Home Blog Page 266

அரசியல் புயலும்! ‘புயல்’ அரசியலும்!

1719347 mk stalin - 2026

கனமழையால் பொதுமக்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாத வகையில் நடவடிக்கை வேண்டும்.
அனைத்து துறைகளும் ஒருங்கிணைந்து நிவாரணப் பணிகளை மேற்கொள்ள வேண்டும்.
கனமழையால் பொதுமக்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாத வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்படும் மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க வேண்டும்.
அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், மாமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டோர் ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டும்

— இது எதிர்க்கட்சித் தலைவராக இருந்த போது மு.க. ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையைப் போல் இருந்தால், அதற்கு நாம் ஒன்றும் கருத்து சொல்ல முடியாது. இப்போதைய மழை வெள்ளக் காலத்தில், தமிழக அரசு அதிகாரிகளுக்கு முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் பிறப்பித்துள்ள உத்தரவுதான் இவை!

தற்போது சென்னையில் பெய்துவரும் மழையின் காரணமாக, முந்தைய காலங்களைப் போலவே, சொல்லப் போனால் அதைக் காட்டிலும் சற்று மோசமாகவே சாலைகளில் வெள்ள நீர் சூழ்ந்து பொதுமக்களை பெரிதும் சிரமத்துக்கு உள்ளாக்கியிருக்கிறது.

மழை பெய்தால் வெள்ளம் தான் என்று தங்களைத் தாங்களே சமாதானம் செய்து கொண்டு இதுதான் விதியெனக் கடந்து போய்க் கொண்டிருந்தவர்களும் இப்போது கேள்வி எழுப்புகின்றனர். காரணம், ஆளும் அரசின் மேயராக உள்ளவர்,ம் பேக்கேஜ் திட்டங்கள் என கடந்த வருடங்களில் சொல்லி, சுமார் 4 ஆயிரம் கோடி ரூபாய்களை இதற்குச் செலவிட்டிருப்பதாகக் கூறி, கடந்த வருட வெள்ளக் காலத்திலேயே 90 சத பணிகள் முடிந்து விட்டது என்றெல்லாம் கூறியதுதான்!

இப்போது அடுத்த வெள்ளக் காலம் வந்துவிட்டது. வெள்ளமும் வந்து பெருகிவிட்டது. ஆனாலும், மழை நின்றுவிட்டால், வெள்ளம் தானாக ஒரு மணி நேரத்தில் வடிந்துவிடும் என்று சொல்லி வருகிறார் சென்னை மேயர். இந்தப் பேச்சுகள் இப்போது சமூகத் தளங்களில் பெரும் கேலிப் பொருளாக மாறியுள்ளது.

இடையில், சென்னை வெள்ள நீரைப் படம் பிடித்துப் போட்ட, குறிப்பாக சென்னை கொளத்தூர் தொகுதி அவல நிலையை வீடியோ பதிவு செய்த தனியார் சேனல்களின் வீடியோக்கள் அவற்றின் சமூகத் தளங்களில் இருந்து திடீரென நீக்கப் பட்டிருக்கின்றன. வெள்ள நீர் நீக்கப்படவில்லை, வெள்ளச் செய்திகள் மட்டுமே நீக்கப் பட்டிருக்கின்றன என்றும் சமூகத் தளங்களில் பலரும் உள்ளக் கொதிப்பை வெளியிட்டிருக்கின்றனர்.

இதனிடையே, போன வருடம் வெள்ளத்தின் போது படகு ஓட்டிச் சென்று கொளத்தூரில் மக்களைச் சந்தித்து சில வாக்குறுதிகளைக் கொடுத்து வந்த பாஜக., மாநிலத் தலைவர் கே.அண்ணாமலையும் அறிக்கை வெளியிட்டிருக்கிறார். அதில்…

சென்னை மாநகரம், உலக அளவில் பல்வேறு துறைகளில் முக்கியமான நகரங்களில் ஒன்று. ஆனால், ஒவ்வொரு ஆண்டும், மழைக்காலத்தில் சென்னை தத்தளிப்பது வாடிக்கை ஆகிவிட்டது. தமிழக அரசின் தவறுகளுக்கு பொதுமக்கள் கொடுத்துக் கொண்டிருக்கும் விலை மிக அதிகம்.

அதிகாரத்தில் இருக்கும் அரசியல்வாதிகள், மழை வெள்ளத்தில் வேட்டியை மடித்துக் கட்டி இறங்கி நடந்தால் மட்டுமே போதும் என்ற எண்ணத்தில் இருப்பதால், ஆட்சி மாறியும் காட்சி மாறவில்லை என்ற நிலையே இருக்கிறது. ஒவ்வொரு அரசும், மழைநீர் வடிகால் பணிகள் என்று கூறி செலவிட்ட பல்லாயிரம் கோடி நிதி என்ன ஆனது என்ற கேள்வியை பொதுமக்கள் கேட்கத் தொடங்கிவிட்டார்கள்.

அதிகாரிகள் கடுமையாக உழைத்தும், நிலைமையை முழுமையாகச் சீர்செய்ய முடியவில்லை என்றால், அடிப்படையிலேயே தவறு இருக்கிறது என்பதுதான் பொருள். சென்னை முழுவதும் பழுதான சாலைகளும், எங்கும் தேங்கி நிற்கும் மழைநீரும், இத்தனை ஆண்டு காலமாக, தமிழக ஆட்சியாளர்கள் செய்ததாகக் கூறிய மழை நீர் வடிகால் பணிகளைக் கேள்விக்குரியதாக்கியிருக்கின்றன.

