Home Blog Page 273

நம்ம நாட்டு சுற்றுலா: லிங்கராஜர் கோயில்

lingaraja temple odissha - 2026
#image_title

முனைவர் கு.வை.பாலசுப்பிரமணியன்

          உதயகிரி, கந்தகிரி மலைகளையும் அங்கே இருந்த கல்வெட்டுக்களையும் பார்த்துவிட்டு இரவு விடுதியில் ஓய்வெடுத்தோம். அடுத்தநாள் காலை சுமார் 0630 மணியளவில் விடுதியைக் காலிசெய்துவிட்டு புறப்பட்டோம். முதலில் லிங்கராஜா கோயிலுக்குச் சென்றோம். லிங்கராஜா கோயில், கோயில் நகரம் என அழைக்கப்படும் புவனேஸ்வரில் உள்ள மிகப் பழைய கோயில்களுள் ஒன்றாகும். லிங்கராஜர் என்பது லிங்கங்களின் அரசர் என்ற பொருள் தருகிறது.

வரலாறு

          இது 1000 ஆண்டுகளுக்கு முற்பட்ட பழமை வாய்ந்தது. இதன் தற்போதைய அமைப்பில், பொது சகாப்தம் (பொ.ச) 11ஆம் நூற்றாண்டின் இறுதிப் பத்தாண்டுகளில் இருந்ததாகத் தெரிய வருகிறது. ஆனால், இக் கோவிலின் பகுதிகள் பொ.ச ஆறாம் நூற்றாண்டிலேயே இருந்ததற்கான சில சான்றுகள் சமஸ்கிருத நூல்களில் உள்ளதாகச் சொல்லப்படுகிறது. லிங்கராஜர் கோயில் கட்டப்பட்ட காலத்தில் விஷ்ணுவின் ஒரு வடிவமான ஜகந்நாதர் வழிபாடும் வளர்ச்சியடைந்து வந்தது. லிங்கராஜர் கோயிலில் விஷ்ணு சிவன் ஆகிய இரு கடவுளரதும் வழிபாடுகள் ஒன்றாக அமைந்திருப்பது இதைக் காட்டுவதாக ஆய்வாளர்கள் கருதிகிறார்கள்.

          இக்கோயில், 11ஆம் நூற்றாண்டில் சந்திர குல மன்னரான ஜஜதி கேசரி என்பவரால் கட்டப்பட்டது என மரபுவழியாக நம்பப்படுகின்றது. எனினும் இதற்கான நம்பத்தகுந்த வரலாற்றுச் சான்றுகள் இல்லை. 11ஆம் நூற்றாண்டில் ஜஜதி கேசரி தனது தலை நகரத்தை ஜெய்ப்பூரில் இருந்து ஏகாம்பர க்ஷேத்ரம் என பிரம்ம புராணத்தில் விவரிக்கப்பட்ட புவனேஸ்வருக்கு மாற்றினான். கோவிலில் காணப்படும் குறிப்புகள் பொ.ச 1114-1115இல் ஆண்ட அனந்தவர்மன் சோடகங்கா என்பவனுடைய காலத்தில் இந்தக் கோவில் கட்டுவதற்காக நிலம் மான்யமாக வழங்கப்பட்டது என்றும் தெரிவிக்கின்றன. இந்தக் கோவில் 10ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டிருக்க வேண்டும் என தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். கோயிலின் மற்ற பகுதிகளான ஜக்மோகனா (வழிபாட்டுக் கூடம்), போக மண்டபம் (காணிக்கை மண்டபம்), நாட்டிய மண்டபம் ஆகியவை அதன் பிறகு கட்டப்பட்டிருக்கலாம் என்று கருதுகின்றனர்.

கோயில் அமைப்பு

          இதுதான் இந்த ஊரில் அமைந்துள்ள மிகப் பெரிய கோயில் ஆகும். இக் கோயில் விமானமானது 55 மீட்டர்கள் உயரத்துடன் மிகப் பெரியதாகத் திகழ்கிறது. 25000 சதுர அடி பரப்பளவில் கட்டப்பட்டு சிற்பங்களால் அழகூட்டப்பட்ட உயர்ந்த மதில்களால் சூழப்பட்ட இக் கோயிலின் பரந்த உட்பகுதியில் அமைந்துள்ள 150க்கும் மேற்பட்ட சிறிய கோயில்களிடையே இப் பெரிய விமானம் கம்பீரமாக உயர்ந்து நிற்கிறது.

          கோயிலின் முதன்மை வாயில் கிழக்கிலும் மற்ற வாயில்கள் வடக்கு, தெற்கில் உள்ளன. கோயிலில் உள்ள 54 மீட்டர் உயரமுள்ள துயூலாவும் (பிரதான கோபுரம்) 29 மீட்டர் உயரமுள்ள ஜக்மோகனாவின் மேலுள்ள பிரமிட் கோபுரமும் (பீதா துயூலா) முழுவதும் சிற்பங்களால் அணி செய்யப்பட்டுள்ளன.

          லிங்கராஜர் கோயிலானது கருவறை, வேள்வி மண்டபம், கோக மண்டபம், நாட்டிய சாலை ஆகிய நான்கு பகுதிகளாகப் பிரிக்கும் விதத்தில் உள்ளது. கருவறையின் ஒரு பக்கக் கதவில் சூலமும் மற்றதில் சக்கரமும் உள்ளன. கருவறையிலுள்ள பிரம்மாண்ட சிவலிங்கமானது சுயம்புலிங்கம் எனப்படுகிறது. இது ஹரிஹர ரூபம் என்கின்றனர். அதாவது திருமாலும் இந்த லிங்கத்தில் உறைந்திருப்பதாக நம்பிக்கை. அதனால் இங்கு அர்ச்சனைக்காக விற்கும் பூக்குடலையில் வில்வ தளங்களும் துளசி இலைகளும் சேர்ந்தே காணப்படுகின்றன. ஆலயம் கட்டி முடிக்கப்படும்போது கலிங்க நாட்டில் ஜகன்னாதர் பக்தியும் பரவத் தொடங்கியது. இந்த லிங்கத்திலேயே திருமாலும் எழுந்தருளி இருக்கிறார் என்பதைப் பலரும் ஏற்றுக்கொண்டனர்.

          கோயில் வளாகத்தில் பார்வதி, கார்த்திகேயர், கணேசர் போன்ற தெய்வங்களுக்கும் தனித்தனியாக கோவில்கள் உள்ளன. கோயிலின் வெளிப் பிரகாரத்தில் சாவித்ரி மாதாவுக்கும் எமதர்மராஜாவுக்கு சன்னிதிகள் உள்ளன. கோயில் வளாகத்தில் உள்ள ஒவ்வொரு சன்னிதிக்கும் மிக உயரமான விமானங்கள் உள்ளன என்றாலும், தாரிணி தேவிக்கு மட்டும் தனி விமானம் கிடையாது. அவர் மரத்தின் கீழேதான் காட்சியளிக்கிறார்.

          ஒட்டுமொத்த கோயிலையும் காண வசதியாக, கோயிலின் எல்லைப்புறச் சுவருக்கு அருகே ஓர் உயர்ந்த மேடை அமைக்கப்பட்டுள்ளது. இந்துக்கள் மட்டுமே கோயிலுக்குள் அனுமதிக்கப்படுவதால், பிற சமயங்களைச் சேர்ந்த வெளிநாட்டினர் உட்பட இந்த மேடையின் மீது நின்று கோயிலைக் கண்டு களிக்கிறனர்.

