Home Blog Page 275

தீபாவளி: திருப்பரங்குன்றம் உள்பட கோயில்களில் பக்தர்கள் கூட்டம்!

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு குடும்பத்தினருடன் கூட்டம் கூட்டமாக திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணியசாமி திருக்கோயிலில் பக்தர்கள் சாமி தரிசனம்.

தமிழ் கடவுள் முருகனின் ஆறுபடை வீடுகளின் முதல் படை வீடான மதுரை திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணியசாமி திருக்கோவில் ஆண்டுதோறும் தைப்பூசம், வைகாசி விசாகம், கார்த்திகை, உள்ளிட்ட முக்கிய திருவிழாக்களில் பக்தர்கள் அதிகளவு வந்து சாமி தரிசனம் செய்வது வழக்கம்.

ஒவ்வொரு மாதமும் பல்வேறு திருவிழாக்கள் நடைபெறும் திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்ரமணிய சுவாமி கோவிலில்., இன்று தீபாவளி திருநாளை முன்னிட்டு திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் ஐந்து முப்பது மணிக்கு எல்லாம் நடை திறக்கப்பட்டு பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர்.

இந்த நிலையில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டும் ஏராளமான பக்தர்கள் தங்களது குடும்பத்தினருடன் சார சாரையாக வந்து முருகனை தரிசித்து செல்கின்றனர். தீபாவளி நாளான இன்று பக்தர்களுக்கு கூட்டம் அலை மோதுவதால் திருப்பரங்குன்றம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதி முழுவதும் திருவிழா கோலம் கொண்டுள்ளது.

தீபாவளி கோயில்களில் பக்தர்கள் வழிபாடு:

தீபாவளி பண்டிகை முன்னிட்டு மதுரை மாவட்டத்தில், உள்ள கோவில்களில் காலை பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். தீபாவளி முன்னிட்டு, அதிகாலை பக்தர்கள் புது ஆடைகளை அணிந்து கொண்டு கோயில்களில் சுவாமி வழிபட்டனர். பின்னர், வீடுகளுக்கு சென்று நண்பர்களுக்கு இனிப்பு வழங்கியும், பட்டாசுகள் வெடித்தும் தீபாவளி பண்டிகை கொண்டாடினர்.

மதுரை மாவட்டத்தில், சோழவந்தான் ஜெனகை மாரியம்மன், திருமங்கலம் மீனாட்சி சுந்தரே திருக்கோவில், மதுரை மீனாட்சி அம்மன் கோவில், தெப்பக்குளம் மாரியம்மன், அண்ணா நகர் சர்வேஸ்வர ஆலயம், மேலமடை சௌபாக்ய விநாயகர், தாசில்தார் சித்தி விநாயகர் ஆலயம், சாத்தமங்கலம் ஆவின் பால விநாயகர் ஆலயம், தெப்பக்குளம் முத்தீஸ்வரர் ஆலயம், கள்ளழகர் திருக்கோவில், திருப்பரங்குன்றம் முருகன் கோயில், உள்ளிட்ட கோயில்களில் பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சுவாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு, கோவில் சார்பில் பிரசாதங்கள் வழங்கப்பட்டன. இதற்கான ஏற்பாடுகளை, கோவில் நிர்வாகிகள் செய்தனர்.

செங்கோட்டை ஞானி ஆவுடையக்கா!

அத்வைத ஞானியாய், பெண் சித்தராய், மூன்று நூற்றாண்டுகளுக்கு முன் வாழ்ந்த செங்கோட்டை ஆவுடையக்காள் – வாழ்வும் வாக்கும் – அவரது வாழ்க்கை, அற்புதங்கள், பாடல்கள், அத்வைத ஞானம், கோலாட்டப் பாட்டு, கங்கையைத் தன் வீட்டில் பொங்க வைத்த மகான் திருவிசநல்லூர் வேங்கடேச ஐயாவாளிடம் இருந்து அவர் பெற்ற உபதேசம், நாம ஜபம், அதை வைத்து அவர் சித்தியானது, திருக்குற்றால மலையில் ஏறிச் சென்று, என்ன ஆனார் என்றே தெரியாமல் மறைந்து போனது என அவரின் வாழ்க்கைத் திருப்பங்கள் – உருக்கும் மொழி நடையில்! #செங்கோட்டை ஆவுடையக்காள் #ஆவுடையக்கா #ஆவிடையம்மாள் #ஆவுடையக்காள் #செங்கோட்டை #திருவிசநல்லூர் #ஸ்ரீதர_வேங்கடேச_ஐயாவாள் #ஐயாவள் #கோலாட்டம் #சித்தர் #சித்தர்பூமி #சித்தர்வாழ்க்கை #ஆன்மிகம் #ஆன்மிகதகவல் #செங்கோட்டை_ஸ்ரீராம் #நொச்சூர்_வேங்கட்ராமன் #ரமணசரணதீர்த்த_ஸ்வாமிகள் #News_Videos #தினசரி_செய்திகள்

WC 2023: இரு ஆட்டங்கள்: தோல்வியடைந்த பாகிஸ்தான், வங்கதேசம்!

world cup cricket 2023 - 2026
#image_title

ஒருநாள் கிரிக்கட் உலகக் கோப்பைப் போட்டி
38ஆம் நாள் – இரண்டு ஆட்டங்கள் – 11.11.2023

முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன்

          இன்று இரண்டு ஆட்டங்கள் நடைபெற்றன. முதல் ஆட்டம் வங்கதேசம், ஆஸ்திரேலிய அணிகளுக்கிடையே புனேயில் பகல்நேர ஆட்டமாக நடைபெற்றது. இரண்டாவது ஆட்டம் இங்கிலாந்து, பாகிஸ்தான் அணிகளுக்கிடையே கொல்கொத்தாவில் பகலிரவு ஆட்டமாக நடைபெற்றது. இரண்டுமே முக்கியத்துவம் இல்லாத ஆட்டங்கள்.

வங்கதேசம் vs ஆஸ்திரேலியா

          வங்கதேச அணியை (306/8, ஹிருதய் 74, ஷண்டோ 45, லிட்டன் தாஸ் 36, தசிட் ஹசன் 36, அப்பாட் 2/61, சாம்பா 2/32) ஆஸ்திரேலிய அணி (44.4 ஓவர்களில் 307/2, மிட்சல் மார்ஷ் 177*, ஸ்மித் 63*, வார்னர் 53) 8 விக்கட்டுகள் வித்தியாசத்தில் வென்றது.

          பூவாதலையா வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பந்துவீசத் தீர்மானித்தது. வங்கதேச அணி வீரர்கள் அனைவரும் பொறுப்புடன் ஆடினர். ஆஸ்திரேலிய ஃபீல்டிங் மிகச் சிறப்பாக இருந்தது. வங்கதேச வீரர்கள் ஷண்டோ (45 ரன்), மகமதுல்லா (32 ரன்), நசும் அகமது (7 ரன்) ஆகிய மூவரையும் ரன் அவுட் செய்தனர். தவ்ஹித் ஹிருதய் 74 ரன்கள் எடுத்தார். 50 ஓவர் முடிவில் வங்கதேச அணி எட்டு விக்கட் இழப்பிற்கு 306 ரன் எடுத்தது.

