Home Blog Page 356

Tyranny of Merit in USA v. India

0

    

judicial system - 2026

By       Narasimhan Vijayaraghavan 

The sum and substance of the long running  debate that Meritocracy should trump race-based criteria for admissions of students into schools and colleges in USA , has triumphed, as being constitutionally valid, by the judgment of US Supreme Court on 29th June,2023 in the Students for Fair Admissions case. The cause was pursued by asian americans , which included Indians too.  

The final stamp of imprimatur from SCOTUS, twenty years in coming, since the 2003 verdict authored by Justice Sandra Day O’Conor, has not ignored the debate on the ‘other side’, which academicians say is the ‘right side’. One is startlingly surprised that an Indian professor had long advocated ‘this side’ in India too. 

Before one tucks into ‘that side’, which in India,  is a political hot potato and may never happen,truth to tell, in all fairness, one may first allude to the Harvard Professor of Justice, the iconic rockstar, as he is called, Michael Sandel from his landmark work in ‘Tyranny of Merit’, on this sensitive debate. He and his erudite findings meant little to the law lords before SCOTUS,in rudely reversing the vote for affirmative action in Grutter v. Bolinger (2003). 

Sandel argues that Meritocracy is not the same as justice. Meritocracy is the idea that people should be rewarded based on their talent and effort. However, Sandel argues that this does not necessarily lead to a just society. He points out that people’s talents and opportunities are not distributed equally, and that some people are born with advantages that others do not have. As a result, a meritocratic system can lead to inequality and injustice.

The focus on merit can lead to a sense of entitlement among the winners. The winners in a meritocratic system are often those who have been born into privilege. They may believe that they deserve their success because they are smarter, harder working, or more talented than others. This can lead to a sense of entitlement and a lack of empathy for those who have not been as successful.

The focus on merit can lead to a sense of humiliation among the losers. The losers in a meritocratic system are often those who have been born into disadvantage. They may feel like they are failures because they have not been able to achieve the same level of success as others. This can lead to a sense of humiliation and a lack of motivation.

Sandel argues that we need to find a way to balance merit with other values, such as equality and solidarity. This means finding ways to ensure that everyone has a fair chance to succeed, regardless of their background. It also means finding ways to create a society where everyone feels like they are valued and respected, regardless of their level of success.

We need to find a way to rebuild a sense of community in our society. Sandel argues that we need to find a way to rebuild a sense of community in our society. He believes that a sense of community is essential for a just and sustainable society. It is what allows us to care for one another and to work together to solve common problems.

Sandel’s book has been praised by some for its insights into the problems of meritocracy. However, it has also been criticized by others for being too idealistic and for not offering any concrete solutions to the problems it identifies. Nevertheless, the book has sparked a much-needed conversation about the future of meritocracy and the role of education in a just society.

What then of the ‘concrete solutions’, Sandel missed out on? That is where our own late, lamented IIT Professor  P V Indiresan (PVI),comes  in. His ‘view’ is now the new flavor  of the season in USA . Not in India,surely not yet. PVI suggested  that interventions should start as early as possible, in the early years of schooling. This could involve providing additional support in the form of tutoring, remedial classes, or enrichment programs.

He believed  that (Science,Technology, Engineering,Mathematics) STEM education is essential for children from these communities to be competitive in the job market. He suggested  that schools should offer more STEM courses and extracurricular activities, and that teachers should be trained in STEM pedagogy.

He argued  that it is important for children from these communities to see role models who have succeeded in STEM fields. He suggested  that schools should invite STEM professionals from oppressed and backward classes to speak to students, and that they should create mentorship programs for students.

Professor Indiresan believed  that this three-pronged approach could help to close the educational gap between children from oppressed and backward classes and those from forward classes. He argued  that by providing early intervention, focusing on STEM education, and creating role models, we can give children from these communities the skills and confidence they need to succeed in school and in the workforce.

