Home Blog Page 265

மூன்று மாநிலங்களில் பாஜக.,வுக்கு ‘கை’ கொடுத்த திமுக.,!

BJP 2022 10 29 - 2026
#image_title

மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சட்டீஸ்கர், தெலங்கானா ஆகிய நான்கு மாநில தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று காலை தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில், தெலங்கானாவில் காங்கிரஸ் முன்னிலை பெற்று வருகிறது. மற்ற மூன்று மாநிலங்களில் பாஜக., வெற்றி முகத்தில் உள்ளது.

முன்னதாக, கருத்துக் கணிப்புகள், தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் ஆகியவற்றில், ம.பி., ராஜஸ்தானில் இழுபறியும், மற்ற இரண்டில் காங்கிரஸும் வெற்றி பெறும் என கூறப்பட்டது. இந்நிலையில், கருத்துக்கணிப்புகளைக் கடந்து, பாஜக.,வின் இந்த வெற்றிக்குக் காரணம் என்ன என்பது குறித்து வட நாட்டு ஊடகங்களில் அலசப்படுகிறது. அவற்றில், காங்கிரஸின் கூட்டணிக் கட்சியான திமுக.,வின் உதயநிதி ஸ்டாலின் சனாதனம் குறித்துப் பேசியது முக்கிய இடம் பெற்றுள்ளது. காங்கிரஸ் கூட்டணி சனாதன ஒழிப்புக் கொள்கை உள்ள கூட்டணி என்ற எண்ணம் அடிப்படையாக வாக்காளர்களின் மனத்தில் பதிந்து போனதுதான் காரணம் என்று பலரும் கருத்து தெரிவித்துள்ளனர்.

அதே நேரம், காங்கிரஸ் அளித்த வாக்குறுதிகளை மக்கள் பெரிதாக நம்பவில்லை, காங்கிரஸ் அளித்த இலவசங்கள் அள்ளித் தெளித்த பிரம்மாண்ட வாக்குறுதிகளை வாக்காளர்கள் ஒரு பொருட்டாக மதிக்கவில்லை இது காங்கிரஸ் வாக்குக்காக பொய்யான வாக்குறுதிகளையே அழிக்கும் என்ற எண்ணம் வாக்காளர்களிடம் ஏற்பட்டதைக் காட்டுகிறது என்றும் கருத்துக்கள் தெரிவிக்கப்படுகின்றன.

பாஜக தரப்பில் கூறும்போது இது பிரதமர் மோடி அளித்து வரும் மக்கள் நல பணிகளுக்கான வெற்றி, மத்திய பிரதேச மாநிலத்தை பொறுத்த அளவில் மக்கள் அசைக்க முடியாத நம்பிக்கையை பாஜக மீது வைத்துள்ளார்கள். மாநில அரசு மக்களுக்கு கொடுத்துள்ள மக்கள் நல திட்டங்கள் மிகப்பெரிய அளவில் சாதாரண மக்களிடமும் வலுவாக சென்றடைந்துள்ளன என்பதையே இது காட்டுகிறது. ராஜஸ்தான், சட்டீஸ்கர் இவற்றிலும் மத்திய அரசின் திட்டங்கள் மீது மக்கள் கொண்ட நம்பிக்கையும் ஈர்ர்ப்புமே காரணம் என்ற கருத்தை தெரிவிக்கிறார்கள். தெலுங்கானாவில் கடந்த தேர்தலை காட்டிலும் தற்போது வாக்கு சதவீதம் பெரிதாக உயர்ந்திருப்பதை அவர்கள் சுட்டிக் காட்டுகிறார்கள்.

அதே நேரம், நான்கு மாநில தேர்தல் குறித்து கருத்து தெரிவித்துள்ள தமிழக பாஜக மாநில துணைத்தலைவர் நாராயணன் திருப்பதி, சனாதன தர்மத்தை (ஹிந்து மதத்தை) அழிப்பேன் என்று சொன்னவர்களுக்கு துணை நின்றவர்கள் அழிந்து போன நாள் இன்று.

சனாதனத்தை (ஹிந்து மதத்தை) ஒழிப்பதற்காக ஆட்சியே போனாலும் கவலை இல்லை என்று உதயநிதி ஸ்டாலின் கூறியது உண்மையாகி விட்டது. ‘INDI’ கூட்டணியின் 2 அரசுகளை கவலையில்லாமல் பறிகொடுத்து நின்றாலும், போனது தங்களின் ஆட்சி இல்லை என்ற நிம்மதியில் இருக்கிறார் உதயநிதி ஸ்டாலின். பாவம், அந்த நிம்மதி இன்னும் 4 மாதங்களில் பறிபோய் விடும் என்று தெரியாமல், புரிந்து கொள்ளாமல் சனாதனத்தை (ஹிந்து மதத்தை) ஒழிப்பதற்காக மும்முரமாக, தீவிரமாக பணியாற்றிக் கொண்டிருக்கிறார்… என்று கருத்து தெரிவித்துள்ளார்.

வடநாட்டு ஊடகங்களிலும், ராஜஸ்தான், ம.பி., சத்தீஸ்கரில் காங்கிரஸ் எதிர்பார்த்த இடங்கள் கிடைக்காமல் போனதற்கு, சனாதனம் குறித்த தி.மு.க.,வினரின் பேச்சு முக்கிய காரணம் என்றே கருத்து தெரிவிக்கிறார்கள்.

அண்மையில் சென்னையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில், திமுக இளைஞர் அணி செயலாளரும், தமிழக விளையாட்டு துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின், டெங்கு மலேரியா கொசு இவற்றைப் போல, சனாதனத்தை ஒழிக்க வேண்டும் என்று சர்ச்சைக்குரிய வகையில் பேசினார். இதற்கு பலரும் கண்டனம் தெரிவித்த நிலையில், முதல்வரும், அவரது தந்தையுமான ஸ்டாலின் மற்றும் திமுக.,வினர் அவருக்கு ஆதரவாகவே கருத்து தெரிவித்தனர். யாரும் அவரது பேச்சை கண்டிக்கவில்லை.