          இரண்டாவதாக ஆடவந்த ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீரர் ட்ராவிஸ் ஹெட் 10 ரன்களில் மூன்றாவது ஓவரில் ஆட்டமிழந்தார். வார்னர் 23ஆவது ஓவர் வரை விளையாடி 61 பந்துகளில் 53 ரன் எடுத்து ஆட்டமிழந்தார். அதன் பின்னர் மிட்சல் மார்ஷ் 9 சிக்சர், 17 ஃபோர்களுடன் 132 பந்துகளில் 177 ரன் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். அவருடன் ஜோடி சேர்ந்து ஆடிய ஸ்மித் 63 ரன்கள் எடுத்தார். இதனால் 44.4 ஓவர்களில் இரண்டு விக்கட் இழப்பிற்கு 307 ரன் எடுத்து வெற்றி பெற்றது. மிட்சல் மார்ஷ் ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார். ஏழு தொடர் வெற்றிகளுடன் ஆஸ்திரேலியா 14 புள்ளிகள் பெற்று புள்ளிப்பட்டியலில் மூன்றாம் இடம் பிடித்துள்ளது.

இங்கிலாந்து vs பாகிஸ்தான்

          இங்கிலாந்து அணி (337/9, பென் ஸ்டோக்ஸ் 84, ஜோ ரூட் 60, ஜானி பெயர்ஸ்டோ 59, ரவுஃப் 3/64, அஃப்ரிதி 2/72, வாசிம் 2/74) பாகிஸ்தான் அணியை (43.3 ஓவர்களில் 244, ஆகா சல்மான் 51, பாபர் ஆசம் 38, ரிஸ்வான் 35, ஹரிஸ் ரவுஃப் 35, ஷகீல் 21, டேவிட் வில்லி 3/56, அதில் ரஷீத் 2/55, அட்கின்சன் 2/45, மொயின் அலி 2/60) 93 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.

          பூவாதலையா வென்ற முதலில் மட்டையாடத் தீர்மானித்தது. இங்கிலாந்து அணியின் முதல் 6 பேட்டர்கள் 47.2 ஓவர்கள் வரை ஆடினர். டேவிட் மலான் (31 ரன்), பெயர்ஸ்டோ (59 ரன்), ரூட் (60 ரன்), ஸ்டோக்ஸ் (84 ரன்), பட்லர் (27 ரன்), ப்ரூக் (30 ரன்) ஆகியோ சிறப்பாக ஆடி 47.2 ஓவரில் 308 ரன்கள் சேர்த்தனர். எனவே 50 ஓவர்களில் இங்கிலாந்து அணி 9 விக்கட் இழப்பிற்கு 37 ரன் எடுத்தது.

          பின்னர் ஆடவந்த பாகிஸ்தான் அணிக்கு இரண்டாவது பந்திலேயே அதிர்ச்சி காத்திருந்தது. அப்துல்லா ஷபீக் வில்லியின் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். ஃபகர் ஜமான் மூன்றாவது ஓவரில் ஆட்டமிழந்தார். பாபர் ஆசம் மற்றும் ரிஸ்வான் ஜோடி இணைந்து சிறிது ரன் சேர்த்தனர். ஆனால் பாபர் ஆசம் (38 ரன்) 14ஆவது ஓவரிலும் ரிஸ்வான் (36 ரன்) 23ஆவது ஓவரிலும் ஆட்டமிழந்தனர். அதன் பின்னர் வந்த வீரர்களில் ஆகா சல்மான் (51 ரன்) சுறுசுறுப்பாக ஆடினார். கடைசி மூன்று வீரர்கள் வீசப்பட்ட அத்தனை பந்துகளையும் அடித்தனர். அதனால் கடைசி விக்கட்டுக்கு 53 ரன் பார்ட்னர்ஷிப் கூட வந்தது. இறுதியில் பாகிஸ்தான் அணி 43.3 ஓவர்களில் அனைத்து விக்கட்டுகளையும் இழந்து 244 ரன் எடுத்தது, இதனால் இங்கிலாந்து அணி 93 ரன் கள் வித்தியாசத்தில் வென்றது.

          இங்கிலாந்து, பாகிஸ்தான் இரண்டு அணிகளும் இந்த ஆட்டத்தின் முடிவால் எந்தவிதப் பயனும் பெறப்போவதில்லை. இங்கிலாந்து அணி 337 ரன் அடித்தபோதே பாகிஸ்தான் அணி அரையிறுதிக்குத் தகுதி பெறும் வாய்ப்பை இழந்துவிட்டது. நாளை, லீக் ஆட்டங்களின் கடைசி ஆட்டத்தில் இந்தியாவும் நெதர்லாந்து அணியும் விளையாடுகின்றன. இதுவும் முக்கியத்துவம் இல்லாத ஆட்டம். இந்தியா ஒன்பது ஆட்டங்களிலும் வெற்றி பெறுகிறதா எனப் பார்க்கவேண்டும். இந்திய அணி இதுவரை ஆடாத வீரர்களை விளையாட வைத்துப் பார்க்கலாம்.

          முதல் அரையிறுதி ஆட்டம் இந்திய நியூசிலாந்து அணிகளுக்கிடையே மும்பை வான்கடே மைதானத்தில் நவம்பர் 15ல் நடைபெறும். இரண்டாவது அரையிறுதி ஆட்டம் ஆஸ்திரேலியாவிற்கும் தென் ஆப்பிரிக்க அணிக்கும் இடையே கொல்கொத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெறும்.

நம்ம நாட்டு சுற்றுலா: ஹாதிகும்பா கல்வெட்டும் தமிழகமும்!

hathighumba inscriptions - 2026
#image_title

6. ஹாதிகும்பா கல்வெட்டும் தமிழகமும்

முனைவர் கு.வை.பாலசுப்பிரமணியன்

          ஹாதிகும்பா கல்வெட்டு பெரும்பாலும் காரவேல மாமன்னர் பட்டத்துக்கு வந்ததிலிருந்து அவரது பேரரசைப் பெருக்கிய வெற்றிகளைப் பட்டியலிடுகிறது. அவர் சமகாலத்தில் மேற்கத்திய இந்தியாவில் பெரிதும் வலிமை பெற்றிருந்த சாதவாகன அரசன் சதகர்ணியையும் பொருட்படுத்தாமல் கலிங்கத்தின் எல்லையிலிருந்த அவர்களுடைய நட்பரசர்கள்மீது படையெடுத்ததாகச் சொல்லும் குறிப்பிலிருந்து இந்தக் கல்வெட்டின் வெற்றிப் பட்டியல் தொடங்குகிறது.

          சதகர்ணி என்ற பெயரில் பல மன்னர்கள் இருந்தாலும் காரவேலரின் காலத்தோடு ஒட்டி வருவது ஸ்ரீ சதகர்ணி அல்லது நாயநீகாவின் கணவரான முதலாம் சதகர்ணி என்று அறிஞர்கள் கணிக்கிறார்கள். மற்ற சதகர்ணிகள் தம் பெயருக்கு முன்னால் தம் தாயாரின் பெயரையும் சேர்த்துக் கொண்டு ஸ்ரீ சதகர்ணியிடமிருந்து தம்மை வேறுபடுத்திக் கொள்வதைச் சுட்டிக்காட்டுகிறார்கள். இந்தக் கணிப்பு காரவேலரின் காலத்தைக் கி.மு. இரண்டாம் நூற்றாண்டின் நடுப்பகுதிக்குக் கொண்டு செல்கிறது. கௌதமி புத்ர சதகர்ணி, வசிஷ்டபுத்ர புலுமாயி போன்ற சதகர்ணிகளைப் பற்றி பள்ளியில் படித்தது எனக்கு நினைவுக்கு வருகிறது.

தமிழ்நாட்டு வரலாறு தொடர்பான குறிப்புகள்

          இந்தக் கல்வெட்டில் தமிழ் மூவேந்தர்கள் கூட்டணி பற்றியும், பாண்டியர்களின் பெருஞ்செல்வத்தைப் பற்றியும் குறிப்புகள் உள்ளன. தமிழக வரலாற்றிலும் சிலப்பதிகாரத்திலும் சேரன் செங்குட்டுவனின் நட்பரசராகக் குறிப்பிடப்படும் நூற்றுவர் கன்னர் (சதம்-நூறு, கர்ணி-கன்னர்) என்ற சாதவாகன அரசன் முதலாம் சதகர்ணியைத் தோற்கடித்ததாகச் சொல்லும் குறிப்பும், இவர் சமகாலத்து வடபுலத்து அரசர்கள் பற்றிய குறிப்புகளும், தமிழக வரலாற்றின் கால வரிசையைக் கணக்கிடத் துணை புரிகிறது.

