வடகிழக்குப் பகுதி நம்மனைவருக்கும் அஷ்டலக்ஷ்மிக்குச் சமானம். இங்கே நிறைவாக திறன்கள் இருக்கின்றன, வடகிழக்கின் இயற்கை வனப்பு அனைவரின் கவனத்தையும் ஈர்த்துவிடும்.
டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.
இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி
கற்சிலையாக மாற்றப்பட்ட லோபமுத்ரா, தனது கணவரின் வருகைக்காகக் காத்திருக்கிறது. விந்திய மலை தலைவணங்கி, அதன் குருவான அகஸ்திய முனிவரின் வருகைக்காகக் காத்திருக்கிறது.
டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.
2026 மக்கள் தொகைக் கணக்கெடுப்பு வந்தால், தெற்கின் நிலைமை இன்னும் மோசமாக இருக்கும்; குடும்பக் கட்டுப்பாடு விஷயங்களில் ஒழுக்கமாக இருப்பதற்காக அது மேலும் தண்டிக்கப்படும்.
இதைத்தான் மத்திய அரசு தடுக்க நினைக்கிறது. பிரதமர் மோடி நாடாளுமன்ற உறுப்பினர்கள் எண்ணிக்கையை 850 ஆகவும் அதேபோல் மாநிலங்களின் பிரதிநிதித்துவத்தை சராசரியாக 50 சதவீதம் அதிகரிக்கும் செய்யும் திட்டத்தை முன் வைத்துள்ளார்.
பரிசோதனை மட்டுமே செய்து கொண்டார் என்றால் 'ஆஞ்சியோகிராம் செய்து கொண்டேன்' என்றும் அடைப்பை நீக்கும் சிகிச்சை செய்து கொண்டார் என்றால் 'ஆஞ்சியோபிளாஸ்டி செய்து கொண்டேன்' என்றும்
வடகிழக்குப் பகுதி நம்மனைவருக்கும் அஷ்டலக்ஷ்மிக்குச் சமானம். இங்கே நிறைவாக திறன்கள் இருக்கின்றன, வடகிழக்கின் இயற்கை வனப்பு அனைவரின் கவனத்தையும் ஈர்த்துவிடும்.
டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.
இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி
கற்சிலையாக மாற்றப்பட்ட லோபமுத்ரா, தனது கணவரின் வருகைக்காகக் காத்திருக்கிறது. விந்திய மலை தலைவணங்கி, அதன் குருவான அகஸ்திய முனிவரின் வருகைக்காகக் காத்திருக்கிறது.
டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.
2026 மக்கள் தொகைக் கணக்கெடுப்பு வந்தால், தெற்கின் நிலைமை இன்னும் மோசமாக இருக்கும்; குடும்பக் கட்டுப்பாடு விஷயங்களில் ஒழுக்கமாக இருப்பதற்காக அது மேலும் தண்டிக்கப்படும்.
இதைத்தான் மத்திய அரசு தடுக்க நினைக்கிறது. பிரதமர் மோடி நாடாளுமன்ற உறுப்பினர்கள் எண்ணிக்கையை 850 ஆகவும் அதேபோல் மாநிலங்களின் பிரதிநிதித்துவத்தை சராசரியாக 50 சதவீதம் அதிகரிக்கும் செய்யும் திட்டத்தை முன் வைத்துள்ளார்.
பரிசோதனை மட்டுமே செய்து கொண்டார் என்றால் 'ஆஞ்சியோகிராம் செய்து கொண்டேன்' என்றும் அடைப்பை நீக்கும் சிகிச்சை செய்து கொண்டார் என்றால் 'ஆஞ்சியோபிளாஸ்டி செய்து கொண்டேன்' என்றும்
மதுரை தல்லாகுளம் பகதியில் அமைந்துள்ள அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவிக்க சென்ற இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் கைது செய்யப்பட்டார்.
மதுரையில் , அம்பேத்கரின் 67-வது நினைவுநாளையொட்டி, அவுட் போஸ்ட் பகுதியில் அமைந்துள்ள அம்பேத்கர் அவர்களின் சிலைக்கு விடுதலைச் சிறுத்தைகள் மே 17 இயக்கம் புரட்சி பாரதம் கட்சியினர் என்பன உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் ,இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத், தனது ஆதரவாளர்களுடன் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவிக்க சென்ற போது, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் வழக்கறிஞர் பிரிவினருக்கும் அர்ஜுன் சம்பத் ஆதரவாளர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
அதனைத் தொடர்ந்து, இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜீன் சம்பத் கைது செய்யப்பட்டார். இதனால், அந்த பகுதியில் பரபரப்பான சூழ்நிலை நிலவி வருகிறது.
இந்தியாவால் தேடப்படும் மற்றொரு தீவிரவாதி பாகிஸ்தானில் கொல்லப்பட்டான். 2015 ஆம் ஆண்டு காஷ்மீரின் உதம்பூர் BSF கான்வாய் மீதான தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட லஷ்கர்-இ-தொய்பா (LeT) பயங்கரவாதி ஹன்ஸ்லா அட்னான் பாகிஸ்தானின் கராச்சியில் அடையாளம் தெரியாத நபர்களால் கொல்லப்பட்டான்.
காஷ்மீர் மாநிலம் உதம்பூரில் பிஎஸ்எப் (எல்லை பாதுகாப்பு படை) வீரர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் சம்பவத்திற்கு மூளையாக செயல்பட்டவன் இவன் என்பதும், லஷ்கர் பயங்கரவாத அமைப்பின் தலைவன் ஹபீஸ் சையீத்தின் உறவினன் என்பதும் குறிப்பிடத் தக்கது.
கடந்த 2015ம் ஆண்டு காஷ்மீர் மாநிலம் உதம்பூரில் பிஎஸ்எப் வீரர்கள் சென்ற வாகனம் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இந்த சம்பவத்தில் 2 வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். 13 பேர் காயம் அடைந்தனர். பயங்கரவாத தாக்குதல் குறித்து என்ஐஏ அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்திற்கு ஹன்சியா அத்னன் முக்கிய பங்கு வகித்தது தெரியவந்தது.
மேலும் 2016 ல் பாம்போர் பகுதியில் சிஆர்பிஎப் வீரர்கள் மீதும் தாக்குதல் நடத்திய சம்பவத்திற்கு ஹன்சியாவுக்கு தொடர்பு உள்ளது தெரிந்தது. பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் செயல்படும் லஷ்கர் பயங்கரவாத முகாமிற்கு சென்ற இவன், பயங்கரவாத அமைப்புக்கு ஆட்களை தேர்வு செய்தும் வந்துள்ளான்.
இந்தியாவில் தாக்குதல் நடத்துவதற்கும், பயங்கரவாதிகளை ஊடுருவ செய்யவும் ஹன்சியாவுக்கு பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐஎஸ்ஐ மற்றும் அந்நாட்டு ராணுவம் ஆதரவு அளித்து வந்தது. இந்நிலையில், கராச்சியில் உள்ள அவனது வீட்டில் கடந்த 2 மற்றும் 3ம் தேதிக்கு இடைப்பட்ட நாளில் மர்ம நபர்களால் ஹன்சியா அத்னன் சுட்டுக் கொலை செய்யப்பட்டான்.
