Home Blog Page 286

WC 2023: வங்கதேசத்துக்கு எதிராக 7விக். வித்தியாசத்தில் இந்தியா வெற்றி!

world cup cricket 2023 - 2026
#image_title

ஒருநாள் கிரிக்கட் உலகக் கோப்பைப் போட்டி
15ஆம் நாள் – வங்கதேசம் vs இந்தியா
புனே – 19.10.2023

முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன்

வங்கதேச அணியை (256/8, லிட்டன் தாஸ் 66, தன்சிட் ஹசன் 51, மஹமதுல்லா 46, ரஹீம் 38, பும்ரா 2/41, சிராஜ் 2/60, ஜதேஜா 2/38) இந்திய அணி (41.3 ஓவரில் 261/3, விராட் கோலி 103*, ஷுப்மன் கில் 53, ரோஹித் ஷர்மா 48, கே.எல். ராகுல் 34, மிராஸ் 2/47) 7 விக்கட்டுகள் வித்தியாசத்தில் வென்றது.

பூவாதலையா வென்ற வங்கதேச அணி முதலில் மட்டையாடத் தீர்மானித்தது. அந்த அணியில் இன்று இரண்டு மாற்றங்கள். ஷாகிப் அல் ஹசன் மற்றும் டஸ்கின் அகமது இன்று விளையாடவில்லை. ஷாகிபுக்குப் பதிலாக இன்று ஷண்டோ அணித்தலைவராக இருந்தார்.

வங்கதேச அணியின் தொடக்க வீரர்கள் தன்சிட் ஹசன் மற்றும் லிட்டன் தாஸ் இருவரும் சிறப்பாக ஆடினார்கள். முதல் நான்கு ஓவரில் பும்ராவும் சிராஜும் ரன் குறைவாகக் கொடுத்து பந்து வீசினாலும் முதல் 10 ஓவர்களில் வங்கதேச அணி விக்கட் இழப்பின்றி 63 ரன்கள் எடுத்தது.

அதன் பிறகு வந்த வீரர்கள் ஷண்டோ (8 ரன்), மிராஸ் (3 ரன்), ஹிருதோய் (16 ரன்) சரியாக விளையாடவில்லை. பின்னர் ரஹீம் (38 ரன்) மற்றும் மகமத்துல்லா (46 ரன்) அணியின் ஸ்கோரை உயர்த்தினர். 50 ஓவர் முடிவில் வங்கதேச அணி 8 விக்கட் இழப்பிற்கு 256 ரன் எடுத்தது.

இந்திய அணி பேட்டிங் செய்ய வந்தபோது ரோஹித் ஷர்மா அதிரடி ஆட்டம் ஆடினார். அவருக்கு இணையாக சுப்மன் கில்லும் அதிரடி ஆட்டம் ஆடினார்.

முதலில் ரோஹித் 48 ரன்னுக்கு ஆட்டமிழக்க, விராட் கோலி ஆட வந்தார். அவருக்கு தொடர்ந்து மூன்று நோபால் வீசப்பட்டது அந்த பந்துகளில் 14 ரன்கள் எடுத்தார். 34.3 ஓவரில் 257 ரன் எடுத்திருந்தால் இன்று புள்ளிப்பட்டியலில் நியூசிலாந்து அணிக்கு மேல் இந்திய அணி முதலிடம் வகித்திருக்கும். இருந்தாலும் விக்கட் இழக்கக் கூடாது என்பதற்காக விராட் கோலியும் ஷ்ரேயாஸ் ஐயரும் சற்று நிதானமாக ஆடினர்.

ஷ்ரேயாச் 19 ரன்னுக்கு ஆட்டமிழக்க ராகுல் விளையாட வந்தார். ஏற்கனவே பந்துவீசும்போது ஹார்திக் பாண்ட்யா காயமடைந்து மைதானத்தைவிட்டுச் சென்றிருந்தார். எனவே ராகுலும் கோலியும் இந்த ஆட்டத்தை வென்றாக வேண்டிய கட்டாயத்தில் இருந்தனர்.

இறுதியில் கோலி தனது 48ஆவது ஒருநாள் சதத்தையும் பூர்த்தி செய்து, இந்திய அணிக்கு வெற்றியும் தேடித்தந்தார்.

இந்த வெற்றியுடன் இந்திய அணி 8 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் இரண்டாமிடத்தில் இருக்கிறது. விராட் கோலி ஆட்ட நாயகனாக அறிவிக்கப்பட்டார்.