தமிழக அரசு பாடம் கற்க, இன்னும் எத்தனை மழைக் காலங்கள் வேண்டும்? – என்று கேள்வி எழுப்பியிருக்கிறார்.

வெள்ளம் வரும், அதனைக் காரணமிட்டு செலவு செய்து பணம் போகும்! அண்ணாமலை கேட்பது போல், ”ஆமாம் இன்னும் எத்தனை மழைக் காலங்கள் வேண்டும்? தமிழக அரசு பாடம் படிக்க?!”

5 மாநில தேர்தல்: வெளியான கருத்துக் கணிப்புகள்!

election voting - 2026

5 மாநில தேர்தலுக்கு பிந்தைய தேர்தல் கருத்துக்கணிப்பு வெளியாகியுள்ளது. மிசோரம், சத்தீஸ்கர், ராஜஸ்தான், மத்திய பிரதேசம், தெலங்கானா ஆகிய மாநிலங்களில் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் வெளியாகி உள்ளது.

இவற்றில், ராஜஸ்தான், மத்தியப் பிரதேசத்தில் பாஜக.,வும், சதீஸ்கரில் காங்., தெலங்கானாவில் இழுபறியும் என தெரிகிறது. 

ராஜஸ்தான் மாநிலத்தின் தேர்தல் கருத்துக்கணிப்பு முடிவுகள்:

டைம்ஸ் நவ் கருத்துக்கணிப்பின்படி,
காங்கிரஸ் 56 – 72
பாஜக 108 – 128
பிற 13 – 22

சிஎன்என் கருத்துக்கணிப்பின்படி,
காங்கிரஸ் 74
பாஜக 111
பிற 24

ராஜஸ்தான்ட்விட்டர் – டிவி 9 கருத்துக்கணிப்பின்படி,
காங்கிரஸ் 90 – 100
பாஜக 100 – 110

ஜன் கி பாத் கருத்துக்கணிப்புப்படி,
காங்கிரஸ் 62 – 85
பாஜக 100 – 122

இந்தியா டுடே கருத்துக்கணிப்புப்படி,
காங்கிரஸ் 86 – 106
பாஜக 80 – 100
பிற 9 – 18

ஜி போல்ஸ்டார்ட் கருத்துக்கணிப்புப்படி,
காங்கிரஸ் 90 – 100
பாஜக 100 – 110

மத்திய பிரதேசத்தில் மீண்டும் பாஜக!?

ரிபப்ளிக் செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள கருத்துக்கணிப்பில் 230 தொகுதிகளில் 203 தொகுதிகளுக்கான கருத்துக் கணிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

அதில் பாஜக 118 முதல் 130 தொகுதிகளில் வெல்லும் எனவும், காங்கிரஸ் 97 முதல் 107 தொகுதிகளில் வெல்லும் எனவும் மற்ற கட்சிகள் 0-2 தொகுதிகளில் வெல்லும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜன் கி பாத் செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள கருத்துக்கணிப்பில்,
காங்கிரஸ் 102 முதல் 125 தொகுதிகள் வரை வெல்லும் எனவும், பாஜக 100 முதல் 123 தொகுதிகள் வரை வெல்லும் எனவும் மற்றவை 0-5 தொகுதிகளில் வெல்லும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சத்தீஸ்கர் மாநில கருத்துக் கணிப்பு:

சத்தீஸ்கரில் மொத்தம் உள்ள 90 தொகுதிகளில்
காங்கிரஸ் 40-50, பாஜக 36-46 இடங்களை பெறலாம் – இந்தியா டுடே

காங்கிரஸ் 42-53, பாஜக 34-45 இடங்களை பெறலாம் – ஜன் கீ பாத்

காங்கிரஸ் 37 இடங்கள், பாஜக 23 இடங்கள் வரலாம் – இந்தியா டிவி

காங்கிரஸ் 54-66, பாஜக 29-39 தொகுதிகள் வரலாம் – TV5

காங்கிரஸ் 49, பாஜக 38, மற்றவை 3 தொகுதிகளைக் கைப்பற்றலாம் – CNN

தெலங்கானாவில் இழுபறி..!

சிஎன்என் கருத்துக்கணிப்புப்படி,
ஆளும் பி.ஆர்.எஸ். 58
காங்கிரஸ் 56
பாஜக 10

டிவி 9 கருத்துக்கணிப்புப்படி,
ஆளும் பி.ஆர்.எஸ். 48 – 58
காங்கிரஸ் – 49 -59
பாஜக 5 – 10

ஜன் கி பாத் டிவியின் கருத்துக்கணிப்புப்படி,
ஆளும் பி.ஆர்.எஸ். 40 – 55
காங்கிரஸ் – 48 -64
பாஜக 7 – 13

மிசோரம் மாநிலத்தில் இழுபறி..!

