Home Blog Page 274

சல்மானுடன், பெண்களுடன்… மோடி கர்பா நடன வீடியோ வைரல்; உண்மை என்ன?!

modi salman khan dupe fake news viral - 2026
#image_title

ஜி கடுமையான பணிச்சுமைகளுக்கு இடையே சல்மானுடன் இளைப்பாறிய தருணம்… – என்று தலைப்பிட்டு, சல்மானுடன், பெண்களுடன்… மோடி கர்பா நடனம் ஆடும் வீடியோ வைரலாகியுள்ளது. ஆனால் இதன் பின் உள்ள உண்மை என்ன?!

நம்ம ஊர்ல எம்ஜிஆர்., வேசம் கட்டிக்கிட்டு இன்னிக்கும் அதிமுக., கட்சி மீட்டிங்க்ல யாராச்சும் ஆடுவாங்க… அப்ப எம்.ஜி.ஆர். உயிரோட வந்துட்டாரானு நாம வாயப் பொளந்து பாத்தோம்னா, நாம தான் திராவிடத் தமிழன்… – என்ற கருத்துப் பதிவிட்டு, இது போன்ற வீடியோக்களைப் பரப்பும் நபர்களை விமர்சித்தும் கருத்துப் பதிவுகளைக் காண முடிகிறது.

குஜராத்தில் விகாஸ் மஹந்தே என்ற ஒரு வியாபாரி. இவர் இப்படித்தான் இரண்டு, மூன்று குஜராத்திய கர்பா நடனம் ஆடி, அது வைரல் ஆனது! இவர் பார்க்க மோடி மாதிரியே இருப்பார்! வியாபாரியாக இருந்து இதன் காரணமாக இப்போது நடிகர் ஆகிவிட்ட இவரை, இதனால் பாஜக.,வினரும் கூட தங்கள் தேர்தல் பிரசாரங்களில் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்கள்.

ஆனால் உண்மையில் நாட்டின் பிரதமரான மோடிக்கு இது போன்ற நடனங்களில் கலந்து கொள்ளவெல்லாம் நேரமும் கிடையாது, வயதும் கிடையாது. எங்கேயாவது டிரம்ஸ், தபேலா, நாயனம் இப்படி இருந்தால் இசைத்துப் பார்த்து, தானும் ஓர் எளிய மனிதன் என்பதைக் காட்டிக் கொண்டு, அவர்களுக்கு உத்ஸாகம் கொடுக்க இதைச் செய்வாரே ஒழிய, நடனம் ஆடி நேரம் போக்கவெல்லாம் அவரது இயல்பு இடம்கொடுக்காது என்றும் கருத்துகள் உலா வருகின்றன. உண்மையில், மோடியும் சல்மானும் ஆடும் வைரலான வீடியோவில், இருவருமே டூப் தானாம். இது குறித்த விளம்பரமும் சமூகத் தளத்தில் இருக்கிறது

எனவே இது மோடியில்லை. விகாஸ் மகந்த் என்று ஒரு குஜராத்தி வியாபாரி இருக்கிறார். அவர் மோடி மாதிரியே இருப்பார். இவரை வைத்து, மும்பையில் சில ஈவண்ட் ஆர்கனைசர்ஸ் மோடிக்கு டூப் என சொல்லியே நிகழ்ச்சிகள் நடத்துவார்கள். அப்படி ஒரு நிகழ்ச்சியில், மோடி, சல்மான்கான் டூப் ஷோ என்று ஒன்று நடத்தினார்கள். அப்போது நவராத்ரி என்பதால், குஜராத்தின் கர்பா நடன நிகழ்ச்சி மும்பையில் நடைபெற்றது. அப்போது எடுக்கப்பட்ட வீடியோ மோடி பேரை ரிப்பேர் செய்ய வைரலாக்கப் பட்டது… என்றும் இதற்கு விளக்கங்களைக் கொடுத்திருக்கிறார்கள் சிலர்.

இது குறித்த உண்மை கண்டறியும் தளங்களில் குறிப்பிட்டிருப்பதாவது…

2023 ஆம் ஆண்டு நவராத்திரி அன்று, பிரதமர் நரேந்திர மோடி தான் எழுதிய “மாடி” என்ற கர்பா பாடலின் இசை வீடியோவைப் பகிர்ந்துள்ளார். தற்போது, பிரதமர் கர்பா பீட்களுக்கு நடனமாடுவது போன்ற வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இந்த வீடியோவில், பிரதமர் மோடியை ஒத்த ஆண் ஒருவர் சில பெண்களுடன் நடனமாடுவதைக் காணலாம். இன்ஸ்டாகிராம் பயனர் ஒருவர் இந்த வீடியோவை “வா மோடி ஜி வா” என்ற தலைப்பில் பகிர்ந்துள்ளார். இந்த இடுகையின் காப்பகப்படுத்தப்பட்ட பதிப்பை இங்கே காணலாம்.

இந்த வீடியோவில் காணப்பட்டவர் பிரதமர் மோடி அல்ல என்றும் அவரது தோற்றம் கொண்ட நடிகர் விகாஸ் மஹந்தே என்றும் கண்டறியப்பட்டுள்ளது. கர்பா நிகழ்ச்சியில் பிரதமர் மோடி நடனமாடியது குறித்து எந்த செய்தியும் கிடைக்கவில்லை. இது உண்மையில் நடந்திருந்தால், இந்தியாவில் உள்ள அனைத்து ஊடகங்களும் செய்தி வெளியிட்டிருக்கும். அப்படியானால் இந்த வீடியோவின் பின்னணி என்ன?

வைரலான வீடியோவுக்கு எதிர்வினையாற்றிய ஒரு எக்ஸ் பயனர், அந்த வீடியோவில் இருப்பவர் பிரதமர் மோடியின் டாப்பல்கேஞ்சர் விகாஸ் மஹாந்தே என்று எழுதினார், மஹந்தேவின் இன்ஸ்டாகிராம் ஸ்டோரியின் ஸ்கிரீன் ஷாட்டைப் பகிர்ந்து கொண்டார். மஹந்தேவின் இன்ஸ்டாகிராம் கணக்கில், நவம்பர் 7ஆம் தேதி லண்டனில் நடந்த “தீபாவளி மேளா”வில் தலைமை விருந்தினராக அழைக்கப்பட்டதாக அறிவிக்கும் வீடியோவை அவர் பகிர்ந்துள்ளதைக் கண்டோம்.

இந்த வீடியோவின் ஒரு கட்டத்தில், வைரலான வீடியோவில் காணப்படுவது போல் அவர் பெண்களுடன் ஒரே கர்பா மேடையில் நிற்பதைக் காணலாம். வைரலான வீடியோவில் நடனமாடுவதைப் போலவே அவரது உடையும் இருந்தது. மஹந்தேவின் சமூக ஊடக கணக்குகளில் உள்ள அவரது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள், அவர் பிரதமர் மோடியுடன் மிகவும் ஒத்திருப்பதை தெளிவாக்குகிறது.

பிரதமர் போல் உடை அணிந்துள்ளார். அதன் அடிப்பகுதியைப் பெற, நாங்கள் மஹாந்தேவின் PR குழுவை அணுகினோம். இந்த வீடியோ விகாஸ் மஹந்தேவைக் காட்டுகிறது என்றும் அது லண்டனில் பதிவு செய்யப்பட்டது என்றும் அணியின் உறுப்பினர் அதுல் பரீக் தெரிவித்தார்.

விகாஸ் நவம்பர் 4 மற்றும் 5 ஆகிய தேதிகளில் லண்டனில் இருந்தார். “பிரதமர் மோடியாக விகாஸின் புகைப்படங்கள் அல்லது வீடியோக்களை யார் பகிர்கிறார்களோ அவர்கள் மிகவும் தவறு செய்கிறார்கள்,” என்று அவர் மேலும் கூறினார்.

லண்டன் தீபாவளி மேளா நிகழ்வு தொடர்பான முகநூல் பதிவில் விகாஸ் மஹந்தே தலைமை விருந்தினராக அழைக்கப்பட்டார். இந்த பதிவில், “தீபாவளி ஷாப்பிங் பஜார் 2023” இல் பிரதமர் மோடி மற்றும் சல்மான் கானின் டாப்பல்கேங்கர்கள் பங்கேற்பார்கள் என்று கூறப்பட்டது. மும்பையைச் சேர்ந்த தொழிலதிபராக இருந்து நடிகராக மாறிய விகாஸ் மஹந்தே பற்றி பல செய்திகள் உள்ளன. தேர்தலின் போதும் பாரதிய ஜனதா கட்சிக்காக பிரச்சாரம் செய்துள்ளார். இதனால், வைரலான வீடியோவில் பிரதமர் நடனம் ஆடவில்லை என்பது தெளிவாகிறது.

மத்தியக் கிழக்கும், நம் மத்திய அரசும்!

india that is bharat - 2026

மத்தியக் கிழக்கும்…
மத்திய அரசும்..!

உலக அளவிளான அரசியல் சதுரங்கத்தில் தற்போது இஸ்லாமிய சமூக நாடுகளில் ஏற்பட்டு வரும் மாற்றங்கள் மிக உன்னிப்பாக கவனிக்கப்பட்டு வருகிறது. இதில் நம் இந்திய தேசத்திற்கும் பெரும் பங்கு உண்டு. அதன் தாக்கங்கள்…. அதன் அரசியல் பங்களிப்பில்லான மாற்றங்கள் மிக மிக நுட்பமானது. ஆழத் தெரிந்து கொள்ள வேண்டிய ஒன்று.

சுலபமாக இப்படி புரிந்து கொள்ளலாம்.