அவனது உடலில் 4 குண்டுகள் பாய்ந்தன. அதில் படுகாயமடைந்த பயங்கரவாதியை ராணுவத்தினர் ரகசியமாக மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால், சிகிச்சை பலனின்றி அவன் உயிரிழந்தான்.
பூலோக வைகுண்டம் என்றும், வைணவ சமயத்தின் தலைமைப் பீடம் என்றும் போற்றப்படும் திருவரங்கம் ஆலயத்துக்கு ஏராளமான மகிமைகள் இருந்தாலும், முக்கியமானது, திருஅயோத்தியுடனான அதன் தொடர்பு! அதென்ன, ஒரு வடநாட்டுத் தலத்துக்கு ‘திரு’எனும் அடைமொழி என்றால், நம் தமிழ்மறை தந்த ஆழ்வார்கள் அப்படித்தானே போற்றிக் கொண்டாடியுள்ளார்கள்!
பன்னிரு ஆழ்வார்களில் ஒருவரான மதுரகவியாழ்வார் வடக்கே அயோத்திக்குச் சென்று அங்கே தங்கியிருந்தார். ஒரு நாள் அவருக்கு தென்கோடியில் கீழை வானில் ஒளிக்கீற்று ஒன்று தென்பட்டது. வியப்பின் மேலீட்டால் அந்த ஒளியின் மூலத்தைத் தேடி அதன் போக்கிலேயே அயோத்தியில் இருந்து பயணப்பட்டார். அது நிறைவாக, தாமிரபரணிக் கரையில் இருந்த திருக்குருகூர் எனும் திருநகரியில் ஒரு புளியமரப் பொந்தில் யோகக் கோலத்தில் அமர்ந்திருந்த சடகோபராகிய நம்மாழ்வாரிடம் முடிவுறக் கண்டு, அவரையே தன்குருவாக ஏற்றார். இது அயோத்திக்கும் ஆழ்வாருக்குமான தொடர்பைக் காட்டியது.
ஆழ்வார்கள் தங்கள் பாசுரங்களில் பெருமான் உறையும் தலங்களுக்கு திரு எனும் அடைமொழி கொடுத்து சிறப்பித்தார்கள். அப்படித்தான், அவர்கள் வாக்கால் வெளிப்பட்ட திருஅயோத்தி குறித்து பாசுரங்கள் பல உள்ளன. அந்த வகையில் நூற்றெட்டு வைணவ திவ்யதேச வரிசையில் 96வது தலமாக வருகிறது அயோத்தி. நம்மாழ்வார், பெரியாழ்வார், குலசேகர ஆழ்வார், தொண்டரடிப் பொடியாழ்வார், திருமங்கை ஆழ்வார், இவர்கள் அயோத்தியில் உறையும் ஸ்ரீராமபிரானைப் போற்றிப் பாடினார்கள்.
அயோத்தி என்றால், ஆழ்வார்களின் மொழியில் சொல்லப் போனால், சக்கரவர்த்தித் திருமகனின் அவதாரத் தலம். அவன் ஆட்சி செய்த புண்ணிய பூமி. அந்த அயோத்திக்கு புராணச் சிறப்புகள் பலவுண்டு. நம் பாரத சம்பிரதாயத்தில், முக்தி அளிக்கும் ஏழு தலங்களாக அயோத்தி, காசி, மதுரா, மாயா (ஹரித்வார்), துவாரகை, காஞ்சி, அவந்தி (உஜ்ஜைனி) குறிக்கப்படுகிறது. இவற்றில் அயோத்தியே முதன்மையானது. காரணம் அயோத்தி வந்த விதம் குறித்து புராணங்கள், குறிப்பாக அதன் தல புராணம் சொல்வது:
பிரம்மா பூவுலகைப் படைத்தபோது, மகாவிஷ்ணு தன் இருப்பிடமான வைகுண்டத்தில் இருந்து ஒரு பகுதியை எடுத்து அவருக்குக் கொடுத்தார். பிரம்மா அதை உலகின் ஒரு பகுதியாக உருவாக்கி, தன் மகன் ஸ்வாயம்புவ மனுவுக்குக் கொடுத்தார். அதுதான் அயோத்தி. ஸ்வாயம்புவ மனுவின் புதல்வர் இக்ஷ்வாகு. இவர் வழியில் உருவான இக்ஷ்வாகு வம்சத்தில்தான், தசரதரின் மகனாக அவதரித்தார் ஸ்ரீராமர்.
தம்மை நினைந்து கடுந் தவமியற்றிய பிரமனுக்குக் காட்சி அளித்த மகாவிஷ்ணு, அவரின் பக்தியால் மனம் உருகிக் கண்ணீர் சிந்தினார். அந்தக் கண்ணீரை ஒரு கமண்டலத்தில் ஏந்திய பிரம்மா, அதை பூமியில் விட, அது மானசரஸ் என்ற ஏரியானது. பிற்காலத்தில், இக்ஷ்வாகுவின் வேண்டுகோளை ஏற்று, வசிஷ்டர் மானசரஸ் நீரை அயோத்தியில் சரயுநதியாக ஓடச் செய்தார் என்கிறது அயோத்தியின் தலபுராணம்.
ஆழ்வார்கள் பொதுவாக ஒரு தலத்தின் பெருமானைப் பாடி வணங்குவார்கள். ஆனால் ஒட்டுமொத்தமாக ஒரு தலத்தையே பெருமைப் படுத்திப் பாடியவற்றில் ஒன்று திருஅயோத்தி. அதனால் ஒட்டுமொத்த அயோத்தி மண்ணே நம் முன்னோர்க்குப் புனிதமானதாய்த் திகழ்ந்தது. அப்படி பாரத தேசத்தின் வடக்கே உள்ள அயோத்தியில் அவதரித்த ராமபிரான், வனவாசம் மேற்கொண்ட காலத்தில் தேசத்தின் தென்திசைக்கு நடந்து வந்து, இந்தக் கர்ம பூமியை புனிதப் படுத்தினார். அவர் நடந்த வழியெங்கும் இன்று ஆலயங்கள் பல எழுந்து, ராமபிரானின் அருளை அன்பர்களுக்கு அளித்துக் கொண்டிருக்கின்றன.
இவை எல்லாவற்றினும் தனிச்சிறப்பு வாய்ந்ததாய்த் திகழ்வதுதான் திருவரங்கம். எப்படி?
ஸ்ரீராமபிரானின் பட்டாபிஷேகம் காண அயோத்தி சென்ற இலங்கை மன்னன் விபீஷணனுக்கு பரிசாக ஏதாவது கொடுக்க நினைத்தார் ஸ்ரீராமர். வீடணனோ, ராமபக்தியில், குறிப்பாக விஷ்ணு பக்தியில் மூழ்கித் திளைத்தான். அவன் பக்திக்கு ஊற்றம் கொடுப்பதென்றால் தம் ஆராதனை மூர்த்திபோல் ஒன்றைக் கொடுத்தாக வேண்டும். வீடணனும் அதையே நோக்கி நின்றான். ஏற்கெனவே தாம் கானகம் புகுந்தபோது, சகோதரன் பரதனுக்கு தம்முடலுக்குக் காப்பாகிய பாத ரட்சையை அளித்தவர் தானே! இப்போது தாம் சகோதரனாய் ஏற்றுக் கொண்ட வீடணனுக்கு தம்முயிர்க் காப்பாகிய தம் குலதெய்வமான இக்ஷ்வாகு குல தனத்தையே பரிசாய்க் கொடுத்தார்.
