வடகிழக்குப் பகுதி நம்மனைவருக்கும் அஷ்டலக்ஷ்மிக்குச் சமானம். இங்கே நிறைவாக திறன்கள் இருக்கின்றன, வடகிழக்கின் இயற்கை வனப்பு அனைவரின் கவனத்தையும் ஈர்த்துவிடும்.
டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.
இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி
கற்சிலையாக மாற்றப்பட்ட லோபமுத்ரா, தனது கணவரின் வருகைக்காகக் காத்திருக்கிறது. விந்திய மலை தலைவணங்கி, அதன் குருவான அகஸ்திய முனிவரின் வருகைக்காகக் காத்திருக்கிறது.
டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.
2026 மக்கள் தொகைக் கணக்கெடுப்பு வந்தால், தெற்கின் நிலைமை இன்னும் மோசமாக இருக்கும்; குடும்பக் கட்டுப்பாடு விஷயங்களில் ஒழுக்கமாக இருப்பதற்காக அது மேலும் தண்டிக்கப்படும்.
இதைத்தான் மத்திய அரசு தடுக்க நினைக்கிறது. பிரதமர் மோடி நாடாளுமன்ற உறுப்பினர்கள் எண்ணிக்கையை 850 ஆகவும் அதேபோல் மாநிலங்களின் பிரதிநிதித்துவத்தை சராசரியாக 50 சதவீதம் அதிகரிக்கும் செய்யும் திட்டத்தை முன் வைத்துள்ளார்.
பரிசோதனை மட்டுமே செய்து கொண்டார் என்றால் 'ஆஞ்சியோகிராம் செய்து கொண்டேன்' என்றும் அடைப்பை நீக்கும் சிகிச்சை செய்து கொண்டார் என்றால் 'ஆஞ்சியோபிளாஸ்டி செய்து கொண்டேன்' என்றும்
வடகிழக்குப் பகுதி நம்மனைவருக்கும் அஷ்டலக்ஷ்மிக்குச் சமானம். இங்கே நிறைவாக திறன்கள் இருக்கின்றன, வடகிழக்கின் இயற்கை வனப்பு அனைவரின் கவனத்தையும் ஈர்த்துவிடும்.
டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.
இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி
கற்சிலையாக மாற்றப்பட்ட லோபமுத்ரா, தனது கணவரின் வருகைக்காகக் காத்திருக்கிறது. விந்திய மலை தலைவணங்கி, அதன் குருவான அகஸ்திய முனிவரின் வருகைக்காகக் காத்திருக்கிறது.
டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.
2026 மக்கள் தொகைக் கணக்கெடுப்பு வந்தால், தெற்கின் நிலைமை இன்னும் மோசமாக இருக்கும்; குடும்பக் கட்டுப்பாடு விஷயங்களில் ஒழுக்கமாக இருப்பதற்காக அது மேலும் தண்டிக்கப்படும்.
இதைத்தான் மத்திய அரசு தடுக்க நினைக்கிறது. பிரதமர் மோடி நாடாளுமன்ற உறுப்பினர்கள் எண்ணிக்கையை 850 ஆகவும் அதேபோல் மாநிலங்களின் பிரதிநிதித்துவத்தை சராசரியாக 50 சதவீதம் அதிகரிக்கும் செய்யும் திட்டத்தை முன் வைத்துள்ளார்.
பரிசோதனை மட்டுமே செய்து கொண்டார் என்றால் 'ஆஞ்சியோகிராம் செய்து கொண்டேன்' என்றும் அடைப்பை நீக்கும் சிகிச்சை செய்து கொண்டார் என்றால் 'ஆஞ்சியோபிளாஸ்டி செய்து கொண்டேன்' என்றும்
தனியாா் நிறுவனம் மூலம் சென்னை மாநகரப் போக்குவரத்துக் கழகத்தில் ஓட்டுநா், நடத்துநா் நியமனம்: ஒப்பந்தப் புள்ளியை ரத்து செய்து சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை மாநகரப் போக்குவரத்துக் கழகத்தில் தனியாா் நிறுவனங்கள் மூலம் ஓட்டுநா், நடத்துநா்களை நியமிப்பது அபாயகரமான சோதனை எனத் தெரிவித்த சென்னை உயா்நீதிமன்றம், இது தொடா்பான ஒப்பந்தப் புள்ளியை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.
சென்னை மாநகரப் போக்குவரத்துக் கழகத்தில் தனியாா் நிறுவனங்கள் மூலம் ஓட்டுநா், நடத்துநா்களை நியமிப்பது தொடா்பாக கடந்த செப்டம்பா் மாதம் ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டது. இதை எதிா்த்து தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக தொழிலாளா்கள் கூட்டமைப்பு சாா்பில் சென்னை உயா்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கு நீதிபதி ஹேமலதா முன் விசாரணைக்கு வந்த போது, இந்த விவகாரம் குறித்து தொழிலாளா் நலத் துறை ஆய்வு செய்து, தற்போதைய நிலையே நீடிக்க அறிவுறுத்தியுள்ள நிலையில், மாநகரப் போக்குவரத்துக் கழகம் இந்த ஒப்பந்தப் புள்ளியை கோரியிருக்கக் கூடாது என மனுதாரா் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனால், தொழிலாளா் நலத் துறை ஆணையரின் அறிவுறுத்தலுக்கு எந்த சட்டப்பூா்வ அதிகாரமும் இல்லை எனவும், பல ஊழியா்கள் தொடா்ந்து பணிக்கு வராததால் ஏற்பட்ட ஊழியா் பற்றாக்குறையை சமாளிக்க இந்த முடிவு எடுக்கப்பட்டதாகவும், இதனால் நிரந்தர ஊழியா்கள் அடிக்கடி வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவது தடுக்கப்படும் எனவும் அரசுத் தரப்பில் விளக்கமளிக்கப்பட்டது.
இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, மாநகரப் போக்குவரத்து கழகத்தில் தனியாா் நிறுவனங்கள் மூலம் ஓட்டுநா், நடத்துநா்களை நியமிப்பது ஊதிய முரண்பாடுக்கு வழிவகுக்கும் எனவும், இது அபாயகரமான சோதனை எனவும் தெரிவித்து, ஒப்பந்தப்புள்ளியை ரத்து செய்து உத்தரவிட்டாா்.
தனியாா் நிறுவனங்கள் மூலம் ஓட்டுநா், நடத்துநா்கள் நியமிக்கப்பட்டால் இட ஒதுக்கீடு நடைமுறை பின்பற்றப்படாது எனவும், தனியாா் நிறுவனங்கள் மூலம் நியமிக்கப்படும் ஓட்டுநா்களால் விபத்து ஏற்பட்டால் இழப்பீடு வழங்குவதில் சிக்கல்கள் எழும் எனவும் சுட்டிக்காட்டிய நீதிபதி, அனைத்துப் போக்குவரத்துக் கழகத்திலும் காலியாக உள்ள ஓட்டுநா், நடத்துநா், தொழில்நுட்ப வல்லுநா்கள் காலிப் பணியிடங்களை நேரடித் தோ்வு மூலம் நிரப்ப வேண்டும் என உத்தரவிட்டாா்.
சபரிமலையில் நடைபெறும் மண்டல பூஜை விழாவில் 2வது பிரிவு போலீசார் இன்று பாதுகாப்பு பணி மற்றும் பல்வேறு சேவைகளுக்காக பொறுப்பேற்றுள்ளனர்
சபரிமலையில் 2-வது பிரிவு போலீஸார் செவ்வாய்க்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டனர். சன்னிதானம் ஆடிட்டோரியத்தில் இரண்டாம் கட்ட பணி விளக்க கூட்டம் நடந்தது. சபரிமலை சிறப்பு அதிகாரி எம்.கே.கோபாலகிருஷ்ணன் ஐயப்பன் புனித யாத்திரையை உறுதி செய்ய பல்வேறு துறைகளுடன் ஒத்துழைக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
#image_title
வரும் நாட்களில் போக்குவரத்து நெரிசல் அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. போலீசார் நன்கு தயாராக இருக்க வேண்டும். முதல் பேட்ச் முன்மாதிரியான ஆட்டத்துடன் திரும்பியதாக அவர் கூறினார்.
உதவி சிறப்பு அலுவலர் அருண். கே. பவித்ரன், 10 டி.வை.எஸ்.பி.க்கள், 32 சி.ஐ.க்கள், 125 எஸ்.ஐ./ஏ.எஸ்.ஐ.,க்கள் 1281 சிவில் போலீஸ் அதிகாரிகள் மற்றும் 1450 போலீசார் சபரிமலையில் 12 பிரிவுகளில் பணியாற்ற நியமிக்கப்பட்டுள்ளனர். என்.டி.ஆர்.எஃப், ஆர்.ஏ எப்., பிற மாநில போலீசார் மற்றும் பல்வேறு பாதுகாப்பு படை வீரர்களும் சபரிமலை பணியில் உள்ளனர்.
அருப்புக்கோட்டையில் 17 ஆண்டுகளுக்குப் பிறகு அமுதலிங்கேஸ்வரர் கோவில் திருக்கார்த்திகை தெப்ப தேர் உற்சவம்.
அருப்புக்கோட்டையில் திருக்கார்த்திகை தினத்தை முன்னிட்டு அருப்புக்கோட்டை நாடார்கள் உறவின் முறைக்கு பாத்தியப்பட்ட அமுதவல்லி அம்மன் சமேத அமுதலிங்கேஸ்வரர் திருக்கோவில் தெப்பத்தேர் உற்சவ விழா விமர்சையாக நடைபெற்றது.
யாகசாலை மங்கள இசை, விக்னேஸ்வர பூஜை உடன் துவங்கிய இந்த விழாவில் சுவாமி அம்பாளுக்கு சிறப்பு ஆராதனை நடைபெற்றது. அமுதலிங்கேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டது. அதனைத் தொடர்ந்து சாமி ஊர்வலமாக வேடிக்கையுடன் திருகயிலாய வாத்தியங்கள் முழங்க, மத நல்லிணக்கத்தோடு இஸ்லாமியர்களும் கலந்து கொண்டனர்.