நாளை ஆஸ்திரேலியாவும் பாகிஸ்தானும் பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் மோதுகின்றன. இந்திய அணியின் அடுத்த ஆட்டம் 22ஆம் தேதி, தர்மசலாவில் நியூசிலாந்து அணியுடன் நடக்கிறது.

சக்தியிடம் சித்தியடைந்தார் மேல்மருவத்தூர் அடிகளார்!

melmaruvathur bangaru adigalar - 2026
#image_title

‘மேல் மருவத்தூர் அம்மா’ என்று பக்தர்களால் போற்றப்படும் பங்காரு அடிகளாருக்கு திடீர் மாரடைப்பு ஏற்பட்டு, தமது 82ஆவது வயதில் இன்று சக்தியிடம் சித்தியடைந்தார்.

தமிழகத்தில் பெண்கள் பலருக்கு ஆன்மிக உணர்வை ஊட்டி, ‘ஓம் சக்தி பராசக்தி’ எனும் மந்திரச் சொல்லை அளித்து, ஆன்மிகத்தின் பால் ஈடுபடச் செய்தவர் மேல்மருவத்தூர் பங்காரு அடிகளார். மேல்மருவத்தூரில் ஆதிபராசக்திக்கு கோயில் அமைத்து, சித்தர் பீடத்தின் மூலம் ஆன்மிகத் தொண்டாற்றியவர். ஆதிபராசக்தி தொண்டு மருத்துவக் கல்வி மற்றும் கலாச்சார அறக்கட்டளையின் தலைவராக இருந்து நற்பணிகள் பல புரிந்தவர்.

அவர் அமைத்த ஆதிபராசக்தி கோயிலில், அன்னை சுயம்பு வடிவில் காட்சிதருகிறாள். ஆன்மிக ரீதியாக பெண்கள் தங்கள் பூஜை முறைகளில் ஒடுங்கி விடக் கூடாது என்பதற்காக, பெண்களே பெண் தெய்வமான ஆதிபராசக்திக்கு கருவறைக்குள் சென்று அர்ச்சனை செய்வதை ஊக்குவித்தார். இந்தக் காட்சி இங்கே சிறப்பானதாக அமைந்தது. அதனால் தமிழகத்தின் பெண் பக்தர்கள் பலர் அவரது ஆன்மிக ஆற்றலால் இழுக்கப்பட்டனர். அவரை மேல்மருவத்தூர் சித்தர் என்றே அழைத்தனர். அவரது வழியைப் பின்பற்றி, தங்கள் பகுதிகளில், கிராமங்கள்தோறும் ஆதிபராசக்தி சித்தர் பீடங்களை நிறுவி தொடர்ச்சியான வழிபாடுகளை நடத்தி வருகின்றனர்.

சக்தி வழிபாட்டுக்கு சிறப்பான நவராத்திரியில், தங்கள் பகுதிகளில் சிறப்பு நவராத்திரி வழிபாடுகளை, பக்தர்கள் மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், நவராத்திரியின் நடுநாளில், பங்காரு அடிகளார் சித்தியடைந்த செய்தி, ஓம் சக்தி பக்தர்களுக்கு சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

பங்காரு அடிகளாருக்கு லட்சுமி அம்பாள் என்ற மனைவியும் ஜி.பி அன்பழகன், ஜி.பி செந்தில் குமார் என்ற இரு மகன்களும் உள்ளனர்.

WC 2023: ஆப்கன் அணியை வீழ்த்திய நியுசிலாந்து!

world cup cricket 2023 - 2026
#image_title

ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பைப் போட்டி
பதிநான்காம் நாள்
ஆப்கானிஸ்தான் vs நியூசிலாந்து
சென்னை – 18.10.2023

முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன்

நியூசிலாந்து அணி (288/6, க்ளன் பிலிப்ஸ் 71, டாம் லேதம் 68, வில் யங் 54, நவீன் 2/48, அஸ்மத்துல்லா 2/56) ஆப்கானிஸ்தான் அணியை (34.4 ஓவரில் 139, ரஹ்மத் ஷா 36, அஸ்மத்துல்லா 27, லோக்கி ஃபெர்கூசன் 3/19, போல்ட் 2/18, சாண்ட்னர் 3/39) 149 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.