அப்படிப் பெற்ற சயனப் பெருமாளின் பரவாசுதேவ விமானத்தைச் சுமந்து கொண்டு இலங்கை திரும்பிய விபீஷணன், ஒரு சந்தியா காலத்தில் தன் கடமை நிறைவேற்ற முனைந்த போது, உபய காவிரி நடுவே மணலில் நிலைகொண்டார் அந்தப் பெருமாள். வீடணனிடம், தாம் இங்கேயே கோயில் கொள்ளப் போவதாகவும், அங்கிருந்தபடியே அவனுக்கு அருள் புரிவதாகவும் சொல்லி தன்னிருப்பிடம் அரங்கம் என்று ஆக்கிக் கொண்டார். இப்படி மகாவிஷ்ணுவால் ஸ்ரீவைகுண்டத்தில் இருந்து பிரம்மனுக்கு அளிக்கப்பட்டு, ஸ்வாயம்புவ மனுவால் அயோத்தியில் இருத்தப்பட்டு, இக்ஷ்வாகு குலதனமாக ஸ்ரீராமரின் முன்னோராலும் ஸ்ரீராமபிரானாலும் பூஜிக்கப்பட்டு, விபீஷணன் மூலமாக உபய காவிரி மத்தியில் நிலை கொண்டதால் தான், ஸ்ரீரங்கநாதரின் இருப்பிடம் பூலோக வைகுண்டமானது!
இந்தத் தொடர்பைக் கொண்டே, தமிழ்மறை தந்த ஆழ்வார்கள் அனைவருமே திருவரங்கத்தைப் பாடினார்கள். அயோத்தியின் தொடர்பையும் பாடிவைத்தார்கள்.
ஸ்ரீராமர் மீதான பக்தியில் மூழ்கித் திளைத்தவர் குலசேகர ஆழ்வார். அவர் இயற்றிய பெருமாள் திருமொழி, ராமனின் அயோத்தியை வெகுவாய்ப் புகழ்வது. ராமனின் ஆராதனை தெய்வமான ஸ்ரீரங்கநாதனுக்கு தன் மகள் சேரகுலவல்லியை மணம் முடித்துக் கொடுத்தார் குலசேகராழ்வார்.
நம்மாழ்வாரின் திருவாய் மொழி (ஏழாம் பத்து)ப் பாசுரம் மிகப் பிரபலமானது.
கற்பார் இராம பிரானை அல்லால் மற்றும் கற்பரோ புல் பா முதலா புல் எறும்பு ஆதி ஒன்று இன்றியே நல் பால் அயோத்தியில் வாழும் சராசரம் முற்றவும் நல் பாலுக்கு உய்த்தனன் நான்முகனார் பெற்ற நாட்டுளே? (3488) – என்ற பாசுரம் அயோத்தி வந்த விதத்தைச் சிறப்பாய்ச் சொல்லும்.
நம் தமிழகத்தில் ராமபிரான் என்றால், கம்பனை அன்றி வேறெதுவும் உடனே நினைவுக்கு வருமோ?! கம்பனின் ராமன் அத்தனை புகழ்வாய்ந்தவன் அல்லவா! அந்தக் கம்பநாடன், ராமகாதையை இயற்றி, அதனை அரங்கேற்றச் சிறந்த இடம், அந்த ராமன் ஆராதித்த அரங்கப் பெருமாளே என்று நினைந்தார். அதனால்தான், திருவரங்கப் பெருமான் திருமுற்றத்தே ராமாயணத்தை அரங்கேற்றினார். தம்மை ஆராதித்த ராமனின் பெருமையைத் தம் காதாற் கேட்கத் திருவுளம் கொண்ட திருவரங்கநாதன், கம்பனின் ராமாயணத்தைத் திருச்செவியுற்றார் என்பது சிறப்பு. இன்றும் கம்பர் ராமாயணம் அரங்கேற்றிய மண்டபத்தை ஸ்ரீரங்கம் கோயிலில் தாயார் சந்நிதி எதிரே காணலாம்.
இப்படி நம் தமிழ் மறை தந்த ஆழ்வார்களால் பெரிதும் கொண்டாடப் பட்ட அயோத்தி ராமனுக்கு இப்போது ஆலயம் எழுந்து குடமுழுக்கும் காண உள்ளது. ஸ்ரீரங்கத்தை வைணவ தலைமை பீடமாக்கி பாரத தேசமெங்கும் தம் பக்தி நெறியைப் பரப்பிய ஸ்ரீராமானுஜாசார்யர் அயோத்தியை பெரிதும் ஆராதித்தார். அதனால் தென்னாட்டு வைணவ சம்பிரதாயப் படியே அயோத்தியிலும் ராமனின் ஆலயங்களில் பூஜைகள் நடப்பதை நாம் காண்கிறோம். திருவரங்கத்துக்கும் திருஅயோத்திக்குமான தொடர்புகளை நினைத்தபடி அயோத்தி ராமனின் ஆலய குடமுழுக்கில் நாமும் இணைவோம்!
அயோத்தி ஸ்ரீராமர் ஆலயம் எண்ணற்ற தன்னார்வலர்களால், பக்தர்களால் அணு அணுவாக செதுக்கப்பட்டு வருகிறது. இந்தக் கைங்கரியத்தில், தன்னையும் இணைத்துக் கொண்டுள்ளார் முன்னாள் மத்திய உள்துறைச் செயலர் எஸ்.லக்ஷ்மி நாராயணன். அவருக்கு, பிரமாண்டமான இந்த ஆலயத்தில் எழுந்தருளப் போகும் ராம்லல்லாவுக்கு மிகச் சிறந்ததை அர்ப்பணிக்க வேண்டும் எனும் உந்துதால் ஏற்பட, அயோத்திக்குச் சென்ற அவர், ராம ஜன்மபூமி தீர்த்த க்ஷேத்ரா அறக்கட்டளையின் பொதுச் செயலாளரான சம்பத் ராயிடம் அனுமதி கோரினார். ராமலல்லாவுக்கு அவர் அளிக்க விரும்பியது, ராமனைப் போற்றும் மகாகாவியத்தையே!
வடபாரதத்தில் கோஸ்வாமி துளசிதாசர் இயற்றிய ராமாயணமான ராமசரிதமானஸ் மிகப் புகழ்பெற்றது. அதையே ராமனுக்கு சமர்ப்பிக்க விரும்பி, தன் வாழ்நாள் சேமிப்பான ரூ.5 கோடியை அறக்கட்டளைக்கு அளித்தார். அதன் மூலம், 151 கிலோ எடையில், 10,902 பாக்களுள்ள ராமசரித மானஸ் நூலின் ஒவ்வொரு பக்கமும் 140 கிலோ எடை கொண்ட தாமிரத் தகடுகளில், 24 காரட் தங்கத்தில் தோய்க்கப்பட்ட பொன்னெழுத்துகளில், மரகதக் கற்கள் பதிக்கப்பட்டு, தயாராகிறது. மிக நுணுக்கமான தங்க, மரகத வேலைபாடுகளுடன் ராமசரித மானஸ் பொன்னெழுத்துகளில் பொறிக்கப்பட்டு அயோத்தி ராம்லல்லாவின் முன்பு பூஜைக்காக வைக்கப்படவுள்ளது.
