Home Blog Page 272

WC 2023: தென் ஆப்பிரிக்காவின் ‘ராசி’… விளையாடியது அரையிறுதியில்!

world cup cricket 2023 - 2026
#image_title

ஒருநாள் கிரிக்கட் உலகக் கோப்பைப் போட்டி இரண்டாவது அரையிறுதிப்போட்டி
தென் ஆப்பிரிக்கா vs ஆஸ்திரேலியா,
கொல்கொத்தா – 16.11.2023

முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன்

          தென் ஆப்பிரிக்க அணியை (49.4 ஓவர்களில் 212, டேவிட் மில்லர் 101, கிளாசன் 47, கோயட்சி 19, மிட்சல் ஸ்டார்க் 3/34, பேட் கம்மின்ஸ் 3/51, ஹேசல்வுட் 2/12, ட்ராவிஸ் ஹெட் 2/21) ஆஸ்திரேலிய அணி (47.2 ஓவர்களில் 215/7, ட்ராவிஸ் ஹெட் 62, ஸ்மித் 30, டேவிட் வார்னர் 29, ஜோஷ் இங்கிலிஷ் 28, கோயட்சி 2/47, ஷம்சி 2/42, கேசவ மகராஜ் 1/24, மர்க்ரம் 1/23, ரபாடா 1/41) 3 விக்கட்டுகள் வித்தியாசத்தில் வென்றது.

          பூவாதலையா வென்ற தென் ஆப்பிரிக்க அணி முதலில் மட்டையாடத்தீர்மானித்தது. பவுமா (பூஜ்யம் ரன்), க்விண்டன் டி காக் (3 ரன்), டுஸ்ஸன் (6 ரன்), மர்க்ரம் (10 ரன்) என வரிசையாக தென் ஆப்பிரிக்க வீரர்கள் ஒருவர் பின் ஒருவராக ஆட்டமிழந்ததால் அந்த அணி 11ஆவது ஓவர் முடிவில் 4 விக்கட் இழப்பிற்கு 24 ரன் எடுத்திருந்தது. விக்கட்டுகள் விழுந்தது கூடப் பரவாயில்லை என்றால் அதிரடி ஆட்டக்காரர்களால் இன்று 10 ஓவர் வரை 18 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. 52 பந்துகளுக்குப் பின்னரே முதல் ஃபோர் அடிக்கப்பட்டது. இதன் பின்னர் டேவிட் மில்லர் ஆடவந்து சதம் அடித்தார். தொடக்கத்தில் குறைவாக ரன் அடித்துவிட்டு பின்னர் அதே அணியின் வீரர் ஒருவர் சதம் அடிப்பது ஒருநாள் போட்டிகளில் இது நான்காவது முறை.

  • 9/4, கபில்தேவ் 175*, இந்தியா vs ஜிம்பாபே (1983 உலகக் கோப்பைப் போட்டி)
  • 19/4, நாசிர் ஹுசைன் 10, வங்கதேசம் பாகிஸ்தான், டிசம்பர் 2011
  • 24/4, நீல் மெக்கல்லம் 121*, ஸ்காட்லாந்து அயர்லாந்து, ஏப்ரல் 2009
  • 24/4, டேவிட் மில்லர் 101, தென் ஆப்பிரிக்கா ஆஸ்திரேலியா (2023 உலகக் கோப்பை)

இறுதியில் 49.4 ஓவர்களில் தென் ஆப்பிரிக்க அணி 212 எடுத்து ஆட்டமிழந்தது.

          பின்னர் ஆடவந்த ஆஸ்திரேலிய அணி வீரர்கள் முதல் 10 ஓவர்களில் வெற்றியை உறுதி செய்தனர். முதல் 10 ஓவர்களில் அந்த அணி 2 விக்கட் இழப்பிற்கு 74 ரன் கள் எடுத்தது. இடையில் தென் ஆப்பிரிக்க அணி பந்துவீச்சாளர்கள் சில விக்கட்டுகளை எடுத்தபோதும் ஆட்டம் ஆஸ்திரேலிய அணியின் கைகளில் இருந்து நழுவாமல் அந்த அணியின் வீரர்கள் பார்த்துக்கொண்டனர். தென் ஆப்பிரிக்க அணியால் ஆட்டத்தை 48ஆவது ஓவர் வரை இழுக்க முடிந்ததே தவிர தோல்வியைத் தவிர்க்க முடியவில்லை. 2 விக்கட்டுகள் மற்றும் 62 ரன்கள் எடுத்த ஆஸ்திரேலிய வீரர் ட்ராவிஸ் ஹெட் ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார்.

          இனி ஆஸ்திரேலிய அணி இந்திய அணியுடன் இந்த 2023 ஒருநாள் உலகக் கோப்பையின் இறுதிப்போட்டியில் நவம்பர் 19ஆம் தேதி குஜராத்தில், அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோதி மைதானத்தில் விளையாடும். இந்த வெற்றியின் மூலம் ஆஸ்திரேலிய அணி 8ஆவது முறை உலகக் கோப்பை இறுதிப்போட்டியில் விளையாடுகிறது. தென் ஆப்பிரிக்க அணியை மூன்றாவது முறை அரையிறுதியில் தோற்கடித்திருக்கிறது. தென் ஆப்பிரிக்க அணி இதுவரை ஐந்து முறை அரையிறுதி வரை வந்து (1992, 1999, 207, 2015, 2019) தோல்வியைச் சந்தித்திருக்கிறது.

கல்வி நிலையங்களில் ‘அரசியல்’ பேச்சை நிறுத்துக!

1725598 annauniversity - 2026

கல்வி நிலையங்களில் அரசியல் பேச்சு! ஐஐடி பாம்பே.,யை மற்றவை பின்பற்ற வேண்டும்!

கல்வி நிலையங்களில் அரசியல் பேச்சு என்ற விவகாரத்தில், ஐ.ஐ.டி பாம்பேயின் புதிய கட்டுப்பாடுகள் இப்போது அமலுக்கு வந்திருக்கின்றன.

பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள், கல்வி நிறுவனங்கள் அரசியல் பேசும் இடங்களாகத் திகழ்வதை, கல்வியாளர்கள் பெரும்பாலும் கண்டிக்கின்றனர். குறிப்பாக, தேசவிரோதக் கருத்துகளைப் பரப்பும் இடங்களாக, சில அமைப்புகளின் சார்பாகப் பணி செய்யும் பேராசிரியர்கள் மாணவர் மன்றங்களை, மேடைகளை, வகுப்புகளைப் பயன்படுத்தி வருகின்றனர்.

ஐ.ஐ.டி பாம்பே உள்ளிட்ட பல கல்வி நிலையங்களில் தேச விரோத பேச்சாளர்கள் பேசுவதும், அதைத் தொடர்ந்து தேசிய அமைப்புகள் போராட்டம் நடத்துவதும் பிரதமராக நரேந்திர மோடி ஆட்சிக்கு வந்ததிலிருந்து நடைமுறையாக மாறியிருக்கிறது.

அண்மையில் ஹமாஸ் பயங்கரவாதிகளுக்கு ஆதரவாக பொதுவெளியில் பேசக் கூடிய சிலரை பேச அழைத்திருக்கிறார்கள் ஜிண்டால் பல்கலைக் கழகத்தில்!தேச விரோத கூட்டம், மாணவர்கள் மத்தியில் பேசிய இந்தப் பயங்கரவாத ஆதரவு ‘பேச்சு’, போராட்டத்தில் முடிந்தது!

அதே புரபசரை ஐ.ஐ.டி பாம்பேயில் பேச தேசவிரோத கூட்டம் பேச அழைக்க, அந்த நிகழ்ச்சிக்கு எதிர்ப்பு கிளம்பியது. இதை அடுத்து, ஐ.ஐ.டி பாம்பே நிர்வாகம் அந்த நிகழ்ச்சியை ரத்து செய்தது.

அத்தோடு, இந்தப் பிரச்சினைக்கு முற்றுப் புள்ளி வைக்கும் விதமாக புதிய விதிமுறைகளை வெளியிட்டிருக்கிறது நிர்வாகம்: ‘கல்வி சம்பந்தமாகப் பேச எந்தப் பிரச்சினையும் கிடையாது. கல்வி சாராத பிற – அரசியல் – கூட்டங்களுக்கு முதலில் நிர்வாக குழுவிடம் அனுமதி பெற வேண்டும்’. மேலும், இனி ஐ.ஐ.டி பாம்பேக்குள் போராட்டம் நடத்த விரும்பினால், காவல்துறையின் அனுமதி பெற வேண்டும்! – என்று சில கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

இதனை பிற கல்வி நிலையங்களும் பின்பற்ற வேண்டும் என்பது கல்வியாளர்கள் எதிர்பார்ப்பாக உள்ளது.

தாய்லாந்தில் உலக இந்து ஒற்றுமை மாநாடு: இந்து முன்னணி வாழ்த்து!

hinduism - 2026

தாய்லாந்தில் நடைபெற உள்ள உலக இந்துக்களை ஒருங்கிணைக்கும் ஒற்றுமை மாநாடு வெற்றி பெற இந்துமுன்னணி வாழ்த்துவதக, இந்து முன்னணி அமைப்பின் மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் அறிக்கை வெளியிட்டிருக்கிறார். அவரது அறிக்கை:

உலகம் முழுதும் உள்ள இந்து சமூகத்தை ஒன்றிணைக்க உலக இந்து மாநாடு நவம்பர் 24 25 26 ஆம் தேதிகளில் தாய்லாந்து பாங்காக் நகரில் நடைபெற உள்ளது. இது சம்பந்தமாக மாநாட்டு ஏற்பாட்டாளர் சுவாமி விஞ்ஞானந்தா சில விஷயங்களை பகிர்ந்து உள்ளார்.

இந்த மாநாட்டின் நோக்கமானது உலக இந்துக்கள் அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட்டு இந்து மதத்திற்கான சவால்களை எதிர்கொள்ளவும்; செழுமை,அமைதி, நீதியை நிலைநாட்டவும்; இந்துக்களுக்கான பொது இலட்சியத்தை உருவாக்கி சாதிக்கும் மனநிலையை ஏற்படுத்துவதே எனக் கூறியுள்ளார்.

இதற்கான பணிகள் முழுமூச்சோடு நடந்து வருகிறது.இந்த மாநாட்டில் உலகளாவிய இந்துக்களின் பொருளாதார நிலைமை, இந்து ஊடகங்கள், இந்து பெண்கள் மற்றும் இளைஞர்கள் செயல்பாடு, இந்துக்களின் அரசியல் விழிப்புணர்வு, கல்வி குறித்த பார்வை மற்றும் இந்து அமைப்புகளின் செயல்பாடு என ஏழு விதமான இணை மாநாடுகளும் தனித்தனியாக நடத்தப்படுகின்றன.

தொடர்ந்து செய்தி ஊடகங்கள், டிஜிட்டல் ஊடகங்கள் இந்து மதத்திற்கு எதிரான போலி விவாதங்களை நடத்துகின்றன. இந்துக்களின் கருத்துரிமை பேச்சு சுதந்திரம் மறுக்கப்படுகிறது. பொழுதுபோக்கு விஷயங்களில் இந்துக்களுக்கு எதிரான வெறுப்பு பிரச்சாரத்தை பலர் செய்து வருகின்றனர். இது போன்ற விஷயங்களும் இந்த மாநாட்டில் அலசி ஆராயப்படுகிறது.

பண்பாடு கலாச்சாரத்தை காத்து வந்த சினிமாக்கள் இன்று இந்து மதத்திற்கு எதிரான மனநிலையோடு எடுக்கப்படுகிறது. இத்தகைய சினிமாக்களை மறு கட்டமைப்பு செய்யும் முயற்சிகள் பற்றியும் இந்த மாநாடு யோசிக்கும்.