மொத்தமுள்ள 40 தொகுதிகளில்,
மிஜோரம் மக்கள் இயக்கம் 15 முதல் 25 தொகுதிகளில் வெற்றி பெறும் ,
மிசோ தேசிய முன்னணி 10 முதல் 14 தொகுதிகளில் வெல்லும்,
காங்கிரஸ் 5 முதல் 9 தொகுதிகளில் வெல்லும்
பாஜக 0-2 தொகுதிகளில் வெற்றி பெறலாம் : – இது ஜன் கிபாத் வெளியிட்டுள்ள கருத்துக்கணிப்பு

The vaccine war: விமரிசனம்!

the vaccine war - 2026
#image_title

கொரோனா பெருந்தொற்றுக் காலத்தில் செய்வதறியாது கையைப் பிசைந்து கொண்டிருந்தது உலகம்.

தடுப்பூசி தயாரிக்க வேண்டும் எனப் பிரயத்தனப்பட்ட நேரத்தில் ஐந்து நாடுகள் மட்டுமே வைரஸைப் பிரித்தெடுத்தெடுப்பதில் வெற்றி கண்டு தடுப்பூசிகள் தயாரித்தன. நம் பாரதமும் அதில் ஒன்று.

ஆனால் நடைமுறைச் சிக்கல்கள் நிறைய உள்ள வெளி நாட்டு மருந்துகளை நம் நாட்டில் சந்தைப்படுத்த, குறிப்பாக pfizer-Moderna ஊடகங்களைக் கைகொண்டு நம் நாட்டில் பாரத் பயோடெக் நிறுவனம் தயாரித்த தடுப்பூசி பலவீனமானது, தடுப்புச்சக்தி குறைந்தது என்றும் தவறான செய்திகளைப் பரப்பி பொதுமக்களிடையே பீதியை உண்டாக்கியது.

சில அரசியல் கட்சிகளும், பிரபலங்களும் இதற்கு இரையானதுதான் சோகம். ஆனால் மனவுறுதியுடன் போராடி, உலக சுகாதார நிறுவனத்தை நம் தடுப்பூசியை ஏற்க வைத்ததுதான் ICMR மற்றும் நம் அரசின் வலிமையும் வெற்றியும்.

இறுதியில் நம் தயாரிப்பு வலிமையானதும், பின்விளைவுகள் மிகச் சொற்பமானது என்றும் அதற்கும் மேலாக, பல வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ததும்தான் உச்சம்.
இதை இப்படத்தில் அழகாக படிப்படியாக படமாக்கி நமக்குப் படைத்த படக்குழுவைப் பாராட்டியே ஆக வேண்டும்.

தகுந்த உற்சாகமும் வாய்ப்பும் அளிக்கப்பட்டால் நம் நாட்டு விஞ்ஞானிகள் யாருக்கும் சளைத்தவர்கள் அல்ல; மிஞ்சியவர்கள் என நிரூபித்தது தடுப்பூசியும், பின்னர் இஸ்ரோவின் சந்திராயன் வெற்றியும்.

கொரோனா பெருந்தொற்றின் விளைவுகளை எப்படி மருத்துவ உலகம் எதிர்கொண்டு தியாகங்கள் பல புரிந்து நாட்டு மக்களைக் காப்பாற்றியதோ, அதே அளவு தடுப்பூசி தயாரிக்க நம் நாட்டு விஞ்ஞானிகள் மிகக்குறைந்த கால அவகாசத்தில் அசாத்திய அர்ப்பணிப்பும் தியாகமும் செய்து வெற்றி பெற்ற வரலாற்றை விளக்கும் இப்படத்தில் நடித்துள்ள அனைவரும் தங்கள் பாத்திரத்தின் தன்மை உணர்ந்து சிறப்பாக வெளிப்படுத்தி உள்ளனர்.

சற்றே பிசகினாலும் அரசியல் சாயம் பூசப்படும் அபாயம் இருந்தும்,அதில் மாட்டிக் கொள்ளாமல் விஞ்ஞானிகளின் அர்ப்பணிப்பை வெளிப்படுத்திய படக்குழுவினருக்கும், நடிகர்களுக்கும் பாராட்டுகள்.

நம் தேசத்தின் மீது மேலும் ஒருபடி பற்றை இறுக்கும் இப்படத்தை நம் தேசத்தை நேசிப்போர் அனைவரும், குறிப்பாக இளைய சமுதாயம் அவசியம் காண வேண்டும். ஜெய்ஹிந்த்! வந்தேமாதரம்

டிச.1 முதல் சிம் கார்டு வாங்குவது அவ்ளோ ஈஸி கிடையாது!

sim - 2026

டிசம்பர் 1 முதல் மாறப்போகும் சிம் கார்டு ரூல்ஸ்!

அண்மைக் காலமாகவே நாடு முழுவதும் பல்வேறு சிம் கார்டுகளை பயன்படுத்தி மோசடி செய்வது, போலியான சிம் கார்டுகளை வழங்குவது, அதன் மூலம் பண மோசடி செய்வது போன்ற குற்றங்கள் தொடர் கடையாகி வருகின்றன.

இந்த மோசடிகளை தடுக்கும் வகையில், மத்திய அரசு பல விதிமுறைகளை கொண்டு வந்ததோடு, மொபைல் சிம் கார்டுகளை விற்பனை செய்வதில் ஈடுபட்டுள்ள 67,000 டீலர்களை அரசாங்கம் தடைப் பட்டியலில் சேர்த்துள்ளது.