தில்லி பிர்லா மந்திரில் தன் தாய் வேண்டிக் கொண்டதால், தாம் பிறந்து அந்த தெய்வத்தின் பெயரே தமக்கு இடப்பட்டதாகக் கூறும் லக்ஷ்மி நாராயண், தெய்வம் தமக்கு அளித்த பொன்னான வாழ்வை, தெய்வமான ராமனின் சரிதத்தை பொன்னெழுத்துக்களில் பொறித்து வைப்பதில் அர்ப்பணிப்பதாகக் கூறுகிறார்!
இன்று நடைபெறுவதாக இருந்த இண்டி கூட்டணி கூட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது
நடந்து முடிந்த நான்கு மாநில தேர்தல்களில், காங்கிரஸ் கட்சி இண்டி கூட்டணியில் உள்ள மற்ற கட்சிகளைப் புறக்கணித்து, அதிக இடங்களில் வென்று தனியாக ஆட்சி அமைக்க வேண்டும் என்ற குறிக்கோளுடன், தனியாக போட்டியிட்டு தோல்வியடைந்தது. இதனால், காங்கிரஸ் கட்சி மீது இண்டி கூட்டணிக் கட்சிகள் கடும் அதிருப்தியில் உள்ளன.
காங்கிரஸ் கட்சியை தாங்கள் தான் தோளில் சுமந்து செல்கிறோம், காங்கிரஸ் கட்சி தனது சுயநலனுக்காக தங்களை கூலியாட்களைப் போல் கையாள்கிறது என்ற அதிருப்தி இண்டி கூட்டணி கட்சிகளிடம் ஏற்பட்டுள்ளது.
ராஜஸ்தான் சட்டீஸ்கர் மத்திய பிரதேசம் ஆகிய மூன்று மாநிலங்களில் தோல்வி அடைந்த பின்னர் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, வரும் டிசம்பர் 6ஆம் தேதி இண்டி கூட்டணி கட்சிகளின் கூட்டம் நடைபெறும் என்று அறிவித்தார். ஆனால் அவரது அழைப்பை கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் ஒரு பொருட்டாக எடுத்துக் கொள்ளவில்லை.
மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் ஆகிய மூன்று மாநிலங்களில் பாஜக., வெற்றி பெற்றதற்கு காங்கிரசின் பேராசையே காரணம் என்றும், இண்டியா கூட்டணிகளுடன் கூட்டணி வைக்காமல் தனியாக போட்டியிட்டதால் காங்கிரசுக்கு இந்த தோல்வி என்றும் கூறி, இந்தக் கூட்டணிக்கு எதிராக கூட்டணி கட்சிகளே குற்றம் சாட்டின.
எனவே, மம்தா பானர்ஜி, நிதீஷ் குமார், அரவிந்த் கெஜ்ரிவால் ஆகியோருடன் மு.க. ஸ்டாலினும் இந்த கூட்டத்தில் சென்று கலந்து கொள்வதற்கு தயாராக இல்லை.
இவ்வாறு, ஒரு தோல்விக்குப் பின் காங்கிரஸ் கட்சி அழைத்துள்ள ஆலோசனைக் கூட்டத்திற்கு முக்கியத் தலைவர்கள் பங்கேற்காமல் பின்வாங்கினர். திரிணமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா, இக்கூட்டத்தில் பங்கேற்கப்போவதில்லை என அறிவித்தார். பீஹார் முதல்வர் நிதிஷ்குமாரும் தங்கள் கட்சியின் மூத்த தலைவர்கள் ராஜிவ் ரஞ்சன் மற்றும் சஞ்சய் ஜா ஆகியோரை அனுப்ப உள்ளதாக தெரிவித்தார். சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் யாதவ், தங்கள் கட்சியின் எம்.பி., ராம்கோபால் யாதவை அனுப்புவதாகக் கூறப்பட்டது.
ஸ்டாலின் சென்னை வெள்ளத்தை காரணம் காட்டி, தங்கள் கட்சியின் சார்பாக டி ஆர் பாலு கலந்து கொள்வார் என்று தெரிவித்திருந்தார். அதுபோல் மற்ற கட்சியினரும் தங்கள் கட்சியின் சார்பில் பிரதிநிதிகளை கலந்து கொள்ள செய்வதாக தெரிவித்திருந்தனர்.
நடந்து முடிந்த சட்டசபை தேர்தல்களில் இண்டி கூட்டணி கட்சிகளை காங்கிரஸ் புறக்கணித்து தனித்துப் போட்டியிட்டதால், கூட்டணியின் மற்ற கட்சிகளும் அந்தந்த மாநிலங்களில் தனித்து போட்டியிட வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது. இதனால் காங்கிரஸ் மூன்று மாநிலங்களிலும் இரண்டாம் இடத்தைப் பெற்று ஓரளவு கணிசமான எம்எல்ஏக்களை பெற்றாலும் கூட, கூட்டணியில் இருந்த மற்ற கட்சிகள் நோட்டாவை விட குறைவாக குறிப்பாக ஒரு சதவீதத்தை விட மிக மிகக் குறைவாக வாக்குகள் பெற்று அந்தக் கட்சிகளின் சுய பலத்தை வெளிக்காட்ட வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. இதனால் காங்கிரஸ் மீது இக்கட்சிகள் கடும் அதிருப்தியில் இருப்பதாகக் கூறப்படுகிறது.
இதனால் காங்கிரஸ் கட்சி அழைப்பு விடுத்திருந்த இண்டி கூட்டணியின் கூட்டத்தை டிசம்பர் 3வது வாரத்திற்கு ஒத்திவைப்பதாக அது அறிவித்துள்ளது.
லிங்கராஜா கோயிலைத் தரிசித்த பின்னர், காலை சிற்றுண்டியை முடித்த பின்னர் நாங்கள் பூரியை நோக்கி பயணம் செய்ய ஆரம்பித்தோம். வழியில் தௌலிகிரியின் சாந்தி ஸ்தூபியைத் தரிசித்துவிட்டு முதலில் கொனார்க் சூரியக் கோவிலுக்கும் பின்னர் பூரிக்கும் செல்வதாகத் திட்டம். புவனேஷ்வரத்தில் இருந்து பூரி செல்லு வழியில் 16 கிலோமீட்டர் தொலைவில் தௌலிகிரி என்ற மலை உள்ளது. அங்கே ஒரு சாந்தி ஸ்தூபி உள்ளது.
தௌலிகிரியின் சாந்தி ஸ்தூபி அமைதி பக்தா என்றும் அழைக்கப்படுகிறது. மன்னன் அசோகர் அமைதி மற்றும் அமைதியின் பாதையை ஏற்றுக்கொண்டு புத்த மதத்தை நாடியதால், கலிங்கப் போர் முடிவடைந்ததாக அறியப்படும் இந்த இடத்தில் சாந்தி ஸ்தூபிக்கு அடித்தளம் அமைத்தார் எனக் கருதப்படுகிறது. இங்கு ஏராளமான பௌத்த பக்தர்கள் வருகை தரும் புத்தரின் ஆணை ஒன்றைக் காணலாம்.