பூவா தலையா வென்ற ஆப்கானிஸ்தான் அணி நியூசிலாந்து அணியை முதலில் மட்டையாடச் சொன்னது. கடந்த முறை கோப்பையை வென்ற இங்கிலாந்து அணியை வென்ற உற்சாகத்தோடு களமிறங்கிய ஆப்கானிஸ்தான் அணி இன்று நியூசிலாந்து அணியையும் வெல்லலாம் என்ற கனவுடன் விளையாடியது.

ஆனால் திறமை வாய்ந்த நியூசிலாந்து அணி அதற்கு இடம் கொடுக்கவில்லை. இன்றைய வெற்றியுடன் சேர்த்து, இதுவரை ஆடிய நான்கு ஆட்டங்களிலும் வெற்றி பெற்று நியூசிலாந்து அணி எட்டு புள்ளிகளைப் பெற்று புள்ளிப்பட்டியலில் மீண்டும் முதலிடத்திற்கு வந்தது.

நியூசிலாந்து அணி ஆடியபோது 21ஆவது ஓவரில் 109/1 என்ற நல்ல நிலையில் இருந்து அடுத்த ஒன்பது பந்துகளில் 110/4 என்ற நிலைக்கு வந்தபோது, ஆப்கானிஸ்தான் கனவு நனவாகுமோ என்ற எண்ணம் அனைவருக்கும் ஏற்பட்டிருக்கலாம். ஆனால் டாம் லேதம், கிளன் பிலிப்ஸ் இருவரும் 144 ரன்னுக்கு ஜோடி போட்டு அணியின் ஸ்கோரை உயர்த்தினர்.

அடுத்து ஆடிய ஆப்கானிஸ்தான் அணியில் ஒரு நல்ல பார்ட்னர்ஷிப் அமையவில்லை. மிட்சல் சாண்ட்னர் மற்றும் லோகி ஃபெர்கூசன் இருவரும் சிறப்பாகப் பந்துவீசினார்கள். 14 ரன்கள் மற்றும் 24 பந்துகள் இடைவெளியில் ஆப்கானிஸ்தான் ஐந்து விக்கட்டுகளை இழந்தது. இதனால் 34.4 ஓவரில் அனைத்து விக்கட்டுகளையும் இழந்து 139 ரன்னுக்கு ஆட்டமிழந்தது. எனவே நியூசிலாந்து அணி 149 ரன்கள் வித்தியாசத்தில், நல்ல நெட் ரன் ரேட் விகிதத்தில் வென்றது.

கிளன் பிலிப்ஸ் ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார். நாளை புனே நகரத்தில் இந்தியா வங்கதேசம் இடையேயான ஆட்டம் ஹடைபெறவுள்ளது.

தேசிய விருதை எனது அப்பாவுக்கு சமர்ப்பிக்கிறேன்: ஸ்ரீகாந்த் தேவா

srikanth deva - 2026
#image_title

நான் பெற்ற தேசிய விருதை எனது அப்பாக்கு டெடிகேட் பண்ணுகிறேன் என்று மதுரை விமான நிலையத்தில் தேசிய விருது பெற்ற இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவா பேட்டி அளித்தார்.

டெல்லியில் நடைபெற்ற 69 வது தேசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழாவில் கருவறை என்னும் குறும்படத்திற்கு இசையமைப்பதற்காக சிறந்த இசையமைப்பாளருக்கான தேசிய விருதைப் இசை அமைப்பாளரும், தேனிசைத் தென்றல் தேவாவின் மகனுமான ஸ்ரீகாந்த் தேவா டெல்லியில் இருந்து, மதுரை விமான நிலையம் வந்தடைந்தார்.

செய்தியாளர்களை சந்தித்து அவர் கூறியதாவது:
இந்த தேசிய விருது குறும்படத்திற்காக வழங்கப்பட்டது.
இந்த விருது வாங்கியதற்கு எங்க அப்பா மிகவும் சந்தோசப்பட்டார். ஜனாதிபதி கையில் இந்த விருது வாங்கியது எனக்கு பெருமையாக உள்ளது.

தமிழனாக இந்த விருது வாங்குவதற்கு பெருமையாக உள்ளது. இந்த விருது யாருக்காக டெடிகேட் பண்றீங்க என நேற்று எல்லோரும் கேட்டார்கள் இந்த விருது எங்க அப்பாவுக்காக அற்பணம் செய்கிறேன்.

எங்க அப்பாவிடம் இல்லாத விருதுகளே இல்லை ஆனால், இந்த விருது அவருக்கு சிறப்பான ஒன்று. நம்ம ரொம்ப ஆடுவோர்க்கு பண்ணனும்னா கண்டிப்பா கடவுள் எல்லாத்தையும் நம்ம கையில கொடுப்பாரு.