மாட்டு வண்டியில் சுவாமி, அம்பாள், விநாயகர், முருகன், சண்டிகேஸ்வரர் ஆகிய பஞ்சமூர்த்திகள் உற்சவ மூர்த்திகளாக வீதி உலாவாக தெப்பக்குளத்தை சென்றடைந்தனர். அங்கு தெப்பக்குளத்தில் சிறப்பாக அலங்கரிக்கப்பட்ட தெப்ப தேரில் உற்சவமூர்த்திகள் தேரில் எழுந்தருளி மூன்று முறை தெப்பத்தை வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர்.
தெப்ப தேர் உற்சவ விழாவை முன்னிட்டு தெப்பக்குளம் சுற்றியுள்ள பகுதிகள் முழுவதும் வண்ண வண்ண மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு மின்னொளியில் ஜொலித்தது. தெப்ப தேரில் உற்சவமூர்த்திகளுக்கு மகா தீபாராதனை நடைபெற்றது.
விழா ஏற்பாடுகளை கோவில் விழா கமிட்டியினர் செய்திருந்தனர்.17 ஆண்டுகளுக்குப் பின் நடைபெற்ற தெப்பத்தேர் உற்சவ விழாவில் அருப்புக்கோட்டை மற்றும் சுற்றுவட்டார பகுதியைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
திண்டுக்கல் மாவட்டம், நத்தம் அருள்மிகு மாரியம்மன் கோவிலில், திருக்கார்த்திகையை முன்னிட்டு ,பெண்கள் கோவிலின் உள் வெளி பிரகாரங்களில் விளக்கு தீபங்களை ஏற்றினர் . இதையொட்டி, மாரியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.
அதேபோல், கோவில்பட்டியில் உள்ள கைலாசநாதர் சமேத செண்பகவல்லி கோவில் தனி சன்னதி கொண்ட பால தண்டாயுதபாணிக்கு பால் இளநீர் சந்தனம் ஜவ்வாது மஞ்சள் தேன் போன்ற 16 வகை அபிஷேகப் பொருட்களைக் கொண்டு சிறப்பு அபிஷேகம் பூஜைகள் தொடர்ந்து, நடைபெற்றது.
மல்லிகை, ரோஜா, முல்லை, அரளி, செம்பருத்தி, செவ்வரளி, தாமரை, கனகாம்பரம், சாமந்திப்பூ, செவ்வந்திப்பூ, தாழம்பூ, வாடாமல்லி, ஜாதிமல்லி, மலர்கள் கொண்ட சிறப்பு அலங்காரம், அபிஷேகம், பூஜைகள் மற்றும் தீபாராதனை நடந்தது. அதையடுத்து, சிறப்பு பூஜைகளும் நடந்தது.
பக்தர்கள் திரளாக கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதேபோல், நத்தம் மீனாட்சிபுரம் காளியம்மன் கோவில் அசோக் நகர் பகவதி அம்மன் கோவில் கர்ணம் தெரு மதுர காளியம்மன் கோவில் வெட்டுக்கார தெரு பத்திரகாளி அம்மன் கோவில்களில் சிறப்பு அலங்காரம், அபிஷேகம், தீபாராதனைகள் நடந்தது.இதில், பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
நத்தம் அருகே திருமலைக்கேணியில் திருக்கார்த்திகை திருவிழா:
திண்டுக்கல் மாவட்டம், நத்தம் அருகே திருமலைக்கேணி சுப்பிரமணிய சுவாமி கோவிலில் திருக்கார்த்திகையை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
முருகப் பெருமானுக்கு பால், பன்னீர், இளநீர், சந்தனம், தயிர், விபூதி, திருமஞ்சணம் உள்ளிட்ட 16 வகை அபிஷேகங்கள், அலங்காரம். தீபாராதனைகள் நடந்தது. ராஜ அலங்காரத்தில் முருகப்பெருமான் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். மாலையில் சுவாமி புறப்பாடாகி வெளிப் பிராகாரத்தில் வலம் வந்தார்.
இதையடுத்து கோவில் வளாகத்தில் லட்ச தீபம் ஏற்றும் நிகழ்ச்சி நடந்தது. மண்டபம் முன்பு அமைந்துள்ள ஸ்தூபியில் கார்த்திகை தீபம் ஏற்றப் பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு விளக்கேற்றி தரிசனம் செய்தனர்.
திருப்பரங்குன்றம் முருகன் கோவில் மலை மேல் கார்திகை தீபம் ஏற்றப்பட்டது.
மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றம் மலைமீது திருக்கார்த்திகை முன்னிட்டு, தீபம் ஏற்றப்பட்டது. ஏராளமான பக்தர்கள் முருகனுக்கு அரோகரா என,கோசமிட்டு தீபத்தை ஏற்றினர். தீபத் திருவிழா முன்னிட்டு, திருப்பரங்குன்றம் பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. முன்னதாக, திருப்பரங்குன்றம் கோயில் மலை மீது கொப்பரைகள் கொண்டு செல்லப்பட்டு, அங்கு மகா தீபம் ஏற்றப்பட்டது.
தமிழ் கடவுள் முருகனின் ஆறுபடை வீடுகளில் முதல் படை வீடான திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கார்த்திகை தீபத் திருவிழா நடைபெற்றது. திருப்பரங்குன்றம் முருகன் கோயிலின் முக்கிய திருவிழாவான கார்த்திகை தீபத்திருவிழா இன்று மாலை 6 மணிக்கு நடைபெற்றது.
திருப்பரங்குன்றம் மலைமேல் உச்சிபிள்ளையார் கோயில் மேல் உள்ள மோட்ச மண்டபத்தூணில் ஐந்துஅரை அடி உயரம் உள்ள செப்பு கொப்பரையில் 150 மீட்டர் காடா துணி திரியாக தயார் செய்யப்பட்டு. 500 லிட்டர் நெய்யில் திரிகள் ஊற வைக்கப்பட்டு தயார் செய்யப்பட்டது. திருவண்ணாமலையிலிருந்து வந்த சிவாச்சாரர்களால் கார்த்திகை தீபம் செப்பு கொப்பரையில் ஏற்ற தயார் செய்யப்பட்டது.
திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் பரணி தீபம் ஏற்றப்பட்டு, கோவில் மணி அடித்தவுடன் மலை உச்சியில் உச்சிப்பிள்ளையார் கோவிலுக்கு பூஜைகள் முடிந்து கார்த்திகை தீபம் ஏற்றப்படும்.
திருப்பரங்குன்றம் கோவில் துணை ஆணையர் சுரேஷ் மற்றும் ஊழியர்கள் அவனியாபுரம் காவல் உதவி ஆணையர் செல்வகுமார் தலைமையில் 100க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுட்டனர்.
மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் கார்த்திகை தீபத்திருவிழாவை முன்னிட்டு; பொற்றாமரை குளத்தில் லட்ச தீபம்
உலகபுகழ்பெற்ற மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயிலில் திருக்கார்த்திகையை முன்னிட்டு கோயிலில் லட்சதீபம் ஏற்றப்பட்டதை தொடர்ந்து கோயில் வளாகம் முழுவதும் அகல் விளக்குகளால் ஜொலித்தது. மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் கார்த்திகை உற்சவ விழா 21ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.
இதனை தொடர்ந்து தினமும் காலை , மாலை வேளைகளில் மீனாட்சி அம்மன் – சுந்தரேசுவரர், பஞ்சமூர்த்திகள் கோவில் வளாகத்தில் உள்ள ஆடி வீதிகளில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாளித்தனர்.
திருக்கார்த்திகையை முன்னிட்டு இன்று மீனாட்சியம்மன் கோயில் பொற்றாமரைகுளம், அம்மன் சன்னதி, சுவாமி சன்னதி, உள்பிரகாரங்கள் உள்ளிட்ட பல்வேறு பகுதியில் லட்ச தீபம் ஏற்றப்பட்டது. இந்த பணியில் கோயில் பணியாளர்கள், பக்த சபையினர் மற்றும் பக்தர்கள் என ஏராளமானோர் பங்கேற்று , லட்ச தீபங்களை ஏற்றினர். இதனால் கோயில் வளாகம் முழுவதும் விளக்கொளியில் ஜொலித்தது.
மீனாட்சி-சுந்தரேசுவர் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி அருள்பாலித்தனர். தொடர்ந்து பஞ்ச மூர்த்திகளுடன் புறப்பாடாகி கிழக்கு சித்திரை வீதியில் அம்மன் சன்னதி, சுவாமி சன்னதி முன்பு எழுந்தருளுவார்கள். அங்கு சொக்கப்பனை தீபம் ஏற்றப்பட்டது.
இதே போன்று மீனாட்சி அம்மன் கோயிலின் உப கோயில்களான தெப்பக்குளம் மாரியம்மன், முக்தீஸ்வரர் கோயில், செல்லூர் திருவாப்புடையார் கோயில், சிம்மக்கல் ஆதிசொக்கநாதர் கோயில் உள்ளிட்ட கோயில்களிலும் கார்த்திகை தீப ஏற்றி திராளான பக்தர்கள் வழிபட்டனர்.
இராஜபாளையம் அய்யனார் கோவிலில் திருக்கார்த்திகை முன்னிட்டு குவிந்த பக்தர்கள் கோவிலுக்கு செல்ல வனத்துறை தடை விதித்ததால், ஏமாற்றத்துடன் திரும்பிய பக்தர்கள்!
விருதுநகர் மாவட்டம், இராஜபாளையம் அய்யனார் கோவில் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதியில் அமைந்துள்ளது திருக்கார்த்திகை திருநாளை முன்னிட்டு, இராஜபாளையத்தில் இருந்தும் சுற்று வட்டார பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் அய்யனார் கோவிலில் குளித்து விட்டு வழிபடுவதற்கும் போக்குவரத்து துறை சார்பில் சிறப்பு பேருந்துகளும் இயக்கப்பட்டன.
அதுமட்டும் சிவானந்த குருகுலம் சார்பில் அங்குள்ள மடத்தில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டன . மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில், கடந்த சில தினங்களாக பெய்த மழையின் காரணமாக நீர்வரத்து அதிகரித்துள்ளது முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக குளிப்பதற்கு பக்தர்கள் தடை விதித்த வனத்துறையினர் அய்யனார் கோவில் சென்று சாமி தரிசனம் செய்வதற்கும் தடை விதித்தனர் .