          இந்து புராணத்தின் படி, லிங்கராஜா கோயிலிலிருந்து தோன்றிய ஒரு நிலத்தடி நதி, பிந்துசாகர் குளத்தை நிரப்புகிறது (கடல் துளி என்று பொருள்). மேலும் இந்த நீர், உடல் மற்றும் ஆன்மீக நோய்களை குணப்படுத்தும் என்று நம்பப்படுகிறது. குளத்தில் இருந்து வரும் நீர் புனிதமாகக் கருதப்படுகிறது மற்றும் பண்டிகை சந்தர்ப்பங்களில் யாத்ரீகர்கள் புனித நீராடுகிறார்கள். திருவிழா தெய்வத்தின் உருவத்துடன், கோவிலின் ருகுண ரத யாத்திரை லிங்கராஜாவின் வருடாந்திர ரத யாத்திரையாகும்.

          பங்குனி மாதத்தில், ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோயிலுக்கு வருகை தரும் முக்கிய திருவிழா சிவராத்திரி ஆகும். இந்தப் புனித நாளில் லிங்கராஜாவுக்கு சமர்ப்பிக்கும் வகையில் பக்தர்கள் முழு நாள் உண்ணாவிரதம் இருக்கிறார்கள். பக்தர்கள் இரவு முழுவதும் தெய்வத்தின் பெயரைச் சொல்லி பஜனை செய்கிறார்கள். கோயிலில் மகா தீபம் (ஒரு பெரிய விளக்கு) ஏற்றப்பட்ட பிறகு பக்தர்கள் பொதுவாக தங்கள் நோன்பை முடித்துக் கொள்கிறார்கள். இந்த திருவிழா லிங்கராஜா ஒரு அரக்கனைக் கொன்றதை நினைவுகூர்கிறது.

          கோயிலின் பிரதான நுழைவாயிலின் வலதுபுறத்தில் அமைந்துள்ள ஒரு பாதை வழியாக பார்க்கும் தளத்தையும் கோயிலின் பின்புறத்தையும் அடையலாம். கோயிலின் புனிதத்தன்மை, நாய்களை அனுமதிக்காதது, குளிக்காமல் வரும் பார்வையாளர்கள், முந்தைய 12 நாட்களில் பிறப்பு அல்லது மரணத்தை சந்தித்த குடும்பங்கள் மற்றும் மாதவிடாய் காலங்களில் இருக்கும் பெண்கள் ஆகியோரை கோயிலுக்குள் அனுமதிக்காமல் செய்வதன் மூலம் காக்கப்படுகிறது. இதுபோன்ற விதிமீறல் ஏற்பட்டால், கோயிலில் ஒரு சுத்திகரிப்பு சடங்கு நடக்கும். அப்போது பிரசாதம் படைக்கப்பட்டு பின்னர் பிரசாதம் கிணற்றில் கொட்டப்படுகிறது.

10,11,12ம் வகுப்பு தேர்வு தேதிகள் அறிவிப்பு! முடிவுகள் எப்போது?!

school exams - 2026

10,11,12 பொதுத்தேர்வுக்கான தேர்வு அட்டவணையை வெளியிட்டார் அமைச்சர் அன்பில் மகேஷ். அதன்படி….

10ம் வகுப்பு செய்முறைத் தேர்வு பிப்ரவரி 23ம் தேதி தொடங்கி  பிப்ரவரி 29ம் தேதி முடிவடைகிறது.

11ம் வகுப்பு செய்முறைத் தேர்வு பிப்ரவரி 19ம் தேதி தொடங்கி  பிப்ரவரி 24ம் தேதி முடிவடைகிறது

12ம் வகுப்பு செய்முறைத் தேர்வு பிப்ரவரி 12ம் தேதி தொடங்கி  பிப்ரவரி 17ம் தேதி முடிவடைகிறது.

10ம் வகுப்பு பொதுத் தேர்வு மார்ச் 3ம் தேதி தொடங்கி  ஏப்ரல் 8ம் தேதி முடிவடைகிறது

11ம் வகுப்பு பொதுத் தேர்வு மார்ச் 4ம் தேதி தொடங்கி மார்ச் 24ம் தேதி முடிவடைகிறது.

12ம் வகுப்பு பொதுத் தேர்வு மார்ச் 1ம் தேதி தொடங்கி  மார்ச் 22ம் தேதி முடிவடைகிறது.

மக்களவைத் தேர்தலைக் கருத்தில் கொண்டு, முன்கூட்டியே தேர்வு நடைபெற உள்ளது.

தேர்வு முடிவுகள் எப்போது ?

10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் : மே 10
11ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் : மே 14
12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் : மே 6

WC 2023: இறுதிப் போட்டியில் நுழைந்தது இந்தியா! அசத்திய ஷமி, ஷ்ரேயஸ் ஐயர்!

india vs nz - 2026
#image_title

ஒருநாள் கிரிக்கட் உலகக் கோப்பைப் போட்டி
முதல் அரையிறுதிப்போட்டி
இந்தியா vs  நியூசிலாந்து, மும்பை – 15.11.2023

முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன்

          இந்திய அணி (397/4, விராட் கோலி 117, ஷ்ரேயாஸ் ஐயர் 105, ஷுப்மன் கில் 80*, ரோஹித் ஷர்மா 47, கே.எல்.ராகுல் 39*, டிம் சௌதீ 3/100, போல்ட் 1/86) நியூசிலாந்து அணியை (48.5 ஓவர்களில் 327, டேரில் மிட்சல் 134, கேன் வில்லியம்சன் 69, கிளன் பிலிப்ஸ் 41, ஷமி 7/57, பும்ரா 1/64, சிராஜ் 1/78, குல்தீப் 1/56) 70 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.

          பூவாதலையா வென்ற இந்திய அணி முதலில் மட்டையாடத் தீர்மானித்தது. ரோஹித் ஷர்மா ஒன்பதாவது ஓவரில் 47 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். இந்த உலகக் கோப்பை ஆட்டங்களில் அவர் எடுத்துள்ள ரன்கள் – ஆஸ்திரேலியாவிற்கு எதிராக பூஜ்யம்,  ஆப்கானிஸ்தனிற்கு  எதிராக 131, பாகிஸ்தானிற்கு எதிராக 86, நியூசிலாந்திற்கு எதிராக 46,  இங்கிலாந்திற்கு எதிராக 87, இலங்கைக்கு எதிராக 4, தென் ஆப்பிரிக்காவிற்கு எதிராக 40, நெதர்லாந்திற்கு எதிராக 61, இந்த ஆட்டத்த்ல் 47.அவர் தன்னுடைய தொடக்கங்களை பெரிய ஸ்கோராக மாற்ற சிரமப்படுகிறார். பிற பேட்டர்கள் சிறப்பாக ஆடுவதால் அணி வெற்றி பெறுகிறது.