In addition to these three prongs, Professor Indiresan also suggested  that the government should provide financial assistance to families from oppressed and backward classes so that they can afford to send their children to school and pay for extracurricular activities. He also believed  that the government should invest in infrastructure, such as schools and libraries, in these communities.

Professor Indiresan’s proposal was met with mixed reactions,  nay  skeptical to derision and disdain. Most argued that his solutions were imbued with a class construct and skewed social Justice. His suggestions got no traction whatever, despite  his honest, good and noble intentions, as  only a few   agreed  with his assessment of the problem and believed  that his proposed solutions were sound and pragmatic. 

After SCOTUS gutting  of affirmative action, which has popular appeal with two thirds of Americans, in the wake of Tyranny of Merit prognostications of Prof. Sandel, Prof. P V Indiresan’s solution is now the  flavor of the season, in the land of the free. Strange! 


(Writer is practicing advocate in the Madras High Court


சிதம்பரம் தீட்சிதர்கள் விவகாரத்தில் தலையிட்டது ஏன்? சேகர்பாபு புது விளக்கம்!

IMG 20230705 WA0011 - 2026

மதுரை: அருள்மிகு கள்ளழகர் திருக்கோயிலில் ரூ.70 இலட்சம் மதிப்பீட்டில் புனரமைக்கப்பட்ட நவீன பிரசாத தயாரிப்பு கூடத்தையும், ரூ.48 இலட்சம் மதிப்பீட்டில் புனரமைக்கப்பட்ட சிறுவர் பூங்காவையும் இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு ,
வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர்
பி.மூர்த்தி ஆகியோர் பயன்பாட்டிற்கு தொடங்கி வைத்தார்கள்.

மதுரை மாவட்டம் , அழகர்கோயில் அருள்மிகு கள்ளழகர் திருக்கோயிலில் (04.07.2023) இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு , வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி ஆகியோர் ரூ.70 இலட்சம் மதிப்பீட்டில் புனரமைக்கப்பட்ட நவீன பிரசாத தயாரிப்பு கூடத்தையும்,
ரூ.48 இலட்சம் மதிப்பீட்டில் புனரமைக்கப்பட்ட சிறுவர் பூங்காவையும் பயன்பாட்டிற்கு தொடங்கி வைத்தார்கள்.

தொடர்ந்து, இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:

தமிழ்நாடு முதலமைச்சர் தளபதியார் , பொறுப்பேற்ற பின்பு கடந்த 2 ஆண்டுகளில் இந்து சமய அறநிலையத்துறையின் மூலம் தமிழ்நாட்டில் திருக்கோவில்கள் மேம்பாட்டிற்காக பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மதுரை அழகர்கோயிலில் நாள் முழுவதும் அன்னதானம் வழங்கும் திட்டம் விரைவில் துவங்கப்பட உள்ளது.

ஒரு மாதத்தில் ராஜ கோபுரத்திற்கும், அடுத்த இரண்டு மாதத்தில் கள்ளழகருக்கும் குடமுழுக்கு நடத்திட திட்டமிடப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் உள்ள 764 கோயில்களில் 501 கோயில்களுக்கு மத்திய அரசின் தர சான்றிதழ் பெறப்பட்டுள்ளது. அதிகமாக தரச்சான்று பெற்ற ஒரே மாநிலம் தமிழ்நாடு.

திருச்செந்தூர் கோவிலை மேம்படுத்த ரூபாய் 200 கோடி மதிப்பீட்டில் பெருந்திட்ட வரைவு தயாரிக்கப்பட்டு வருகிறது. சுவாமிமலை கோவிலில் லிப்ட், திருப்பரங்குன்றம் காசி விஸ்வநாதர் கோயிலுக்கு ரோப்கார் ஆகியவற்றிற்கான சாத்தியக்கூறுகள் தொடர்பாக ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.

