தர்களுக்கு காட்சி அளிப்பார்.
சபரிமலை ஐயப்பன் கோவிலில் நடப்பாண்டின் மகரவிளக்கு பூஜை வருகிற 14-ந் தேதி நடக்கிறது. அன்றைய தினம் சாமி ஐயப்பனுக்கு பாரம்பரிய வழக்கப்படி திருவாபரணங்கள் அணிவிக்கப்பட்டு சிறப்பு தீபாராதனை நடைபெறும். அவ்வாறு அணிவிக்கப்படும் திருவாபரணங்கள் பந்தளம் அரண்மனையில் பாதுகாக்கப்பட்டு வருகிறது. மகரவிளக்கு பூஜையை முன்னிட்டு இந்த திருவாபரணங்கள் பந்தளம் ராஜ குடும்ப மூத்த பிரதிநிதி தலைமையில் ஊர்வலமாக சன்னிதானத்திற்கு எடுத்து செல்வது வழக்கம்.
அதன்படி இந்த ஆண்டு திருவாபரணங்கள் வருகிற 12-ந் தேதி பந்தளம் அரண்மனையில் இருந்து வலிய கோயிக்கல் சாஸ்தா கோவிலுக்கு எடுத்து செல்லப்படுகிறது. அன்றைய தினம் மதியம் சாஸ்தா கோவிலில் நடைபெறும் சிறப்பு பூஜைக்கு பிறகு திருவாபரணங்கள் 3 சந்தன பேழைகளில் சபரிமலை நோக்கி தலைச்சுமையாக ஊர்வலமாக புறப்படும். திருவாபரண ஊர்வலம் 12-ந் தேதி இரவு ஆயிரூர் புதியகாவு தேவி கோவிலிலும், 13-ந் தேதி லாகா வனத்துறை சத்திரத்திலும் தங்கும்
திருவாபரணங்கள் 14-ந் தேதி அட்டத்தோடு வழியாக மதியம் பம்பை கணபதி கோவில் வந்து சேரும். தொடர்ந்து மாலை 6 மணிக்கு சன்னிதானத்திற்கு கொண்டு வரப்படும் திருவாபரணங்களுக்கு தேவஸ்தான மந்திரி வாசவன், திருவிதாங்கூர் தேவஸ்தான தலைவர் மற்றும் உறுப்பினர்கள் வரவேற்பு அளிப்பார்கள்.
தொடர்ந்து 18-ம் படி வழியாக எடுத்து செல்லப்பட்டு ஐயப்ப சாமிக்கு அணிவித்து மாலை 6.30 மணிக்கு சிறப்பு தீபாராதனை நடைபெறும்.
அப்போது சபரிமலை பொன்னம்பலமேட்டில் 3 முறை ஜோதி வடிவாய் ஐயப்பன் பக்தர்களுக்கு காட்சி அளிப்பார். அப்போது பக்தர்கள் சரணகோஷம் முழங்க சாமி தரிசனம் செய்வார்கள். மகர விளக்கையொட்டி, சபரிமலை தரிசனத்திற்கு வந்த பக்தர்கள் மலையிலேயே ஆங்காங்கே முகாமிட்டு வருவதால் சபரிமலையில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது.
இந்தநிலையில் போலீசார் அனுமதித்துள்ள இடங்களை தவிர மற்ற இடங்களில் பக்தர்கள் கூடாரம் அமைத்து தங்க தடை விதிக்கப்பட்டு உள்ளது. மேலும் ஐயப்ப பக்தர்கள் கியாஸ் சிலிண்டர்களை பயன்படுத்தவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. மகர விளக்கையொட்டி கோவிலில் 19-ந் தேதி வரை பக்தர்கள் சாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள். 20-ந் தேதி காலை 6.30 மணிக்கு பந்தளம் ராஜ குடும்ப பிரதிநிதி தரிசனத்திற்கு பின்னர் மண்டல, மகர விளக்கு சீசன் மற்றும் தை மாத பூஜை வழிபாடுகளும் நிறைவுபெறும்.