          இன்றைய ஆட்டத்திலும் விராட் கோலி 117 ரன், ஷ்ரேயாஸ் ஐயர் 105, ஷுப்மன் கில் ஆட்டமிழக்காமல் 80, ராகுல் ஆட்டமிழக்காமல் 39 ரன் அடித்ததால் இந்திய அணி 50 ஓவர் முடிவில் நாலு விக்கட் இழப்பிற்கு 397 ரன் எடுத்தது.

          இதன் பின்னர் ஆடவந்த நியூசிலாந்து அணிக்கு மூன்று வீரர்கள் மட்டுமே சிறப்பாக ஆடினர். டேரில் மிட்சல் 117 ரன். கேன் வில்லியம்சன் 69 ரன், கிளன் பிலிப்ஸ் 41 ரன் அடித்தனர். பிறர் சரியாக ஆடவில்லை. பந்துவீச்சில் சற்று திணறிவந்த இந்திய அணிக்கு முகம்மது ஷமி 9 ஓவர் வீசி 78 ரன்கள் கொடுத்து 7 விக்கட்டுகள் எடுத்தார். இதனால் 48.5 ஓவரில் அனைத்து விக்கட்டுகளையும் இழந்து நியூசிலாந்து அணி 327 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியடைந்தது. முகம்மது ஷமி ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார்.

          விராட் கோலி ஒருநாள் கிரிக்கட் போட்டியில் தனது 50ஆவது சதத்தை அடித்து சச்சின் சாதனையைக் கடந்தார். ஷமி இன்று 7 விக்கட்டுகள் எடுத்து ஒருநாள் உலகக் கோப்பை போட்டிகளில் 50 விக்கட்டுகள் எடுத்த வீரரானார். குல்தீப் யாதவ் இன்று 41 மற்றும் 43ஆவது ஓவர்களை வீசியது ஒரு ஆச்சர்யமான விஷயம். நியூசிலாந்து அணி ஆடும்போது 33ஆவது ஓவரிலிருந்து 37ஆவது ஓவர் வரை இந்தியப் பந்துவீச்சாளர்கள் வெறும் 17 ரன்கள் மட்டுமே கொடுத்தனர்.

விராட் கோலி இதுவரை 674 ரன்கள் அடித்து சச்சினின் சாதனையான 673 ரன்னைக் கடந்தார். இந்த உலகக் கோப்பைப் போட்டிகளில் ரோஹித் ஷர்மா 550 ரன்கள் அடித்திருக்கிறார். அதில் 226 ரன்கள் முதல் 20 ஓவர்களில் வந்திருக்கிறது. இன்று ரோஹித் ஷர்மா 4 சிக்சர்கள் அடித்தார். இத்துடன் உலகக்கோப்பை போட்டிகளில் 50 சிக்சர்களை அடித்து கிரிஸ் கெயிலின் சாதனையக் கடந்தார்.

          நாளை ஆஸ்திரேலியா தென் ஆப்பிரிக்கா அணிகளிடையே கொல்கொத்தாவில் இரண்டாவது அரையிறுதிப் போட்டி நடக்க உள்ளது.

உலகக் கோப்பையை இந்தியா கைப்பற்ற… மதுரையில் சிறப்பு பிரார்த்தனை!

madurai anusham group prarthana for indian team - 2026
#image_title

உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் அரை இறுதி போட்டி மற்றும் இறுதி போட்டியில் இந்தியா வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்ற மதுரையில் சிறப்பு பிரார்த்தனை நடத்தப்பட்டது.

மதுரை அனுஷத்தின் அனுக்கிரகம் அமைப்பு மற்றும் மதுரை ஜல்லிக்கட்டு ரோட்டரி சங்கம் இணைந்து , மதுரை எஸ்எஸ் காலனியில் அமைந்துள்ள காஞ்சி மகா பெரியவா கோவில் வைத்து இன்று சிறப்பு பிரார்த்தனை நடைப்பெற்றது.
இந்த நிகழ்ச்சியில், பெரியவா விக்ரகத்துக்கு சிறப்பு அபிஷேகம், தீபாரனை நடைபெற்றது.

முன்னதாக, மஹன்யாஸம், ஹோமம் நடைபெற்றது. இதை தொடர்ந்து, உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா அரை இறுதி போட்டியிலும், இறுதி போட்டியிலும் வெற்றி பெற்று கோப்பையை வெல்ல வேண்டும் என சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது.

இந்நிகழ்வில், உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் விளையாடும் வீரர்களின் போட்டோக்கள் மற்றும் உலக கோப்பை போட்டோ வைத்து அர்ச்சனை செய்து தொடர்ந்து மகா தீபாராதனை நடைபெற்றது .

இந்த நிகழ்ச்சியில், மதுரை அனுஷத்தின் அனுக்கிரகம் நிறுவனர் நெல்லை பாலு ,மதுரை ஜல்லிக்கட்டு ரோட்டரி சங்க செயலாளர் எஸ். எஸ். சரவணன், பொருளாளர் கதிரவன் மற்றும் நூற்றுக்கு மேற்பட்ட பக்தர்கள் பெண்கள், குழந்தைகள் கலந்து கொண்டனர்.

வெள்ளிமலை ஆஸ்ரமத்துக்கு சமூக சேவைக்கான தேசிய விருது

vellimalai swami chaithanyananda - 2026
#image_title

வெள்ளிமலை ஆஸ்ரமம் 1940ம் ஆண்டு சுவாமி அம்பானந்தரால் தொடங்கப்பட்டது. தொடர்ந்து சுவாமி மதுரானந்தரும், மூன்றாவதாக சுவாமி சைதன்யானந்தஜி மகராஜும் பொறுப்பேற்று நடத்தி வருகின்றார்கள்.

ஆஸ்ரமம் தொடங்கப்பட்டது முதல் தற்போது வரை ஸ்ரீராமகிருஷ்ணா ஆஸ்ரமம் மற்றும் தொழிலதிபர்களிடம் இருந்து நிதி உதவி பெற்று சமூக சேவை, கல்வி மற்றும் மருத்துவ சேவை என ஏழைகளுக்கு பல்வேறு உதவிகளைச் செய்துவருகிறது.

மேலும் ஏழை மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை, நோயாளிகளுக்கு மருத்துவ உதவி, ஏழைப் பெண்களுக்கு திருமண நிதி உதவி என, பல சமூக சேவைகளையும் செய்து வருகிறது.

குறிப்பாக கடந்த 2004ல் சுனாமி ஏற்பட்டபோது முகாம்கள் அமைத்து பல்லாயிரக் கணக்கான ஏழைகளுக்கு உணவு மற்றும் உடைகள் வழங்கப் பட்டது. ஓகி புயல் பாதிப்பின் போது மலை வாழ் மக்களுக்கு பல்வேறு உதவிகள், கொரோனா நேரத்தில் ஏழைகளுக்கு உணவுப் பொருட்கள், மருத்துவ உதவி போன்ற அடிப்படை வசதிகள் மற்றும் தென்னிந்தியாவில் சமய வகுப்புகள் நடத்தி இந்துக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துதல் போன்ற சேவைகளையும் செய்து வருகிறது.

இந்த சமூக சேவைகளைப் பாராட்டி புதுதில்லியில் உள்ள டாக்டர் மங்களம் சுவாமிநாதன் பவுண்டேஷன் சார்பில் தத்தோபந்த் தெங்கடி சேவா சம்மான் 2023′ என்ற விருது வெள்ளிமலை விவேகானந்த ஆஸ்ரமத்துக்கு 29ம் தேதி புதுதில்லியில் நடக்கும் விழாவில் வழங்கப்படுகிறது.