திராவிட முன்னேற்றக் கழக அரசு ஆட்சிப் பொறுப்பேற்ற இரண்டு ஆண்டுகளில் 812 திருக்கோயில்களுக்கு குடமுழுக்கு நடத்தப்பட்டுள்ளது. எனவே, இந்த ஆட்சியை “குடமுழுக்கின் உற்சவ ஆட்சி” என சொல்வதில் பெருமை கொள்கிறோம்.

கடந்த ஆண்டு மேற்கொண்ட குடமுழுக்கு உள்ளிட்ட திருப்பணிகளை அடுத்தடுத்த ஆண்டுகளிலும் கூடுதலாக தொடர நடவடிக்கை எடுத்து வருகிறோம். மதுரை அருள்மிகு மீனாட்சி அம்மன் கோவிலில் தீ விபத்தால் சேதமடைந்த வீர வசந்தராயர் மண்டபத்தை புனரமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இப்பணிகள், இரண்டு ஆண்டுகளில் நிறைவடையும். அதனை தொடர்ந்து திருக்கோவிலுக்கு குடமுழுக்கு நடத்தும் பணிகளையும் தொடர்ந்து கண்காணித்த வருகிறோம்.

அழகர்கோவில் மலையில் சாலைகள் அமைக்கும் பணிகளுக்காக வனத்துறையின் அனுமதி பெறப்பட்டு, ஓரிரு நாட்களில் சாலை அமைக்கும் பணிகள் துவங்கப்பட உள்ளது.

சிதம்பரம் நடராஜர் கோவிலில் தீட்சிதர் – பக்தர் உறவு சமூகமாக இல்லாவிட்டால் அதை கேட்கும் உரிமை இந்துசமய அறநிலையத்துறைக்கு உண்டு. பக்தர்கள், இறைவனுக்கு அடுத்தபடியாக கருதுவது தீட்சிதர்களையும் அர்ச்சகர்களையும் தான். அதை மதித்து பக்தர்களை கவுரவிக்க வேண்டிய பொறுப்பு தீட்சிதர்களுக்கு உண்டு. அப்படி பக்தர்களுக்கு மதிப்பு அளிக்காவிட்டால் அங்கு அரசு தலையிடும்.

கோவிலில் சட்ட மீறல் இருந்தால் சட்டத்தின் ஆட்சி நடக்கும் மாநிலத்தில் அதைக்கேட்கும் அனைத்து உரிமையும் இந்துசமய அறநிலையத் துறைக்கு உண்டு. உயர்நீதிமன்ற ஆணையை ,
தீட்சிதர்கள் மீறியதால் தான் அரசு அதில் தலையிட வேண்டிய நிலை ஏற்பட்டது. அரசின் ஆணையை மீறிய அர்ச்சகர்களின் நடவடிக்கையை உடைத்து எறிந்து பக்தர்கள் கனகசபை மீது ஏறி நான்காவது நாள் தரிசனம் செய்தார்கள். இதை ஒரு போட்டியாக கருதவில்லை. பக்தர்களின் தேவையை நிறைவேற்ற வேண்டிய பொறுப்பு தெய்வத்திற்கு பணிவிடை செய்யும் தீட்சிதர்களுக்கு உண்டு. அவர்கள் நேர்மையாக மனசாட்சியுடன் நடந்து கொள்ள வேண்டும்.

தனியார்வசம் கோவில் சொத்துக்கள் இருந்த போது கோயில் சொத்துக்கள் சூறையாடப்பட்டு உள்ளன. அதன் காரணமாகத்தான் அறநிலைய துறை வசம் கோயில்கள் கொண்டு வரப்பட்டன. அரசிடம் உள்ள வரை தான் கோவில்கள் சொத்துக்கள், பக்தர்கள், பணியாளர்கள் அர்ச்சகர்கள் அனைவருக்கும் பாதுகாப்பு என, இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

இந்த நிகழ்வின் போது, இந்து சமய அறநிலையத்துறை ஆணையாளர்  க.வி.முரளிதரன் , மாவட்ட ஆட்சித்தலைவர் மா.சௌ.சங்கீதா, சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் ஆ.வெங்கடேசன் , மு.மணிமாறன் உட்பட இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் செல்லத்துரை, கோயில் துணை ஆணையர் மு. ராமசாமி மற்றும் அலுவலர்கள் ஆன்மிகப் பெருமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