அமெரிக்காவில் இருந்த உலக வர்த்தக மைய கட்டடம் செப்டம்பர் 11 தேதி பயங்கரவாதிகளால் தாக்கி அழிக்கப்பட்டது. இது நடந்தது இன்றிலிருந்து சுமார் 23 ஆண்டுகளுக்கு முன்பு. அமெரிக்க சி.ஐ.ஏ வால் வளர்க்கப்பட்ட ஒசாமா பின் லேடனால் திட்டமிட்ட இந்த தாக்குதல் கன கச்சிதமாக நிறைவேற்றப்பட்டு ஆனானப்பட்ட அமெரிக்காவையே ஆட்டம் காண வைத்தது. அதில் இருந்து அவர்கள் மீளவேயில்லை. சரியாக சீனா தலையெடுத்ததும் இதே காலகட்டத்தில் தான்.அடுத்த இருபது ஆண்டுகளில் அமெரிக்கர்களின் கண்களில் விரலை விட்டு ஆடிக் காட்டினார்கள் அவர்கள்.

1980 களில் மத்திய கிழக்கு நாடுகளில் குக்கிராமங்களாக இருந்த பல இடங்களிலும் இன்று வானளாவிய கட்டடங்கள் வளர்ந்து நிற்பதற்கு நம்மவர்களின் பங்களிப்பு மிக மிக முக்கியமான ஒன்று என்பது நம்மில் பலருக்கு சரியாக தெரியாது. அத்தனை மனித உழைப்பு கொட்டிக் கொடுத்து இருக்கிறார்கள். இந்த இடங்களிலும் அமெரிக்கர்களின் டாலர்கள் கொட்டிக் கிடக்கின்றன.. கொஞ்சம் வில்லத்தனமான விதத்தில்….. எண்ணெய் வயல்களை குறிவைத்து நகர்ந்த இந்த அரசியல் ஆட்டத்தில் ஆதாயம் பார்த்தென்னவோ அமெரிக்கா தான்.1990 களின் ஈராக் சவுதி அரேபியா யுத்தமும் அதனை தொடர்ந்து ஈராக்கிய அதிபர் சதாம் ஹுசைன் பிடித்து தூக்கிலிட்டது வரை நடந்தது அத்தனையும் திரைமறைவு ஆட்டங்கள் தான். இத்தனைக்கும் அன்றைய ஈராக்கிய அதிபர் சதாம் ஹுசைன் அன்று அங்கிருந்தவர்களுக்கு நம் ஊர் எம்ஜிஆர் போல ….. எண்ணெய் வயல்களை அதன் வளத்தை அங்கு இருந்த மக்களோடு பங்கிட்டுக் கொண்டார்.

இப்படி தூக்கி கொடுத்தால் பிடிக்குமா அமெரிக்கர்களுக்கு … கதை கட்ட ஆரம்பித்து கட்டம் கட்டி தூக்கி விட்டனர். அதற்கு அவர்கள் சொன்னது, சதாம் ஆபத்தான உயிரி வேதியியல் ஆயுதங்களை தயாரித்து வைத்திருக்கிறார் என்பதே… ஒரு பினாயில் பாட்டிலைக் கூட எடுத்து வந்து காட்ட முடியவில்லை புஷ் ஆல் என்பது வேறு கதை. இவருக்கு….. அல்லது இவர் சார்ந்த கட்சியினருக்கு பரம்பரை பரம்பரையாக க்ரூட் ஆயில் பிஸினஸ் கொடி கட்டிப் பறக்கிறது என்பது வேறு விஷயம்.

உதாரணமாக சவூதி அரேபியாவில் இயங்கும் அராம்கோ என்கிற மிகப் பெரிய ஆயில் வர்த்தக சாம்ராஜ்யத்தில் 51% பங்குகளளை முன் ஒரு காலத்தில் அமெரிக்கா தன் வசம் வைத்திருந்தது…. இதன் மீதெல்லாம் ஈரானிய ஹமாஸ் இயக்கம் ட்ரோன் தாக்குதல் எல்லாம் நடத்தியதாக சமீபத்திய ஆண்டுகளில் செய்திகள் எல்லாம் வெளிவந்ததை ஞாபகப்படுத்திக் கொள்ளுங்கள்…. பிறகு வருவோம் இதற்கு.

ஆச்சா….
அதே வழியில் வந்த ஜோபைடன் பதவிக்கு வந்ததும் வராததுமாக தான் செய்ய விரும்பும் அரசியல் மத்திய கிழக்கு நாடுகளில் என்றார். நன்கு கவனியுங்கள்….. அவரது அரசியல் செய்யப்படுகின்ற ஒன்று என்பதை நம்மால் நன்றாக புரிந்து கொள்ள முடியும். சரியாக ஒன்றரை வருடம் கழித்து உக்ரைன் ரஷ்யா மோதல் வந்தது. அதற்கு தோதாக உக்ரைனில் ஜெலன்ஸ்க்கி எனும் கோமாளியை கொண்டு வந்து ஆட்சி பீடத்தில் அமர்த்தி விட்டனர். ஈராக்கிய அதிபராக சதாம் ஹுசைனை போல் பதம் பார்த்து விடலாம் என கனவு கண்டுக் கொண்டு இருந்தவர்களை புடின் பந்தாடிக்கொண்டு இருக்கிறார் அங்கு. அதாவது பைடன் பப்பு வேகவில்லை அங்கு.

இவையெல்லாம் வெளியே மேலோட்டமாக பார்த்தால் தெரியும் சங்கதிகள். கொஞ்சம் உள்ளே நகர்ந்து ஊடுருவி பயணம் செய்தால்……

மத்திய கிழக்கு நாடுகளின் பட்டியலில் மிக முக்கியமான பங்கு வகிக்கும் அரபு இஸ்லாமிய தேசங்களில்…. நன்கு கவனியுங்கள்…, அரபு உலகம் வேறு இஸ்லாமிய சமூக தேசங்கள் வேறு. அரபு உலகம் நாடுகளின் தலைமை கிட்டத்தட்ட சவூதி அரேபியா வசம் இருக்கிறது. இதன் தலைமை பீடத்தில் முகமது பின் சல்மான் வருகிறார். அதுபோலவே இஸ்லாமிய தேசங்களின் தலைமைக்கு இரண்டு துருவங்கள் உண்டு. ஒன்று ஈரானிய தற்போதைய அதிபர் இப்ராஹிம் ராய்சி மற்றொரு புறம் ரெசிப் தையிப் ஹெர்துவான். மேற்கு உலக பாஷையில் சொன்னால் துருக்கிய அதிபர் ஹெர்டோகன். இருபது ஆண்டுகளாக பதவியில் இருக்கும் இவருக்கு பரந்து விரிந்த ஒட்டோமான் பேரரசு அமைக்க வேண்டும் என்கிற ரீதியிலான பேராசை எல்லாம் உண்டு. நம்மவரோடு #மோதி மூக்கு உடைக்கப்பட்ட சமாச்சாரம் எல்லாம் நடந்து இருக்கிறது. ஒரு #மார்க்கமான நிழல் அரசாங்கம் கட்டமைப்பு செய்து இதன் பொருளாதார பலத்தை…. அதில் புழங்கும் பணத்தை #ஹலால் என்கிற பெயரிலான வணிகத்தை முன்னெடுத்து வருகின்றனர். இதன் தலைமையகம் மலேஷியாவாக முன் ஒரு காலத்தில் இயங்கியது… அதாவது சுருக்கமாக மஹாதீர் பின் முகம்மது காலத்தில்…91 வயதில் இவர் ஆடிய ஆட்டம் கொஞ்சம் நஞ்சமல்ல ….. நம்மவர்கள் தலையிட்டு முன்னாள் மலேசியா பிரதமர் என்கிற ரீதியிலான பட்டத்தை கொடுத்ததும் தான் துருக்கி அதிபரும் கொஞ்சம் அடக்கி வாசிக்கிறார்.இவருக்கு பாமாயில் என்றால் அவருக்கு கிரீஸ்.ம்ம்ம்ம்ம் வழுவழுப்பான கீரீஸ் அல்ல.கிரேக்கம் என அழைக்கும் இன்றைய கிரீஸ். அவர்களை நம்மோடு கூட்டு சேர்த்துக் கொண்டு அவர்களின் ராஃபேல் விமானங்களில் நம்முடைய பிரமோஸ் பொருத்தப்பட்ட போது தான் காஷ்மீருக்காக பொங்கிக் கொண்டு இருந்த துருக்கி அதிபர் ஹெர்துவான் கொஞ்சம் அடக்கினார். மனிதர் அவ்வளவு லேசுப்பட்டவர் அல்ல….

இவர் அமெரிக்க அதிபரையே எகத்தாளம் பேசி ஏகடியம் செய்த மஹானுபாவர்‌. இது என்ன பிரமாதம்…… ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினையும் விட்டு வைக்காமல் ஏகப்பட்ட இடங்களில் பகடி செய்தவர். புடினும் சரி அமெரிக்க அதிபரும் சரி பல்லைக் கடித்து இவரை பொறுத்துக்கொண்ட சம்பவங்கள் ஏராளம் உண்டு. காரணம் இவர் ஆளும் துருக்கி அமைந்திருக்கும் நிலப்பரப்பு. இவர் அனுமதி கொடுத்தால் ரஷ்யா தனது கப்பலை கருங் கடலுக்கு கொண்டு செல்ல முடியும். அதுபோலவே இவரது தயவு இருந்தால் மட்டுமே மேற்கு உலக நாடுகளின் கப்பல்கள் உக்ரைனை வந்தடையும்.

அதனை வைத்துக் கொண்டு இல்லாத ஆட்டம் எல்லாம் ஆடிக் கொண்டு இருந்தார். முதன் முதலில் இவருக்கு மூக்கணாங்கயிறு மாட்டியது நம்மவர்கள் தான். நம்மில் பலருக்கு தெரியாத சங்கதி இது. இதனோடு நேரடியான வேறோர் மோதல் சம்பவம் எல்லாம் இருக்கிறது. ஆர்மீனியா அஜர்பைஜான் கேள்விப் பட்டதுண்டா?