சோலைமலை முருகன் கோயில் சஷ்டி உத்ஸவம்!

solaimalai temple kanthasashti - 2026
#image_title

அழகர்கோவில்: மதுரை மாவட்டம், அழகர்கோவில் மலையில் முருகப் பெருமானின் – ஆறாவது படைவீடு எனும் சோலைமலை முருகன் திருக் கோவில் அமையப் பெற்றுள்ளது.

இங்கு ஆண்டுதோறும், ஐப்பசி மாதம் நடைபெறும் கந்த சஷ்டி பெருந்திரு விழாவும் ஒன்றாகும். இந்த முக்கிய சஷ்டி திருவிழா முதல்நாளாக நேற்று 13ம் தேதி திங்கட் கிழமை காலையில் உற்சவர் சுவாமி, மூலவர் சுவாமிக்கும் காப்பு கட்டுதலுடன் தொடங்கி ,பக்தர்கள் வரிசையாக சென்று காப்பு கட்டி வி ரதத்தை தொடங்கினார்கள்.

அன்று காலையில் சஷ்டி மண்டப வளாகத்தில் ஷண்முக கார்ச்சனை மஹா அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து, உற்சவர் வள்ளி, தெய்வானை, சமேத சுப்பிரமணிய சுவாமிக்கு, குடம், குடமாக, பால், சந்தனம் விபூதி, தீர்த்தம், தேன் உள்ளிட்ட 16 வகையான அபிஷேகங்கள், சர விளக்கு தீபாராதனைகள், சிவாச்சார்யார்களின் வேத மந்திரங்களுடன் நடந்தது.

பின்னர் அன்று காலையில் மேளதாளம் முழங்க தீவட்டி பரிவாரங்களுடன் அன்ன வாகனத்தில் வள்ளி தெய்வானை சமேத சுப்ரமணிய சுவாமி எழுந்தருளி கோவில் உள் பிரகாரத்தில் வலம் வந்தார். ஏராளமான பக்தர்கள்குவிந்து விளக்கேற்றி சாமி தரிசனம் செய்தனர்.நேற்று விடுமுறை நாள் என்பதால் கட்டுக்கடங்காத கூட்டம் காணப்பட்டது. அதிகளவில் வாகனங்கள் வந்திருந்ததால் போக்குவரத்து தடை ஏற்பட்டு பின்னர் சரியானது. இதனால், பக்தர்கள் சிரமப்பட்டனர்.

தொடர்ந்து, 14ம் தேதி இன்று காலையில் வழக்கம் போல் பூஜைகள் , பின்னர் 11 மணிக்கு காமதேனு வாகனத்தில் சுவாமி புறப்பாடு நடைபெறும். 15ம் தேதி நாளை 3ம் திருநாள் அன்று யானை வாகனத்தில் சுவாமி புறப்பாடு நடைபெறும். 16ம் தேதி 4ம் திருநாள்.

அன்று திருவிழாவில் ஆட்டுக்கிடாய் வாகனத்திலும், 17 ம் தேதி சப்பர வாகனத்திலும், மேளதாளம் முழங்க சுவாமி புறப்பாடு நடைபெறும். திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக சூரசம்ஹார விழா வரும் 18ம் தேதி சனிக்கிழமை நடக்கிறது’ இதில், குதிரை வாகனத்தில் சுவாமி புறப்பாடு, மாலையில் 4.15 மணிக்கு வேல் வாங்குதல் , தொடர்ந்து வெள்ளி மயில் வாகனத்தில் சுவாமி புறப்பாடாகி, அன்று மாலை 4.30 மணிக்கு திருக்கோவிலின் ஈசான திக்கில் கஜமுகா சூரனையும், அக்கினி திக்கில் சிங்கமுகா சூரனையும் , ஸ்தல விருட்சமான நாவல் மரத்தடியில் மாலை 5.30 மணிக்கு.பத்மா சூரனையும் சம்ஹாரம் செய்யும் சூரசம்ஹார நிகழ்வு நடைபெறும்.

இதனை தொடர்ந்து 19ம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணிக்கு திருக்கல்யாண உற்சவம், பல்லக்கு வாகனத்தில் சுவாமி புறப்பாடும், அன்று மாலை 5மணிக்கு ஊஞ்சல் சேவை, மஞ்சள் நீர் உற்சவ நிகழ்ச்சியும் நடைபெறும். இத்துடன் இந்த கந்த சஷ்டி பெரும் திருவிழா நிறைவு பெறுகிறது.

கந்த சஷ்டி திரு விழா ஏற்பாடுகளை, அறங்காவலர் குழுத் தலைவர் வெங்கடாசலம், கோவில் துணை ஆணையர் ராமசாமி, அறங்காவலர்கள் பாண்டியராஜன், செந்தில்குமார், ரவிக்குமார், மீனாட்சி, மற்றும் திருக்கோவில் அலுவலர்கள், உள்துறை பணியாளர்கள் செய்திருந்தனர்.

உலக நீரிழிவு நோய் தினத்தை முன்னிட்டு மதுரையில் விழிப்புணர்வு பேரணி!

world diabetics dayawareness in madurai - 2026
#image_title

மதுரை: பெரும்பான்மையான சர்க்கரை நோயாளிகளின் கண் பார்வை தொடர்பான பிரச்சினைகளுக்கு முதன்மை காரணமாக சர்க்கரை நோய் இருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

சர்க்கரை நோயால் வரும் பார்வை இழப்பை தடுக்க சர்க்ரை நோயாளிகள் அனைவரும் தங்கள் கண்களை 6 மாதத்திற்கு ஒருமுறை கண் விழித்திரை பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என்ற விழிப்புணர்வை பொதுமக்கள் அனைவரிடமும் விதைக்க என்ற நல்ல எண்ணத்துடன் வாஸன் கண் மருத்துவமனை மாபெரும் விழிப்புணர்வுப் பேரணியை மதுரை காளவாசலில் இன்று நிகழ்த்தியது.
இந்தப் பேரணிக்கு, வாஸன் கண் மருத்துவமனையின் தமிழ்நாடு தலைமை மருத்துவ அதிகாரி டாக்டர் கே.கமல்பாபு முன்னிலை வகித்தார்.

மதுரை மாநகர போக்குவரத்து காவல்துறை துணை ஆணையர் குமார், தலைமை வகித்து சர்க்கரை நோயால் ஏற்படும் பாதிப்புகள் குறித்ததான விழிப்புணர்வு உரையாற்றி பேரணியை துவக்கி வைத்தார்.

இந்த பேரணி, காளவாசல், பழங்காநத்தம், சொக்கலிங்கம்
நகர் வழியாக மூன்று கிலோ மீட்டர் தூரம் சென்றது.
பேரணியில், அண்ணா அறிவியல் மற்றும் மேலாண்மைக் கல்லூரி மாணவர்கள் அன்னை பாத்திமா கல்லூரியின் மாணவர்கள் மற்றும் மூத்த குடிமக்கள்‌ கலந்து கொண்டனர்.
14ம் தேதி (இன்று) முதல் 30ம் தேதி வரை அனைத்து சர்க்கரை நோயாளிகளுக்கும் மற்றும் மூத்த குடிமக்கள் அனைவருக்கும் இலவச விழித்திரை பரிசோதனை செய்யப்படும் என, தெரிவித்தனர்.