ஹிந்துக்களுக்கு பெரும் பாகுபாடு காட்டும் ஒரே மதசார்பற்ற நாடு! சட்டம் திருத்தப்பட வேண்டும்!

hinduism - 2026

இந்திய அரசியலமைப்பின் பிரிவு 28, 29, 30 நீக்கப்பட வேண்டும் அல்லது திருத்தப்பட வேண்டும்.

இந்திய அரசியலமைப்பின் 30 வது பிரிவு இயற்கையிலும் மனிதாபிமானமற்றதாகவும் உள்ளது. அதில் இந்துக்களுக்கு எதிராக பெரும் பாகுபாடு உள்ளது. ஒவ்வொரு இந்துவும் அதைப் படித்து படிக்க வேண்டும். அதற்கேற்ப இந்துக்களின் கைகளும் கால்களும் கட்டப்பட்டுள்ளன.

அதன்படி இந்துக்கள் தங்கள் கல்வி நிறுவனத்தை மற்ற சிறுபான்மையினரைப் போல சுதந்திரமாக திறந்து நடத்த முடியாது. பகவத் கீதை, ராமாயணம் போன்ற அவர்களின் மதப் பாடங்களை அவர்களால் கற்பிக்க முடியாது. அதேசமயம் முஸ்லிம்கள் மற்றும் கிறிஸ்தவர்கள் போன்ற பிற சிறுபான்மையினர் குர்ஆன், பில்பிள் போன்ற மத விஷயங்களை கற்பிக்க முடியும்.

அதன்படி கூட இந்துக்களால் கோயில்களைப் போல தங்கள் மத அமைப்பை இயக்கவும் கட்டுப்படுத்தவும் முடியாது. மற்ற சிறுபான்மையினருக்கு அவர்கள் விண்ணப்பித்து, மசூதிகள், தேவாலயங்கள் போன்ற அவர்களின் மத அமைப்புகளை நடத்துகிறார்கள், கட்டுப்படுத்துகிறார்கள் மற்றும் நிர்வகிக்கிறார்கள்.

இந்து கோவில்களுக்கு அரசாங்கம் வரி விதிக்கிறது, ஆனால் மசூதிகள், தேவாலயங்கள் போன்ற சிறுபான்மை மத அமைப்புகளுக்கு நிதி உதவி வழங்குகிறது. அரசு மதரஸாவுக்கு உதவி அளிக்கிறது, ஆனால் சமஸ்கிருத வேத பள்ளிகள் மற்றும் இந்து மத நிறுவனங்களுக்கும் இது பொருந்தாது.

இவை இந்துக்களுக்கு எதிராக இயற்கையில் சார்புடையவை. இந்துக்கள் ஒன்றுபட்டு கூட்டாக அதை எதிர்க்க வேண்டும். அதற்கு எதிராக அவர்கள் குரல் எழுப்ப வேண்டும். இந்தியாவில் சிறுபான்மையினருக்கு இந்துக்களுடன் ஒப்பிடுகையில் சிறப்பு மற்றும் கூடுதல் சலுகைகள் மற்றும் வசதிகள் வழங்கப்படுகின்றன. இந்த விஷயத்தை தவிர்க்க வேண்டும்.

இந்தியாவில் இந்துக்கள் பாகுபாடு காட்டப்படுகிறார்கள். எனது அறிவைப் பொறுத்தவரை, உலகில் அல்லது உலகில் இந்துக்கள் போன்ற பெரும்பான்மை சமூகங்கள் சிறுபான்மையினரை விட பாகுபாடு காட்டப்பட்டு மோசமாக நடத்தப்படும் ஒரே நாடு இந்தியா மட்டுமே.