உலகில் உள்ள இந்து கோவில்களை பாதுகாப்பது எப்படி என்பது பற்றிய விழிப்புணர்வை இந்துக்களுக்கு ஏற்படுத்த வேண்டும். குறிப்பாக இந்துக்கள் அதிகமாக வாழும் பாரத தேசத்தில் பல மாநிலங்களில் கோவில்கள் அரசின் கட்டுப்பாடில் இருக்கிறது. அரசின் கட்டுப்பாட்டில் இருந்து கோவில்களை விடுவிக்கவும் மாற்று மதத்தினர் மற்றும் ஆக்கிரமிப்பாளர்களிடமிருந்து இந்து கோவில் நிலங்களை மீட்கவும் இந்த மாநாடானது பயணிக்கும்.

உலகம் முழுவதும் இந்துக்களுக்கு எதிராக நடக்கும் மனித உரிமை மீறல்களை தடுக்கவும் உலகளாவிய இந்துக்களுக்கு பொதுவான பார்வை மற்றும் இலட்சியத்தை உருவாக்கவும் இந்த மாநாடு மகத்தான லட்சியத்தை முன்னெடுக்கிறது.

அனைத்து சமய மாநாட்டில் அன்று விவேகானந்தர் இந்து சமுதாயத்தின் ஆற்றல்களை பெருமைகளை உலகளாவிய பார்வைக்கு எடுத்துச் சென்றது போல் இந்த தாய்லாந்து பாங்காக் நகரில் நடைபெறும் உலக இந்து சமய மாநாடு வெற்றிபெற இந்துக்கள் அனைவரும் பிரார்த்திப்போம். இந்துமுன்னனியின் வாழ்த்துக்கள்

சபரிமலை சீஸனுக்காக – ஸ்பெஷல் வந்தேபாரத், கூடுதல் பஸ்கள்!

1803514 sabarimaal 1 - 2026

சபரிமலை சீசன் துவங்க உள்ளநிலையில் சென்னையில் இருந்து திருநெல்வேலிக்கு கூடுதலாக 7 வந்தே பாரத் சிறப்பு ரயில் சேவை – தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

சபரிமலை சீசன் மற்றும் பண்டிகை விடுமுறை கால கூட்ட நெரிசலை சமாளிக்க இந்த சிறப்பு வந்தே பாரத் ரயில் இயக்கப்படுகிறது.

உலகப் புகழ்பெற்ற இந்து வழிபாட்டு ஸ்தலமான சபரிமலையில் 41 நாள் மண்டல பூஜை துவங்க உள்ள நிலையில் சபரிமலை பக்தர்களின் வசதிக்காக தென்னக ரயில்வே சிறப்பு வந்தே பாரத் ரயில் சேவையை நவம்பர் 16 இன்று முதல் டிசம்பர் இறுதி வரை இயக்க உள்ளது

இந்த சிறப்பு ரயில் வசதி ஐயப்ப பக்தர்களை பெரும் வரவேற்பு ஏற்படுத்தியுள்ள நிலையில் மேலும் கூடுதல் ரயில்களை மதுரை செங்கோட்டை புனலூர் வழித்தடத்தில் ஐயப்ப பக்தர்களின் வசதிக்காக செங்கோட்டை சென்னை இடையேயும் கடந்தாண்டு சிறப்பு இயக்கப்பட்ட சிறப்பு ரயிலான எர்ணாகுளம் தாம்பரம் செங்கோட்டை வழி ரயிலை இந்த ஆண்டும் உடன் இயக்க பயணிகள் மற்றும் ஐயப்ப பக்தர்கள் எதிர்பார்த்துள்ளனர்.

சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்கள் மற்றும்பயணிகளின் வசதிக்காக திருநெல்வேலிக்கு கூடுதலாக ஏழு வந்தே பாரத் ரயில் சேவைகளை தெற்கு ரயில்வே ஏற்பாடு செய்துள்ளது.
இதன்படி இன்று நவம்பர் 16, 23, 30, டிசம்பர் 7, 14, 21, 28 ஆகிய நாட்களில் சென்னை – திருநெல்வேலி வந்தே பாரத் சிறப்பு ரயில் (06067) சென்னை எழும்பூரில் இருந்து அதிகாலை 06.00 மணிக்கு புறப்பட்டு மதியம் 02.15 மணிக்கு திருநெல்வேலி வந்து சேரும்.

மறு மார்க்கத்தில் அதே நாட்களில் திருநெல்வேலி – சென்னை வந்தே பாரத் ரயில் (06068) மாலை 03.00 மணிக்கு திருநெல்வேலியில் இருந்து புறப்பட்டு இரவு 11.15 மணிக்கு சென்னை எழும்பூர் சென்று சேரும்.

இந்த சிறப்பு ரயில் வழக்கம் போல தாம்பரம், விழுப்புரம், திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

இந்த வந்த சிறப்பு முறையில் ஐயப்ப பக்தர்களின் பெரும் வரவேற்பு பெற்றுள்ளது.

இதே போல் பக்தர்களின் வசதிக்காக சென்னையில் இருந்து மதுரை செங்கோட்டை வழி கொல்லம் சிறப்பு ரயில் ஒன்று தினசரி ரயில் இயக்கவும் ஏற்கனவே கடந்த ஆண்டு சபரிமலை சீசனுக்கு இயக்கப்பட்ட எர்ணாகுளம் கொல்லம் செங்கோட்டை ராஜபாளையம் தாம்பரம் ரயிலை இந்த ஆண்டு தினசரி ரயிலாக இயக்கவும் இதன்மூலம் ஐயப்ப பக்தர்கள் பெரும்பாலவில் பயனடைவார்கள் எனவும் ஐயப்ப பக்தர்கள் மற்றும் பயணிகள் வலியுறுத்தி வருகின்றனர்.