அர்ஜுனனின் பத்து பெயர்களில் பல்குனன் என்ற பெயர் மிகவும் முக்கியம் வாய்ந்தது.இது அவனுடைய நட்சத்திரம். பூர்வ பல்குனி மற்றும் உத்தர பல்குனி என்று அழைக்கப்படும் பூரம் மற்றும் உத்தர நட்சத்திரங்கள் சிம்ம ராசி மற்றும் கன்யா ராசியில் உள்ளன. இவற்றுக்கு நேர் எதிரில் 180 டிகிரியில் உள்ள அவிட்ட நட்சத்திர அதிபதியான வசுவான பீஷ்மரை அர்ஜுனன் குறி பார்த்து அடித்தான். வசுக்கள் காக்கும் பசு அடையும் துன்பம் போல பீஷ்மர் துன்பம் அடைந்தார்! மாசி மாதம் என்றாலே பசுக்களுக்கு நோய் வரும் மாதம்.
நண்டைக் குறிக்கும் கடக ராசியில் உள்ள தாய் நண்டு குஞ்சு நண்டு பிறக்கும் போது தன் உயிரை விட்டு அடையும் துன்பம் போல பீஷ்மரும் உயிரை விடும் துன்பத்தை அடைந்தார். கடகம் மற்றும் மகர ராசி 180 டிகிரியில் நேர் எதிராக உள்ளன! இந்தப் பொருள் அனைத்தையும் உள்ளடக்கித் தான் மேலே கூறிய செய்யுளை வியாஸர் இயற்றினார். அதன் உண்மைப் பொருளை விநாயகர் தேர்ந்து பின் மேலே எழுதத் தொடங்கினார்.
பத்து நாட்கள் போர் மர்மம்
இத்துடன் இந்த செய்யுளின் ஆழ்ந்த பொருள் நின்று விடவில்லை. மஹாபாரதப் போரில் முதல் பத்து நாட்களுக்குத் தலைமை ஏற்று நடத்திய பீஷ்மர் ஒவ்வொரு நாளும் பத்தாயிரம் வீரர்களை அழிப்பேன் என்று வீர சபதம் செய்து அதன் படியே செய்தார் தியோ என்ற வசுவுக்கு மார்த்தாண்டன் என்ற இன்னொரு பெயரும் உண்டு. மார்த்தாண்டன் என்றால் சூரியன்.
தீபிகா என்ற ஜோதிட நூல், ‘சூர்யான் உச்சான்’ என்று தொடங்கி ‘நீசான் சுநீசான்’ என்று முடியும் நான்கு அடிகளில் சூரியனுக்கு பத்து நாட்கள் மட்டுமே அதிக வலிமை உண்டு என்று வலியுறுத்துகிறது. பத்தாயிரம் சூரிய வீரர்களான நாராயணி சேனாவுடன் பீஷ்மர் போரிட்டதை மஹாபாரதம் விளக்குகிறது ஒவ்வொரு நாளும் சூரிய அஸ்தமனத்தின் போது பத்தாயிரம் ராக்ஷஸர்கள் அழிகின்றனர் என்று ரிக் வேதம் (I-35.10) கூறுகிறது. பத்தாயிரம் கதிர்களுடன் காலை பவனி வரும் சூரியன் போல பீஷ்மர் ஓவ்வொரு நாளும் போரில் நாராயணி சேனாவுடன் புகுந்தார்.
சூரியன் வடக்கே நகரத் தொடங்கிய நாள் முதலாக ஒவ்வொரு நாளும் வலிமை பெறுகிறான். அதாவது நாள் பொழுது அதிகரிக்கிறது. இரவுப் பொழுது குறைகிறது. ஆறு மாதம் கழித்து அவன் தெற்கே செல்லும் போது அவன் வலிமை குறைகிறது. அதாவது நாள் பொழுது குறைகிறது.
