Home Blog Page 285

WC 2023: இரண்டு ‘கெத்து’ ஆட்டங்கள்!

world cup cricket 2023 - 2026
#image_title

ஒருநாள் கிரிக்கட் உலகக் கோப்பைப் போட்டி
17ஆம் நாள் – இரண்டு ஆட்டங்கள்
20.10.2023

முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன்

          இன்று இரண்டு ஆட்டங்கள் நடந்தன. முதல் ஆட்டம் லக்னோவில் இலங்கை-நெதர்லாந்து அணிகளுக்கிடையே முழுநேர பகல் ஆட்டமாக நடந்தது. இரண்டாவது ஆட்டம் இங்கிலாந்து-தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கிடையே மும்பையில் பகலிரவு ஆட்டமாக நடந்தது.

இலங்கை-நெதர்லாந்து

          நெதர்லாந்து அணியை (49.4 ஓவரில் 262, சைபிராண்ட் 70, வான் பீக் 59, ஆக்கர்மேன் 29, உதிரி ரன்கள் 33, மதுஷங்கா 4/49, ரஜிதா 4/50) இலங்கை அணி (48.2 ஓவரில் 263/5, சமரவிக்ரமா 91*, பதுன் நிசாங்கா 54, சரித் அசலங்கா 44, தனஞ்சயா 30, ஆர்யன் தத் 3/44) 5 விக்கட்டுகள்  வித்தியாசத்தில் வென்றது.

          பூவாதலையா வென்ற நெதர்லாந்து அணி முதலில் மட்டையாடத் தீர்மானித்தது. 43 ரன்களுக்கு ஐந்து விக்கெட்டுகளை இழந்த நெதர்லாந்து, சைபிராண்ட் ஏங்கல்பிரெக்ட் மற்றும் லோகன் வான் பீக் ஆகியோருக்கு இடையேயான 130 ரன்களின் ஏழாவது விக்கெட் கூட்டணியால் இலங்கைக்கு எதிராக 262 ரன்களை எட்டியது.

தில்ஷான் மதுஷங்கா மற்றும் கசுன் ரஜிதா இருவரும் தலா 4 விக்கெட்டுகளை வீழ்த்தியதன் மூலம் சிறந்த ஆட்டத்தைப் பதிவு செய்தனர்.

          ரஜிதா ஏழு ஓவர் தொடக்க ஸ்பெல்லுடன் தொடங்கினார், அதில் அவர் மூன்று விக்கட்டுகளை எடுத்தார். மேக்ஸ் ஓ’டவுட் மற்றும் கொலின் அக்கர்மேன் ஆகியோர் விளையாட வரும் முன்னர் அவர் முதலில் விக்ரம்ஜித் சிங்கை எல்பிடபிள்யூ பந்தில் ஆட்டமிழக்கச் செய்தார். ஆனால் அதன் பின்னர் ஆடவந்த ஓ’டவுட் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் திணறிக் கொண்டிருந்தார். பவர்பிளேயின் இறுதி ஓவரில் ஸ்டம்பில் மோதியதால் ரஜிதா அவரை கிளீன் போல்டாக்கினார். அவரது அடுத்த ஓவரில் அக்கர்மேன் ஆட்டமிழந்தார்.

          மதுஷங்கா பின்னர் டி லீட் மற்றும் நிடமனூருவை ஆட்டமிழக்கச் செய்தார். மேலும் மகேஷ் தீக்ஷனா ஸ்காட் எட்வர்ட்ஸின் விக்கட்டை ஒரு அழகான ஆஃப்ஸ்பின்னருடன் எடுத்தார்.  ஆனால் அதன் பின்னர் ஏங்கல்பிரெக்ட் மற்றும் வான் பீக் இருவரும் 23 ஓவர்களுக்கும் மேலாக பேட் செய்து இலங்கையை சமாளித்தனர். தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான ஆட்டத்தில் எட்வர்ட்ஸ் மற்றும் ரோலோஃப் வான் டெர் மெர்வே செய்தது போன்றே, இருவரும் 40ஆவது ஓவருக்குப் பிறகு டெம்போவை உயர்த்த முயற்சித்தனர். இறுதியில் நெதர்லாந்து அணி 262 ரன்கள் எடுத்தது.

          இலங்கை அணி 263 ரன்களை எளிதாக துரத்தி இந்த உலகக் கோப்பையில் முதல் வெற்றியைப் பெற்றது. சதீர சமீரவிக்கிரம தனது 91 ஓட்டங்களைப் பெற்றதன் மூலம் பதம் நிஸ்ஸங்கா தனது மூன்றாவது தொடர்ச்சியான அரைச் சதத்துடன் அடித்தளம் அமைத்துக்கொடுத்தார்.

          குசல் பெரேரா மற்றும் குசல் மெண்டிஸ் ஆகியோரின் ஆரம்ப விக்கெட்டுகளை ஆர்யன் தத் எடுத்தன் மூலம் நெதர்லாந்து சிறப்பாகத் தொடங்கியது, ஆனால் நிஸ்ஸங்கா மற்றும் சமரவிக்ரமா ஆகியோர் 50 ரன் பார்ட்னர்ஷிப் அமைத்து இலங்கை அணியை நிலைநாட்டினர். நிஸ்ஸங்கா வான் மீகரனிடம் வீழ்ந்த பின்னரும், சரித் அசலங்கா ஆதரவுடன் சமரவிக்ரம தொடர்ந்தார். அதன்பின்னர் தனஞ்சய டி சில்வா களமிறங்க, துஷ்மந்த ஹேமந்த ஒரு பவுண்டரியுடன் ஆட்டத்தை முடித்தார். இலங்கைக்கான முதல் வெற்றி; முதல் புள்ளிகள், நெதர்லாந்து தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிராக செய்ததைச் இன்று இலங்கை அணிக்கு எதிராக செய்யத் தவறிவிட்டது. ஆட்டநாயகனாக சமரவிக்ரமா அறிவிக்கப்பட்டார்.

இங்கிலாந்து-தென் ஆப்பிரிக்கா

          தென் ஆப்பிரிக்க அணி (399/7, கிளாசன் 109, ஹெண்டிரிக்ஸ் 85, மேக்ரோ ஜேன்சன் 75, வான் டுர்சன் 60, டாப்லி 3/88, அட்கின்சன் 2/60, ரஷீத் 2/61) இங்கிலாந்து அணியை (22 ஓவர்களில் 170, மார்க் வுட் 40*, அட்கின்சன் 35, கோட்ஸி 3/35, இங்கிடி 2/26, ஜேன்சன் 2/35) 229 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.

          இங்கிலாந்து மற்றும் தென்னாப்பிரிக்கா ஆகிய இரு அணிகளும் முறையே ஆப்கானிஸ்தான் மற்றும் நெதர்லாந்துக்கு எதிரான கடைசி ஆட்டங்களில் அவமானகரமான தோல்விகளை சந்தித்தன, மேலும் அவமானத்தை பின்னுக்குத் தள்ள இந்த சந்திப்பில் வெற்றியை எதிர்நோக்கி ஆடின.

          தென்னாப்பிரிக்கா இங்கிலாந்தை 229 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்து தனது மூன்றாவது வெற்றியைப் பெற்றது. ஹென்ரிச் கிளாசென் அற்புதமான இன்னிங்ஸ் விளையாடினார். அவருக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது. மார்கோ ஜான்சன் மற்றும் ஜெரால்ட் கோட்ஸி ஆகியோர் தங்கள் பந்துவீச்சில் மாயாஜாலத்தை வெளிப்படுத்தினர்.