வாக்கு வங்கி அரசியல் மற்றும் பல்வேறு அரசியல் கட்சிகளின் கொள்கைகள் காரணமாக இந்துக்கள் புறக்கணிக்கப்படுகிறார்கள், மற்ற சிறுபான்மையினர் இந்துக்களுக்கு அதிக விருப்பத்தேர்வுகள் வழங்கப்படுவார்கள் என்று எதிர்பார்க்கிறார்கள்.

உலகின் ஒரே மதச்சார்பற்ற நாடான இந்தியாவைப் பாருங்கள்:

  1. குர்ஆனை அரசு பள்ளிகளில் கற்பிக்க முடியும், ஆனால் நீங்கள் வேதங்களையும் கீதையையும் கற்பிக்க விரும்பினால், நீங்கள் வகுப்புவாதிகள்.
  2. அமர்நாத் செல்ல நீங்கள் வரி செலுத்த வேண்டும், ஆனால் நீங்கள் ஹஜ் சென்றால், உங்களுக்கு மானியம் கிடைக்கும்.
  3. கல்கத்தா பல்கலைக்கழகத்தில் அரசாங்க செலவினங்களுக்காக முஸ்லிம்களுக்காக பிரத்தியேகமாக 4 விடுதிகள் உள்ளன, ஆனால் இந்துக்களுக்கு அத்தகைய விடுதி இல்லை.
  4. போர்டு தேர்வில் தேர்ச்சி பெறும் முஸ்லிம் சிறுமிகளுக்கு அரசு உதவித்தொகை கிடைக்கும், ஆனால் இந்து பெண்கள் அல்ல.
  5. முஸ்லிம் மாணவர்கள் தொடக்கக் கல்வி மட்டத்தில் 50% மதிப்பெண்கள் பெறுவதன் மூலம் பண பலனைப் பெறுகிறார்கள், ஆனால் இந்து மாணவர்களுக்கு 95% மதிப்பெண்கள் பெற்றாலும் நன்மை கிடைக்காது.
  6. முஸ்லிம்களுக்கு சிறப்பு வட்டி இல்லாத கடன்களுக்கான ஏற்பாடுகள் உள்ளன, இந்துக்களுக்கு இது போன்றதல்ல.
  7. கோயில்கள் தங்கள் வருமானத்திற்கு வருவாய் செலுத்தும், ஆனால் எந்த மசூதிகளோ தேவாலயங்களோ தங்கள் வருமானத்திற்கு வரி செலுத்த வேண்டியதில்லை.
  8. நாய்கள், பூனைகள், ஆடுகள் அல்லது பிற விலங்குகளின் பாதுகாப்புக்காக நீங்கள் போராடினால், நீங்கள் ஒரு விலங்கு காதலன். ஆனால் நீங்கள் மாடுகளைப் பாதுகாப்பதற்கான காரணத்தை எடுத்துக் கொண்டால், நீங்கள் நிச்சயமாக வகுப்புவாதம்!
  9. நீங்கள் பாரத் மாதா கி ஜெய் என்று கோஷமிட்டால் நீங்கள் வகுப்புவாதி என்றும் அழைக்கப்படுவீர்கள்! ஆனால் நீங்கள் பாகிஸ்தான் ஜிந்தாபாத்தை தெருக்களில் வெளிப்படையாக கோஷமிட்டால், அது உங்கள் பேச்சு சுதந்திரம்!
  10. எம். எஃப். ஹுசைன் கல்விக் கடவுள் அன்னை சரஸ்வதியின் நிர்வாண படங்களை வரையலாம், கம்யூனிஸ்டுகள்,இந்த தேசத்தின் காவல் தெய்வம் துர்கா தேவியை ஒரு பாலியல் தொழிலாளி என்று அழைக்கலாம், ஏனென்றால் இந்துக்கள் மதச்சார்பற்றவர்கள், ஆனால் நீங்கள் நபிகள் நாயகத்திற்கு எதிராக ஒரு வார்த்தை பேசினால், கலவரம் ஏற்படும் !!! இந்தியாவின் இந்த நீளத்தையும் அகலத்தையும் நாம் பரப்ப வேண்டும், திருத்தங்களை கொண்டு வருமாறு அரசாங்கத்தை கட்டாயப்படுத்த வேண்டும் .