தலைமேல் குரங்கு

          நான் உதயகிரி மலையில் உள்ள குகைகளைப் பார்த்துவிட்டு கீழே இறங்கி வந்து, கந்தகிரி மலையி ஏறும்போது ஒரு குரங்கு என் தலையில் ஏறி அமர்ந்து விட்டது.

உதயகிரி, கந்தகிரி மலைகளையும் அதில் உள்ள குகைகளையும் பார்க்க சுமார் நான்கு மணி நேரம் ஆகலாம். பெரும்பாலும் இந்திய சுற்றுலாப் பயணிகள் அங்கு வந்து புகைப்படம் எடுத்த வண்ணம் இருக்கிறார்கள். ஒரு கைடு இல்லாமல் அந்த குகைகளின் வரலாற்றுச் சிறப்பினை நாம் புரிந்து கொள்ள முடியாது.

அஜந்தா எல்லோரா போல அருமையான குடவரை சிற்பங்கள் கொண்டவை இந்த இரண்டு மலைகளும்.

          கந்தகிரி மலை ஏறும் இடத்தில் நிறைய கடலை, பட்டாணி விற்பவர்கள் இருக்கிறார்கள். அவர்களிடம் கடலை வாங்கி அங்கே கூட்டம் கூட்டமாக இருக்கின்ற குரங்குகளுக்கு சுற்றுலாப் பயணிகள் கொடுக்கின்றனர். சிலர், குறிப்பாகப் பெண்கள் குரங்குகளுக்குப் பயந்து கடலைப் பொட்டலத்தை தங்களது கைப்பையில் வைக்கின்றனர். அதனால் குரங்குகள் கைப்பையைப் பிடுங்குகின்றன. நானும் ஒரு கைப்பை வைத்திருந்தேன். குரங்கு அதனைப் பிடுங்கப் பார்த்தது. பின்னர் நான் அதனை விட புத்திசாலி என்பதை உணர்ந்து கொண்டு, கீழே இறங்கி ஓடிவிட்டது.

எல்லோரா போல அருமையான குடவரை சிற்பங்கள் கொண்டவை இந்த இரண்டு மலைகளும்.

          கந்தகிரி மலை ஏறும் இடத்தில் நிறைய கடலை, பட்டாணி விற்பவர்கள் இருக்கிறார்கள். அவர்களிடம் கடலை வாங்கி அங்கே கூட்டம் கூட்டமாக இருக்கின்ற குரங்குகளுக்கு சுற்றுலாப் பயணிகள் கொடுக்கின்றனர். சிலர், குறிப்பாகப் பெண்கள் குரங்குகளுக்குப் பயந்து கடலைப் பொட்டலத்தை தங்களது கைப்பையில் வைக்கின்றனர். அதனால் குரங்குகள் கைப்பையைப் பிடுங்குகின்றன. நானும் ஒரு கைப்பை வைத்திருந்தேன். குரங்கு அதனைப் பிடுங்கப் பார்த்தது. பின்னர் நான் அதனை விட புத்திசாலி என்பதை உணர்ந்து கொண்டு, கீழே இறங்கி ஓடிவிட்டது.

WC 2023: ஆப்கன் கொடுத்த நெருக்கடி; வென்ற தென்னாப்பிரிக்க அணி!

world cup cricket 2023 - 2026
#image_title

ஒருநாள் கிரிக்கட் உலகக் கோப்பைப் போட்டி
37ஆம் நாள் – ஆப்கானிஸ்தான் vs தென் ஆப்பிரிக்கா
அகமதாபாத் – 10.11.2023

முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன்

          ஆப்கானிஸ்தான் அணி (244, அஸ்மத்துல்லா ஒமர்ஜாய் 97*, ரஹமத் ஷா 26, நூர் அகமது 26, ரஹமத்துல்லா குர்பாஸ் 25, கோயட்சி 4/44, லுங்கி இங்டி 2/69, கேசவ் மகராஜ் 2/25) தெ ஆப்பிரிக்க அணி (47.3 ஓவர்களில் 247/5, ரஸ்ஸி வான் டெர் டுஸ்ஸன் 76*, அண்டிலே பெஹ்லுவாயோ 39*, குவிண்டன் டி காக் 41, மர்கரம் 25, டேவிட் மில்லர் 24, பவுமா 23, ரஷீத் கான் 2/37, நபி 2/35) 5 விக்கட்டுகள் வித்தியாசத்தில் வென்றது.

          பூவாதலையா வென்ற ஆப்கானிஸ்தான் அணி முதலில் மட்டையாடத் தீர்மானித்தது. முதல் 10 ஓவர்களில் இரண்டு விக்கட் இழப்பிற்கு 41 ரன் எடுத்தது. தொடக்க வீரர் ரஹமத்துல்லா குர்பாஸ் 25 ரன் எடுத்து ஒன்பதாவது ஓவரில் ஆட்டமிழந்தார்.. மற்றொரு தொடக்கவீரர் இப்ராஹிம் சத்ரன் 15 ரன் எடுத்து 10ஆவது ஓவரில் ஆட்டமிழந்தார். அடுத்த ஓவரில் மேலும் ஒரு விக்கட் விழுந்தது. அச்சமயத்தில் அஸ்மத்துல்லா ஒமர்ஜாய் ஆடவந்தார். அவர் இறுதி வரை ஆடி 97 ரன் அடித்தார். அவரால் சதம் அடிக்க முடியவில்லை. பிற தென் ஆப்பிரிக்க அணி வீரர்கள் அவருக்கு ஜோடியாக அதிக நேரம் நின்று ஆடாததால், அந்த அணி 50 ஓவர் முடிவில் அனைத்து விக்கட்டுகளையும் இழந்து 244 ரன் எடுத்தது. ஜெரால்ட் கோயட்சி 44 ரன் கொடுத்து 4 விக்கட் வீழ்த்தினார்.

குறைவாக ரன் எடுத்ததால் ஆப்கானிஸ்தான் நிகர ரன்ரேட் குறைவாக இருக்கும் என்பதால் இந்த நிலையிலேயே, இந்த ஆட்டத்தில் வெற்றி பெற்றால் கூட அரையிறுதிக்குச் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.

          எளிமையான இலக்கை அடைய விளையாடிய தென் ஆப்பிரிக்க அணி வழக்கம் போல், இரண்டாவதாக ஆடும்போது, சொதப்பினார்கள். பவுமா (23 ரன்) 11ஆவது ஓவரிலும் டி காக் (43 ரன்) 14ஆவது ஓவரிலும் ஆட்டமிழந்தனர். மர்க்ரம் (25 ரன்) 24ஆவது ஓவரிலும் கிளாசன் (10 ரன்) 28ஆவது ஓஅவரிலும் ஆட்டமிழந்தனர். ரஸ்ஸி டுஸ்ஸன்   (ஆட்டமிழக்காமல் 76 ரன்) உடன் இணைந்து முதலில் டேவிட் மில்லர் (24 ரன்) 38ஆவது ஓவர் வரை ஆடினார்.

பின்னர் வந்த அண்டிலே பெஹ்லுவாயோ 37 பந்துகளில் 39 ரன் அடித்து, குறிப்பாக கடைசி மூன்று பந்துகளை 6, 4, 6 என அடித்து தென் ஆப்பிரிக்க அணிக்கு வெற்றியைத் தேடித்தந்தார். ஆட்டநாயகனாக ரஸ்ஸி வான் டெர் டுஸ்ஸன் அறிவிக்கப்பட்டார்.