எல்லா படத்திற்கும் விருது கிடைக்கும் என்றுதான் உழைக்கிறோம், எல்லா கலைஞர்களும் தேசிய விருது வாங்க வேண்டும் என்பதுதான் கனவு. 20 படங்களுக்கு மேலாக என்னுடைய படம் பெயர் போட்டு விருதுகளுக்கு சென்றுள்ளது. இந்தப் படம் செய்யும்போது விருது கிடைக்கும் என, நினைக்கவில்லை என்றார்.

சோழவந்தான் அருகே மன்னாடிமங்கலம் சித்தி விநாயகர் ஆலய மகா கும்பாபிஷேக விழா!

madurai chozhavanthan pillaiyar koil kumbabhisekam - 2026
#image_title

சோழவந்தான்: மதுரை மாவட்டம், சோழவந்தான் அருகே மன்னாடி மங்கலம் கிராமத்தில் பிரசித்தி பெற்ற பழமை வாய்ந்த அருள்மிகு ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலய மகா கும்பாபிஷேக விழா நடைபெற்றது.

விழாவை யொட்டி, கணபதி பூஜையுடன் யாகசாலை நிகழ்ச்சிகள் தொடங்கின. சிவகங்கை மகாபிரபு சிவாச்சாரியார் தலைமையில் கோவில் நிர்வாகிகள் கந்தசாமி பிள்ளை குடும்பத்தினர் மற்றும் முன்னிலையில் யாகசாலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

தொடர்ந்து, பக்தர்களுக்கு தீபாராதனை காட்டப்பட்டு பிரசாதம் வழங்கப்பட்டது. இன்று காலை இரண்டாம் கால யாக பூஜை நிகழ்ச்சி தொடங்கி நடைபெற்று, நான்கு கால யாக பூஜைகள் மஹா பூர்தியுடன் நிறைவுற்றது.

காலை 9 மணி அளவில் கடம் புறப்பாடாகி, சுமார் பத்து மணி அளவில் கும்பத்தின் மேல் புனித நீர் ஊற்றப்பட்டது. அப்போது, வானத்தில் கருடன் வட்டமிட்டது. கூடியிருந்த பக்தர்கள் பக்தி கோஷமிட்டனர். தொடர்ந்து பக்தர்களுக்கு தீபாராதனை காட்டப்பட்டு பிரசாதம் வழங்கப்பட்டு அன்னதானம் நடைபெற்றது.

ஏற்பாடுகளை விழா குழுவினர் செய்து இருந்தனர்.
விழாவில், மன்னாடிமங்கலம் ஒன்றியக் கவுன்சிலர் ரேகா வீரபாண்டி, முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் ரங்கராஜன், திருமுருகன் மற்றும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

அரசு மணல் குவாரியில் அமலாக்கத்துறை சோதனை; அதிகாரிகளிடம் விளக்கம் கேட்பு!

கரூர் அருகே அரசு மணல் குவாரி மற்றும் சேமிப்பு கிடங்கில் மீண்டும் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை – நீர்வளத்துறை அதிகாரிகளிடம் விளக்கம் கேட்டனர்.

கரூர் மாவட்டம், நன்னியூர் புதூர், மல்லம்பாளையம் உள்ளிட்ட கிராமங்களில் காவிரி ஆற்றில் அரசு மணல் குவாரி அமைக்கப்பட்டது. ஆரம்பித்த சில மாதங்களில் நன்னியூர் புதூர் கிராமம் அருகில் செயல்பட்ட மணல் குவாரி மூடப்பட்டது.

ஆனால், வாங்கலை அடுத்த மல்லம்பாளையம் கிராமம் அருகில் காவிரி ஆற்றில் மணல் குவாரி செயல்பட்டு வந்தது. கடந்த மாதம் மணல் குவாரி ஒப்பந்ததாரர் வீடுகளில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டதால் கரூரில் செயல்பட்ட மல்லம்பாளையம் மணல் குவாரியும் மூடப்பட்டது. இதனால் ஆயிரக்கணக்கான லாரிகள் லாரிகள் நிறுத்தும் இடத்தில் நிறுத்தப்பட்டு காத்திருக்கின்றனர்.