இதனால், சாமி கும்பிட வந்த பக்தர்கள் ஏமாற்றத்துடன் சாலையிலேயே தேங்காய் பழங்களை உடைத்தும் விளக்குகள் ஏற்றியும் வழிபட்டு சென்றனர். மேலும் ,ஆற்றில் நீர் அதிகரித்து வருவதால் காவல்துறை பாதுகாப்பு ஈடுபட்டு வருகின்றனர் .
ஆபத்தை உணராமல் எஸ் வளைவு கருவாட்டு பாறை போன்ற பகுதிகளில் குடும்பத்துடன் குளித்து மகிழ்ந்தனர்.
மனதின் குரல் 107ஆவது பகுதி ஒலிபரப்பு நாள் – 26.11.2023 ஒலிபரப்பு : சென்னை வானொலி நிலையம்
தமிழில் : ராமஸ்வாமி சுதர்ஸன்
எனதருமை நாட்டுமக்களே, வணக்கம். மனதின் குரலுக்கு உங்களை வரவேற்கிறேன். ஆனால் இன்று நவம்பர் மாதம் 26ஆம் தேதியை நம்மால் எப்படி மறக்க முடியும்!! இன்றைய நாளன்று தான் நாடெங்கிலும் மிகவும் கொடுமையான தீவிரவாதத் தாக்குதல் நடைபெற்றது. தீவிரவாதிகள் மும்பை நகரையும், நாடு முழுவதையும், உலுக்கிப் போட்டார்கள். ஆனால் நமது பாரத நாட்டின் வல்லமை எத்தகையது என்றால், அந்தத் தாக்குதலிலிருந்து மீண்டு, இப்போது முழுத் தன்னம்பிக்கையோடு, தீவிரவாதத்தைக் காலில் போட்டு மிதித்து இருக்கிறோம். மும்பைத் தாக்குதலில் தனது இன்னுயிர்களை இழந்த அனைவருக்கும் நான் எனது சிரத்தாஞ்சலிகளை அர்ப்பணம் செய்கிறேன். இந்தத் தாக்குதலில் நமது வீரர்கள் வீரகதியை அடைந்தார்கள், தேசம் அவர்களை இன்று நினைவில் வைத்துப் போற்றுகிறது.
என் குடும்பச் சொந்தங்களே, நவம்பர் மாதம் 26ஆம் தேதியான இன்றைய தினம், மேலும் ஒரு காரணத்திற்காகவும் மிகவும் மகத்துவம் மிக்கதாக இருக்கின்றது. 1949ஆம் ஆண்டில், இன்றைய நாளன்று தான் நாட்டின் அரசியலமைப்புச் சட்டப் பேரவையானது பாரதத்தின் அரசியலமைப்புச் சட்டத்திற்கு அங்கீகாரம் அளித்தது. எனக்கு நன்றாக நினைவிருக்கிறது, 2015ஆம் ஆண்டிலே, நாம் பாபாசாகேப் ஆம்பேட்கரின் 125ஆவது பிறந்த நாளினைக் கொண்டாடிய வேளையிலே, ஒரு எண்ணம் தோன்றியது; அதாவது நவம்பர் மாதம் 26ஆம் தேதியை அரசியலமைப்புச் சட்ட தினமாகக் கொண்டாட வேண்டும் என்பதே அது. அப்போதிலிருந்து ஒவ்வோர் ஆண்டும், இன்றைய இந்த தினத்தை நாம் அரசியலமைப்புச்சட்ட தினம் என்ற வகையிலே கொண்டாடி வருகிறோம். நான் நாட்டுமக்கள் அனைவருக்கும் அரசியலமைப்புச் சட்ட தினத்திற்கான பலப்பல நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். நாமனைவரும் இணைந்து, குடிமக்களின் கடமைகளுக்கு முதன்மை அளிக்கும் அதே வேளையிலே, வளர்ச்சியடைந்த பாரதம் என்ற உறுதிப்பாட்டினைக் கண்டிப்பாக நிறைவேற்றுவோம்.
நண்பர்களே, அரசியலமைப்புச்சட்டத்தின் உருவாக்கலில் ஈராண்டுகளும், 11 மாதங்களும், 18 நாட்களும் ஆகின என்பதை நாமனைவரும் நன்கறிவோம். ஸ்ரீ சச்சிதானந்த சின்ஹா அவர்கள் அரசியலமைப்புச் சட்டப் பேரவையில் வயதில் மிக மூத்த உறுப்பினராக இருந்தார். 60க்கும் மேற்பட்ட நாடுகளின் அரசியலமைப்புச் சட்டங்களை ஆய்வு செய்து, நீண்ட விவாதங்களுக்குப் பிறகு நமது அரசியலமைப்புச் சட்டத்தின் வரைவு தயாரிக்கப்பட்டது. வரைவு தயாரான பிறகு, இதற்கு நிறைவான வடிவம் அளிக்கும் முன்பாக, அதிலே ஈராயிரத்திற்கும் மேற்பட்ட திருத்தங்களும் மேற்கொள்ளப்பட்டன. 1950இலே அரசியலமைப்புச் சட்டம் அமல் செய்யப்பட்ட பிறகும், இதுவரை மொத்தம் 106 அரசியலமைப்புச் சட்டத் திருத்தங்கள் செய்யப்பட்டிருக்கின்றன. காலம், சூழல், தேசத்தின் தேவை ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு பல்வேறு அரசுகள், பல்வேறு காலகட்டங்களில் சட்டத்திருத்தங்களை மேற்கொண்டன. ஆனால், அரசியலமைப்புச் சட்டத்தின் முதல் திருத்தம், பேச்சு சுதந்திரம் மற்றும் கருத்துச் சுதந்திரம் தொடர்பான உரிமைகளைக் கட்டுப்படுத்தவே மேற்கொள்ளப்பட்டது. அதே வேளையில் அரசியலமைப்புச் சட்டத்தின் 44ஆவது சட்டத்திருத்தம் வாயிலாக, அவசரநிலையின் போது மேற்கொள்ளப்பட்ட தவறுகள் சரி செய்யப்பட்டன என்பது துரதிர்ஷ்டமான விஷயம்.
நண்பர்களே, அரசியலமைப்புச்சட்டப் பேரவையின் சில உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டார்கள், இவர்களில் 15 பேர் பெண்கள். இப்படிப்பட்ட ஒரு உறுப்பினர் தாம் ஹம்ஸா மெஹ்தா அவர்கள் என்பது உத்வேகமளிக்கும் விஷயம்; இவர் பெண்களின் உரிமைகளுக்கும், நியாயத்துக்குமான குரலை ஓங்கி ஒலிக்கச் செய்தார். அந்தக் காலகட்டத்தில், பெண்களுக்கு அரசியலமைப்புச் சட்டரீதியாக வாக்களிக்கும் உரிமை வழங்கப்பட்டிருந்த வெகு சில நாடுகளில் பாரதமும் ஒன்று. தேசத்தின் நிர்மாணத்தில் அனைவரின் பங்களிப்பும் உறுதிப்படுத்தப்படும் போது, அனைவருக்குமான முன்னேற்றமும் ஏற்படும். அரசியலமைப்புச்சட்ட பிதாமகர்கள், மிகவும் தொலைநோக்குப் பார்வையோடு செயல்பட்டது எனக்கு நிறைவை அளிக்கிறது. இந்த வழியை அடியொற்றி இன்று நாடாளுமன்றம், ”நாரீ சக்தி வந்தன் அதிநியம்:, அதாவது பெண்சக்திக்குப் பெருமை சேர்க்கும் சட்டத்தை நிறைவேற்றியிருக்கிறது. நமது ஜனநாயகத்தின் உறுதிப்பாட்டின் ஒரு எடுத்துக்காட்டு இது. மேலும் வளர்ச்சியடைந்த பாரதம் என்ற நமது உள உறுதிப்பாட்டிற்கு உரமும், வேகமும் சேர்ப்பதில் மிகவும் உதவிகரமாக இது இருக்கும்.
எனது குடும்ப உறவுகளே, தேச நிர்மாணத்தின் தலைமைப் பொறுப்பை மக்களே ஏற்றுக் கொள்ளும் வேளையிலே, உலகின் எந்த ஒரு சக்தியாலும், அந்த தேசத்தின் முன்னேற்றத்தைத் தடுத்து விட முடியாது. பல மாற்றங்களுக்குத் தலைமை ஏற்று நடத்திக் கொண்டிருப்பது என்றால், அது 140 கோடி நாட்டு மக்கள் தாம் என்பது தெள்ளத்தெளிவாகத் தெரிகிறது. இதற்கான ஒரு வெளிப்படையான எடுத்துக்காட்டு என்று சொன்னால், பண்டிகைக்காலமான இப்போது அதைப் பார்த்தோம். கடந்த மாதங்களில், மனதின் குரலில் உள்ளூர் பொருட்களுக்குக் குரல் கொடுப்போம், அவற்றை வாங்குவோம் என்பதில் அழுத்தமளித்திருந்தோம். கடந்த சில நாட்களுக்கு உள்ளாக, தீபாவளி, பையா தூஜ், சட் பூஜை போன்றவற்றின் போது, நாடெங்கிலும் நான்கு இலட்சம் கோடி ரூபாய்க்கும் அதிகமாக வியாபாரம் நடந்திருக்கிறது. இந்த வேளையில், பாரதத்தில் தயாரிக்கப்பட்ட பொருட்களை வாங்குவதில் பரபரப்பான உற்சாகம் மக்களிடத்திலே காணக் கிடைத்தது. இப்போதெல்லாம் வீட்டிலிருக்கும் குழந்தைகளும் கூட கடைகளில் பொருட்களை வாங்கும் வேளையில், அது இந்தியாவில் தயாரிக்கப்பட்டதா என்று பார்க்கத் தொடங்கி விட்டார்கள். இது மட்டுமல்ல, இணையவழி பொருட்களை வாங்குவோர் கூட பொருட்களை வாங்கும் போது, Country of Origin அதாவது, எந்த நாட்டில் உற்பத்தி செய்யப்பட்டிருக்கிறது என்பதைக் காண மறப்பதில்லை.