          ஜெரால்ட் கோட்ஸி மற்றும் ககிசோ ரபாடா ஆகியோர் இங்கிலாந்தின் விக்கெட்டுகளை தொடர்ந்து கைப்பற்றி இங்கிலாந்து பேட்டிங்கில் அழுத்தம் கொடுத்தனர். இங்கிலாந்து அழுத்தத்தின் கீழ் சரிந்து தோவியுற்றது. லுங்கி இங்கிடி மற்றும் மார்கோ ஜான்சன் ஆகியோர் தென்னாப்பிரிக்க அணியின் கட்டுப்பாட்டில் ஆட்டத்தை  வைக்க ஜானி பேர்ஸ்டோவ் மற்றும் ஜோ ரூட் ஆகியோரின் ஆரம்ப விக்கெட்டுகளை எடுத்தனர். பென் ஸ்டோக்ஸ் தொடக்க வீரர் டேவிட் மலனுடன் இணைந்தார்.

          முதலில் பூவாதலையா வென்ற இங்கிலாந்து அணி முதலில் தெ ஆப்பிரிக்க அணியை மட்டையாடச் சொன்னது. ஹென்ரிச் கிளாசென் மற்றும் மார்கோ ஜான்சன் ஆகியோர் அற்புதமான பார்ட்னர்ஷிப்பில் விளையாடி 50 ஓவர்களுக்குப் பிறகு தென்னாப்பிரிக்க அணி 399/7 அடிக்க உதவினர்.

          நடப்பு சாம்பியனான இங்கிலாந்து இந்த உலகக் கோப்பை  போட்டிகளில் இரண்டில் தோல்வியடைந்து தற்போது வெறும் 2 புள்ளிகள் மற்றும் நிகர ரன் ரேட் -0.84 உடன் புள்ளிகள் பட்டியலில் 6வது இடத்தில் உள்ளது.

மறுபுறம், தென்னாப்பிரிக்கா, இலங்கை மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இரண்டு திடமான வெற்றிகளுடன் புள்ளிகள் பட்டியலில் முதல் நான்கில் தொடர்ந்து உள்ளது. டெம்பா பவுமாவின் அணி தற்போது +1.385 என்ற நிகர ரன் ரேட்டுடன் புள்ளிகள் பட்டியலில் 3வது இடத்தில் உள்ளது.

வேலை வாய்ப்பற்ற இளைஞர்கள் உதவித் தொகைக்கு விண்ணப்பிக்கலாம்!

employment career opportunities - 2026
#image_title

வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் தமிழக அரசால் அறிவிக்கப்பட்டுள்ள உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கலாம் – மாவட்ட ஆட்சித்தலைவர் ஆஷா அஜித் தகவல்!

தமிழக அரசால் அறிவிக்கப்பட்டுள்ள வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான உதவித்தொகை திட்டத்தின் கீழ் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் பதிவு செய்து எவ்வித வேலைவாய்ப்பும் கிடைக்காமல் உயிர்ப்பதிவேட்டில் காத்திருக்கும் இளைஞர்களுக்கு உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது.

முறையாக பள்ளியில் பயின்று ஒன்பதாம் வகுப்பில் தேர்ச்சி பெற்று பத்தாம் வகுப்பில் தோல்வியுற்றவர்களுக்கு மாதம் ரூ.200/-ம், 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு மாதம் ரூ.300/-ம்,பிளஸ் 2 தேர்ச்சி பெற்றவர்களுக்கு மாதம் ரூ.400/-ம், பட்டதாரிகளுக்கு போன்ற தொழில்சார் பட்டப்படிப்பு தவிர) மாதம் ரூ.600/- வீதம் 3 ஆண்டுகளுக்கு உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. இத்தொகை நேரடியாக மனுதார்களது வங்கி கணக்கில் காலாண்டுக்
கொருமுறை வரவு வைக்கப்படும்.

இத்திட்டத்தில், பயன்பெற விரும்பும் இளைஞர்கள் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையத்தில் தங்களின் கல்வித்தகுதிகளை பதிவு செய்து 5 ஆண்டுகள் நிறைவு செய்திருக்க வேண்டும்.

தொடர்ந்து , பதிவினை புதுப்பித்து இருக்க வேண்டும். ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் 45 வயதுக்கு மிகாமலும், ஏனையோர் 40 வயதுக்கு மிகாமலும் இருத்தல் வேண்டும். மனுதாரரின் குடும்ப ஆண்டு வருமானம் ரூ.72,000 (எழுபத்தி இரண்டாயிரத்திற்கு) மிகாமல் இருத்தல் வேண்டும்.

அன்றாடம் கல்வி நிறுவனங்களுக்குச் சென்று பயிலும் மாணவஃமாணவியருக்கு இவ்வுதவித் தொகை வழங்கப்பட மாட்டாது. எனினும், தொலைதூரக் கல்வி அல்லது அஞ்சல் வழி மூலம் கல்வி கற்பவர்கள் உதவித் தொகை பெறலாம்.

ஏற்கனவே, உதவித்தொகை பெற்று வருபவர்கள் தொடர்ந்து 3 வருடம் வரை உதவித் தொகை பெற நாளது தேதி வரை வங்கிகளில் குறிப்புகள் இடப்பட்ட வங்கிக்கணக்கு புத்தக நகலுடன் சுயஉறுதி மொழி ஆவணத்தையும் பூர்த்தி செய்து மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஒப்படைத்து தொடர்ந்து உதவித்தொகை பெற்றுகொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. சுயஉறுதி மொழி ஆவணம் சமர்ப்பிக்காத பயனாளிகளுக்கு உதவித்தொகை நிறுத்தப்படும்.

மேலும், இத்திட்டத்தின் கீழ் உதவித்தொகை பெறுவதற்கு மாற்றுத்திறனாளிகளுக்கு வருமான உச்சவரம்பு கிடையாது. இத்திட்டத்தின் கீழ் மாற்றுத்திறனாளிகளுக்கு 10 ஆண்டுகள் வரை உதவித் தொகை வழங்கப்படுகிறது. வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து ஓராண்டு நிறைவு பெற்ற மாற்றுத்திறனாளிகள் இந்த உதவித்தொகை பெறுவதற்கு விண்ணப்பிக்கலாம். ஆனால், அரசின் வேறு உதவித்தொகை எதுவும் பெறுதல் கூடாது.

பத்தாம் வகுப்பு மற்றும் அதற்கு கீழ் படித்தவர்களுக்கு மாதம் ரூ.600/-வீதமும், பிளஸ்2 தேர்ச்சி பெற்றவர்களுக்கு மாதம் ரூ.750/-ம், பட்டதாரிகளுக்கு ரூ.1000/- வழங்கப்பட்டு வருகிறது.

இந்த உதவித் தொகை பெறுவதற்கு மேற்காணும் தகுதிகள் உள்ளவர்கள் சிவகங்கை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்திற்கு அனைத்துக் கல்விச் சான்றுகள், வேலைவாய்ப்பு அடையாள அட்டை ஆகியவற்றுடன் நேரில் வந்து இலவசமாக விண்ணப்பம் பெற்றுக் கொள்ளலாம்.

விண்ணப்பங்கள் அனைத்து வேலை நாட்களிலும் வருடம் முழுவதும் வழங்கப்படும். மேலும் உதவித்தொகை பெறுபவர்களின் வேலைவாய்ப்பு அலுவலக பதிவு ரத்து செய்யப்பட மாட்டாது எனவும் உதவித்தொகை பெறுவதால் வேலைவாய்ப்பு பரிந்துரைத்தலுக்கு எவ்வித தடையும் ஏற்படாது.