ஆனால், ’இண்டி’ கூட்டணி உருவான நேரத்தில் உதயநிதியின் இந்தப் பேச்சு சலசலப்பை ஏற்படுத்தியது. அக்கூட்டணி தலைவர்கள் இந்த பேச்சை விரும்பவில்லை. சனாதனம் குறித்த பேச்சு தேவையற்றது என மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கூறினார். வட மாநிலங்களிலும் இண்டி கூட்டணிக்கு பலத்த எதிர்ப்பு கிளம்பியது. குறிப்பாக, காங்கிரஸ் கட்சியை கைகாட்டி, இண்டி கூட்டணியின் கொள்கை இதுதான் என்ற அளவில் பிரசாரம் மேற்கொள்ளப்பட்டது.

குறிப்பாக, உதயநிதியின் பேச்சை எதிர்த்து வட மாநிலங்களில் பாஜக., தீவிர பிரசாரம் மேற்கொண்டது. பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்ளிட்டோர் உதயநிதியின் பேச்சை சுட்டிக்காட்டி பிரசாரம் செய்தார்கள். அந்த நேரம் உதயநிதியிடம் சென்னையில் செய்தியாளர்கள் கேட்டபோது, என்னுடைய பேச்சால் வடக்கே பிரச்சனை ஏற்படுகிறது என்ற கருத்தை உதயநிதியும் ஒப்புக்கொண்டார்.

பெரும்பாலும் தமிழகத்தில் திமுக.,வின், இந்து விரோத, இந்தியா விரோத, இந்தி எதிர்ப்பு, தேச ஒற்றுமையை கிண்டல் செய்யும் தேசவிரோதக் கருத்துகள் பொதிந்த மேடைப்பேச்சுகள் தமிழகத்துக்கு உள்ளேயே நின்றுவிடும். ஆனால் இந்த முறை தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை இந்த பேச்சுகளை ஆங்கிலத்திலும் இந்தியில் மொழிபெயர்த்து வட இந்திய அளவில் எடுத்துச் சென்றார். அதனால் திமுகவின் மேடைப்பேச்சுகள் எல்லாம் வட இந்திய அளவிலும் எதிரொலித்து மக்களிடம் பெரும் வெறுப்பையும் எதிர்ப்பையும் ஒருசேர சம்பாதித்தன. குறிப்பாக திமுகவின் இந்தி எதிர்ப்பு பேச்சுகள், சனாதன ஒழிப்பு பேச்சுகள், தமிழகத்தில் கோயில்களை மட்டும் குறிவைத்து இடித்து தள்ளுவது போன்றவை காங்கிரஸ் கூட்டணியின் செயல்பாடுகள் என்பதாக மக்கள் மனதில் ஆழ பதிந்தன.

நடக்கப் போகும் விபரீதத்தை உணர்ந்து கொண்ட காங்கிரஸ், இதனையடுத்து ‘இண்டி’ கூட்டணி சார்பில் ம.பி., மாநிலத்தில் நடைபெறவிருந்த பொதுக்கூட்டத்தை ரத்து செய்தது. எனினும் ஒரு பக்கம் பாஜக தனது மக்கள் நல திட்டங்களை வளர்ச்சிப் பணிகளை மக்களிடம் எடுத்துச் சென்ற அதே நேரத்தில், மக்களின் உணர்வுகளில் ஒன்றிப்போன சனாதன ஒழிப்பு குறித்த காங்கிரஸ் கூட்டணி கட்சிகளின் கோர முகத்தையும் கொண்டு சென்றது.

இந்நிலையில் இந்த மாநிலங்களில் தேர்தல்கள் நடந்து முடிந்தன. ராஜஸ்தான், ம.பி., மாநிலங்களில் இழுபறி ஏற்படும், சத்தீஸ்கரில் காங்கிரஸ் ஆட்சியை தக்க வைக்கும் என கருத்து கணிப்புகள் பலவும் தெரிவித்தன. ஆனால், இந்த மூன்று மாநிலங்களிலும் பாஜக., தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும் நிலையில் உள்ளது. காங்கிரஸ் எதிர்பார்த்த இடங்கள் கிடைக்கவில்லை.

இந்த நிலை குறித்து மத்தியப் பிரதேச காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஆசார்யா பிரமோத் கூறுகையில், சனாதன தர்மத்தை எதிர்த்தது காங்கிரஸ் கட்சியை மூழ்கடித்துவிட்டது. சாதிவாரி அரசியலை நாடு ஏற்காது. சனாதனத்தை எதிர்த்தால் இது தான் நடக்கும் எனக் கருத்து தெரிவித்தார்.

இந்திய கிரிக்கெட் அணி முன்னாள் வீரர் வெங்கடேஷ் பிரசாத் வெளியிட்ட சமூகத் தள கருத்தில், சனாதன தர்மத்தை அவதூறாகப் பேசினால், நிச்சயம் அதற்கான விளைவுகளை பேச வேண்டியிருக்கும். மாபெரும் வெற்றி பெற்ற பாஜக.,வுக்கு வாழ்த்துகள். பிரதமர் மோடி மற்றும் அமித்ஷாவின் சிறந்த தலைமைக்கு சான்றளிக்கும் வகையில் இந்த வெற்றி அமைந்துள்ளது. அடிமட்ட அளவில் தொண்டர்கள் கடுமையாக உழைத்துள்ளனர் எனக் குறிப்பிட்டுள்ளார்.