தமிழ் கடவுள் முருகனுக்கு அறுபடை வீடுகள் உள்ளது போல் கேரளாவில் பிரசித்தி பெற்ற ஐயப்பனுக்கும் கேரள தமிழக எல்லைப் பகுதியில் படைவீடு கோவில்கள் உள்ளன.
செங்கோட்டை அருகில் ஐயப்பனின் படை வீடு கோவில்களான அச்சன்கோவில் ஆரியங்காவு குளத்துப்புழா போன்ற கோயில்கள் உள்ளது. இதனால் பக்தர்கள் இங்கு செல்ல வசதியாக சிறப்பு ரயில் இயக்குவது அவசியமாகும்

சென்னை எழும்பூரில் இருந்து வரும் 16, 23, 30, டிச., 7, 14, 21, 28ம் தேதிகளில் காலை 6:00 மணிக்கு புறப்படும் வந்தே பாரத் சிறப்பு ரயில்கள், அதேநாளில் மதியம் 2:15 மணிக்கு திருநெல்வேலி செல்லும். திருநெல்வேலியில் இருந்து வரும் 16, 23, 30, டிச.,7, 14, 21, 28ம் தேதிகளில் மாலை 3:00 மணிக்கு புறப்படும் வந்தே பாரத் சிறப்பு ரயில், அதேநாளில் இரவு 11:15 மணிக்கு எழும்பூர் வந்தடையும். இந்த சிறப்பு ரயில்கள் தாம்பரம், விழுப்புரம், திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகரில் நின்று செல்லும். மேற்கண்ட சிறப்பு ரயில்களில், டிக்கெட் முன்பதிவு துவங்கி உள்ளது.

மண்டல பூஜையையொட்டி சபரிமலைக்கு சிறப்பு பேருந்துகள்

சபரிமலை ஐயப்பன் கோயில் மண்டல பூஜையையொட்டி நாளை முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என விரைவு போக்குவரத்து கழக மேலாண் இயக்குநர் கே.இளங்கோவன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

கேரள மாநிலத்தில் மிகவும் சபரிமலையில் பிரசித்திபெற்ற உள்ள ஐயப்பன் கோயிலுக்கு, ஒவ்வொரு ஆண்டும் மண்டல பூஜை விளக்கு மற்றும் மகர ஆகிய திருவிழாக்கள் நடைபெறுவது வழக்கம். இதற்கு தமிழகத்திலிருந்து ஐயப்ப பக்தர்கள் சென்று வர ஏதுவாக முக்கிய நகரங்களிலிருந்து அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் சார்பில் ஆண்டுதோறும் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், இந்த ஆண்டும் நாளை (நவ.16) முதல் ஜன. 16 ம் தேதி வரை சென்னை, திருச்சி, மதுரை மற்றும் புதுச்சேரி, கடலூர் ஆகிய இடங்களிலிருந்து பம்பைக்கு, அதிநவீன சொகுசு மிதவைப் பேருந்துகள் மற்றும் குளிர்சாதனமில்லா இருக்கை மற்றும் படுக்கை வசதி உள்ள சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படவுள்ளன.

சபரிமலை தேவஸ்தான அறிவிப்பின்படி, டிச.27 முதல் 30ம் தேதி மாலை 5 மணி வரை கோயில் நடை சாத்தப்படுவதால், டிச.26 முதல் 29ம் தேதி வரை சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட மாட்டாது. குழுவாக செல்லும் பக்தர்களுக்கு வாடகை அடிப்படையில் பேருந்து வசதி செய்து தரப்படும்.

சிறப்புப் பேருந்துகளை www.tnstc.in என்னும் இணையதளம் மற்றும் TNSTC செயலி வாயிலாக 30 நாட்களுக்கு முன்னதாக முன்பதிவு செய்து கொள்ளும் வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

மேலும், விவரங்களுக்கு 94450 14452, 94450 14424, 94450 14463 மற்றும் 94450 14416 ஆகிய எண்களைத் தொடர்பு கொள்ளலாம். – இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

மண்டல பூஜைக்காக சபரிமலை நடை திறப்பு!

sabarimalai nadai open - 2026
#image_title

உலக அளவில் பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலில் 41நாள் மண்டல பூஜைக்காக இன்று மாலை நடை திறக்கப்பட்டது. முதல்நாளிலேயே பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்ததால் பாதுகாப்பு ஏற்பாடுகள் அதிக அளவில் செய்யப்பட்டுள்ளன.

தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு முன்னிலையில் மேல்சாந்தி ஜெயராமன் நம்பூதிரி சபரிமலை சன்னதி நடையைத் திறந்துவைத்து குத்துவிளக்கு ஏற்றி பின்னர் தேங்காய் ஆழியில் தீபமேற்றி புதிய மேல்சாந்தி களை வரவேற்றார்.

கார்த்திகை மாதம் பிறந்தாலே ஐயப்ப பக்தர்கள் மாலை அணிந்து பய பக்தியோடு ஒரு மண்டலம் விரதம் இருப்பார்கள். பாதயாத்திரையாக சபரிமலைக்கு சென்று தரிசனம் செய்வார்கள். சாமியே சரணம் ஐயப்பா என்ற சரண கோஷம் எங்கும் எதிரொலிக்கும். கடுமையாக விரதம் இருந்து ஐயப்பனை காணச் செல்வார்கள். அதே போல மாதந்தோறும் நடை திறக்கப்படும் நாட்களில் ஐயப்பனை தரிசிக்க செல்லும் பக்தர்களும் இருக்கிறார்கள்.

சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல பூஜை நாளை நவம்பர் 17ஆம் தேதி தொடங்குகிறது. இதற்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை இன்று 16ஆம் தேதி மாலை 5 மணிக்கு திறக்கப்பட்டது. நாளை முதல் தொடர்ந்து 41 நாட்கள் நடை திறந்திருக்கும். ஐயப்பனை தரிசிக்க கார்த்திகை 1ஆம் தேதி முதலே பக்தர்கள் மாலை அணிந்து கடுமையாக விரதம் இருந்து தரிசனம் செய்ய நாடு முழுவதிலும் இருந்து சபரிமலைக்கு தரிசனம் செய்ய பக்தர்கள் வருவார்கள்.