நாளைய ஆட்டங்கள்

          நாளை இரண்டு ஆட்டங்கள் நடைபெற உள்ளன. முதல் ஆட்டம் புனேயில் ஆஸ்திரேலிய அணிக்கும் வங்கதேச அணிக்கும் இடையே பகல் நேர ஆட்டமாக நடைபெறவுள்ளது. இரண்டாவது ஆட்டம் இங்கிலாந்து, பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே கொல்கொத்தாவில் நடைபெறவுள்ளது.

பாகிஸ்தான் அரையிறுதிக்குத் தகுதி பெறுமா?

          தற்போது நியூசிலாந்து அணி 10 புள்ளிகள், 0.743 ரன்ரேட்டுடன் நாலாவது இடத்தில் உள்ளது. பாகிஸ்தான் 8 புள்ளிகள், 0.036 ரன்ரேட்டுடன் ஐந்தாவது இடத்தில் உள்ளது. நாளை நடைபெறுகிற ஆட்டத்தில் பாகிஸ்தான் அணி இங்கிலாந்து அணியை வென்றால் 10 புள்ளிகளைப் பெறும். ஆனால் நியூசிலாந்து அணியை விட அதிக ரன்ரேட் பெற வேண்டும். 

பாகிஸ்தான் அணி 0.75 என்ற ரன்ரேட்டைப் பெற, அந்த அணி முதலில் பேட் செய்தால் 288 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணியை வெல்ல வேண்டும். ஒருவேளை இங்கிலாந்து அணி முதலில் பேட் செய்தால் பாகிஸ்தான் அணி 16 பந்துகளில் வெற்றி பெற வேண்டும். இரண்டும் நடக்க வாய்ப்பே இல்லை. எனவே நியூசிலாந்து அணி இந்திய அணியை அரையிறுதியில் மும்பையில் நவம்பர் 15ஆம் தேதி சந்திக்கும்.

WC 2023: நான்காம் இடத்துக்கான போட்டியில் நியூஸி. தேறுமா?

world cup cricket 2023 - 2026
#image_title

ஒருநாள் கிரிக்கட் உலகக் கோப்பைப் போட்டி
36ஆம் நாள் – இலங்கை vs நியூசிலாந்து
பெங்களூரு – 08.11.2023

முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன்

          இலங்கை அணியை (46.4 ஓவர்களில் 171, குசல் பெரேரா 51, மஹீஷ் தீக்ஷணா 38, போல்ட் 3/37, ஃபெர்கூசன் 2/32, சாண்ட்னர் 2/22, ரவீந்திரா 2/21) நியூசிலாந்து அணி (23.2 ஓவர்களில் 172/5, டேவன் கான்வே 45, ரச்சின் ரவீந்திரா 42, டேரில் மிட்சல் 43, கிளன் பிலிப்ஸ் 17*, ஆஞ்சலோ மேத்யூஸ் 2/29) 5 விக்கட்டுகள் வித்தியாசத்தில் வென்றது.

          பூவாதலையா வென்ற நியூசிலாந்து முதலில் பந்துவீசத் தீர்மானித்தது. ஆகவே முதலில் மட்டையாட வந்த இலங்கை அணி முதல் 10 ஓவர்களில் 5 விக்கட்டுகளை இழந்து 74 ரன்கள் அடித்தது. அதில் குசல் பெரேரா மட்டும் 51 ரன் அடித்தார். பதுன் நிசாங்கா (2 ரன்), குசல் மெண்டிஸ் (6 ரன்), சமரவிக்ரமா (1 ரன்), சரித் அசலங்கா (8 ரன்), குசல் பெரேரா ஆகியோர் முதல் பத்து ஓவருக்குள் ஆட்டமிழந்தனர். ஆஞ்சலோ மேத்யூஸ் (16 ரன்) மற்றும் தனஞ்சயா டி சில்வா (19 ரன்) இருவரும் இலங்கை அணியை ஒரு நல்ல ஸ்கோருக்கு உயர்த்த முயன்றனர். ஆனால் வெற்றிபெற முடியவில்லை. மஹீஷ் தீக்ஷணா மட்டும் 91 பந்துகள் விளையாடி 38 ரன்கள் அடித்தார். ரன் அதிகம் சேர்க்காமல் இலங்கை அணி 46.4 ஓவர் வரை ஆட்டத்தை இழுத்தது. இறுதியில் 171 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது.

          172 ரன் என்ற இலக்கோடு ஆடவந்த நியூசிலாந்து அணி தொடக்கம் முதலே அதிரடியாக ஆடினர். தொடக்க வீரர்கள் டேவன் கான்வே (45 ரன்), ரச்சின் ரவீந்திரா (42 ரன்) அடித்தனர். அதன் பின்னர் கேன் வில்லியம்சன் 14 ரன் களில் மேத்யூச் பந்தில் கிளீன் போல்டானார். மார்க் சாப்மேன் 7 ரன்னில் ‘ரன் அவுட்’ ஆனார். 15 ஓவர் முடிவில் இலங்கை அணி 5 விக்கட் இழப்பிற்கு 95 ரன் எடுத்திருந்தது. ஆனால் நியூசிலாந்து அணியோ இரண்டு விக்கட் இழப்பிற்கு 103 ரன் எடுத்திருந்தது. இறுதியில் விக்கட்டுகள் சில விழுந்தபோதும் நியூசிலாந்து அணி 23.2 ஓவர்களில் 172/5 எடுத்து இலங்கை அணியை 5 விக்கட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. நியூசிலாந்து அணியில் 3 விக்கட்டுகள் எடுத்த ட்ரண்ட் போல்ட் ஆட்டநாயகனாக அரிவிக்கப்பட்டார்.

          இன்றைய வெற்றியோடு நியூசிலாந்து அணி 10 புள்ளிகள் மற்றும் 0.743 என்ற ரன்ரேட்டுடன் நாலாவது இடத்தில் உள்ளது. நாளை அகமதாபாத்தில் தென் ஆப்பிரிக்க ஆப்கானிஸ்தான் அணிகள் விளையாட உள்ளன. வெற்றி வாய்ப்பு தென் ஆப்பிரிக்க அணிக்கு அதிகம். சனிக்கிழமை இங்கிலாந்தும் பாகிஸ்தானும் மோதுகின்றன. இந்த இரண்டு ஆட்டங்களின் முடிவுகளைப் பொறுத்து நியூசிலாந்து அரையிறுதிக்குச் செல்லுமா இல்லையா என முடிவாகும்.  

தர வரிசையில் சீனாவை பின்னுக்குத் தள்ளிய இந்திய பல்கலைக் கழகங்கள்!

school exams - 2026

இந்தியாவின் உயர்கல்வி உயர்ந்துள்ளது. தரவரிசையில் உள்ள பல்கலைக்கழகங்களின் எண்ணிக்கையில் சீனாவை முந்தியுள்ளது.

மும்பை: QS- Quacquarelli Symonds – உலகளாவிய உயர்கல்வி ஆய்வாளர்கள், இன்று 2024ம் வருட உலக பல்கலைக்கழக தரவரிசையில், ஆசியா பட்டியலை வெளியிட்டுள்ளனர். இது 25 நாடுகளைச் சேர்ந்த 856 நிறுவனங்களைக் கொண்ட சமீபத்திய பதிப்பாகும்.