இப்படி ஒரு புறம் கூட்டணிக் கட்சி திமுக.,வால் பெரும் சரிவைச் சந்தித்த காங்கிரஸ், இன்னொருபுறம், கூட்டணிக் கட்சிகளை நம்பாமல், தனித்துக் களம் இறங்கியதும்கூட அதன் தோல்விக்குக் காரணம் ஆகிவிட்டது. ராஜஸ்தான், ம.பி., சட்டசபைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி தலைமை வகிக்கும் ‘இண்டி’ கூட்டணியில் உள்ள கட்சிகள் உடன் தேர்தலைச் சந்திக்காததால் இந்தத் தோல்வி ஏற்பட்டதாக ஊடகங்களில் சில கருத்துகள் பகிரப்பட்டன.

மத்தியப் பிரதேசத்தில் இண்டி கூட்டணியை சேர்ந்த சமாஜ்வாதி, ஆம்ஆத்மி, கம்யூனிஸ்ட் கட்சிகள், ஐக்கிய ஜனதா தளம் ஆகிய கட்சிகளை அருகே சேர்க்காமல், 230 தொகுதிகளிலும் காங்கிரஸ் தனியாகப் போட்டியிட்டது. இதனால் கூட்டணிக்குள் குழப்பம் ஏற்பட்டாலும், மாநிலத்தில் தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க வேண்டும் என்பதால், ‛கூட்டு’ சேராமல் களமிறங்கியதாக காங்கிரஸ் தெரிவித்தது. இதனால், காங்கிரஸ் பெரும் பின்னடைவை சந்தித்துள்ளது. ம.பி.,யில் உள்ள 230 தொகுதிகளில் போட்டியிட்ட காங்கிரஸ் 66ல் மட்டுமே முன்னிலை பெற்றது. ஆளும் பாஜக.,வோ, 163 தொகுதிகளுக்கு மேல் முன்னிலை பெற்று ஆட்சியை தக்க வைக்கிறது.

ராஜஸ்தானில், மொத்தமுள்ள 200 தொகுதிகளில் காங்கிரஸ் 199 தொகுதிகளில் போட்டியிட்டு, ராஷ்டிரிய லோக் தளம் கட்சிக்கு ஒரு இடத்தை மட்டும் ஒதுக்கி தேர்தலை சந்தித்தது. அந்த மாநிலத்திலும், இண்டி கூட்டணியில் இடம்பெற்றுள்ள கம்யூனிஸ்ட் கட்சிகள், ஆம்ஆத்மி கட்சிகளை ஒதுக்கியது காங்கிரஸ். இங்கும் காங்கிரஸால் 70 இடங்களில் மட்டுமே முன்னிலை பெற முடிந்தது. இவ்வாறு அங்கும் மாநில அரசைப் பறிகொடுத்துள்ளது காங்கிரஸ். பாஜக., 115ல் முன்னிலை பெற்று, தனிப் பெரும்பான்மை பெற்று ஆட்சி அமைக்கவுள்ளது.

இண்டி கூட்டணி என்பது, மத்திய பாஜக., அரசினை எதிர்கொள்ள மக்களவைத் தேர்தலுக்காக மட்டுமே உருவாக்கப்பட்டது என்ற எண்ணத்தை வெளிப்படுத்தி, காங்கிரஸ் தன் சுயநல உள்நோக்கத்தை கூட்டணிக் கட்சிகளுக்கு வெளிச்சம் போட்டுக் காட்டிவிட்டது. மாநிலத் தேர்தல்களிலேயே கூட்டணிக் கட்சிகளை அரவணைத்து தேர்தலை சந்திக்காமல் தனியாக கால்பதிக்க நினைத்து, கீழே விழுந்துள்ளது காங்கிரஸ்! எனினும், அடுத்த மக்கள்வைத் தேர்தலை எதிர்கொள்வது எப்படி என்பதாகக் காட்டிக் கொள்ள வரும் டிச.6ம் தேதி இண்டி கூட்டணிக் கட்சிகளின் கூட்டத்தைக் கூட்டப் போவதாகக் கூறியுள்ளார் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே!

இப்படி, கூட்டணியால் இருந்ததும் போச்சு… கூட்டணியால் வருவதும் வராமல் போச்சு… என்ற நிலையில் தவிக்கிறது காங்கிறது!

திரையரங்கில் பில் போடாமல் பாப்கார்ன் விற்று ரூ.3லட்சம் மோசடி!

madurai theatre - 2026
#image_title

மதுரையின் பிரபல திரையரங்கில் ஆறு மாதமாக பில்போடாமல் பாப்கார்ன் விற்பனை செய்து 3 லட்சம் வரை மோசடி – 2 ஊழியர்கள் கைது!

மதுரை வில்லாபுரம் பகுதியில், உள்ள வெற்றி சினிமாஸ் என மூன்று திரையரங்கம் உள்ளது. திரையரங்கின் மையப் பகுதியில், உணவுப் பொருள் விற்பனை செய்யும் கேண்டின் உள்ளது.

கேண்டினில் பணிப அவனியாபுரத்தை சேர்ந்த சரவணக்குமார்( வயது22) , மற்றும் வில்லாபுரம் மீனாட்சிநகர் பகுதியைச் சேர்ந்த மெய்யப்பன் ( வயது19) .
ஆகிய இரு ஊழியர்களும் பணிபுரிந்து வருகின்றனர்.

மெய்யப்பன் கேண்டினில் கடந்த ஒரு வருடங்களுக்கு மேலாக பணிபுரிந்து வருகிறார். சரவணன் கடந்த எட்டு மாதங்களாக பணிபுரிந்து வருகிறார். கடந்த சில மாதங்களாக கேண்டீனில் பணிபுரியும் மெய்யப்பன், சரவணன் இருவரும் பில் போடாமல் பாப்கார்ன் மற்றும கூல்ட்ரிங்க்ஸ்களை விற்பனை செய்துள்ளனர்.