மேலும், மோசடியாகப் பெறப்பட்ட 52 லட்சம் சிம் கார்டு இணைப்புகளை அரசாங்கம் கண்டறிந்து செயலிழக்கச் செய்தது. கடந்த 2023ஆம் ஆண்டு, மே மாதம் முதல் 300 சிம் கார்டு டீலர்கள் மீது எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது.

மோசடிகளைத் தடுக்கும் வகையில் பல சிம் கார்டுகளை வாங்குவதற்கு விதிமுறைகளை கடினமாக்கி உள்ளது.

அதிகரித்து வரும் மோசடிகளைக் கட்டுப்படுத்தும் நோக்கில் டிச.1ஆம் தேதி முதல் நாடு முழுவதும் புதிய விதிமுறைகள் அமல்படுத்தப்பட உள்ளது.

காவல்துறை சரிபார்ப்பு மற்றும் பயோமெட்ரிக் சரிபார்ப்புக்கு பிறகே விற்பனையாளர்களுக்கு நிறுவனங்கள் சிம் கார்டுகளை விநியோகம் செய்ய வேண்டும்.

இந்த விதியை மீறுபவர்களுக்கு ரூ.10 லட்சம் அபராதம் விதிக்கப்படும்.

ஏற்கெனவே உள்ள எண்ணில் புதிய சிம் கார்டுக்கு விண்ணப்பிக்கும்போது வாடிக்கையாளர்களின் ஆதார் கார்டு உள்ளிட்ட விவரங்கள் சரிபார்க்கப்படும்.

மொபைல் எண்ணின் இணைப்பு துண்டிக்கப்பட்டால், 90 நாட்கள் முடியும் வரை வேறு எந்த புதிய வாடிக்கையாளருக்கும் அந்த எண்ணில் சிம்கார்டை ஒதுக்கப்படக் கூடாது.

தனிநபர்கள் வணிக இணைப்பு மூலம் மட்டுமே மொத்தமாக சிம் கார்டுகளை பெற முடியும்.

புதிதாக சிம் கார்டு வாங்கும் நபரின் கேஒய்சி சரிபார்ப்பு செய்யப்பட வேண்டியது அவசியம். இதன் மூலம் தனிநபர்கள் ஒன்பது சிம்கள் வரை வாங்கலாம். ஆனால், மெத்தமாக சிம் கார்டுகளை வாங்க முடியாது.

தொழில் நிறுவனங்களின் கேஒய்சி மற்றும் சிம் வாங்கும் தனிநபரின் கேஒய்சியும் சரிபார்ப்பு செய்யப்படும்.

புதிய விதிகளுக்கு இணங்க சிம் கார்டு விற்பனையாளர்கள் நவம்பர் 30ஆம் தேதிக்குள் பதிவு செய்ய வேண்டும். இல்லையெனில், ரூ.10 லட்சம் அபராதம் விதிக்கப்படுவதோடு இல்லாமல் சிறைக்கு செல்லவும் கூடும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இந்த விதிமுறைகள் டிச.1ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரூ.2 ஆயிரத்துக்கு மேல் டிஜிட்டல் பரிவர்த்தனை; புதிய கட்டுப்பாடு!

cellphone in hall - 2026

ரூ.2,000-க்கு மேல் டிஜிட்டல் பணப் பரிவர்த்தனைக்கு புதிய கட்டுப்பாடு விதிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

சைபர் மோசடிகளைத் தடுக்க, டிஜிட்டல் பரிவர்த் தனை நடைமுறையில் சில கட்டுப்பாடுகளைக் கொண்டுவர மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இது குறித்து மத்திய அரசு அதிகாரி ஒருவர் கூறுகையில், “ரிசர்வ் வங்கி, பொதுத் துறை மற்றும் தனியார் வங்கிகள், கூகுள், ரேசர்பே போன்ற தொழில்நுட்ப நிறுவனங்களுடன் நேற்று மத்திய அரசு கலந்தாலோசனைக் கூட்டம் நடத்தியது.

டிஜிட்டல் பரிவர்த்தனை மூலம் நடைபெறும் மோசடிகளைத் தடுப்பது குறித்து இந்தக் கூட்டத்தில் கலந்து ஆலோசிக்கப்பட்டது.

அப்போது, ரூ.2,000-க்கு மேல் முதன்முறையாக ஒரு கணக்குக்கு பரிவர்த்தனை செய்வதற்கு 4 மணி நேரம் அவகாசம் வழங்கினால், மோசடிகளைக் குறைக்க முடியும் என்று யோசனை முன்வைக்கப்பட்டது” என்று தெரிவித்தார்.

இதன்படி, புதிதாக ஒரு கணக்கு ரூ.2,000-க்கு மேல் பரிவர்த்தனை செய்ய வேண்டுமென்றால், 4 மணி நேரம் காத்திருக்க வேண்டும். யுபிஐ உட்பட அனைத்து வகையான டிஜிட்டல் பரிவர்த் தனைகளுக்கு இந்தக் கட்டுப்பாட்டைக் கொண்டு வர மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.

    பொதுமக்களின் மொபைல் எண்ணுக்கு மோசடியான இணைய இணைப்புகளை அனுப்பி பணம்பறித்தல், வங்கி அதிகாரிகள் போல் பேசி மக்களிடமிருந்து வங்கி கடவுச் சொல்லை ஏமாற்றிப் பெறுதல் உட்பட பல்வேறு வகையான சைபர் மோசடிகள் இந்தியாவில் அதிகரித்துள்ளன.

