Home Blog Page 29

தமிழகத்திலும் இரட்டை என்ஜின் சர்க்கார் : மதுராந்தகத்தில் பிரதமர் மோடியின் அதிரடி முழக்கம்!

maduranthagam meeting - 2026

மதுராந்தத்தில் நடந்த தேசிய ஜனநாயக கூட்டணியின் பிரசாரத்தை துவக்கி வைத்து பிரதமர் மோடி பேசியதாவது:

” திமுக அரசை ‘சிஎம்சி’ அரசு என மக்கள் அழைக்கின்றனர். சிஎம்சி என்றால் ஊழல், குற்றவாளி குழுக்கள், குற்றங்கள் ஆகியவற்றை ஆதரிக்கும் அரசு” என்றார் பிரதமர் மோடி.

எனது அருமை சகோதர சகோதரிகளே வணக்கம். 2026 ஆம் ஆண்டில் தமிழகத்துக்கு எனது முதல் பயணம் இது. தமிழகம் முழுவதும் பொங்கல் பண்டிகைக்குப் பிறகு மகிழ்ச்சி நிறைந்துள்ளது. சில நாட்களுக்கு முன்னர் தமிழகத்தின் வளர்ச்சி மனிதர் எம்ஜிஆர் பிறந்த நாளை நாம் கொண்டாடினோம். இன்று இந்த மேடையில் இருந்து ஏரிகாத்த ராமனுக்கு தலைவணங்குகிறேன். அனைவரின் நலன், தமிழகத்தின் நலனுக்காக வேண்டிக் கொள்கிறேன்.

இன்று நேதாஜியின் பிறந்த நாள். இந்த நாளை பராக்கிராம நாள் என்று தேசம் கொண்டாடுகிறது. தமிழகத்தில் பல சுதந்திர போராட்ட தியாகிகள், நேதாஜி உடன் இணைந்து சுதந்திர போரில் ஈடுபட்டனர். வீரம் மற்றும்நாட்டுப்பற்று தமிழக மக்களின் நாடி நரம்பில் ஓடுகிறது. இந்த மண்ணில் இருந்து நேதாஜிக்கு வீரவணக்கத்தை காணிக்கையாக்குகின்றேன்.

இங்கே மக்கள் அலைகடல் என திரண்டுள்ளது. இது ஒட்டு மொத்த தமிழகத்துக்கும், தேசத்துக்கும் ஒரு செய்தியை அனுப்புகிறது. அது என்னவென்றால், தமிழகம் மாற்றத்துக்கு தயாராகிவிட்டது. திமுகவின் மோசமான ஆட்சியில் இருந்து விடுபட தமிழகம் துடிக்கிறது. பாஜவின் தேஜ கூட்டணி ஆட்சியை விரும்புகிறது. தேஜ கூட்டணி தலைவர்கள், தமிழகத்தின் எதிர்காலத்தை தீர்மானிப்பார்கள். ஒரே முடிவோடு, ஒரே நிலைப்பாட்டோடு இணைந்துள்ளனர். தமிழகத்தை திமுக அரசிடம் இருந்து விடுவிக்கவேண்டும் என்பதே நிலைப்பாடு.

தமிழகத்தை வளர்ச்சியடைந்த பாதுகாப்பான, ஊழல் அற்ற மாநிலமாக மாற்ற வேண்டும். இதனை என்னால் தெளிவாக காண முடிகிறது. திமுக அரசின் கவுன்ட் டவுன் துவங்கிவிட்டது. ஆட்சி செய்ய திமுகவுக்கு வாய்ப்பு அளித்தீர்கள். அதிகாரத்தை அளித்தார்கள். ஆனால், நம்பிக்கை துரோகம் செய்துவிட்டார்கள். வாக்குறுதிகளை அள்ளித்தெளித்தாலும் திமுக ஆற்றிய பணிகள் பூஜ்ஜியம்.

திமுக அரசை ‘சிஎம்சி’ அரசு என அழைக்கின்றனர். சிஎம்சி என்றால் கரப்சன், மாபியா, கிரைம் என்று அர்த்தம். ஊழல், குற்றவாளி குழுக்கள், குற்றங்கள் ஆகியவற்றை ஆதரிக்கும் அரசு. தமிழக மக்கள் திமுக மற்றும் சிஎம்சி இரண்டையும் கிள்ளி எறிய வேண்டும் என தீர்மானம் செய்துவிட்டனர். தமிழகத்தில் தேஜவின் இரட்டை இன்ஜின் அரசு அமைவது உறுதியாகிவிட்டது.

தமிழகத்தில் ஜனநாயகம், நம்பகத்தன்மை இல்லை. திமுக அரசு,ஒரே ஒரு குடும்பத்துக்காக மட்டும் இயங்கி கொண்டு உள்ளது. திமுகவில் நீங்கள் முன்னேற வேண்டும் என்றால், நீங்கள் அவர்களுக்கு ஆமாம் சாமி போட வேண்டும்.  கலாசாரத்தை வசைபாடும் அரசாக இருப்பதினால் தான் திமுகவில் முன்னேற முடிகிறது. இதன் பாதிப்பை தமிழகம் சந்திக்கிறது. எத்தனை ஊழல் மலிந்துள்ளது. அந்த பணம் யார் பைகளுக்கு செல்கிறது என சிறு குழந்தை கூட தெரிந்துவைத்துள்ளது.

தமிழகம் எப்படிப்பட்ட பூமி என்றால், பாரதத்தின் பண்பாட்டை வளம் நிறைந்ததாக ஆக்கியது. சங்ககாலஇலக்கியம், கோவில், விஞ்ஞானம் இலக்கியம் ஆகியவை பாரதத்தை உயர்த்தியது. வளர்ச்சியடைந்த பாரதம் என்ற இலக்கை நோக்கி முன்னேறும் நிலையில், தமிழகத்தை திமுக என்ற களையில் இருந்து அகற்றவேண்டும். தமிழகம் எவ்வளவு வேகமாக முன்னேறுகிறதோ அந்தளவு நாடும் முன்னேற்றம் அடையும்.

கடந்த 11 ஆண்டுகளில் தேஜ அரசு தமிழகத்தின் வளர்ச்சிக்கு வரலாறு காணாத பணிகளை ஆற்றி உள்ளது. 2014 க்கு முன்பு டில்லியில் திமுக காங்கிரஸ் கூட்டணி அரசு,தமிழகத்தின் வளர்ச்சிக்கு குறைவான நிதி ஒதுக்கப்பட்டது.ஆனால், கடந்த 11 ஆண்டுகளில் தேஜ கூட்டணி அரசு அதிகாரப்பகிர்வு வாயிலாக கிட்டத்தட்ட 3 லட்சம் கோடி ரூபாயை அளித்துள்ளது.காங்கிரஸ் திமுக ஆட்சியுடன் ஒப்பிடுகையில் இது 3 மடங்கு அதிகமானது.

கடந்த 11 ஆண்டுகளில் தமிழக மக்களின் நல்வாழ்விற்காக மத்திய அரசு 11 லட்சம் கோடி ரூபாய் உதவி அளித்துள்ளது. ஆனால், திமுக காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் ஏழைகள், பழங்குடியினர், இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு உதவி வழங்குகிறோம் என்ற பெயரில் மோசடிகள் மட்டும் தான் அரங்கேறின.

திமுக கூட்டணி அரசு ரயில் பட்ஜெட் என்ற வகையில் தமிழகத்துக்கு அளித்த தொகையை விட தேஜ கூட்டணி அரசு 7 மடங்கு அதிக நிதியை அளித்துள்ளது. தமிழகத்தில் 80 ரயில்நிலையங்கள் மேம்படுத்தப்பட்டு வருகின்றன. வந்தே பாரத் போன்ற அதிவேகமாக செல்லும் ரயில்களை தேஜ கூட்டணி அரசு தான் இயக்கி இருக்கிறது.

தமிழகத்தின் மிகப்பெரிய பலம் என்றால் விவசாயிகள் மற்றும் மீனவர்கள் தான். தேஜ கூட்டணி அரசின் கொள்கைகளால் விவசாயத்தில் சாதனை படைக்கும் அளவுக்கு உற்பத்தி நடக்கிறது. மீனவர்கள் மற்றும்விவசாயிகளுக்கு ஆதரவான கொள்கைகளே காரணம். முன்னர் குறைவான விவசாயிகள் மட்டுமே வங்கிக் கணக்கு இருந்தது. தேஜ கூட்டணி அரசு வங்கி கணக்குகளை சேர்ந்து கொடுத்தது. அத்துடன் விவசாயிகள் நிதியுதவி துவக்கப்பட்டது. இதுவரை 4 லட்சம்கோடி ரூபாய் விவசாயிகளுக்கு கிடைத்து இருக்கிறது.

தேஜ கூட்டணி அரசு மீன்வள திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. மீனவர்களுக்கு கடன் அட்டை வழங்கப்பட்டு உள்ளது. தேஜ அரசு சிறு விவசாயிகள், மீனவர்கள் கூட்டுறவோடு இணைத்து வருகிறது. தமிழகத்தில் உணவு பதப்படுத்தும் துறையில் அதிக வாய்ப்புகள் இருக்கின்றன. விவசாயிகள், மீனவர்களின் உற்பத்தி பொருட்கள் உலகசந்தையில் கொண்டு சேர்க்க பாஜ அரசு செயல்பட்டு வருகிறது.