உலகளாவிய அங்கீகாரம், ஆராய்ச்சித் திறன், கற்பித்தல் வளங்கள் மற்றும் சர்வதேச மயமாக்கல் ஆகியவற்றின் அடிப்படையில் நிறுவனங்களை மதிப்பீடு செய்து இந்தத் தர வரிசை வெளியிடப் பட்டுள்ளது. இந்த ஆண்டு தரவரிசையில் 25 நாடுகள் மற்றும் பிரதேசங்களைச் சேர்ந்த 856 நிறுவனங்களை பட்டியலிட்டுள்ளது. முதல் முறையாக 148 இந்திய கல்வி நிறுவனங்கள் தரவரிசையில் இடம்பெற்றுள்ளது.

முடிவுகள்படி, பெக்கிங் பல்கலைக்கழகம் தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக பிராந்தியத்தின் சிறந்த பல்கலைக்கழகமாக முடிசூட்டப்பட்டது. ஹாங்காங் பல்கலைக்கழகம் இரண்டாவது இடத்தையும் சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகம் (NUS) மூன்றாவது இடத்தையும் பிடித்துள்ளது. 148 சிறப்புப் பல்கலைக் கழகங்களுடன், கடந்த ஆண்டை விட 37 அதிகமாகப் பிரதிநிதித்துவப்படுத்தப்படும் உயர்கல்வி அமைப்பாக இந்தியா உள்ளது. அதைத் தொடர்ந்து சீனா 133 மற்றும் ஜப்பான் 96 நிறுவனங்களுடன் இடம்பெற்றுள்ளன. மியான்மர், கம்போடியா மற்றும் நேபாளம் முதல் முறையாக பட்டியலில் இடம்பெற்றுள்ளன.

ஆண்டுக்கு ஆண்டு செயல்திறனில் ஒரு சம நோக்குடனான போக்குடன் பகுப்பாய்வு மேற்கொள்ளப்படுகிறது. இந்த முறை நிறுவனங்களில், பாதிக்கும் மேற்பட்டவை சரிவைக் கண்டுள்ளன. இவற்றில், 21 வளர்ச்சியடைந்தவை , 15 மாற்றமில்லாதவை, 37 புதியவை. உண்மையில், புதிய நுழைவுகளில் இந்தியா சிங்கத்தின் நடையில் பாய்ச்சல் பெற்றுள்ளது. சீனா இந்தப் பட்டியலில் ஏழு புதிய நிறுவனங்களை உள்ளடக்கியிருக்கிறது.

“QS தரவரிசையில் இந்தியப் பல்கலைக்கழகங்களின் அதிகரித்துவரும் தேர்வு நிலை, இந்தியாவின் உயர்கல்விப் பரப்பின் மாறும் வளர்ச்சியைப் பிரதிபலிக்கிறது” என்கிறார் பென் சோட்டர்.

பென் சோட்டர், QS இன் மூத்த துணைத் தலைவர். “இந்திய நிறுவனங்களின் எண்ணிக்கையில் குறிப்பிடத்தக்க வளர்ச்சி மற்றும் அவற்றின் ஆராய்ச்சி பங்களிப்புகள், இந்தப் பிராந்தியத்தின் கல்வித் துறையில் குறிப்பிடத்தக்க வளர்ச்சியைக் குறிக்கும் அதே வேளையில், உலகளாவிய கல்விச் சமூகத்தில் இந்தியா தனது நிலையை மேலும் உயர்த்துவதற்கான பாதையை இது விளக்குகிறது.” என்கிறார்.

இந்திய தொழில்நுட்பக் கழகம் பாம்பே (ஐஐடி பாம்பே) தேசத்தின் முதன்மையான நிறுவனமாக அதன் அந்தஸ்தைத் தக்க வைத்துக் கொண்டுள்ளது. குறிப்பிடத்தக்க வகையில், தேசிய அளவில் முதல் மூன்று தரவரிசைகள், தரவரிசையின் முந்தைய பட்டியலோடு ஒத்துப்போகின்றன.

கல்வி நற்பெயர் விவகாரம் (11.8 vs 19) மற்றும் வேலைவாய்ப்பளிப்பவர்க்கான நற்பெயரில் (9.6 vs 18) மண்டல சராசரிக்குக் கீழே இந்தியா வீழ்ச்சியடைந்தாலும், உயர்கல்வி அமைப்புகளில் ஆசிரிய கல்வித் தரததின் அடிப்படையில் (36.0 vs 14.8) இரண்டாவது சிறந்த பிராந்திய முடிவுகளைக் கொண்டிருக்கிறது. 10 க்கும் மேற்பட்ட இந்தியப் பல்கலைக்கழகங்கள் தரவரிசையில் உள்ளன.

PhD வழிகாட்டி (42.3 vs 22)க்கான சிறந்த சராசரி மதிப்பெண்ணை இந்தியா அடைகிறது, இது வலுவான ஆராய்ச்சி வெளியீடு மற்றும் உயர் தகுதி வாய்ந்த ஆசிரிய அமைப்பைக் குறிக்கிறது. இந்த செயல்திறன் இந்திய நிறுவனங்கள் தங்கள் உறுதியான கல்வி மற்றும் ஆராய்ச்சி திறன்களை தங்கள் உலகளாவிய நிலையை மேலும் மேம்படுத்துவதற்கான திறனைக் காட்டுகிறது.

சர்வதேச ஆராய்ச்சி நெட்வொர்க் குறிகாட்டியில் இந்தியாவின் செயல்திறன், 15.4 மதிப்பெண்களுடன், பிராந்திய சராசரியான 18.8 ஐ விட சற்று குறைவாக உள்ளது. அனைத்து சர்வதேசமயமாக்கல் குறிகாட்டிகளிலும் இது ஒரு பரந்த வடிவத்தை குறிக்கிறது, அங்கு இந்தியா இரண்டு லட்சிய இலக்குகளை சமநிலைப்படுத்த முயற்சிக்கிறது: அது, அதன் பரந்த உள்நாட்டு மாணவர்களின் கல்வித் தேவைகளைப் பூர்த்தி செய்தல் மற்றும் சர்வதேச மாணவர்களை ஈர்த்தல் ஆகியவையே. இரண்டு களங்களிலும் ஒரே நேரத்தில் நிபுணத்துவத்தை அடைவது குறிப்பிடத்தக்க சவால் தான்! குறிப்பாக உலகளாவிய போக்குகளுடன் பொருந்தக்கூடிய வேகத்தில் இந்த நிலையை இந்தியா அடைந்துள்ளது.

இந்தியாவில் கல்வி முடித்து வெளிச்செல்லும் மாணவர்களின் எண்ணிக்கை ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லை எட்டியுள்ளது. 15 ஆண்டுகளில் முதல்முறையாக சீனாவைத் தாண்டியது. அமெரிக்காவில் கல்வியைத் தொடரும் மாணவர்கள் குறிப்பிடத்தக்க அளவில் அதிகரித்துள்ளனர். அதே நேரத்தில், இந்தியா சர்வதேச மாணவர்களை ஈர்க்கும் வகையில் செயல்படுகிறது.

அண்ணா பல்கலைக்கழகம் ஆராய்ச்சி உற்பத்தித்திறனில் பிராந்திய ரீதியில் முதன்மையான இடத்தைப் பெற்றுள்ளது, ஒரு ஆசிரியர் குறிகாட்டிக்கான தாள்களுக்கான நம்பர் ஒன் – இடத்தைப் பெற்றுள்ளது, இது அதன் ஆசிரியர்களின் அறிவார்ந்த வெளியீட்டிற்கு ஒரு சான்றாகும்.