தௌலிகிரியின் சாந்தி ஸ்தூபி 1970ஆம் ஆண்டு ஜப்பான் புத்தமதச் சங்கத்தின் உதவியோடு ஒரிசா மாநில அரசால் கட்டப்பட்டது. ஸ்தூபியின் ஒட்டுமொத்த அமைப்பு ஒரு குவிமாட வடிவில் உள்ளது. கல் பலகைகளுக்கு மேல் புத்தர் காலடித் தடங்களையும் போதி மரத்தையும் ஒருவர் காணலாம். பேனல்களுக்கு மேல், புத்தபெருமானின் முன் போர் வாளை வைத்திருக்கும் அசோகரின் உருவத்தையும் ஒருவர் காணலாம். இந்த ஸ்தூபிக்கு அருகாமையில், சதர்ம விஹார் மடாலயம் என்று அழைக்கப்படும் ஒரு மடாலயம் உள்ளது, இது புத்த பக்தர்களால் அதிகம் பார்வையிடப்படுகிறது. சாந்தி ஸ்தூபியிலிருந்து சிறிது தூரத்தில், 1972ஆம் ஆண்டில் புதுப்பிக்கப்பட்ட தவலேஷ்வர் கோவிலைக் காணலாம், மேலும் இது இந்து மற்றும் பௌத்த பக்தர்கள் அடிக்கடி வருகை தரும் இடம்.
மாமன்னர் அசோகரின் கல்வெட்டு
தௌலிகிரி மலையியின் சாந்தி ஸ்தூபி வரை கார் செல்லும் பாதை உள்ளது. அது ஒரு சிறிய மலை. மலைமீது ஏறிப் போகின்ற வழியில் அசோகரின் கல்வெட்டு ஒன்று உள்ளது. தற்போது அந்தக் கல்வெட்டு எவரும் சிதைத்துவிடாதபடி ஒரு கம்பித் தடுப்புக்குப் பின்னால் உள்ளது. கிமு 262 முதல் கிமு 261 வரை பேரரசர் அசோகரின் தலைமையில் – கலிங்க அரசிற்கும் மௌரியப் பேரரசிற்கும் இடையே நடந்த கலிங்கப் போருடன் இது ஆழமான வேரூன்றிய தொடர்பைக் கொண்டுள்ளது.
மகாநதி ஆற்றின் கிளை நதியான தயா ஆற்றின் இடது கரையில் அமைந்துள்ள தௌலி மலை மற்றும் அதன் அருகில் உள்ள பகுதிகளில் போர் நடைபெற்றது. புகழ்பெற்ற அசோகரின் கல்வெட்டுகள் செதுக்கப்பட்ட இடம், தௌலி மலையின் அடிவாரத்தில் அமைந்துள்ளது. தற்போது, இது இந்திய தொல்லியல் துறை மூலம் பாதுகாக்கப்படுகிறது.
பாறைகள், குகைச் சுவர்கள் மற்றும் தூண்களில் பொறிக்கப்பட்ட 33 தனித்தனி கல்வெட்டுகள் தளத்தில் உள்ளன. இந்தக் கல்வெட்டுகள் ஒவ்வொன்றும் தம்மத்தின் அதாவது புத்த தர்மத்தின் செய்தியைக் கொண்டுள்ளன, அதாவது ‘நல்ல நடத்தை’, ‘சரியான நடத்தை’ மற்றும் ‘மற்றவர்களிடம் கண்ணியம்’. இந்த தளத்தின் மற்றொரு சிறப்பம்சமாக பாறையில் செதுக்கப்பட்ட யானைச் சிற்பம். இந்த யானைச் சிற்பம் பாறை முகத்தில் இருந்து துருத்தி நிற்கிறது; யானை பாறையில் இருந்து வெளிவருவது போல் செதுக்கப்பட்டுள்ளது.
முக்கிய பாறைகளில் ஒன்று கண்ணாடிச் சுவருக்குப் பின்னால் வைக்கப்பட்டுள்ளது, அதே நேரத்தில், சுற்றுலாப் பயணிகள் மற்றும் கட்டிடக்கலை ஆர்வலர்கள் இந்த வரலாற்றுக் கட்டமைப்பை நெருக்கமாகக் காணும் வாய்ப்பை வழங்குகிறது. வளாகத்தில் அழகான தோட்டமும் உள்ளது.
தௌலிகிரியில் உள்ள அசோகன் பாறை ஆணைகளின் வரலாறு
பேரரசர் அசோகர் தனது பேரரசை விரிவுபடுத்தும் முயற்சியில் கிமு 262 இல் கலிங்க இராச்சியத்தை (இன்றைய ஒடிசா) தாக்கினார். இது பிரபலமான கலிங்கப் போருக்கு வழிவகுத்தது, இதில் இரு தரப்பிலிருந்தும் 2,00,000க்கும் மேற்பட்ட வீரர்கள் உயிர் இழந்தனர் அல்லது பலத்த காயம் அடைந்தனர், தயா நதி முழுவதுமாக இரத்தத்தால் சிவப்பு நிறமாக மாறியது. இந்த முழுக் காட்சியும் பேரரசர் அசோகரின் மனசாட்சியை உலுக்கியது மற்றும் அவருக்குக் குற்ற உணர்வை ஏற்படுத்தியது. இந்தப் போர்தான் அவரது பாதையை மாற்றி அமைதியை விரும்பும் பௌத்த மதத்திற்கு அவரை அழைத்துச் சென்றது.
பௌத்தத்தின் சித்தாந்தங்களைப் பற்றிய விழிப்புணர்வைப் பரப்புவதற்காக, அவர் தனது அறிவிப்புகள், செய்திகள் மற்றும் அறிவுறுத்தல்கள் ஆகியவற்றின் கல்வெட்டுகளை இயற்கையான பாறை முகங்கள் மற்றும் கல் தூண்களில் நாடு முழுவதிலும் செதுக்கி வைத்தார். இலங்கை, சீனா, தாய்லாந்து, கிரீஸ் போன்ற நாடுகளுக்கும் தனது தூதர்களை அனுப்பி புத்த மதக் கொள்கைகளைப் பரப்பினார். தௌலியில், போர்க்களத்திற்கு அருகாமையில் உள்ள ஒரு பாறையைத் தேர்ந்தெடுத்து, அவர் தனது அறிவிப்புகளின் கல்வெட்டுகளை உருவாக்கினார்.