    இத்தகைய மோசடிகளை கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் மத்திய அரசுதீவிரமாக இறங்கியுள்ளது. அதன் தொடர்ச்சியாகவே, டிஜிட்டல் பரிவர்த்தனைக்கு கட்டுப்பாடு கொண்டுவர இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    டிச.3ல் புயல் வாய்ப்பு: வானிலை ஆய்வு மையத்தின் எச்சரிக்கை!

    weather update in chennai - 2026
    #image_title

    டிச.3ம் தேதி புயல் உருவாக வாய்ப்பு இருப்பதாக, வானிலை ஆய்வு மையம் தகவல் வெளியிட்டுள்ளது. டிச.3ம் தேதி உருவாகும் புயல் வடதமிழ்நாடு மற்றும் தெற்கு ஆந்திராவை நோக்கி நகரும் என்றும் அது தெரிவித்துள்ளது.

    தென்கிழக்கு வங்கக் கடல் மற்றும் அதை ஒட்டிய தெற்கு அந்தமான் கடலில் உள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி மேற்கு – வடமேற்கு திசையில் நகர்ந்து அடுத்த 24 மணி நேரத்தில் தென்கிழக்கு வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற வாய்ப்பு உள்ளது.

    டிசம்பர் 4-ம் தேதி அதிகாலையில் வட தமிழ்நாடு மற்றும் தெற்கு ஆந்திரா இடையே கரையைக் கடக்க வாய்ப்பு- இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்.

    வங்கக் கடலில் உருவாகும் புயல் காரணமாக டிச.2, 3-ல் சென்னை உள்ளிட்ட 5 மாவட்டத்தில் மிக கனமழை: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

    வங்கக் கடலில் உருவாகும் புயல் காரணமாக சென்னை உள்ளிட்ட 5 மாவட்டங்களில் வரும் 2, 3-ம் தேதிகளில் மிக கனமழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக இந்திய வானிலை ஆய்வு மைய தென் மண்டலத் தலைவர் எஸ்.பாலச்சந்திரன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

    தெற்கு அந்தமான் கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுப் பெற்றுள்ளது. இது தென்கிழக்கு வங்கக் கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று வடமேற்கு திசையில் நகர்ந்து, தென்மேற்கு மற்றும் தென்கிழக்கு வங்கக் கடல் பகுதிகளில் டிச. 2-ம் தேதி புயலாக வலுப்பெறும்.

    மேலும், வடக்கு இலங்கை மற்றும் அதையொட்டிய பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால் டிச. 3-ம் தேதி வரை தமிழகத்தின் பெரும்பாலான இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

    நவ. 30-ம் தேதி (இன்று) காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, ராமநாதபுரம் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

    டிச.1-ம் தேதி (நாளை) டெல்டா மாவட்டங்கள் மற்றும் கடலூர் மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

    வரும் 2, 3-ம் தேதிகளில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழை பெய்யக்கூடும். வரும் 2-ம் தேதி டெல்டா மாவட்டங்கள் மற்றும் கடலூர், புதுக்கோட்டை மாவட்டங்களிலும், 3-ம் தேதி மேற்கூறிய மாவட்டங்கள் மற்றும் ராணிப்பேட்டை, திருவண்ணாமலை மாவட்டங்களிலும் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும்.

    வரும் 4-ம் தேதி சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

    மீனவர்களுக்கு எச்சரிக்கை: அந்தமான் அருகே நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி காரணமாக வடக்கு அந்தமான், தென்கிழக்கு வங்கக் கடல், தென்மேற்கு வங்கக் கடல்பகுதிகளில் வரும் 4-ம் தேதி வரை அதிகபட்சமாக மணிக்கு 70 கி.மீ. வேகத்தில் சூறாவளிக் காற்று வீசும். மீனவர்கள் யாரும் கடலுக்குச் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள் என்று கூறினார்.

    தமிழ்நாடு, புதுச்சேரியின் 29-11-2023 காலை 0830 மணி முதல் 30-11-2023 காலை 0830 மணி வரை பெய்துள்ள மழையளவுகள் (சென்டிமீட்டரில்)

    ஆவடி (திருவள்ளூர்) 19;

    மண்டலம் 06 D65 கொளத்தூர், மண்டலம் 06 திரு.வி.க.நகர் (சென்னை), பொன்னேரி (திருவள்ளூர்) தலா 15;

    மண்டலம் 07 அம்பத்தூர், மண்டலம் 08 மலர் காலனி, அம்பத்தூர் (சென்னை) தலா 14;

    தலைஞாயர் (நாகப்பட்டினம்), சோழவரம் (திருவள்ளூர்), மண்டலம் 12 ஆலந்தூர் (சென்னை) தலா 13;

    அம்பத்தூர், மண்டலம் 13 அடையார் சுற்றுச்சூழல் பூங்கா, அண்ணா பல்கலைக்கழகம், மண்டலம் 11 U32 மதுரவாயல் (சென்னை), புழல் ARG, செங்குன்றம் (திருவள்ளூர்) தலா 12;