ஜோபைடன் பதவிக்கு வந்ததும் வராததுமாக மத்திய கிழக்கு நாடுகளில்தான் இனி அமெரிக்க அரசியல் என்று சொன்னார் அல்லவா? உடனடியாக கையில் எடுத்தது இந்த இடத்தை தான்.

ஆர்மீனியா பக்கம் ரஷ்யா நிற்க, அஜர்பைஜான் பின்னால் இருந்த துருக்கியைக் கொண்டு தூண்டி விட்டார். வாடகை ராணுவம் தங்கள் வாகனங்களை நாகர்னோ கராபாக் என்கிற இடத்தில் ஆர்மேனியாவை வம்புக்கு இழுத்து பிடறியில் அடித்தார்கள். இதில் ஆர்மீனியா பக்கம் ரஷ்யா மாத்திரம் அல்ல நம் இந்திய தேசமும் நிற்கிறது. அவர்களின் ராணுவ தேவைகளுக்கு நம் இந்திய தயாரிப்பு சுவாதி ரேடார்கள் கொடுக்கப்பட்டிருந்தது. ஆனாலும் துருக்கி தயாரிப்பு ட்ரோன்கள் பேராக்டர் டீபி 2 உள்ளே நுழைந்து அதகளம் பண்ணிக் கொண்டு இருந்தார்கள். இது என்ன பிரமாதம் என்பது போல் ரஷ்ய தயாரிப்பு மிக் ரக ஹெலிகாப்டரை எல்லாம் வீழ்த்திக்கொண்டு இருந்தார்கள்.

பதிலுக்கு ரஷ்யா உறுமிய போது… தெரியாமல் நடந்து விட்டது என்று பம்மி விட்டார்கள்.பின்னால் நமட்டு சிரிப்புடன் இவற்றை எல்லாம் ரசித்து வந்தது அமெரிக்கா. சந்தடி சாக்கில் இந்திய தயாரிப்பு ரேடார் சாதனங்கள் எல்லாம் வேஸ்ட் என்கிற ரீதியிலான விஷம பிரசாரத்தை பாகிஸ்தான் மூலமாகப் பரப்பி விட்டது துருக்கி.

இத்தனைக்கும் இந்திய தயாரிப்பு சாதனங்கள் எதுவும் அது சென்ற பொட்டியில் இருந்து கூட வெளியே எடுக்கவில்லை. அதற்குள் இத்தனை களேபரங்கள். சரியாக சொல்வதென்றால் துருக்கியின் நீண்ட கால கோரிக்கையை அஜர்பைஜானைக் கொண்டு நிறைவேற்றிக் கொள்ள வழி ஏற்படுத்தி, சந்தடி சாக்கில் ரஷ்யா மற்றும் இந்தியாவை பதம் பார்த்தது மேற்கு உலக நாடுகள்.

இதற்கெல்லாம் பதிலடியாக யாருமே எதிர்பாராத விதமாக இந்தியா இயங்கியது. இந்திய – மத்தியக் கிழக்கு பொருளாதார பட்டுப்பாதை திட்டத்தை அறிவித்தது. நம் நாட்டில் #G20 உச்சி மாநாடு நடந்த சமயத்தில் இதனை அறிவித்தது! அறிவித்ததோடு நின்று விடாமல் செயலிலும் இறங்கி இருக்கிறார்கள்.

இஃது ஆனானப்பட்ட ஜோபைடனே, தனது மேற்கு உலக சகாக்களோடு சேர்ந்து அறிவித்து, பின்னர் கிடப்பில் போட்டு விட்ட திட்டத்தை காட்டிலும் கூடுதல் மதிப்பு மிக்கது என்பது நம்மில் எத்தனை பேருக்குத் தெரியும்????

கிரீஸ்ஸில் தொடங்கி இஸ்ரேல் ஹைஃபா துறைமுகம் வரை கடல் மார்க்கமாகவும், அங்கிருந்து சௌதி அரேபியா வளைகுடா நாடுகள் வரை தரை மார்க்கமாகவும், பின்னர் அங்கு இருந்து நம் நாட்டுக்கு அரபிக் கடலிலும் புதிய வழித்தடத்தில் இயங்க இருக்கிறார்கள். புதியதாக ஏற்படுத்த இருக்கிறார்கள்.

இதனை வெளிப்படையாக அறிவித்த ஒரு மாதத்திற்குள்ளாக இஸ்ரேல், காசா மீது தாக்குதல் நடத்தி இருக்கிறது. அதாவது ஈரானிய ஆதரவு ஹமாஸ் இயக்கத்தின் தாக்குதல் முதன் முறையாக இஸ்ரேல் மீது நடத்தி இருக்கிறார்கள். காலங்காலமாக பாலஸ்தீன் பக்கம் நின்ற, நிற்கும் இந்தியா, இந்த முறை யார் பக்கம் என கேள்வி கேட்டு பக்கம் பக்கமாக ஊடகங்களில் பேசிக் கொண்டு இருப்பதை சமீபத்திய காலத்தில் நீங்கள் கவனித்து இருக்கலாம். இந்திய தரப்பில் உடனடியாக இஸ்ரேல் பக்கம் என அறிவித்ததும் நடந்தது.

இதன் பின்னணியில் ப்ரோ இண்டியன்ஸ் (pro-indians) ஹமாஸ் வலைத்தள பக்கங்களை ஹேக் செய்து விட்டதாக அறிவித்ததும் நடந்தது. காஷ்மீரில் ஹமாஸ் தாக்குதல் நடத்த வேண்டும் என்கிற ரீதியிலான விஷயம் பரவியது. இங்கு நம் கேரளத்தில் ஹமாஸ் தலைவர் பேசியதற்கு பின்னர் குண்டு வெடிப்பு எல்லாம் நடந்தது.

இத்தனைக்கு மத்தியில் இது நாள் வரை புலம்பிக் கொண்டு இருந்த உக்ரைன் ரஷ்யா மோதல் காணாமல் போனதை நம்மில் எத்தனை பேர் கவனித்தார்கள்? ஊடகங்களில் மட்டுமே ஜெயித்து வந்த உக்ரைனிய அதிபர் ஜெலன்ஸ்க்கி மேற்கொண்டு யுத்தம் நடந்த கடன் கேட்டு நாடு நாடாக அலைந்து திரிந்து கொண்டு இருக்கிறார் இன்று. கடன் கொடுக்க உக்ரைனை விலை பேச ஆரம்பித்திருக்கிறது மேற்கு உலக நாடுகள் பலவும் என்கிறார்கள்!

இதற்கு எல்லாம் காரணம் இந்தியா. ஒரே புள்ளியில் இணைத்த, பரம வைரிகளாக அடையாளப்படுத்தப்பட்ட, இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாஹூ, அரபு உலக சௌதி பட்டத்து இளவரசர் முகம்மத் பின் சல்மான்., இஸ்லாமிய ஈரானிய அதிபர் இப்ராஹிம் ராய்சி ஆகியோர் தான்!

என்ன ஒரு ஒற்றுமை என்றால், இந்த மூவரையும் தற்போதைய அமெரிக்க அதிபர் ஜோபைடனுக்கு பிடிக்காது. இவர்களுக்கும் அவரைக் கண்டால் ஆகாது. அவர் சார்ந்த கட்சியினரும் எட்டிக்காய் தான். ஆக, நுட்பமாக சொல்வதென்றால், ஜோபைடன் கொண்டு வந்த, ஜோபைடனால் முன்னெடுக்கப்பட்ட திட்டமிடலை, மத்திய கிழக்கு அரசியலை, ஐரோப்பிய அரபு உலக பட்டுப் பாதை திட்டத்தை தவிடு பொடியாக்கி, தனது வேலையை நேர்த்தியாக, குறித்த நேரத்தில் செய்து வரும்…
நாம் சொல்ல மாட்டோம். நாளைய உலகமே பேசும்.
பொருத்திருந்து பாருங்கள்.

  • ‘ஜெய் ஹிந்த்’  ஸ்ரீராம்

ஸ்ரீ ஞானாநந்த பாரதீ ஸ்வாமிகள், 34வது ஆராதனை மஹோத்ஸவம்!

sri gnanananda bharathi swamigal aradhana - 2026
#image_title

ஐப்பசி அனுஷம்: (14.00.2023) ஸ்ரீ ஞானாநந்த பாரதீ ஸ்வாமிகள், 34வது ஆராதனை மஹோத்ஸவம்!

பழுத்த அத்வைதியாகவும் ஸனாதனியாகவும் வேதாந்தியாகவும் பிறகு ஞானியாகவும் வாழ்ந்த ஸ்ரீ ஞானனந்தபாரதீ ஸ்வாமிகள் (பூர்வாசிரமத்தில் திருநெல்வேலி ஸ்ரீ. ஆர். கிருஷ்ணஸ்வாமி அய்யர், ) ஆதிசங்கரரிடமும், சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடத்தின் ஜகத்குரு பரம்பரையிலும் அளவில்லாத ஈடுபாடும் பக்தியும் கொண்டிருந்தார். சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடத்தின் 33-வது ஜகத்குரு, 34-வது ஜகத்குரு மற்றும் 35-வது ஜகத்குரு ஆகிய மூவரும் அவரிடம் தனிப் பிரியம் வைத்திருந்தார்கள்.

‘ஸ்ரீ சங்கரரின் மறு அவதாரம்’ என்று போற்றப்பட்ட ஸ்ரீ ஸச்சிதாநந்த சிவாபிநவ ந்ருஸிம்ஹ பாரதீ மஹா ஸ்வாமிகளிடம் தன் பால்யத்திலேயே மந்திரோபதேசம் பெற்றவர். பின்னர் ‘ஜீவன்முக்தர்’ என்று வணங்கப்பட்ட ஸ்ரீசந்திரசேகர பாரதீ மஹாஸ்வாமிகளிடம் விசேஷ பக்தியைச் செலுத்தி, ஸ்ரீ ஆசார்யர்களின் அருகாமையை நன்கு அனுபவித்து, அவருடைய பரம கிருபைக்குப் பாத்திரமானவர். யோகிகளின் சூடாமணியாக விளங்கிய ஸ்ரீ அபிநவவித்யாதீர்த்த மஹாஸ்வாமிகள், ஸ்ரீ கிருஷ்ணஸ்வாமி அய்யரின் குண விசேஷங்களையும், தீவிர வைராக்யத்தையும், சாஸ்திர கிரந்தங்களில் அவருக்கு இருந்த ஆழ்ந்த அறிவையும், மேலான குரு பக்தியையும் கண்டு சிலாகித்தார்கள்.