இதுகுறித்து, கேண்டீன் மேலாளர் முனியராஜன் கணக்கு பார்த்தபோது கடந்த ஆறு மாதங்களில் மூன்று லட்சத்திற்கு மேல் நஷ்டம் ஏற்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து முனியராஜன் அவனியாபுரம் காவல் நிலையத்தில் புகார் செய்ததை அடுத்து அவனியாபுரம் போலீசார் மெய்யப்பன் சரவணன் இருவரையும் விசாரணை செய்ததில் இருவரும் பில் போடாமல் பாப்கான் மற்றும் கூல்ட்ரிங்க்ஸ்களை ரூபாய் மூன்று லட்சம் அளவில் விற்பனை செய்தது தெரிய வந்தது.

அதனைத் தொடர்ந்து அவர்கள் மீது மோசடி உட்பட 3 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து அவனியாபுரம் காவல்துறையினர் கைது செய்தனர். திரையரங்க கேண்டின் மேலாளர் முனியராஜா அளித்த புகாரின் அடிப்படையில், 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு மெய்யப்பன், சரவணன் ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டனர்.

நான்கில் இரண்டை காங். இடமிருந்து தட்டிப் பறித்து, ஒன்றை தக்க வைக்கும் பாஜக.,!

BJP 2022 10 29 - 2026
#image_title

ராஜஸ்தான், மத்திய பிரதேசம், சட்டீஸ்கர், தெலங்கானா, மிசோரம் ஆகிய ஐந்து மாநிலங்களுக்கு நடைபெற்ற தேர்தல்களில், பதிவான வாக்குகள் இன்று எண்ணப் படுகின்றன. இவற்றில் மிசோரம் வாக்கு எண்ணிக்கை மட்டும் நாளை நடைபெறும் நிலையில் இன்று மற்ற நான்கு மாநிலங்களுக்கான வாக்கு எண்ணிக்கை நிலவரம் வெளியாகி வருகிறது.

இந்த நான்கு மாநிலங்களில், ராஜஸ்தான், சட்டீஸ்கர் ஆகிய இரண்டு மாநிலங்களில் ஆட்சியை காங்கிரஸிடமிருந்து பாஜக., தட்டிப் பறிக்கிறது. மத்திய பிரதேசம் – ஒரு மாநிலத்தில் பாஜக., ஆட்சியை தக்க வைக்கிறது. தெலுங்கானாவில் ஆச்சரியப்படும் விதத்தில் ஆளும் ராஷ்டிரிய சமிதியை பின்னுக்குத் தள்ளி காங்கிரஸ் முன்னிலை வகித்து வருகிறது.

தெலங்கானாவின் கம்மாரெட்டி தொகுதியில் முதலமைச்சர் சந்திரசேகர ராவ் 3ஆவது இடத்தில் உள்ளார். முதல் இடத்தில் காங்கிரசின் ரேவந்த் ரெட்டியும், 2ஆவது இடத்தில் பாஜக வேட்பாளரும் உள்ளனர். தெலுங்கானாவில் பெரும்பாலான இடங்களில் காங்கிரஸ் கட்சி முன்னிலை வகிக்கிறது

சத்தீஸ்கர் மாநிலத்தில் பாஜக முன்னிலை பெற்று வருகிறது. காலை முதல் காங்கிரஸ் கட்சி முன்னிலையில் இருந்து வந்த நிலையில் திடீர் மாற்றம் ஏற்பட்டுள்ளது. மொத்தம் உள்ள 90 தொகுதிகளில் 50 தொகுதிகளில் பாஜகவும்; 39 தொகுதிகளலில் காங்கிஸ் கட்சியும்; 1 தொகுதியில் மற்ற கட்சிகளும் முன்னிலை பெற்றுள்ளன.

மத்திய பிரதேசத்தை பொறுத்த அளவில் தொடக்கம் முதலில் பாஜக மிகப் பெரும் அளவில் முன்னிலை பெற்று வந்தது. “மக்கள் ஆசியுடன் ம.பி.யில் பாஜகவுக்கு தனிப் பெரும்பான்மை உறுதி” என்று, மத்திய பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சௌகான் . கூறினார்

ராஜஸ்தான் மாநில தேர்தலில் பாஜக தொடர்ந்து முன்னிலை பெற்று வருகிறது. பெரும்பான்மைக்கு தேவையான 100 இடங்களை தாண்டி பாஜக முன்னிலை பெற்றுள்ளது ஆளும் காங்கிரஸ் கட்சி 78 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது

இதனிடையே, “இந்தியா கூட்டணி கட்சிகளின் அடுத்த ஆலோசனை கூட்டம் டிசம்பர் 6ம் தேதி டெல்லியில் நடைபெறும்” என்று, காங்கிரஸ் தலைவர் கார்கே அறிவித்துள்ளார்.

காலை 11:30 மணி நிலவரப்படி…

மத்தியப் பிரதேசம் முன்னிலை நிலவரம்: 230/230 (பெரும்பான்மைக்கு தேவையான இடங்கள்-116)

பாஜக – 162
காங்கிரஸ் – 65
பகுஜன் – 00
மற்றவை – 03

தெலங்கானா சட்டமன்றத் தேர்தலில் முன்னிலை: 119/119 (பெரும்பான்மைக்கு-60)

காங்கிரஸ் – 65
பிஆர்எஸ் – 42
பாஜக – 09
மற்ற-03

ராஜஸ்தான் முன்னிலை நிலவரம்: 199/199 (பெரும்பான்மைக்கு-101)

பாஜக-107
காங்-75
பகுஜன்-00
மற்ற-17

சத்தீஸ்கர் முன்னிலை நிலவரம்: 90/90 (பெரும்பான்மைக்கு-46)

பாஜக-55
காங்-33
மற்ற-02

தேய்பிறை பஞ்சமி: வராகி அம்மனுக்கு சிறப்பு பூஜை; மஹா யாகம்!

varahi vazhipadu in madurai - 2026

மதுரை மேலமடை தாசில்தார் நகர் அருள்மிகு சவுபாக்கிய விநாயகர் ஆலயத்தில், தேய்பிறை பஞ்சமி முன்னிட்டு, வராகி அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.