இந்நிலையில் மீண்டும் மணல் குவாரி செயல்படுவதற்கான ஏற்பாடுகளை நீர்வளத்துறை அதிகாரிகள் ஈடுபட்டு வரும் நிலையில், கடந்த வாரம் அமலாக்கத்துறை அதிகாரிகள் மல்லம்பாளையம் மற்றும் நன்னியூரில் மணல் குவாரிகளில் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். சோதனையானது 6 மணி நேரத்திற்கு பிறகு புறப்பட்டுச் சென்றனர்.

இந்நிலையில் இன்று மதியம் 12 மணியளவில் மீண்டும் நன்னியூர் காவிரி ஆற்றிற்கு 2 வாகனங்களில் வந்த 2 அமலாக்கத்துறை அதிகாரிகள், துப்பாக்கி ஏந்திய துணை ராணுவப்படை வீரர்களின் பாதுகாப்புடன் ஆய்வு மேற்கொண்டனர்.

அதனை தொடந்து வரப்பாளையத்தில் உள்ள நன்னியூர் புதூர் மணல் சேமிப்பு கிடங்கில் ஆய்வு மேற்கொண்டனர். அங்கு மாட்டு வண்டியில் தொழிலாளர்கள் மணல் அள்ளிச் சென்றதை பார்த்த அதிகாரி, இது தொடர்பான விளக்கங்களை கேட்டறிந்தார். மேலும் நீர்வளத் துறை அதிகாரிகளிடம் விளக்கம் கேட்டு வருகிறார்.

செங்கோட்டை – நெல்லை ரயில், மின்சார லோகோ இயக்கம்!

electric loco sengottai - 2026
#image_title

செங்கோட்டையிலிருந்து திருநெல்வேலிக்கு இன்று அறிவித்தபடி ரயில் மின்சார லோகோவில் இயக்கப்பட்டது. இதன் தொடக்க நிகழ்வில் செங்கோட்டை ரயில் பயணிகள் நல சங்கத்தினர் கலந்து கொண்டனர்.

அக்.18 புதன் இன்று காலை 06.45 க்கு செங்கோட்டை ரயில் நிலையத்தில் இருந்து புறப்பட்ட செங்கோட்டை – திருநெல்வேலி ரயில் முதன்முதலாக WAP7 மின்சார லோக்கோவால், மின்மயமாக்கப்பட்ட செங்கோட்டை – தென்காசி – பாவூர்சத்திரம் – அம்பாசமுத்திரம் – கல்லிடைக்குறிச்சி – சேர்மாதேவி – திருநெல்வேலி ரயில் பாதையில் இயக்கப்பட்டது.

லோக்கோ பைலட் சிவகுமார், உதவி லோக்கோ பைலட் விஷ்ணு B ராஜ் ஆகியோருக்கு வாழ்த்து சொல்லி, செங்கோட்டை ரயில் பயணிகள் நலச்சங்கத்தின் சார்பில் செயலர் கே.எச்.கிருஷ்ண, பி.ஆர்.ஓ., ராமன் ஆகியோர் கலந்து கொண்டு, சங்கத்தின் சார்பில் WAP 7 லோக்கோவுக்கு மலர் மாலைகளால் அலங்கரித்தனர்.

செங்கோட்டை ரயில் பயணிகள் நல சங்கத்தின் சார்பாக இந்தத் தொடக்க நிகழ்ச்சியில் கலந்து கொண்ட செங்கோட்டை ரயில் நிலைய அதிகாரிகள், லோக்கோ பைலட்டுகள், பணியாளர்கள் அனைவருக்கும் இனிப்பு கேக் வழங்கப்பட்டது.

இந்த மின்சார ரயில் பாதை கனவை சாத்தியமாக்கிய, இந்திய ரயில்வே அமைச்சர், ரயில்வே வாரிய தலைவர், தெற்கு ரயில்வே பொது மேலாளர், தெற்கு ரயில்வே தலைமையக அதிகாரிகள், மதுரை கோட்ட அதிகாரிகள், ரயில்வே தொழிற் சங்க தலைவர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் அவர்கள் நன்றி தெரிவித்தனர்.