    கும்மிடிப்பூண்டி (திருவள்ளூர்), அண்ணா பல்கலைக்கழக ARG, மண்டலம் 10 கோடம்பாக்கம், மண்டலம் 03 புழல், மண்டலம் வளசரவாக்கம் (சென்னை), YMCA நந்தனம் ARG, பெரம்பூர், மண்டலம் 12 D156 முகலிவாக்கம், மண்டலம் 13 அடையாறு, கத்திவாக்கம், மண்டலம் 13, NIOT பள்ளிக்கரணை ARG தலா 11;

    சோழவரம் (திருவள்ளூர்), மண்டலம் 09 தேனாம்பேட்டை, தேனாம்பேட்டை, மண்டலம் 14 U41 பெருங்குடி, மீனம்பாக்கம் AWS, மண்டலம் 14 பெருங்குடி, மண்டலம் 12 மீனம்பாக்கம், ஆலந்தூர், சென்னை விமான நிலையம், மண்டலம் 13 U39 அடையாறு, மண்டலம் 07 U18 D81 வானகரம் தலா 10;

    பூந்தமல்லி (திருவள்ளூர்), மண்டலம் 08 அண்ணாநகர், அண்ணாநகர், எம்ஜிஆர் நகர், அயனாவரம் தாலுகா அலுவலகம், சோழிங்கநல்லூர், தரமணி ARG (சென்னை), கொளப்பாக்கம் ARG, செம்பரம்பாக்கம்_வருவாய் (காஞ்சிபுரம்), கொள்ளிடம் (மயிலாடுதுறை), திருக்குவளை (நாகப்பட்டினம்) தலா 9;

    திருவள்ளூர், கொரட்டூர் (திருவள்ளூர்), அடையாறு, மண்டலம் 03 மாதவரம், கோடம்பாக்கம், சென்னை நுங்கம்பாக்கம், டிஜிபி அலுவலகம், சென்னை நுங்கம்பாக்கம் AWS (சென்னை), VIT_Chennai AWS (செங்கல்பட்டு), குன்றத்தூர் (காஞ்சிபுரம்), வேப்பூர் (கடலூர்) காரைக்கால் (காரைக்கால்) வேளாங்கண்ணி (நாகப்பட்டினம்) தலா 8;

    தாமரைப்பாக்கம், திரூர் KVK AWS (திருவள்ளூர்), மண்டலம் 09 ஐஸ் ஹவுஸ், திரு-வி-க நகர், பெருங்குடி (சென்னை), ஆலந்தூர், தாம்பரம் (செங்கல்பட்டு), சத்யபாமா பல்கலைக்கழகம் ARG (காஞ்சிபுரம்), RSCL-2 நெமூர் (விழுப்புரம்), சீர்காழி ( மயிலாடுதுறை), திருத்துறைப்பூண்டி (திருவாரூர்), திருப்பூண்டி (நாகப்பட்டினம்) தலா 7;

    மாதவரம், மண்டலம் 15 சோழிங்கநல்லூர், வளசரவாக்கம், மண்டலம் 02 D15 மணலி, எண்ணூர் AWS (சென்னை), காஞ்சிபுரம், செம்பரம்பாக்கம்_CMWSSB, ஸ்ரீபெரும்புதூர் (காஞ்சிபுரம்), BASL முகையூர் (விழுப்புரம்), தரங்கம்பாடி, மயிலாடுதுறை (மயிலாடுதுறை), நாகப்பட்டினம் (நாகப்பட்டினம்), தலா 6;

    அதிகரிக்கும் வெளிநாட்டு வர்த்தகம்: திருப்பூர் பின்னலாடை ஏற்றுமதியாளர்கள் மகிழ்ச்சி!

    mumbai stock exchange
    #image_title

    அமெரிக்கா, ஐரோப்பாவில் வர்த்தகம் அதிகரிப்பதால், திருப்பூர் பின்னலாடை ஏற்றுமதியாளர்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.

    ரஷ்யா – உக்ரைன் போரால், அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளில் பின்னலாடை சில்லரை வர்த்தகம் பாதிக்கப்பட்ட நிலையில், கடந்தாண்டு அக்., – நவ., மாதங்களை காட்டிலும், தற்போது சில்லரை வர்த்தகம், 10 சதவீதம் வரை உயர்ந்துள்ள தகவல் வெளியாகியுள்ளது.

    இரு பெரும் கொரோனா தொற்று காலங்களில், அத்தியாவசிய தேவைகள் நீங்கலாக, மற்ற நடமாட்டத்தை உலக நாடுகள் அனுமதிக்கவில்லை. இதனால் அந்நாடுகளின் சில்லரை வர்த்தக நிறுவனங்கள் பின்னடைவை சந்தித்தன.

    தொற்று ஊரடங்கு மத்தியில், வரலாறு காணாத அளவுக்கு வர்த்தகம் உயர்ந்தது. வளர்ந்த பொருளாதார நாடுகள் அளித்த சலுகையால், அந்நாட்டு நிறுவனங்களும், மக்களும், அடுத்து வரும் ஆண்டுகளுக்கான தேவைக்காக, கூடுதல் ஆர்டர்களை வாரிக் கொடுத்தனர். இரண்டாவது தொற்று காலத்தில், சரக்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது. கிடங்குகளில் சரக்குகள் தேக்கமடைந்தன. சில்லரை வர்த்தகத்தில் சறுக்கல் ஏற்பட்டது.

