Home Blog Page 28

திமுக., அரசுக்கு மக்கள் மத்தியில் எதிர்ப்பு உள்ளது: ஜி.கே.வாசன்

gk vasan interview at madurai - 2026

மதுரை, திருப்பரங்குன்றம் விவகாரத்தில் உயர்நீதிமன்றம் உத்தரவை மதித்து செயல்பட வேண்டும் அதேபோல் யாருக்கும் சாதகம் இல்லாமல் நடுநிலையாக செயல்பட வேண்டும் -ஜி.கே.வாசன் பேட்டி அளித்தார்.

சென்னையிலிருந்து விமான மூலம் மதுரை வந்த தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜி.கே.வாசன் மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில்,

சட்டமன்றத் தேர்தல் நெருங்குகிறது. எதிர்மறை வாக்கு ஆட்சியாளர்களுக்கு அதிகரித்து வருகிறது. கொடுத்த வாக்கை நிறைவேற்றாத அரசுக்கு எடுத்துக்காட்டாக எல்லா பக்கங்களிலும் பல்வேறு துறையை சார்ந்தவர்கள் நியாயமான கோரிக்கையை முன்வைத்து ஆர்ப்பாட்டம், போராட்டம் நடத்திக் கொண்டிருக்கிறார்கள். அரசு அவர்களுக்கு என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் மழுப்பிக் கொண்டிருக்கிறது.

இதுதான் உண்மை நிலை இன்னும் இருக்கின்ற இரண்டு மாதங்களிலே வாக்குறுதிகளை இந்த அரசு நிறைவேற்ற முடியாது என்று வாக்காளர்களுக்கு நன்று தெரியும். எனவே தேசிய ஜனநாயக கூட்டணியின் வெற்றி வாய்ப்பு மிக பிரகாசமாக இருக்கிறது. மேலும் கட்சிகள் சேரக்கூடிய நல்ல வாய்ப்பு வரும் நாட்களில் உள்ளது என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

விஜய் கட்சியில் இன்னும் அதிமுகவை சேர்ந்த மூத்த நிர்வாகிகள் வருவார்கள் என்று செங்கோட்டையன் கூறியது குறித்த கேள்விக்கு:

தேசிய ஜனநாயக கூட்டணியின் தலைமையில் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருக்கிறது என்றால், மத்தியில் பாஜக, மாநிலத்தில் அதிமுக தலைமை என்பதுதான் அதிகாரப்பூர்வமான செயல்பாடு.

நேற்று முன்தினம் ராமேஸ்வரம் மீனவர்கள் கைது செய்யப்பட்டது குறித்த கேள்விக்கு:

தமாகவை பொறுத்த வரை இதற்கு நிரந்தர தீர்வு வரவேண்டும். மீனவர்கள் அச்சமின்றி கடலுக்குள் செல்ல வேண்டும் அப்போதுதான் அவர்கள் வாழ்வாதாரத்தை உறுதி செய்ய முடியும் என, பலமுறை கோரிக்கை வைத்துள்ளோம். மத்திய, மாநில அரசுகள் இணைந்து பேசி முடிவு கண்டெடுக்க வேண்டும். குறிப்பாக இலங்கை அரசுக்கு நம்முடைய வெளியுறவுத்துறை மூலம் அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று நான் கேட்டுக் கொள்ள விரும்புகிறேன்.

இலங்கை கடற்படை கண்மூடித்தனமாக நடந்து கொள்கிறது. அதனை கண்டிக்கும் வகையில் இந்திய செயல்பாடுகள் இருக்க வேண்டும். இலங்கை அரசு உண்மை நிலைக்கேற்றவாறு அவர்களுக்கு கோட்பாடுகள் கொடுக்க வேண்டும். அப்போதுதான் இதுபோன்ற கண்மூடித்தனமாக செயல்பட மாட்டார்கள். இலங்கை கடல் கொள்ளையர்களையும் கட்டுப்படுத்தும் வகையில் இரண்டு நாடுகளின் கடற்படை தங்களுடைய பணிகளை துரிதப்படுத்த வேண்டும்.

திருப்பரங்குன்றம் விவகாரம் தொடர்பான கேள்விக்கு:

நியாயத்தின் பக்கம் நிற்க வேண்டும். இந்த நாடு சட்டத்திற்கு உட்பட்ட நாடு என்பதை குறிப்பிட விரும்புகிறேன். அனைவருக்கும் நல்லது நடக்க வேண்டும். அனைவரும் ஒற்றுமையோடு இருக்க வேண்டும் என்பதுதான் முதல் மாநில காங்கிரஸ் கட்சியின் விருப்பம் என, கூறினார்.