பின்னால் அவர் வயோதிகத்தை அடைந்தபோது ஸ்ரீமத் அபிநவ வித்யாதீர்த்த மஹாஸ்வாமிகள், அவர் தகுந்த பாத்திரமாக இருப்பதைக் கண்டு திருப்தியடைந்து, தாம் வடக்கே பிருந்தாவன க்ஷேத்திரத்திற்கு யாத்திரையாகச் சென்றிருந்தபோது, ஸ்ரீ கிருஷ்ணஸ்வாமி அய்யரை அங்கு வரவழைத்து, தன் ஸந்நிதியிலேயே அவருக்கு உயர்ந்ததான ஸந்யாஸ ஆசிரமத்தை (3-11-1966) வழங்கி அருளினார். அப்போது இந்த ஞானிக்கு, ஸ்ரீமத் ஆசார்யாள் அவர்கள் தேர்ந்து வழங்கிய தீக்ஷா நாமமே “ *ஸ்ரீ ஞானானந்த பாரதீ* ” என்பதாகும்.

பின்னர் ஸ்ரீ ஞானானந்த பாரதீ ஸ்வாமிகள் தென்திசை யாத்திரையை மேற்கொண்டு, கடைசியில் மதுரை ஜில்லா மன்னாடிமங்கலம் என்ற ஒரு அமைதியான கிராமத்தில் தங்கியிருந்து, ஆசிரம தர்மங்களை நன்கு பரிபாலித்து வந்ததுடன் மனன நிதித்யாஸனாதிகளையும் கிரமமாகச் செய்து கொண்டு, பெரும்பாலும் மௌனத்தை அவலம்பித்து பல அரிய வேதாந்த கிரதங்களை எழுதிக் கொண்டும் இருந்தார்கள்.

ஸ்ரீ ஞானானந்தர் கைவல்யபதத்தை எதிர்நோக்கிக் கொண்டிருந்த காலத்தில் ராமேச்வர யாத்திரையை மேற்கொண்டிருந்த ஸ்ரீ அபிநவவித்யாதீர்த்த மஹாஸ்வாமிகளும், அப்பொழுது புதிதாக பீடத்துக்கு வந்திருந்த ஸ்ரீ பாரதீ தீர்த்த மஹாஸ்வாமிகளும் அச்சிறு கிராமத்திற்கு விஜயம் செய்து ஸ்ரீ ஞானானந்தருக்கு ஒருங்கே தரிசனம் கொடுத்து அனுக்ரஹம் செய்தார்கள்.

அதற்கு சிறிது காலத்திற்குப் பின், கடைசியில் தம் உயிர் பிரியப்போகும் காலத்தில் (09.04.1975 அன்று) அவர்களுக்கு குருவின் தெய்வீக தரிசனம் கிடைத்து அதனால் ஏற்பட்ட ஆனந்தம் முகத்தில் தவழ, கைகளை அஞ்ஜலிபத்தமாக வைத்துக் கொண்டிருந்த நிலையில் மன்னாடிமங்கலத்திலேயே கைவல்யமடைந்தார்கள். அவருடைய பிருந்தாவனம் அங்கு உள்ளது.

சிறந்த கிரந்த கர்த்தாவான இவர், சிருங்கேரி ஆசார்யர்களைப்பற்றி எழுதிய பல புஸ்தகங்களில் ஸ்ரீ ஆசார்ய ஸ்வாமிகளின் உபதேச மொழிகளை அப்படியே குறிப்பெடுத்துக் கொண்டு வார்த்தைகள் மாறாமல் தந்திருக்கிறார். அதனால் அந்த கிரந்தங்களை படிக்கும்போது ஸ்ரீ ஆசார்யர்களின் குரலையே நேரில் கேட்பது போன்ற ஓர் ஆச்சரியகரமான அனுபவம் நமக்கு உண்டாகிறது. தனது வாழ்நாளில் சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடத்தை அலங்கரித்த நான்கு ஆச்சார்ய மஹா புருஷர்களையும் (33 முதல் – 36 வரை) தரிசிக்கும் வாய்ப்பை பெற்ற ஸ்ரீ ஞானானந்த பாரதீ ஸ்வாமிகளின் பாக்கியத்தை என்ன சொல்வது!… யாருக்குக் கிடைக்கும் இப்படி ஒரு பாக்கியம்?

திருப்பரங்குன்றத்தில் கந்த சஷ்டி விழா, காப்பு கட்டுதலுடன் தொடக்கம்!

thiruparankundram kappu kattuthal - 2026
#image_title

திருப்பரங்குன்றம் சுப்ரமணிய சுவாமி கோவிலில் கந்த சஷ்டி விழா காப்பு கட்டுதலுடன் தொடக்கம்!

மதுரை: 17ஆம் தேதி சூர பத்மனை வதம் செய்ய சக்திவேல் வாங்கும் விழாவும் பதினெட்டாம் தேதி சூரசம்ஹார லீலை விழாவும் நடைபெற உள்ளது. கந்த சஷ்டி விழா துவக்கத்திற்காக கோவில் மண்டபத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் காப்பு கட்டி சஷ்டி விரதத்தை தொடங்கினர்.

திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி கோயிலில், கந்தசஷ்டி விழா இன்று காப்பு கட்டுகளுடன் தொடங்கியது. விழாவினை முன்னிட்டு, பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த பொதுமக்கள் காப்பு கட்டி தங்களது விரதத்தை தொடங்கினர்.

திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி கோவிலில் கொண்டாடப்படும் விழாக்களில் கந்த சஷ்டி விழா கோலாகலமாக கொண்டாடப்படும். ஆண்டுதோறும் ஐப்பசி மாதம் 7 நாட்கள் நடைபெறும் இந்த திருவிழா இன்று காப்பு கட்டுதலுடன் இன்று தொடங்கியது. விழாவை முன்னிட்டு, காலை ஏழு மணிக்கு யாகசாலை பூஜைகள் தொடங்கியது.

தொடர்ந்து, சண்முகர் சன்னதியில் உள்ள சண்முகருக்கு காப்பு கட்டப்பட்டு, உற்சவர் சுப்பிரமணியசுவாமி தெய்வானைக்கு காப்பு கட்டப்பட்டது.

உற்சவ நம்பியாருக்கு காப்பு கட்டிய பின்பு காலை 9 மணிக்கு மேல் கந்த சஷ்டி விரதம் இருக்கும் பக்தர்களுக்கு காப்பு கட்டப்பட்டது. விழாவினை முன்னிட்டு, மதுரை மாவட்டம் மட்டுமல்லாது விருதுநகர், சிவகங்கை, தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் திருப்பரங்குன்றம் கோயில் வளாகம் மற்றும் சுற்றியுள்ள திருமண மண்டபங்களில் தங்கி கந்தசஷ்டி விரதம் இருக்க தொடங்கினார்கள் .

விழாவினை முன்னிட்டு, சண்முகர் சன்னதியில் தினமும் காலை மற்றும் மாலை வேலைகளில் சண்முகார்ச்சனை நடைபெறும்.

தினமும் இரவு 7 மணிக்கு தந்த தொட்டி விடையாத்தி சப்பரத்தில் சுப்பிரமணிய சுவாமி தெய்வானையுடன் திருவாச்சி மண்டபத்தில் எழுந்தருளி ஆறு முறை வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலிப்பார்.

விழாவின் முக்கிய நிகழ்ச்சி ஆக வருகின்ற 17ஆம் தேதி மாலை 6:30 மணிக்கு சுப்பிரமணிய சுவாமி சூரனை வதம் செய்ய கோவர்த்தன அம்பிகையிடம் சக்திவேல் வாங்கும் நிகழ்ச்சி நடைபெறும்.

இதையடுத்து, விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக வருகின்ற 18ஆம் தேதி சூரசம்கார லீலை நடைபெறும்.

திருப்பரங்குன்றம் சன்னதி தெருவில் உள்ள சொக்கநாதர் கோயில் முன்பு நடைபெறும் இந்த நிகழ்ச்சியில், சூரனை சுப்பிரமணியசுவாமி வதம் செய்யும் சூரசம்கார லீலை நடைபெறும். விழாவில் நிறைவு நாளான 19ஆம் தேதி சுப்பிரமணிய சுவாமி தெய்வானையுடன் தங்கமயில் வாகனத்தில் எழுந்தருளி ரத வீதி மற்றும் கிரி விதிகளில் தேரில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள் அளிப்பார் .

அன்று மாலை பாவாடை தரிசனம் நடைபெற்று மூலவர் சுப்பிரமணிய சுவாமி தங்க கவசத்தில் பக்தர்களுக்கு அருள் பாலிப்பார்.

பக்தர்களுக்கு சிறப்பு ஏற்பாடு:

கந்தசஷ்டி விழாவினை முன்னிட்டு, மதுரை மாவட்டம் மட்டுமல்லாது விருதுநகர், சிவகங்கை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோயில் வளாகத்தில் 7 நாட்கள் தங்கி சஷ்டி விரதம் இருப்பார்கள்.

அவர்களுக்கு கோயில் சார்பில் காலையில் திணை மாவு, தேன் உள்ளிட்டவைகள் வழங்கப்படும். தொடர்ந்து, மதியம் 1500 பேருக்கு உணவு வழங்கப்படும். மாலையில் எலுமிச்சை சாறு இரவு பால் உள்ளிட்டவைகள் வழங்கப்படும். மேலும், பக்தர்களுக்கு கோவிலுக்குள் தினமும் நடைபெறும் யாகசாலை பூஜைகள் உள்ளிட்டவைகளை டிவிகள் மூலம் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படும்.