எனவே, இத்திட்டத்தின் கீழ் இதுவரை உதவித்தொகை பெறாத தகுதியான இளைஞர்கள் விண்ணப்பத்தினைப் பெற்று பூர்த்தி செய்து விண்ணப்பத்தை அலுவலகத்தில் வேலை நாட்களில் நேரில் சமர்ப்பித்து பயனடையுமாறு, மாவட்ட ஆட்சித்தலைவர் ஆஷா தெரிவித்துள்ளார்.

பனையூரில் அண்ணாமலை வீட்டின் முன் இருந்த பாஜக., கொடி அகற்றம்: எதிர்வினைகள்!

bjp annamalai - 2026
#image_title

தமிழக பாஜக., தலைவர் அண்ணாமலை வீட்டின் முன்பு பாஜக., கொடிக்கம்பம் அமைக்கப்பட்டதற்கு அப்பகுதியில் உள்ள இஸ்லாமியர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால், பாஜக.,வின் கொடிக்கம்பத்தை போலீசார் பெரும் அமளிதுமளிக்கிடையே அகற்றினர். அப்போது பாஜக., தொண்டர்கள் போலீஸாரால் தாக்கப்பட்டு, காயமடைந்தனர். அவர்களை போலீஸார் கைது செய்தனர். இது குறித்து இந்துமுன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியன் அறிக்கை வெளியிட்டுள்ளார். அவர் வெளியிட்ட அறிக்கையில்….

கொடி காக்க போரிட்டவர்கள் மீது அதிகார அத்துமீறல், திமுக ஸ்டாலின் ஆட்சியின் தொடரும் கைதுகள் !

தமிழகத்தில் கடந்த இரண்டரை ஆண்டுகளாக ஜனநாயகத்தின் மாண்பை காலில் போட்டு மிதித்து சர்வாதிகார போக்குடன் திமுக அரசு செயல்படுகிறது. அரசும், அரசு ஊழியர்களும், ஆளும்கட்சியும் சர்வாதிகார மனப்பான்மையில் செயல்படுகின்றனர்.

நேற்று இரவு பாரதிய ஜனதா கட்சி மாநில தலைவர் திரு. அண்ணாமலை அவர்களுடைய வீட்டின் முன்பு ஏற்றப்பட்ட கொடி வலுக்கட்டாயமாக பிடுங்கி எறியப்பட்டு இருக்கிறது. அதை எதிர்த்து ஜனநாயக ரீதியில் போரிட்ட பாரதிய ஜனதா கட்சி தொண்டர்கள், தலைவர்கள் உள்ளிட்ட ஒரு 110 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் குறிப்பாக என் மன்னன் என் மக்கள் நடை பயணத்தின் இணை அமைப்பாளராக செயல்பட்ட திரு அமர் பிரசாத் ரெட்டி அவர்கள் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார்.

எந்த ஒரு கட்சித் தொண்டனும் தனது கட்சியினுடைய கொடி, கொடிமரம் என்பதற்காக உயிரையும் துச்சமாக கருதி போராட முன் வருவான். அந்த வகையில் தங்களது கட்சியின் கொடிக்காக போராடிய பாரதிய ஜனதா கட்சியின் தொண்டர்களை கைது செய்தது வன்மையாக கண்டிக்கத்தக்கது.

இதற்காக பொய் வழக்கு போட்டு தலைவர்களை கைது செய்வதென்பது அரசின் கையாலாகாத தனத்தை தெளிவுபடுத்துகிது.

சமீபத்தில் விநாயகர் சதுர்த்தி முடிந்ததும் இந்து முன்னணி பேரியக்கத்தின் மாநிலச் செயலாளர் உட்பட பல பொறுப்பாளர்கள் மீதும் பொய் வழக்குகள் போடப்பட்டது.

கருத்து சுதந்திரத்தை எதிர்கொள்ள திராணி இல்லாத திமுக அரசு, தற்போது நடைபெற்று வருகின்ற பாஜகவின் என் மண் என் மக்கள் பாதயாத்திரைக்கு பெருந்திரளாக மக்கள் கூடுவதைக் கண்டும் அச்சப்படுகிறது . அதன் வெளிப்பாடு தான் இந்த அதிகார துஷ்பிரயோக, அநியாயச் செயல்.

சர்வாதிகார பாசிச மனப்பான்மை நீடித்ததாக சரித்திரமில்லை. மக்கள் விரோத அரசாங்கம் மக்களால் தூக்கியெரியப்படும்.

காவல்துறையின் இந்தச் செயல்பாடு திமுக குடும்பத்திற்கு காலம்காலமாக கொத்தடிமையாக, விசுவாசமாக இருக்கும் கீழ்நிலை மனிதனின் செயல்பாடாக தமிழக மக்கள் கருதுகிறார்கள்.

இது போன்ற செயல்கள் தமிழக ஜனநாயகத்தின் இருண்ட காலமாக வருங்காலத்தில் குறிப்பிடப்படும் என்பதை தமிழக முதல்வர் ஸ்டாலின் உணர வேண்டும். கைது செய்யப்பட்டுள்ளவர்களை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்று இந்துமுன்னணி வலியுறுத்துகிறது…. என்று குறிப்பிட்டிருக்கிறார்.

மத்திய அமைச்சர் எல்.முருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில், கோட்டையில் உங்கள் கொடி பறப்பதால் – திமுக அரசுக்கு என்ன ஆணவமா? அண்ணாமலை இல்லத்திற்கு வெளியே வைக்கப்பட்ட கட்சி கொடிக் கம்பத்தை போலீசார் மூலமாக தமிழக அரசு அகற்றியுள்ளனர். இந்தச் செயலை வன்மையாகக் கண்டிக்கிறேன்.

ஒரு கொடிக் கம்பத்தை அகற்றினால் பல ஆயிரம் கொடிக் கம்பங்கள் வரும் காலங்களில் நடப்படும். பூனை தன் கண்ணை மூடிக்கொண்டால் உலகம் இருண்டுவிடும் என்று எண்ணிக் கொள்ளுமாம். அதுபோல ஒரு கொடிக் கம்பத்தை அகற்றிவிட்டதால் பாஜக.,வின் வளர்ச்சியை கனவிலும் தடுக்க முடியாது என்பதை இந்த போலி திராவிட மாடல் அரசுக்கு தெரிவித்துக் கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், தமிழக பாஜக., தலைவர் கே.அண்ணாமலை வெளியிட்ட சமூக வலைத்தளப் பதிவில், ஒரு நாளுக்கு நூறு என நூறு நாள்களில் பத்தாயிரம் பாஜக., கொடிக்கம்பங்கள் நடப்படும், இதே பனையூரில் பத்தாயிரத்து ஓராவது கொடிக்கம்பம் நடப்படும் என்று தெரிவித்திருக்கிறார். அவரது பதிவு:

குண்டு வைத்து மக்கள் பலரைக் கொன்ற தீவிரவாதிகளை எல்லாம், அரசியலுக்காக விடுதலை செய்யத் துடிக்கும் திமுக, தீவிரவாதிகள் காரில் வெடிகுண்டுகளோடு சுதந்திரமாகச் சுற்றித் திரியும் அளவுக்கு உளவுத்துறையில் கோட்டை விட்ட திமுக, பனையூரில் கிளை தலைவர் ஏற்பாட்டில் நடப்பட்டிருந்த கொடிக்கம்பத்தை அகற்ற, தீவிரவாதிகளைக் கைது செய்யப் போவது போல நள்ளிரவில் பெரும் போலீஸ் படையுடன் புறப்பட்டு வந்தது பெரும் வினோதம்.