ஹிந்து ஆலய பாதுகாப்பு இயக்கம் /சென்னை மாவட்டம்.

ஒவ்வொரு நாளும் ஆதாரங்கள் அழிக்கப் படுகின்றன: உச்ச நீதிமன்றத்தில் மன்றாடும் அமலாக்கத் துறை!

stalin met senthil balaji - 2026
#image_title

அமைச்சர் செந்தில் பாலாஜி விவகாரத்தில் ஒவ்வொரு நாளும் ஆதாரங்கள் அழிக்கப் பட்டுக் கொண்டிருக்கின்றன என்று உச்ச நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை மன்றாடியும்கூட, மேலும் வழக்கு இழுத்தடிக்கும் வகையில், சென்னை உயர் நீதிமன்ற தீர்ப்பை சுட்டிக் காட்டி, அடுத்த விசாரணையை 20 நாட்களுக்கு ஒத்தி வைத்துள்ளது உச்ச நீதிமன்றம்.

பண பரிமாற்ற முறைகேடு வழக்கில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட செந்தில்பாலாஜி, திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டு அவருக்கு இருதய அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. இதனால் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் செந்தில் பாலாஜி சிகிச்சை பெற்று வருகிறார். நீதிமன்ற உத்தரவுபடி அவரது காவல் நீட்டிக்கப்பட்ட போதிலும் நெஞ்சு வலி இருப்பதாக அவர் கூறியதால் தொடர்ந்து மருத்துவமனையில் இருக்க அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில், அமலாக்கத்துறை உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. அமைச்சர் செந்தில் பாலாஜியிடம் விசாரணை நடத்தும் வகையில் தங்களுக்கு உத்தரவுகள் பிறப்பிக்க வேண்டும் என்று அமலாக்கத்துறை தனது மனுவில் குறிப்பிட்டு இருந்தது. குறிப்பாக காவேரி மருத்துவமனையில் இருந்து அமைச்சர் செந்தில் பாலாஜியை விடுவித்து தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர அனுமதிக்க வேண்டும் என்று கோரியது. இந்த மனு மீதான விசாரணை இன்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

அப்போது அமலாக்கத்துறை வழக்குரைஞர் உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்த போது, செந்தில் பாலாஜி வழக்கில் தினமும் ஆதாரங்கள் அழிக்கப்படுகின்றன. அரசியலில் செல்வாக்கு மிக்க செந்தில் பாலாஜியிடம் உடனடியாக விசாரணை நடத்த வேண்டியது அவசியம். இல்லாவிட்டால், முழுமையாக விசாரணை நடத்த இயலாது. விசாரணையில் தாமதம் ஏற்பட்டால் இந்த வழக்கு நீர்த்துப் போக வாய்ப்பு உள்ளது. எனவே செந்தில் பாலாஜியிடம் விசாரணை நடத்தும் விவகாரத்தில் உச்ச நீதிமன்றமே இறுதி முடிவு எடுத்து அறிவிக்க வேண்டும்.

அமைச்சர் செந்தில் பாலாஜி தொடர்ந்து சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் இருக்கிறார். அவரது காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனால் நாங்கள் அவரிடம் இதுவரை விசாரணை நடத்தவில்லை. அவர் மருத்துவமனையில் இருந்து எப்போது வீடு திரும்புவார் என்று தெரிவிக்கப்படவில்லை. இதனால் எங்களால் உரிய கடமையை செய்ய முடியவில்லை. செந்தில் பாலாஜி வழக்கீல் உச்ச நீதிமன்றமே முடிவு எடுக்க வேண்டும்… என்று தெரிவித்தார்.