திமுக., அரசுக்கு எதிர்ப்பு; அங்கன்வாடி ஊழியர்கள் போராட்டம்!

anganmwadi workers strike - 2026

உசிலம்பட்டி: மதுரை, உசிலம்பட்டியில் பணி நிரந்தரம் உள்ளிட்ட பல்வேறு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அரசு ஊழியர்களாக அறிவித்து பணி நிரந்தரம், ஓய்வு பெறும் ஊழியர்களுக்கு பணிக்கொடையாக 10 லட்சமும், உதவியாளர்களுக்கு 5 லட்சமும், குடும்ப ஊதியமாக 9 ஆயிரம் வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு முழுவதுமாக அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்கள் சங்கம் சார்பில் வட்டார அளவில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதன் ஒரு பகுதியாக, மதுரை மாவட்டம் உசிலம்பட்டி ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலகம் முன்பு தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்கள் சங்க மதுரை மாவட்ட பொருலாளர் பரமேஸ்வரி தலைமையிலான அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்கள் அரசு ஊழியராக அறிவித்து பணி நிரந்தரம் செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

உசிலம்பட்டி வட்டார அளவில் உள்ள அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்கள் என, 50க்கும் அதிகமானோர் கலந்து கொண்டு கண்டன கோசங்களை எழுப்பி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

சிந்துபட்டி பெருமாள் கோயிலில் வைகுண்ட ஏகாதசி!

sindupatti perumal temple vaikunta ekadasi - 2026

உசிலம்பட்டி அருகே வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு சிந்துபட்டி வேங்கடாசலபதி பெருமாள் கோவிலில் ஆல்வார் பாசுரங்கள் வாசிக்கப்பட்டு, சொர்க்கவாசல் திறக்கப்பட்டது.

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே, சிந்துபட்டியில் அமைந்துள்ள நூற்றாண்டு பழமைவாய்ந்த வெங்கடாஜலபதி பெருமாள் கோவிலில் இன்று வைகுண்ட ஏகாதசி தினத்தை முன்னிட்டு சொர்க்கவாசல் திறக்கும் நிகழ்வு வெகுவிமர்சையாக நடைபெற்றது.

மூல ஸ்தானத்தில் அலங்கரிக்கப்பட்டு பல்லக்கில் எழுந்தருளிய வெங்கடாஜலபதி பெருமாள் மற்றும் நம்மாழ்வார் சுவாமிகள் கோவில் பிரகாரத்திற்குள் வலம் வந்து பெருமாள் கோவில் உள்பகுதியிலும், ஆழ்வார் வெளிப்பகுதியிலும் வைக்கப்பட்டு ஆழ்வார் பாசுரங்கள் பாடி சொர்க்கவாசல் திறக்கப்பட்டது.

சொர்க்கவாசல் திறந்ததும், ஆழ்வாருக்கு ஆசி வழங்கிய வெங்கடாஜலபதி பெருமாள் சுவாமியை ஊஞ்சல் மண்டபத்தில் வைத்து சிறப்பு பூஜை செய்து, வழிபாடு நடைபெற்றது.

இந்நிகழ்வில் உசிலம்பட்டி பகுதியை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சொர்க்கவாசல் வழியாக சென்று, சாமி தரிசனம் செய்தனர்.

மகரஜோதி – சபரிமலை கோவில் நடை இன்று திறப்பு

sabarimala crowd - 2026

மகரஜோதி 2026- சபரிமலை கோவில் நடை இன்று திறப்பு

விழாவின் சிகர நிகழ்ச்சியாக அடுத்த மாதம் (ஜனவரி) 14-ந் தேதி மகரவிளக்கு பூஜை மகரஜோதி தரிசனம் நடக்கிறது.

சபரிமலை ஐய்யப்பன் கோவிலில் நடப்பு மண்டல, மகரவிளக்கு சீசனையொட்டி கடந்த மாதம் 16-ந் தேதி நடை திறக்கப்பட்டது. 17-ந் தேதி முதல் பூஜைகள், வழிபாடுகள் நடைபெற்று வந்தது. இதையொட்டி தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் இருமுடி கட்டுகளுடன் சபரிமலைக்கு வந்து சாமி தரிசனம் செய்தனர். கோவிலில் சிகர நிகழ்ச்சியாக 27-ந்தேதி மண்டல பூஜை நடைபெற்றது. இதையடுத்து அன்று இரவு 10 மணிக்கு நடை சாத்தப்பட்டது.

இந்த நிலையில், மகரவிளக்கு பூஜையையொட்டி சபரிமலை அய்யப்பன் கோவில் நடை இன்று (செவ்வாய்க்கிழமை) மாலை 5 மணிக்கு மீண்டும் திறக்கப்பட்டது. தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு முன்னிலையில் மேல்சாந்தி பிரசாத் நம்பூதிரி நடையை திறந்து வைத்து தீபாராதனை நடத்தினார். இன்று சிறப்பு பூஜைகள் எதுவும் நடைபெறாது. பின்னர் இரவு 11 மணிக்கு நடை அடைக்கப்படும்.