திருக்கோவிலிலே, மாதந்தோறும் வளர்பிறை மற்றும் தேய்பிறை பஞ்சமி நாட்களில், இக்கோவில் அமைந்துள்ள வராகி அம்மனுக்கு பக்தர்கள் சார்பில் சிறப்பு யாகமும், அதைத் தொடர்ந்து, அபிஷேகம், அலங்காரம் சிறப்பு பூஜைகள் தொடர்ந்து காலை 9 மணி அளவில் நடைபெற்று வருகிறது.

இன்று தேய்பிறை பஞ்சை முன்னிட்டு, இக்கோயில் அமைந்துள்ள வராகி அம்மன் சன்னதியில், சிவாச்சாரியார்களால் சிறப்பு யாகங்கள் நடத்தப்பட்டு, பூஜைகள் நடந்தது. இதில், பெண்கள் பங்கேற்று எலுமிச்சம் தீபம் ஏற்றி வராஹி அம்மனை வழிபட்டனர்.

பலர், வராகி அம்மனுக்கு மஞ்சள் மாலை அணிவித்து சிறப்பு பிரார்த்தனையை நடத்தினர். இதை அடுத்து, கோயில் நிர்வாகத்தின் சார்பில் பக்தர்களுக்கு பிரசாதங்கள் வழங்கப்பட்டன. இதற்கான ஏற்பாடுகளை, ஆலய நிர்வாக குழுவினர், மற்றும் பெண்கள் ஆன்மீக குழுவினர் செய்தனர்.

இத்திருக்கோவிலே, வாரந்தோறும் வெள்ளிக்கிழமை அன்று காலை 11 மணியளவில் வராகி மற்றும் துர்க்கை அம்மனுக்கு பெண்கள் குழுவின் சார்பில் சிறப்பு அபிஷேகங்கள் நடந்து வருகிறது.

பயணிகளிடம் வரவேற்பு இல்லை; காரைக்குடி- எர்ணாகுளம் ரயில் ரத்து!

thenmalai train track - 2026
#image_title

பயணிகளிடம் வரவேற்பு இல்லாத காரணத்தால் எர்ணாகுளம் – காரைக்குடி சிறப்பு ரயில் சேவை ரத்து செய்யப்பட்டது.

வண்டி எண் 06019/06020 எர்ணாகுளம் சந்திப்பு காரைக்குடி வாராந்திர சிறப்பு சபரி ரயில் சேவை வியாழன் தோறும் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. சபரிமலை செல்லும் பயணிகளின் வசதிக்காக வியாழன் தோறும் ஐந்து சேவைகள் கடந்த வாரம் முதல் இயக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

ஆனால் இந்த ரயில் குறித்து அறிவிப்பு வெளியாகி நான்கு நாட்கள் ஆகியும் இந்த ரயிலில் பயணம் செய்ய படுக்கை வசதி கொண்ட இரண்டாம் வகுப்பு பெட்டியில் வெறும் 20 பேர்களை முன்பதிவு செய்து இருந்தார்கள். மிகக் குறைவான இந்த நபர்களுடன் இந்த ரயில் கடந்த 30 ஆம் தேதி இயக்கப்பட்டது. இதற்கு பல்வேறு ரயில் பயணிகள் நல சங்கத்தினரும் பெரும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

முன்னர் இந்த ரயில் சபரிமலை சீசனுக்காக தாம்பரம் எர்ணாகுளம் என்று இயக்கப்பட்டது கடந்த வருடம் இயக்கப்பட்ட அந்த ரயிலுக்கு மிகப்பெரும் வரவேற்பு இருந்தது ரயில் முன்பதிவு முழுவதும் முடிந்து நிறைந்த பயணிகளுடன் இயக்கப்பட்டது. எனவே இந்த வருடமும் அவ்வாறே அந்த ரயில் இயக்கப்பட வேண்டும் என்று பயணிகள் நல சங்கத்தினர் கோரிக்கை விடுத்திருந்தனர்.

ஆனால் தென்னக ரயில்வே நிர்வாகம் தாம்பரம் வரை ரயிலை விடுவதற்கு பதிலாக முன்னதாக காரைக்குடியுடன் நிறுத்திக் கொண்டது. ஆனால் காரைக்குடி மானாமதுரை அருப்புக்கோட்டை இந்த ஊர்களின் வழியாக கேரளத்துக்கும் கேரளத்திலிருந்து விருதுநகர் மானாமதுரை காரைக்குடி நகர்களுக்கு செல்வதற்கும் பயணிகள் அதிகம் இல்லை.

மேலும் தமிழகத்தின் முக்கிய நகரங்களான மதுரை திருச்சி நகரங்களை தொடாமல் சுற்றிக்கொண்டு செல்லும் ரயிலுக்கு பயணிகள் வரவேற்பும் இல்லை. எனவே இந்த சிறப்பு ரயிலை மதுரை அல்லது திருச்சி வரை இயக்கியிருக்கலாம் அல்லது இதை வழித்தடத்தில் சென்னை தாம்பரம் வரை இயக்கப்பட்டு இருக்க வேண்டும் என்று பயணிகள் கருத்து தெரிவித்தனர்.