வீடியோ செய்தி:

WC 2023: தென் ஆப்பிரிக்காவை கதற விட்ட நெதர்லாந்து

world cup cricket 2023 - 2026
#image_title

ஒருநாள் கிரிக்கட் உலகக் கோப்பைப் போட்டி
பதிமூன்றாம் நாள்
தென் ஆப்பிரிக்கா vs நெதர்லாந்து
தர்மசலா – 17.10.2023

முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன்

நெதர்லாந்து அணி (43 ஓவரில் 245, ஸ்காட் எட்வர்ட்ஸ் 78*, வான் டெர் மெர்வ் 29, ஆர்யன் தத் 23, இங்கிடி 2/57, யான்சென் 2/27, ரபாடா 2/56) தென் ஆப்பிரிக்க அணியை (42.5 ஓவரில் 207, டேவிட் மில்லர் 43, கேசவ் மஹராஜ் 40, க்ளாசன் 28, ஜெரால்ட் கோட்ஸி 22, வான் பீக் 3/60, மீகிரன் 2/40, மெர்வீ 2/34, லீட் 2/33) 38 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.

தர்மசலாவில் பெய்த மழையால் ஆட்டம் இன்று தாமதமாகத் தொடங்கியது. இதனால் ஆட்டம் 43 ஓவர் ஆட்டமாகக் குறைக்கப்பட்டது. பூவா தலையா வென்ற தென் ஆப்பிரிக்க அணி முதலில் பந்துவீசத் தீர்மானித்தது.

முதலில் மட்டையாட வந்த நெதர்லாந்து அணிக்கு அதன் வீரர்கள் நிலைத்து நின்று ஆடவில்லை. 27ஆவது ஓவர் முடிவில் அந்த அணி ஏழு விக்கட் இழப்பிற்கு 140 ரன் எடுத்திருந்தது. ஆனால் அணித்தலைவர் ஸ்காட் எட்வர்ட்ஸ் கடைசி இரண்டு ஆட்டக்காரர்களான வான் டெர் மெர்வ் மற்றும் ஆர்யன் தத் இருவருடனும் இணைந்து அணியின் ஸ்கோரை 43 ஓவர் முடிவில் எட்டு விக்கட் இழப்பிற்கு 245 ரன்னுக்கு உயர்த்தினார்.

246 என்ற இலக்கை தென் ஆப்பிரிக்க அணி எளிதில் அடைந்துவிடும் என அனைவரும் எதிர்பார்த்த நிலையில் க்விண்டன் டி காக் (20 ரன்), பவுமா (16 ரன்) இருவரும் பவர்ப்ளே ஓவர்களுக்குள் ஆட்டமிழந்ஸ்தனர். அதன் பின்னர் மர்க்ரம் (1 ரன்), டுஸ்ஸன் (4 ரன்) இருவரும் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். கிளாசனும் டேவிட் மில்லரும் தென் ஆப்பிரிக்க அணிக்கு நம்பிக்கை அளிக்கும் வகையில் ஆடிக்கொண்டிருந்தனர்.

ஆனால் நெதர்லாந்தின் வான் பீக் அவர்கள இருவரையும் ஆட்டமிழக்கச் செய்தார். அதுவரை ரன்ரேட் நெதர்லாந்து அணியின் ரன்ரேட்டை ஒட்டியே இருந்தது; அதற்கு பின்னர் நெதர்லாந்து அணி பந்துவீச்சாளர்களின் துல்லியமான பந்துவீச்சால் தென் ஆப்பிரிக்கா அணியின் ரன்ரேட் மிகக் குறைந்து கடைசி ஓவரில் 49 ரன்கள் அடிக்க வேண்டிய நிலை வந்தது. அந்த ஓவரில் கேசவ் மகராஜ் ஒரு ஃபோர் மற்றும் ஒரு சிக்சர் அடித்தார்; இருப்பினும் ஐந்தாவது பந்தில் ஆட்டமிழந்தார். இதன் மூலம் நெதர்லாந்து அணி இந்த ஆட்டத்தில் வெற்றிபெற்றது.

நெதர்லாந்து இதற்கு முன்னர் 2003 உலகக்கோப்பை ஆட்டமொன்றில் நமீபிய அணியை 64 ரன் வித்தியாசத்தில் வென்றிருக்கிறது. 2007இல் ஸ்காட்லாந்து அணியை 8 விக்கட்டுகள் வித்தியாசத்தில் வென்றிருக்கிறது.

உலகக் கோப்பை ஆட்டமின்றில் தென் ஆப்பிரிக்க அணியை வெல்வது இதுவே முதல் முறை. சென்ற வருடம் டி20 உலகக் கோப்பை ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்க அணியை நெதர்லாந்து அணி வென்றது நினைவிருக்கலாம்.   

ஸ்காட் எட்வர்ட்ஸ் ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார். நாளை நியூசிலாந்து ஆப்கானிஸ்தான் அணிகளுக்கிடையே சென்னையில் ஆட்டம் நடைபெறும்.