நண்பர்களே, தூய்மை பாரதம் இயக்கத்தின் வெற்றி எப்படி அதற்கே ஒரு ஊக்கமாக ஆகியிருக்கிறதோ, அதே போல, உள்ளூர் பொருட்களுக்குக் குரல் கொடுப்போம் இயக்கத்தின் வெற்றி, வளர்ந்த பாரதம்-தன்னிறைவான பாரதத்திற்கான கதவுகளை அகலத் திறந்து கொண்டிருக்கிறது. உள்ளூர்ப் பொருட்களுக்குக் குரல் கொடுப்போம் என்ற இந்த இயக்கம், ஒட்டுமொத்த நாட்டின் பொருளாதாரத்திற்குமே பலம் சேர்க்கிறது. உள்ளூர்ப் பொருட்களுக்குக் குரல் கொடுப்போம் இயக்கம் வேலைவாய்ப்பிற்கு உத்திரவாதம் அளிக்கிறது. இது வளர்ச்சிக்கான உத்திரவாதம், இது தேசத்தின் சரிசமமான வளர்ச்சிக்கான உத்திரவாதம். இதனால் நகர்ப்புற மற்றும் கிராமப்புறப் பகுதிகளிலும் சமமான சந்தர்ப்பங்கள் வாய்க்கும். இதன் வாயிலாக, வட்டார உற்பத்திப் பொருட்களின் மதிப்புக்கூட்டலுக்கான பாதையும் பிறக்கிறது, ஒருவேளை உலகப் பொருளாதாரத்தில் ஏற்றம்-வீழ்ச்சி வருமானால், உள்ளூர்ப் பொருட்களுக்குக் குரல் கொடுப்போம் என்ற மந்திரம், நமது பொருளாதாரத்தைப் பாதுகாக்கவும் செய்கிறது.
நண்பர்களே, பாரதநாட்டு உற்பத்திப் பொருட்களிடத்தில் இருக்கும் இந்த உணர்வு, பண்டிகைகளோடு மட்டும் நின்று போய் விடக்கூடாது. அடுத்து திருமணக்காலம் தொடங்கியாகி விட்டது. சில வணிகச் சங்கங்களின் அனுமானம் என்னவென்றால், திருமணங்களின் இந்தக் காலத்தில் கிட்டத்தட்ட 5 இலட்சம் கோடி ரூபாய் வியாபாரத்திற்கான சாத்தியக்கூறு இருக்கிறதாம். திருமணங்களோடு தொடர்புடைய வாங்குதலிலும் கூட, நீங்கள் அனைவரும் பாரதநாட்டுப் பொருட்களுக்கே மகத்துவம் அளிக்க வேண்டும். மேலும், திருமணப் பேச்சு என்று வரும் போது, ஒரு விஷயம் நீண்டநெடுங்காலமாகவே என் மனதை அரித்துக் கொண்டு வந்தது, என் மனதின் இந்த வலியை நான் என் குடும்ப உறவுகளிடத்திலே தெரிவிக்கவில்லை என்றால் யாரிடம் சென்று தெரிவிக்க? நீங்களே சிந்தித்துப் பாருங்கள், இப்போதெல்லாம் சில குடும்பங்களில் அயல்நாடுகளுக்குச் சென்று திருமணம் செய்யும் ஒரு புதிய பழக்கம் ஏற்பட்டு வருகிறது. இது தேவையா என்று யோசியுங்கள். பாரதநாட்டு மண்ணில், பாரத நாட்டவருக்கு இடையே நாம் திருமணங்களைக் கொண்டாடினோம் என்றால், தேசத்தின் பணம், தேசத்திலேயே இருக்கும். தேசத்தின் மக்களுக்கு உங்களுடைய திருமணத்தில் ஏதாவது ஒரு சேவை செய்யும் சந்தர்ப்பம் கிடைக்கும், சிறிய-எளிய ஏழைபாழைகள் கூட தங்கள் குழந்தைகளிடத்திலே உங்களுடைய திருமணத்தைப் பற்றிப் பேசுவார்கள். உள்ளூர்ப் பொருட்களுக்குக் குரல் கொடுப்போம் என்ற நோக்கத்திற்கு மேலும் உங்களால் வலு சேர்க்க முடியுமா? சிந்தித்துப் பாருங்கள். திருமணம் போன்ற நிகழ்ச்சிகளை ஏன் நாம் நமது நாட்டிலேயே நடத்திக் கொள்ளக்கூடாது? நீங்கள் விரும்பிய அமைப்பு ஒருவேளை இன்று இல்லாமல் இருக்கலாம் ஆனால், நாம் இத்தகைய ஏற்பாடுகளைச் செய்தால், தாமாகவே அமைப்புகள் மேம்பாடு அடையுமே. இது பெரிய செல்வந்தர்களின் குடும்பங்களோடு தொடர்புடைய விஷயம். என்னுடைய இந்த வலி, பெரியபெரிய குடும்பங்களைச் சென்று எட்டும் என்று நான் நம்புகிறேன்.
எனது குடும்பச் சொந்தங்களே, பண்டிகைகளின் இந்தப் பருவத்தில், மேலும் ஒரு பெரிய போக்கு காணக்கிடைக்கிறது. தீபாவளியை முன்னிட்டு, ரொக்கப்பணம் கொடுத்துப் பொருட்களை வாங்கக்கூடிய வழிமுறை மெல்லமெல்லமெல்ல இரண்டாவது ஆண்டாகத் தொடர்ந்து குறைந்து வருவதை நாம் காண்கிறோம். அதாவது இப்போது மக்கள் அதிக அளவில் டிஜிட்டல் பணப் பரிவர்த்தனையில் ஈடுபடத் தொடங்கி விட்டார்கள். இதுவும் கூட மிகவும் உற்சாகமளிக்கும் விஷயமாகும். நீங்கள் மேலும் ஒரு வேலையைச் செய்யலாம். ஒரு மாதக்காலத்திற்கு, நான் யுபிஐ மூலமோ, ஏதோ ஒரு டிஜிட்டல் வழி மூலமாக மட்டுமே பணத்தை அளிப்பேன், ரொக்கமாக அளிக்க மாட்டேன் என்று தீர்மானித்துக் கொள்ளுங்கள். பாரதத்தின் டிஜிட்டல் புரட்சியின் வெற்றி தான் இதை சாத்தியமாக்கி இருக்கிறது. ஒரு மாதம் ஆன பிறகு, நீங்கள் உங்களுடைய அனுபவங்கள், உங்கள் புகைப்படம் ஆகியவற்றைக் கண்டிப்பாக என்னோடு பகிருங்கள். நான் இப்போதே உங்களுக்கு என்னுடைய நல்வாழ்த்துக்களை அளித்து விடுகிறேன்.
எனது குடும்ப உறவுகளே, நமது இளைய நண்பர்கள் தேசத்திற்கு ஒரு பெரிய சந்தோஷமான சமாச்சாரத்தை அளித்திருக்கிறார்கள், இது நம்மனைவரையும் கௌரவத்தில் ஆழ்த்தக்கூடிய விஷயமாகும். புத்திக்கூர்மை, கருத்து, புதுமைக்கண்டுபிடிப்பு – இவையே இன்று பாரதநாட்டு இளைஞர்களின் அடையாளம் ஆகும். இதிலே தொழில்நுட்பத்தின் இணைவு காரணமாக அவர்களின் அறிவுசார் இயல்புகள் தொடர்ந்து அதிகரிக்கிறது, இது உள்ளபடியே தேசத்தின் வல்லமைக்கு வளம் சேர்க்கும் மகத்துவமான முன்னேற்றமாகும். 2022ஆம் ஆண்டிலே, பாரத நாட்டவரின் காப்புரிமைக் கோரல்கள் 31 சதவீதத்திற்கும் மேற்பட்டு அதிகரிப்பினைக் கண்டிருக்கிறது என்பது உங்களுக்கு சந்தோஷத்தை அளிக்கும். உலக அறிவுசார் சொத்து அமைப்பு, ஒரு மிகப்பெரிய சுவாரசியமான அறிக்கையை அளித்திருக்கிறது. இந்த அறிக்கையின்படி, காப்புரிமை கோரும் முதல் பத்து தேசங்கள் விஷயத்தில் கூட இப்படி எப்போதுமே நடைபெற்றது கிடையாது. இந்த அருமையான சாதனைக்காக நான் நமது இளைய நண்பர்களுக்குப் பலப்பல பாராட்டுக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். தேசம் அனைத்துக் கட்டங்களிலும் உங்களுக்குத் துணை நிற்கிறது என்று இளைய நண்பர்களே, உங்களுக்கு நம்பிக்கை அளிக்க நான் விரும்புகிறேன். அரசாங்கம் மேற்கொண்டிருக்கும் நிர்வாக மற்றும் சட்டரீதியான மேம்பாடுகளுக்குப் பிறகு, இன்று நமது இளைஞர்கள் புதியதோர் சக்தியோடு, பெரிய அளவில் புதுமைகளைக் கண்டுபிடிக்கும் பணியில் ஈடுபட்டிருக்கிறார்கள். பத்தாண்டுகள் முன்பாக இருந்த புள்ளிவிவரங்களோடு ஒப்பீடு செய்து பார்க்கையில், இன்று, நமது காப்புரிமைகளுக்கு பத்து மடங்கு அதிக அங்கீகாரம் கிடைத்திருக்கிறது. காப்புரிமைகள் மூலம் தேசத்தின் அறிவுசார் சொத்து அதிகரிக்கிறது என்பது மட்டுமல்ல, இதனால் புதியபுதிய சந்தர்ப்பங்களுக்கான வாயிலும் திறக்கிறது என்பதை நாமனைவரும் நன்கறிவோம். இதுமட்டுமல்ல, இவை நமது ஸ்டார்ட் அப்புகளின் பலத்தையும், திறனையும் கூட மேம்படுத்துகின்றன. இன்று நமது பள்ளிக்கூடக் குழந்தைகளிடத்திலும் கூட நூதனம் படைக்கும் உணர்வுக்கு ஊக்கமளிக்கப்பட்டு வருகிறது. அடல் டிங்கரிங்க் லேப், அடல் புதுமைகள் படைக்கும் திட்டம், கல்லூரிகளில் இன்குபேஷன் மையங்கள், ஸ்டார்ட் அப் இண்டியா இயக்கம் போன்ற தொடர் முயற்சிகளின் விளைவுகள் நாட்டுமக்கள் முன்பாக இருக்கின்றது. இதுவும் கூட பாரதத்தின் இளைஞர் சக்தி, பாரதத்தின் நூதனம் படைக்கும் சக்தி ஆகியவற்றுக்கான பிரத்யட்சமான உதாரணங்கள். இதே உணர்வோடு மேலே நாம் பயணித்து வளர்ந்த பாரதம் என்ற நமது உறுதிப்பாட்டினை அடைந்தே தீருவோம்; ஆகையால் தான் நான் மீண்டும்மீண்டும் கூறுகிறேன், ஜய் ஜவான், ஜய் கிஸான், ஜய் விஞ்ஞான், ஜய் அனுசந்தான், அதாவது வாழ்க ஆய்வு.