இரவுப் பொழுது அதிகரிக்கிறது. பாரதப் போரில் தக்ஷணாயனத்தில் சூரியன் வலிமை குன்ற மார்த்தாண்டனான பீஷ்மர் வலி குன்றுகிறார். மகாபாரத யுத்த காலத்தில் சப்த ரிஷி மண்டலத்திற்கு சமீபத்தில் மக நட்சத்திரத்தின் அருகே வான ரேகை சென்றது. இந்த நட்சத்திரத் தொகுதிக்கு சிகண்டி மண்டலம் என்று பெயர்.
சிகண்டி என்றால் மயில் என்று பொருள்! பூரம் உத்தர நட்சத்திரங்களுக்கு முன்னே சித்ர சிகண்டி மண்டலம் வருகிறது. சிகண்டியைக் கண்ட பீஷ்மர் போர் புரிய மறுத்து போர் புரிவதை நிறுத்துகிறார்.சூரியன் மக நட்சத்திரத்தில் இணையும் போது அவிட்ட நட்சத்திரம் மேற்கே மறைகிறது! வானவியல் படி 180 டிகிரி நேர் எதிரே இருப்பதால் இந்த மறைவு ஏற்படுகிறது.
மாசி மாதம் பசுக்களுக்கு நோய் வரும் மாதம், தாய் நண்டு பிரசவிக்கும் போது இறந்து படும் வேளையில் அடையும் துயரம், மார்த்தாண்டனான பீஷ்மர் என்னும் வசு பல்குனனால் சிகண்டி மண்டலத்தை முன்னிட்டு அடிக்கப்படும் போது வீழ்ந்து பட்டான் என்ற அனைத்தையும் உள்ளடக்கி இந்த ஒரே ஒரு செய்யுளில் வியாஸர் விளக்கும் மகாபாரதப் போரின் ஒரு பெரும் பகுதியைப் போல இன்னொரு செய்யுள் உலக இலக்கியத்தில் எங்கேனும் உள்ளதா? எனக் கேட்டால், இல்லை என்பதே மறுமொழி!
அறிவியலும் புராணமும் இணையும் அற்புத நட்சத்திரங்களாக பல்குன நட்சத்திரமும் அவிட்ட நட்சத்திரமும் திகழும் அதிசயத்தைப் பார்க்கும் போது நட்சத்திர மர்மம் அவிழ்கிறது. புரியாத ஆழ்ந்த பொருளும் புரிகிறது, இல்லையா!
அமெரிக்க அதிரடி படையினரால் வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மதுரோ கைது செய்யப்பட்டு தூக்கி செல்லப்பட்ட நிகழ்வுடன் இந்த புத்தாண்டு துவங்கியது. டொனால்ட் டிரம்ப் ஆட்சியின் இந்த துணிச்சலான செயலால் உலகமெங்கும் திகைப்பும் அதிர்ச்சியும் ஏற்பட்டுள்ளது. இதையொட்டி உருவாகியுள்ள ‘டான்ட்ரோ டாக்டரின்_ என்ற புதிய சொல்லாடலை விமர்சகர்கள் போட்டி போட்டுக்கொண்டு தங்கள் வசதிக்கேற்ப விளக்கி கொண்டிருக்கிறார்கள்.
ஆச்சரியப்படத்தக்க வகையில் (வெனிசுலா தலைநகரான) கராகஸ் கடந்த சில நாட்களாக அமைதியாக இருக்க, மதுரோவின் ஆதரவாளர்கள் மட்டும் ஜனவரி 4ஆம் தேதி எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். மதுரோவின் ஆட்சியில் எங்கும் பரவி இருந்த ஆயுதமேந்திய தனியார் தீவிரவாத படையான கோலிக்டிவோ எதிர்க்கட்சி தலைவர்களின் வீடுகளையும், அமெரிக்க ஆதரவாளர்கள் என்று அவர்கள் சந்தேகப்படுபவர்களின் வீடுகளையும் தாக்கினார்கள்.