சிவகாசி பட்டாசு ஆலை விபத்து உயிரிழப்பு 13ஆக உயர்வு..

IMG 20231017 WA0138 - 2026
#image_title

சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் நிகழ்ந்த பயங்கர வெடி விபத்து
8 பெண்கள் உட்பட 10 தொழிலாளர்கள் உடல் சிதறி பலி யான் நிலையில் மேலும் மூவர் மரணமடைந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.இன்று சிவகாசி அருகே மேலும் ஒரு பட்டாசு ஆலை வெடி விபத்தில் ஒருவர் பலியானார்.

சிவகாசி அருகே தனியார் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் 8 பெண் தொழிலாளர்கள் உடப்ட 10 பேர் உடல் சிதறி பரிதாபமாக உயிரிழந்தனர், . தற்போது மேலும் மூவர் மரணமடைந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சிவகாசி அருகே உள்ளது ரெங்கபாளையம். இங்கு சுந்தரமூர்த்தி என்பவருக்கு சொந்தமான கனிஷ்கர் பட்டாசு ஆலை உள்ளது. இந்த ஆலையின் வளாகளததில் ஏற்கனவே தயார் செய்யப்பட்ட பட்டாசுகளை சோதனை செய்ததாக கூறப்படுகிறது. அப்போது. திடீரென தீயானது பட்டாசு தயார் செய்யும் பகுதிக்கு சென்று பயங்கர தீ விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது,
தகவலறிந்து விரைந்து வந்த தீயணைப்புத்துறையினர் தீயை பிற பகுதிகளுக்கு செல்லவிடாமல் போராடி தடுத்து நிறுத்தினர்.
10 பேர் பலி – இந்த மேற்படி வெடி விபத்தில் அழகாபுரி காந்தி நகரைச் சேர்ந்த முனியப்பன் மனைவி அனிதா (40),
லட்சுமியாபுரம் பகுதியச் சேர்ந்த ஜெயமுருகன் மனைவி பாக்கியம் (35), அதே பகுதியைச் சேர்ந்த சுப்புக்கனி மனைவி குருவம்மாள்(55), வடக்கு அழகாபுரியைச் சேர்ந்த சீனிராஜ் மனைவி மகாதேவி(50), அதே பகுதியைச் சேர்ந்த நாகராஜ் மனைவி பஞ்வர்ணம்(35), முத்துராஜ் மகன் பாலமுருகன்(30), தாளமுத்து என்பவர் மனைவி தமிழ்ச்செல்வி(55), எஸ்.அம்மாபட்டியைச் சேர்ந்த முத்துராஜ் மனைவி முனீஸ்வரி(32), செவலுர் அசேபா காலனியைச் சேர்ந்த மகேந்திரன் தங்கமலை (33), லட்சுமியாபுரத்தைச் சேர்ந்த முருகானந்தம் மனைவி இந்திரா (50) ஆகியோர் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர்.
படுகாயம் – இந்த விபத்தில் அழகாபுரியைச் சேர்ந்த ஆறுமுகம் மனைவி பொன்னுத்தாயி(45). கிருஷ்ணன்கோவில் சமத்துவபுரத்தைச் சேர்ந்த சங்கர் மனைவி சின்னத்தாய்(34) ஆகியோர் படுகாயமடைந்தனர், இவர் இருவரும் திருவில்லிபுத்துர் அரசு மருத்துவமனையில் கிசிச்சை பெற்று வருகின்றனர்,
எஸ்,பி ஆய்வு – விபத்து நடைபெற்ற பட்டாசு ஆலையில் விருதுநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சீனிவாச பெருமாள் ஆய்வு மேற்கொண்டார்.
ரூ,10லட்சம் நிவாரணம் வழங்கிடுக சிஐடியு அறிக்கை – இந்த விபத்து குறித்து சிஐடியுவின் விருதுநகர் மாவட்டச் செயலாளர் பி.என்,தேவா அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் கூறியதாவது –
சிவகாசியில் கிச்சநhயக்கன்பட்டி மற்றும் ரெக்ஙபாளையம் பகுதிகளில் உள்ள பட்டாசு ஆலைகளில் வெடி விபத்து ஏற்பட்டது. இதில் 10 தொழிலாளர்கள் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர்,
உயிரிழந்த அனைத்து தொழிலாளர் குடும்பங்களுக்கும் சிஐடியு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறது, அதே நேரத்தில் பட்டாசு ஆலை நிர்வாகங்கள் தொடர்ந்து பாதுகாப்பு விதிகளை கடைப்பிடிக்கப்படாத காரணத்தால் இந்தகோர விபத்து நடைபெற்றுள்ளது.
அதாவது உயிரிழந்த தொழிலாளர்கள் கிட்டத்தட்ட படுகொலைசெய்யப்பட்டிருக்கிறார்கள் என்றே கூற வேண்டிய நிலை உள்ளது, இந்த கொடூர விபத்தில் காயம் அடைந்தவர்கள் வெகு விரைவில் குணமடைய வேண்டுகிறோம், மேலும் விபத்துக்கு காரணமான பட்டாசு ஆலை நிர்வாகத்தினர் மற்றும இதை முறையாக ஆய்வு செய்யாத அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கையை எடுக்க வேண்டும்.
மேலும் உயிரிழந்த தொழிலாளர்கள் குடும்பத்திற்கு தமிழக அரசு ரூ,10 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும். பட்டாசு ஆலை நிர்வாகமும் ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்குவதை அரசு அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும் என சிஐடியு/விருதுநகர் மாவட்ட பட்டாசு தீப்பெட்டி தொழிலாளர் சங்கம் வலியுறுத்துகிறது,
மேலும் 3 பேர் மரணம் – அம்மபாட்டியைச் சேர்ந்த காளிராஜன் மனைவி லட்சுமி(28), மூவரைவென்றான் பகுதியச் சேர்ந்த முனியாண்டி மனைவி செல்லம்மாள்(40) மற்றும் குருகலாஞ்சி என்பவர் மனைவி முத்துலட்சுமி(36) ஆகியோர் உயிரிழந்தது தற்போது தெரிய வந்தது.