எனக்குப் பிரியமான நாட்டுமக்களே, பாரத நாட்டிலே பெரும் எண்ணிக்கையில் மக்கள் திரளாகக் கூடும் திருவிழாக்கள் பற்றி சிலகாலம் முன்பாக மனதின் குரலில் விவாதித்தது உங்களுக்கு நினைவிருக்கலாம். அப்போது ஒரு போட்டி பற்றிய எண்ணமும் எழுந்தது. மக்கள் திருவிழாக்களோடு தொடர்புடைய புகைப்படங்களை தரவேற்றம் செய்வார்கள் என்பதே அந்த எண்ணம். கலாச்சார அமைச்சகம் இது தொடர்பாக Mela Moments Contest, அதாவது திருவிழா கணங்கள் என்ற ஒரு போட்டிக்கு ஏற்பாடு செய்திருந்தது. இதிலே ஆயிரக்கணக்கான மக்கள் பங்கெடுத்தார்கள், பலர் பரிசுகளையும் பெற்றார்கள் என்ற விஷயம் உங்களுக்கு சந்தோஷத்தை அளிக்கலாம். கோல்காத்தாவில் வசிக்கும் ராஜேஷ் தர் அவர்கள், சரக் மேளாவில் பலூன்கள் மற்றும் விளையாட்டுச் சாமான்களை விற்பனை செய்பவரின் அருமையான புகைப்படத்திற்காக பரிசினை வென்றார். இந்தத் திருவிழா ஊரகப்பகுதி வங்காளத்தில் மிகவும் பிரபலமானது. வாராணசியில் ஹோலியைக் காட்சிப்படுத்த அனுபம் சிங் அவர்கள் திருவிழாப் படங்களுக்கான விருதினைப் பெற்றார். அருண்குமார் நலிமேலா அவர்கள், குல்சாயி தசராவோடு தொடர்புடைய ஈர்ப்புடைய கோணத்தை வெளிப்படுத்தியமைக்கு விருதினைப் பெற்றார். இதே போல, பண்டர்புரின் பக்தியை வெளிப்படுத்திய புகைப்படம், மிகவும் அதிகமாக விரும்பப்பட்ட புகைப்படங்களில் ஒன்றாக இருந்தது, இதை மஹாராஷ்டிரத்தின் ஒரு நபரான ஸ்ரீமான் ராகுல் அவர்கள் அனுப்பியிருந்தார். இந்தப் போட்டியில் பல படங்கள், திருவிழாக்களின் போது கிடைக்கும் வட்டாரத் தின்பண்டங்கள் தொடர்பாகவும் இருந்தது. இதிலே புரலியாவில் வசிக்கும் அலோக் அவிநாஷ் அவர்களின் படம் விருதினை வென்றது. இவர் ஒரு திருவிழாக்காலத்தில் வங்காளத்தின் ஊரகப்பகுதியின் உணவு பற்றிக் காட்டியிருந்தார். பிரணப் பஸாக் அவர்களின் படமும் விருதினைப் பெற்றது. இதிலே பகோரியா மஹோத்சவத்தின் போது பெண்கள் குல்ஃபியை சுவைத்துக் கொண்டிருக்கும் புகைப்படம் அனுப்பப்பட்டிருந்தது. இதுவும் விருதினைப் பெற்றது. ரூமிலா அவர்கள் சத்திஸ்கட்டின் ஜக்தல்பூரின் ஒரு கிராமத்தில் நடைபெற்ற விழாவிலே, பஜியா தின்பண்டத்தைச் சுவைத்துக் கொண்டிருந்த பெண்களைப் படம்பிடித்து அனுப்பியிருந்தார், இதற்கும் பரிசு கிடைத்தது.
நண்பர்களே, மனதின் குரல் வாயிலாக இன்று ஒவ்வொரு கிராமத்தின், ஒவ்வொரு பள்ளியின், ஒவ்வொரு பஞ்சாயத்தின் முன்பாகவும் வைக்கப்படும் வேண்டுகோள் என்னவென்றால், நீங்கள் தொடர்ந்து இவை போன்ற போட்டிகளுக்கு ஏற்பாடு செய்யுங்கள் என்பது தான். இப்போதெல்லாம் சமூக ஊடகங்களில் எந்த அளவுக்கு சக்தி இருக்கிறது என்றால், தொழில்நுட்பம் மற்றும் செல்பேசி ஆகியன வீடுதோறும் சென்றடைந்து விட்டன. உங்களுடைய உள்ளூர் திருவிழா அல்லது பொருள் ஆகட்டும், அவற்றை நீங்கள் உலக அளவுக்குக் கொண்டு செல்ல முடியும்.
நண்பர்களே, கிராமங்கள்தோறும் நடைபெறும் திருவிழாக்களைப் போல நமது நாட்டிலே பல்வேறு வகையான நடனங்கள் என்ற நமக்கே உரித்தான மரபு உள்ளது. ஜார்க்கண்ட், ஒடிஷா, வங்காளம் ஆகியவற்றின் பழங்குடியினத்தவரின் பகுதிகளில் ஒரு மிகவும் பிரபலமான நடனத்தின் பெயர் சஉ. நவம்பர் 15 முதல் நவம்பர் 17 வரை, ஒரே பாரதம் உன்னத பாரதம் என்ற உணர்வோடு ஸ்ரீநகரில் சஉ விழாவிற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த நிகழ்ச்சியின் போது அனைவரும் சஉ நடனத்தின் ஆனந்தத்தை அனுபவித்தார்கள். ஸ்ரீநகரைச் சேர்ந்த இளைஞர்களுக்கு சஉ நடனத்தில் பயிற்சி அளிக்கப்பட ஒரு பட்டறைக்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதைப் போலவே, சில வாரங்கள் முன்பாக, கடுவா மாவட்டத்தில் பஸோஹலி விழாவிற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த இடம் ஜம்முவிலிருந்து 150 கிலோமீட்டர் தொலைவில் இருக்கிறது. இந்த விழாவில் வட்டாரக் கலைகள், நாட்டுப்புற நடனம் மற்றும் பாரம்பரியமிக்க ராம்லீலாவிற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
நண்பர்களே, பாரதநாட்டுக் கலாச்சாரத்தின் அழகு சௌதி அரேபியா நாட்டிலும் கூட அனுபவிக்கப்பட்டு வருகிறது. இதே மாதம் தான் சவுதி அரேபியா நாட்டிலே சம்ஸ்கிருத உத்ஸவ், அதாவது சம்ஸ்கிருத திருவிழா என்ற பெயரில் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இது மிகவும் வித்தியாசமானதாக இருந்தது ஏனென்றால், நிகழ்ச்சி முழுவதுமே சம்ஸ்கிருதத்திலேயே இருந்தது. உரையாடல், இசை, நடனம் என அனைத்துமே சம்ஸ்கிருதத்தில் அமைந்திருந்தது, இதிலே அங்கிருக்கும் வட்டார மக்கள் பங்கெடுத்ததையும் காண முடிந்தது.
என் குடும்பச் சொந்தங்களே, தூய்மை பாரதம் இப்போது நாடு முழுவதிலும் பிரியமான விஷயமாகி விட்டது, எனக்குப் பிடித்தமான விஷயம் தான் ஐயமில்லை, மேலும் இதோடு தொடர்புடைய செய்தி ஏதேனும் எனக்குக் கிடைத்தால், என்னுடைய மனது இயல்பாகவே அதன்பால் சென்று விடுகிறது. தூய்மை பாரதம் இயக்கமானது, தூய்மையாக இருத்தல்-வைத்திருத்தல், பொது இடங்களில் தூய்மை ஆகியவை தொடர்பாக மக்களின் எண்ணத்தில் மாற்றமேற்படுத்தி இருக்கிறது. இந்த முன்னெடுப்பு இன்று தேசிய உணர்வின் அடையாளமாக மாறி விட்டது, இது கோடிக்கணக்கான நாட்டுமக்களின் வாழ்க்கையை சிறப்பானதாக ஆக்கியிருக்கிறது. இந்த இயக்கமானது பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த மக்களை, குறிப்பாக இளைஞர்களிடத்திலே சமூகப் பங்களிப்பிற்கான உத்வேகத்தை ஏற்படுத்தியிருக்கிறது. இதைப் போலவே மேலும் ஒரு மெச்சக்கூடிய முயற்சி சூரத்திலே காணக் கிடைக்கிறது. இளைஞர்களின் ஒரு அணியானது இங்கே ப்ராஜெக்ட் சூரத், அதாவது சூரத் திட்டத்தை தொடக்கியிருக்கிறது. தூய்மை மற்றும் நீடித்த வளர்ச்சிக்கான மிகச் சிறப்பான எடுத்துக்காட்டாக சூரத் பகுதியை ஒரு மாதிரி-நகராக மாற்ற வேண்டும் என்பதே இதன் இலக்கு. சஃபாய் சண்டே, அதாவது தூய்மை ஞாயிறு என்று பெயரிடப்பட்ட இந்த முயற்சியில் சூரத்தின் இளைஞர்கள் முதலில் பொது இடங்களில், டூமாஸ் கடற்கரையில் தூய்மைப் பணிகளை மேற்கொண்டார்கள். பிறகு இவர்கள் தாபி நதிக் கரைகளில் தூய்மைப்பணியில் மிக அர்ப்பணிப்போடு ஈடுபட்டார்கள், சில காலத்திலேயே இதோடு தொடர்புடைய நபர்களின் எண்ணிக்கை 50,000ற்கும் அதிகமானது என்பது உங்களுக்கு மகிழ்ச்சியை அளிக்கும். மக்கள் அளித்த ஆதரவு, குழுவினரின் மனங்களில் தன்னபிக்கையை அதிகப்படுத்தியது; இதன் பிறகு அவர்கள் குப்பைக் கூளங்களைச் சேகரிக்கும் பணியைத் தொடக்கினார்கள். இந்தக் குழுவானது, இலட்சக்கணக்கான கிலோ அளவுக்கு குப்பைகளை அகற்றியது என்பது உங்களுக்கு ஆச்சரியத்தை அளிக்கலாம். கள அளவில் மேற்கொள்ளப்பட்ட இப்படிப்பட்ட முயற்சி, மிகப் பெரிய மாற்றத்தை ஏற்படுத்த வல்லது.