வளர்ச்சியடைந்த தமிழகத்தை உருவாக்குவதில் நமது இளைஞர்கள், பெண்களுக்கு முக்கிய பங்கு இருக்கிறது. ஆனால்,இங்கு இருப்பதோ திமுக அரசு. அவர்களை, போதைப்பொருள், குற்றவாளிகளிடம் ஒப்படைத்துவிட்டார்கள்.தங்கள் கண்முன்னரே குழந்தைகள் பாதிக்கப்படுவதை பெற்றோர் பார்க்கின்றனர்.

இளைஞர்களை போதைப்பொருட்களில் இருந்து மீட்க வேண்டும். தேஜ கூட்டணிக்கு அளிக்கும் ஒட்டு போதைப்பொருளுக்கு எதிரானது. திமுக ஆட்சியில் போதைப்பொருள் வியாபாரிகள் சிறப்பாக உள்ளனர். தமிழக மக்களின் நலனில் தேஜ கூட்டணி அக்கறை கொண்டு உள்ளது.

முருகனுக்கு விளக்கு ஏற்றுவதில் கூட பிரச்சினை

திருப்பரங்குன்றத்தில் நமது முருகப் பெருமானுக்கு விளக்கு ஏற்றுவது விவாதப் பொருளாக்கப்பட்ட போது நம்முடைய தலைவர்கள் எல்லாம் பக்தர்களின் உரிமைகளுக்கு குரல் கொடுத்தார்கள். ஆனால், திமுகவும் அவர்களது கூட்டாளிகளும் தங்கள் வாக்கு வங்கிக்காக நீதிமன்றங்களையும் விட்டு வைக்கவில்லை; அவர்களையும் அவமானப்படுத்தினார்கள்.

தமிழ் கலாச்சாராத்தின் எதிரி திமுக

பிரதமர் மோடிக்கு திருப்பரங்குன்றம் முருகனின் வெள்ளியிலான உருவம் பதித்த நினைவுப் பரிசை என்டிஏ கூட்டணிக் கட்சி தலைவர்கள் வழங்கினர். தமிழ் மொழி, தமிழ் கலாசாரத்தை நேசிக்கிறேன். தமிழர்கள், தமிழ் கலாச்சாராத்தின் எதிரி திமுக. இன்று நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் பிறந்தநாள், நேதாஜியோடு சுதந்திர போராட்டத்தில் பல தமிழர்கள் பங்கேற்றனர். வீரம், நாட்டுப்பற்று தமிழக மக்களின் நாடி, நரம்புகளில் நிறைந்துள்ளது.

திமுக ஆட்சி முடிவுக்கான கவுன்ட் டவுன் தொடங்கி விட்டது

மேடையில் உள்ள தலைவர்கள் தமிழக எதிர்காலத்தை தீர்மானிப்பர். தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியை தமிழக மக்கள் விரும்புகிறார்கள்; தமிழ்நாட்டில் வளர்ச்சியடைந்த, ஊழலற்ற ஆட்சி அமைக்க வேண்டும். திமுக அரசு ஒரே ஒரு குடும்பத்திற்காக மட்டுமே இயங்கி வருகிறது. திமுக ஆட்சி முடிவுக்கான கவுன்ட் டவுன் தொடங்கிவிட்டது; ஆட்சி மாற்றத்திற்கு தமிழ்நாடு தயாராகிவிட்டது; திமுகவின் மோசமான ஆட்சியில் இருந்து விடுபட தமிழ்நாடு துடிக்கிறது. தமிழ்நாட்டில் எங்கெங்கும் ஊழல் என குழந்தைக்கும் தெரியும்; திமுக அரசை குற்றம், மாபியா, ஊழல் அரசு என்று மக்கள் கூறுகின்றனர்.


பிரதமர் மோடி இந்த மண்ணில் கால் வைத்ததும் இயற்கையே சூரியனை மறைத்துவிட்டது: எடப்பாடி பழனிசாமி

மக்களை வாட்டி வதைக்கும் ஆட்சி தேவையா? திமுக ஆட்சி கொடுத்தது துன்பம், வேதனை, ஊழல்தான்; வரும் தேர்தல் திமுக ஆட்சிக்கு முடிவு கட்டும்; இதுதான் திமுகவுக்கு இறுதித்தேர்தல். தேர்தலில் பெரும்பான்மை பெற்று அதிமுக ஆட்சி அமைக்கும்; வரும் தேர்தலில் 210 இடங்களில் தேசிய ஜனநாயகக் கூட்டணி வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும். முதல்வர் ஸ்டாலின் குடும்பம் உலக அளவில் பணக்கார குடும்பமாக உள்ளது; எந்த தகுதியின் அடிப்படையில் உதயநிதிக்கு துணை முதல்வர் பதவி?; தே.ஜ கூட்டணி மிக வலிமையாக உள்ளது; பிரதமர் மோடி நமக்கு துணை நிற்கிறார்.

தகுதியற்ற அரசு… பூஜ்ய அரசு: அன்புமணி

திமுக ஆட்சியின் முடிவுக்கு இன்று ஒரு தொடக்கம்; ஜீரோ கவர்மென்ட்; ஜீரோ கவர்னன்ஸ்; இன்னும் 2 மாதத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் ஆவார் எடப்பாடி பழனிசாமி. 2047இல் இந்தியாவை வல்லரசாக மாற்ற அழைத்துச் செல்பவர் பிரதமர் மோடி.

அமமுகவின் ஒவ்வொரு தொண்டனும்… -டிடிவி தினகரன் பேச்சு

மதுராந்தகம் கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமியின் பெயரை டிடிவி தினகரன் கூறியதும் கூட்டத்தினர் ஆரவாரம்.

எந்தவித அழுத்தமும் இன்றி அமமுக NDA கூட்டணியில் இணைந்துள்ளது; இந்த கூட்டணியின் வெற்றிக்காக அமமுகவின் ஒவ்வொரு தொண்டனும் தமிழ்நாடு முழுவதும் அயராது பாடுபடுவான் என்கின்ற உறுதியை, பிரதமருக்கும் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கும் சொல்லி கொள்கிறேன்.

நாங்கள் எல்லாம் அம்மாவின் தொண்டர்கள் என்பதை எதிரிகள் மறந்துவிட்டார்கள். எங்களுக்குள் சண்டை, சச்சரவுகள் இருந்தது உண்மைதான்; ஆனால் தமிழ்நாட்டின் நலனை கருதியும் அமமுகவின் நலனை கருதியும் பிரதமரின் அழைப்பை ஏற்று எங்கள் மனதிலே இருந்த கோப, தாபங்களை விட்டுவிட்டு எந்த அழுத்தமும் இன்றி இந்தக் கூட்டணியில் இணைத்துக் கொண்டோம்.

சூரியன் மறைந்து விட்டது: அண்ணாமலை

“கொளுத்திக் கொண்டிருந்த சூரியன் மறைந்துவிட்டது; இது மாற்றத்திற்கான கூட்டம்; மழை பெய்கிறது; மழையால் தாமரை, இலை மலரும்.”

உலக பிரச்னைகளுக்கு தீர்வு காணும் மோடி: கே.பி.முனுசாமி

“2014இல் பிரதமராக பொறுப்பேற்று பின் தங்கிக் கிடந்த இந்திய துணைக் கண்டத்தை இன்று உலகமே வியக்கும் வண்ணம் மாற்றிய தலைவர் பிரதமர் மோடி; உலக பிரச்னைகளுக்கு இந்தியாவில் இருந்து தீர்வு கூறக்கூடிய தலைவராக அவர் இருக்கிறார்”

மோடியை கேள்வி கேட்ட ஸ்டாலின்; அடுத்த நொடியே பதிலடி கொடுத்த அண்ணாமலை!

1719347 mk stalin - 2026

தமிழகத்துக்கு இன்று தேசிய ஜனநாயக கூட்டணி பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக வருகை தரும் பிரதமர் நரேந்திர மோடி இன்று காலை தமிழில் ஒரு பதிவிட்டிருந்தார் அதில் திமுக ஆட்சியை அகற்றும் நேரம் வந்து விட்டது இன்று குறிப்பிட்டிருந்தார் அதன் ஆங்கில பதிவில் பதில் கேள்வி கேட்கும் வகையில் தமிழக முதல் அமைச்சர் ஸ்டாலின் ஒரு பதிவிட்டிருந்தார். அதில் தமிழகத்துக்குத் தர வேண்டிய கல்விநிதியை எப்போது தருவீர்கள் என்று கேட்டிருந்தார். அவரது கேள்விக்கு பதிலடி கொடுக்கும் வகையில் சூட்டோடு சூடாக அண்ணாமலை தன் கருத்தைப் பதிவு செய்தார்.

ஸ்டாலின் கேட்ட கேள்விகள்….

தேர்தல் சீசன் வந்தால் மட்டும், தமிழ்நாடு பக்கம் அடிக்கடி வரும் மாண்புமிகு பிரதமர் மோடி அவர்களே…

தமிழ்நாட்டுக்குத் தரவேண்டிய 3,458 கோடி ரூபாய் #SamagraShiksha கல்வி நிதி எப்போது வரும்? Delimitation-இல் தமிழ்நாட்டின் தொகுதிகள் குறைக்கப்படாது என்ற உறுதிமொழி உங்கள் வாயில் இருந்து எப்போது வரும்?