தமிழ்நாடு அரசு அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்கத் தலைவர் முனைவர். சு. கிருஷ்ணன், அண்ணா அறிவியல் மற்றும் மேலாண்மை கல்லூரியின் தாளாளர் அண்ணாதுரை, மதுரை ஹெச்.எம்.எஸ்.ன் மாநில துணைத்
தலைவர் பாதர் வெள்ளை மற்றும் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக ஓய்வு பெற்றோர் நல அமைப்பின் மதுரை மண்டலத் தலைவர் ஏ. முருகேசன் ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டனர் .

இந்த நிகழ்ச்சியில், காளவாசல் கிளையின் மேலாளர் முத்துக்குமரவேல் வரவேற்புரையாற்றினார். வாஸன் கண் மருத்துவமனை பொதுமேலாளர் பன்னீர்செல்வம்  நன்றி கூறினார்.

ஸ்ரீரங்கம் கோவில் முன் ஈவெரா., சிலை! அகற்ற முடியுமா அண்ணாமலையால்?

evr statue in srirangam - 2026
#image_title

— ஆர். வி. ஆர்

ஸ்ரீரங்கம் ரங்கநாத சுவாமி கோவில் முன்பாக உள்ள ஈ. வெ. ராமசாமியின் சிலை இருக்கக் கூடிய இடம் அதுவல்ல, தமிழ்நாட்டில் பாஜக ஆட்சிக்கு வந்தால் அந்தச் சிலை அகற்றி வேரிடத்தில் வைக்கப்படும் என்று அக்கட்சித் தலைவர் அண்ணாமலை பேசியது சரியா?

அண்ணாமலையின் பேச்சு சரி என்பது மட்டுமல்ல. அவருக்குப் பெருகிவரும் மக்கள் சக்தியின் விளைவாகவும் அது இருக்கிறது.

அண்ணாமலை ஏன் அப்படிப் பேசினார்?

ஸ்ரீரங்கத்தில் ஈ.வெ.ரா சிலையின் பீடத்தில் காணப்படும் அவரது சில வாசகங்கள் – “கடவுள் இல்லை. கடவுள் இல்லை, கடவுள் இல்லவே இல்லை” என்ற சொற்கள் – மக்களின் தெய்வ நம்பிக்கையை அவமதிக்கின்றன. ஹிந்துக்களின் தெய்வ நம்பிக்கை ஆழ்ந்தது. வேண்டுமென்றே அவர்கள் அருகில் சென்று அவர்களின் நம்பிக்கையை அவமதிப்பது அநாகரிகம், அடாவடி.

கடவுள் இல்லை என்று நினைத்து வாழ்வது தவறில்லை. அது அந்த மனிதர்களின் ஜனநாயக உரிமை. நாத்திகர்களின் மனதை மாற்ற ஆத்திகர்கள் முயல்வதில்லை, அந்தச் செயலை ஆத்திகர்கள் நினைத்துப் பார்ப்பதுமில்லை. இன்னொரு பக்கத்தில், கடவுளை வழிபடுகிறவர்கள் தங்களின் நம்பிக்கையைப் பின்பற்றுகிறார்கள் –அதே ஜனநாயக உரிமையில். அதற்கு மற்றவர்கள் சங்கடமோ இடையூறோ தரக் கூடாது. இந்தப் பண்பைத் தமிழகத்தின் திமிர் பகுத்தறிவுவாதிகள் புரிந்து கொள்வதில்லை.

கடவுளை நம்புகிறவர்கள்தான் கோவிலுக்கு வருவார்கள். பிரசித்தி பெற்ற ஸ்ரீரங்கம் கோவிலுக்கு முன்பாக – அதுவும் ராஜகோபுரத்தின் எதிரே நூறு மீட்டர் தூரத்திற்குள், நடு ரோட்டில் – பெரியார் எனப்படும் ஈ.வெ.ரா-வின் சிலையை அமைத்து “கடவுள் இல்லை, கடவுள் இல்லை, கடவுள் இல்லவே இல்லை” என்ற அவரது வார்த்தைகளைச் சிலையின் பீடத்தில் பொறித்து வைத்தால் என்ன அர்த்தம்? ஹிந்துக்களைப் புண்படுத்த வேண்டும் என்று வம்படியாகச் செய்தது அது.

அந்தச் சிலை அங்கு இருப்பதின் அராஜகத்தை, அண்ணாமலை எழுப்பிய ஒரு கேள்வி சுரீர் என்று மற்ற சில கட்சிகளுக்கு உறைக்க வைத்திருக்கும். அவர் கேட்டது: “காங்கிரஸ், கம்யூனிஸ்ட் மற்றும் திமுக குறித்து பெரியார் பேசிய வார்த்தைகளை அவர்கள் கட்சி வாசலில் வைப்பார்களா? அவர்களுக்கு ஒரு நியாயம், ஹிந்து மக்களுக்கு ஒரு நியாயமா?”

ஈ.வெ.ரா சிலையை ஸ்ரீரங்கம் கோவில் எதிரில் வைக்க 1973ம் வருடம் அப்போதைய கருணாநிதி அரசு ஒரு அரசாணை பிறப்பித்து உதவியது. அந்த அரசாணை இல்லாமல் அந்த இடத்தில் சிலை வந்திருக்க முடியாது.

ஸ்ரீரங்கம் தவிர்த்து வேறு இடங்களில் – பிற கோவில்கள் முன்பாகவும் கூட – வைக்கப் பட்டிருக்கும் சில ஈ.வெ.ரா சிலைகளின் கீழ், கடவுள் நம்பிக்கையை எட்டி உதைத்துத் திட்டித் தீர்க்கும் அவரது இன்னும் காட்டமான வார்த்தைகள் இடம் பெறுகின்றன. (“கடவுளைக் கற்பித்தவன் முட்டாள். கடவுளைப் பரப்பியவன் அயோக்கியன். கடவுளை வணங்குகிறவன் காட்டுமிராண்டி”). அந்த மனிதரின் சிலையைக் கோவில் முன்பாக ஸ்ரீரங்கத்தில், பிற ஊர்களில், வைக்க அரசு அனுமதித்ததே ஹிந்துகளை இம்சிக்கும்.

ஈ.வெ.ரா-வின் கடவுள் எதிர்ப்பு வாசகங்களுக்குத் திமுக தலைமையின் அமோக ஆதரவு உண்டு. அதிமுக-வின் நிலை இது. அதாவது, தாங்களும் ஒரு திராவிடக் கட்சி, தாங்களும் பெரியார் வழிவந்த கட்சி என்று காண்பித்துக் கொள்ள, அதிமுக-வும் பெரியாரின் அந்த வாசகங்களை ஆட்சேபிக்காது.