திமுக அரசின் உத்தரவின் பேரில், நள்ளிரவில் கொடிக்கம்பத்தை அகற்ற வந்த காவல்துறையினரை எதிர்த்துப் போராடிய தமிழக பாஜக சகோதர சகோதரிகள் மீது, காட்டுமிராண்டித் தனமான தாக்குதல் நடத்தியிருக்கிறார்கள். பொதுமக்களை ஏய்த்து பிழைப்பை நடத்திக் கொண்டிருக்கும் திமுக, எங்கள் தொண்டர்கள் சிந்திய ஒவ்வொரு துளி ரத்தத்திற்கும் பெரும் விலை கொடுக்க வேண்டியிருக்கும் என்பதைச் சொல்லக் கடமைப்பட்டிருக்கிறேன்.

அதிகாரத் திமிரில் அராஜகம் செய்து கொண்டிருக்கும் திமுக, தமிழக பாஜகவின் ஒரு கொடிக்கம்பத்தை அகற்றிவிட்டதால் வெற்றி பெற்றதாக நினைத்துக் கொள்ள வேண்டாம். நவம்பர் 1ஆம் தேதி தொடங்கி 100 நாட்களுக்கு ஒவ்வொரு நாளும் தமிழகம் முழுவதும் 100 பாஜக கொடிக்கம்பங்கள் நடப்படும்.

பத்தாயிரமாவது கொடி கம்பம் அடுத்த வருடம் பிப்ரவரி 8ஆம் தேதி (100வது நாள்) நேற்று காவல்துறையினரின் தடியடியில் காயமடைந்து சிகிச்சை பெற்று வரும் சகோதரர் திரு விவின் பாஸ்கரன் அவர்களின் முன்னிலையில் கொடி கம்பம் அகற்றப்பட்ட அதே பனையூரில் நடப்படும் என்பதையும் ஊழல் திமுக அரசுக்கு மிக பணிவன்புடன் தெரிவித்துக் கொள்கிறோம்.

நம்ம நாட்டு சுற்றுலா: புவனேஷ்வரத்தில் ஒரு நாள்!

bhuvaneshwar - 2026
#image_title

புவனேஷ்வரப் பயணம்

பகுதி 1 – பயணத்திட்டம்

முனைவர் கு.வை.பாலசுப்பிரமணியன்

          இந்திய வரலாற்றில் நாம் படிக்கின்ற முதல் பேரரசு “மௌரியப் பேரரசாகும்”. என்னுடைய பள்ளி நாட்களில் நாடகக் காவலர் ஆர்.எஸ்.மனோகர் அவர்களின் சாணக்கியர் பற்றிய நாடகத்தை நான் வானொலியில் கேட்டிருக்கிறேன். பின்னாளில் அதே நாடகம் சென்னை பொதிகை சானலில் ஒளிபரப்பானது. அதற்குப் பின்னர் ஷாருக் கான், அஜித் நடித்த அசோகா என்ற திரைப்படம் அசோகரின் வாழ்க்கையைப் பற்றி சிறிது சொல்கிறது. தக்ஷிண் பாரத் ஹிந்தி பிரச்சார் சபாவில் ஹிந்தி படிக்கும்போது அசோகர் பற்றிய துணைப்பாடப் புத்தகம் இருந்தது. அதிலே (அது ஒரு கற்பனையான புத்தகம்) அசோகரைப் பற்றிய நான் அறியாத செய்திகள் இருந்தன.

          நான் வரலாற்றில் முதுகலைப் படிப்பு படிக்கும்போது, இந்திய வரலாற்று மூலங்கள் என்பது முதல் பாடமாக இருக்கும். அதில் ஹாதி கும்பா கல்வெட்டு, அய்ஹோல் கல்வெட்டு எனப் பண்டைக்கால கல்வெட்டுக்கள் குறிப்பிடப்படும். எனக்கு இந்த கல்வெட்டுக்களைக் காண வேண்டும் என ஆவல் எழுந்தது. எனவே புவனேஷ்வரம் செல்ல ஒரு பயணத்திட்டம் தயாரித்தேன். 2017இல் ஒரு முறை ஒன்பது நாட்கள் விடுமுறை தொடர்ந்துவந்தது. அதிலே குடும்பத்தோடு புவனேஷ்வரம் செல்லத் திட்டமிட்டேன்.

          சென்னையில் இருந்து புவனேஷ்வரம் வரை விமானப் பயணம். புவனேஷ்வரத்தில் இருந்து கார் மூலம் புவனேஷ்வர நகரச் சுற்றுலா, பூரி, கொனார்க், சில்கா ஏரி, மீண்டும் புவனேஷ்வரம். பின்னர் புவனேஷ்வரத்தில் இருந்து சென்னை விமானப் பயணம். இதுதான் என்னுடைய பயணத்திட்டம்.

          சென்னையில் இருந்து புவனேஷ்வரம் செல்லும் இண்டிகோ விமானம், முதலில் விசாகப்பட்டினத்தில் இறங்கும். அங்கே அரை மணி நேரம் நிற்கும். அந்த நேரத்தில் சென்னையிலிருந்து விசாகப்பட்டினம் செல்லும் பயணிகள் இறங்குவார்கள். அதன் பின்னர், விமானத்தில் அமர்ந்திருப்பவர்களின் பயணச்சீட்டு சோதித்துப் பார்க்கப்படும். அதாவது புவனேஷ்வரம் செல்பவர்கள் மட்டுமே விமானத்தில் இருக்கிறார்களா என சோதிக்கப்படும். அதன் பின்னர் விசாகப்பட்டினத்தில் இருந்து புவனேஷ்வரம் செல்பவர்கள் ஏற்றப்படுவார்கள். பின் புவனேஷ்வரத்திற்கு விமானம் புறப்படும்.

          விமானம் காலை 0930 மணிக்கு சென்னையில் இருந்து புறப்பட்டு புவனேஷ்வரத்திற்கு சுமார் 1130 மணிக்கு வந்து சேரும். இடையில் சிற்றுண்டி எதுவும் வழங்க மாட்டார்கள். தேவைப்பட்டால் காசு கொடுத்து வாங்கிக் கொள்ள வேண்டும். இதைப் பற்றி எனக்கு ஏற்கனவே அனுபவம் இருந்ததால், சாப்பிடுவதற்கு கையில் பிஸ்கட், மிக்சர், போன்றவை வைத்திருந்தோம்.

          புவனேஷ்வரம் விமான நிலையத்திலிருந்து வெளியே வந்ததும் முன்னரே ஏற்பாடு செய்திருந்த கார் விமான நிலையத்தின் வெளியே காத்திருந்தது. அதில் ஏறி, புவனேஷ்வர் நகரத்தின் மத்தியில் ஒரு ஹோட்டலில் ஒரு அறை எடுத்துத் தங்கினோம். மதிய உணவு அங்கேயே சாப்பிட்டோம். மாலை 0300 மணிக்கு உதயகிரி, சந்திரகிரி செல்வதாக முடிவுசெய்திருந்தோம்.