கார்த்திகை மாத மண்டல கால பூஜை நவம்பர் 16ஆம் தேதி தொடங்குகிறது. டிசம்பர் 27 ஆம் தேதி வரை நடை திறந்திருக்கும். அன்றைய தினம் இரவு நடை அடைக்கப்படும். டிசம்பர் 30ஆம் தேதி மகர விளக்கு பூஜைக்காக நடை திறக்கப்படும். மகர விளக்கு பூஜை ஜனவரி 15, 2024ஆம் தேதி நடைபெறும். ஜனவரி 20, 2024 வரை ஐயப்பன் கோவில் நடை திறந்திருக்கும்

மாசி மாத பூஜை – 13.02.2024 முதல் 18.02.24 வரை ஐயப்பன் கோவில் நடை திறந்திருக்கும்.

பங்குனி மாத பூஜை – 13.03.24 முதல் 18.03.24 ஐயப்பன் கோவில் நடை திறந்திருக்கும்.

பங்குனி உத்திர விழா – 15.03.24 முதல் 25.03.24 ஐயப்பன் கோவில் நடை திறந்திருக்கும். மார்ச் 16ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
பங்குனி உத்திரம் மற்றும் ஆரட்டு விழா 25.03.24 தேதி நடைபெறும்.

சித்திரை மாத பூஜை – 10.04.24 முதல் 18.04.24 வரை கோவில் நடை திறந்திருக்கும். சித்திரை விஷு கனி காணுதல் விழா 14.04.24 அன்று நடைபெறும்.

வைகாசி மாத பூஜை – 14.05.24 முதல் 15.05.24, ஐயப்பன் கோவில் பிரதிஷ்டை தின விழா – 18.05.24 முதல் 19.05.24 வரை கோவில் நடை திறந்திருக்கும்.

ஆனி மாத பூஜை – 16.06.24 முதல் 19.06.24 வரை கோவில் நடை திறந்திருக்கும் வழக்கமான பூஜைகள் நடைபெறும்.

ஆடி மாத பூஜை – 15.07.24 முதல் 20.07.24 கோவில் நடை திறந்திருக்கும் வழக்கமான பூஜைகள் நடைபெறும்.

ஆவணி மாத பூஜை – 16.08.24 முதல் 21.08.24 வரை கோவில் நடை திறந்திருக்கும். ஆவணி மாதத்தில் திருவோண பூஜைக்காக 13.09.24 முதல் 17.09.24 வரை கோவில் நடை திறந்து வழிபாடுகள் நடைபெறும்.

புரட்டாசி மாத பூஜை – 16.09.24 முதல் 21.09.24 வரை கோவில் நடை திறந்து பூஜைகள் நடைபெறும்.

இரவு பகலாக… செங்கோட்டை – புனலூர் வழித்தட மின்மயமாக்கல் பணிகள்!

sengottai punalur route electrification - 2026
#image_title

மதுரை செங்கோட்டை கொல்லம் ரயில் வழித்தடத்தில் பகவதிபுரம் -இடமண் இடையே உள்ள அகல ரயில் பாதையில் மின் பயமாக்கும் பணி இரவு பகலாக அதி தீவிரமாக நடந்து வருகிறது.

மதுரை விருதுநகர் தென்காசி செங்கோட்டை புனலூர் கொல்லம் வழித்தடத்தில் ஏற்கனவே மதுரை செங்கோட்டை இடையே மின்மயமாக்கல் பணி முடிந்து தற்போது மின்சார இன்ஜின் மூலம் ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது.

இதுபோல் புனலூர் கொல்லம் இடையேயும் மின்வழிப்பாதை இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே அமைக்கப்பட்டு மின்சார ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது.

புனலூரில் இருந்து இடமண் வரை ஏற்கனவே உள்ள ரயில் பாதையில் மின்மயமாக்கல் பணி முடிந்து ஆய்வுகளும் மேற்கொள்ளப்பட்டு விட்டது தற்போது இட மண்ணிலிருந்து பகவதிபுரம் வரை உள்ள 24 கிலோமீட்டர் தூரம் மின்மயமாக்கல் பணி அதிவிரைவாக நடந்து வருகிறது இப்பணிகள் இந்த ஆண்டு டிசம்பர் இறுதிக்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

ஆரியங்காவு கணவாய் குகை தென்மலை எட்டுக்கண் பாலம் மற்றும் தென்மலை குகை போன்ற இடங்களில் அதிநவீன தொழில் நுட்ப இயந்திரங்கள் உதவியுடன் மின் போல் நடும் பணியும் மின்சார வயர்கள் பொருத்தும் பணியும் தீவிரமாக நடந்து வருகிறது.

இந்தப் பணியில் இரவு பகலாக 100க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் மற்றும் பொறியாளர்கள் மேற்பார்வையில் ஈடுபட்டு வருகின்றனர் தற்போது இங்கு நடைபெறும் மின்மயமாக்கல் பணியை இன்று மதுரை கோட்ட ரயில்வே பொறியாளர்கள் ஆய்வு செய்து வருகின்றனர்

நம்ம நாட்டு சுற்றுலா: லிங்கராஜர் கோயில்

lingaraja temple odissha - 2026
#image_title

முனைவர் கு.வை.பாலசுப்பிரமணியன்

          உதயகிரி, கந்தகிரி மலைகளையும் அங்கே இருந்த கல்வெட்டுக்களையும் பார்த்துவிட்டு இரவு விடுதியில் ஓய்வெடுத்தோம். அடுத்தநாள் காலை சுமார் 0630 மணியளவில் விடுதியைக் காலிசெய்துவிட்டு புறப்பட்டோம். முதலில் லிங்கராஜா கோயிலுக்குச் சென்றோம். லிங்கராஜா கோயில், கோயில் நகரம் என அழைக்கப்படும் புவனேஸ்வரில் உள்ள மிகப் பழைய கோயில்களுள் ஒன்றாகும். லிங்கராஜர் என்பது லிங்கங்களின் அரசர் என்ற பொருள் தருகிறது.