திமுக-வை அண்டி அரசியலில் ஜீவிக்கும் தமிழக காங்கிரசும், “இது பெரியார் மண்” என்ற உயிர் காக்கும் மந்திரத்தை அவ்வப்போது உச்சரிக்க வேண்டும். ஆகையால் ஈ.வெ.ரா-வின் ஸ்ரீரங்கச் சிலை வாசகங்களைக் காங்கிரஸ் எதிர்க்காது. மற்ற சிறு திராவிடக் கட்சிகளும் அந்த வார்த்தைகளைத் தூக்கித்தான் பிடிக்கும்.

ஈ.வெ.ரா சிலையைத் தாண்டி ஸ்ரீரங்கம் கோவிலுக்குச் செல்லும் பக்தர்கள், அந்தப் பகுதியில் வசிக்கும் ஆத்திகர்கள், தலைவிதியே என்று அவர் சிலையையும் அவர் சொற்களையும் கசந்து பார்த்து, வேறு வழி இல்லாமல் மனதில் அவதியைத் தாங்குகிறார்கள்.

நம் ஊர்களில் ஓயாமல் கழிவுநீர் ஓடும் சில தெருக்கள் வழியே செல்ல வேண்டியவர்கள் என்ன செய்வார்கள்? தங்கள் ஆடைகளைச் சற்று உயர்த்திப் பிடித்து, முடிந்தால் தங்கள் மூக்கையும் பிடித்துக் கொண்டு, அந்தப் பகுதியைக் கடப்பார்கள். மற்றபடி ஊழலில் திளைத்து அலட்சியம் காட்டும் நகராட்சியுடனோ அரசுடனோ கழிவு நீர்க் குழாய்கள் அமைக்க அல்லது ரிப்பேர் செய்யக் கேட்டு மல்லுக்கு நிற்க மாட்டார்கள் நமது குடிமக்கள். அதற்கான திராணி அவர்களிடம் இல்லை.

இந்த ரீதியில்தான் ஸ்ரீரங்கம் ஈ.வெ.ரா சிலை வாசகங்கள் அவ்வழியே செல்லும் ஹிந்து மதத்தினரை, பக்தர்களை, சீண்டுகின்றன. இருந்தாலும் சாலையில் ஓடும் கழிவுநீருக்குப் பழக்கப்பட்டு அதைச் சகித்துச் செல்லும் பாதசாரிகளைப் போல் ஸ்ரீரங்கம் சிலைப் பகுதியில் ஹிந்துக்கள் போய் வருகிறார்கள். அவர்கள் ஒன்றுகூடி அந்த வாசகங்களை எதிர்த்துப் போராடாமல் இருப்பதால் அவர்கள் பெரியாரையும் போற்றிவிட்டு எதிரே கோவிலுக்குள் சென்று அரங்கனையும் வணங்குகிறார்கள் என்று அர்த்தம் ஆகாது. இந்த நாலாம் கிளாஸ் லாஜிக் திராவிட அரசியல்வாதிகளுக்குப் புரியுமா?

ஸ்ரீரங்கம் ஈ.வெ.ரா சிலையை அகற்றச் சொல்லும் தார்மீகக் குரல் உள்ளவரும், ஆட்சிக்கு வந்தால் அதைச் செய்யும் தைரியம் உள்ளவருமான தலைவர் என்று மக்கள் யாரை நினைக்கிறார்கள்? அண்ணாமலையைத் தான். இதை அண்ணாமலையும் உணர்கிறார்.

அப்படியான மக்கள் நம்பிக்கையும் மக்கள் சக்தியும் தனக்குப் பெருகி வரும்போது அதை இயற்கையாக வெளிப்படுத்துகிறார் அண்ணாமலை. அதனால்தான் அந்த ஈ.வெ.ரா சிலையையும், அதுபோன்ற மற்ற ஈ.வெ.ரா சிலைகளையும், அகற்றுவதற்கான நடவடிக்கையைப் பின்னாளில் பாஜக தமிழகத்தில் ஆட்சிக்கு வரும்போது எடுக்கும் என்று அவர் பேசினார். அதற்கான வல்லமையை, அவர் மீதான மக்கள் நம்பிக்கை அவருக்குத் தரும்.

2026 தேர்தலில் பாஜக தமிழகத்தில் ஆட்சிக்கு வராமல் போனாலும், அதனால் ஸ்ரீரங்கத்தில் – மற்ற கோவில்கள் முன்பாகவும் – ஈ.வெ.ரா சிலையும் அவர் வாசகங்களும் சிலகாலம் நீடித்தாலும் பரவாயில்லை. அண்ணாமலையின் இந்தப் பேச்சும் அவருக்குப் பெருகும் மக்கள் சக்தியும் நீண்டகாலப் பயன்கள் நமக்கு வருவதற்கான அறிகுறி: ஒரு சிறந்த மாநில அரசும் நல்ல எதிர்காலமும் கிடைக்க. நாம் காத்திருக்கலாம்.

நிரந்தரமாக அகற்றப்படும் என்று மக்களுக்கு நம்பிக்கை இருக்கிற போது, இதுநாள் வரை சாலையில் ஓடுகிற கழிவுநீர் கொஞ்சம் தொடர்ந்து ஓடினால் ஓடட்டுமே? அப்படி நினைத்துத்தானே நமது ஜனநாயகத்தில் மக்கள் சாந்தம் கொள்ள முடியும்?


Author: R. Veera Raghavan, Advocate, Chennai
Blog: https://rvr-india.blogspot.com

சாலமன் பாப்பையா பேச்சு, ஆங்கிலேய அடிமைத்தனத்தின் வெளிப்பாடு!

hindumunnani - 2026

பேராசிரியர் சாலமன் பாப்பையா அவர்களின் பேச்சு ஆங்கிலேய அடிமைத்தனத்தின் வெளிப்பாடு என்று, இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் அறிக்கை ஒன்றில் வெளியிட்டு கண்டித்துள்ளார். அவரது அறிக்கை:

தீபாவளி முன்னிட்டு ஒரு தனியார் தொலைக்காட்சி பட்டிமன்றத்தில் நடுவராக பேசிய பேராசிரியர் சாலமன் பாப்பையா அவர்கள் ஆங்கிலேயே கிறித்தவர்கள் வந்துதான் கல்வி கொடுத்தனர் எனப் போகிற போக்கில் பேசியுள்ளார்.

இது ஆங்கிலேய சகுனி மெக்காலே வகுத்த சதியின் வெளிப்பாடு. இவர் மட்டும் அல்ல மெத்தப் படித்த பல மேதாவிகளுக்கும் இங்கிலாந்து கிறித்தவ ஆட்சி தான் பாரதத்தின் கல்வியை, மருத்துவத்தை, தொன்மையை, விவசாயத்தை, காடுகளை என எல்லாவற்றையும் அழித்தது என்பதை உணரவில்லை.

அது மட்டுமல்லாது எப்படி எல்லாம் அழித்தார்கள் என்ற செய்தியை கூட சுதந்திர இந்தியாவில் நாம் உரக்க பகிரங்கமாகச் பேசக்கூட இல்லை. அதனாலேயே அவை இல்லை என்றாகி விடாது.