பா.ஜ.க.வின் முகவர்போல் செயல்படும் ஆளுநரின் அராஜகம் எப்போது முடிவுக்கு வரும்?

தமிழ்ப்பாசத்தில் தமிழர்களை மிஞ்சியதாய்க் காட்டிக்கொள்ளும் உங்கள் அரசிடம் இருந்து தமிழுக்குரிய நிதி ஒதுக்கீடு எப்போது வரும்?

“#MGNREGA தொடரும், மாநிலங்கள் மீது நிதிச் சுமையை ஏற்றி ஊரக மக்களின் வாழ்வாதாரத்தை ஒழித்துக் கட்டும் #VBGRAMG கைவிடப்படும்” என வாக்குறுதி எப்போது வரும்?

பத்தாண்டுகளாக ‘இன்ச் இன்ச்’சாக ஒன்றிய பா.ஜ.க. அரசு இழைத்து வரும் மதுரை #AIIMS எனும் எட்டாவது உலக அதிசயம் எப்போது எங்கள் கண்முன் வரும்?

இயற்கைப் பேரிடர்களுக்காக நாங்கள் கேட்ட நிவாரணத் தொகை எப்போதுதான் வரும்?

ஓசூர் விமான நிலையம், கோவை & மதுரை மெட்ரோ திட்டங்களுக்கு எப்போது ஒப்புதல் வரும்?

கீழடி அறிக்கை எப்போது வெளியே வரும்?

ஒட்டுமொத்தத் தமிழ்நாட்டு மக்களின் ஒருமனதான கோரிக்கையான #NEET விலக்கு எப்போது அமலுக்கு வரும்?

தொடர்ந்து துரோகங்களை மட்டுமே செய்யும் பா.ஜ.க. கூட்டணிக்குத் தமிழ்நாடு எப்போதுமே தோல்வியைத்தான் தரும்!

ஸ்டாலினின் கேள்விகளுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் அண்ணாமலை தெரிவித்த கருத்துகள்

திமுக கொடுத்த தேர்தல் வாக்குறுதிகளில், 10% கூட முழுமையாக நிறைவேற்றாமல், நாளொரு நாடகம் நடத்திக் கொண்டு, நாட்டு நடப்பு என்னவென்றே தெரியாமல், யார் எதை எழுதிக் கொடுத்தாலும், அதை அப்படியே கிளிப்பிள்ளை போல ஒப்பிக்கும் முதலமைச்சர் @mkstalin அவர்களே,

Samagra Shiksha திட்டத்தின் ஒரு அங்கமான PM Shri பள்ளிகளை தமிழகத்தில் கொண்டு வருவோம் என்று கடிதம் மூலமாக தெரிவித்துவிட்டு, பின்னர் அந்தர் பல்டி அடித்தது ஏன்? நிறைவேற்றாத திட்டத்துக்கு நிதி எப்படி ஒதுக்குவார்கள்?

Delimitation-ல் தென் மாநிலங்களில் எந்த தொகுதியும் குறைக்கப்படாது என்று, மாண்புமிகு மத்திய உள்துறை அமைச்சர் திரு @AmitShah அவர்கள், கடந்த 2025ஆம் ஆண்டு பிப்ரவரி மாதமே தெரிவித்துவிட்டார். உங்களுக்கு செய்தித்தாள் வாசிக்கும் பழக்கம் இருக்க வாய்ப்பில்லை. உங்களுக்கு எழுதிக் கொடுப்பவர்களுக்குமா இல்லை?

தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு அதலபாதாளத்தில் இருக்கும்போது, ஆளுநர் உங்களுக்குப் பாராட்டுப் பத்திரம் வாசிக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறீர்களா? உங்கள் நிர்வாகத் தோல்விக்கு ஆளுநரை குற்றம் சொல்வதை எப்போது நிறுத்துவீர்கள்?

100 நாள் வேலை திட்டத்தை 150 நாட்களாக உயர்த்துவோம் என்று நீங்கள் தேர்தல் வாக்குறுதி கொடுத்து ஐந்து ஆண்டுகள் கடந்து விட்டன. ஆனால், ஒரு துரும்பைக் கூட கிள்ளிப் போடாமல் இருக்கிறீர்கள். மத்திய அரசு தற்போது அதனை 125 நாட்களாக உயர்த்தி இருக்கிறது. இனிமேலும் அத்திட்டத்தில் உங்கள் கட்சியினரால் ஊழல் செய்ய முடியாது என்ற இயலாமை, உங்களை இப்படி புலம்ப வைத்திருக்கிறது.

AIIMS கட்டுமானம் வேகமாக நடந்து கொண்டிருக்கிறது. வேங்கைவயலுக்குதான் நீங்கள் போகவில்லை. மதுரைக்குச் சென்று பார்த்திருக்கலாமே? உங்களை யார் தடுத்தார்கள்? நீங்கள் விரும்பவில்லை என்றாலும், இந்த வருடம் மதுரை AIIMS, மக்கள் பயன்பாட்டிற்கு வரும். மதுரையில் வேளாண் பல்கலைக்கழகம் அமைப்போம் என்று நீங்கள் கொடுத்த வாக்குறுதி நினைவில் இருக்கா? குறைந்தபட்சம் ஒரு செங்கல்லாவது வைத்தீர்களா?

இயற்கை பேரிடர்களுக்கான நிதியை மத்திய அரசு விடுவித்துவிட்டது. 5000 கோடி ரூபாய் செலவு செய்தும், வருடந்தோறும் சென்னையை வெள்ளக்காடாக மாற்றுவதே உங்கள் சாதனை.

கோவை மற்றும் மதுரை மெட்ரோ ரயில் திட்டத்திற்கு வேண்டுமென்றே உங்கள் அரசு தவறான DPR-ஐ வழங்கியது உங்களுக்கு நினைவில் இருக்கிறதா? திருத்தம் செய்யப்பட்ட DPR-ஐ மீண்டும் சமர்ப்பிக்க எண்ணம் இருக்கிறதா இல்லையா?

கீழடி ஆய்வறிக்கை, உலகளாவிய அளவில் கொண்டு செல்லப்பட வேண்டும் என்பதால், மேலும் அறிவியல்பூர்வமான ஆதாரங்கள் வேண்டும் என்று கேட்கிறது மத்திய அரசு. அந்த ஆதாரங்களைக் கொடுக்க என்ன தயக்கம் உங்கள் அரசுக்கு?

நீட் தேர்வை, தமிழக மக்கள் எதிர்க்கவில்லை. ஏழை, எளிய மாணவர்களுக்கு, நீட் ஒரு வரப்பிரசாதம் என்பதை, ஆண்டுதோறும் மருத்துவக் கல்லூரிகளில் இணையும் எளிய பின்புலம் கொண்ட பெற்றோர்கள் கூறுவார்கள். மருத்துவக் கல்வி இடங்களை விற்று, இத்தனை ஆண்டு காலம் பல கோடி சம்பாதித்த திமுக கும்பலுக்கு மட்டுமே நீட் தேர்வு கசக்கிறது.

ஒரு காலத்தில், தங்களுக்குப் பிடிக்காதவர்கள் குறித்து, பொதுக்கழிவறைகளில் கரித்துண்டால் எழுதி அற்ப சந்தோஷப்படும் மோசமான பழக்கத்தை, AI காலத்திலும் தொடராதீர்கள் முதலமைச்சர் திரு @mkstalin அவர்களே. இனியாவது மக்களுக்கான அரசியலை முன்னெடுக்கக் கற்றுக் கொள்ளுங்கள்.

ஊழல் திமுக அரசுக்கு விடை கொடுக்கும் காலம் வந்துவிட்டது!

pm modi in bihar - 2026

ஊழல் திமுக அரசுக்கு விடை கொடுக்கும் காலம் வந்துவிட்டது என்று தமிழகம் முடிவு செய்துவிட்டதாக, பிரதமர் மோடி தனது சமூகத் தளப் பதிவுகளில், தமிழில் பதிவிட்டு கவனத்தை ஈர்த்துள்ளார்.

திருவனந்தபுரத்தில் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு விட்டு பிரதமர் மோடி இன்று பிற்பகல் சென்னை வருகிறார். செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் நடக்கும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பேசுகிறார்.

மிகப் பெரிய அளவில் திட்டமிடப்பட்டுள்ள இந்தக் கூட்டத்தில் அவர் தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சித் தலைவர்களை அறிமுகம் செய்து, வரவிருக்கும் தமிழக சட்டமன்றத் தேர்தல் பிரசாரத்தைத் தொடங்கி வைக்கிறார். இந்தச் சூழலில் தமிழக வருகை குறித்து முன்னோட்டமாக பிரதமர் மோடி தமிழில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் குறிப்பிட்டிருப்பதாவது…

தமிழ்நாடு தேசிய ஜனநாயகக் கூட்டணியுடன் இருக்கிறது!

மதுராந்தகத்தில் இன்று பிற்பகலில் நடைபெறும் பேரணியில் நான் தேசிய ஜனநாயகக் கூட்டணித் தலைவர்களுடன் கலந்துகொள்ளவிருக்கிறேன். ஊழல் திமுக அரசுக்கு விடை கொடுக்கும் காலம் வந்துவிட்டது என்று தமிழ்நாடு முடிவு செய்துவிட்டது.

தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியின் சாதனையும் பிராந்திய பெருவிருப்பங்கள் மீதான அதன் அர்ப்பணிப்பும் மாநில மக்கள் மனதில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன.

பரமன் அளித்த பகவத் கீதை (19): வியாசர்

bhagavat githa series - 2026

பகவத்கீதை பகுதி 19மகாபாரதக் கதை

ஆதிபர்வம் -4 – வியாசர்

முனைவர் கு.வை.பாலசுப்பிரமணியன்

நாராயணம், பத்மபுவம், வஸிஷ்டம் சக்திம் ச தத்புத்ர பராசரம் ச வ்யாஸம் சுகம்
கௌடபதம் மஹாந்தம் கோவிந்த யோகீந்த்ரம் அதாஸ்ய சிஷ்யம் |
ஸ்ரீ சங்கராச்சார்யம் அதாஸ்ய பத்மபாதம் ச ஹஸ்தாமலகம் ச சிஷ்யம் தம் தோடகம்
வார்த்திககாரம் அன்யான் அஸ்மத் குரூன் ஸந்ததம் ஆனதோஸ்மி ||

          மேலே சொல்லப்பட்டுள்ள ஸ்லோகத்தில் குரு பரம்பரையைப் பற்றிச் சொல்லியிருக்கிறார்கள். ஸ்ரீமன் நாரயாணன், அவரது மகன்/சீடன் நான்முகப் பிரம்மா; அவரது மகன்/சீடன் வசிஷ்டர்; அவரது மகன்/சீடன் சக்தி; சக்தியின் மகன்/சீடன் பராசரர்; பராசரரின் மகன்/சீடன் வியாசர்; வியாசரின் மகன்/சீடன் சுகப் பிரம்மம்; சுகரின் சீடர் கௌடபாதர்; கௌடபாதரின் சீடர் கோவிந்தபாதர்; கோவிந்தபாதரின் சீடர் ஆதிசங்கரர்; சங்கரரின் சீடர் பத்மபாதர்; பத்மபாதரின் சீடர் ஹஸ்தாமலகர்.

          வசிஷ்டரின் மகனான சக்தி விரைவில் இறந்துவிடுகிறார். அவரின் இறப்புக்குப் பிறகே பராசரர் பிறக்கிறார். எனவே வசிஷ்டர் பராசரரை வளர்த்து அவருக்கு குருவாக இருந்து வேதங்களைக் கற்பிக்கிறார். சிலகாலம் கழித்து வசிஷ்டர் பராசரரைத் திருமணம் செய்துகொள்ள வற்புறுத்துகிறார். ஆனால், பராசரர் மானுடம் சிறக்கவும் வேதங்கள் புனருத்தாரணம் ஆகவும் வேண்டி ஒரு புத்திரனைத் தான் கர்ப்பாதானம் செய்வதன் மூலம் பெற்றுத் தருவதாகவும் திருமணம் என்னும் பந்தம் வேண்டாம் என்றும் வேண்டினார்.

          ஒரு முறை கங்கைக்கரையில் அக்கரைக்குச் செல்லப் படகுக்குக் காத்திருந்த வேளையில் மச்சகந்தி என்னும் கன்னிகை படகு ஓட்டி வர அவள் படகில் பயணித்த பராசரர் அவள் அழகிலும், அவள் விருத்தாந்தத்திலும் மனம் திருப்தி உற்றவராய் அவளிடம் தான் இன்னார் எனக் கூறி இப்போது இன்னும் சற்று நேரத்தில் குறிப்பிட்ட கிரகநிலையுடன் கூடிய வேளை வரப் போவதால் அப்போது அவர் அவளுடன் கூடினால் சத்புத்திரன் பிறப்பதோடு உலகம் உய்யவும் அந்த மகன் உதவி செய்வான் என்று சொல்கிறார்.

          முதலில் மறுக்கிறாள் மச்சகந்தி. தன் கன்னித் தன்மை போய்விடுமே எனப் பதறுகிறாள். மேலும் பராசரர் போன்ற கற்றுணர்ந்த பிரமசாரி ஒரு மீனவப் பெண்ணான அவளைத் தொட்டுக் கூடினால் உலகம் அபவாதமாகப் பேசுமே எனப் பயப்படுகிறாள்.  ஒரு குழந்தைக்காக இத்தகைய தவறு செய்யலாமா என்றும் கேட்கிறாள். அவளைப் பல்வேறு ஆறுதல் மொழிகள் சொல்லித் தேற்றிய பராசரர் அவளுக்குப் பிள்ளை பிறந்த உடனேயே அவள் மீண்டும் பழைய மாதிரி கன்னித் தன்மையை அடைவாள் என வாக்கும் கொடுக்கிறார்.

அதன் பின்னர் பராசரர் அந்தத் தருணம் இயற்கையின் அமைப்பும், கிரஹங்களின் அமைப்பும்,உயர் நன்மை தரும் காலமாகவும் இருப்பதாகக் கூறி அருகிலுள்ள ஒரு தீவுக்குப் படகை ஓட்டிச் செல்லும்படி அவளிடம் சொல்கிறார். அவள் உடலில் அதுவரை இருந்த மீன் வாடையை முற்றிலும் போக்கிப் பரிமள காந்தியாக்கிய பின்னர், அங்கே பனி மூட்டத்தை உருவாக்கி அவளுடன் கூடுகிறார். அவர் நினைத்தபடியே ஆண் மகவு பிறக்கிறது.

          குழந்தை கருமை நிறத்துடன் இருந்ததாலும் தீவில் பிறந்ததாலும் க்ருஷ்ண த்வைபாயனர் என்னும் பெயரைச் சூட்டுகிறார். குழந்தையைத் தன்னுடன் எடுத்துச் சென்று ரிஷிகளின் ஆசிரமத்தில் வளரச் செய்தார். மச்சகந்தி நினைக்கும் நேரம் அவள் மகன் அவளை வந்து பார்ப்பான் என்னும் வரத்தையும் அருளுகிறார்.

வாசிப்போர் நாடிடும் புத்தகக் கண்காட்சி!

chennai bookfare - 2026
  • ஜெயஸ்ரீ எம். சாரி

கடந்த இரு வாரங்களாக நடைபெற்ற சென்னை புத்தகக் கண்காட்சி 2026 நேற்று இனிதே நிறைவுற்றது. இந்தக் கண்காட்சியில் எவ்வளவுக்கு புத்தகங்கள் விற்றிருக்கின்றன மக்கள் எவ்வளவு பேர் வந்தார்கள் என்பதெல்லாம் இனி தெரியவரும். வாசிப்புப் பழக்கம் தேய்ந்து வரும் இந்நாட்களில் இத்தகைய புத்தகக் கண்காட்சிகள் நிச்சயம் ஓர் ஊக்குவிப்பு முயற்சியே!

நம் இல்லத்தில் இருக்கும் புத்தகங்களே நமக்கு பெருமை என்பது ஒரு அழகான கூற்றாகும். புத்தகம் வாசிப்பை தன் அன்றாட நிகழ்வுகளில் கட்டாயமாக கொண்டுள்ள என் தந்தையுடன் நான் சென்னை புத்தகக் கண்காட்சி – 2026 காணச் சென்றேன்.

எனக்கு ஒரு அருமையான அனுபவம் அங்கு கிட்டியது. நுழைவுச் சீட்டினையும், ஸ்டால்களின் வரிசைகள் தாங்கிய சீட்டுகளையும் பெற்றுக் கொண்டு நாங்கள் இருவரும் ஸ்டால்களில் இருந்த புத்தகங்களை காணச் சென்றோம்.

பிரம்மாண்ட முறையில் அமைக்கப்பட்டுள்ள கண்காட்சியில் புத்தகங்களை காண்பதே மனதிற்கு நிறைவாய் இருந்தது. அந்தக் காலத்து எழுத்தாளர்களான உ.வே.சா, நா. பார்த்தசாரதி, லா.சா.ரா. கோதைநாயகி அம்மாள், லெக்ஷ்மி, மெரீனா, சோ ராமஸ்வாமி, சாவி, கல்கி, அண்ணாதுரை போன்றோர்களின் புத்தகங்களை பார்க்கும் போதே பரவசமாய் இருந்தது.

நாங்கள் சென்ற அன்று கூட்டம் அதிகமில்லை. மாற்றுத் திறனாளிகள் சிலர் தங்கள் உதவியாளர்களோடு வந்திருந்ததைப் பார்த்த போது புத்தகங்கள் ஒரு சிறந்த தோழமையாக, துணையாக இன்றும் இருக்கின்ற விஷயம் புரிந்தது. புத்தகப் பிரியரான என் தந்தை பார்த்து பார்த்து தனக்கு பிடித்த எழுத்தாளர்களின் புத்தகங்களை தனக்கு பிடித்த பதிப்பகங்களில் இருந்து வாங்கினார்.

லேடீஸ் ஸ்பெஷல் ஸ்டாலில் திருமதி. கிரிஜா ராகவன், ஆசிரியர், லேடீஸ் ஸ்பெஷல், அவர்களைச் சந்திக்கும் வாய்ப்பு எனக்கு கிட்டியது. அவருக்கு இலக்கியச் சாரலின் புத்தாண்டு – பொங்கல் இதழினை அளித்து விட்டு புகைப்படமும் எடுத்துக் கொண்டேன். பின்னர், எங்களுக்கு பிடித்த புத்தகங்களை வாங்கிக் கொண்டோம்.