வரலாறு

          இது 1000 ஆண்டுகளுக்கு முற்பட்ட பழமை வாய்ந்தது. இதன் தற்போதைய அமைப்பில், பொது சகாப்தம் (பொ.ச) 11ஆம் நூற்றாண்டின் இறுதிப் பத்தாண்டுகளில் இருந்ததாகத் தெரிய வருகிறது. ஆனால், இக் கோவிலின் பகுதிகள் பொ.ச ஆறாம் நூற்றாண்டிலேயே இருந்ததற்கான சில சான்றுகள் சமஸ்கிருத நூல்களில் உள்ளதாகச் சொல்லப்படுகிறது. லிங்கராஜர் கோயில் கட்டப்பட்ட காலத்தில் விஷ்ணுவின் ஒரு வடிவமான ஜகந்நாதர் வழிபாடும் வளர்ச்சியடைந்து வந்தது. லிங்கராஜர் கோயிலில் விஷ்ணு சிவன் ஆகிய இரு கடவுளரதும் வழிபாடுகள் ஒன்றாக அமைந்திருப்பது இதைக் காட்டுவதாக ஆய்வாளர்கள் கருதிகிறார்கள்.

          இக்கோயில், 11ஆம் நூற்றாண்டில் சந்திர குல மன்னரான ஜஜதி கேசரி என்பவரால் கட்டப்பட்டது என மரபுவழியாக நம்பப்படுகின்றது. எனினும் இதற்கான நம்பத்தகுந்த வரலாற்றுச் சான்றுகள் இல்லை. 11ஆம் நூற்றாண்டில் ஜஜதி கேசரி தனது தலை நகரத்தை ஜெய்ப்பூரில் இருந்து ஏகாம்பர க்ஷேத்ரம் என பிரம்ம புராணத்தில் விவரிக்கப்பட்ட புவனேஸ்வருக்கு மாற்றினான். கோவிலில் காணப்படும் குறிப்புகள் பொ.ச 1114-1115இல் ஆண்ட அனந்தவர்மன் சோடகங்கா என்பவனுடைய காலத்தில் இந்தக் கோவில் கட்டுவதற்காக நிலம் மான்யமாக வழங்கப்பட்டது என்றும் தெரிவிக்கின்றன. இந்தக் கோவில் 10ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டிருக்க வேண்டும் என தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். கோயிலின் மற்ற பகுதிகளான ஜக்மோகனா (வழிபாட்டுக் கூடம்), போக மண்டபம் (காணிக்கை மண்டபம்), நாட்டிய மண்டபம் ஆகியவை அதன் பிறகு கட்டப்பட்டிருக்கலாம் என்று கருதுகின்றனர்.

கோயில் அமைப்பு

          இதுதான் இந்த ஊரில் அமைந்துள்ள மிகப் பெரிய கோயில் ஆகும். இக் கோயில் விமானமானது 55 மீட்டர்கள் உயரத்துடன் மிகப் பெரியதாகத் திகழ்கிறது. 25000 சதுர அடி பரப்பளவில் கட்டப்பட்டு சிற்பங்களால் அழகூட்டப்பட்ட உயர்ந்த மதில்களால் சூழப்பட்ட இக் கோயிலின் பரந்த உட்பகுதியில் அமைந்துள்ள 150க்கும் மேற்பட்ட சிறிய கோயில்களிடையே இப் பெரிய விமானம் கம்பீரமாக உயர்ந்து நிற்கிறது.

          கோயிலின் முதன்மை வாயில் கிழக்கிலும் மற்ற வாயில்கள் வடக்கு, தெற்கில் உள்ளன. கோயிலில் உள்ள 54 மீட்டர் உயரமுள்ள துயூலாவும் (பிரதான கோபுரம்) 29 மீட்டர் உயரமுள்ள ஜக்மோகனாவின் மேலுள்ள பிரமிட் கோபுரமும் (பீதா துயூலா) முழுவதும் சிற்பங்களால் அணி செய்யப்பட்டுள்ளன.

          லிங்கராஜர் கோயிலானது கருவறை, வேள்வி மண்டபம், கோக மண்டபம், நாட்டிய சாலை ஆகிய நான்கு பகுதிகளாகப் பிரிக்கும் விதத்தில் உள்ளது. கருவறையின் ஒரு பக்கக் கதவில் சூலமும் மற்றதில் சக்கரமும் உள்ளன. கருவறையிலுள்ள பிரம்மாண்ட சிவலிங்கமானது சுயம்புலிங்கம் எனப்படுகிறது. இது ஹரிஹர ரூபம் என்கின்றனர். அதாவது திருமாலும் இந்த லிங்கத்தில் உறைந்திருப்பதாக நம்பிக்கை. அதனால் இங்கு அர்ச்சனைக்காக விற்கும் பூக்குடலையில் வில்வ தளங்களும் துளசி இலைகளும் சேர்ந்தே காணப்படுகின்றன. ஆலயம் கட்டி முடிக்கப்படும்போது கலிங்க நாட்டில் ஜகன்னாதர் பக்தியும் பரவத் தொடங்கியது. இந்த லிங்கத்திலேயே திருமாலும் எழுந்தருளி இருக்கிறார் என்பதைப் பலரும் ஏற்றுக்கொண்டனர்.

          கோயில் வளாகத்தில் பார்வதி, கார்த்திகேயர், கணேசர் போன்ற தெய்வங்களுக்கும் தனித்தனியாக கோவில்கள் உள்ளன. கோயிலின் வெளிப் பிரகாரத்தில் சாவித்ரி மாதாவுக்கும் எமதர்மராஜாவுக்கு சன்னிதிகள் உள்ளன. கோயில் வளாகத்தில் உள்ள ஒவ்வொரு சன்னிதிக்கும் மிக உயரமான விமானங்கள் உள்ளன என்றாலும், தாரிணி தேவிக்கு மட்டும் தனி விமானம் கிடையாது. அவர் மரத்தின் கீழேதான் காட்சியளிக்கிறார்.

          ஒட்டுமொத்த கோயிலையும் காண வசதியாக, கோயிலின் எல்லைப்புறச் சுவருக்கு அருகே ஓர் உயர்ந்த மேடை அமைக்கப்பட்டுள்ளது. இந்துக்கள் மட்டுமே கோயிலுக்குள் அனுமதிக்கப்படுவதால், பிற சமயங்களைச் சேர்ந்த வெளிநாட்டினர் உட்பட இந்த மேடையின் மீது நின்று கோயிலைக் கண்டு களிக்கிறனர்.