    உக்ரைன் போர்:

    இக்கட்டான நிலையில் இருந்து, அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் மீண்டு வந்த நிலையில், ரஷ்யா – உக்ரைன் போர், தலைகீழ் மாற்றத்தை ஏற்படுத்திவிட்டது. மக்களின் இயல்பான நுகர்வு நிலையில் மாறுதல் ஏற்பட்டது. ஐரோப்பிய நாடுகளில், சிக்கன நடவடிக்கை பின்பற்றப்பட்டது. எதிர்பாராதவிதமாக, அமெரிக்காவிலும் பணவீக்கம் ஏற்பட்டது. பிரிட்டனும், பணவீக்க பாதிப்பில் இருந்து தப்பவில்லை.

    நாட்டின் பின்னலாடை தலைநகராக உள்ள திருப்பூர், அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் பிரிட்டன் நாடுகளுடன், 70 சதவீத ஏற்றுமதி வர்த்தக தொடர்பு வைத்துள்ளது. அந்த நாடுகளுக்கு ஏற்பட்ட பாதிப்பு, திருப்பூரில் எதிரொலிக்கிறது. கடந்த ஒன்றரை ஆண்டுகள், திருப்பூர் பின்னலாடைத் தொழிலுக்கு சவால்களும், சறுக்கல்களும் நிறைந்ததாகவே கழிந்துள்ளன.

    இருப்பினும், விடா முயற்சிக்கும், தன்னம்பிக்கைக்கும் பெயர் பெற்ற திருப்பூர் தொழில் துறையினர், கடும் சவால்களை வெற்றிகரமாக சமாளித்து வருகின்றனர்.

    இந்நிலையில், அமெரிக்க சில்லரை வர்த்தகத்தில் திடீர் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சில்லரை வர்த்தக நிறுவன கிடங்குகளில், சரக்குகள் வேகமாக விற்றுத் தீர்கின்றன. உற்பத்தி நாடுகளில் தேங்கியிருந்த சரக்குகளும் வேகமாக நகரத் தொடங்கியுள்ளன. இதனால் திருப்பூர் பின்னலாடைத் தொழில் துறையினர் கொஞ்சம் ஆசுவாசப் படுத்திக் கொண்டு, தங்கள் மகிழ்ச்சியான மனநிலையை வெளிப்படுத்தத் தொடங்கியுள்ளனர்.

    சலுகை விலையில் ஐபோன் விற்பனை!

    IPhone SE 3 - 2026

    ஃபிளிப்கார்ட் இணையதளத்தில் ஐபோன் 14 தற்போதும் ரூ.61,999க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதற்கு முந்தையை அதிகப்பட்ச விற்பனை விலையான ரூ.69,900ஐ ஒப்பிடுகையில் இது விலை குறைவாகும்.

    அதே சமயம், ஃபிளிப்கார்ட், ஆக்சிஸ் வங்கி கிரெடிட் கார்டு இணைந்த திட்டத்தில் வழங்கப்படும் சலுகையை பயன்படுத்திக் கொண்டால் அந்த ஃபோன் ரூ.60,000க்கு கிடைக்கும்.

    நல்ல முறையில் இயங்கிக் கொண்டிருக்கும் ஐஃபோன் 12 போன்றதொரு ஸ்மார்ட்ஃபோன் உங்களிடம் இருந்து, அதை நீங்கள் எக்ஸ்சேஞ்ச் செய்து கொள்ளும் பட்சத்தில், ஐஃபோன் 14க்கு நீங்கள் ரூ.20,950 வரையில் தள்ளுபடி பெற முடியும். இதனால் உங்களுக்கான விலை இன்னும் சற்று குறைவாக இருக்கும்.

    ஆக, தீபாவளி கால சிறப்பு விற்பனையை பயன்படுத்திக் கொள்ளத் தவறிய வாடிக்கையாளர்கள், இன்னமும் கூட சிறப்பு சலுகைகளைப் பயன்படுத்தி, குறைவான விலையில் தங்களுக்குப் பிடித்தமான ஐபோன் 14-ஐ வாங்கிக் கொள்ளலாம்.

    ஐபோன் 15 விலை :

    ஐபோன் 14-ஐ காட்டிலும் மேம்பட்ட மாடலாகக் கருதப்படும் ஐபோன் 15 வாங்குவதற்கு, இதைவிட கொஞ்சம் கூடுதலாக நீங்கள் செலவு செய்தால் போதுமானது.

    அமேசான் தளத்தில் ஐபோன் 15 விலை ரூ.74,900 ஆகும். இது அதிகபட்ச விற்பனையை விலையை ஒப்பிடும்போது ரூ.5,000 குறைவாகும்.

    ஐபோன் 15-ல் டைனமிக் ஐலேண்ட் கட் அவுட் டிசைன் உள்ளது மற்றும் சக்திவாய்ந்த எஸ்.ஓ.சி. அம்சம் இடம்பெற்றுள்ளது.

    2024 மார்ச்சில் அறிமுகமாகிறது ஐஎஸ்பிஎல் டி-10 கிரிக்கெட் தொடர்!

    ind vs nz t20 - 2026

    அடுத்த ஆண்டு மார்ச்சில் அறிமுகமாகிறது ஐஎஸ்பிஎல் டி-10 கிரிக்கெட் தொடர்

    ஐபிஎல் பாணியில் இந்தியன் ஸ்ட்ரீட் ப்ரீமியர் லீக் (ஐஎஸ்பிஎல்) என்ற புதிய கிரிக்கெட் தொடர் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படவுள்ளது.