பிரபல தமிழ் நாளிதழ் அமைத்திருந்த ஸ்டாலில் நல்லக் கூட்டம். மற்றொரு தமிழ் நாளிதழ் ஸ்டால் காலியாகவே இருந்தது. புகழ்பெற்ற ஆங்கில நாளிதழின் ஸ்டாலில் இருந்த ஊழியர்கள் வாசகர்களின் கையைப் பிடித்து இழுத்து சந்தாக் கட்டுங்கள் என்று கட்டாயப்படுத்தாததால் வாசகர்கள் தப்பித்தார்கள்.

தமிழில் சிறு பத்திரிகைகள் என்ற நூலில் ‘நம் உரத்த சிந்தனை’யும் கவரில் இருந்ததால் அதையும் ‘க்ளிக்’ செய்தேன். என் தந்தை பணிபுரிந்த இந்து சமய அறநிலைய ஆட்சித்துறையின் ஸ்டாலில் அவரை நிற்க வைத்து ஒரு புகைப்படம் எடுத்துக் கொண்டு மனநிறைவோடு புதிய புத்தகங்களை கையில் ஏந்தி நாங்கள் வந்தோம். தமிழ்நாடு அரசின் இலவச பேருந்தில் கண்காட்சி திடலில் இருந்து வந்து மெட்ரோவில் இல்லம் வந்து சேர்ந்தோம். இல்லம் வந்தவுடன் என் தந்தை தான் வாங்கிய புத்தகங்களில் எல்லாம் தன் பெயரையும், வாங்கிய தேதியையும் எழுதினார்.

எதிராகப் பேசியதாக, இந்த நீதிபதியையும் பதவி நீக்க திமுக., தீர்மானம் கொண்டு வருமா?

annamalai bjp tn leader - 2026

தங்களுக்கு எதிராகப் பேசியதாகக்க் கூறி, இந்த நீதிபதியையும் பதவி நீக்க தீர்மானம் கொண்டு வருமா திமுக.,? என்று அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.

இந்து மதத்தை குறிவைத்து தாக்குபவை திக., திமுக., : நீதிமன்றம் பளீச் கருத்து தெரிவித்திருக்கும் நிலையில், உதயநிதி கூறியது அப்பட்டமான இன அழைப்பு, இந்து வெறுப்புப் பேச்சுதான் என்று நீதிமன்றம் உறுதி செய்த நிலையில், தங்களுக்கு எதிராக கருத்து தெரிவித்ததால், இந்த நீதிபதியையும் பதவி நீக்க தீர்மானம் கொண்டுவருவார்களா திமுக.,வினர் என்று பாஜக., முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார். இது குறித்து அவர் சமூகத் தளத்தில் பதிவு செய்த கருத்து…

மாண்புமிகு சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை அமர்வு, பாஜக-வின் தகவல் தொழில்நுட்பத் துறையின் தேசியப் பொறுப்பாளரான திரு. அமித் மால்வியா அவர்களுக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிரான ஊழல் நிறைந்த திமுக அரசால் பதிவு செய்யப்பட்ட பழிவாங்கும் மற்றும் அரசியல் உள்நோக்கம் கொண்ட முதல் தகவல் அறிக்கையை ரத்து செய்துள்ளது.

சனாதன தர்மத்தை ஒழிக்க வேண்டும் என்று பகிரங்கமாக அழைப்பு விடுத்த திரு. உதயநிதி ஸ்டாலின் ஆற்றிய வெறுப்புப் பேச்சு குறித்து கேள்வி கேட்பதோ அல்லது அதற்குப் பதிலளிப்பதோ ஒரு குற்றச் செயல் ஆகாது என்றும், அது சட்ட செயல்முறையைத் தவறாகப் பயன்படுத்துவதாகும் என்றும் நீதிமன்றம் திட்டவட்டமாகக் குறிப்பிட்டது.

முக்கியமாக, திமுக மற்றும் திராவிடர் கழகம் ஆகியவை இந்து மதத்தின் மீது கொண்டுள்ள நீண்டகால விரோதப் போக்கையும், கடந்த நூறு ஆண்டுகளில் நடந்த இத்தகைய தாக்குதல்களையும் நீதிமன்றம் சுட்டிக்காட்டியது.

வெறுப்புப் பேச்சைத் தொடங்கியவர் மீது தமிழ்நாட்டில் எந்த வழக்குகளும் பதிவு செய்யப்படாமல் அவர் தப்பித்துச் செல்ல அனுமதிக்கப்பட்ட நிலையில், அதற்கு எதிர்வினையாற்றியவர்கள் அல்லது கேள்வி எழுப்பியவர்கள் திமுக அரசாங்கத்தின் அடக்குமுறைக்கு ஆளாக்கப்பட்டனர் என்ற அப்பட்டமான அநீதியையும் நீதிமன்றம் பதிவு செய்தது.

நீதி வென்றுள்ளது. உண்மையை வழக்குத் தொடர முடியாது, திமுக-வின் அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையால் நாகரிக நம்பிக்கையை அணைத்துவிடவும் முடியாது. திமுக மற்றும் ‘இந்தியா’ கூட்டணியில் உள்ள மற்ற கட்சிகள் நீதிபதி ஸ்ரீமதி அவர்களுக்கும் எதிராக பதவி நீக்கத் தீர்மானம் கொண்டு வருவார்களா?


kadeswara subramaniam hindu munnani - 2026

உதயநிதி பதவி விலக வேண்டும்!

சனாதனம் குறித்த பேச்சுக்கு உயர் நீதிமன்றம் கண்டனம் தெரிவித்த நிலையில், உதயநிதி பதவி விலக வேண்டும் என்று, இந்துமுன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் அறிக்கை வெளியிட்டார். அவரது அறிக்கை:
 
சனாதனம் குறித்து தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கடந்த 2023 ஆம் ஆண்டு சனாதன ஒழிப்பு மாநாட்டில் பங்கேற்று சனாதனத்தை அதாவது இந்து தர்மத்தை டெங்கு, மலேரியா,கொசு போல ஒழிப்போம் என பேசினார்.
 
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாரதிய ஜனதா கட்சி தகவல் தொழில்நுட்ப பிரிவு தேசிய ஒருங்கிணைப்பாளர் அமித் மாளவியா சமூக வலைதளங்களில் “சனாதனத்தை பின்பற்றும் 80 சதவீத இந்துக்களை கொலை செய்ய உதயநிதி  தூண்டுகிறாரா?” என பதிவிட்டதற்காக அவர் மீது திருச்சி மாவட்ட காவல்துறையால் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
 
இந்த வழக்கினை ரத்து செய்யக்கோரி அமித் மாளவியா தொடர்ந்த வழக்கில் மாண்புமிகு சென்னை உயர்நீதிமன்றம் மதுரை கிளையில் இன்று விசாரணைக்கு வந்தது.
 
நீதியரசர் ஸ்ரீமதி அவர்கள் பாஜக நிர்வாகி அமித்மாளவியா மீது போடப்பட்ட வழக்கை ரத்து செய்தார். மேலும் இந்த வழக்கு குறித்து அமித்மாளவியா உதயநிதிக்கு எதிராக போராட்டத்தை தூண்டவில்லை,  உதயநிதியிடமிருந்து பதிலை மட்டுமே கேட்டுள்ளார்.
 
வெறுப்புப் பேச்சை பேசும் உதயநிதி போன்றவர்கள் தப்பி விடுகின்றனர். ஆனால் அதற்கு எதிர் கேள்வி கேட்கும் அமித்மாளவியா  போன்றவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்படுகிறது. நீதிமன்றம் இதனை வேதனையுடன் பார்க்கிறது.
 
ஒழித்தல் என்ற வார்த்தை “ஏற்கனவே இருக்கும் ஒன்றை இருக்கக் கூடாது” என்கின்ற பொருளை தருகிறது. சனாதனம் இருக்கக் கூடாது என்றால் அதைப் பின்பற்றும் மக்களும் இருக்கக்கூடாது என்று தானே பொருள்படுகிறது.  சனாதனத்தை பின்பற்றும் ஒரு குழுவை இருக்கக் கூடாது என்றால் அது இனப்படுகொலை, கலாச்சார படுகொலையைக் குறிப்பதாகும் என நீதிபதி தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார்.
 
தொடர்ந்து இந்து மதத்தை திமுக குறிவைத்து தாக்கிப்பேசி வருவதற்கு  நீதிமன்றம் வேதனை தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. நீதிமன்றத்தின் தீர்ப்பு முழுக்க முழுக்க உதயநிதியின் வன்மமான  இந்து விரோத பேச்சையே கண்டித்து உள்ளது.
 
நீதிமன்ற தீர்ப்பின் கண்டனத்திற்கு தார்மீக பொறுப்பேற்று துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பதவி விலக வேண்டும் என தமிழகத்தில் உள்ள இந்து மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
 
ஆனால் திமுகவில் தார்மீகம், மாண்பு,  நீதித்துறைக்கு – அதன் தீர்ப்புக்கு  மதிப்பளிப்பது என்பதெல்லாம் நினைத்துப் பார்க்க முடியாத ஒன்று.
 