நண்பர்களே, குஜராத்திலிருந்தே மேலும் ஒரு தகவல் கிடைத்திருக்கிறது. சில வாரங்கள் முன்பாக, அம்பாஜியில் பாதர்வீ பூனம் திருவிழாவிற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது, இதிலே 50 இலட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் கலந்து கொண்டார்கள். இந்தத் திருவிழா ஒவ்வொரு ஆண்டும் நடைபெறுகிறது. இதன் மிகப்பெரிய சிறப்பம்ஸம் என்னவென்றால், இந்தத் திருவிழாவிற்கு வந்த அனைவரும் கப்பர் குன்றின் ஒரு பெரிய பகுதியில் தூய்மை இயக்கத்தை மேற்கொண்டார்கள். கோயில்களுக்கு அருகிலே இருக்கும் பகுதிகள் அனைத்தையும் தூய்மையாக வைத்திருக்க இந்த இயக்கம் மிகவும் கருத்தூக்கம் ஏற்படுத்தக்கூடியதாக இருக்கிறது.
நண்பர்களே, தூய்மை என்பது ஏதோ ஒரு நாள் கூத்து அல்ல, ஒரு வார இயக்கமல்ல, மாறாக இது வாழ்க்கையில் கடைப்பிடிக்க வேண்டிய பணியாகும் என்று நான் எப்போதுமே கூறி வந்திருக்கிறேன். நாம் நமக்கருகிலே இருக்கும் சிலரைப் பார்க்கிறோம், அவர்கள் தங்களுடைய வாழ்க்கை முழுவதையுமே தூய்மையோடு தொடர்புடைய விஷயங்களில் ஈடுபடுத்துகிறார்கள். தமிழ்நாட்டின் கோயமுத்தூரில் வசிக்கும் லோகநாதன் அவர்கள் ஈடிணையில்லாதவர். சிறுவயதிலேயே ஏழைக் குழந்தைகளின் கிழிந்த உடைகளைப் பார்த்து இவர் மிகவும் மன உளைச்சலுக்கு உள்ளாவார். இதன் பிறகு இவர் இப்படிப்பட்ட குழந்தைகளுக்கு உதவ வேண்டும் என்ற உறுதி மேற்கொண்டார், தனது வருமானத்தின் ஒரு பகுதியில் இவர் தானம் செய்வதைத் தொடக்கினார். பணத் தட்டுப்பாடு ஏற்பட்ட வேளையில், லோகநாதன் அவர்கள் கழிப்பறைகளைக் கூட தூய்மை செய்து, ஏழைக் குழந்தைகளுக்கு உதவும் பணியில் ஈடுபட்டார். கடந்த 25 ஆண்டுகளில் முழுமையான அர்ப்பணிப்பு உணர்வோடு தனது இந்தப் பணியில் ஈடுபட்டு வரும் இவர் இதுவரை 1500க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு உதவிகளைச் செய்திருக்கிறார். இப்படிப்பட்ட முயற்சிகளுக்கு மீண்டும் ஒரு முறை என் பாராட்டுக்களைத் தெரிவிக்கிறேன். நாடெங்கிலும் நடைபெறும் இவை போன்ற பல முயற்சிகள் நமக்கு உத்வேகத்தை அளிப்பதோடு மட்டுமல்லாமல், புதியதாக நாமும் ஒன்றைச் செய்ய வேண்டும் என்ற பேரார்வத்தையும் ஏற்படுத்துகின்றது.
எனது குடும்ப உறவுகளே, 21ஆம் நூற்றாண்டின் மிகப்பெரிய சவால்களில் ஒன்று நீர் பாதுகாப்பு. நீரைப் பாதுகாப்பது, வாழ்க்கையைக் காப்பதற்கு ஈடான ஒன்று. நாம் சமூகத்தன்மையின் இந்த உணர்வோடு கூட ஒரு பணியைப் புரியும் போது, வெற்றியும் கிடைக்கிறது. இதற்கான ஒரு உதாரணம், தேசத்தின் அனைத்து மாவட்டங்களிலும் உருவாகி வரும் அமுத நீர்நிலைகளும் ஆகும். அமுதப் பெருவிழாக் காலத்தில் பாரதம் 65,000க்கும் மேற்பட்ட அமுத நீர்நிலைகளை உருவாக்கியிருக்கிறது, இது வரவிருக்கும் தலைமுறையினருக்குப் பேருதவியாக இருக்கும். இப்போது நமது பொறுப்பு என்னவென்றால், எங்கெல்லாம் அமுத நீர்நிலை உருவாக்கப்பட்டிருக்கிறதோ, அதைத் தொடர்ந்து நாம் பராமரித்து வர வேண்டும், இவை நீர்பராமரிப்பின் முதன்மையான ஊற்றாக இருந்து வர வேண்டும்.
நண்பர்களே, நீர் பாதுகாப்பு பற்றிய இப்படிப்பட்ட விவாதங்களுக்கு இடையே குஜராத்தின் அம்ரேலியில் நடந்த ஜல உத்சவம் பற்றியும் தெரிய வந்தது. குஜராத்திலே 12 மாதங்களும் பெருகியோடும் நதிகளும் இல்லை, ஆகையால் மக்கள் பெரும்பாலும் மழைநீரையே சார்ந்து வாழ வேண்டியிருக்கிறது. கடந்த 20-25 ஆண்டுகளில் அரசாங்கமும், சமூக அமைப்புக்களும் முயற்சி மேற்கொண்ட பிறகு, நிலைமையில் மாற்றம் கண்டிப்பாக ஏற்பட்டிருக்கிறது. இதிலே ஜல் உற்சவத்தின் பெரும் பங்களிப்பு இருக்கிறது. அம்ரேலியில் நடந்த ஜல் உற்சவத்தின் போது, நீர் பாதுகாப்பு மற்றும் ஏரிகளின் பராமரிப்பு தொடர்பாக மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இதிலே நீர் விளையாட்டுக்களுக்கும் ஊக்கமளிக்கப்பட்டது, நீர் பாதுகாப்பு வல்லுநர்களோடு கலந்தாய்வு மேற்கொள்ளப்பட்டது. நிகழ்ச்சியில் பங்கெடுத்த மக்களுக்கு மூவண்ண நீரூற்றுக்கள் மிகவும் பிடித்துப் போயிற்று. இந்த நீர் உற்சவத்திற்கான ஏற்பாடுகளை சூரத்தில் வைர வியாபாரத்திற்குப் பெயர் போன சாவ்ஜி பாயி டோலகியா அவர்களின் நிறுவனம் செய்திருந்தது. நான் இதில் பங்கெடுத்த ஒவ்வொரு நபருக்கும் பாராட்டுக்களைத் தெரிவிக்கிறேன், நீர் பாதுகாப்பிற்காக இப்படிப்பட்ட பணிகளைப் புரிய நல்வாழ்த்துக்களைத் தெரிவிக்கிறேன்.
எனக்குப் பிரியமான குடும்ப உறவுகளே, இன்று உலகெங்கிலும் திறன் மேம்பாட்டின் மகத்துவத்திற்கு ஏற்புத்தன்மை கிடைத்து வருகிறது. நாம் ஒருவருக்கு ஏதோ ஒரு திறனைக் கற்பிக்கும் போது, அவருடைய திறனை மட்டும் நாம் வளப்படுத்தவில்லை, மாறாக வருமானத்திற்கான ஒரு வழியையும் அவருக்கு ஏற்படுத்திக் கொடுக்கிறோம். ஒரு அமைப்பு 40 ஆண்டுகளாக திறன் மேம்பாட்டுப் பணியில் ஈடுபட்டு வருகிறது என்ற தகவல் எனக்குக் கிடைத்த போது, எனக்கு மிகவும் சந்தோஷமாக இருந்தது. இந்த அமைப்பு, ஆந்திரப் பிரதேசத்தின் ஸ்ரீகாகுளத்தில் இருக்கிறது, இதன் பெயர் பெல்ஜிபுரம் யூத் கிளப். திறன் மேம்பாட்டின் மீது கவனம் செலுத்தும் பெல்ஜிபுரம் யூத் கிளப்பானது, கிட்டத்தட்ட 7000 பெண்களுக்கு அதிகாரப்பங்களிப்பு அளித்திருக்கிறது. இதிலே பெரும்பாலான பெண்கள் இன்று தங்களுடைய சுய முயற்சியில் பணியாற்றி வருகிறார்கள். இந்த அமைப்பானது குழந்தைத் தொழிலாளர்களுக்கும் கூட ஏதோ ஒரு திறனைக் கற்பித்து அவர்களை இந்தக் கொடிய வளையத்திலிருந்து மீட்டெடுக்க உதவி புரிகிறது. பெல்ஜிபுரம் யூத் கிளப்பின் குழுவானது, விவசாயிகள் உற்பத்தியாளர் சங்கம் அதாவது FPOக்களோடு தொடர்புடைய விவசாயிகளுக்கும் புதிய திறனைக் கற்பித்து, இதனால் பெரிய அளவில் விவசாயிகளும் அதிகாரப் பங்களிப்பு பெற்றவர்களாக ஆகியிருக்கிறார்கள். தூய்மை தொடர்பாகவும் யூத் கிளப்பானது கிராமங்கள்தோறும் விழிப்புணர்வைப் பரப்பி வருகிறது. பல கழிப்பறைகளை உருவாக்குவதிலும் கூட இவர்கள் உதவி புரிந்திருக்கிறார்கள். இந்த அமைப்போடு தொடர்புடைய அனைவருக்கும், திறன் மேம்பாட்டுப் பணிகளுக்காக பலப்பல பாராட்டுக்களைத் தெரிவிக்கிறேன். இன்று தேசத்தின் கிராமங்கள்தோறும் திறன் மேம்பாட்டிற்கென இப்படிப்பட்ட சமூக அளவிலான முயற்சிகளின் தேவை இருக்கிறது.