இப்படிப்பட்டவர்கள் முதலில் மகாத்மா காந்திஜியின் முதன்மை சீடரான திரு. தரம்பால் அவர்கள், ஐரோப்பிய கிறிஸ்தவர்கள் இந்தியாவிற்கு வந்தபோது இந்தியர்களின் நிலை குறித்து அவர்களே எழுதி வைத்த ஆவணங்களை ஆய்வு செய்து அதற்கான ஆதாரங்களை சேகரித்து ஒரு தொகுப்பாக Beautiful Tree என்ற நூல் வெளியிட்டுள்ளார். அதன் தமிழாக்கம் “அழகிய மரம்” என்றுவெளிவந்துள்ளது. மேலும் சில நூல்களும் வந்துள்ளன. அவற்றை படித்தால் ஆங்கிலேய கல்வி நம்மை எப்படியெல்லாம் சீரழித்து உள்ளது என்பது வெளிப்படையாக புரியும்.

ஆங்கிலேயர்களது கல்வியின் சீரழிவை மகாகவி பாரதியார் தனது சுயசரிதையில் எழுதியதை சாலமன் பாப்பையா அவர்களும் படித்து உணர்ந்திருப்பார்.

ஆங்கிலேய கிறித்துவர்கள் ஆட்சியால்,ஆங்கிலேய மோகத்தால் நமது பராம்பரிய தொழில் வளத்தை, நிபுணத்துவத்தை இழந்ததோடு அதனை நாமே இகழவும் வைத்தது. அவற்றை கேவலமாக சிந்திக்க வைத்தது. உதாரணமாக விவசாயம், நெசவு போன்ற பாரம்பரிய நடைமுறையை இழந்தோம். குமாஸ்தா கல்வி உயர்வென போற்றி பரப்பினோம்.

கிறித்துவ மிஷனரிகள் தாக்கத்தால் இந்து மாணவர்கள் நமது பண்பாட்டை கலாச்சாரத்தை இழந்து விடக்கூடாது என்று இந்துக்கள் கவலைப்பட்டார்கள். நவீன கல்வியுடன் நமது சனாதன இந்து நம்பிக்கைகளை மாணவர்களிடம் கொண்டு செல்ல உருவாக்க இந்து சமுதாயத்தின் அனைத்து பிரிவினரும் அக்கறை காட்டினார்கள்.

உதாரணமாக காரைக்குடி அழகப்பா செட்டியார், காஞ்சிபுரம் பச்சையப்பன் முதலியார், செங்கல்வராய நாயக்கர், தெற்கே இந்து பரிபாலன நாடார்கள் சங்கம் உருவாக்கிய கல்வி நிறுவனங்கள், கொங்கு மண்டலத்தில் உருவான கொங்கு வேளாளர் கல்வி நிலையங்கள், சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள இந்து பள்ளி, தியாசிபிக்கல் சோசைட்டி பள்ளி, சுவாமி சகஜானந்தா துவக்கிய நந்தனார் பள்ளி என பலவும் நூற்றாண்டை கடந்து சேவை செய்து வருகிறது. இதூபோன்ற இந்துக்களில் தோன்றிய வள்ளல்கள் தங்கள் சொத்துக்களை இந்துக்களின் கல்வி மேம்பாட்டிற்கு அளித்தார்கள்.

அதேசமயம் குருகுல முறையில் தமிழ் கற்றவர்களே சான்றோனாக இன்றும் போற்றப்படுகிறார்கள். அத்தகைய குருகுலங்களை சைவ ஆதீனங்கள், ஆன்மிக மடங்கள் சேவையாக செய்து இந்து ஆன்மிகத்தை தமிழ் இலக்கியங்களை காப்பாற்றி வந்துள்ளன.

சுதந்திர பாரதத்திலும் ஐரோப்பிய கிறிஸ்தவர்களால் ஏற்பட்ட பாதிப்பு எனும் விஷம் குறையவில்லை என்பதற்கு சாலமன் பாப்பையா அவர்களின் பேச்சு உதாரணம்.

கிறித்துவ பாதிரிகள் குறிப்பாக திருக்குறள் திருவாசகத்தை ஆங்கிலத்தில் மொழிமாற்றம் செய்தார்கள் என திராவிட அரசியல்வாதிகள் பெருமை பேசுவார்கள்‌. அப்படி ஆங்கில திருக்குறள் திருவாசகம் எத்தனை வெளிநாடுகளில் பரப்பட்டது? எத்தனை ஆங்கிலோ இந்தியன் சர்ச்சுகளில் படிக்கப்பட்டது? தமிழனை முட்டாளாக்கி மதமாற்றம் செய்ய அவர்கள் கட்டிய வேடம்தான் தமிழ் பற்று.

எனவே சாலமன் பாப்பையா போன்றவர்கள் தங்கள் அறியாமை பொது தளத்தில் வெளிப்படுத்துவதற்கு முன் இதனால் தங்களை இந்த உலக இவர்களின் எப்படி எடைபோடும் என்பதை உணர்ந்து பேச வேண்டும்.

லட்சக்கணக்கான மக்கள் பார்க்கும் ஊடகத்தில் இதுபோன்ற தவறான கருத்துகள் பேசுவது அறிவார்ந்த செயல் இல்லை என்பதை சுட்டிக் காட்டுகிறோம்.

தன் நெஞ்சு அறிந்து பொய் சொல்வதை பாரதி மொழியில் சொல்வதானால் “படித்தவன் பொய் சொன்னால் போவான் போவான் ஐயோ என்று போவான்” எனும் அறச்சீற்றத்தை உள்வாங்கி கொள்ள வேண்டும்.

அறிவார்ந்த பாப்பையா அவர்கள் அப்பாவு அவர்களைப் போல் பேசுவது வேதனை தருகிறது.

தனது கிறித்துவ விசுவாசத்தால் உண்மைக்கு புறம்பான கருத்தை பேசிய பேராசிரியர் சாலமன் பாப்பையா அவர்களுக்கு இந்து முன்னணி சார்பில் கண்டனத்தை தெரிவித்துக்கொள்கிறோம்.

சல்மானுடன், பெண்களுடன்… மோடி கர்பா நடன வீடியோ வைரல்; உண்மை என்ன?!

modi salman khan dupe fake news viral - 2026
#image_title

ஜி கடுமையான பணிச்சுமைகளுக்கு இடையே சல்மானுடன் இளைப்பாறிய தருணம்… – என்று தலைப்பிட்டு, சல்மானுடன், பெண்களுடன்… மோடி கர்பா நடனம் ஆடும் வீடியோ வைரலாகியுள்ளது. ஆனால் இதன் பின் உள்ள உண்மை என்ன?!

நம்ம ஊர்ல எம்ஜிஆர்., வேசம் கட்டிக்கிட்டு இன்னிக்கும் அதிமுக., கட்சி மீட்டிங்க்ல யாராச்சும் ஆடுவாங்க… அப்ப எம்.ஜி.ஆர். உயிரோட வந்துட்டாரானு நாம வாயப் பொளந்து பாத்தோம்னா, நாம தான் திராவிடத் தமிழன்… – என்ற கருத்துப் பதிவிட்டு, இது போன்ற வீடியோக்களைப் பரப்பும் நபர்களை விமர்சித்தும் கருத்துப் பதிவுகளைக் காண முடிகிறது.