நீதியரசர் ஸ்ரீமதி அவர்களை பதவி நீக்கம் செய்யக்கோரி பாராளுமன்றத்தில் திமுக, காங்கிரஸ் கூட்டணி தீர்மானம் கொண்டு வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை. திமுகவின் சட்டவிரோத நடவடிக்கைகளை தோலுரிக்கும் நீதிபதிகளின் கேள்விக்கு பதில் சொல்ல முடியாமல் திமுக கூனி குறுகி ஓடி ஒளிந்து கொண்டு நீதித்துறையையே குற்றம் சாட்டுவது வழக்கமான ஒன்றுதான்.
 
ஆனால் உதயநிதியின் பேச்சுக்கு இந்து மக்கள் வரும் தேர்தலில்   தமிழகத்தில் திமுகவை நிச்சயம் வீழ்த்துவார்கள். மதுரை உயர்நீதிமன்றத்தின் இந்த வரலாற்றுச் சிறப்பு மிக்க தீர்ப்பை பெரும்பான்மையான மக்கள் வரவேற்கின்றனர்..

பரமன் அளித்த பகவத் கீதை (18): பாஹ்லீகன்

bhagavat githa series - 2026

முனைவர் கு.வை.பாலசுப்பிரமணியன்

பகவத்கீதை பகுதி 18
மகாபாரதக் கதை

ஆதிபர்வம் -3 – பாஹ்லீகன்

பிரதீபாவின் மகன் சந்தனு என சென்ற பகுதியில் பார்த்தோம். பிரதீபாவுக்கு தேவாபி, சந்தனு, பாஹ்லீகன் என மூன்று மகன்கள். தேவாபி வெளியில் தெரியக்கூடிய வகையில் சரும நோய் உடையவராய் இருந்தார். எனவே அவர் அரசப் பதவிக்குத் தகுதியற்றவராக ஆனார். எனவே அவர் காட்டிற்கு, தவம் செய்யச் சென்றுவிட்டார். சந்தனு அரசரானார். அவரது தம்பி பாஹ்லீகன் தன்னுடைய மாமன் நாட்டிற்குச் சென்ற் உ அங்கு அரசரனார்.. அவருடைய தேசம் இந்தியாவிற்கு வடமேற்கில் இருந்தது. அதனைத் தற்போதைய பாரசீகம் (ஈரான்) எனச் சொல்லுகிறார்கள்.

குருக்ஷேத்திரப் போரில், பாஹ்லீகன் வம்சத்தினர் பெரும்பாலும் கௌரவர்களின் பக்கம் நின்று போரிட்டனர். பாஹ்லீகனின் மகனான சோமதத்தன், அவரின் மகன் பூரிஸ்ரவஸ் போன்றோர் இந்தப் பிரிவில் முக்கியமானவர்கள். பாஹ்லீகர்கள் காந்தாரர்கள், காம்போஜர்கள் போன்ற பிற வடமேற்குப் பகுதி அரச குலங்களுடன் இணைந்து குறிப்பிடப்படுகிறார்கள்.

பூரிஸ்ரவசை சாத்யகி போரில் கொல்கிறார். சோமதத்தனையும் சாத்யகி கொன்றதாக துரோண பர்வத்தில் செய்தி இடம்பெறுகிறது. பின்னாளில் யாதவர்கள் ஆழிப்பேரலையால் அழியும்போது சாத்யகி பூரிஸ்வரசைக் கொன்றா செய்தி மீண்டும் வருகிறது.

சந்தனு

இஷ்வாகு குலத்தைச் சேர்ந்த மகாபிஷக் என்ற மன்னன் தனது வாழ்நாளில் சேமித்த புண்ணியங்களுக்காக சொர்க்கத்தில் இருக்க தேவர்களால் அனுமதிக்கப்பட்டார். இந்திர சபையில் தேவர்களுக்குச் சமமாக அமர்ந்து அப்ஸரக் கன்னிகைகளின் நடனங்களை கண்டு ரசிக்கவும், கந்தர்வர்களின் கான இசையை கேட்கவும், சுர பானத்தை பருகியும், எதையும் தரவல்ல காமதேனு பசுவிடம், கற்பக மரம் மற்றும் சிந்தாமணிக் கல் ஆகியவற்றுடன் தொடர்பு கொள்ளவும் அனுமதிக்கப்பட்டார்.

ஒரு நாள் கங்கை இந்திரனின் சபைக்கு வந்தாள் அப்போது மெல்லிய தென்றல் வீசவே, அவளது மேலாடை சற்று விலகி அவளது மார்பு அழகைக் காட்டியது. கூடியிருந்த தேவர்கள் மரியாதைக்காக தலையை குனிந்தனர், ஆனால் மகாபிஷக் வெட்கமின்றி கங்கையின் அழகை வியந்து கண் இமைக்காமல் பார்த்துக் கொண்டே இருந்தார். இந்த நிலையில் கங்கையும் சற்று நிலை தடுமாறித்தான் போனாள். இதைக் கண்ட இந்திரன் இருவரையும் எச்சரித்து மகாபிஷக்கை உடனடியாக தேவர்களின் நகரான அமராவதியை விட்டு வெளியேறுமாறு கட்டளையிட்டான். கங்கையை அழைத்து மகாபிஷக்கின் இதயத்தை சாந்தப்படுத்தி வந்தால் மீண்டும் அமராவதிக்கு வரலாம் என்று கூறிவிட்டார்.

மகாபிஷக் பிரதிபனுக்கு மகனாகப் பிறந்தார். சந்தனுவுக்கு மகுடம் சூட்டப்பட்டது. துறவு மேற்கொண்ட பிரதிபன் ஒரு நாள் நதிக்கரையில் தியானம் செய்து கொண்டிருந்தபோது கங்கை வந்து அவனுடைய வலது தொடையில் அமர்ந்தாள். பெண்ணே நீ என் வலது தொடையில் அமர்ந்துவிட்டாய் அதனால் மகளுக்கு சமமானவளாகிறாய், இடது தொடையில் அமர்ந்திருந்தால் மனைவியாவாய். (திருமணத்தின் போது மணப்பெண்ணை இடது பக்கம் அமரச்செய்து மங்கல நாண் அணிவிக்கிற நடைமுறை இன்றும் இந்தியாவில் நிலவுகிறது.) ஒரு மகளின் விருப்பத்தை நிறைவேற்றுவது தந்தையின் கடமை உன் விருப்பம் என்ன? நான் உங்கள் மகன் சந்தனுவை மணம் முடிக்க விரும்புகிறேன் என்றாள் கங்கை.

அப்படியே நடக்கும் என்று ஆசி வழங்கினார் பிரதிபன் சில நாட்களுக்குப் பிறகு தந்தையைக் காணவந்த சந்தனுவிடம் கங்கை என்ற அழகான பெண் உன்னை அணுகி திருமணம் செய்துகொள்ள விரும்புவாள், அவளது ஆசையை நிறைவேற்று அது தான் என் விருப்பமும் என்றார் பிரதிபன். விரைவிலேயே கங்கையும், சந்தனுவும் சந்தித்தனர். கங்கை ஒரு நிபந்தனை விதித்தாள்.

நான் என்ன செய்தாலும் என்னை எந்த கேள்வியும் கேட்கக் கூடாது, கேட்டால் உடனே போய்விடுவேன். கங்கை மீது காம வயப்பட்டிருந்த சந்தனு மறுமொழி சொல்லாமல் நிபந்தனையை ஏற்றுக்கொண்டான். கங்கை – சந்தனு திருமணம் நடந்து முடிந்தது.

இந்து மதத்தை குறிவைத்து தாக்குபவை திக., திமுக., : நீதிமன்றம் பளீச் கருத்து!

udayanidhi stalin - 2026

“சனாதன ஒழிப்பு’ என்பது இனப்படுகொலையைக் குறிக்கிறது, அவரது கருத்து வெறுப்புப் பேச்சுக்குச் சமம்” – என்று உதயநிதி ஸ்டாலினின் ‘சனாதன தர்மத்தை ஒழிப்போம்’ என்ற கருத்தை சென்னை உயர்நீதிமன்றம் கிழித்தெறிந்துள்ளது.

தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினின் சனாதன தர்மத்தை ஒழிப்பது குறித்த கருத்துக்களை விமர்சித்து சமூக ஊடகப் பதிவு செய்ததற்காக பாஜக ஐடி பிரிவுத் தலைவர் அமித் மாளவியா மீது பதிவு செய்யப்பட்ட குற்றவியல் வழக்கை ரத்து செய்து, சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு, அமைச்சரின் கருத்து வெறுப்புப் பேச்சுக்கு சமம் என்று செவ்வாய்க்கிழமை, 20 ஜனவரி 2026 அன்று கூறியது.

அமித் மாளவியாவின் மனுவை விசாரித்த நீதிபதி எஸ். ஸ்ரீமதி, கடந்த 100 ஆண்டுகளாக திராவிடக் கழகத்தாலும், பின்னர் திராவிட முன்னேற்றக் கழகத்தாலும் (திமுக) இந்து மதத்தின் மீது தொடர்ச்சியான தாக்குதல் நடத்தப்பட்டு வருவதாகவும், அமைச்சரின் பேச்சு சனாதன தர்மத்தைப் பின்பற்றும் இந்துக்களுக்கு எதிராக இயக்கப்பட்டதாகவும் கூறினார்.