இருப்பினும், இந்த கல்வெட்டுகள் 19ஆம் நூற்றாண்டு வரை யாராலும் கண்டுபிடிக்கப்படவில்லை. கிழக்கிந்திய கம்பெனியின் நிர்வாகி ஜேம்ஸ் பிரின்செப் என்பவர் அதைத் தேடத் தொடங்கினார். அவர் வங்காளத்தின் ஆசிய சங்கத்தின் (Asiatic Society) தலைவராக இருந்தார், மேலும் இந்தியாவின் இஸ்லாமியத்திற்கு முந்தைய காலத்தில் மிகுந்த ஆர்வம் கொண்டிருந்தார். சாஞ்சி ஸ்தூபியில் உள்ள அசோகர் கல்வெட்டுகளை முதன்முதலில் புரிந்துகொண்டவர் பிரின்செப். அவர், மற்றொரு பிரிட்டிஷ் அதிகாரி மார்க்கம் கிட்டோவுடன் சேர்ந்து, தௌலியில் அதுவரை கண்டுபிடிக்கப்படாமல் இருந்த அசோகரின் கல்வெட்டுகளை கண்டுபிடிப்பதில் முக்கிய பங்கு வகித்தார்.
அசோகரின் ஒரு முக்கியமான பாறைக் கல்வெட்டைப் பார்த்த மகிழ்ச்சியில் நாங்கள் கொனார்க் நோக்கிப் பயணம் செய்ய ஆரம்பித்தோம்.
அறந்தாங்கி : புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோயிலில் ஆத்மநாதசுவாமி கோயிலில் சோமவாரத்தை முன்னிட்டு 3 வீரபத்ரர்களுக்கு வருடத்திற்கு ஒரு முறை நடைபெறும் சந்தனகாப்பு ஆராதனை நடந்தது.
ஆவுடையார்கோயிலில் மிகப்பழமையான ஆத்மநாதசுவாமி கோயில் உள்ளது இக்கோயில் பாண்டிய மன்னரிடம் முதலமைச்சராக இருந்த மாணிக்கவாசகரால் கட்டப்பட்டது. திருவாசகம் பிறந்த கோயிலாகும்.
இக்கோயிலில் ஆண்டுதோறும் கார்த்திகை சோமவார விழா திருவாவடுதுறை 24வது குருமகா சன்னிதானம் அம்பலவாணதேசிக பரமாச்சாரிய சுவாமிகள் அருளாணைப்படி நடந்த வழிபாட்டில் குருந்த மூலத்திற்கு சங்கு அபிஷேகமும் வருடத்திற்கு ஒரு முறை மட்டுமே சந்தனகாப்பு சாற்றி வழிபாடு நடைபெறும்.
சிறப்பு வழிபாட்டை முன்னிட்டு யோகாம்பிகா சன்னதி எதிரில் உள்ள ஆதி சிவ வீரபத்திரர் முன் மண்டபத்தில் உள்ள அகோர வீரபத்திரர் மற்றும் ரண வீரபத்திரருக்கு சந்தனகாப்பு சாற்றி வழிபாடு நடந்தது.
ஆதி சிவ வீரபத்திரருக்கு அக்ரஹார அன்பர்கள் சார்பிலும் முன் மண்டப வீரபத்திரருக்கு மாணிக்கவாசகர் இறைப்பணி நலசங்கத்தின் சார்பிலும் சந்தனகாப்பு சாற்றி மாணிக்கவாசகர் இறைபணி நலசங்கத்தின் சார்பில் முன்மண்டபத்தில் அன்னதானமும் நடந்தது.
ஆத்மநாதசுவாமிக்கு நம்பியார்களும் மாணிக்கவாசகருக்கு சிவச்சாரியார்களும் அபிஷேக அர்ச்சனைகளை செய்தனர். ஏற்பாடுகளை கோயில் கண்காணிப்பாளர் சுப்ரமணியன் மணியம் ராமன் செய்தனர்.
பாதுகாப்பு ஏற்பாடுகளை ஆவுடையார்கோயில் இன்ஸ்பெக்டர் முத்துச்சாமி தலைமையில் போலீசார் பாதுகாப்புபணியில் ஈடுபட்டனர்.
மூன்று மாநிலங்களில் பாஜக வெற்றி பெற்றதை மதுரையில் பாஜக.வினர் இனிப்பு வழங்கி கொண்டாடினர்.
சோழவந்தானில் இனிப்பு வழங்கி பாஜக., கொண்டாட்டம் :
சமீபத்தில் நடைபெற்ற மத்திய பிரதேசம் ராஜஸ்தான் சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களின் சட்டமன்ற தேர்தலில் அமோக வெற்றி பெற்ற பாஜகவின் வெற்றியை கொண்டாடும் விதமாகவும் , வெற்றிக்கு காரணமான பாரத பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்தும் சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோவில் முன்பு பாஜகவினர் பட்டாசு வெடித்து இனிப்புகள் வழங்கி கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதில் ,மாவட்டத் தலைவர் ராஜசிம்மன் கலந்து கொண்டு சிறப்பித்தார். நிர்வாகிகள் கேசவப் பெருமாள் ,மண்டல் தலைவர்கள் திருவேடகம் கதிர்வேல், அழகர்சாமி, முத்துப்பாண்டி, மாவட்டத் துணைத் தலைவர் கோவிந்த மூர்த்தி, மாவட்ட மகளிர் அணி தலைவர் ஜெயமணி, மாவட்ட வர்த்தக அணி ராஜாராம், மாவட்ட மகளிர் அணி தலைவி வசந்தி, மாவட்ட மகளிர் அணி துணைத் தலைவர் செல்வி, மண்டல் பார்வையாளர் சிவராமன், மண்டல் பொருளாளர் பாண்டியன், முத்துப்பாண்டி, தசரத சக்கரவர்த்தி, ராஜ்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
அவனியாபுரத்தில் பாஜக.,வினர் பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி கொண்டாட்டம்!
நடந்து முடிந்த ஐந்து மாநில சட்டப்பேரவை தேர்தலில், சத்தீஸ்கர், மத்திய பிரதேசம், மிசோரம், ராஜஸ்தான், தெலுங்கானா ஆகிய ஐந்து மாநிலங்களில் நடைபெற்ற தேர்தலில் நான்கு மாநில தேர்தல் முடிவுகள் வெளியாகியது.
இதில், சத்தீஸ்கர் மத்திய பிரதேசம், ராஜஸ்தான் ஆகிய மூன்று மாநிலங்களில் பாஜக அறுதி பெரும்பான்மை பெற்று வெற்றி பெற்றது. தெலங்கானாவில், காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றுள்ளது.
இதனைத் தொடர்ந்து, பாஜகவினர் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் வெற்றி கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். திருப்பரங்குன்றம் அவனியாபுரத்தில், பாஜகவினர் பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி கொண்டாடினர்.
அவனியாபுரத்தில், நடைபெற்ற விழாவில், பாஜக மாவட்ட முன்னாள் தலைவர் சுந்தர் , அவனியாபுரம் மண்டல் செயலாளர் கருப்பையா, பாரதிராஜா , சுந்தர் ரமேஷ், காளி, மணிகண்டன் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் அவனியாபுரம் மந்தை திடலில் பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி கொண்டாடினர்.
திருப்பரங்குன்றம், பகுதியில், நடைபெற்ற விழாவில், பாஜக மாவட்ட ஓபிசி அணி செயலாளர் வேல்முருகன் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டு இனிப்பு வழங்கினர்.
மிச்சங் புயல்-மழை பாதிப்புகளை எதிர்கொள்ள கூடுதலாக தேசிய பேரிடர் மீட்பு படைகளை அனுப்ப உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். புயல் பாதிப்பு குறித்து கேட்டறிந்தார் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா!