          என்னுடைய பல நாள் கனவான ஹாதிகும்பா கல்வெட்டைப் பார்க்க மாலை செல்லவிருக்கிறோம் என்ற மகிழ்ச்சியில் சற்று உறங்கினேன்.

தொடங்கியது – வடகிழக்கு பருவமழை!

rains weather rain women - 2026
#image_title

வடகிழக்கு பருவமழை தொடங்கியது !

முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன்

தமிழகம், புதுச்சேரி யூனிய்ன பகுதி, கேரளப் பகுதிகளில் வடகிழக்கு பருவமழை இன்று தொடங்கியது. கிழக்கு மற்றும் வடகிழக்கு திசையில் இருந்து காற்று வீசத் தொடங்கியிருப்பதால் வடகிழக்குப் பருவமழை தொடங்கியுள்ளது. இருப்பினும், பொதுவாக வடகிழக்கு பருவமழையின் ஆரம்ப கட்டம் பலவீனமாகவே இருக்கும்.

அரபிக் கடலில் புயல்

தென்மேற்கு அரபிக்கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் (Deep Depression) கடந்த 6 மணி நேரத்தில் மணிக்கு 24 கிமீ மேற்கு-வடமேற்கு நோக்கி நகர்ந்து, “தேஜ்” சூறாவளியாக வலுவடைந்து, அதே பகுதியில் அக்டோபர் 21ஆம் தேதி காலை 0530 மணிக்கு மையம் கொண்டிருந்தது. “தேஜ்” புயல் 9.9° வட அட்சரேகை மற்றும் 59.4° கிழக்கு தீர்க்கரேகை புள்ளியில், ஏமன் நாட்டில் உள்ள சோகோட்ரா என்ற இடத்தில் இருந்து சுமார் 670 கிமீ கிழக்கு-தென்கிழக்கே மையம் கொண்டுள்ளது.

இது அடுத்த 12 மணி நேரத்தில் தீவிரப் புயலாகவும் (Severe Cyclonic Storm) அடுத்த 24 மணி நேரத்தில் அதி தீவிரப் புயலாகவும் (Very Severe Cyclonic Storm) வலுப்பெற வாய்ப்புள்ளது. இது 22ஆம் தேதி காலை வரை மேற்கு-வடமேற்கு நோக்கியும், அதன்பிறகு 24ஆம் தேதி காலை வரை வடமேற்கு நோக்கியும், பின்னர் வடக்கு-வடமேற்கு நோக்கியும் நகர வாய்ப்புள்ளது. இது அக்டோபர் 25 ஆம் தேதி அதிகாலையில் அல் கைதா (ஏமன்) மற்றும் சலாலா (ஓமன்) இடையே ஏமன்-ஓமன் கடற்கரையை கடக்க வாய்ப்புள்ளது.

இந்தப் புயலால் இந்தியப் பகுதிகளுக்கு பாதிப்பில்லை. ஆழ்கடலில் மீன்பிடிக்கச் செல்லும் புயல் பகுதியை தவிர்க்க வேண்டும்.

வங்கக் கடலில் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி
தென்மேற்கு மற்றும் அதை ஒட்டிய தென்கிழக்கு வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி (Low Pressure Area) 21 அக்டோபர் 2023 காலை 0530 மணிக்கு தென்கிழக்கு மற்றும் அதை ஒட்டிய கிழக்கு மத்திய வங்காள விரிகுடாவில் உருவாகியுள்ளது.

இது வடமேற்கு திசையில் நகர்ந்து மேற்கு மத்திய வங்கக்கடலில் நளை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற வாய்ப்புள்ளது. அதன்பிறகு, இது அடுத்த 3 நாட்களில் வடக்கு-வடகிழக்கு திசையில் வங்கதேசம் மற்றும் அதை ஒட்டிய மேற்கு வங்கக் கடற்கரையை நோக்கி நகரக்கூடும்.

இது புயலாகும் வாய்ப்பு குறைவாக உள்ளது. இன்று சில நாளிதழ்களில் குறிப்பிட்டுள்ளது போல புயல் உருவாக வாய்ப்பு குறைவாக உள்ளது.

தமிழகத்தில் மழை

தமிழகத்தில் இன்று அதிகாலை முதல் வட தமிழகக் கடலோரப் பகுதிகளில் மிதமான மழை பெய்து வருகிறது. இருப்பினும் இந்த மழை தொடர வாய்ப்பு குறைவாக உள்ளது.

குமரிக் கடல் பகுதி மற்றும் சுற்றுப்புறத்தின் கீழ் மற்றும் நடுத்தர மட்டத்தில் ஒரு காற்று சுழற்சி நிலவுகிறது. இதனால் தென் தமிழகம், கேரளப் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு மிதமான மழை பெய்யும்.

WC 2023: பாகிஸ்தானை வென்ற ஆஸ்திரேலிய அணி!

world cup cricket 2023 - 2026
#image_title

ஒருநாள் கிரிக்கட் உலகக் கோப்பைப் போட்டி
16ஆம் நாள் – ஆஸ்திரேலியா vs பாகிஸ்தான்
பெங்களூரு – 20.10.2023

முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன்

ஆஸ்திரேலிய அணி (367/9, வார்னர் 163, மிட்சல் மார்ஷ் 121, ஷாஹீன் ஷா அஃப்ரிடி 5/54, ஹாரிஸ் ராவுஃப் 3/83) பாகிஸ்தான் அணியை (45.3 ஓவரில் 305, இமாம் உல் ஹக் 70, ஷஃபிக் 64, ரிஸ்வான் 46, ஷகீல் 30, சாம்பா 4/53, ஸ்டொயினிஸ் 2/40, பேட் கம்மின்ஸ் 2/40) 62 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.

பூவாதலையா வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பந்துவீசத் தீர்மானித்தது. ஆனால் அந்த அணியின் அந்த முடிவு அந்த அணிக்குச் சாதகமாக அமையவில்லை. முதல் 10 ஓவர்களான பவர்ப்ளே ஓவர்களில் ஆஸ்திரேலிய தொடக்கவீரர்கள் வார்னர், மிட்சல் மார்ஷ் இருவரும் 82 ரன்கள் அடித்தனர். வார்னர் 10 ரன்னில் இருக்கும்போது ஒரு சுலமான கேட்சை பிடிக்க பாகிஸ்தான் அணி தவறியது.

33.5ஆவது ஓவரில் மார்ஷ் ஆட்டமிழக்கும்போது அவர் வார்னருடன் சேர்ந்து 259 ரன் சேர்த்திருந்தார். வார்னர் இதற்கு முன்னர், உலகக் கோப்பை ஒருநாள் போட்டிகளில், இதே போன்ற மூன்று பார்ட்னர்ஷிப் ரிகார்ட் வைத்திருக்கிறார் என்பது தனிக்கதை.

வார்னர் 44.2ஆவது ஓவரில் நாலாவது பேட்ஸ்மெனாக ஆட்டமிழந்தார். அப்போது அணியின் ஸ்கோர் 325. அதன் பின்னர் அடுத்த ஐந்து ஓவர்களில் ஆஸ்திரேலிய வீரர்கள் பெரிதாக ரன் சேர்க்கவில்லை. அவர்கள் சரியாக ஆடியிருந்தால் ஆஸ்திரேலிய அணியின் ஸ்கோர் 400ஐத் தாண்டியிருக்க வாய்ப்பிருந்தது.

பாகிஸ்தான் அணி பந்துவீச்சாளர்கள் கடைசி ஐந்து ஓவர்களில் வீசிய துல்லியமான பந்து வீச்சால் ஆஸ்திரேலிய அணி 50 ஓவர் முடிவில் 9 விக்கட் இழப்பிற்கு 367 ரன் எடுத்தது.