இதையடுத்து நாளை டிச 31-ந் தேதி முதல் அதிகாலை 3 மணிக்கு நடை திறக்கப்பட்டு வழக்கமான பூஜைகளுடன் பகல் 11.30 மணிக்கு நெய்யபிஷேகம், 12.30 மணிக்கு உச்ச பூஜை போன்றவை நடைபெறும். பின்னர் 1 மணிக்கு நடை அடைக்கப்பட்டு மாலை 3 மணிக்கு திறக்கப்படும். தொடர்ந்து 6.30 மணிக்கு தீபாராதனை, இரவு 7 மணி முதல் புஷ்பாபிஷேகம் நடத்தப்பட்டு 11 மணிக்கு நடை அடைக்கப்படும்.

மிக முக்கியமான நிகழ்ச்சியாக அடுத்த ஆண்டு 2026ஜனவரி 14-ந் தேதி மகரவிளக்கு பூஜை நடக்கிறது. அன்றைய தினம் மாலை 6.25 மணிக்கு அய்யப்ப சாமிக்கு திருவாபரணம் அணிவித்து சிறப்பு தீபாராதனை நடைபெறும். தொடர்ந்து மகர ஜோதி தரிசனம் சன்னிதானத்தில் நடக்கும்.

முன்னதாக மகரவிளக்கையொட்டி ஐய்யப்பனுக்கு அணிவிக்கப்படும் திருவாபரணங்கள் பந்தளம் வலியகோயிக்கல் சாஸ்தா கோவிலில் இருந்து 12-ந் தேதி ஊர்வலமாக புறப்படும். 11-ந் தேதி எருமேலியில் வலியபேட்டை துள்ளல் நடக்கிறது. மகரவிளக்கின் முன்னோடியாக 12, 13-ந் தேதிகளில் சன்னிதானத்தில் சுத்தி கிரியை பூஜைகள் நடைபெறும்.

ஏற்பாடுகளை திருபாங்கூர் தேவசம் கூடு தலைவர் ஜெயக்குமார் சபரிமலை தேவஸ்தான நிர்வாகிகள் செய்து வருகின்றனர் சபரிமலையில் இன்று நடை திறந்த முதல் நாளான இன்று பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பம்பையில் இருந்து சபரிமலைக்கு நடை பாதையில் நடந்து சென்றனர் நடைபாதை முழுவதும் இருமுடி கட்டிய பக்தர்களாகவே தெரிந்தது பம்பை நதியின் ஓரளவு குளிப்பதற்கு தண்ணீர் வருகிறது பக்தர்களுக்கு தேவையான குடிநீர் வசதி சுகாதார வசதி பசு போக்குவரத்து வசதி உட்பட அனைத்து வசதிகளையும் கேரளா அரசு செய்துள்ளது

அறநிலையத் துறை வழி தவறக் கூடாது!

hindu
ohm

தெலுங்கில்: பிரம்மஸ்ரீ சாமவேதம் ஷண்முக சர்மா
தமிழில்: ராஜி ரகுநாதன்

சமீபத்தில் கேரளாவின் ‘திருநெல்லி’ தேவஸ்தானத்தின் நிதியை நஷ்டத்தில் இருக்கும்  கூட்டுறவு வங்கிகளை மீட்பதற்குப் பயன்படுத்தி, கால எல்லை தீர்ந்த பின்னும் கோவிலின் வைப்புத் தொகையைத் தீர்க்காமல் போனதால், அந்த வங்கிகளுக்கு எதிராக தேவஸ்தானம், உயர்நீதிமன்றத்தின் உதவியை நாடியது.

வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், கோவிலின் நிதிகளை வங்கியின் பயன்பாட்டுக்குச் செலவழிக்கக் கூடாது என்றும் அந்த டெபாசிட்டுகளை உடனடியாகத் திரும்பக் கொடுக்க வேண்டும் என்றும் தீர்ப்பளித்தது. அதைத் தொடர்ந்து வங்கிகள் உச்ச நீதிமன்றத்தை நாடின. உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பு சரியானதே என்று கூறி அந்தத் தீர்ப்பையே உறுதியாகக் கூறியது உச்ச நீதிமன்றம். கோவில் நிதிகள் அந்த தெய்வத்தைச் சேர்ந்தது என்றும், அவற்றைக் கோவிலின் தேவைக்கே பயன்படுத்த வேண்டும் என்றும் தெளிவுபடக் கூறியது. கோவில் நிதிகள், நஷ்டத்தில் இருக்கும் வங்கியின் சொத்துக்கள் அல்ல என்று எச்சரித்தது.

அதேபோல் சிறிது காலம் முன்பு ஹிமாச்சல் பிரதேஷ் உயர்நீதிமன்றம், “கோவில் நிதிகள் பவித்திரமானவை. அவை ஆலயத்தின் தெய்வத்துடையவை. மாநில வருமானம் அல்ல” என்று தெளிவுபட உத்தரவிட்டது.