இருப்பினும் முதல் வாரம் பயணிகளிடம் வரவேற்பு இல்லாத காரணத்தால் அடுத்து வரும் நான்கு வாரங்களுக்கு (07.12.2023, 14.12.2023, 21.12.2023 & 28.12.2023) இயக்கப்படுவதாக இருந்த இந்த ரயில் சேவை ரத்து செய்யப்படுவதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது. இது ரயில் பயணிகளுக்கு ஏமாற்றத்தை தந்துள்ளது. இந்த ரயிலில் ரத்து செய்வதற்கு பதிலாக தமிழகத்தின் முக்கிய நகரங்கள் எவற்றுக்கேனும் மாற்றி விட வேண்டும் என்பது பயணிகளின் கோரிக்கையாக உள்ளது.

அரசின் தவறுகளுக்கு மக்கள் பெரும் விலை கொடுப்பதா? அண்ணாமலை காட்டம்!

bjp annamalai - 2026
#image_title

ஆட்சி மாறியும் காட்சி மாறவில்லை: என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அறிக்கை ஒன்றனை வெளியிட்டுள்ளார் அதில்….

சென்னை மாநகரம், உலக அளவில் பல்வேறு துறைகளில் முக்கியமான நகரங்களில் ஒன்று. ஆனால், ஒவ்வொரு ஆண்டும், மழைக்காலத்தில் சென்னை தத்தளிப்பது வாடிக்கை ஆகிவிட்டது. தமிழக அரசின் தவறுகளுக்கு பொதுமக்கள் கொடுத்துக் கொண்டிருக்கும் விலை மிக அதிகம்.

அதிகாரத்தில் இருக்கும் அரசியல்வாதிகள், மழை வெள்ளத்தில் வேட்டியை மடித்துக் கட்டி இறங்கி நடந்தால் மட்டுமே போதும் என்ற எண்ணத்தில் இருப்பதால், ஆட்சி மாறியும் காட்சி மாறவில்லை என்ற நிலையே இருக்கிறது. ஒவ்வொரு அரசும், மழைநீர் வடிகால் பணிகள் என்று கூறி செலவிட்ட பல்லாயிரம் கோடி நிதி என்ன ஆனது என்ற கேள்வியை பொதுமக்கள் கேட்கத் தொடங்கிவிட்டார்கள்.

அதிகாரிகள் கடுமையாக உழைத்தும், நிலைமையை முழுமையாகச் சீர்செய்ய முடியவில்லை என்றால், அடிப்படையிலேயே தவறு இருக்கிறது என்பதுதான் பொருள். சென்னை முழுவதும் பழுதான சாலைகளும், எங்கும் தேங்கி நிற்கும் மழைநீரும், இத்தனை ஆண்டு காலமாக, தமிழக ஆட்சியாளர்கள் செய்ததாகக் கூறிய மழை நீர் வடிகால் பணிகளைக் கேள்விக்குரியதாக்கி இருக்கின்றன.

தமிழக அரசு பாடம் கற்க, இன்னும் எத்தனை மழைக் காலங்கள் வேண்டும்.

காரைக்குடி வேண்டாம்; தாம்பரம் விடுங்க! பயணியர் கூக்குரல்!

train - 2026
#image_title

பயணிகளே இல்லாமல் காலி பெட்டியுடன் ஓடும் ரயில் குறித்து பயணியர் குரல் எழுப்பியுள்ளனர். இந்த ரயிலை காரைக்குடிக்கு விடுவதற்கு பதிலாக தாம்பரத்துக்கு விட வேண்டும் என்று கோரிக்கை வைக்கிறார்கள்.

எர்ணாகுளம்-காரைக்குடி சபரி சிறப்பு ரயில் குறித்து தான் இந்த பிரச்சினை. இது வியாழன் தோறும் இயக்கப்படுகிறது நேற்று இந்த ரயிலில் வெறும் 20 பயணிகளே பயணித்துள்ளனர்

கடந்த வருடம் சபரி ஸ்பெஷல் என எர்ணாகுளம் தாம்பரம் இடையே இயக்கப்பட்ட ரயிலுக்கு பலத்த வரவேற்பு இருந்தது. எனவே இந்த முறையில் அதுபோல் சிறப்பு ரயில் இயக்கப்பட வேண்டும் என்று பயணிகள் மத்தியில் கோரிக்கை எழுந்தது.

ஆனால் தென்னக ரயில்வே அதிகாரிகள் காரைக்குடி எர்ணாகுளம் சிறப்பு ரயில் என அறிவித்தார்கள். அதுவும் பொருத்தம் இல்லாத நேரத்தில் ஒரே நாளில் சென்று வரும் வகையில் அறிவிக்கப்பட்டது.

இந்த ரயில் வியாழன் நேற்று முதல் இயங்கியது. ஆனால் இந்த ரயிலுக்கு பயணிகள் மத்தியில் துணியும் வரவேற்பு இல்லை. இந்த ரயிலுக்கு நான்கு நாட்களுக்கு முன்பே முன்பதிவு தொடங்கியது. முன்பதிவு நிலவரம்
SL- 05 3AC- 0 2AC-0 என இருந்த நிலையில் வண்டி வியாழன் காலை 04:45 மணிக்கு எர்ணாகுளம் ரயில் நிலையத்திலிருந்து புறப்பட்டது.

இந்த ரயில் புனலூர் வந்த போது அங்கிருந்து பயணிகள் அதிகாரிகளிடம் இது குறித்து புகார் தெரிவித்து கூக்குரல் எழுப்பினர். காரைக்குடிக்கு இங்கிருந்து யார் செல்கிறார்கள் எங்களுக்கு அதற்கான தேவை என்ன தாம்பரம் அல்லது சென்னைக்கு இந்த ரயிலை விட வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை வைத்தனர்.

அதுபோல் காரைக்குடி-எர்ணாகுளம் சபரி சிறப்பு ரயில் முன்பதிவு நிலவரம் இரு நாட்களுக்கு முன்னர் வரை SL-03 3AC-0 2AC-0 என்று இருந்தது.