ஆராய்ச்சிக் கட்டுரைகள் அளவில், ஆசியாவின் 10 சிறந்த பல்கலைக்கழகங்களில் ஏழு இந்தியப் பல்கலைக்கழகங்கள் உள்ளன. இதில் பிராந்தியத்தின் மிகவும் பயனுள்ள ஆராய்ச்சி நிறுவனங்களான அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் மேற்கு வங்கத்தில் உள்ள மௌலானா அபுல் கலாம் ஆசாத் தொழில்நுட்ப பல்கலைக்கழகம் ஆகியவை அடங்கும். இந்த அளவிலான ஆராய்ச்சியானது சிறந்த ஆசிரிய நிபுணத்துவத்தால் ஆதரிக்கப்படுகிறது. QS’s Staff with PhD வழிகாட்டி, முதல் 10 பல்கலைக்கழகங்களில் ஒன்பது இந்தியர்கள், இந்திய அறிவியல் கழகம் ஆசியாவின் முதல் இடத்தைப் பிடித்துள்ளது.

WC 2023: நெதர்லாந்தை வீழ்த்தி இங்கிலாந்து நம்பிக்கை!

world cup cricket 2023 - 2026
#image_title

ஒருநாள் கிரிக்கட் உலகக் கோப்பைப் போட்டி
35ஆம் நாள் – இங்கிலாந்து vs நெதர்லாந்து
புனே – 08.11.2023

முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன்

          இங்கிலாந்து அணி (339/9, பென் ஸ்டோக்ஸ் 108, டேவிட் மலான் 87, கிரிஸ் வோக்ஸ் 51,டி லீட் 3/74, வான் பீக் 2/88, ஆர்யன் தத் 2/67) நெதர்லாந்து அணியை (37.2 ஓவர்களில் 179, தேஜா நிடமனுரு 41*, ஸ்காட் எட்வர்ட்ஸ் 38, வெஸ்லி பரேசி 37, எங்கல்பிரக்ட் 33, மொயின் அலி 3/42, அடில் ரஷீத் 3/54, டேவிட் வில்லி 2/19 ) 160 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.

          பூவாதலையா வென்ற இங்கிலாந்து அணி முதலில் மட்டையாடத் தீர்மானித்தது. பென் ஸ்டோக்ஸின் அதிரடியான ஆட்டத்தில் கிடைத்த முதல் உலகக் கோப்பை சதம் இங்கிலாந்தை சரிவிலிருந்து மீட்டது, இறுதியில் அவர்கள் சவாலான ஸ்கோரான 339/9ஐப் பதிவு செய்தனர். சாம்பியன்ஸ் டிராபிக்குத் தகுதி பெறுவதற்காக ஆடிய இந்த ஆட்டத்தில் ஸ்டோக்ஸ் மற்றும் கிறிஸ் வோக்ஸ் இடையே ஒரு நல்ல பார்ட்னர்ஷிப் அமைந்தது.

இங்கிலாந்து 6 விக்கெட்டுக்கு 192 ரன்களுக்கு சரிந்தபோது ஒரு நல்ல வாய்ப்பை வீணடித்தது போல் தோன்றியது. முதலில், டேவிட் மலான் 74 பந்தில் 87 ரன்களுடன் சரியான தளம் அமைத்தார். இங்கிலாந்து 21வது ஓவரில் 1 விக்கெட் இழப்புக்கு 133 ரன்களை எட்டியது.

ஆனால் லோகன் வான் பீக்கை ரிவர்ஸ்-ராம்ப் செய்ய முயன்ற ஜோ ரூட் (28 ரன்), அவரைத் தொடர்ந்து ஹாரி ப்ரூக் (11 ரன்), ஜாஸ் பட்லர் (5 ரன்), மொயின் அலி (4 ரன்) ஆகியோர் ஆட்டமிழந்த பிறகு இங்கிலாந்து அணி 6/192 என்ற ஸ்கோருக்கு வந்தது. ஆர்யன் தத் பந்துவீச்சில் 41 ரன்களில் அவுட் ஆக இருந்தபோதும் ஸ்டோக்ஸ் உறுதியாக நின்றார். 58 பந்துகளில் தனது அரைசதத்தை எட்டினார். 45ஆவது ஓவரில் 3 சிக்ஸ், 1 ஃபோர் அடித்து ரன்ரேட்டை அதிகப்படுத்தினார்.

          கடினமான இலக்கைத் துரத்திய நெதர்லாந்து அணிக்கு மேக்ஸ் ஓ டவுட், காலின் ஆக்கர்மேன் இருவரும் விரைவில் ஆட்டமிழந்தனர். பரேசி (37 ரன்), எங்கல்பிரக்ட் (33 ரன்), எட்வர்ட்ஸ் (38 ரன்), லீட் (10 ரன்), தேஜா நிடமனுரு (41 ரன்) ஆகியோர் மட்டுமே நெதர்லாந்து அணியில் நிலைத்து ஆடினர்.

பிற வீரர்கள் ஒற்றை இலக்க ரன்னில் ஆட்டமிழந்தனர். எனவே 37.2 ஓவர்களில் 179 ரன்னுக்கு நெதர்லாந்து அணி ஆல் அவுட் ஆனது.

          இங்கிலாந்து அணி 160 ரன் கள் வித்தியாசத்தில் தனது இரண்டாவது வெற்றியைப் பதிவுசெய்தது. சாம்பியன் ட்ராபிக்கு இங்கிலாந்து அணி தகுதி பெற அதிகமான வாய்ப்பு உள்ளது. நாளை நியூசிலாந்து இலங்கையை எதிர்த்து பெங்களூருவில் விளையாடுகிறது.

அந்த ஆட்டத்தில் நியூசிலாந்து வெற்றிபெற்றால் அரையிறுதிக்குத் தகுதி பெறும். இன்று பெங்களூருவில் மழை பெய்திருக்கிறது. நாளையும் மழை பெய்ய வாய்ப்புள்ளது. மழையால் ஆட்டம் பாதிக்கப்பட்டால் பாகிஸ்தான் அரையிறுதிக்குச் செல்லும் வாய்ப்பு உள்ளது.

தென்மாவட்ட மக்களுக்கு மகிழ்ச்சியான செய்தி! நெல்லைக்கு வந்தே பாரத் கூடுதல் ரயில்கள்!

new vande bharat train color - 2026

தீபாவளிக்கு தங்கள் சொந்த ஊர்களுக்கு திரும்பும் தென்மாவட்ட மக்களுக்காக தென்னக ரயில்வே கூடுதலாக நான்கு நாட்களுக்கு வந்தே பாரத் ரயில்களை இயக்குகிறது.

ஏற்கனவே தீபாவளி சிறப்பு ரயிலாக சென்னையில் இருந்து காலை ஐந்து நாற்பத்தி ஐந்து மணிக்கு நெல்லைக்கு வந்தே பாரத் ரயில் சேவை ஒரு நாள் மட்டும் விடப்பட்டது. ஆனால் அந்த ரயிலில் உடனே டிக்கெட்டுகள் பதிவாகி காத்திருப்போர் பட்டியல் நானூறைத் தாண்டி விட்டதால் தென்னக ரயில்வே 4 நாட்களுக்கு வந்தே பாரத் ரயில் சேவையை நீட்டித்துள்ளது.

தென்னக ரயில்வே வெளியிட்டுள்ள இன்றைய செய்தி குறிப்பின்படி… வரும் 10,11,13,14 ஆகிய தேதிகளில் காலை 545 மணிக்கு சென்னை எழும்பூரில் இருந்து புறப்படும் சிறப்பு வந்தே பாரத் ரயில் மதியம் 2 மணிக்கு நெல்லையை வந்தடையும்.

இதே நாட்களில் மதியம் 3 மணிக்கு நெல்லையில் இருந்து புறப்படும் வந்தே பாரத் ரயில் இரவு 11க்கு சென்னை எழும்பூரில் சென்றடையும். இந்த ரயில் தாம்பரம் விழுப்புரம் திருச்சி திண்டுக்கல் மதுரை விருதுநகர் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும். இந்த ரயில்களுக்கான முன்பதிவு தொடங்கியுள்ளது.