பக்தர்கள் நம்பிக்கையோடு ஆலயத்திற்காகவும், அதிலிருக்கிரும் தெய்வத்திற்காகவும் அளித்த நிலம், சொத்து, நன்கொடை போன்றவற்றை, ‘கோவிலின் உபயோகத்திற்காக’ என்ற உணர்வோடு அளிக்கிறார்கள். அவற்றை கோவிலின் பூஜைகளுக்கும், நித்திய வழிபாடு, சிறப்பு வழிபாடு போன்ற தெய்வீகச் செயல்களுக்கும், கோவில் நிர்வாகத்திற்கும், மேம்பாட்டுக்கும், மராமத்துக்கும் மட்டுமே பயன்படுத்த வேண்டும். அவற்றை அரசாங்க நிகழ்ச்சிகளுக்கோ, பிற செயல்களுக்கோ பயன்படுத்துவது மத நம்பிக்கைகளை வஞ்சிப்பதாகும். அது சட்டப்படி குற்றமாகக் கருதப்படும் என்று தீர்ப்பு கூறியது.

அரசாங்க நலத் திட்டங்களுக்கு ஆலய நிதியைப் பயன்படுத்தக் கூடாதென்று நேரிடியாகவே குறிப்பிட்டது. சாலைகள், பாலம் அமைப்பது, ‘செக்யூலர்’ பணிகள், அரசியல், சமுதாய நிகழ்சிகள் போன்ற எவற்றுக்கும் பயன்படுத்தக் கூடாதென்றும் தெரிவித்தது. வி.ஐ.பிகள், அரசாங்க அதிகாரிகள் ஆகியோருக்காக ஆகும் செலவுகளை கோவில் சொத்து மூலம் செலவழிப்பதற்கு அனுமதி இல்லை என்று கூறியதும் கவனிக்கத் தக்கது. இந்த இரண்டு தீர்ப்புகளும் கவனத்திற்குரியவை.

இந்தியாவின் பல மாநிலங்களில், அரசாங்கத்தின் கைகளில் இருக்கும் கோவில்களிலிருந்து காலந்தவறாமல் அதிக தொகை குறிப்பிட்ட நேரத்தில்   அரசாங்கத்திற்குச் சேருகின்ற செய்தி ஆலய பக்தர்களுக்குத் தெரியாது. கோவில் சொத்தும், நன்கொடைகளின் வருமானமும் அரசியல் ஊழல்வாதிகளின் கைகளுக்குச் செல்கின்ற உண்மை மக்களிடமிருந்து மறைக்கப்படுகிறது.

பிற மத வாக்கு வங்கிக்காகவும் அவர்களுடைய வளர்ச்சிக்காகவும் நம் ஆலயங்களின் வளங்கள் பகிரப்படுகின்றன. ஆனால் பிற மத நிலையங்களின் வருமானம் அறநிலையத்துறைக்கு வருவதில்லை. அதாவது பிற மத அமைப்புகளின் வருமானம் அந்தந்த மத வளர்ச்சிக்கு மட்டுமே பயன்படுத்தப்படுகிறது. ஹிந்து கோவில்களின் வருமானம் மட்டும் அரசாங்கச் செயல்களுக்கும், பிற மத நலனுக்கும் செலவிடப்படுகிறது.

அதோடு கூட, ஹிந்துக்களை அழிக்கவேண்டும் என்றும் நாட்டை நலிவுறச் செய்ய வேண்டும் என்றும் சதித் திட்டம் தீட்டும் தீவிரவாத மதத்தைச் சேர்ந்தவர்கள் நம் கோவில்களில் ஊழியர்களாகவும், சுற்றுப்புறங்களில் கடை வைத்து வியாபாரம் செய்பவர்களாகவும் நிலைபெறுகிறார்கள். அதனால் ஆபத்து மறைந்துள்ளது என்று தெரிந்தும், தொடர்புடைய துறையினர் கண்டு கொள்வதில்லை.

கோவில்களில் அரசர்களும் பக்தர்களும் அளித்த வரலாறுச் சிறப்புமிக்க தங்க ஆபரணங்களைத் தம் விருப்பபடி சில மாநில அரசுகள் உருக்கித் தம் தேவைக்குப் பயன்படுத்துகின்றன. கோவில்களுக்கு மக்கள் நன்கொடையாக அளித்த சொத்து விவரங்கள் வெளிப்படையாகத் தெரிவிக்கப்படுவதில்லை.

ஹித்து ஆலயங்களின் நிர்வாகத்தை அரசின் கரங்களில் இருந்து விடுவிப்பது தேவையா? இல்லையா? இந்த விவாதம் ஒருபுறம் பலனின்றி நடந்து கொண்டே உள்ளது. அதைவிட, அறநிலையத் துறையில் பெரிய அளவில் மாற்றங்களை ஏற்படுத்தி, கேரளா, ஹிமாச்சல்பிரதேஷ் நீதிமன்றங்களின் தீர்ப்புகளை எடுத்துக் காட்டாகக் கொண்டு எல்லா மாநில அரசுகளும் தகுந்த நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

‘ஆலய நிதி ஆலயத்திற்கே’ என்ற முக்கியச் செய்தியை நடைமுறைப்படுத்த வேண்டும். வளர்ச்சியடைந்த கோவில்களின் அதிக வருமானத்தை வளர்ச்சியடையாத கோவில்களின் வளர்ச்சிக்காகச் செலவழிப்பதில் தவறில்லை.