          இந்து புராணத்தின் படி, லிங்கராஜா கோயிலிலிருந்து தோன்றிய ஒரு நிலத்தடி நதி, பிந்துசாகர் குளத்தை நிரப்புகிறது (கடல் துளி என்று பொருள்). மேலும் இந்த நீர், உடல் மற்றும் ஆன்மீக நோய்களை குணப்படுத்தும் என்று நம்பப்படுகிறது. குளத்தில் இருந்து வரும் நீர் புனிதமாகக் கருதப்படுகிறது மற்றும் பண்டிகை சந்தர்ப்பங்களில் யாத்ரீகர்கள் புனித நீராடுகிறார்கள். திருவிழா தெய்வத்தின் உருவத்துடன், கோவிலின் ருகுண ரத யாத்திரை லிங்கராஜாவின் வருடாந்திர ரத யாத்திரையாகும்.

          பங்குனி மாதத்தில், ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோயிலுக்கு வருகை தரும் முக்கிய திருவிழா சிவராத்திரி ஆகும். இந்தப் புனித நாளில் லிங்கராஜாவுக்கு சமர்ப்பிக்கும் வகையில் பக்தர்கள் முழு நாள் உண்ணாவிரதம் இருக்கிறார்கள். பக்தர்கள் இரவு முழுவதும் தெய்வத்தின் பெயரைச் சொல்லி பஜனை செய்கிறார்கள். கோயிலில் மகா தீபம் (ஒரு பெரிய விளக்கு) ஏற்றப்பட்ட பிறகு பக்தர்கள் பொதுவாக தங்கள் நோன்பை முடித்துக் கொள்கிறார்கள். இந்த திருவிழா லிங்கராஜா ஒரு அரக்கனைக் கொன்றதை நினைவுகூர்கிறது.

          கோயிலின் பிரதான நுழைவாயிலின் வலதுபுறத்தில் அமைந்துள்ள ஒரு பாதை வழியாக பார்க்கும் தளத்தையும் கோயிலின் பின்புறத்தையும் அடையலாம். கோயிலின் புனிதத்தன்மை, நாய்களை அனுமதிக்காதது, குளிக்காமல் வரும் பார்வையாளர்கள், முந்தைய 12 நாட்களில் பிறப்பு அல்லது மரணத்தை சந்தித்த குடும்பங்கள் மற்றும் மாதவிடாய் காலங்களில் இருக்கும் பெண்கள் ஆகியோரை கோயிலுக்குள் அனுமதிக்காமல் செய்வதன் மூலம் காக்கப்படுகிறது. இதுபோன்ற விதிமீறல் ஏற்பட்டால், கோயிலில் ஒரு சுத்திகரிப்பு சடங்கு நடக்கும். அப்போது பிரசாதம் படைக்கப்பட்டு பின்னர் பிரசாதம் கிணற்றில் கொட்டப்படுகிறது.

10,11,12ம் வகுப்பு தேர்வு தேதிகள் அறிவிப்பு! முடிவுகள் எப்போது?!

school exams - 2026

10,11,12 பொதுத்தேர்வுக்கான தேர்வு அட்டவணையை வெளியிட்டார் அமைச்சர் அன்பில் மகேஷ். அதன்படி….

10ம் வகுப்பு செய்முறைத் தேர்வு பிப்ரவரி 23ம் தேதி தொடங்கி  பிப்ரவரி 29ம் தேதி முடிவடைகிறது.

11ம் வகுப்பு செய்முறைத் தேர்வு பிப்ரவரி 19ம் தேதி தொடங்கி  பிப்ரவரி 24ம் தேதி முடிவடைகிறது

12ம் வகுப்பு செய்முறைத் தேர்வு பிப்ரவரி 12ம் தேதி தொடங்கி  பிப்ரவரி 17ம் தேதி முடிவடைகிறது.

10ம் வகுப்பு பொதுத் தேர்வு மார்ச் 3ம் தேதி தொடங்கி  ஏப்ரல் 8ம் தேதி முடிவடைகிறது

11ம் வகுப்பு பொதுத் தேர்வு மார்ச் 4ம் தேதி தொடங்கி மார்ச் 24ம் தேதி முடிவடைகிறது.

12ம் வகுப்பு பொதுத் தேர்வு மார்ச் 1ம் தேதி தொடங்கி  மார்ச் 22ம் தேதி முடிவடைகிறது.

மக்களவைத் தேர்தலைக் கருத்தில் கொண்டு, முன்கூட்டியே தேர்வு நடைபெற உள்ளது.

தேர்வு முடிவுகள் எப்போது ?

10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் : மே 10
11ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் : மே 14
12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் : மே 6

WC 2023: இறுதிப் போட்டியில் நுழைந்தது இந்தியா! அசத்திய ஷமி, ஷ்ரேயஸ் ஐயர்!

india vs nz - 2026
#image_title

ஒருநாள் கிரிக்கட் உலகக் கோப்பைப் போட்டி
முதல் அரையிறுதிப்போட்டி
இந்தியா vs  நியூசிலாந்து, மும்பை – 15.11.2023

முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன்

          இந்திய அணி (397/4, விராட் கோலி 117, ஷ்ரேயாஸ் ஐயர் 105, ஷுப்மன் கில் 80*, ரோஹித் ஷர்மா 47, கே.எல்.ராகுல் 39*, டிம் சௌதீ 3/100, போல்ட் 1/86) நியூசிலாந்து அணியை (48.5 ஓவர்களில் 327, டேரில் மிட்சல் 134, கேன் வில்லியம்சன் 69, கிளன் பிலிப்ஸ் 41, ஷமி 7/57, பும்ரா 1/64, சிராஜ் 1/78, குல்தீப் 1/56) 70 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.