வண்டி வியாழன் இரவு 23:30 மணிக்கு காரைக்குடியில் ரயில் நிலையத்திலிருந்து புறப்பட்டது.டிக்கெட் புக்கிங் ஓபன் 4 நாள் ஆகிவிட்டது என்றபோதும் இந்த ரயில் காலி பெட்டிகளுடன் இயக்கப்பட்டது.

இந்த Empty ரயில் இன்னும் 5 வாரங்களுக்கு ஓடும். கடந்த ஆண்டு இந்த ரயில் எர்ணாகுளம் தாம்பரம் இடையே ஓடியது அதிக பயணிகள் பயணித்தனர்.

தற்போது இந்த எர்ணாகுளம் காரைக்குடி ரயில் நாளை ஓடுமா ?எவ்வளவு பண விரயம்? இதெயெல்லாம் தென்னக ரயில்வே அதிகாரிகள் தங்களின் சொந்த காசை போட்டு ஓட்டுவார்களா?. என்றெல்லாம் பயணிகள் கேள்வி எழுப்பினர்.

இதுகுறித்து செங்கோட்டை ரயில் பயணிகள் நல சங்கத்தின் செயலர் கே எச் கிருஷ்ணன் ரயில்வே அதிகாரிகளுக்கு மின்னஞ்சல் மூலம் புகார் அனுப்பியுள்ளார். அதில் இந்த ரயிலை மீண்டும் தாம்பரத்தில் இருந்தே இயக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.

தமிழக அரசின் மணல் கொள்ளையை ‘மறைக்காத’தால்… அதிகாரிக்குக் கிடைத்த தண்டனை!

enforcement directorate - 2026

தமிழக அரசின் மணல் கொள்ளையை ‘மறைக்காத’தால்… அதிகாரிக்குக் கிடைத்த தண்டனை இது என்று குறிப்பிட்டு வீடியோ ஒன்று வைரல் ஆகி வருகிறது.

தமிழகத்தில் மணல் குவாரிகளில் அரசு நிர்ணயித்த அளவுக்கும் அதிகமாக, மணல் அள்ளி விற்பனை செய்ததாகவும், அதில் கிடைத்த வருமானத்தை சட்ட விரோதமாக பண பரிமாற்றம் செய்ததாகவும் புகார்கள் பரவலாகக் கூறப்பட்டு வந்தது.

இதை அடுத்து அமலாக்கத்துறை அதிகாரிகள் ஒரே நேரத்தில், 34 இடங்களில் சோதனை நடத்தினர். நீள்வளத்துறை அதிகாரிகள் மற்றும் மணல் குவாரி அதிகாரிகள் வீடுகளில் இருந்து 12.82 கோடி ரூபாய் ரொக்கம், தங்க நகைகள் கைப்பற்றப்பட்டன. இந்த சோதனையைத் தொடர்ந்து, நீர்வளத்துறை முதன்மை பொறியாளர் முத்தையா, ஓய்வு பெற்ற பொறியளர் பொதுப்பணித்திலகம் மற்றும் 10 மாவட்ட ஆட்சியர்கள் விசாரணைக்கு ஆஜர் ஆகும்படி அமலாக்கத்துறை ‛ சம்மன்’ அனுப்பியது.

முதன்மை பொறியாளர் முத்தையா விசாரணைக்கு ஆஜர் ஆனார். ஆட்சியர்களுக்கு அமலாக்கத்துறை அனுப்பிய சம்மனுக்கு உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது. விசாரணைக்கு தடையில்லை எனவும், ஆட்சேபனை மனுவுக்கு, தமிழக அரசும், ஆட்சியர்களும் பதில் அளிக்க மூன்று வாரங்கள் அவகாசம் வழங்கியும் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்நிலையில், தமிழக அரசின் நீர்வளத்துறையில் இருந்து டிஸ்மிஸ் செய்யப்பட்ட செயற்பொறியாளர் தேவராஜன் தமிழக அரசு, அமைச்சர் துரைமுருகன், ஐஏஎஸ் அதிகாரிகள், நீர்வளத்துறை முதன்மை பொறியாளர் முத்தையா, ஊடகங்களை கடுமையாக குற்றம்சாட்டி ஒருமையில் பேசிய வீடியோ ஒன்றை சமூக வலைதளங்களில் வெளியிட்டார். இது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

உச்ச நீதிமன்றம் அனுமதித்தும், ஆர்எஸ்எஸ்., பேரணிக்கு தமிழக காவல் துறை அடக்குமுறை!

rss press meet about route march - 2026
#image_title

தமிழகத்தில், ஆர்.எஸ்.எஸ்., அமைப்பின் ஊர்வலம் மற்றும் பொதுக்கூட்டம் நடத்த, உச்சநீதிமன்றம் வரை சென்று சட்ட போராட்டம் நடத்திய வழக்கறிஞர்களுக்கான பாராட்டு விழா, சென்னையில் நவ.29 புதன்கிழமை நேற்று மாலை 6 மணிக்கு சென்னை சேத்துப்பட்டு சக்தி அரங்கத்தில் நடைபெற்றது.

மூத்த வழக்கறிஞர்கள் ஏஎன். ராஜா, ராஜகோபால், கார்த்திகேயன் உட்பட 79 வழக்கறிஞர்கள் இந்நிகழ்வில் பங்கு கொண்டனர். வழக்கறிஞர் ராஜேஷ் விவேகானந்தன் நிகழ்ச்சியை தொகுத்தளித்தார். ஆர் எஸ் எஸ் மாநில இணை செயலாளர் மக்கள் தொடர்பு இராம.ராஜசேகர் வரவேற்புரை ஆற்றினார்.

ஆர் எஸ் எஸ் மாநில அமைப்பாளர் பூ மு ரவிக்குமார், வழக்கறிஞர்களைப் பாராட்டி தொடக்க உரை ஆற்றினார். நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைத்து வழக்கறிஞர்களும் அறிமுகப்படுத்தப்பட்டு புத்தகங்கள் கொடுத்து கௌரவிக்கப்பட்டனர்.