குஜராத்தில் விகாஸ் மஹந்தே என்ற ஒரு வியாபாரி. இவர் இப்படித்தான் இரண்டு, மூன்று குஜராத்திய கர்பா நடனம் ஆடி, அது வைரல் ஆனது! இவர் பார்க்க மோடி மாதிரியே இருப்பார்! வியாபாரியாக இருந்து இதன் காரணமாக இப்போது நடிகர் ஆகிவிட்ட இவரை, இதனால் பாஜக.,வினரும் கூட தங்கள் தேர்தல் பிரசாரங்களில் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்கள்.

ஆனால் உண்மையில் நாட்டின் பிரதமரான மோடிக்கு இது போன்ற நடனங்களில் கலந்து கொள்ளவெல்லாம் நேரமும் கிடையாது, வயதும் கிடையாது. எங்கேயாவது டிரம்ஸ், தபேலா, நாயனம் இப்படி இருந்தால் இசைத்துப் பார்த்து, தானும் ஓர் எளிய மனிதன் என்பதைக் காட்டிக் கொண்டு, அவர்களுக்கு உத்ஸாகம் கொடுக்க இதைச் செய்வாரே ஒழிய, நடனம் ஆடி நேரம் போக்கவெல்லாம் அவரது இயல்பு இடம்கொடுக்காது என்றும் கருத்துகள் உலா வருகின்றன. உண்மையில், மோடியும் சல்மானும் ஆடும் வைரலான வீடியோவில், இருவருமே டூப் தானாம். இது குறித்த விளம்பரமும் சமூகத் தளத்தில் இருக்கிறது

எனவே இது மோடியில்லை. விகாஸ் மகந்த் என்று ஒரு குஜராத்தி வியாபாரி இருக்கிறார். அவர் மோடி மாதிரியே இருப்பார். இவரை வைத்து, மும்பையில் சில ஈவண்ட் ஆர்கனைசர்ஸ் மோடிக்கு டூப் என சொல்லியே நிகழ்ச்சிகள் நடத்துவார்கள். அப்படி ஒரு நிகழ்ச்சியில், மோடி, சல்மான்கான் டூப் ஷோ என்று ஒன்று நடத்தினார்கள். அப்போது நவராத்ரி என்பதால், குஜராத்தின் கர்பா நடன நிகழ்ச்சி மும்பையில் நடைபெற்றது. அப்போது எடுக்கப்பட்ட வீடியோ மோடி பேரை ரிப்பேர் செய்ய வைரலாக்கப் பட்டது… என்றும் இதற்கு விளக்கங்களைக் கொடுத்திருக்கிறார்கள் சிலர்.

இது குறித்த உண்மை கண்டறியும் தளங்களில் குறிப்பிட்டிருப்பதாவது…

2023 ஆம் ஆண்டு நவராத்திரி அன்று, பிரதமர் நரேந்திர மோடி தான் எழுதிய “மாடி” என்ற கர்பா பாடலின் இசை வீடியோவைப் பகிர்ந்துள்ளார். தற்போது, பிரதமர் கர்பா பீட்களுக்கு நடனமாடுவது போன்ற வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இந்த வீடியோவில், பிரதமர் மோடியை ஒத்த ஆண் ஒருவர் சில பெண்களுடன் நடனமாடுவதைக் காணலாம். இன்ஸ்டாகிராம் பயனர் ஒருவர் இந்த வீடியோவை “வா மோடி ஜி வா” என்ற தலைப்பில் பகிர்ந்துள்ளார். இந்த இடுகையின் காப்பகப்படுத்தப்பட்ட பதிப்பை இங்கே காணலாம்.

இந்த வீடியோவில் காணப்பட்டவர் பிரதமர் மோடி அல்ல என்றும் அவரது தோற்றம் கொண்ட நடிகர் விகாஸ் மஹந்தே என்றும் கண்டறியப்பட்டுள்ளது. கர்பா நிகழ்ச்சியில் பிரதமர் மோடி நடனமாடியது குறித்து எந்த செய்தியும் கிடைக்கவில்லை. இது உண்மையில் நடந்திருந்தால், இந்தியாவில் உள்ள அனைத்து ஊடகங்களும் செய்தி வெளியிட்டிருக்கும். அப்படியானால் இந்த வீடியோவின் பின்னணி என்ன?

வைரலான வீடியோவுக்கு எதிர்வினையாற்றிய ஒரு எக்ஸ் பயனர், அந்த வீடியோவில் இருப்பவர் பிரதமர் மோடியின் டாப்பல்கேஞ்சர் விகாஸ் மஹாந்தே என்று எழுதினார், மஹந்தேவின் இன்ஸ்டாகிராம் ஸ்டோரியின் ஸ்கிரீன் ஷாட்டைப் பகிர்ந்து கொண்டார். மஹந்தேவின் இன்ஸ்டாகிராம் கணக்கில், நவம்பர் 7ஆம் தேதி லண்டனில் நடந்த “தீபாவளி மேளா”வில் தலைமை விருந்தினராக அழைக்கப்பட்டதாக அறிவிக்கும் வீடியோவை அவர் பகிர்ந்துள்ளதைக் கண்டோம்.

இந்த வீடியோவின் ஒரு கட்டத்தில், வைரலான வீடியோவில் காணப்படுவது போல் அவர் பெண்களுடன் ஒரே கர்பா மேடையில் நிற்பதைக் காணலாம். வைரலான வீடியோவில் நடனமாடுவதைப் போலவே அவரது உடையும் இருந்தது. மஹந்தேவின் சமூக ஊடக கணக்குகளில் உள்ள அவரது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள், அவர் பிரதமர் மோடியுடன் மிகவும் ஒத்திருப்பதை தெளிவாக்குகிறது.

பிரதமர் போல் உடை அணிந்துள்ளார். அதன் அடிப்பகுதியைப் பெற, நாங்கள் மஹாந்தேவின் PR குழுவை அணுகினோம். இந்த வீடியோ விகாஸ் மஹந்தேவைக் காட்டுகிறது என்றும் அது லண்டனில் பதிவு செய்யப்பட்டது என்றும் அணியின் உறுப்பினர் அதுல் பரீக் தெரிவித்தார்.

விகாஸ் நவம்பர் 4 மற்றும் 5 ஆகிய தேதிகளில் லண்டனில் இருந்தார். “பிரதமர் மோடியாக விகாஸின் புகைப்படங்கள் அல்லது வீடியோக்களை யார் பகிர்கிறார்களோ அவர்கள் மிகவும் தவறு செய்கிறார்கள்,” என்று அவர் மேலும் கூறினார்.

லண்டன் தீபாவளி மேளா நிகழ்வு தொடர்பான முகநூல் பதிவில் விகாஸ் மஹந்தே தலைமை விருந்தினராக அழைக்கப்பட்டார். இந்த பதிவில், “தீபாவளி ஷாப்பிங் பஜார் 2023” இல் பிரதமர் மோடி மற்றும் சல்மான் கானின் டாப்பல்கேங்கர்கள் பங்கேற்பார்கள் என்று கூறப்பட்டது. மும்பையைச் சேர்ந்த தொழிலதிபராக இருந்து நடிகராக மாறிய விகாஸ் மஹந்தே பற்றி பல செய்திகள் உள்ளன. தேர்தலின் போதும் பாரதிய ஜனதா கட்சிக்காக பிரச்சாரம் செய்துள்ளார். இதனால், வைரலான வீடியோவில் பிரதமர் நடனம் ஆடவில்லை என்பது தெளிவாகிறது.