வெனிசூலாவில் டிரம்ப் ஆட்சியின் செயல் சர்வதேச சட்டங்களுக்கு எதிரானது. ஐநா சபை , சர்வதேச நீதிமன்றம் போன்ற பல பரிமாணங்களைக் கொண்ட உலக அமைப்புகளின் கையறு நிலையை இது மீண்டும் ஒரு முறை வெளிப்படுத்தி உள்ளது.
அமெரிக்க படையினரின் செயல் திரைப்பட சாகசம் போல் இருந்தாலும் இது போன்ற ஒருதலைப்பட்சமான செயல்களில் அமெரிக்கா ஈடுபடுவது புதிதல்ல. 1983 இல் அமெரிக்க சிறப்பு அதிரடி படையினர் கிரேனேடாவில் இருந்த கம்யூனிச ஆட்சியை அகற்ற அந்த நாட்டில் அதிரடியாக புகுந்தார்கள். அதன் பிறகு ஆறாண்டுகள் கழித்து பனாமா நாட்டில் இருந்த இடதுசாரி சர்வாதிகாரியான மேனுவல் நோரிக்காவை இப்படித்தான் கைது செய்தார்கள். ஜார்ஜ் புஷ் 2003 இல் ஈராக்கின் அதிபர் சதாம் உசேனையும் இப்படிதான் ஐநாவின் அனுமதி பெறாமல் பிடித்தார். அதேபோல்தான் டிரம்ப்பும் கடந்த ஆண்டு சிரியா, ஈரானை தாக்கிய போது ஐநாவின் சம்மதத்தை கேட்கவில்லை. 2011 இல் ஒசாமா பின் லேடனை பிடிக்கும் போதும் பாகிஸ்தானின் வான்பரப்பில் நுழைய அதன் அனுமதியை அமெரிக்கா கோரவில்லை. இது போன்ற ஒவ்வொரு நிகழ்வின்போதும் உலகில் சிலர் எதிர்ப்பு தெரிவிப்பதும் பலர் மகிழ்ச்சி தெரிவிப்பதும் நடந்துள்ளது.
இந்த சம்பவத்திலும் கூட நியாயமான கோபம் தொலைக்காட்சிகளில் வெளிப்பட்டாலும் லத்தின் அமெரிக்க மக்கள் சாலைகளில் இறங்கி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடவில்லை. பெருவாரியானவர்கள் அமைதியாகவே இருக்கிறார்கள். இயற்கை வளம் கொழிக்கும் இந்த பகுதியில் உருவாகி வரும் அதிகார சக்திகளின் போட்டியே மக்களின் இந்த கமுக்கமான எதிர்வினைக்கு காரணம். வன்முறை, போதைப் பொருள்கள், பாதுகாப்பின்மை இவற்றிற்கு எதிரான பொதுமக்களின் மனநிலையே மிதவாத அரசியல் கட்சிகளுக்கு ஆதரவாக திரண்டு வருகிறது.
கடந்த எண்பது ஆண்டுகளில் லத்தின் அமெரிக்கா பல்வேறு அலைகளை பார்த்து வருகிறது. 1959 இல் 32 வயதான புரட்சிகர மாணவர் தலைவரான பிடல் காஸ்ட்ரோ கியூபாவில் அதிகாரத்தை கைப்பற்றினார். அதன் மூலம் இடதுசாரி சர்வாதிகாரிகளின் அலை முதலில் கிளம்பியது. அதன் பிறகு பிரேசில், அர்ஜென்டினா, சிலி, உருகுவே, பொலிவியா, நிகரகுவா, கிரனெடா, எல் சால்வடார், பனாமா, பெரு, கெளதிமாலா என்று பல நாடுகள் அவர்களின் (இடதுசாரி சர்வாதிகாரத்தின்) கீழ் வந்தன. இது அமெரிக்க எதிர்ப்பு மனநிலையை எழுப்பியது. லத்தின் அமெரிக்கா தனது அலட்சியத்தால் பனிப்போர் போட்டியில் சிப்பாயாகி அடிபட்டது . பனிப்போர் பயத்தினால் 1980 , 90 களில் ரொனால்ட் ரீகனும் (மூத்த) ஜார்ஜ் புஷ்ஷும் கம்யூனிஸ எதிர்ப்பு தலைவர்களுக்கு ஊக்கம் அளித்தனர். அதனால் ஜனநாயக அலை வீச தொடங்கியது.