மாநகராட்சி சார்பில் பக்தர்களுக்கு தேவையான குடிநீர் மற்றும் கழிப்பறை வசதிகள் செய்யப்பட்டுள்ளது. மேலும், சுகாதார த்துறை சார்பில் கிரிவலப் பாதைகள் கிருமி நாசினிகள் தெளிக்கப்பட்டது.

திருப்பரங்குன்றம் தீயணைப்புத்துறை சார்பில் 24 மணி நேரமும் கோயில் வாசல் பகுதியில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. திருப்பரங்குன்றம் காவல் உதவி ஆணையர் குருசாமி தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

அயோத்தி அரசியல்!

pmmodiji in ayodhya - 2026

வரும் 2024 ஆண்டு இந்த உலகிற்கு மிக மிக முக்கியமான ஓர் ஆண்டு. உலக அரசியலிலும் சரி… வல்லரசு அரசாங்கங்களும் சரி.. மாற்றம் காணுமா எனப் பலரும் பல்வேறு ஆரூடங்களை … ஆராய்ச்சிகளை … அள்ளித் தெளித்து கோலம் போட்டு கொண்டு இருக்கிறார்கள்.

அமெரிக்காவில் வரும் 2024 ஆம் ஆண்டு அங்கு பொதுத் தேர்தல் நடக்க இருக்கிறது…. அதில் தற்போது உள்ள பைடன் அரசாங்கத்திற்கு செல்வாக்கு இல்லை.., ஆதலால் வேறொருவரை முன்னிலை படுத்த திட்டமிட்டு காய் நகர்த்தி வருகிறார்கள் அங்கு. விட்டேனா பார் என இவர் சார்ந்த அரசியல் வாதிகளும் ஒரு பக்கமாக ஆலாபனை பாடிக் கொண்டு இருக்கிறார்கள்.

இது ஒரு புறம் இருக்க இந்திய வம்சாவளி பெண்மணி ஒருவரை களம் இறக்கவும் சகுனம் பார்த்துக் கொண்டு இருப்பதாகவும் கேள்வி….(கமலா ஹாரிஸ் அல்ல…)

அதேபோல் ரஷ்யாவில் விளாடிமிர் புடினின் பதவிக் காலம் அடுத்த ஆண்டு முடிவடைய இருக்கிறது. அவரே மீண்டும் பதவியில் தொடர ஏகப்பட்ட சட்ட திருத்தங்களை செய்ய வேண்டி இருக்கிறது. ஏனெனில் ஏற்கனவே அவர் ரஷ்ய அதிபராக…, ரஷ்ய பிரதமராக என மாறி மாறி பதவி வகித்து வந்துள்ளார்.சரியாகச் சொல்வதென்றால் இரண்டு முறை அதிபர்… இரண்டு முறை பிரதமர் என தற்போது உள்ள சட்ட ரீதியான முழு பதவி காலங்களை முழுமையாக முடித்து விட்டார். ஆனாலும் அங்கு அவரை தவிர வேறோர் தற்போதைக்கு அந்த பதவிக்கு வர முயற்சிக்கவில்லை….. அல்லது இவர் விடவில்லை. இனியும் விடப்போவதில்லை.

அடுத்ததாக சீனாவில் தற்போது உள்ள ஜிங் பிங்கே தொடர இருக்கிறார், கடந்த ஆண்டு தான் பல தகிடு தத்தத்தங்களை தேர்ந்தெடுக்கப்பட்டுயிருக்கிறார். ஐந்து ஆண்டு பதவிக்காலம் அது. அவருடைய நீண்ட கால உறுத்தல் தைவான். அங்கும் அடுத்த ஆண்டு தேர்தல் நடக்க வேண்டி இருக்கிறது. தற்போது உள்ள அதிபர் சாய்-யிங்-வென்னுக்கும் இவருக்கு எப்போதும் ஏழாம் பொருத்தம் தான். எப்படியாவது இவரை மாற்றிவிட்டு ஒரு தலையாட்டி பொம்மையை அங்கு கொண்டு வந்து விட வேண்டும் என தீரா வெறி ஜிங் பிங்கிற்கு உண்டு. எப்படி மாலத்தீவில் நடந்த தேர்தலில் ஒரு கைப்புள்ளையை அதிபராக கொண்டு வந்து இந்தியாவிற்கு குடைச்சல் கொடுக்க ஆய்தமாகி வருகிறாரோ அது போலவே தைவானிலும் ஒரு கரகாட்டம் ஆடிக் காட்ட காத்துக் கொண்டு இருக்கிறது பெய்ஜிங்.

இதனை தடுக்க ஆனானப்பட்ட அமெரிக்காவே தலைகீழாக நின்று தண்ணீர் குடித்து கொண்டு இருக்கிறது. இதில் பெய்ஜிங்கின் சண்டித்தனம் வெல்லும் என உலக அரசியல் பார்வையாளர்கள் இப்போதே ஆரூடம் சொல்லிக் கொண்டு இருக்கிறார்கள்.

இந்த சூழ்நிலையில் தான் நமக்கு… நம் இந்திய தேசத்திற்கு அடுத்த ஆண்டு பொதுத் தேர்தல் வர இருக்கிறது.

உலகமே கொண்டாடும் உலகத் தலைவர் தர வரிசை பட்டியலில் தொடர்ந்து முதல் இடத்தில் இருக்கும் … நம் பாரதப் பிரதமர் திரு நரேந்திர மோடியை எப்படியாவது வெல்ல வேண்டும்…. அவரை தவிர வேறு யாரையாவது அந்த பதவியில் அமர்ந்த வேண்டும் என கங்கணம் கட்டிக் கொண்டு மேற்கு உலக அரசியல்வியாதிகள் வேலை பார்த்து வர… இங்கு உள்ள சில அரசியல் கோமாளிகளும் அதற்கு துணை போக ஆர்வம் காட்டி வருகின்றார்கள். இன்றுள்ள சூழ்நிலையில் இவரை தவிர வேறு யார் வந்தாலும் உலகின் அரசியலின் போக்கே மாறிவிடும் என்கிற நிலையே நிலவுகிறது. அதுவே இவரது ஆளும் திறனுக்கு சாட்சி சொல்கிறது. தவிர நம் இந்திய நாட்டின் பொருளாதாரத்தின் அஸ்திவாரமே ஆட்டம் காணும்… ஆட்டிப் படைக்க ஓர் அரக்க கூட்டமே காத்துக் கொண்டு இருக்கிறது என்கிறார்கள்.

சீரழிந்த கலாச்சார சூழலில் சிக்கி மேற்கு உலக பொருளாதாரமே ஆட்டம் கண்டு வரும் நிலையில் சீரான இந்திய பொருளாதார வளர்ச்சி அவர்களை பொரும செய்திருக்கிறது. பல ஐரோப்பிய தேசங்களில் இஃது வெளிப்படையாக தெரிகிறது என்கிறார்கள்.ஏகாதிபத்திய எகத்தாளம் பேசிய பிரிட்டன் இன்று மூன்று துண்டுகளாக உடையும் நிலைக்கு தள்ளப்பட்டு விட்டது. போதாக்குறைக்கு அங்கு இன்று அந்த தேசத்தை இந்திய வம்சாவளியை சேர்ந்த ரிஷி சுனாக் ஆள்வதை அவர்களால் ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை. பல்லை கடித்து கறுவிக்கொண்டு இருக்கிறார்கள்….. அவ்வப்போது கருத்துக்களை சொல்லவும் தவறுவதேயில்லை. அவர்கள் நம்மை சுரண்டி விட்டு சென்ற 75 ஆண்டிகளில் நாம் இதனை சாதித்திருக்கிறோம்.

உலக அளவிளான பொருளாதார பங்களிப்பில் நம் தேசம் சீனாவிற்கு அடுத்தபடியாக சுமார் 22% எனும் அளவில் இருந்ததாக ஓர் மதிப்பாய்வு சொல்கிறது… இஃது 18 ஆம் நூற்றாண்டின் முந்தைய கணக்கு. இன்று ஒற்றை இலக்க எண்ணை… கிட்டத்தட்ட 3.7% மாத்திரமே கொண்டு இருக்கிறோம் என்கிறார்கள்.

ஒரு வேளை இஃது முந்தைய காலகட்டத்தை போல் இரட்டை இலக்க எண்களில் இருந்தால்….. குறைந்த பட்சம் 15% என்று ஆனால்…. நம் இந்திய தேசம் மிகப் பெரிய பொருளாதார வளர்ச்சி காணுமே என மலைக்கிறார்கள் பலரும்.

ஆனானப்பட்ட அமெரிக்காவே இன்று உள்ள நிலையில் முதல் இடத்தில் இருந்தாலும்…… அது அப்படி காட்டிட கட்டமைக்கப்பட்டுள்ளதே தவிர நிஜத்தில் அதன் நிதி நிலைமை வேறு என்கிறார்கள் விஷயம் அறிந்த வட்டாரங்களில்…… ஆனால் சீனாவில் அப்படி அல்ல. சீரான வளர்ச்சி கண்டு அசுர வேகத்தில் வளர்ந்து கொண்டே இருக்கிறது. அவர்களை கட்டி ஆள ….. தட்டி வைக்க அமெரிக்கர்களால் இனி இந்த ஜன்மத்தில் முடியாது.

அடுத்த இடத்தில் நாம் வருகிறோம்.இன்று சீனாவை விட நாம் ஐந்து மடங்கு பின் தங்கிய நிலையில் இருந்தாலும் கூட சீனாவை சமன் செய்ய நம்மால் மட்டுமே என்றும் மேற்கு உலகம் மதிப்பாய்வு செய்து வைத்திருக்கிறார்கள்.