நண்பர்களே, ஒரு இலக்கினை அடைய சமூகரீதியிலான முயற்சிகள் மேற்கொள்ளப்படும் போது வெற்றியின் உயரமும் கூட மேலும் அதிகமாகி விடுகிறது. நான் உங்கள் அனைவரோடும் லத்தாக்கின் ஒரு உத்வேகமளிக்கக்கூடிய உதாரணத்தைப் பகிர விரும்புகிறேன். நீங்கள் பஷ்மீனா சால்வையைப் பற்றி அவசியம் கேள்விப்பட்டிருப்பீர்கள். கடந்த சில காலமாக லத்தாக்கைச் சேர்ந்த பஷ்மீனா பற்றியும் விரிவாக விவாதிக்கப்பட்டு வருகிறது. லத்தாக்கி பஷ்மீனா, Looms of Ladakh என்ற பெயரில், உலகெங்கும் உள்ள சந்தைகளைச் சென்று சேர்கிறது. இதைத் தயார் செய்ய 15 கிராமங்களைச் சேர்ந்த 450க்கும் அதிகமான பெண்கள் ஈடுபடுகிறார்கள் என்பது உங்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தலாம். முன்பெல்லாம் இவர்கள் தங்களுடைய தயாரிப்புக்களை அங்கே வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு மட்டுமே விற்று வந்தார்கள். ஆனால் இப்போது டிஜிட்டல் பாரதம் என்ற நிலையில் இவர்கள் தயாரித்த பொருட்கள், நாடெங்கிலும், உலகெங்கிலும் பல்வேறு சந்தைகளைச் சென்றடையத் தொடங்கியிருக்கிறது. அதாவது நமது உள்ளூர் பொருட்கள் உலகளாவிய அளவுக்குச் சென்றிருக்கிறது, இதனால் இந்தப் பெண்களின் வருவாயும் அதிகரித்திருக்கிறது.
நண்பர்களே, பெண்சக்தியின் இப்படிப்பட்ட வெற்றிகள் தேசத்தின் அனைத்து மூலைமுடுக்கெங்கும் காணக் கிடைத்திருக்கின்றன. இத்தகைய விஷயங்களை அதிக அளவில் வெளிக்கொணருவது தான் அவசியமான ஒன்று. இதை வெளிச்சம் போட்டுக் காட்ட மனதின் குரலை விடச் சிறப்பாக வேறு என்ன இருக்க முடியும்? நீங்களும் கூட இப்படிப்பட்ட உதாரணங்களை என்னோடு அதிக அளவில் பகிருங்கள். நானும் கூட அவற்றை உங்கள் மத்தியில் கொண்டு தர முழு முயற்சியை மேற்கொள்வேன்.
எனதருமை குடும்பச் சொந்தங்களே, மனதின் குரலில் நாம் இப்படிப்பட்ட சமூக முயற்சிகள் குறித்து விவாதித்து வந்திருக்கிறோம், இதன் காரணமாக சமூகத்தில் பெரியபெரிய மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டிருக்கின்றன. மனதின் குரலின் மேலும் ஒரு சாதனை என்றால், இது வீடுதோறும் வானொலியை மேலும் அதிகம் விரும்பப்படும் ஒன்றாக ஆக்கியிருக்கிறது என்பது தான். மைகவ் தளத்தில் உத்தர பிரதேசத்தின் அம்ரோஹாவின் ராம் சிங் பௌத் அவர்களிடமிருந்து ஒரு கடிதம் வந்திருக்கிறது. ராம் சிங் அவர்கள் கடந்த சில தசாப்தங்களாகவே வானொலி சேகரிப்பில் ஈடுபட்டு வந்திருக்கிறார். மனதின் குரலுக்குப் பிறகு தன்னுடைய வானொலி காட்சியகத்தின் மீது மக்களின் ஆர்வம் அதிகரித்திருப்பதாக இவர் கூறுகிறார். இதே போல மனதின் குரல் அளித்த கருத்தூக்கத்தால் உந்தப்பட்டு, அஹ்மதாபாதுக்கு அருகே ப்ரேரணா தீர்த் புனித அமைப்பு, சுவாரசியமான ஒன்றைக் காட்சிப்படுத்தியிருக்கிறது. இதிலே நாடு-அயல்நாடுகளைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்ட பழைமையான வானொலிகள் காட்சிப்படுத்தப்பட்டிருக்கின்றன. இங்கே மனதின் குரலின் இதுவரையிலான அனைத்துப் பகுதிகளையுமே செவிமடுக்க முடியும். மேலும் பல எடுத்துக்காட்டுகள் உள்ளன, இவற்றிலிருந்து என்ன தெரிய வருகிறது என்றால், மக்கள் எப்படி மனதின் குரலால் ஊக்கப்பட்டுத் தங்களின் பணிகளைத் தொடங்கியிருக்கிறார்கள் என்பது தான். இப்படிப்பட்ட மேலும் ஒரு உதாரணம் கர்நாடகத்தின் சாம்ராஜ்நகரின் வர்ஷா அவர்களுடையது. தற்சார்பு உடையவராக இவர் ஆக, மனதின் குரல் இவருக்கு உத்வேகமளித்திருக்கிறது. இந்த நிகழ்ச்சியின் ஒரு பகுதியால் ஊக்கமடைந்து இவர் வாழைப்பழத்திலிருந்து இயற்கை உரம் தயாரிக்கும் பணியை ஆரம்பித்தார். இயற்கையின்பால் மிகுந்த ஈடுபாடு கொண்டிருக்கும் வர்ஷா அவர்களின் இந்த முன்னெடுப்பு, மற்றவர்களுக்கு வேலைவாய்ப்பிற்கான வாய்ப்பினை அமைத்துக் கொடுத்திருக்கிறது.
என் இதயம் நிறைந்த குடும்பச் சொந்தங்களே, நாளை நவம்பர் மாதம் 27ஆம் தேதி, கார்த்திகைப் பௌர்ணமித் திருநாள். இந்த நாளன்று தான் தேவ் தீபாவளியும் கொண்டாடப்படுகிறது. காசியிலே தேவ் தீபாவளியைக் கண்டிப்பாகப் பார்க்க வேண்டும் என்று என் மனம் அவாவுகிறது. இந்த முறை என்னமோ நான் காசிக்குச் செல்ல இயலாது என்றாலும், மனதின் குரல் வாயிலாக பனாரஸின் மக்களுக்கு என்னுடைய நல்வாழ்த்துக்களைக் கண்டிப்பாக அனுப்பி வைக்கிறேன். இந்த முறையும் கூட காசியின் படித்துறைகளில் இலட்சக்கணக்கான தீபங்கள் ஏற்றப்படும், பிரமாதமான ஆரத்தி நடைபெறும், லேஸர் காட்சி நடக்கும், இலட்சக்கணக்கான எண்ணிக்கையில் நாடு-அயல்நாடுகளிலிருந்து வந்திருப்போர் தேவ தீபாவளியின் ஆனந்தத்தில் திளைப்பார்கள்.
நண்பர்களே, நாளை பௌர்ணமி தினத்தன்று தான் குரு நானக் அவர்கள் பிறந்த நாளும் ஆகும். குரு நானக் அவர்களின் விலைமதிப்பில்லாத செய்தி பாரதத்திற்கு மட்டுமல்ல, உலகெங்கிலும் இருக்கும் மக்களுக்கும், இன்றும் உத்வேக காரணியாகவும், பேசப்படும் கருத்தாகவும் இருக்கிறது. இது நமக்கு எளிமை, நல்லிணக்கம், மற்றோரிடம் அர்ப்பணிப்பு உணர்வு ஆகியவற்றுக்கான கருத்தூக்கத்தை அளிக்கிறது. குரு நானக் தேவ் அவர்களின் சேவையுணர்வு, சேவைப் பணிகளுக்கான கற்பித்தலை அளித்திருக்கிறது, அதனைப் நமது சீக்கிய சகோதர-சகோதரிகள், உலகெங்கிலும் பின்பற்றி வருவதை நாம் கண்டு வருகிறோம். நான் மனதின் குரலின் அனைத்து நேயர்களுக்கும் குரு நானக் தேவ் அவர்கள் பிறந்த நாளுக்கான பலப்பல நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
எனதருமைக் குடும்பச் சொந்தங்களே, மனதின் குரலில் இந்த முறை இம்மட்டே. கண்மூடித் திறக்கும் வேளையிலே 2023ஆம் ஆண்டு நிறைவை நோக்கி முன்னேறி விட்டது. ஒவ்வொரு முறையைப் போலவும் நாம் எல்லோரும் என்ன நினைக்கிறோம் என்றால், அட, இத்தனை விரைவாக இந்த ஆண்டு கடந்து விட்டதே, என்று தான். ஆனால், இந்த ஆண்டு கணக்கில்லாத சாதனைகளை பாரதத்திற்கு அளிப்பதாக அமைந்தது, பாரதத்தின் சாதனைகள், ஒவ்வொரு பாரத நாட்டவரின் சாதனைகளும் ஆகும். மனதின் குரல் பாரத நாட்டவரின் இப்படிப்பட்ட சாதனைகளை வெளிப்படுத்துவதில் சக்திவாய்ந்த ஊடகமாக ஆகியிருக்கிறது என்பது எனக்கு மட்டற்ற மகிழ்ச்சியை அளிக்கிறது. அடுத்த முறை நாட்டுமக்களின் ஏராளமான வெற்றிகளோடு மீண்டும் உங்களை வந்து சந்திக்கிறேன். அது வரை எனக்கு விடை தாருங்கள் அன்பு நெஞ்சங்களே. பலப்பல நன்றிகள். வணக்கம்.