    இது 10 ஓவர்களை கொண்ட டென்னிஸ் பந்து கிரிக்கெட் தொடராகும். இந்த ஐஎஸ்பிஎல் டி10 தொடர் அடுத்த ஆண்டு மார்ச் 2-ம் தேதி தொடங்கி 9-ம் தேதி வரை நடைபெறவுள்ளது. இந்தத் தொடரில் மொத்தம் 19 போட்டிகள் நடத்தப்படவுள்ளன.

    தொடரின் அனைத்து ஆட்டங்களும் கிரிக்கெட் மைதானங்களில் நடத்தப்படவுள்ளது. இத்தொடரில் மும்பை, ஹைதராபாத், பெங்களூரு, சென்னை, கொல்கத்தா மற்றும் ஸ்ரீநகர் ஆகிய 6 அணிகள் பங்கேற்கவுள்ளன.

    இந்தியன் ஸ்ட்ரீட் ப்ரீமியர் லீக் (ஐஎஸ்பிஎல்) போட்டியில் பங்குபெறும் அணி ஒன்றில் 16 பேர் மட்டுமே அனுமதிக்கப்படுவர். ஒரு அணிக்கு உதவிப் பணியாளார்கள் 6 பேர் இருக்கலாம்.

    ஒவ்வொரு அணிக்கும் ஒரு கோடி ரூபாய் ஏலத் தொகையாக வழங்கப்படும். வீரர்களுக்கான ஏலம் அடுத்த ஆண்டு பிப்ரவரி 24-ம் தேதி நடைபெறும் எனத் தெரிவிக்கப் பட்டுள்ளது. வீரர் ஒருவருக்கான குறைந்தபட்ச ஏலத்தொகை ரூ.3 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

    இந்தியன் ஸ்ட்ரீட் ப்ரீமியர் லீக் (ஐஎஸ்பிஎல்) தொடரின் குழுத் தலைவராக இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி நியமிக்கப்பட்டுள்ளார்.

    சர்வதேசப் போட்டிகளில் விளையாடும் கிரிக்கெட் வீரர்களைப் போன்று விளையாட வேண்டும் என்ற கனவோடு உள்ள பல்லாயிரக்கணக்கான இளைஞர்களுக்காக இந்த புதிய முயற்சி எடுக்கப்பட்டுள்ளதாக இந்தியன் ஸ்ட்ரீட் ப்ரீமியர் லீக் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ராஜபாளையம் அருகே காட்டு யானைகள் அட்டகாசம்..

    images 1 - 2026
    #image_title

    இராஜபாளையம் அருகே தென்னை மரங்கள், வாழை மின் கம்பங்களை
    துவம்சம் செய்த காட்டு யானைகளால் விவசாய நிலங்கள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகி வருகிறது.

    விருதுநகர் மாவட்டம், இராஜபாளையம் அருகே விவசாய நிலத்திற்குள் புகுந்த ஒற்றை காட்டு யானை தென்னை மரங்கள் மற்றும் மின் கம்பங்களை ஒடித்து சேதப்படுத்தியது.
    இராஜபாளையம் அருகே உள்ளது சேத்தூர். இங்கு, மேற்கு தொடர்ச்சி மலையடிவாரத்தில் நச்சாடைப் பேரி கண்மாய் உள்ளது.

    இதில் சுமார் 50 ஏக்கர் பரப்பளவில் விவசாய நிலங்கள் உள்ளன. அதில், 10க்கு மேற்பட்ட விவசாயிகள், மா, தென்னை மரங்களை வளர்த்து வருகின்றனர்.
    இந்நிலையில், வனப்பகுதியில் இருந்து கடந்த சில தினங்களுக்கு முன், ஒற்றை காட்டு யானையானது, அடிவாரப் பகுதிக்கு வந்துள்ளது. இது, விவசாய நிலத்திற்குள் புகுந்து பயிர்களை சேதப்படுத்தி வருகிறது.
    குறிப்பாக வரட்டோடை, பங்களா காடு, உடும்பாறை உள்ளிட்ட பகுதிகளில் இருந்த 50க்கும் மேற்பட்ட தென்னை மரங்களை காட்டு யானை வேருடன் சாய்த்து சேதப்படுத்தியது.

    இதில் ஒரு மரம் மின்கம்பியில் விழுந்ததால் அங்கிருந்த 2 மின் கம்பங்களும் உடைந்து சேதமாகியுள்ளது. இதையடுத்து, விவசாயிகள், மின்சார வாரியத்தினருக்கு தகவல் தெரிவித்தனர். விரைந்து வந்த மின்வாரிய ஊழியர்கள், மின்சாரத்தை துண்டித்தனர்.
    அதேவேளை, சேதமடைந்த பயிர்களை பார்வையிட வனத்துறையினர் வரவில்லையென விவசாயிகள் புகார் தெரிவிக்கின்றனர். மேலும், சேதமடைந்த பயிர்களுக்கு வனத்துறையினர் உரிய இழப்பீட்டை வழங்குவதோடு, வன விலங்குகள், விளை நிலங்களுக்குள் புகுவதை தடுக்க வேண்டுமெனவும் கோரிக்கை விடுத்தனர்.