பாகிஸ்தான் அணி தனது இன்னிங்க்ஸை ஆடத் தொடங்கியபோது அதன் தொடக்க வீரர்கள் இமாம் உல் ஹக் மற்றும் ஷஃபீக் இருவரும் நன்றாக ஆடினர். ஆயினும் பவர்ப்ளே ஓவர்களில் விக்கட் இழப்பின்றி 59 ரன் மட்டுமே அடிக்க முடிந்தது.

பாகிஸ்தான் அணி பந்து வீசும்போது நாலு கேட்சுகளைத் தவற விட்டனர். ஆஸ்திரேலியா பந்து வீசும்போது அபோட் முதல் கேட்சைத் தவறவிட்டார். பின்னர் இமாம் உல் ஹக் 48 ரன்னில் இருக்கும்போது மார்ஷ் ஒரு கேட்ச் தவறவிட்டார். அச்சமயத்தில் ஸ்டொயினிஸ் இரண்டு தொடக்க வீரர்களின் விக்கட்டுகளையும் வீழ்த்தினார்.

அதன் பின்னர் பெரிய பார்ட்னர்ஷிப் எதுவும் பாகிஸ்தான் அணிக்கு ஏற்படவில்லை. எனவே 45.3 ஓவரில் அனைத்து விக்கட்டுகளயும் இழந்து அந்த அணியால் 305 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. சாம்பா தொடர்ந்து இரண்டாவது முறையாக நாலு விக்கட்டுகள் எடுத்தார்.

வார்னர் ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார். நாளை இரண்டு ஆட்டங்கள் நடக்கவுள்ளன.

முதல் ஆட்டம் லக்னோவில் இலங்கை-நெதர்லாந்து அணிகளுக்கிடையே நடக்கிறது.

இரண்டாவது ஆட்டம் இங்கிலாந்து-தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கிடையே மும்பையில் நடக்கவுள்ளது.

மதுரை கோயில்களில் நவராத்திரி விழா!

navarathri vizha in madurai
Navarathri Vizha in Madurai

நவராத்ரி விழா:

மதுரை: மதுரை அருகே, கொடிமங்கலம் ஸ்ரீ சீதாலட்சுமி ஆலயத்தில், நடைபெற்ற சுவாஸினி &கன்யா பூஜை நடைபெற்றது.

நவராத்திரி முன்னிட்டு, இக்கோவிலில் தினசரி அம்பாள் பல்வேறு அலங்காரங்களில் பக்தர்கள் காட்சியளிக்கிறார், நவராத்திரி விழா முன்னிட்டு, இக்கோயிலில் சுகாசினி மற்றும் சுமங்கலி பூஜை நடைபெற்றது.

இதில் ,ஏராளமான பெண்கள் கலந்து கொண்டனர் .
இதே போல, நவராத்திரி முன்னிட்டு மதுரை மதுரை அருகே சோழவந்தான் சிவன் ஆலயத்தில், அம்பாள் தினசரி அலங்காரங்களில் பக்தர் காட்சியளித்தார்.

இதே போல, சோழவந்தான் ஜெனகை மாரியம்மன், திரௌபதி அம்மன் திருவேடகம் ஏடகநாதர், மதுரை அண்ணா நகர் வைகை காலனி அருள்மிகு வைகை விநாயகர், தாசில்தார் நகர், சித்தி விநாயகர் ஆலயம், மேலமடை சௌபாக்கிய விநாயகர் ஆலயம், வர சித்தி விநாயகர் ஆலயம் , இம்மையில் நன்மை தருவார் ஆலயம், மதுரை ஆவின் சாத்தமங்கலம் பால விநாயகர் ஆலயம், மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர், பழைய சொக்கநாதர், தென்கரை மூலநாதர் உள்ளிட்ட கோயில்களில் நவராத்ரி பூஜைகள் நடைபெற்று வருகிறது.


சிவகாசியில், ஸ்ரீதனலட்சுமி அலங்காரத்தில் எழுந்தருளிய ஸ்ரீமுப்பிடாரியம்மன்!

சிவகாசி : விருதுநகர் மாவட்டம் சிவகாசியில், இந்து நாடார்கள் உறவின்முறை மகமைப்பண்டுக்கு சொந்தமான ஸ்ரீமுப்பிடாரியம்மன் கோவிலில் நவராத்திரி திருவிழா சிறப்பாக நடைபெற்று வருகிறது. 5ம் நாள் திருவிழாவை முன்னிட்டு ஸ்ரீமுப்பிடாரி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றது. அதனை தொடர்ந்து ஸ்ரீமுப்பிடாரி அம்மனுக்கு சிறப்பு அலங்காரம், பூஜைகள் மற்றும் மகா தீபாராதனை நடைபெற்றது.

இதனையடுத்து ஸ்ரீமுப்பிடாரி அம்மன் ரூபாய் நோட்டுகளால் ஆன மாலையும், காசுகளால் கோர்க்கப்பட்ட மாலையும் அணிவிக்கப்பட்டு, தாமரை பீடத்தில் ஸ்ரீதனலட்சுமி அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி கொடுத்தார். ஸ்ரீதனலட்சுமி அலங்காரத்தில் எழுந்தருளிய ஸ்ரீமுப்பிடாரியம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.

தொடர்ந்து ஸ்ரீதனலட்சுமி அலங்காரத்தில் எழுந்தருளிய அம்மன், நான்கு ரதவீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு காட்சி கொடுத்தார். நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

பக்தர்களுக்கு பிரசாதங்கள் வழங்கப்பட்டது. திருவிழா நிகழ்ச்சி ஏற்பாடுகளை, இந்து நாடார்கள் உறவின்முறை மகமைப்பண்டு தேவஸ்தான நிர்வாகிகள் சிறப்பாகச் செய்திருந்தனர்.


வலசை கிராமத்தில் ஸ்ரீ அழகி நாச்சியம்மன் திருக்கோவில் மகா மண்டல அபிஷேக விழா!

அலங்காநல்லூர்: மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் பேரூராட்சி, வலசை கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீஅழகி நாச்சியம்மன், பாரிகருப்புசாமி உள்ளிட்ட 21 பரிவார தெய்வங்களின் திருக்கோவில் மஹா கும்பாபிஷேக
விழா கடந்த மாதம் நடைபெற்றது. இதற்கான மண்டல அபிஷேக விழா நேற்று நடந்தது.

இதற்காக நடைபெற்ற யாகசாலை பூஜையில் மங்கல இசை முழங்க கணபதி ஹோமம், விக்னேஸ்வர பூஜை, கோ பூஜை, வாஸ்து சாந்தி, மகா பூர்ணாவூதி தீபாராதனை நடைபெற்றது. தொடர்ந்து , மூன்று கால பூஜையுடன் யாகசாலையில் இருந்து கடம் புறப்பாடாகி கோவிலை சுற்றி வலம் வந்து சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க பரிவார தெய்வங்களுக்கு புனித நீர் ஊற்றப்பட்டு
மண்டல அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் , அன்னதானம் வழங்கப்பட்டது. பொருசுப்பட்டி திருக்கோவில் பங்காளிகள் செய்திருந்தனர்.