“அமைச்சரின் கருத்துக்கள் வெறுப்புப் பேச்சுக்குச் சமம்” என்று நீதிபதி கூறினார்.

2023 ஆம் ஆண்டு உதயநிதியின் கருத்துக்களை இனப்படுகொலைக்கான அழைப்பு என்று மாளவியா விவரித்ததை அடுத்து, திருச்சி காவல்துறை பதிவு செய்த எஃப்.ஐ.ஆரை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுவை நீதிமன்றம் விசாரித்தது. மாளவியாவின் சமூக ஊடகப் பதிவு அமைச்சரின் உரையை தவறாக சித்தரித்து, சமூகத்தின் பல்வேறு பிரிவுகளுக்கு இடையே பகைமையைத் தூண்ட முயன்றதாக எழுந்த புகாரைத் தொடர்ந்து இந்த எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது.

தற்போதைய சூழ்நிலையால் நீதிமன்றம் வேதனை அடைந்துள்ளதாகக் கூறிய நீதிபதி ஸ்ரீமதி, “வெறுப்புப் பேச்சை விமர்சித்த நபரை நீதிமன்றங்கள் விசாரிக்கின்றன, ஆனால் வெறுப்புப் பேச்சைத் தொடங்கிய நபருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவில்லை. தற்போதைய வழக்கில், அமைச்சரின் வெறுப்புப் பேச்சுக்காக தமிழ்நாட்டில் எந்த வழக்கும் பதிவு செய்யப்படவில்லை, ஆனால் சில வழக்குகள் பிற மாநிலங்களில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன” என்று கூறினார்.

அமைச்சரின் கட்சித் தலைவர்கள் சனாதன தர்மத்திற்கு எதிராக பலமுறை பேசியதாக மாளவியாவின் வழக்கறிஞர் கூறியதைக் குறிப்பிட்ட நீதிபதி, பெரியார் ஈ.வே. ராமசாமியின் நடவடிக்கைகள் மற்றும் பேச்சுகளை மேற்கோள் காட்டி, “திராவிடக் கழகத்தாலும், அதைத் தொடர்ந்து திமுகவாலும் கடந்த 100 ஆண்டுகளாக இந்து மதத்தின் மீது தெளிவான தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது, அதில் அமைச்சர் ஒருவராக இருக்கிறார்.

ஒட்டுமொத்த சூழ்நிலைகளையும் கருத்தில் கொண்டாலும், அமைச்சரின் உரையின் மறைக்கப்பட்ட அர்த்தத்தை மனுதாரர் கேள்வி எழுப்பியிருப்பது தெரிகிறது.”அதன் ஒத்த சொற்களைப் பிரித்தெடுத்து நீதிபதி கூறினார்: “‘அழித்தல்’ என்ற சொல் ஏற்கனவே உள்ள ஏதோ ஒன்று இருக்கக்கூடாது என்பதைக் குறிக்கும்.

தற்போதைய வழக்கில் இதைப் பயன்படுத்தினால், சனாதன தர்மம் இருக்கக்கூடாது என்றால், சனாதன தர்மத்தைப் பின்பற்றுபவர்கள் இருக்கக்கூடாது. இது அழிப்பவரின் கருத்துக்கு ஒத்துப்போகாத செயல்பாடுகளை அடக்குவதைக் குறிக்கிறது.”

எனவே, ‘சனாதன ஒழிப்பு’ என்ற தமிழ் சொற்றொடர் இனப்படுகொலை அல்லது கலாச்சாரக் கொலையைக் குறிக்கும் என்று தெளிவாகக் கூறுகிறது, மாளவியாவின் உரையை கேள்வி எழுப்பிய பதிவு வெறுப்புப் பேச்சாக இல்லை என்று நீதிபதி கூறினார்.

“ஆளுநர் மற்றும் பாஜக சனாதனைப் பற்றிப் பேசலாம், பிறகு அமைச்சர் ஏன் சனாதனைப் பற்றிப் பேசக்கூடாது?” என்று எதிர் பிரமாணப் பத்திரத்தில் கூறப்பட்ட அறிக்கைக்காக சம்பந்தப்பட்ட காவல் ஆய்வாளரை நீதிமன்றம் கண்டித்தது.

நீதிபதி ஸ்ரீமதி கூறினார்: “மேலே உள்ளவை எதிர் அரசியல் சாயத்தைக் கொண்டிருப்பதைத் தெளிவாகக் குறிக்கும், ஆனால் துரதிர்ஷ்டவசமாக அது விசாரணை அதிகாரியால் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதிகாரிகள் அரசியலற்றவர்களாக இருக்க வேண்டும், மேலும் ஒரு அரசியல் கட்சியுடன் பக்கபலமாக இருப்பது கண்டிக்கத்தக்கது.

”திருச்சி திமுக வழக்கறிஞர் பிரிவின் மாவட்ட அமைப்பாளர் கே.ஏ.வி. தினகரனால் அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில், இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவுகள் 153, 153A, 504 மற்றும் 505(1)(b) இன் கீழ் மாளவியா மீது திருச்சி நகர குற்றப்பிரிவு வழக்குப் பதிவு செய்துள்ளது.

தனது மனுவில், மாளவியா குற்றச்சாட்டுகளை மறுத்து, ஏற்கனவே பொதுவில் இருந்த அமைச்சரின் உரையை மீண்டும் உருவாக்கியதாகவும், அதன் நோக்கம் மற்றும் நோக்கத்தைக் கேள்விக்குட்படுத்துவதன் மூலம் அதைப் பற்றிய தனது புரிதலை வெளிப்படுத்தியதாகவும் கூறினார்.

வெளியேறியது ஏன்? திமுக., அரசு மீது ஆளுநர் மாளிகை அடுக்கடுக்கான குற்றச்சாட்டு!

TN Governor RN Ravi
TN Governor RN Ravi

பரபரப்பான சூழலில், ஆண்டின் முதல் கூட்டத்தொடர், தமிழக சட்டமன்றத்தில் இன்று காலை 9.30 மணிக்கு தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கியது. அதைத் தொடர்ந்து தேசிய கீதம் பாடப்பட வேண்டும்.  சட்டசபை கூடியதும்,  தேசிய கீதம் பாடாததால் ஆளுநர் ரவி, தமிழக அரசின் உரையைப் படிக்காமல் புறப்பட்டுச் சென்றார். இந்நிலையில், சட்டமன்றத்தில் நடந்தது குறித்து ஆளுநர் மாளிகை விளக்கம் அளித்தது.

சட்டமன்றத்தில் நடந்தது குறித்து ஆளுநர் மாளிகையான ‘லோக் பவன்’ விளக்கம் அளித்துள்ளது.  ஆளுநர் மாளிகையின் சமூகத்தளப் பக்கத்தில் வெளியிடப்பட்ட அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது ….

ஆளுநர் பேசும் போது அவரது மைக் மீண்டும் மீண்டும் அணைக்கப்பட்டதால், பேச அனுமதிக்கப்படவில்லை என்பதால், ஆளுநர் ரவி சட்டசபையில் இருந்து வெளியேறினார்.

1- ஆளுநரின் மைக் மீண்டும் மீண்டும் அணைக்கப்பட்டது, மேலும் அவர் பேச அனுமதிக்கப்படவில்லை.

2- அந்த உரையில் ஆதாரமற்ற பல கூற்றுகளும், தவறாக வழிநடத்தும் அறிக்கைகளும் உள்ளன. மக்களைப் பாதிக்கும் பல முக்கியப் பிரச்சினைகள் புறக்கணிக்கப்பட்டுள்ளன.

3- மாநிலம் 12 லட்சம் கோடி ரூபாய்க்கும் அதிகமான பெரும் முதலீடுகளை ஈர்த்துள்ளது என்ற கூற்று உண்மைக்குப் புறம்பானது. வருங்கால முதலீட்டாளர்களுடனான பல புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் காகித அளவிலேயே உள்ளன. உண்மையான முதலீடு அதில் ஒரு சிறு பகுதி மட்டுமே. முதலீட்டுத் தரவுகள், முதலீட்டாளர்களுக்குத் தமிழ்நாடு கவர்ச்சிகரமானதாக இல்லாமல் போவதைக் காட்டுகின்றன. நான்கு ஆண்டுகளுக்கு முன்பு வரை, மாநிலங்களில் தமிழ்நாடு அந்நிய நேரடி முதலீட்டைப் பெறுவதில் நான்காவது பெரிய மாநிலமாக இருந்தது. இன்று அது ஆறாவது இடத்தில் நீடிப்பதற்கே போராடுகிறது.

4- போக்சோ பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் 55%க்கு மேல் அபாயகரமாக அதிகரித்துள்ள போதிலும், மற்றும் பெண்கள் மீதான பாலியல் துன்புறுத்தல் சம்பவங்கள் 33%க்கு மேல் அதிகரித்துள்ள போதிலும், பெண்களின் பாதுகாப்புப் பிரச்சினை முற்றிலும் புறக்கணிக்கப்பட்டுள்ளது!