ஆனால் இந்த புதிய நூற்றாண்டில் இடது சாய்வு கொண்ட ஆதிக்கவாதிகளின் எழுச்சி அலை மீண்டும் கிளம்பியது. இது பிங்க் அலை என்று சொல்லப்பட்டது. வெனிசூலாவில் ஹ்யூகோ சாவேஸ் , பிரேசிலில் லூயிஸ் இனாசியோ லூலா டா சில்வா, அர்ஜென்டினாவில் நெஸ்டர் கிர்சினர், பொலிவியாவில் எவோ மொராலெஸ், ஈக்வடாரில் ராபாயெல் கொரெரா , உருகுவேயில் தபாரே வாஸ்குவேஸ் என சர்வாதிகாரிகள் உருவாகி , பல நாடுகளில் பிங்க் அலை பரவியது.
கடந்த இரண்டு தசாப்தங்களாக லத்தீன் அமெரிக்காவில் சட்டம் ஒழுங்கு சீர் கெட்டதால் போதை பொருள், ஆயுத கும்பல்களின் அபாயகரமான வளர்ச்சி ஏற்பட்டது. ஐநா அமைப்பின் மதிப்பீட்டின்படி உலகில் 3700 டன் கோகெயின் போதைப் பொருள் பயன்படுத்தப்படுகிறது. அதை தயாரிக்க பயன்படும் கச்சா பொருளான கோகா உலகில் பொலிவியா, பெரு, கொலம்பியா என்ற மூன்றே நாடுகளில் உற்பத்தியாகிறது.
ஒட்டுமொத்த லத்தின் அமெரிக்காவும் போதை பொருள் களமாகியுள்ளது. ஆயுத, போதை பொருள் வியாபாரத்தால் மாபியா தலைவர்களும் அரசியல் தலைவர்களும் செல்வந்தர்கள் ஆகியுள்ள நிலையில் சாதாரண மக்கள் வன்முறை, குற்ற செயல்களால் பாதிக்கப்பட்டனர்.
இப்போது, (இடதுசாரி சர்வாதிகாரத்திற்கு எதிரான) மிதவாத / பழமைவாத அரசியல் கட்சிகளும் அதன் தலைவர்களும் எழுச்சி பெற்று வருகிறார்கள். கடந்த ஆண்டு ஜனவரி மாதத்தில் மீண்டும் ஆட்சிக்கு வந்த டிரம்ப் இந்த பகுதியில் தன் கவனத்தை செலுத்தி வருகிறார். போதைப் பொருள் மாபியா மற்றும் சட்டவிரோத குடியேறிகளுக்கு எதிரான போரை துவங்கியுள்ளார். அர்ஜென்டினாவில் மிதவாத தலைவரான ஜேவியர் மிலே தலைமையிலான ஆட்சிக்கு இருபது மில்லியன் டாலர் உதவி வழங்கியுள்ளார். இது அந்த பகுதியில் பெருத்த ரீங்காரத்தை எழுப்பி உள்ளது.
ஈக்வடார் மிதவாத தலைவரை மீண்டும் ஜனாதிபதியாக தேர்ந்தெடுத்துள்ளது. பொலிவியாவில் கடந்த இரண்டு தசாப்தங்களாக இருந்த கம்யூனிஸ்ட் ஆட்சி முடிவுக்கு வந்துள்ளது. பிரேசில் , கொலம்பியா, கோஸ்டா ரிக்கா, பெரு நாடுகளிலும் மிதவாத தலைவர்கள், கட்சிகள் எழுச்சி பெற்று வருகின்றன.