ஹிந்து ஆலயங்கள் பாதுகாக்கப்படவேண்டும். இருக்கும் அமைப்புகள் சீர்செய்யப்பட வேண்டும். மக்கள் இந்தப் புரிதலை அடைத்து அரசாங்கத்தின் மேல் அழுத்தம் எடுத்து வர வேண்டும்.


 Source: ருஷிபீடம் மாத இதழ், ஜனவரி 2026


வைகுந்த ஏகாதசி; ஸ்ரீவி., கோயிலில் பரமபதவாசல் திறப்பு! திரளான பக்தர்கள் தரிசனம்!

srivilliputhur paramapatha vasal thirappu - 2026

கோபாலா,கோவிந்தா கோஷம் முழங்க ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் பரமபத வாசல் திறப்பு நிகழ்ந்தது ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆழ்வார்களால் பாடல் பெற்ற வைணவ திருத்தலமாகும். இங்கு துளசி செடிக்கு கீழ் தோன்றிய ஆண்டாள் நாச்சியார் ஸ்ரீரங்கத்து அரங்கன் மீது பக்தி கொண்டு மார்கழி நோன்பு இருந்து திருப்பாவை பாடல் பாடி கைத்தலம் பற்றிய பெருமை உடையது. இங்கு ஆண்டுதோறும் மார்கழி மாதம் வெகு உற்சாகத்துடன் கொண்டாடப்படும்.

அந்த வகையில் மார்கழி நீராட்ட உற்சவம் கடந்த 20ஆம் தேதி பச்சை பரத்தலுடன் தொடங்கி புகழ்பெற்று உற்சவம் ஆரம்பித்தது. பத்து நாட்கள் காலை இரவு வேளைகளில் சுவாமிகள் வீதி உலா நிகழ்ச்சி சிறப்புடன் நடைபெற்று முடிவடைந்த நிலையில் 30ந்தேதி அதிகாலை5:30மணிக்கு ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் வைகுண்ட ஏகாதசி முன்னிட்டு பரமபத வாசல் எனும் சொர்க்கவாசல் திறப்பு சிறப்பாக நடைபெற்றது.

இதனை முன்னிட்டு திருக்கோயில் சொர்க்கவாசல் சீரமைக்கப்பட்டு புதுப்பொலிவுடன் காணப்பட்டது. இதனை முன்னிட்டு அதிகாலை ஆண்டாள் ரங்க மன்னாருக்கு சிறப்பு திருமஞ்சனம் விசேஷ அலங்காரங்கள் செய்யப்பட்டது அப்பொழுது சொர்க்கவாசலுக்கு வெளியே வேதாந்த தேசிகர் ராமானுஜர் பெரியாழ்வார் ஆகியோர் ஒன்று சேர நின்று மங்களாசாசனம் செய்தார் அப்பொழுது சொர்க்கவாசல் கதவு திறக்கப்பட்டு அதன் வழியே மேளதாளம் முழங்க பெரிய பெருமாள் ஆண்டாள் ரங்க மன்னார் ஆகியோர் வர சரியாக காலை 5:30 மணிக்கு பரமபத வாசல் என்னும் சொர்க்கவாசல் திறக்கப்பட்டது.

srivilliputhur vaikunta ekadasi - 2026

அப்பொழுது திரண்டு இருந்த பக்தர்கள் கோபாலா கோவிந்தா என விண் அதிர பக்தி கோசமிட்டனர். தொடர்ந்து ஆண்டாள் ரங்க மன்னர் ராபத்து மண்டபத்திற்கு சென்று அங்கு பல்வேறு பூஜைகள் நடைபெற்றது சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சியில் மணவாள மாமுனிகள் மடத்தின் 24 வது பட்டம் ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ சடகோப ராமானுஜ ஜுயர் சுவாமிகள் சட்டமன்ற உறுப்பினர் இ எம் மான்ராஜ் மாவட்ட நீதிபதி ஜெயக்குமார் மாவட்ட எஸ்.பி.கண்ணன் கோயில் செயல் அலுவலர் சௌ.சக்கரை அம்மாள் ஆய்வாளர் செ. முத்து மணிகண்டன் கண்காணிப்பாளர் அர்ஜுன் மற்றும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் அதிகாலை முதலே திரண்டு இருந்து நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர் .