இந்த நிலையில், சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று வழங்கப்பட்ட தீர்ப்பில், இரு நீதிபதிகள் வழங்கிய மாறுபட்ட தீர்ப்பு தொடர்பாக அமலாக்கத்துறை சார்பில் உச்ச நீதிமன்றத்தில் தகவல் தெரிவிக்கப்பட்டது.

இதன் பின் உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவில் கூறி இருப்பதாவது:-

சென்னை உயர் நீதிமன்றம் மூன்றாவது நீதிபதியை ஒரு வாரத்துக்குள் நியமித்து விசாரணை நடத்த வேண்டும். இந்த வழக்கை மெரிட் அடிப்படையில் உயர் நீதிமன்றம் விரைந்து விசாரிக்க வேண்டும். வழக்கை விரைவாக விசாரிக்க ஏதுவாக பட்டியலிட வேண்டும். செந்தில் பாலாஜியை காவலில் எடுத்து விசாரிக்க கோரி அமலாக்கத் துறை மனுதாக்கல் செய்யலாம். நீதிமன்றம் ஜாமீன் வழங்காத நிலையில் செந்தில் பாலாஜி நீதிமன்றக் காவலில்தான் இருப்பார்… என்று கூறியது.

மேலும், அமலாக்கத்துறை தாக்கல் செய்த இந்த வழக்கை வரும் ஜூலை 24-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது உச்ச நீதிமன்றம்.

நியாய விலைக் கடைகளில் தக்காளி; சென்னையில் புது முயற்சி!

tomato in ration shop - 2026

தக்காளி விலை திடீர் உயர்வு கண்டதை அடுத்து, பொதுமக்களிடையே ஏற்பட்டுள்ள அதிருப்தியை சமாளிக்க, இடைத்தரகர் அற்ற விலையில், அரசின் நியாயவிலைக் கடைகளில் விநியோகிக்க ஏற்பாடு செய்துள்ளனர்.

சென்னையில் முதற்கட்டமாக 82 ரேஷன் கடைகளில் தக்காளி விற்பனை துவங்கியது. ரேஷன் கடைகளில் வெளிச் சந்தையை விட குறைவாக ஒரு கிலோ ரூ. 60க்கு விற்பனை செய்யப்படுகிறது. ரேஷன் கடைகளில் தக்காளி பெற எந்தக் கட்டுப்பாடும் இல்லை. குடும்ப அட்டைகளை காட்டவும் தேவையில்லை என்று கூறப்பட்டுள்ளது.

இதனிடையே, தக்காளி கொள்முதல் விலையை விட விற்பனை விலை அதிகமாக உள்ளதற்குக் காரணம் கமிஷன் ஏஜன்ட்கள்தான் என்று புகார் எழுந்துள்ளது. தமிழகம் மட்டுமின்றி அண்டை மாநிலங்களிலும் தக்காளி விளைச்சல் குறைந்துள்ளது. இதன் எதிரொலியாக அதன் விலை உயர்ந்து வருகிறது. சென்னையில் 1 கிலோ தக்காளி 110 முதல் 120 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது.

தக்காளி விலை இந்த அளவுக்கு திடீர் என உயர்ந்தாலும் இந்த விலை உயர்வினால் விவசாயிகளுக்கு பெரிய அளவில் லாபம் கிடைக்கவில்லை. கிருஷ்ணகிரி, தர்மபுரி மாவட்டங்களில் 1 கிலோ தக்காளி 50 – 60 ரூபாய்க்கு கொள்முதல் செய்யப்படுகிறது. இதைப் பெட்டிகளில் அடுக்கி எடுத்து வந்து சென்னையில் இரண்டு மடங்கு விலையில் விற்பனை செய்யப்படுவதாகக் கூறப்படுகிறது.

மொத்த வியாபாரிகளே பெரும்பாலும் கமிஷன் ஏஜன்ட்களாக உள்ளதால் இந்த விலை உயர்வை கட்டுப்படுத்த முடியவில்லையாம்.