இவையெல்லாம் ஒரு புறம் இருக்க…… இந்தியர்களின் எழுச்சி பலரை…. அதிலும் குறிப்பாக பல மேற்கு உலக வாசிகளை… பொரும செய்திருக்கிறது. தடை ஏற்படுத்திட துடிக்கிறார்கள். இதற்கு உபாயமாக உலகின் மிக பெரிய ஜனநாயகத்தை… நம் இந்திய தேசத்தை, அதன் வாக்காளர்களை…. வாக்கு வங்கி அரசியலாக உருமாற்றி .. அதனை கொண்டே வீழ்த்திட துடிக்கிறார்கள்.

இது நிச்சயமாக வரும் 2024 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் திறக்க திட்டமிட்டுள்ள ராமர் கோவிலில் வெளிப்பட இருக்கிறது.அது குறித்தான பறவை பார்வையில் இன்று தொடங்கி இந்த கட்டுரை தொடர் வரவிருக்கிறது. கடந்த 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலில் நம் தமிழகத்தின் பங்களிப்பு தற்போது உள்ள மத்திய அரசில் இல்லாத காரணத்தால் நாம் என்னவெல்லாம் இழந்து இருக்கிறோம் என்பதே நம்மில் பலருக்கு தெரியாது இருக்கிறது. இஃது உலக அளவிலான அரசியலிலும் ஓர் குறிப்பிட்ட பாதிப்பை ஏற்படுத்தி இருக்கிறது. வெளிப்பார்வைக்கோ அல்லது மெயின் ஸ்ட்ரீம் மீடியாவிலோ… பிரபலமான சமூக ஊடகங்களிலோ இது குறித்தெல்லாம் பேசப்படவேயில்லை என்பது கவலைக்குரிய விஷயம் ஆகும்.

நம் தமிழகத்தினை பொறுத்தவரையில் ஐந்து திணைகளாக … முல்லை மருதம் எனப் பெயர் கொடுத்து வகைப் படுத்தி இருந்ததை போன்று … கோவிலும், கோவிலை சார்ந்த இனமும் என்கிற ரீதியிலான அவதானிப்பு இனி வரும் காலங்களில் ஏற்படக்கூடும். காலங்காலமாக கலாரசனையுடன் நேர்த்தியான நிர்வாகவியலை காண்பித்த … கலாச்சாரத்தை கட்டிக்காத்த … கோவிலை மையப்படுத்தின சமூகத்தை மீள் கட்டமைப்பு செய்வதாக அது அமையும்.

நிறையவே விவாதிப்போம்.

இறுமார்ப்புடன் தலைநிமிர்ந்து நம் சமூகத்தை காப்போம். வளமான தமிழகம். வலிமையான பாரதம் என்பது இனி செயலில்..

  • ‘ஜெய் ஹிந்த்’ ஸ்ரீராம்

சுதந்திரத்துக்குப் பின் முதல் முறையாக… காஷ்மீர் சாரதா கோயிலில் தீபாவளி!

diwali in kashmir sharadha temple - 2026
#image_title

இது வரை வரலாற்றில் இல்லாத அளவிற்கு தீபாவளி காஷ்மீரில் மிக கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இங்குள்ள அனைத்து மாவட்டங்களிலும் ஹிந்து கோயில்கள் மின் அலங்காரம் செய்யப்பட்டு ஜொலித்தன.

இங்குள்ள சாரதா தேவி கோயில் அண்மையில்தான் பல கோடி செலவில் புதுப்பிக்கப்பட்டது. எல்லையில் குப்புவாராவில் உள்ள மாதா சாரதா தேவி கோயிலில் சுதந்திரம் அடைந்த 75 ஆண்டு கால வரலாற்றில் நேற்றுதான் தீபாவளிக்கு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

எந்த ஆண்டும் இல்லாத அளவிற்கு பட்டாசுகளின் ஒளி விண்ணை பளபளக்க செய்தது. வெடி ஒலி வீதிதோறும் கேட்டது.

காஷ்மீரில் ஞாயிற்றுக்கிழமை உள்ளூர் இந்து மக்கள் மற்றும் பாதுகாப்புப் படையினரால் தீபாவளி பண்டிகை உற்சாகத்துடனும் மகிழ்ச்சியுடனும் கொண்டாடப்பட்டது, ஏனெனில் விளக்குகளின் திருவிழாவைக் கொண்டாடும் வகையில் பல கோயில்கள் மற்றும் பிரபலமான இடங்கள் தீப ஒளியில் ஜொலித்தன.

ஸ்ரீநகர் மற்றும் பள்ளத்தாக்கில் உள்ள மற்ற இடங்களில் உள்ள அனைத்து முக்கிய கோவில்களும் தீபாவளியை கொண்டாடும் வகையில் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

பாலங்கள் மற்றும் கட்டிடங்கள் மற்றும் போலோ வியூ மார்க்கெட் மற்றும் ஜீலம் பண்ட் போன்ற மற்ற முக்கிய அடையாள இடங்களும் ஒளியின் திருவிழாவைக் குறிக்கும் வகையில் ஃப்ளோரசன்ட் விளக்குகளால் ஒளிரச் செய்யப்பட்டதாக அவர்கள் தெரிவித்தனர். சுற்றுலாப் பயணிகளும் உள்ளூர் மக்களும் நகரின் அடையாளச் சின்னமான மணிக்கூண்டு கோபுரத்தைக் கொண்டாட திரண்டனர்.

இந்து பக்தர்கள் பாரம்பரிய மண் விளக்குகளால் தீபமேற்றப்பட்டு அலங்கரிக்கப்பட்டிருந்த கோயில்களுக்குச் சென்றனர், அதே நேரத்தில் பாதுகாப்புப் படையினரும் தங்கள் முகாம்களுக்குள் திருவிழாவைக் கொண்டாடுவதாக காஷ்மீர் பள்ளத்தாக்கு முழுவதிலும் இருந்து செய்திகள் வெளியாகின.

பள்ளத்தாக்கின் பெரும்பாலான பகுதிகள் பட்டாசு வெடிக்கும் சத்தத்துடன் ஒலித்தன. தேசிய மாநாடுக் கட்சி, பிடிபி, மக்கள் மாநாடு மற்றும் பிஜேபி உட்பட காஷ்மீரில் உள்ள அனைத்து முக்கிய அரசியல் கட்சிகளும் தீபாவளி வாழ்த்துக்களை தெரிவித்திருந்தன.

என்று வரை மழை நீடிக்கும்?

rains weather rain women 1 - 2026
#image_title

முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன்


வங்கக் கடலில் வளிமண்டல காற்று சுழற்சி மூன்று இடங்களில் நிலவுகிறது.

(1) அந்தமான் தீவுகளுக்கு கிழக்கே ஒரு காற்று சுழற்சி நிலவுகிறது. இது நாளை காற்றாழுத்தத் தாழ்வுப்பகுதியாக மாறக்கூடும். ஆயினும் இது வட-வடமேற்கில் நகர இருப்பதால் இதனால் தமிழகப் பகுதிகலில் தாக்கம் இருக்காது. மேற்கு வங்கம், வங்கதேசம், வட கிழக்கு இந்திய மாநிலங்களில் 17, 18 மற்றும் 19ஆம் தேதிகளில் மழை பெய்ய வாய்ப்புள்ளது.

(2) தமிழக கடற்கரைக்கு கிழக்கே மற்றொரு காற்றுச் சுழற்சி நிலவுகிறது.

(3) குமரிக் கடலில் ஒரு காற்று சுழற்சி நிலவுகிறது.

இந்த இரண்டு காற்று சுழற்சிகளால் தமிழகத்தில் இன்று மதியம் 12 மணி முதல் நாகைப்பட்டினம், திருவாரூர், மயிலாடுதுறை, கடலூர், காரைக்கால், புதுச்சேரி பகுதிகளில் மழை பெய்யத் தொடங்கும். சென்னையிலும், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களிலும் இன்று மாலை 1630 மணியிலிருந்து மழை பெய்யத் தொடங்கும், இன்று இரவு கனமழை தமிழக கடலோர மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் பெய்யும்.

14, 15, மற்றும் 16ஆம் தேதி வரை மழை நீடிக்கும்

வெறும் வயிற்றில் சாப்பிடக் கூடாத உணவுகள்!

healthy food habits - 2026
#image_title

உணவுதான் உடலுக்கு அச்சாரம். ஆரோக்கியமான உணவுகளைச் சாப்பிட வேண்டியது எவ்வளவு அவசியமோ, அதே அளவுக்கு சரியானதை, சரியான நேரத்தில் உண்பதும் அவசியம். சில உணவுகளை வெறும் வயிற்றில் சாப்பிடக் கூடாது என்று சொல்வார்கள். அவை எந்தெந்த உணவுகள்… ஏன் என்பதைப் பார்ப்போம்.

சில வகை மருந்துகள்: டாக்டர் பரிந்துரைத்தால் மட்டுமே வெறும் வயிற்றில் மருந்தை எடுக்க வேண்டும். சில மருந்துகள், குடலின் அமிலத்தைப் பாதித்து, வயிற்றுப்புண், வயிற்று எரிச்சல், சோர்வு, மயக்கம் போன்ற பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடும்.

தக்காளி: தக்காளியை வெறும் வயிற்றில் சாப்பிடும்போது அதில் உள்ள அமிலங்கள் வயிற்றில் உள்ள அமிலங்களுடன் வினைபுரிந்து கரையாத ஜெல் போன்ற பொருளை உருவாக்குகின்றன. இதனால், வயிற்றில் கற்கள் உருவாகும்.

வாழைப்பழம்: வெறும் வயிற்றில் வாழைப்பழத்தை உண்பதால், உடலில் மக்னீசியத்தின் அளவு திடீரென அதிகரிக்கிறது. இதனால் மக்னீசியம் மற்றும் கால்சியத்தின் சமநிலை பாதிக்கப்படும்.