தமிழகத்தில் ஆவின் நிறுவனம் அதல பாதாளத்திற்கு சென்று கொண்டிருப்பதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை குறிப்பிட்டார். மதுரையில் செய்தியாளரிடம் அவர் கூறியது:
காமராஜர் மீது பொய்ப் புகார்களைக் கூறி ஆட்சிக்கு வந்தவர்கள்தான் திமுக.,வினர்! திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியில் தமிழகத்தில் சட்ட ஒழுங்கு சீர்குலைவு. எங்கு பார்த்தாலும் லஞ்சம். மக்கள் பிரச்சனையை தீர்க்க ஆர்வம் காட்டவில்லை. இவை போன்றவை அன்றாட நிகழ்வாகும்.
தவறுகள் செய்கின்ற யாராக இருந்தாலும் அவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது வருமான வரி துணையின் கடமையாகும். கடந்த இரண்டு ஆண்டுகளாக திமுக., அமைச்சர்கள் சொல்கின்ற குற்றச்சாட்டுகளுக்கு அவ்வப்போது நாங்கள் பதில் அளித்து வருகிறோம்.
திமுகவில் பல கோழைகள் அமைச்சராக உள்ளனர். அதற்கு உதாரணம் அமைச்சர் மனோ தங்கராஜ். பாரதப் பிரதமரைப் பற்றி தவறாக டுவீட் செய்து, எதிர்ப்புகள் வந்ததும், அதை டெலிட் செய்தவர் தான் அமைச்சர் மனோ தங்கராஜ் என்று பேசினார்.
முன்னதாக, மதுரையில் சி.ஐ.ஐ. யங் இந்தியன் அமைப்பு சார்பில் நடந்த கருத்தரங்கில் தமிழக பா.ஜ. தலைவர் அண்ணாமலை பேசினார். அப்போது, தமிழகத்தில் ஆவின் அதல பாதாளத்துக்குச் சென்று கொண்டிருக்கிறது என்று குறிப்பிட்டுப் பேசிய தமிழக பாஜக., தலைவர் அண்ணாமலை, அமைச்சர் மனோ தங்கராஜுக்கு சவால் விட்டார்.
மேலும் அவர் பேசியதாவது: தமிழகத்தில் அடிப்படை அரசியல் நாகரிகம் இல்லை. இவர்கள் சொல்லும் பொய்களுக்கு ஏற்ப அதே மொழியில் தான் நான் திருப்பி பதில் சொல்கிறேன். தற்போது கட்சியை நடத்துபவர்கள் அதற்கு முன்னால் இருந்த கட்சித் தலைவர் மாதிரி ஒரு சதவீதம் கூட வாழவில்லை.
கோயில் சொத்துக்களை இஷ்டம் போல செலவு செய்கின்றனர். எந்த அரசியல் கட்சியிலும் நூறு சதவீத நல்லவர்கள் உள்ளனர் என சொல்ல முடியாது. பா. ஜ. விலும் எங்களைத் தாண்டி சில தவறுகள் நடந்திருக்கலாம். ஆனால் நாங்கள் ஆட்சிக்கு வரும்போது மக்களின் வரிப்பணத்தை கையாளும்போது தவறு நடந்து விடக்கூடாது என்பதுதான் எங்கள் எண்ணம்.
ஊழல்வாதிகள், தவறு செய்தவர்கள் சிறைக்கு உள்ளே தான் இருக்க வேண்டும். பாதயாத்திரைக்கு அடிக்கடி தடை ஏற்படுகிறது. கட்சிப்பணி, நிர்வாகம், இயற்கை சீற்றம், உடல் நிலையை கருத்தில் கொண்டு நடைபயணம் மேற்கொள்ள வேண்டியுள்ளது. வரும் ஜன.28ம் தேதிக்குள் பாதயாத்திரை முடிந்துவிடும் என்று அவர் பேசினார்.
இதனிடையே, தாங்கள் “சாவர்க்கர் பரம்பரை அல்ல என்றும், பெரியாரின் பேரன் என்றும் அமைச்சர் மனோ தங்கராஜ் பதில் அளித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்ட சமூகத் தளப் பதிவில், மன்னிப்பு கேட்காவிட்டால் என் தலையை சீவி விடுவாயா?, மன்னிப்பு கேட்க சாவர்க்கர் பரம்பரை அல்ல; பெரியாரின் பேரன் என பதில் கொடுத்துள்ளவர், எனது கருத்தில் எள்ளளவும் மாற்றம் இல்லை என்றும் தெரிவித்துள்ளார்.
வடமாநில பால் உற்பத்தி நிறுவனங்களிடம் கையூட்டு பெற்றதற்கான ஆதாரங்களைப் பொது வெளியில் வெளியிட வேண்டும்; இல்லையென்றால், அமைச்சர் மனோ தங்கராஜ் மன்னிப்பு கேட்க வேண்டும் என அண்ணாமலை முன்னதாக அவரை எச்சரித்திருந்தார்.
மதுரை: இலங்கையில் இருந்து வரவேண்டிய ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம் ரத்தானதால், மதுரையில் இருந்து இலங்கை செல்ல வேண்டிய 189 பயணிகள் தவிப்பு. மாற்று ஏற்பாடாக நாளை இலங்கையில் இருந்து மதுரை வரும் விமான மூலம் மீண்டும் இலங்கை செல்ல ஏற்பாடு செய்யப்பட்டது.
மதுரையில் இருந்து இலங்கையில் இருந்து மதுரை வரவேண்டிய லங்கன் ஏர்லைன்ஸ் விமானம் தொழில்நுட்ப கோளாறு காரணமாக ரத்து செய்யப்பட்டதால், இலங்கையில் இருந்து விமானம் மதுரை வரவில்லை. மேலும், மதுரையில் இருந்து இலங்கை செல்ல காத்திருந்த 189 பயணிகள் மீண்டும் விமானம் மூலம் இலங்கை செல்ல நாளை வருமாறு அறிவுறுத்தி பயணிகளை திருப்பி அனுப்பி உள்ளனர.
திருவில்லிபுத்தூர் மரம் அறுக்கும் மில்லில் தீ விபத்து…
தீயை அணைக்க முயன்ற காவலாளி மூச்சுத்திணறி பலி…..
திருவில்லிபுத்தூர் : விருதுநகர் மாவட்டம் திருவில்லிபுத்தூர், அய்யம்பட்டி தேவர் தெரு பகுதியைச் சேர்ந்தவர் பெரியகருப்பன் (60). இவர் அதே பகுதியில் உள்ள மரம் அறுக்கும் மில்லில், இரவு நேரக் காவலாளியாக வேலை பார்த்து வந்தார்.
இன்று அதிகாலை நேரத்தில், மில்லில் அறுப்பதற்காக வைக்கப்பட்டிருந்த மரக்குவியலில் திடீரென்று தீப்பிடித்தது. இதனை பார்த்த பெரியகருப்பன், தீயை அணைக்க முயற்சி செய்துள்ளார். தீ விபத்து குறித்து திருவில்லிபுத்தூர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
நிலைய அதிகாரி முத்துச்செல்வம் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று, சுமார் ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். தீயை அணைக்கும் போது ஏற்பட்ட புகைமூட்டத்தில் சிக்கிய பெரியகருப்பன் மயங்கி விழுந்தார்.
இதனை பார்த்து அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு, திருவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து திருவில்லிபுத்தூர் நகர் காவல்நிலைய போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திண்டுக்கல்லில் அமலாக்கத்துறை சோதனை
திண்டுக்கல் ஜி டி என் சாலையில் உள்ள, பிரபல தொழிலதிபர் ரத்தினம் வீடு மற்றும் அலுவலகங்களில் 2-வது முறையாக அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். வீட்டு வாசலில் துப்பாக்கி ஏந்திய துணை ராணுவத்தினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
திண்டுக்கல்லில் கஞ்சா வழக்கில் கைதான வாலிபர் போலீசை தாக்கி தப்பி ஓட்டம்:
திண்டுக்கல்: தேனியில் இருந்து, திண்டுக்கல்லுக்கு காரில் கஞ்சா கடத்தி வருவதாக கிடைத்த தகவலின் பேரில், போதைப்பொருள் கடத்தல் நுண்ணறிவுப் பிரிவு இன்ஸ்பெக்டர் விஜயகுமார் தலைமையிலான போலீசார் நேற்று இரவு செம்பட்டி பகுதியில் வாகன தணிக்கையின் போது, தேனியில் இருந்து திண்டுக்கல் வந்த 2 கார்களை நிறுத்தி சோதனை நடத்தினர்.
அந்த காரில் 22 கிலோ கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டு, காரில் வந்த கம்பத்தைச் சேர்ந்த சதீஸ்குமார் (25), நவீன்குமார் (30), பாண்டீஸ்வரன் (28) ஆகிய 3 பேரை கைது செய்து மருத்துவ பரிசோதனைக்காக 3 பேரையும் திண்டுக்கல் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அழைத்து வந்தபோது, சதீஸ்குமார் என்பவர் தப்பி ஓடினார்.
பாதுகாப்புக்காக நின்று கொண்டு இருந்த போலீஸ் நாகலிங்கம் (35) என்பவர் தடுக்க முயன்றபோது அவரையும் தாக்கி கீழே தள்ளி விட்டு ஓடினார். இதில், நாகலிங்கம் படுகாயமடைந்தார்.
இதனைத் தொடர்ந்து, அவரை தனிப்படை அமைத்து போலீசார் தேடி வருகின்றனர். பிடிபட்ட மற்ற 2 பேர்களான நவீன்குமார் மற்றும் பாண்டீஸ்வரன் ஆகிய இருவரும் மருத்துவ பரிசோதனைக்கு பின்பு சிறையில் அடைக்கப்பட்டன.