ஸ்ரீவில்லிபுத்தூர் டிஎஸ்பி ராஜா தலைமையில் நகர் இன்ஸ்பெக்டர் முத்துக்குமார் மற்றும் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர் . மேலும் பக்தர்கள் சுவாமிகளை சிரமம் இன்றி தரிசிக்க கோயில் நிர்வாகம் சார்பாக பல்வேறு ஏற்பாடுகள் சிறப்பாக செய்யப்பட்டு இருந்தது. சொர்க்கவாசல் திறப்பு தொடர்ந்து இராப்பத்து என்னும் திருவாய்மொழித் திருநாள் நிகழ்ச்சிகள் ஆரம்பம் ஆகின்றன. இதனைத் தொடர்ந்து ஆண்டாள் எண்ணெய்க்காப்பு உற்சவமும் நடைபெறுகிறது. இதில் திரு ஏகாந்த திருமஞ்சனம் அரையர் வியாக்கியானம் கைத்தல சேவை ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது.

சொர்க்கவாசல் திறப்பு சிறப்பு ஏற்பாடுகளை மதுரை அறநிலையத்துறை இணை ஆணையர் செ. மாரியப்பன் விருதுநகர் உதவி ஆணையர் மு. நாகராஜன் கோயில் செயல் அலுவலர் செள. சக்கரை அம்மாள் ஆய்வாளர் செ. முத்து மணிகண்டன் கண்காணிப்பாளர் அர்ஜுன் மற்றும் கோயில் அலுவலர் திருக்கோயில் பணியாளர்களும் சிறப்பாக செய்து இருந்தனர்.

நேற்று ஆண்டாள் கோவிலில் சொர்க்கவாசல் திறப்பு முன்னிட்டு ஏராளமான உள்ளூர் வெளியூர் வெளி மாநில பக்தர்களும் சபரிமலைக்கு சென்று திரும்பும் ஐயப்ப சாமி பக்தர்களும் இடைவிடாமல் தரிசனம் செய்தது குறிப்பிடத்தக்கது.

செங்கோட்டையில் திருப்பாவை நோன்பு பஜனை ஊர்வலம்!

sengottai margazhi bajanai - 2026

செங்கோட்டை, டிச, 30: செங்கோட்டை ஆரியநல்லுார் தெரு யாதவ சமுதாயத்திற்கு பாத்தியப்பட்ட ஸ்ரீமுப்புடாதி அம்மன் கோவிலில் வைத்து யாதவ சமுதாயம் கரையாளர் சமுதாய நலச்சங்கம் சார்பில் ஆண்டுதோறும் மார்கழி திருப்பாவை தோன்பு மற்றும் பஜனை ஊர்வலம் சிறப்பாக நடத்தப்படுவது வழககம்.

இந்தாண்டு கடந்த  டிசம்பர் 16ஆம் தேதியில் திருப்பாவை நோன்பு பஜனை ஊர்வலம் துவங்கப்பட்டு நாள்தோறும் பஜனை ஊர்வல நகரின் முக்கிய வீதிகள் வழியாக சென்று  கோவிலில் நிறைவடையும் இன்று 27ஆம் நாள் திருப்பாவை நோன்பு பஜனை ஊர்வலம் காலையில் பாளை சுதாகர்ஜீ வேதநாராயணன் பஜனை மண்டலி குழுவினா் மற்றும் பக்தர்கள் கோவில் முன்பிலிருந்து புறப்பட்டு  நகரின் முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக சென்று கோவிலை வந்தடைந்தது.

sengottai margazhi bajana1 - 2026

ஊர்வலத்தில் சிறுமிகள் கோலாட்டம் மற்றும் இசை வாத்தியங்களுடன் பஜனைபாடி வீதிகளில் வலம் வந்தனா். அதனைதொடா்ந்து ஸ்ரீமுப்புடாதி அம்மன் பரிவார தேவதைகளுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காராம் தீபாராதனை நடத்தப்பட்டு பக்தர்கள் மற்றும் பொதுமக்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

நிகழ்ச்சியை விழாக்கமிட்டியினா் யாதவர் சமுதாய பெரியோர்கள், நிர்வாகிகள், இளைஞரணி நிர்வாகிகள் சிறப்பாக செய்திருந்தனா்.

செங்கோட்டையில் நகர வாணியர் சங்க 27ஆம் ஆண்டு கல்வி நிதி பரிசளிப்பு விழா!

sengottai vaniyar sangam kalvi nidhi - 2026

செங்கோட்டை எஸ்ஆர்கே தெரு கிழக்கு பகுதி வாணியா் சமுதாய நலக்கூடத்தில் வைத்து நகர வாணியா் சங்கம் சார்பில் 10ஆம் வகுப்பு மற்றும் 12ஆம் வகுப்பில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவியா்கள் மற்றும் அனைத்து மாணவ, மாணவியா்களுக்கும் கல்விநிதி பரிசளிப்பு விழா நடந்தது.