டீ, காபி: காஃபைன் நிறைந்துள்ளது. வெறும் வயிற்றில் இவற்றைப் பருகும்போது குடல் பாதிப்படைகிறது. எனவே, காபி அல்லது டீக்கு முன் ஒரு டம்ளர் தண்ணீர் அருந்துவது நல்லது.

சக்கரைவள்ளிக்கிழங்கு: இதில் உள்ள பெக்டின், டானின் போன்றவை குடலில் அமிலச்சுரப்பைத் தூண்டும்.இதனால் குடல்சுவர் பாதிக்கப்பட்டு அல்சர், எதுக்களிப்பு போன்ற பிரச்னைகள் உருவாகும்.

காரமான உணவு வகைகள்: குடல் பாதிப்பு அடைகிறது. அல்சர் போன்ற பிரச்னைகள் ஏற்பட வாய்ப்பை அதிகரிக் கிறது. வயிறு எரிச்சல் உண்டாகும்.

கார்பனேட்டட் பானங்கள்: இதில் உள்ள அமிலங்கள் வயிற்றில் உள்ள அமிலங் களோடு வினைபுரிந்து செரிமானக் கோளாறு, வயிற்றுப்புண் உள்ளிட்ட பிரச்னைகளை உருவாக்கும்.

தயிர்: புரோபயாடிக் எனும் நல்ல பாக்டீரியா நிறைந்தது. வெறும் வயிற்றில் சாப்பிடும்போது அமுதமே நஞ்சாவது போல் நல்ல பாக்டீரியாவே குடலைப் பாதித்துவிடும்.

WC 2023: முதல் முறையாக அனைத்து லீக் போட்டிகளிலும் வென்ற இந்திய அணி!

world cup cricket 2023 - 2026
#image_title

ஒருநாள் கிரிக்கட் உலகக் கோப்பைப் போட்டி
39ஆம் நாள் – இந்தியா vs  நெதர்லாந்து
பெங்களூரு – 11.11.2023

முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன்

          இந்திய அணி (410/4, ஷ்ரேயாஸ் ஐயர் 128*, கே.எல்.ராகுல் 102, ரோஹித் ஷர்மா 61, ஷுப்மன் கில் 51, விராட் கோலி 51, டி லீட் 2/82) நெதர்லாந்து அணியை (47.5 ஓவரில் 250, நிடமானுரு 54, எங்கல்ப்ரக்ட் 45, ஆக்கர்மேன் 35, மேக்ஸ் ஓ டவுட் 30, பும்ரா 2/33, சிராஜ் 2/29, குல்தீப் 2/41, ஜதேஜா 2/49, கோலி 1/13, ரோஹித் ஷர்மா 1/7) 160 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.

          பூவாதலையா வென்ற இந்திய அணி முதலில் மட்டையாடத் தீர்மானித்தது. இந்திய வீரர்கள் தொடக்கம் முதலே அதிரடி ஆட்டம் ஆட்னார்கள். ரோஹித் ஷர்மா 61 ரன், ஷுப்மன் கில் 51 ரன், விராட் கோலி 51 ரன், ஷ்ரேயாஸ் ஐயர் ஆட்டமிழக்காமல் 128 ரன், கே.எல்.ராகுல் 102 ரன் என அனைவரும் சிறப்பாக ஆடினார்கள். இந்திய அணி முதல் 10 ஓவர்களில் 91 ரன் எடுத்தது. அடுத்த 10 ஓவர்களில் 49 ரன் எடுத்தது. இந்தக் கட்டத்தில் விராட் கோலி சற்று தடுமாறினார். அவர் தான் சந்தித்த முதல் 18 பந்துகளில் 7 ரன் மட்டுமே அடித்தார். அடுத்த 35 பந்துகளில் 43 ரன் அடித்து அரை சதம் பூர்த்தி செய்தார்.

21 முதல் 30 ஓவர் வரை 71 ரன்னும் 31 முதல் 40 ஓவர் வரை 73 ரன்னும் அடிக்கப்பட்டது. கடைசி 10 ஓவர்களில் 126 ரன் அடிக்கப்பட்டது. கே.எல். ராகுல் 64 பந்துகளில் 102 ரன் அடித்தார். 50 ஓவர் முடிவில் இந்திய அணி 4 விக்கட் இழப்பிற்கு 410 ரன் எடுத்தது.

          கடினமான இலக்கை அடைய பேட்டிங் செய்ய வந்த நெதர்லாந்து அணியின் தொடக்க வீரர் வெஸ்லி பரேசி (4 ரன்) இரண்டாவது ஓவரில் ஆட்டமிழந்தார். அதன் பின்னர் வந்த வீரர்கள் நன்றாகவே ஆடினர். ஆனால் இந்திய பந்துவீச்சாளர்களை எதிர்த்து அவர்களால் ரன்ரேட்டை அதிகப்படுத்த முடியவில்லை.

இன்று எப்போதும் பந்துவீசுபவர்களைத் தவிர விராட் கோலி, ஷுப்மன் கில், சூர்யகுமார் யாதவ், ரோஹித் ஷர்மா ஆகியீரும் பந்துவீசினர். அதில் விரால் கோலி, ரோஹித் ஷர்மா இருவரும் தலா ஒரு விக்கட் எடுத்தனர். நெதர்லாந்து வீரர்களால் தோல்வியைத் தவிர்க்க முடியவில்லை; ஆனால் ஆட்டத்தை 48ஆவது ஓவர் வரை இழுத்தனர்.

இறுதியில் 47.5 ஓவரில் 250 ரன்களுக்கு அனைத்து விக்கட்டுகளையும் இழந்தனர். இந்திய அணி 160 ரன் கள் வித்தியாசத்தில் வென்றது. இந்திய அணி தனது லீக் ஸ்டேஜில் அனைத்து ஆட்டங்களையும் வெல்வது இதுவே முதல் முறை.

          இந்திய அணி 18 பிள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் தனது முதலிடத்தைத் தக்கவைத்துள்ளது. ஷ்ரேயாஸ் ஐயர் ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார். முதல் அரையிறுதி ஆட்டம் மும்பையில் வருகின்ற 15ஆம் தேதி இந்தியா, நியூசிலாந்து அணிகளுக்கிடையே நடைபெறும்.

தேர்தல் பத்திரங்களில் பாஜக., ஊழல் செய்கிறதா?

bjp victory - 2026
#image_title

முனைவர் கு.வை.பாலசுப்பிரமணியன்

          தேர்தல் பத்திரங்களில் பாரதிய ஜனதா கட்சி திரட்டியிருப்பதாகவும் இதன் மூலம் அக்கட்சி ஊழலை நிறுவனப்படுத்தி இருப்பதாகவும் தமிழகத்தில் ஒரு இயக்கம் கருத்து வெளியிட்டு இருக்கிறது. இது தொடர்பாக ஒரு வீடியோவும் வெளிவந்திருக்கிறது. உச்ச நீதிமன்றத்தில் ஒரு வழக்கும் நடைபெற்றுவருகிறது. அந்த வழக்கில் மத்திய அரசு கட்சிகளுக்கு தேர்தல் பத்திரங்கள் மூலம் பணம் அளித்தவர்கள் யார் என்று மக்கல் தெரிந்துகொள்ள வேண்டிய அவசியம் இல்லை என்று சொல்லியிருக்கிறது. இந்தப் பின்னனியில் இந்த வீடியோவைப் பார்ப்பவர்களின் முதல் எண்ணம் பாரதிய ஜனதா கட்சி உண்மையில் எதோ ஊழல் செய்கிறது என்பதுதான். ஆனால் உண்மை அதுவல்ல. இது திட்டமிட்டு பரப்படும் பொய்.

          கட்சிகள் அனைத்து கார்பொரேட் நிறுவனங்களிடம் நிதி பெற்றுத்தான் கட்சியை நடத்துகின்றன. தேர்தல் பத்திரங்கள் வருவதற்கு முன்னர் ரூ 20,000/- வரை நிதி அளித்தால் யார் நிதி அளித்தார்கள் என்பதைச் சொல்ல வேண்டாம். எனவே கட்சிகள் தங்களுக்கு வந்த நிதியில் பெரும்பகுதி ரூ 20,000க்கும் குறைந்த அளவில் பல்வேறு கட்சி அனுதாபிகள் அளித்தார்கள் என்று சொல்வார்கள். அந்த வகையில் அவர்களுக்கு வருமான வரித்துறையால் எந்த பிரச்சனையும் வராது.

          தமிழகத்தில் பல கட்சிகள் பொதுக் கூட்டங்களில் உண்டியல் வசூலித்து கோடிக்கணக்கில் பணம் வசூலித்ததாகச் சொல்வார்கள். இல்லை என்றால், கட்சித் தலைவர் ஒரு புத்தகம் எழுதி வெளியிடுவார். அது விற்று வந்த தொகை என்பார்கள். பொதுவாக கருப்புப் பணத்தை வெள்ளையாக மாற்றும் உத்திதான் இந்த கட்சி நிதி திரட்டல்.

தேர்தல் பத்திரம் என்றால் என்ன?

          ஒரு தேர்தல் பத்திரம் என்பது, எந்தவொரு இந்திய குடிமகனோ அல்லது இந்தியாவில் உள்ள நிறுவனமோ ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியாவின் தேர்ந்தெடுக்கப்பட்ட கிளைகளில் இருந்து வாங்கக்கூடிய ஒரு பத்திரம். குடிமகன் அல்லது கார்ப்பரேட் பின்னர் தங்கள் விருப்பப்படி தகுதியான அரசியல் கட்சிக்கு நன்கொடை அளிக்கலாம். பத்திரங்கள் வங்கி நோட்டுகளைப் போலவே இருக்கும், அவை தேவைக்கேற்ப தாங்குபவருக்குச் செலுத்தப்படும் மற்றும் வட்டி இல்லாமல் இருக்கும். இந்த பத்திரங்களை டிஜிட்டல் முறையில் அல்லது காசோலை மூலம் வாங்க ஒரு தனிநபர் அல்லது தரப்பினர் அனுமதிக்கப்படுவார்கள்.