தீபாவளிக்கு தங்கள் சொந்த ஊர்களுக்கு வரும் தென் மாவட்ட ரயில் பயணிகள் இந்த வாய்ப்பை சிறப்பான முறையில் பயன்படுத்தி கொள்ளலாம்.

ஸ்ரீரங்கம் கோயில் முன் உள்ள ஈவேரா., சிலை, அவதூறு போர்டுகள் அகற்றப்படும்: அண்ணாமலை சூளுரை!

annamalai in srirangam - 2026
#image_title

‘தமிழகத்தில் பாஜக., ஆட்சிக்கு வரும் அந்த நாளில், ஹிந்து சமய அறநிலையத் துறை என்ற அமைச்சகத்தின் கடைசி நாளாக இருக்கும்.” என்று தமிழக பாஜக., தலைவர் அண்ணாமலை ஸ்ரீரங்கத்தில் பேசினார்.

அண்ணாமலை மேற்கொண்டு வரும் என் மண் என் மக்கள் பாத யாத்திரையில் நூறாவது தொகுதியாக நேற்று மாலை, திருச்சி, ஸ்ரீரங்கம் தொகுதிக்கு உட்பட்ட திருவானைக்காவல் நான்கு கால் மண்டபம் பகுதியில் இருந்து, அண்ணாமலை நடைபயணத்தை தொடங்கினார். அப்போது அவர் பேசியதாவது:

தமிழக அரசியல்வாதிகள் சனாதன தர்மத்தை ஒழித்து விடுவோம் என்று பேசுகின்றனர். மொகலாய மன்னர்களால் ஒழித்துக் கட்ட முடியாத சனாதன தர்மத்தை, தி.மு.க., ஒழித்துக்கட்டி விடுமா? மொத்தம் 12 ஆயிரம் வைணவர்கள் உயிரைக் கொடுத்து காப்பாற்றிய சனாதன தர்மத்தை இன்று கொண்டாடிக் கொண்டு இருக்கிறோம்.

மருது சகோதரர்கள், ஆங்கிலேயர்களை முழுமையாக எதிர்க்க வேண்டும் என்று முடிவு கட்டியவுடன், 1801 ஜூன் 16ம் தேதி, ஜம்பு தீவு பிரகடனத்தை, ஸ்ரீரங்கம் கோவில் மதில் சுவரில் ஒட்டி, ஆங்கிலேயர்களுக்கு அறைகூவல் விடுத்தனர். வீரம் மிக்க மண்ணில் மருது சகோதரர்களின் ஜம்புத்தீவு பிரகடனத்தில் கடைசி வரியில், ‘தொண்டு ஊழியம் செய்து, சுக வாழ்வு வாழ விரும்புகிறவன் எவனாவது இருந்தால், அவர்கள் ஒழிக்கப்பட வேண்டும். மீசை வைத்த அனைவருக்கும் வீரம் இருந்தால், இந்த ஈனர்களை அழித்து விட வேண்டும்.

ஈனர்களுக்கு தொண்டு ஊழியம் செய்பவர்களுக்கு மோட்சம் கிடையாது. அயோக்கிய ரத்தம் ஓடாத அனைவரும் ஒன்று சேருங்கள்’ என்று குறிப்பிட்டு இருந்தனர். அதே போல், தீய சக்தியான தி.மு.க.,வை எதிர்த்து நாம் ஒன்று சேர வேண்டிய கட்டாயம் வந்திருக்கிறது. இந்த ஸ்ரீரங்கத்தில் இருந்து உறுதியெடுக்கிறேன்… தமிழகத்தில், பாஜக., ஆட்சிக்கு வரும் போது, ஸ்ரீரங்கம் உள்பட பல்வேறு கோவில்கள் முன், ‘கடவுள் இல்லை’ என்று எழுதி வைத்திருப்பது அப்புறப்படுத்தப்படும்.

பாஜக., ஆட்சிக்கு வந்ததும், ஹிந்து சமய அறநிலையத் துறை என்ற அமைச்சகமும் இருக்காது. இது, என் மண், என் மக்கள் நடைபயணத்தின் பிரகடனம். – இவ்வாறு அவர் பேசினார்.


அண்ணாமலையின் இந்த பேச்சு ஆத்திகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. சமூக வலைதளங்களில் அண்ணாமலையின் பேச்சுக்கு ஆதரவாக பலர் கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். அவற்றில் ஓர் இரண்டு இங்கே….

இதே ஸ்ரீரங்கத்தில் 1801ல் மருது பாண்டியர்கள் ஜம்புதீவு பிரகடனம் செய்தது போன்று இன்று 2023 நாம் சொல்கிறோம் அதே ஸ்ரீரங்கத்தில் இருந்து

1) பாரதிய ஜனதா கட்சி தமிழகத்தில் ஆட்சி அமைக்கும் முதல் நாள் ஹிந்து சமய அறநிலையத்துறை கலைக்கப்படும்.

2) இந்து கோவில்களுக்கு முன்பாக இருக்கும் கடவுள் இல்லை என்கிற பலகை அனைத்தும் அகற்றப்படும்.

3) அயோத்தி ஸ்ரீ ராமஜென்ம பூமி கும்பாபிஷேகம் முன்னிட்டு ஜனவரி 22 இலிருந்து 60 நாட்கள் 60 ரயில்கள் இலவசமாக அயோத்திக்கு ஸ்ரீ ராமபிரானை தரிசிக்க ஏற்பாடு செய்து தரப்படும் பாரதிய ஜனதா கட்சி சார்பாக.

திரு.அண்ணாமலை அவர்கள் #EnMannEnMakkal


ஸ்ரீரங்கத்தில் அண்ணாமலையால் சனாதன எழுச்சி துவங்கியது! எம் பெருமானால் தொடக்கி வைக்கப்பட்டது

கிருஷ்ணன் அர்ஜுனனை இயக்கியது போல், எம்பெருமான் அண்ணாமலை அவர்களை இயக்க ஆரம்பித்து விட்டார் என்றே நினைக்க தோன்றுகிறது

ரெங்க நாதன் ஆசி வழங்க அண்ணாமலை அவர்கள் பொரிந்து தள்ளி விட்டார்

யாரும் சொல்லத்துணியாத வார்த்தை ஆனால் கண்டிப்பாக சொல்ல வேண்டிய வார்த்தை.

இன்று அண்ணாமலையின் பேச்சில் அனல் பறந்தது என்னவோ உண்மை. பெரியார் சிலையை அகற்றுவோம்னு சொன்ன முதல் ஆண்மகன்.. இப்படி ஒருவன் உதிப்பான் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை

பாஜக ஆட்சிக்கு வந்ததும் பெரியார் சிலை அகற்றுவதுடன், ஆழ்வார்கள், நாயன்மார்கள், தமிழ்புலவர்கள், வள்ளுவர் சிலைகள் நிறுவப்படும் என்று ஓங்கி ஒரு அடி அடித்து விடடார். யாரும் எதிர்பார்க்கவில்லை .

ஆன்மிகம் துளிர் விட ஆரம்பித்து விட்டது என்பது உண்மை.. ஆன்மிகவாதிகள் சந்தோஷத்தில் திளைக்கிறார்கள் என்பதும் உண்மை..