லத்தீனோபாரோமெட்ரோ என்ற சிசிலியன் அமைப்பு நடத்திய ஆய்வு கடந்த இரண்டு தசாப்தங்களில் 18 நாடுகளில் வலதுசாரிகளின் ஆதரவு இதுவரை எட்டாத உச்ச நிலைக்கு வளர்ந்துள்ளதாக கூறுகிறது. அந்த ஆய்வின்படி லத்தின் அமெரிக்க பகுதியில் பொதுமக்கள் மதிப்பில் எல் சால்வடாரின் வலதுசாரி ஜனாதிபதியான நயீப் புக்கெலே முதலிடத்திலும் வெனிசுலா அதிபர் மதுரோ கடைசி இடத்திலும் உள்ளார்கள்.
சர்வதேச சட்டங்களின் பார்வையில் டிரம்ப் தவறிழைத்தவராக இருக்கலாம். ஆனால் கருத்தியல் மற்றும் புவியரசியலில் அவர் கை ஓங்கி இருப்பதாகவே தெரிகிறது.
கட்டுரையாளர் தில்லியில் உள்ள இந்தியா பவுண்டேசனின் தலைவர்
பகவத்கீதை பகுதி 12: மகாபாரதக் கதை வியாச பகவானின் வானவியல் அறிவு
— முனைவர் கு.வை.பாலசுப்பிரமணியன்
வேத வியாஸர் தான் இயற்றியுள்ள மஹாபாரதத்தில் நடக்கும் மாபெரும் போரை வானில் பார்த்துத் தான் எழுதினாரா? வியாஸரின் மஹாபாரதத்திற்கு பல அர்த்தங்கள் உண்டு என்று சொல்வதை நிரூபிக்கும் வகையில் அர்ஜுனனின் நட்சத்திரமும் பீஷ்மரின் நட்சத்திரமும் அமைந்துள்ளது எவ்வளவு அற்புதமான விஷயம்! நட்சத்திர அதிசயங்கள் வரிசையில் இந்த மர்மத்தைப் பார்க்கலாம்!
வியக்க வைக்கும் புதிர் சுலோகம்
மகாபாரதத்தில் ஒரு சுவாரசியமான சுலோகம் பீஷ்ம அர்ஜுன யுத்தத்தின் மர்மத்தையும் வானில் நடக்கும் மஹாபாரதப் பெரும் போரையும் விளக்குகிறது.
சிகண்டியை முன்னே வைத்து அர்ஜுனன் விடும் இந்த பாணங்கள் மாசி மாதத்தில் பசுக்கள் எப்படி துன்பம் அடைகின்றனவோ அது போல என்னைத் துன்பம் அடையச் செய்கின்றன என்பது இந்த ஸ்லோகத்தின் பொருள்.
இந்த சிலேடை செய்யுளின் இன்னொரு அர்த்தம் : சிகண்டியை முன்னே வைத்து அர்ஜுனன் விடும் இந்த பாணங்கள் தாய் நண்டு குஞ்சு நண்டை பிரசவிக்கும் போது, தன் மரணத்தால் அடையும் துன்பத்தைப் போல என்னைத் துன்பப்படுத்துகிறது என்பதாகும்.
எத்தனை அற்புதமான ஆழ்ந்த பொருளுடைய செய்யுளாக இது அமைந்துள்ளது! ‘மாக மாஸே கவாமிவ’ என்ற சொற்றொடருக்கு மாசி மாதத்தில் பசுக்கள் அடையும் துன்பம் போல எனப் பொருள் கொள்ளலாம். அதையே மாகமா என்றால் தாய் நண்டு என்றும் ஸேசுவா என்றால் குஞ்சு நண்டு என்று பிரித்தும் இன்னொரு பொருள் கொள்ளலாம். தாய் நண்டு பிரசவிக்கும் போது அது மரணமடைகிறது. குஞ்சு நண்டு பிறக்கிறது. அது போல என் வேதனை உள்ளது என்று பீஷ்மர் கூறுவதாக உள்ள சுலோகம் வியாசர் ஒரு மிருக இயல் நிபுணர் என்பதை உணர்த்துகிறது. மேலும் அவர் ஒரு வானவியல் நிபுணர் என்பதையும் நிரூபிக்கும் வண்ணம் இந்த ஸ்லோகம் அமைந்துள்ளது.