தேர்தல் பத்திரம் எப்போது அறிமுகப்படுத்தப்பட்டது?

          தேர்தல் பத்திரங்கள் நிதி மசோதாவுடன் (2017) அறிமுகப்படுத்தப்பட்டன. ஜனவரி 29, 2018 அன்று நரேந்திர மோடி தலைமையிலான NDA அரசாங்கம் தேர்தல் பத்திரத் திட்டம் 2018 குறித்து அறிவித்தது.

தேர்தல் பத்திரங்களை எவ்வாறு பயன்படுத்துவது?

          தேர்தல் பத்திரங்களைப் பயன்படுத்துவது மிகவும் எளிது. பத்திரங்கள் ரூ. 1,000, ரூ. 10,000, ரூ. 100,000 மற்றும் ரூ. 1 கோடி (ஒரு பத்திரத்தின் வரம்பு ரூ. 1,000 முதல் ரூ. 1 கோடி வரை) மடங்குகளில் வெளியிடப்படும். இவை எஸ்பிஐயின் சில கிளைகளில் கிடைக்கும். KYC இணைக்கப்பட்டுள்ள கணக்கைக் கொண்ட ஒரு நன்கொடையாளர் பத்திரங்களை வாங்கலாம், பின்னர் அவற்றை அவர்கள் விரும்பும் கட்சி அல்லது தனிநபருக்கு நன்கொடையாக வழங்கலாம். இப்போது, ​​பெறுபவர் கட்சியின் அதிகாரபூர்வ கணக்கு மூலம் பத்திரங்களை பணமாக்க முடியும். தேர்தல் பத்திரம் பதினைந்து நாட்களுக்கு மட்டுமே செல்லுபடியாகும்.

பத்திரங்கள் வாங்குவதற்கு எப்போது கிடைக்கும்?

          தேர்தல் பத்திரங்கள் ஒவ்வொரு காலாண்டின் தொடக்கத்திலும் 10 நாட்களுக்கு வாங்குவதற்கு கிடைக்கும். ஜனவரி, ஏப்ரல், ஜூலை மற்றும் அக்டோபர் முதல் 10 நாட்கள் தேர்தல் பத்திரங்களை வாங்குவதற்கு அரசாங்கத்தால் குறிப்பிடப்பட்டுள்ளது. லோக்சபா தேர்தல் நடைபெறும் ஆண்டில் 30 நாட்கள் கூடுதல் கால அவகாசம் அரசாங்கத்தால் குறிப்பிடப்படும்.

தேர்தல் பத்திரங்கள்: நிபந்தனைகள்

1. மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம், 1951 (43 இன் 1951) பிரிவின் 29A இன் கீழ் பதிவுசெய்யப்பட்ட எந்தவொரு கட்சியும், சமீபத்திய பொதுத் தேர்தல்கள் அல்லது சட்டமன்றத் தேர்தல்களில் பெற்ற வாக்குகளில் குறைந்தபட்சம் ஒரு சதவீதத்தையாவது பெற்றிருந்தால் அது தேர்தல் பத்திரங்களைப் பெறத் தகுதியுடையது. பத்திரங்கள். கட்சிக்கு இந்திய தேர்தல் ஆணையத்தால் (ECI) சரிபார்க்கப்பட்ட கணக்கு மூலம் மட்டுமே தேர்தல் பத்திரப் பரிவர்த்தனைகள் செய்ய முடியும்.

2. தேர்தல் பத்திரங்கள் நன்கொடையாளரின் பெயரைக் கொண்டிருக்காது. எனவே, நன்கொடையாளரின் அடையாளத்தை அரசியல் கட்சி அறிந்திருக்காது.

தேர்தல் பத்திரங்களுக்கு வரி விதிக்கப்படுமா?

          தேர்தல் பத்திரம் வாங்குபவருக்கும் வருமான வரிச் சலுகை கிடைக்கும். அதனைப் பெறுகின்ற கட்சிக்கும் வருமான வரிச் சலுகை கிடைக்கும்.

இந்தியாவில் தேர்தல் பத்திரங்கள் ஏன் அறிமுகப்படுத்தப்பட்டன?

          நரேந்திர மோடி தலைமையிலான அரசாங்கத்தின் கூற்றுப்படி, ஒரு கட்சிக்கு வழங்கப்படும் அனைத்து நன்கொடைகளுக்கும் பொதுமக்களுக்கு நன்கொடையாளர் விவரங்களை வெளிப்படுத்தாமல், கணக்கிடப்படுவதை உறுதி செய்வதற்காக தேர்தல் பத்திரங்கள் அறிமுகப்படுத்தப்பட்டன.

          தேர்தல் நிதிக்கு கருப்புப் பணத்தைப் பயன்படுத்துவதைத் தேர்தல் பத்திரங்கள் கண்காணிக்கும் என்று அரசாங்கம் கூறியது. தேர்தல் பத்திரங்கள் இல்லாத நிலையில், நன்கொடையாளர்கள் தங்கள் வணிகங்களில் இருந்து பணத்தைப் நன்கொடை அளிப்பதைத் தவிர வேறு வழியில்லை என்று அரசாங்கம் கூறியது.

தேர்தல் பத்திரத்தில் ஏன் சர்ச்சை?

          அதிக வெளிப்படைத்தன்மையை கொண்டு வருவதற்காகவே தேர்தல் பத்திரங்கள் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டிருந்தால், அத்தகைய நன்கொடைகளின் விவரங்களை பொதுவில் வெளியிடுவதை அரசாங்கம் தடை செய்யக்கூடாது என்று நிபுணர்கள் கருதுகின்றனர்.     

தேர்தல் பத்திர திட்டம் அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு நீக்கப்பட்ட கட்டுப்பாடுகள்

1. முன்னதாக, நிறுவனங்கள் சட்டத்தின் கீழ் எந்த வெளிநாட்டு நிறுவனமும் எந்த அரசியல் கட்சிக்கும் நன்கொடை அளிக்க முடியாது

2. நிறுவனங்கள் சட்டத்தின் 182வது பிரிவின்படி ஒரு நிறுவனம் அதன் சராசரி மூன்று ஆண்டு நிகர லாபத்தில் அதிகபட்சமாக 7.5 சதவீதத்தை அரசியல் நன்கொடையாக அளிக்கலாம்.

3. சட்டத்தின் அதே பிரிவின்படி, நிறுவனங்கள் தங்கள் ஆண்டு கணக்கு அறிக்கையில் அரசியல் நன்கொடைகள் பற்றிய விவரங்களை வெளியிட வேண்டும்.

தேர்தல் பத்திரங்கள் குறித்து உச்ச நீதிமன்றம் என்ன சொல்கிறது?

          ஏப்ரல் 12, 2019 அன்று அனைத்து அரசியல் கட்சிகளும் தேர்தல் பத்திரங்கள் மூலம் பெறப்பட்ட நன்கொடைகளின் விவரங்களை தேர்தல் ஆணையத்திடம் சமர்ப்பிக்குமாறு உச்ச நீதிமன்றம் கேட்டுக் கொண்டது. மேலும் தேர்தல் பத்திரங்களை வாங்குவதற்கான கால அவகாசத்தை 10 நாட்களில் இருந்து 5 நாட்களாக குறைக்குமாறு நிதி அமைச்சகத்திடம் கேட்டுக்கொண்டது. தேர்தல் பத்திரங்களுக்கு எதிரான பிற மனுக்களை விசாரிக்க உச்ச நீதிமன்றம் இன்னும் தேதியை நிர்ணயிக்கவில்லை.

தேர்தல் பத்திரங்கள் குறித்த இந்திய தேர்தல் ஆணையத்தின் பார்வை

தேர்தல் ஆணையம் ஏப்ரல் 10, 2019 அன்று இந்திய உச்ச நீதிமன்றத்தில் தேர்தல் பத்திரங்கள் திட்டத்திற்கு எதிரானது இல்லை என்றாலும், அரசியல் கட்சிகளுக்கு அநாமதேய நன்கொடைகளை ஏற்கவில்லை என்று தெரிவித்தது.

“நாங்கள் தேர்தல் பத்திரங்களை எதிர்க்கவில்லை… ஆனால் முழு வெளிப்பாடு மற்றும் வெளிப்படைத்தன்மையை விரும்புகிறோம். பெயர் வெளியிடுவதை நாங்கள் எதிர்க்கிறோம்” என்று தேர்தல் குழு சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ராகேஷ் திவேதி உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்தார். உச்ச நீதிமன்றத்தில் தேர்தல் பத்திரங்கள் செல்லுபடியாகும் தன்மையை எதிர்த்து தொடரப்பட்ட மனுக்கள் மீதான விசாரணையின் போது தேர்தல் குழுவின் சமர்ப்பிப்புகள் வந்தன.

          தேர்தல் பத்திரங்கள் வழங்கும் நிறுவனங்களின் பெயரை வெளியிட்டால் பிற கட்சிகள் அவர்களுக்கு நெருக்கடி தருவதற்கும், நாங்கள் ஆட்சிக்கு வந்தால் உங்களைப் பழிவாங்குவோம் என்று மிரட்டுவதற்கும் வழிவகை செய்யும்.

          கட்சிகள் நேர்மையான வழியில் நிதி திரட்ட தேர்தல் பத்திரங்கள் வழிவகை செய்கிறது.

          கட்சிகளின் நிதி வரவு செலவு நியாமான முறையில் இருக்கிறதா என்பத தேர்தல் பத்திரங்கள் உறுதிசெய்கின்றன.

          கருப்புப் பணம் வெள்ளையாக மாறுவதை தடுக்கிறது.

          குறுக்கு வழியில் கட்சிக்குப் பணம் சேர்ப்பவர்களுக்கு இம்முறை தொந்தரவாக இருக்கலாம். ஆனால் தேர்தல் பத்திரங்கள் மூலம் கட்சிகள் பணம் திரட்டுவது ஒரு நல்ல நடைமுறை,