பின் வழக்கறிஞர்கள் உச்ச நீதிமன்றத்தில் வழக்காடிய அனுபவங்களையும் உயர் நீதிமன்றத்தில் வழக்காடிய அனுபவங்களையும் காவல்துறையும் அரசு அதிகாரிகளையும் எதிர்கொண்ட விஷயங்களையும் அனைத்து அனுபவங்களையும் பகிர்ந்தனர்.

அப்போது, உச்ச நீதிமன்ற உத்தரவையும் மீறி, அணிவகுப்பை தடுக்க, அனைத்து அடக்குமுறைகளையும் தி.மு.க., அரசு கையாண்டதாக, ஆர்.எஸ்.எஸ்., தரப்பில் வாதாடிய, சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர் ரபு மனோகர் குற்றம்சாட்டினார்.

ஆர்.எஸ்.எஸ்., துவங்கப்பட்ட 1925 முதல், சீருடை அணிவகுப்பை நடத்தி வருகிறது. காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை நடந்த, ஆர்.எஸ்.எஸ்., அணிவகுப்புகளில் வன்முறைகள் நடந்ததாக, எந்த வரலாறும் இல்லை. தமிழகத்தில் கருணாநிதி முதல்வராக இருந்தபோது, ஆர்.எஸ்.எஸ்., அணிவகுப்புக்கு அனுமதி வழங்கியுள்ளார்.

ஆனால், 2021ல் தி.மு.க., ஆட்சிக்கு வந்தது முதல், ஆர்.எஸ்.எஸ்., அணிவகுப்புக்கு உச்ச நீதிமன்றம் வரை சென்று போராடித்தான் அனுமதி பெற வேண்டியுள்ளது. இந்த ஆண்டு உயர் நீதிமன்றம் அனுமதி அளித்தும், தி.மு.க., அரசின் காவல் துறை அனுமதி அளிக்கவில்லை. அதனால், உச்ச நீதிமன்றத்தில் அனுமதி பெற்று, நவம்பர் 19ல், தமிழகத்தில், 53 இடங்களில் வெற்றிகரமாக அணிவகுப்பு நடந்தது.

உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டும் ஆர்.எஸ்.எஸ்., அணிவகுப்பைத் தடுக்க, அனைத்து அடக்குமுறைகளையும் காவல் துறை கையாண்டது.

அணிவகுப்புக்கு அனுமதி கேட்டு கடிதம் கொடுத்த, ஆர்.எஸ்.எஸ்., நிர்வாகிகளின் வீடுகளுக்கு, நள்ளிரவில் 10க்கும் அதிகமான காவலர்களுடன் சென்று, அச்சத்தை ஏற்படுத்தினார்கள். உச்ச நீதிமன்றம் குறிப்பிட்ட அனைத்து கட்டுப்பாடுகள், வழிமுறைகளை பின்பற்றினோம். ஆனாலும், உச்ச நீதிமன்ற தீர்ப்பையும் மீறி, தேவையற்ற கட்டுப்பாடுகளை விதித்தர்கள்.

நீதிமன்றம் அனுமதித்தும், இசைக் கருவிகளை வாசிக்கக் கூடாது என, காவல் துறை அதிகாரிகள் நெருக்கடி கொடுத்தார்கள். நேரம் நீட்டிப்பு என, பொருத்தம் இல்லாத காரணங்களைக் கூறி, ஆர்.எஸ்.எஸ்., நிர்வாகிகள் மட்டுமல்லாது, சிறப்பு விருந்தினர்களாக அழைக்கப்பட்டவர்கள் மீதும், வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

ஆர்.எஸ்.எஸ்., எவ்வித அடக்குமுறைக்கும் அஞ்சக்கூடிய இயக்கம் அல்ல. அரசு தரும் நெருக்கடிகளை, பயிற்சியாக எடுத்துக் கொண்டு இன்னும் வேகத்துடன் பணியாற்றும் ஊழியர்களைக் கொண்ட இயக்கம் என்று பேசினார்.

டி20 உலகக் கோப்பை: முதல் முறையாக தகுதி பெற்றது உகாண்டா!

2024 t20 wc - 2026
#image_title

டி20 உலக கோப்பை தொடருக்கு முதல்முறையாக தகுதி பெற்றது உகாண்டா அணி.

உலக கோப்பை டி20 தொடருக்கு தேவையான 20 அணிகளும் தேர்வாகிவிட்ட நிலையில் ஜிம்பாப்வே அணி வெளியேறியது.

டி20 உலக கோப்பை தொடருக்கு முதல்முறையாக தகுதி பெற்றது உகாண்டா அணி! ருவாண்டா அணிக்கு எதிராக நடைபெற்ற தகுதிச் சுற்று போட்டியில் 9 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தகுதி பெற்றது. இதன்மூலம், தொடருக்கு தேவையான 20 அணிகளும் தேர்வாகின.

2024-ம் ஆண்டு அமெரிக்காவில் நடைபெறும் உலகக்கோப்பை டி20 தொடருக்கு தகுதி பெற்ற நாடுகளின் பட்டியலை வெளியிட்டது ஐசிசி

தேர்வான அணிகள் : மேற்கிந்திய தீவுகள், அமெரிக்கா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, இந்தியா, நெதர்லாந்து, நியூசிலாந்து, பாகிஸ்தான், தென்னாப்பிரிக்கா, இலங்கை, ஆப்கானிஸ்தான், வங்கதேசம், அயர்லாந்து, ஸ்காட்லாந்து, பப்புவா நியூ கினியா, கனடா, நேபாளம், ஓமன், நமீபியா, உகாண்டா.