தமிழக முதல் அமைச்சர் ஸ்டாலினிடம் தொலைபேசி வாயிலாகப் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, மிச்சங் புயல் பாதிப்புகள் குறித்து கேட்டறிந்தார். புயல் பாதிப்புகள் குறித்தும், எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்தும் விரிவாக எடுத்துரைத்தார் மு.க. ஸ்டாலின். அப்போது, கூடுதலாக தேசிய பேரிடர் மீட்புக் குழுவினரை தமிழ்நாட்டிற்கு அனுப்பி வைக்க கோரிக்கை விடுத்தார்.
உடனடி நிவாரணப் பணிகளை மேற்கொண்ட பிறகு பாதிப்புகள் குறித்து உரிய கணக்கெடுப்புகள் நடத்தப்பட்டு தேவைப்படும் உதவிகள் மத்திய அரசிடம் கேட்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், தமிழக மாநில முதல் அமைச்சர் ஸ்டாலினிடம் தாம் பேசியது குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில்…
தமிழக முதல்வர் திரு.@mkstalin அவர்கள் மற்றும் புதுச்சேரி முதல்வர் திரு.என். ரங்கசாமி அவர்கள், ஆகியோரிடம் பேசினேன். மிக்ஜம் புயலால் ஏற்பட்ட சவாலான வானிலையை சமாளிக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்தேன். மக்களின் உயிர் உடைமைகளை பாதுகாக்க பிரதமர் மோடி அரசிடமிருந்து தேவையான அனைத்து உதவிகளையும் வழங்கவும் உறுதியளித்தேன். ஏற்கனவே NDRF போதுமான அளவுக்கு அங்கே உள்ளது மற்றும் கூடுதல் படைகள் மேலும் உதவிக்கு தயாராக உள்ளன. – என்று குறிப்பிட்டுள்ளார்.
தமிழக முதல்வர் திரு.@mkstalin அவர்கள் மற்றும் புதுச்சேரி முதல்வர் திரு.என். ரங்கசாமி அவர்கள், ஆகியோரிடம் பேசினேன். மிக்ஜம் புயலால் ஏற்பட்ட சவாலான வானிலையை சமாளிக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்தேன். மக்களின் உயிர் உடைமைகளை பாதுகாக்க பிரதமர் மோடி அரசிடமிருந்து…
சென்னையில் பெய்து வரும் கனமழை காரணமாக மீட்பு பணிகளை கண்காணித்து வரும் மின்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு மின்வாரிய அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய போது தெரிவித்ததாவது…
* பாதுகாப்பு காரணங்களுக்காக மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது. * மழை நின்றவுடன் 2 மணி நேரத்தில் மின் இணைப்பு வழங்கப்படும். *மின்வாரிய தலைமை அலுவலகத்தில் 24 மணி நேரமும் கட்டுப்பாட்டு அறை செயல்படும். * நிவாரண பணிகளை மேற்கொள்ள 5,527 மின் ஊழியர்கள் பணி அமர்த்தப் பட்டுள்ளனர். வெளி மாவட்டங்களிலிருந்தும் பணியாளர்கள் வரவழைக்கப்பட்டுள்ளனர்
சென்னையில் பெய்து வரும் அதிகனமழையால் பாதுகாப்பு கருதியே மின்விநியோகம் நிறுத்தம்.
மின்சாரம் வழங்குவதில் எந்த பிரச்னையும் இல்லை. மழை நின்றவுடன் 2 மணி நேரத்துக்குள் மின்சாரம் மீண்டும் வழங்கப்படும்,
மின் வாரிய தலைமை அலுவலகம் 24 மணி நேரமும் போர்க்கால அடிப்படையில் இயங்கும்,
சென்னையில் மின் பாதிப்புகளை சரிசெய்ய, மற்ற மாவட்டங்களில் இருந்து மின் துறை ஊழியர்கள் வரவழைப்பு
மின்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு செய்தியாளர்கள் சந்திப்பு!
⚡ சென்னையில் படிப்படியாக மீண்டும் மின் சேவை.
⚡ சென்னையில் மழைநீர் குறைந்து வரும் பகுதிகளில் மின் சேவை மீண்டும் வழங்கப்படுகிறது.
⚡ மழையால் குடியிருப்புகளை வெள்ளம் சூழ்ந்த நிலையில் பாதுகாப்பு கருதி மின் விநியோகம் நிறுத்தப்பட்டது.
⚡ மழையளவு குறைந்ததாலும் காற்றின் வேகம் குறைந்த நிலையில் படிப்படியாக மின்சாரம் வினியோகிக்கப்படும்.
⚡ தண்டையார்பேட்டை, ஆவடி, பட்டாபிராம் உள்ளிட்ட பகுதிகளில் படிப்படியாக மின்வினியோகம் – என்று மின்வாரியம் தெரிவித்துள்ளது.
சென்னையில் பெய்துவரும் கனமழை காரணமாக மீட்பு பணிகள் குறித்து சென்னை மாநகராட்சி கமிஷனர் ராதாகிருஷ்ணன் சென்னை மாநகராட்சி ரிப்பன் மாளிகையில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி:
*எங்களது கட்டுப்பாட்டு அறைக்கு தண்ணீர் தேக்கம், தரைதளத்தில் வசிக்கும் முதியோர்கள் பாதுகாப்பு கேட்பது போன்ற புகார்கள் வருகிறது.
சென்னையில் பக்கிங்ஹாம் கால்வாய் உள்ளிட்ட பல்வேறு பகுதி கால்வாய்களில் படிப்படியாக தண்ணீர் வெளியேற துவங்கி வருகிறது. தண்ணீர் தேங்கியுள்ள பகுதி சுரங்கபாதைகள் மூடப்பட்டுள்ளன.
சென்னை பெருங்குடியில் 50 செ. மீ.மழை பதிவாகியுள்ளது.
இரவு 12 மணிக்கு மேல் சென்னையில் மழை பாதிப்பு குறையும்.
சென்னையில் மீட்பு பணிகளை மேற்கொள்ள பிறமவட்டங்களிலிருந்து 5000 பணியாளர்கள் வரவழைக்கப்பட்டுள்ளனர்.
பொதுமக்களுக்கு பாதுகாப்பான குடிநீர் வழங்கி ரூ.44 லட்சம் மதிப்பிலான குளோரின் மாத்திரைகள் வழங்கப்பட்டுள்ளது.
மழை காரணமாக பல்வேறு மாவட்டங்களில் இருந்து கூடுதலாக 140 ஆம்புலன்ஸ்கள் சென்னைக்கு வரவழைப்பு. புயல் பாதித்த பகுதிகளுக்கு 15 ஆம்புலன்ஸ்கள் கூடுதலாக வழங்கப்பட்டுள்ளன.
சென்னையில் இன்று ஒரே நாளில் 130 ஆம்புலன்ஸ்களில் 300 புகார்கள் கையாளப்பட்டுள்ளன. – 108 ஆம்புலன்ஸ் நிர்வாகம்
பாரதத்தின் எந்தொவொரு ஆளும் கட்சியும் ஒரு முஸ்லிமை இந்தியாவின் உள்துறை அமைச்சராக்க விழைந்ததில்லை- காங்கிரஸ் கட்சி உட்பட.