பசுக்களுடன் தொடர்பு கொண்டுள்ள அவிட்டம்
டெல்பினஸ் என்று மேலை நாட்டில் அழைக்கப்படும் ச்ரவிஷ்டா அல்லது அவிட்ட நட்சத்திரம் மகர மற்றும் கும்ப ராசிகளில் உள்ளது. இந்தத் தொகுதியில் ஏழு நட்சத்திரங்கள் இருக்கின்றன. பிரதான நட்சத்திரமாக அவிட்டம் திகழ்கிறது. இதை சீனா உள்ளிட்ட பல தேசங்களும் காளை அல்லது பசு போன்ற தோற்றமுடைய நட்சத்திர மண்டலம் என்று குறிப்பிடுகின்றன. இதில் உள்ள இரு பெரும் நட்சத்திர கணங்கள் ஒரு லட்சத்து ஐம்பதினாயிரம் ஒளி ஆண்டுகள் தள்ளி உள்ளன என்று அறிவியல் கூறுகிறது. கற்பனைக்கும் அப்பாற்பட்ட தூரம் இது. இந்த அவிட்ட நட்சத்திரத்தின் அதி தேவதை வசுக்கள். பீஷ்மரின் பிறப்பைப் பற்றி அனைவரும் அறிவர்.
அஷ்ட வசுக்களான தரன், த்ருவன், சோமன், அஹன், அநிலன், அநலன், பிரத்யூஷன், ப்ரபாசன் ஆகியோர் ஒரு முறை மனைவிமார்களுடன் வசிஷ்டரின் ஆஸ்ரமத்திற்குச் சென்றனர். அங்கே இருந்த நந்தினி என்ற காமதேனுவைப் பார்த்த அவர்கள் அதை அடைய ஆசைப்பட்டனர். ப்ரபாசன் என்றும் த்யோ என்றும் அழைக்கப்படும் வசு நந்தினியைக் கவர்ந்தான். அதை அறிந்த வசிஷ்டர் அந்த எட்டுப் பேரையும் மனிதப் பிறவி எடுக்கும்படி சபித்தார்.
வசுக்களின் வேண்டுகோளுக்கு இணங்க பசுவைக் கவர்ந்த தியோ மட்டும் நீண்ட நாள் பூமியில் வாழ வேண்டும் என்றும் ஏனைய ஏழு பேரும் உடனே தம் லோகம் திரும்பலாம் என்றும் சாப விமோசனமும் கொடுத்தார். பிரபாசன் அல்லது தியோ என்று அழைக்கப்பட்ட எட்டாவது வசுவே பீஷ்மர்!
அவர் துரியோதனனுடன் சேர்ந்து பஞ்ச பாண்டவரை மஹாபாரத யுத்தத்தில் எதிர்த்தார். 18 நாட்கள் நடந்த யுத்தத்தில் முதல் பத்து நாட்களுக்கு பீஷ்மர் சேனாபதியாக இருந்து உக்கிரமாக போரிட்டார். பத்தாம் நாள் சிகண்டியை முன்னிலைப் படுத்தி அர்ஜுனன் விடுத்த பாணங்களால் அடிபட்டு வீழ்ந்தார். முன்பே செய்த பிரக்ஞையின் படி சிகண்டியுடன் போர் புரிய பீஷ்மர் மறுத்து விட்டார். உத்தராயணம் வரும் வரை காத்திருந்து பின்னர் தன் உயிரை விட்டார்.
திருப்பரங்குன்றம் கல்லத்தி மரத்தில் கொடி கட்டியது தொடர்பில் புகார்!