விழாவிற்கு நகர வாணியா் சங்க கல்விநிதி தலைவா் பணிநிறைவு தாசில்தார் குமரேசன் செட்டியார் தலைமை தாங்கினார். மேலுார் சமுதாய தலைவா் ஐயப்பன் செட்டியார், தஞ்சாவூர் தெரு தலைவா் குமார் செட்டியார், எஸ்ஆர்கே தெரு மேற்கு பகுதி தலைவா் சுப்பிரமணிய செட்டியார், எஸ்ஆர்கே தெரு கிழக்கு பகுதி தலைவா் முத்துசாமி செட்டியார் ஆகியோர் முன்னிலை வகித்தனா்.

பணிநிறைவு தலைமை ஆசிரியா் மாடசாமி செட்டியார் இறைவணக்கம் பாடினார். நகர வாணியா் கல்விநிதி செயலாளார் ஐயப்பன் செட்டியார் அனைவரையும் வரவேற்று பேசினார். நகரத் துணைத்தலைவா் இராமகிருஷ்ணன் அறிக்கை வாசித்தார். நகரப் பொருளாளா் முருகன் செட்டியார் வரவுசெலவு கணக்கு வாசித்தார்.

நிகழ்ச்சியில் மாவட்ட வாணியா் சங்க தலைவா் பாலசுப்பிரமணியன், செயலாளா் பிச்சுமணி, பொருளாளா் தளவாய் சுந்தரம் முன்னாள் நகர்மன்ற உறுப்பினா் செந்தில் ஆறுமுகம் நகர வாணியா் சமுதாய துணைச்செயலாளா் திருமலைச்செட்டியார் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினா்.

அதனை தொடா்ந்து ஆழ்வார்குறிச்சி ஸ்ரீபரமகல்யாணி கலைஅறிவியல் கல்லுாரி முன்னாள் முதல்வா் மீனாட்சிசுந்தர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மாணவ, மாணவியா்களுக்கு கல்விநிதி மற்றும் பாராட்டு சான்றிதழ்களை வழங்கி வாழ்த்தி பேசினார்.

நிகழச்சியில் மேலுார் பகுதி வாணியா்சங்க பொருளாளா் நம்பிராஜன், துணைத் தலைவா் பூதத்தான்(எ)மணி செட்டியார், துணைச் செயலாளா் சுப்பிரமணியன் செட்டியார், தஞ்சாவூர் தெரு துணைத் தலைவா் பேச்சிமுத்துசெட்டியார், பொருளாளா் இசக்கி செட்டியார், துணைச்செயலாளா் சந்துார் செட்டியார், எஸ்ஆர்கே தெரு மேற்கு பகுதி செயலாளா் சங்கர் செட்டியார், பொருளாளா் பரமசிவன் செட்டியார், துணைத் தலைவா் திருமலைச் செட்டியார், எஸ்ஆர்கே தெரு கிழக்கு பகுதி செயலாளா் உலகநாதன் செட்டியார், பொருளாளா் சங்கர் செட்டியார், துணைத் தலைவா் ஹரிநாராயணன் செட்டியார் மற்றும் நிர்வாகிகள் மாணவ, மாணவியா், பெற்றோர் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

முடிவில்  நகர வாணியா் சங்க கல்விநிதி துணைச் செயலாளா் கருப்பசாமி செட்டியார் நன்றி கூறினார்.

Radiant Facets of Devotion: The Rubies of the Trinity

Guru Kalaimamani Roja Kannan - 2026

Narasimhan Vijayaraghavan

There are evenings in the Margazhi season when art transcends performance and becomes quiet testimony. One such evening unfolded on Monday, 29th December 2025, at 5.30 p.m., at the Bharatiya Vidya Bhavan, Mylapore, under the auspices of Karthik Fine Arts. On that winter evening, Mummurthigalin Manikangal — The Trinity’s Rubies emerged not merely as a dance recital, but as a moving act of remembrance, resilience, and renewal. What lent the occasion its special gravity was not just the repertoire chosen, but the lived experience that infused every movement on stage.

For Guru Kalaimamani Roja Kannan, this presentation marked far more than another entry in a long and distinguished artistic journey. In her opening words, she spoke with quiet candour of the difficult years she had traversed — years marked by serious health challenges that could well have silenced a less resolute spirit. Yet here she stood, restored not merely in body but in purpose, sustained by an unshakeable faith in her art and by the unwavering presence of her students. Their loyalty, discipline, and affection were palpable, forming an invisible shield around their mentor. What unfolded on stage was thus as much a personal renaissance as it was a classical performance.

The evening opened with Syama Sastri’s Kamakshi Swarajathi in Bhairavi, rendered with repose and emotional depth. The choice itself seemed symbolic — an invocation to the Divine Mother, a seeker’s plea for strength and grace. The choreography reflected an inward stillness, as though the dancer’s body had absorbed years of contemplation and now released it through measured movement. One sensed that the performance was as much an act of gratitude as it was of artistry.