அர்ஜுன் சம்பத்துக்கு சம்மன்; இதான் திராவிட மாடல் ஆட்சியா? கேள்வி

madurai hindu makkal katchi news - 2026
#image_title

பெட்ரோல் குண்டு வீச்சு சம்பந்தமாக எக்ஸ்தலத்தில் பதிவு செய்தவிவகாரம்: மதுரை செக்கானூரணி காவல் நிலையத்தில் நேரில் ஆஜராக அர்ஜுன் சம்பத்திற்கு சம்மன்! அர்ஜுன் சம்பத்திற்கு பதிலாக அவரது வக்கீல் நேரில் ஆஜர்.

மதுரை, விக்ரமங்கலம் அருகே கீழப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த சுமதி என்பவரது வீட்டில் இருசக்கர வாகனங்கள் கடந்த சில நாட்களுக்கு முன்பாக சொத்து தகராறில் தீ வைத்து எரிக்கப்பட்டது.

இது சம்பந்தமாக இந்து மக்கள் கட்சி தலைவர் ‌அர்ஜூன் சம்பத் , அதனை சட்டம் ஒழுங்கு பிரச்சனையாக, எக்ஸ் தளத்தில் பதிவு செய்தார். இது தொடர்பான விசாரணைக்கு வரும்படி, செக்கானூரணி காவல் நிலையத்திலிருந்து சம்மன் அனுப்பி வைத்தனர். அதன் அடிப்படையில்,
அவருக்குபதில் அவரது வழக்கறிஞர் நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தார் .

அப்போது அவர் செய்தி யாளர்களிடம் பேசியதாவது:

மதுரை விக்கிரமங்கலம் அருகே கீழப்பட்டியில் கடந்த சில தினங்களுக்கு முன்பு குடும்பத்தகராரு காரணமாக ஒரு தரப்பினர் பெட்ரோல் குண்டுகளை வீட்டில் வீசிவிட்டு சென்றதில் இருசக்கர வாகனங்கள் எரிந்துதீக்கரையானது அதனைத் தொடர்ந்து வீட்டின் உரிமையாளர் சுமதி என்பவர் காயம் பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

இந்த செய்தியானது அனைத்து தொலைக்காட்சிகளிலும் ஒளிபரப்பானது. அதன் அடிப்படையில் வெடிகுண்டு கலாச்சாரம் தமிழகத்தில் பரவி விட்டதாக எனது கட்சிக்காரர் அர்ஜுன் சம்பத் x தளத்தில் பதிவிட்டிருந்தார்.

அதன் அடிப்படையில் சம்மன்னானது இரவோடு இரவாக கொடுக்கப்பட்டது. அந்த சம்மன் அவர் கைக்கு கிடைத்த அரை மணி நேரத்திற்குள் எல்லா டிவியிலும் பிளாஷ் நியூஸ் ஆக வருகிறது. ஆகவே இதன் உள் அர்த்தம் என்ன? ஒரு மனிதரை டார்கெட் செய்ய வேண்டும், கைது செய்ய வேண்டும் என்ற உள்நோக்கம் இருப்பதினால்தான் உடனடியாக பிளாஷ் நியூஸ் ஆக வருகிறது.

சம்மன் கிடைத்த போது அவரும் வெளிவிடவில்லை எங்கள் கட்சியை சார்ந்த யாரும் வெளியிடவில்லை பிறகு எப்படி அது வெளியில் வந்தது.

நவம்பர் 1 தேதி நடைபெற இருக்கின்ற திராவிட ஒழிப்பு மாநாடு நடத்த இருக்கின்றார் அதனை நிறுத்த வேண்டும் முடக்க வேண்டும் என்பதற்காக இவ்வாறு சதி நடந்திருக்கிறது. இதுதான் திராவிட மாடல் ஆட்சியா?” என்று பேசினார்.

நிலக்கோட்டையில் பிளாஸ்டிக் அரிசி விற்பனை செய்யப் படுவதாக வதந்தி!

madurai news plastic rice - 2026
#image_title

நிலக்கோட்டையில் பிளாஸ்டிக் அரிசி விற்பனை செய்யப்படுவதாக வதந்தி; வீடு வீடாக அதிகாரிகள் விழிப்புணர்வு!

நிலக்கோட்டை: திண்டுக்கல் மாவட்டம்,
நிலக்கோட்டை அருகே ,எத்திலோடு ஊராட்சி பகுதிகளில் உள்ள ரேசன் கடைகளில் வாங்கப்பட்ட அரிசி தண்ணீரில் மிதப்பதாக பொதுமக்கள் குற்றம்சாட்டினர். எனவே, பிளாஸ்டிக் அரிசி இதில் கலந்துள்ளதா என, சந்தேகமடைந்து ஊழியர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இந்த செய்தி அப்பகுதியில் வேகமாக பரவியது. ரேசன் கடையில் வழங்கப்படும் அரிசியில் பிளாஸ்டிக் அரிசிஉள்ளதாக வதந்தி பரவியது. இதனைத்
தொடர்ந்து, நிலக்கோட்டை வட்ட வழங்கல் அலுவலர் தங்கேஸ்வரி ரேசன்கடைகளில் ஆய்வு செய்தார்.

அதில், செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கப்படுவதால் தண்ணீரில் மிதப்பது தெரியவந்தது. அதைதொடர்ந்து, வீடுவீடாக சென்று பொதுமக்களிடம் அதிக சத்துள்ள செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கப்படுவதால் தண்ணீரில் மிதப்பதாக விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

எஸ்.ஐ., பணியில் சேர்ந்து 12 ஆண்டுகளை கடந்தும் இன்ஸ்பெக்டர் பதவி உயர்வின்றி 1,026 பேர் காத்திருக்கின்றனர்.

கடந்த 2011 ல் தமிழக அளவில் 1026 பேர் நேரடி எஸ்.ஐ.,க்களாக தேர்வு செய்யப்பட்டனர். இவர்கள், 10 ஆண்டு பணி முடித்ததும் இன்ஸ்பெக்டர் பதவி உயர்வு வழங்கவேண்டும். ஆனால், 12 ஆண்டுகளை கடந்தும் பதவி உயர்வின்றி தவித்து வருகின்றனர்.

பாதிக்கப்பட்ட எஸ்.ஐ.,க்கள் கூறியதாவது: பணியில் சேர்ந்து 10 ஆண்டிற்கு மேலானதால் இன்ஸ்பெக்டருக்கு நிகரான சம்பளம் பெறுகிறோம். எங்களுக்கு பதவி உயர்வு வழங்குவதால், அரசுக்கு நிதி சுமை ஏற்பட வாய்ப்பில்லை. இதில் நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றனர்.

நிதி நிறுவன முற்றுகை:

திண்டுக்கல் மாவட்டம், சின்னாளபட்டி எஸ்.எம்.சி. நிதி நிறுவனத்தை முற்றுகையிட்ட வாடிக்கையாளர்கள். பணம் செலுத்தியவர்களுக்கு முதிர்வு காலம் முடிந்த பின்பும் பணம் தர மறுப்பதால், முற்றுகை போராட்டம் நடை பெற்றது.
ஜந்து மணி‌நேரமாக தொடரும் போராட்டம் ஆகும்.