ஏனென்றால் இந்திய உள்துறை அமைச்சர் பதவி மிக வலிமையானது. அந்தப் பதவியை ஏற்கும் ஒரு முஸ்லிம் எந்தமாதிரி நடந்து கொள்வார் என எதிர்பார்க்க இயலாது என்பதே அதற்குக் காரணம்.
ஆனால் Ex. PM. வி.பி. சிங் அந்த மாபெரும் தவறினைச் செய்தார். காஷ்மீரியான முஃப்தி முகமது சையதை இந்தியாவின் உள்துறை அமைச்சராக அவர் நியமித்தார்
1989-ஆம் வருடம் டிசம்பர் 8-ஆம் தேதி பதவியேற்ற வி.பி. சிங் அமைச்சரவையில் முஃப்தி முகமது உள்துறை அமைச்சரானார்.
அவர் பதவியேற்று ஒன்றரை மாதங்கள் கூட முடியாத நிலையில் ஜனவரி 19, 1990-ஆம் வருடம் காஷ்மீரிலிருந்த ஐந்தரை இலட்சம் காஷ்மிரி ஹிந்துக்களான பண்டிட்கள் காஷ்மீரிலிருந்து விரட்டியடிக்கப்பட்டார்கள்.
அவர்களின் மனைவிகளும், பெண்களும் கற்பழிக்கப் பட்டார்கள். அவர்களின் கண் முன்பே அவர்களின் குழந்தைகள் வெட்டிக் கொல்லப் பட்டார்கள்.
காஷ்மீரின் மிகச்சிறந்த அறிவாளிகளில் ஒருவரான டீப்பாலால் டக்ரூ நடுத்தெருவில் வெட்டிச் சாய்க்கப் பட்டார். குற்றுயுராகத் துடித்துக் கொண்டிருந்த அவரது உடலைச் சுற்றி நான்கு பக்கமும் மோட்டார் பைக்குகள் சுற்றிக் கொண்டிருந்தன.
“காஃபிரான” டக்ரூவுக்குத் தண்ணீர் கொடுப்பவர்களும் காஃபிர்களாகக் கருதிக் கொல்லப் படுவார்கள் என எச்சரிக்கப் பட்டார்கள்.
இந்தக் கொடுமைகளைக் கண்டு முஃப்தி முகமதுவோ அல்லது அவரது மகளோ சிறிதும் கண்ணீர் சிந்தவில்லை. ஏன், ஒரு சிறு அறிக்கை கூட வெளியிடவில்லை. இன்றுவரை காஷ்மீரி முஸ்லிம்கள் அதனைக் குறித்துப் பேசுவதும் இல்லை.
இந்தச் சம்பவங்கள் திடீரென நடந்து விடவில்லை. மிகத் துல்லியமாகத் திட்டமிட்டே இதுபோன்ற நடவடிக்கைகள் காஷ்மீரில் மேற்கொள்ளப் பட்டன.
இதே காலகட்டத்தில் திடீரெனெ இந்திய உள்துறை மந்திரியின் மகளைத் தீவிரவாதிகள் கடத்திக் கொண்டு போய்விட்டதாகச் செய்திகள் பரவுகின்றன.
சகோதரர்களே, இதனைக் குறித்து வெளிநாட்டுப் பத்திரிகைகள் எழுதியிருப்பதனை கூகுளில் தேடிப் படியுங்கள். ஏனென்றால் அந்தப் பெண்ணை எந்தத் தீவிரவாதியும் கடத்திச் செல்லவில்லை. அவள் முஃப்தி முகமதின் வீட்டுக்குள்ளேதான் இருந்தாள்.
தீவிரவாதிகளின் தீவிர ஆதரவாளரான முஃப்தியே இந்தக் கட்டுக் கதையைக் அவிழ்த்துவிட்டார். இதை வைத்து இந்தியா அதுவரை பிடித்துவைத்திருந்த 4 காஷ்மீரி தீவிரவாதிகளை விடுதலை செய்தார் முஃப்தி அதுபோலவே காஷ்மீரைச் சேர்ந்த “செக்குலர்” காஷ்மீரியான குலாம் நபி ஆசாத்தைக் குறித்தும் இங்கு கூற வேண்டும்.
திடீரென அவரது வீட்டிலும் ஒரு உறவுக்காரப் பெண் இதேநேரத்தில் திடீரெனெ காணாமல் போய்விட்டாள்! உடனடியாக முஃப்தி 27 காஷ்மீர் தீவிரவாதிகளை விடுதலை செய்ய, சாயங்காலம் அந்தப் பெண் வீட்டுக்குத் திரும்பி வந்துவிட்டாள்!
குலாம் நபிக்கு அடுத்து புரெஃபஸர் ‘சைஃபுதின் சோஸ்’ இன் உறவுக்காரப் பெண்ணும் “திடீரென” காணாமல் போய்விட்டாள்! அவர் வேறொரு கட்சியைச் சேர்ந்தவர்தான் என்றாலும்
அந்த முஸ்லீம் காஷ்மீரிப் பெண்ணுக்கு பதிலாக ஏழு தீவிரவாதிகளை விடுதலை செய்தார் முஃப்தி.
மந்திரம் போட்டது போல அந்தப் பெண்ணும் சாயந்தரமே வீடு வந்துவிட்டாள்!!
இவை அனைத்தும் நடந்த வரலாறு.
மிகச் சாதாரணமாக நிகழ்ந்து கொண்டிருந்த காஷ்மீர் தீவிரவாதத்தை மிகவும் உக்கிரமாக்கி, பல வெளிநாட்டுத் தீவிரவாதிகள் இந்தியாவிற்குள் நுழைந்து பயங்கரவாதம் செய்வதற்கு வழிகாட்டியவர் முஸ்லிம் உள்துறை அமைச்சரான முஃப்தி முகமது சையதுதான்.
அவருக்குப் பின்னர்தான் காஷ்மீரில் தீவிரவாதம் மிக உச்ச நிலையை எட்டியது.
மோடி முதலமைச்சராக இருந்த காலத்தில் குஜராத்தில் ஏற்பட்ட கலவரங்களைக் குறித்து ஏகப்பட்ட சப்தமெழுப்பின இந்திய ஊடகங்கள். உங்களுக்குத் தெரியும்.
அவர் மீது வீசப்பட்ட அவதூறுகளுக்கு அளவில்லை. அவருக்கு அமெரிக்க விசா தரக்கூடாது என்று சொல்லும் அளவிற்கு அவர் மீது வெறுப்பினைக் கொட்டின எதிர்க்கட்சிகள்.
அதேசமயம் இந்தியக் குடிமக்களான காஷ்மீரி பண்டிட்கள் அவர்களின் சொந்த நாட்டிலேயே அகதிகளாக ஆக்கப்பட்டனர்.
ஒரே நாட்டில் இரண்டு பிரதமர்கள் இரண்டு தேசியக் கொடி இரண்டு அரசமைப்புச் சட்டம் இதைத் தான் 370 உறுதி செய்தது இதை நீக்கியது தவறா?