The programme then turned to Muthuswamy Dikshitar, whose 250th birth anniversary lends special resonance to this season. His Ananda Natana Prakasam unfolded in rich colour and rhythmic clarity, celebrating the cosmic dance of Nataraja. Here, the ensemble moved with renewed vitality, the choreography blossoming into confident patterns that spoke of endurance regained. The joy was unmistakable — not exuberant, but assured — as though the dancers were affirming their place within a lineage far greater than themselves.

The evening reached its spiritual crest with Tyagaraja’s Endaro Mahanubhavulu, the crown jewel of the Pancharatna Kritis. In this final offering, the performers bowed not only to the saint-composer but to all those who have walked the path of devotion before them. The synchrony of movement, the restraint of expression, and the quiet dignity of the presentation made the moment deeply affecting. Even for those unfamiliar with the grammar of Bharatanatyam, the sincerity of the offering was unmistakable.

In the end, the performance stood as a testament — to resilience in the face of adversity, to the sustaining power of the guru–shishya bond, and to the enduring life of the Trinity’s music across centuries. On that evening at Bharatiya Vidya Bhavan, devotion did not merely find expression; it found embodiment. And in doing so, it reminded the audience that true art does not fade — it waits, patiently, to be reborn through those who believe in it.

விஜய்க்கு கூடும் கூட்டம் வாக்குகளாக மாறாது; சரத்குமார்

sarathkumar anandan ayyasamy tenkasi - 2026

நடிகர் விஜய்க்கு கூடும் கூட்டம் வாக்குகளாக மாற சாத்தியமில்லை.என புளியங்குடியில் நடிகர் சரத்குமார் கூறியுள்ளார்.

புளியங்குடியில் நடிகர் விஜய்க்கு கூடும் கூட்டம் வாக்குகளாக மாற சாத்தியமில்லை.பா.ஜ.க. தேசிய பொதுக்குழு உறுப்பினரும், நடிகருமான சரத்குமார் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

நடிகர் விஜய்க்கு கூடும் கூட்டம் வாக்குகளாக மாற சாத்தியமில்லை. ஏனென் றால் நான் பிரசாரம் செய்த காலத்தில் எனக்கு கூடிய கூட்டம் வாக்குகளாக மாறி இருந்தால் நிச்சயம் அந்த கட்சிகளுக்கு வெற்றி கிடைத்திருக்கும். ஆனால் அப்படி நடக்கவில்லை. நடிகர் ரஜினிகாந்த், நடிகர் அஜித் ஆகியோர் சென்றால் அதைவிட அதிக கூட்டம் வரும்.

இன்று என்னை வரவேற்பதற்கு கூட அதிக அளவில் கூட்டம் கூடியது. தென்னிந்தியாவின் மதகலவரங்கள் வந்தது கிடையாது. மக்களை திசை திருப்புவதற்காக தவறான தகவல்களை கூறுகின்றனர். சிலர்

100 நாள் வேலை திட்டத்தை 125 நாளாக அதிகரித்ததற்கும் தி.மு.க. கூட்டணி கட்சி போராட்டம் நடத்துகிறது. ஒரு மாநிலம் இதை சிறப்பாக செயல் படுத்த முடியும்.

தென்காசி தொகுதியில் நான் நிற்பது குறித்து தலைமை தான் முடிவு எடுக்க வேண்டும். அதன்பின்னர் போட்டியிட வேண்டுமா? வேண்டாமா என நான் முடிவு செய்ய வேண்டும். அது குறித்து 2 மாதம் கழித்து தான் கூற முடியும்.

நடிகராகிய நான் அடிக்கடி வரும் போது என்னை பார்க்க பெருங் கூட்டம் வருகிறது. அப்படி என்றால் வெளியே வராத மக்களை எப்போதுமே நேரில் சந்திக்காத நடிகர் ஒருவர் தெருவில் கூட்டம் வரும்போது அதிகமாக தான் வரும்.

தேர்தல் நேரத்தில் பா.ஜ.க.வின் சி-டீம் என தேவையில்லாமல் பேசுவது வழக்கமாகி விட்டது. தமிழக வெற்றிக் கழகத்துடன் பா.ஜ.க. கூட்டணி வைக்கவாய்ப்பில்லை கருதுகிறேன். அ.தி. மு.க.வினர் அனைவரும் இணைந்தால் நல்லது என்று ந தொடர்ந்து கூறி வருகிறேன்.

இந்த தேசத்தை சிறப்பாக வழி நடத்தக்கூடிய தலைவர் நமக்கு கிடைத்துள்ளார். நாம் அனைவரும் ஒருங்கிணைந்து தேசத்தை வளர்ச்சி கொண்டு பாதைக்கு செல்ல வேண்டும். தமிழகத்தில் பா.ஜ.க. வேக மாக வளர்ந்து வருகிறது.

அவர் இவ்வாறு கூறினார். பேட்டியின்போது தென்காசி மாவட்ட பா.ஜ.க. தலைவர் ஆனந்தன் அய்யாசாமி உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.