திருப்பரங்குன்றம் கோவிலுக்கு சொந்தமான மலை மீது உள்ள கல்லத்தி மரத்தில் சட்டவிரோதமாக சந்தனக்கூடு திருவிழாவை முன்னிட்டு கொடி கட்டியதாக கோவில் நிர்வாகம் அளித்த புகாரின் பேரில் போலீஸார் வழக்குப்பதிவு செய்தனர்.
திருப்பரங்குன்றம் கோயில் உள்துறை கண்காணிப்பாளர் அளித்த புகாரின் பேரில், அனுமதியின்றி உள்ளே நுழைதல், பொது அமைதிக்கு பங்கம் இழைத்தல் உள்ளிட்ட மூன்று பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
திருப்பரங்குன்றம் மலை உச்சியில் சிக்கந்தர் தர்கா அமைந்துள்ளது. இங்கு ஆண்டுதோறும் நடைபெறும் சந்தனக்கூடு விழாவை முன்னிட்டு, கடந்த டிசம்பர் 21-ஆம் தேதி தர்கா நிர்வாகம் மற்றும் சில நபர்கள் இணைந்து மலையில் உள்ள கல்லத்தி மரத்தின் உச்சியில் பிறை கொடியைக் கட்டியுள்ளனர்.
அந்த மரம் மற்றும் அந்தப் பகுதி அனைத்தும் திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலுக்குச் சொந்தமானது என்றும், அங்கு அனுமதியின்றி கொடி கட்டியது சட்டவிரோதமானது என்றும் கோவில் நிர்வாகம் தரப்பில் புகார் தெரிவிக்கப்பட்டது.
இது குறித்து கோவில் உள்துறை நிர்வாக அதிகாரி சத்திய சீலன் திருப்பரங்குன்றம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்தப் புகாரின் அடிப்படையில், பொதுச் சொத்துக்குச் சேதம் விளைவித்தல் மற்றும் அனுமதியின்றி அத்துமீறுதல் உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் திருப்பரங்குன்றம் காவல் நிலைய போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
முன்னதாக, மலை மீதுள்ள தர்கா முன், பிறை போட்ட கொடி உள்ள நிலையில், சில நாட்களுக்கு முன், அருகில் உள்ள கோவிலின் தல விருட்சமான கல்லத்தி மரத்திலும் தர்காவை சேர்ந்த சிலர் கொடி கட்டினர். இதுகுறித்து, ஹிந்து மக்கள் கட்சி மாவட்ட தலைவர் சோலைகண்ணன், ஹிந்து தமிழர் கட்சி ராம ரவிக்குமார் உள்ளிட்ட ஹிந்து அமைப்பினர், ‘கோவில் இடத்தை ஆக்கிரமிக்கும் நோக்கில், கொடி ஊன்றப்பட்டுள்ளது’ என, கோவில் நிர்வாகத்திடம் புகார் அளித்தனர். ஆனால், கோவில் நிர்வாகம் கண்டுகொள்ளவில்லை.
இந்நிலையில், இரு தினங்களுக்கு முன்னர் உயர் நீதிமன்ற மதுரை கிளையில், நீதிமன்ற அவமதிப்பு வழக்கு விசாரணையின் போது, இதுகுறித்து கேள்வி எழுப்பிய நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், போலீசில் புகார் செய்யுமாறு கோவில் நிர்வாகத்திற்கு உத்தரவிட்டார். இதன் அடிப்படையில், கோவில் உள்துறை கண்காணிப்பாளர் சத்தியசீலன், போலீசில் புகார் அளித்தார்.
நீதிபதி உத்தரவிடாவிட்டால் மலையை ஆக்கிரமிக்கும் தர்கா நிர்வாகத்தின் சதிச் செயலுக்கு திமுக., அரசின் அறநிலையத்துறை உடந்தையாக இருந்து திருப்பரங்குன்றம் மலையையே அவர்களுக்குக் கொடுத்திருக்கும் என்றும், இந்து மக்களின் உரிமையான மலையை ஓட்டுக்காக அவர்கள் வசம் அள்ளிக் கொடுத்திருக்கும் என்றும் மக்கள் கருத்துகளைத் தெரிவித்தனர்.