ஆனால் வலியால் துடிக்கின்றன கிழட்டு ஓநாய்கள்.. நாளையில் இருந்து பத்திரிகைகள் அலற ஆரம்பிக்கும்.. கிழட்டு தலைவர்கள் அங்கும் இங்கும் பாய்ந்து செல்வார்கள்.. ஒருவன் கோர்ட்க்கு ஓடுவான். ஒருவன் மைக்குக்கு ஓடுவான்

இருந்தாலும் தன ஆண்மை பலத்தை நிரூபிக்க, நாளை காலை தோழில் துண்டை போட்டு கொண்டு தெருவுக்கு வரும் இந்த கிழ சிங்கங்கள்

பொதுவாக இந்த நாட்டில் அனைத்து அரசியல்வாதிகளும் சொல்ல பயப்படும் வார்த்தை பெரியார்.. பெரியார் என்ற பெயருக்கு எந்த சக்தியும் கிடையாது என்பது பல பேருக்கு தான் தெரியும், சில பேருக்கு தெரியாது.. ஏன் முற்றும் தேர்ந்த அரசியாவதிகளுக்கே தெரியாது..

பெரியார் என்ற சொல்லை இன்று சிறுபான்மையினரை சந்தோஷப்படுத்தி ஒட்டு வாங்கும் ஒரு ஆயுதமாக பயன்படுத்த தொடங்கி விட்டனர் இது மறுக்க முடியாத உண்மை

ஆனால் இன்று காலத்தின் சுழற்சி மாறி விட்டது.. அண்ணாமலை ஏறி அடிக்க ஆரம்பித்து விட்டார்..

சுமார் மூன்று ஆண்டுகள் முன்பு தமிழ்நாட்டில் யாரென்றே தெரியாத மனிதர்… இன்று போகும் இடமெல்லாம் கூட்டம் கூட்டமாக மக்கள் வெள்ளம்… ஏன்.

ஏன் என்றால் ஆன்மீக தாகம். ஆன்மிகத்தை சீரழிக்கும் திராவிடத்தின் மீது மக்கள் அவ்வளவு வெறுப்பில் உள்ளனர்.

அண்ணாமலை பக்கம் இளைஞர்கள் செல்வதற்கு காரணமே… அரசியலில் நேர்மை, பொதுவாழ்வில் தூய்மை, சமரசம் இல்லாத கொள்கைபிடிப்பு ஆகியவை தான்.

சனாதானம் என் உயிர் மூச்சு என்று ஒங்கி சொன்னவரும் இவர்தான்.. இன்று பெரியார் சிலையை அகற்றுவேன் என்று சொன்னவரும் இவர்தான்

இதை யாருக்காகவும் அண்ணாமலை கைவிடுவதாகவும் தெரியவில்லை!
இந்த அண்ணாமலையை தேடிவந்திருக்கும் இளைஞர்களும் அவரை கைவிடுவதாகவும் இல்லை.

அதிமுக தலைவர்களையும் , சுலபமாக சமாளித்து 5 வருடங்களை கொள்ளையடித்தே காலத்தை ஓட்டிவிடலாம் என்று நினைத்த கழகத்தினருக்கு,….இடி போல் வந்து இறங்கினார் அண்ணாமலை.

தங்களால் வருங்காலத்தில் ஏதும் ஊழல் செய்ய முடியாமல் போய்விடுமோ என அச்சம் கொள்ளும் சொந்த கட்சிக்காரா்கள் ஒரு பக்கம் !!

ஏற்கனவே செய்த ஊழலை இவர் அம்பலப்படுத்த தயங்க மாட்டார் என்ற பயத்தில் கூட்டணி கட்சிக்காரா்கள் ஒரு பக்கம்!!

இன்னாருபுறம் தமிழகத்தை முழுவதும் சுரண்டமுடியாமல் தவிக்கும் எதிா்கட்சிகள்..!

இந்த மூவருக்கும் இடையில்.. தனிமனித ஒழுக்கத்திலும், பொது வாழ்விலும், ஒரு நேர்மையான திமிரான மனிதனாய் திகழ்வதே சிறப்பு தான்! அந்த திமிரான மனிதரை ஆதரிப்பதும் ஒரு கர்வம் தான்.!

சரியான ரூட்டில் சரியாகத்தான் போய் கொண்டிருக்கிறார் அண்ணாமலை.

அரசியலில் நேர்மையை வைத்துக் கொண்டு வெற்றி பெறுவது கடினம்.. முள்ளை முள்ளால்தான் எடுக்க வேண்டும்.. திமுகவை திமுக பாணியிலேயே தான் கையாள வேண்டும்

மனித வடிவில் திமுக களவாணியை அழிக்க ஒரு IPS அதிகாரியே இறங்கியுள்ளார்- தீயவற்றை அளிக்க கடவுள் மனித வடிவில் வருவார் என்பது இதில் இருந்தே தெரிகிறது

இங்கு தர்மத்தை தாங்க வருபவன் யாரும் தானாக உருவாவதில்லை. அதர்மம் தலைவிரித்தாடும் பொழுது எல்லா இடத்திலும் ஒரு தர்மம் தானே சக்தியாய் உருவாகும்…

ஜெய் ஸ்ரீராம்…🙏🚩

  • கலாவதி கலா

திருவரங்கம் ஆலயம் அவ்வப்போது யாரிடமாவது சிக்கி கிடப்பதும் பின் ஒரு மாவீரன் வந்து அதை மீட்டெடுப்பதும் காலம் காலமாக நடப்பது.

அதன் அர்த்தம் என்னவெனில் அறிதுயிலில் இருக்கும் ரங்கன் தான் இங்கேதான் இருக்கின்றேன் என காட்ட நடத்தும் நாடகம் அது.

திருவரங்கத்தில் எல்லாம் அறிந்தும் அறியாதவர்போல் ரங்கன் துயில்கொண்டிருப்பார், அது அறியாமல் அங்கு தெய்வமில்லை என ஆடுவோர் கடுமையாக ஆடுவார்கள், ரங்கன் அதை அறிந்தும் அறியாதது போல் படுத்திருப்பார்.

உரியநேரம் அவரே ஒருவனை அழைத்து அதனை மீட்டெடுப்பார்.

இது வரலாறு முழுக்க நடந்தது.

அது சமணர் காலம் பவுத்தர் காலம் என நடந்தது, பின் மாலிக்காபூர் காலத்தில் நடந்தது, அவுரங்கசீப் தன் பூரண இஸ்லாமிய இந்துஸ்தான் என எழும்போது ஆற்காடு நவாப் காலத்தில் நடக்க இருந்தது, அப்போதெல்லாம் யாரோ வந்து தடுத்து கொண்டே இருந்தார்கள்.

ஆழ்வார்கள் வந்தார்கள், அடியார்கள் வந்தார்கள், கம்பண்ண உடையார், வீரசிவாஜி, மருதுபாண்டியர், இஸ்லாமியன் என்றாலும் கோவில் பக்கம் மசூதிகளை அனுமதியேன் என சொன்ன மருதநாயகம், நவாபுகளை முடக்கிய பிரிட்டிசார் என யாரோ வந்து இங்கு வரும் ஆபத்துக்களை களைவார்கள்.

காலம் அப்படி யாரையாவது அனுப்பி இந்த ஆலயங்களை மீட்டுகொள்ளும்.

அப்படி இப்போது நம் தலைமுறையில் ஒருவரை அனுப்பியிருக்கின்றது என்பதை அவதானிக்க முடிகின்றது.

கம்பண்ண உடையாரும், வீரசிவாஜியும், திருமலை நாயக்கனும், மருதுபாண்டியரும் சொன்ன அதே முழக்கங்களை இக்காலத்தில் காலம் அண்ணாமலை மூலம் சொல்ல வைத்திருக்கின்றது.

இது வெறும் வார்த்தை அல்ல, இந்து அரசர்கள் காலத்துக்கு பின்னால் எழும் மகா முக்கியமான எழுச்சியின் வடிவம், சுதந்திர இந்தியாவில் ஒரு தலைவன் அப்படி தைரியமாக முழுங்கும் முதல் தருணம்.

பாரதியின் வரிகளில் சொல்வதென்றால் “எழுந்தது பார் யுகபுரட்சி” 🚩

  • பிரம்ம ரிஷியார்