          பூவாதலையா வென்ற இந்திய அணி முதலில் மட்டையாடத் தீர்மானித்தது. ரோஹித் ஷர்மா ஒன்பதாவது ஓவரில் 47 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். இந்த உலகக் கோப்பை ஆட்டங்களில் அவர் எடுத்துள்ள ரன்கள் – ஆஸ்திரேலியாவிற்கு எதிராக பூஜ்யம்,  ஆப்கானிஸ்தனிற்கு  எதிராக 131, பாகிஸ்தானிற்கு எதிராக 86, நியூசிலாந்திற்கு எதிராக 46,  இங்கிலாந்திற்கு எதிராக 87, இலங்கைக்கு எதிராக 4, தென் ஆப்பிரிக்காவிற்கு எதிராக 40, நெதர்லாந்திற்கு எதிராக 61, இந்த ஆட்டத்த்ல் 47.அவர் தன்னுடைய தொடக்கங்களை பெரிய ஸ்கோராக மாற்ற சிரமப்படுகிறார். பிற பேட்டர்கள் சிறப்பாக ஆடுவதால் அணி வெற்றி பெறுகிறது.

          இன்றைய ஆட்டத்திலும் விராட் கோலி 117 ரன், ஷ்ரேயாஸ் ஐயர் 105, ஷுப்மன் கில் ஆட்டமிழக்காமல் 80, ராகுல் ஆட்டமிழக்காமல் 39 ரன் அடித்ததால் இந்திய அணி 50 ஓவர் முடிவில் நாலு விக்கட் இழப்பிற்கு 397 ரன் எடுத்தது.

          இதன் பின்னர் ஆடவந்த நியூசிலாந்து அணிக்கு மூன்று வீரர்கள் மட்டுமே சிறப்பாக ஆடினர். டேரில் மிட்சல் 117 ரன். கேன் வில்லியம்சன் 69 ரன், கிளன் பிலிப்ஸ் 41 ரன் அடித்தனர். பிறர் சரியாக ஆடவில்லை. பந்துவீச்சில் சற்று திணறிவந்த இந்திய அணிக்கு முகம்மது ஷமி 9 ஓவர் வீசி 78 ரன்கள் கொடுத்து 7 விக்கட்டுகள் எடுத்தார். இதனால் 48.5 ஓவரில் அனைத்து விக்கட்டுகளையும் இழந்து நியூசிலாந்து அணி 327 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியடைந்தது. முகம்மது ஷமி ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார்.

          விராட் கோலி ஒருநாள் கிரிக்கட் போட்டியில் தனது 50ஆவது சதத்தை அடித்து சச்சின் சாதனையைக் கடந்தார். ஷமி இன்று 7 விக்கட்டுகள் எடுத்து ஒருநாள் உலகக் கோப்பை போட்டிகளில் 50 விக்கட்டுகள் எடுத்த வீரரானார். குல்தீப் யாதவ் இன்று 41 மற்றும் 43ஆவது ஓவர்களை வீசியது ஒரு ஆச்சர்யமான விஷயம். நியூசிலாந்து அணி ஆடும்போது 33ஆவது ஓவரிலிருந்து 37ஆவது ஓவர் வரை இந்தியப் பந்துவீச்சாளர்கள் வெறும் 17 ரன்கள் மட்டுமே கொடுத்தனர்.

விராட் கோலி இதுவரை 674 ரன்கள் அடித்து சச்சினின் சாதனையான 673 ரன்னைக் கடந்தார். இந்த உலகக் கோப்பைப் போட்டிகளில் ரோஹித் ஷர்மா 550 ரன்கள் அடித்திருக்கிறார். அதில் 226 ரன்கள் முதல் 20 ஓவர்களில் வந்திருக்கிறது. இன்று ரோஹித் ஷர்மா 4 சிக்சர்கள் அடித்தார். இத்துடன் உலகக்கோப்பை போட்டிகளில் 50 சிக்சர்களை அடித்து கிரிஸ் கெயிலின் சாதனையக் கடந்தார்.

          நாளை ஆஸ்திரேலியா தென் ஆப்பிரிக்கா அணிகளிடையே கொல்கொத்தாவில் இரண்டாவது அரையிறுதிப் போட்டி நடக்க உள்ளது.

உலகக் கோப்பையை இந்தியா கைப்பற்ற… மதுரையில் சிறப்பு பிரார்த்தனை!

madurai anusham group prarthana for indian team - 2026
#image_title

உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் அரை இறுதி போட்டி மற்றும் இறுதி போட்டியில் இந்தியா வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்ற மதுரையில் சிறப்பு பிரார்த்தனை நடத்தப்பட்டது.

மதுரை அனுஷத்தின் அனுக்கிரகம் அமைப்பு மற்றும் மதுரை ஜல்லிக்கட்டு ரோட்டரி சங்கம் இணைந்து , மதுரை எஸ்எஸ் காலனியில் அமைந்துள்ள காஞ்சி மகா பெரியவா கோவில் வைத்து இன்று சிறப்பு பிரார்த்தனை நடைப்பெற்றது.
இந்த நிகழ்ச்சியில், பெரியவா விக்ரகத்துக்கு சிறப்பு அபிஷேகம், தீபாரனை நடைபெற்றது.

முன்னதாக, மஹன்யாஸம், ஹோமம் நடைபெற்றது. இதை தொடர்ந்து, உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா அரை இறுதி போட்டியிலும், இறுதி போட்டியிலும் வெற்றி பெற்று கோப்பையை வெல்ல வேண்டும் என சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது.

இந்நிகழ்வில், உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் விளையாடும் வீரர்களின் போட்டோக்கள் மற்றும் உலக கோப்பை போட்டோ வைத்து அர்ச்சனை செய்து தொடர்ந்து மகா தீபாராதனை நடைபெற்றது .

இந்த நிகழ்ச்சியில், மதுரை அனுஷத்தின் அனுக்கிரகம் நிறுவனர் நெல்லை பாலு ,மதுரை ஜல்லிக்கட்டு ரோட்டரி சங்க செயலாளர் எஸ். எஸ். சரவணன், பொருளாளர் கதிரவன் மற்றும் நூற்றுக்கு மேற்பட்ட பக்தர்கள் பெண்கள், குழந்தைகள் கலந்து கொண்டனர்.