5- போதைப்பொருள் மற்றும் போதை வஸ்துக்களின் பரவலான புழக்கம் மற்றும் பள்ளி மாணவர்கள் உட்பட இளைஞர்களிடையே போதைப்பொருள் பழக்கம் தொடர்பான வழக்குகளின் அதிகரிப்பு ஒரு மிகத் தீவிரமான கவலை தரத் தக்கதாகும். போதைப்பொருள் பழக்கத்தால் ஒரே ஆண்டில் 2000க்கும் மேற்பட்டோர், பெரும்பாலும் இளைஞர்கள், தற்கொலை செய்துகொண்டுள்ளனர். இது நமது எதிர்காலத்தை கடுமையாகப் பாதிக்கிறது. இது சாதாரணமாகப் புறக்கணிக்கப்பட்டுள்ளது!

6- தலித்துகளுக்கு எதிரான அட்டூழியங்களும், தலித் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறையும் கடுமையாக அதிகரித்து வருகின்றன. இருப்பினும், இது முற்றிலும் புறக்கணிக்கப்பட்டுள்ளது!

7- நமது மாநிலத்தில் ஒரே ஆண்டில் சுமார் 20,000 பேர் தற்கொலை செய்துகொண்டுள்ளனர் – அதாவது கிட்டத்தட்ட தினமும் 65 தற்கொலைகள். நாட்டில் வேறு எங்கும் நிலைமை இவ்வளவு அபாயகரமாக இல்லை. தமிழ்நாடு இந்தியாவின் தற்கொலைத் தலைநகரம் என்று குறிப்பிடப்படுகிறது. ஆனாலும், இது அரசாங்கத்திற்கு ஒரு கவலையாகத் தெரியவில்லை. இது புறக்கணிக்கப்பட்டுள்ளது!

8- கல்வித் தரத்தில் தொடர்ச்சியான சரிவும், கல்வி நிறுவனங்களில் பரவலான நிர்வாகச் சீர்கேடும் நமது இளைஞர்களின் எதிர்காலத்தைப் பாதகமாகப் பாதிக்கின்றன. 50%க்கும் மேற்பட்ட ஆசிரியர் பணியிடங்கள் பல ஆண்டுகளாக காலியாக உள்ளன, மேலும் வருகைப் பேராசிரியர்கள் அனைவரும் மன அலைக்கழித்தலுடன் அமைதியின்மையுடன் உள்ளனர். நமது இளைஞர்கள் நிச்சயமற்ற எதிர்காலத்தை எதிர்கொண்டுள்ளனர். இது அரசாங்கத்திற்கு ஒரு கவலையாகத் தெரியவில்லை, மேலும் இந்த பிரச்சினை முற்றிலும் புறக்கணிக்கப்பட்டுள்ளது;

9- பல ஆயிரம் கிராம பஞ்சாயத்துகளுக்கு பல ஆண்டுகளாகத் தேர்தல்கள் நடத்தப்படாததால் அவை செயலிழந்து கிடக்கின்றன. அவை நேரடியாக அரசாங்கத்தின் சிறப்பு அதிகாரிகளின் கீழ் உள்ளன. கோடிக்கணக்கான மக்களின் அடிமட்ட ஜனநாயக உரிமைகள் மறுக்கப்படுகின்றன. இது அரசியலமைப்பின் எழுத்துக்கும் உணர்வுக்கும் எதிரானது. கிராம பஞ்சாயத்துகள் மீட்டெடுக்கப்படுவதற்காக மக்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். இருப்பினும், இது அந்த உரையில் ஒரு வார்த்தைகூட குறிப்பிடப்படவில்லை. 

10- மாநிலத்தில் உள்ள பல ஆயிரம் கோயில்கள் அறங்காவலர் குழு இல்லாமல், மாநில அரசால் நேரடியாக நிர்வகிக்கப்படுகின்றன. கோயில்களின் தவறான நிர்வாகத்தால் கோடிக்கணக்கான பக்தர்கள் மிகுந்த மனவேதனையும் விரக்தியும் அடைந்துள்ளனர். பழங்காலக் கோயில்களைப் புனரமைப்பது மற்றும் பாதுகாப்பது குறித்த மாண்புமிகு சென்னை உயர் நீதிமன்றத்தின் முக்கிய வழிகாட்டுதல்கள் 5 ஆண்டுகள் கடந்தும் செயல்படுத்தப்படவில்லை. பக்தர்களின் உணர்வுகள் கொடூரமாகப் புறக்கணிக்கப்படுகின்றன!

11- தொழில்துறையை நடத்துவதற்கான வெளிப்படையான மற்றும் மறைமுகமான செலவுகள் காரணமாக குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் பெரும் அழுத்தத்தில் உள்ளன. அவை வேலைவாய்ப்பு மற்றும் வளர்ச்சிக்கு மிக முக்கியமான துறையாகும். இருப்பினும், நாட்டில் 5.5 கோடிக்கும் அதிகமான பதிவு செய்யப்பட்ட குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் உள்ள நிலையில், மகத்தான வளர்ச்சி சாத்தியக்கூறுகள் இருந்தபோதிலும், தமிழ்நாட்டில் சுமார் 40 லட்சம் நிறுவனங்கள் மட்டுமே உள்ளன. தமிழ்நாட்டைச் சேர்ந்த தொழில்முனைவோர் தங்கள் நிறுவனங்களை மற்ற மாநிலங்களில் அமைக்க வேண்டிய கட்டாயத்திற்கு உள்ளாகின்றனர். இந்த விவகாரம் முற்றிலும் புறக்கணிக்கப்படுகிறது;

12- ஏறக்குறைய அனைத்துத் துறைகளிலும் கீழ்மட்ட ஊழியர்களிடையே பரவலான அதிருப்தி நிலவுகிறது. அவர்கள் அமைதியிழந்தவர்களாகவும் விரக்தியுடனும் உள்ளனர். அவர்களின் நியாயமான குறைகளைத் தீர்ப்பதற்கான வழிகள் குறித்து எதுவும் குறிப்பிடப்படவில்லை;

13- தேசிய கீதம் மீண்டும் அவமதிக்கப்பட்டுள்ளது, மேலும் அடிப்படை அரசியலமைப்பு கடமை புறக்கணிக்கப்பட்டுள்ளது.

Reasons why Governor declined reading the Govt speech in the Assembly!

0
TN Governor RN Ravi
TN Governor RN Ravi

In a tense atmosphere, the first session of the year in the Tamil Nadu Legislative Assembly began this morning at 9:30 AM with the Tamil anthem. The national anthem was supposed to be sung afterward. However, as the national anthem was not played after the assembly convened, Governor Ravi left without reading the Tamil Nadu government’s address.

Following this, the Governor’s office issued a clarification regarding the events that transpired in the assembly.

Reasons why Governor declined reading the Govt speech in the Assembly:

1- Governor’s Mike was repeatedly switched off and he was not allowed to speak;

2- The speech contains numerous unsubstantiated claims and misleading statements. Several crucial issues troubling the people are ignored;

3- Claim that the state attracted huge investments to the tune of over 12 lakh crores is far from the truth. Many of the MOUs with prospective investors remain only on paper. Actual investment is hardly a fraction of it. Investment data show that Tamil Nadu is becoming less attractive for investors. Until four years ago Tamil Nadu, among the states, was the fourth largest recipient of foreign direct investment. Today it is struggling to remain at the Sixth.

4- Women safety issue is totally ignored though there is alarming increase of over 55% incidents of POCSO Rapes and over 33% increase in incidents of sexual molestation of women;

5- Rampant prevalence of Narcotics and Drugs and sharp increase in Drug abuse cases among youth including school students is a very serious concern. Over 2000 (two thousand) mostly youth committed suicide in one year due to drug abuse. It is seriously jeopardising our future.

It is casually bypassed;

6- Atrocities against Dalits and sexual violence against Dalit women is sharply increasing. However; it is totally bypassed;

7-About 20,000 (Twenty thousand) people in our state committed suicide in one year- almost 65 suicides everyday. Nowhere else in the country the situation is so alarming. Tamil Nadu is being referred as the Suicide Capital of India. Yet it does not seem to concern the government. It is bypassed;

8- There is steady decline in standards of education and widespread mismanagement in educational institutions adversely affecting the future of our youth. More than 50 % faculty positions are vacant for years and guest faculties are restive all over. Our youth are staring at uncertain future.

It does not seem to bother the government and the issue is totally bypassed;

9- Several thousand Village Panchayats are defunct because elections have not been held for years. They are directly under special officers of the government. Crores of people are denied of their rights of grassroots democracy. This is against the letter and spirit of the Constitution. People are anxiously waiting for restoration of Village Panchayats. However, this does not find even a mention in the speech.

10- Several thousand temples in the state are without Board of Trustees and are directly administered by the state government. Millions and millions of devotees are deeply hurt and frustrated with the mismanagement of temples. Crucial directions of the Hon’ble Madras High Court on the restoration and preservation of ancient temples are not implemented even after 5 years. Sentiments of devotees callously ignored;

11- MSME sectors are under huge stress due to visible and invisible costs of running the industry. They are the crucial sector for employment and growth. However, as against over 55 million registered MSMEs in the country Tamil Nadu has only about 4 million despite enormous potential for growth. Entrepreneurs from Tamil Nadu are forced to locate their enterprises in other states. The issue is completely ignored;

12- There is widespread discontentment among lower rung employees in almost all sectors. They are restive and frustrated. No mention of ways to address their genuine grievances;

13- National Anthem is yet again insulted and the Fundamental Constitutional Duty disregarded.