நரிக்குடி ஒன்றியம், டி. கடம்பன்குளம் ஊராட்சியில் பனை விதை நடும் பணி

விருதுநகர் மாவட்டம், நரிக்குடி அருகே கடம்பன்குளம் ஊராட்சியில், பனைவிதை சேகரிப்பு மற்றும் நடும் பணி துவங்கப்பட்டுள்ளது. விருதுநகர் மாவட்டம் நரிக்குடி ஒன்றியம் கடம்பன்குளம் ஊராட்சியில், பனை விதை சேகரிப்பு மற்றும் நடும் பணி துவங்கப்பட்டுள்ளது. நூறுநாள் வேலை திட்ட பயனாளிகள் மூலம் கிழவி குளம், கடம்பன்குளம், சீனிக் காரனேந்தல் பிரண்டைக்கும் ஆகிய கிராமங்களில் பனைவிதை நட்பபட்டு வருகிறது. ஊராட்சியில், உள்ள அனைத்து பகுதியிலும் நட்ப்பு ஆண்டில் ஒரு லட்சம் பணை விதைகள் சேகரிக்கப்பட்டு நட்டுவைக்கப் படும் என்று ஊராட்சி மன்றத் தலைவர் ராக்கு கோபாலகிருஷ்ணன் தெரிவித்தார். .

காரியாபட்டி பேரூராட்சி பேரூந்து நிலைய விரிவாக்கப்பணி: பேரூராட்சி சேர்மன் – அதிகாரிகள் ஆய்வு

காரியாபட்டி பேரூந்து நிலைய விரிவாக்கப்
பணிகளை ,சேர்மன் மற்றும் அதிகாரிகள் ஆய்வு செய்தனர். விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி பேரூந்து நிலையம் இடநெருக்கடி காரணமாக பேருந்துகள் உள்ளே சென்று வர மிகவும் சிரமமாக இருந்தது. . பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று பேரூராட்சி நிர்வாகம் 1 கோடியே 30 லட்சம் மதிப்பீட்டில் பேரூந்து நிலையத்தை விஸ்தரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது.

தற்போது, அருப்புக்கோட்டை, திருச்சுழி, டி.கல்லுப்பட்டி, கமுதி, கள்ளிக்குடிஆகிய பகு திகளுக்கு செல்லும் பஸ்கள் காரியாபட்டி முக்கு ரோட்டிலும் , நரிக்குடி, மதுரை, திரு மங்கலம், திருப்புவனம், முக் குளம் பகுதிக்கு செல்லும் பஸ்கள் பஸ் நிலையத்தின் வெளி பகுதியில் இருந்தும் இயக்கப்பட்டு வருகிறது.

இதனால், பொதுமக்கள் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். பொதுமக்கள் பஸ் நிலைய விரிவாக்க பணியை விரைந்து முடிக்க வேண்டும் அமைச்சர் தங்கம் தென்னரசு வேண்டுகோள் விடுத்துள்ளார். இதையடுத்து, அமைச்சரின் வேண்டுகோளுக்கிணங்கபேரூராட்சி ,தலைவர் ஆர்.கே. செந்தில் , பேரூராட்சிக ளின் மதுரை மண்டல செயற் பொறியாளர் சாய்ராம், பேரூராட்சி செயல் அலுவலர் அன்பழகன், இள நிலை பொறியாளர் கணேசன் ஆகியோர் பார்வை யிட்டு ஆய்வு செய்தனர். அப்போது,
பேரூராட்சி கவுன்சிலர்கள் சங்கரேஸ்வரன், சரஸ்வதி பாண்டியராஜன், ஒப்பந்தகாரர் விஜயகுமார் மற்றும் பலர் உடனிருந்தனர்.

உங்க மொபைல் திடீர்னு அலறினா… பயந்துடாதீங்க! இதான் காரணம்!

cellphone in hall - 2026

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள மொபைல் போன் வாடிக்கையாளர்களுக்கு அரசின் தொலை தொடர்பு துறை சார்பில் ஒரு செய்தி அனுப்பப்பட்டுள்ளது. இந்த குறுஞ்செய்தி பெரும்பாலும் அனைத்து மொபைல் போன் வாடிக்கையாளர்கள் எண்ணுக்கும் அனுப்பப்பட்டுள்ளது.

“முக்கிய அறிவிப்பு: உங்கள் மொபைலில் எமெர்ஜென்ஸி சூழல் குறித்த டெஸ்ட் மெசேஜை வேறு ஒலி மற்றும் அதிர்வுடன் பெறலாம். தயவுசெய்து பீதி அடைய வேண்டாம், இந்த செய்தி உண்மையான அவசரநிலையைக் குறிக்கவில்லை. இந்தச் செய்தியை இந்திய அரசின் தொலைத்தொடர்புத் துறை, தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்துடன் இணைந்து திட்டமிட்ட சோதனைச் செயல்பாட்டின் ஒரு பகுதியாக அனுப்புகிறது”

“தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்துடன் இணைந்து, பேரிடர்களின் போது அவசரகால தகவல்தொடர்புகளை மேம்படுத்தவும், மக்களின் பாதுகாப்பு மற்றும் நல்வாழ்வை உறுதிப்படுத்தவும் செல் ஒலிபரப்பு எச்சரிக்கை அமைப்பு சோதனை நடத்தப்படும் என்பதை தொலைத்தொடர்புத் துறை தெரிவித்துள்ளது. .20.10.2023 தேதி, தமிழ்நாடு உரிமம் பெற்ற சேவைப் பகுதியின் கீழ் வரும் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் சோதனைகள் நடத்தப்படும்.”

மேற்கண்ட குறுஞ்செய்திகளின்படி, பேரிடர்களின்போது, அவசர கால தகவல் தொடர்புகளை மேம்படுத்த இன்று ‘மொபைல் ஒலிபரப்பு எச்சரிக்கை’ சோதனை நடத்தப்பட உள்ளது என்பதால், இந்த எச்சரிக்கை அறிவிப்பு கேட்டு, பொதுமக்கள் அச்சமடைய தேவையில்லை என்று விளக்கம் அளித்திருக்கிறார்கள்.

தேசிய, மாநில பேரிடர் மேலாண்மை ஆணையங்கள், மத்திய அரசின் தொலை தொடர்பு துறையுடன் இணைந்து, இந்த சோதனையை நடத்த உள்ளன. ‘மொபைல் போன் ஒலிபரப்பு எச்சரிக்கை’ என்பது, ஒரு அதிநவீன தொழில்நுட்பம். ஒரு மொபைல்போன் கோபுரத்தின் குறிப்பிட்ட எல்லைக்குள் உள்ள அனைத்து மொபைல் போன்களுக்கும், இயற்கை இடர்ப்பாடு குறித்த எச்சரிக்கை, ஒரே நேரத்தில் சென்றடையக் கூடிய வசதி உள்ளது.

சுனாமி, மழை, வெள்ளம், பூகம்பம் போன்ற வானிலை எச்சரிக்கைகள், பொது பாதுகாப்பு செய்திகள், வெளியேற்ற அறிவிப்புகள், பிற அவசர கால எச்சரிக்கைள் வழங்க, ‘மொபைல் ஒலிபரப்பு எச்சரிக்கை’ பயன்படுத்தப்பட உள்ளது. இதன் செயல்பாடு குறித்த சோதனை, இன்று தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நடத்தப்பட உள்ளது.

பொதுமக்களின் மொபைல் போன்களில், அவசர எச்சரிக்கை தகவல் அனுப்பப்படும். இது சோதனையின் ஒரு பகுதி. உண்மையான அவசர நிலையை குறிக்காது. எனவே, இந்த சோதனை ஓட்டத்தால், பொதுமக்கள் அச்சமடையத் தேவையில்லை. இதற்கு எதிர்வினையாற்ற வேண்டாம் என, பேரிடர் மேலாண்மை இயக்குனர் தெரிவித்துள்ளார்.