சிவகாசி அருகே மேலும் ஒரு பட்டாசு ஆலை வெடி விபத்தில் ஒருவர் பலி..

சிவகாசி அருகே உள்ள கிச்சநாயக்கன்பட்டியில் தனியாருக்கு சொந்தமான பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் சிக்கி தொழிலாளி ஒருவர் உயிரிழந்தார்,
சிவகாசி அருகே உள்ளது கிச்சநாயக்கன்பட்டி. இங்கு திருத்தங்கல் பகுதியைச் சேர்ந்த பார்த்தீபன் என்பவருக்கு சொந்தமான ஆர்யா பட்டாசு ஆலை உள்ளது. இங்கு வழக்கம் போல தொழிலாளர் பட்டாசுகளை தயார் செய்யும் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது. திடீரென ஏற்பட்ட உராய்வு காரணமாக திடீரென தீ விபத் துஏற்பட்டது. இதில் வெம்பக்கோட்டை அருகே உள்ள நதிக்குடி கிராமத்தைச் சேர்ந்த பிச்சாண்டி என்பவரது மகன் வேம்பு(60) பலியாகினார்.

மதுரை பள்ளி மாணவர்களுக்கு பிரதமர் மோடி கடிதம்!

kalvi public shcool students get letter from modi - 2026
#image_title

கல்வி இன்டர்நேஷனல் பப்ளிக் பள்ளி மாணவர்களுக்கு பிரதமர் மோடி கடிதம் அனுப்பியுள்ளார்.

மதுரை அருகே, சோழவந்தான் ராயபுரம் கல்வி இன்டர்நேஷனல் பப்ளிக் பள்ளி மாணவர்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்துக் கடிதங்கள் அனுப்பி உள்ளார்.

இரு பக்கங்களை கொண்ட கடிதத்தில் “பரிக்சா பே சர்ச்சா” தலைப்பில், ஐந்து உயிர் மூச்சான கொள்கைகள் உன்னதமான இந்தியாவிற்காக எனும் முக தலைப்பிட்டு வளர்ச்சி அடைந்த பாரத்தின் இலக்கு, அடிமை சிந்தனையை அறவே நீக்குதல், நம் பாரம்பரியத்தை கொண்டாடுதல், ஒற்றுமையை உறுதி செய்தல், கடமைகளில் கவனம் செலுத்துதல் ஆகிய தலைப்புகளைக் குறிப்பிட்டுள்ளார்.

பிரதமரிடம் இருந்து கடிதம் வரப் பெற்ற மாணவர்களுக்கு, பள்ளி முதல்வர் அபிராமி, டயானா மற்றும் ஆசிரியர்கள் பாராட்டி வாழ்த்துகளை தெரிவித்தனர்.