மதுரை திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் முப்பழ பூஜை விழா; குவிந்த பக்தர்கள்!

thiruparankundram murugan temple - 2026

மதுரை திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் முப்பழ விழா. பக்தர்கள் ஏராளமான சாமி தரிசனம் செய்தனர்.

மதுரை அருகே திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில், ஆனித்திருவிழாவை முன்னிட்டு அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி உள்ளிட்ட மூலவர்களுக்கு இன்று முப்பழ பூஜை நடைபெற்றது. இதில், பக்தர்கள் ஏராளமான பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.

மதுரை மாவட்டம் தமிழ் கடவுள் முருகனின் ஆறுபடை வீடுகளில் முதல் படை வீடான திருப்பரங்குன்றத்தில் ஆனி மாத உற்சவ திருவிழாவில் முக்கிய நிகழ்ச்சியான முக்கனி (முப்பழ ) மா, பழா , வாழை பழங்களுடன் பூஜை இன்று நடைபெற்றது.

திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கடந்த 24ஆம் தேதி ஆனி ஊஞ்சல் உற்சவ திருவிழா காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. விழாவினை முன்னிட்டு, தினமும் சுப்பிரமணிய சுவாமி தெய்வானையுடன் கோயிலில் உள்ள திருவாச்சி மண்டபத்தில் அலங்கரித்து வைக்கப்பட்டிருக்கும் ஊஞ்சலில் எழுந்தருளிட தொடர்ந்து கோயில் ஓதுவார் பொன்னூஞ்சல் பாடி சிறப்பு தீபாரனை நடைபெற்று வந்தது.

இந்நிலையில், விழாவின் முக்கிய நிகழ்ச்சியான முப்பழ பூஜை இன்று நடைபெற்றது. விழாவினை முன்னிட்டு, கோயில் மூலஸ்தானத்தில் உள்ள சுப்பிரமணிய சுவாமி, கற்பக விநாயகர், துர்க்கை அம்மன், பவளக்கனிவாய் பெருமாள், சத்யகிரீஸ்வரர் ஆகிய சுவாமிகளுக்கு மா, பலா, வாழை என முப்பழங்கள் படைக்கப்பட்டு சிறப்பு தீபாராதனையும், தொடர்ந்து மா, பலா, வாழை என முக்கனிகளை உற்சவர் சுப்ரமணிய சுவாமி தெய்வானை அம்மன் சிறப்பு ஆராதனைகள் நடைபெற்றது.

முப்பழ சிறப்பு பூஜையில் பக்தர்கள் ஏராளமானோர் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். விழா ஏற்பாடுகளை, திருக்கோயில் நிர்வாகம் சார்பில் சிறப்பாக செய்யட்டு இருந்தது.

இலக்கிய வீதியில் கரைந்து போன இனியவன்!

ilakkiyaveedhi iniyavan - 2026

’இலக்கியவீதி’ இனியவன் என்று தமிழிலக்கிய உலகில் எல்லோராலும் அன்புடன் அழைக்கப்பட்ட இனியவன் தமது 81 ஆவது வயதில், வயது மூப்பால் ஞாயிற்றுக் கிழமை காலமானார்.

செங்கல்பட்டு மாவட்டம் வேடந்தாங்கல் அருகில் உள்ள விநாயகநல்லுாரில் வீராசாமி – பங்கஜம்மாள் தம்பதியின் மகனாக 1942 ஏப்.20ஆம் தேதி பிறந்தவர் இந்த லக்ஷ்மீபதி. லக்ஷ்மிபதி என்ற இந்தப் பெயர் இனியவன் ஆனது இலக்கியத்தின் வசப்பட்டுத்தானோ என்னவோ?!

பள்ளிப் பருவத்தில் இதழ் ஒன்றில் இவர் எழுதிய சிறுகதை, இவரின் புகைப்படத்துடன் இனியவன் என்ற பெயருடன் வெளியானது. அந்தப் பெயரே பிடித்துப் போனதால், இனியவன் என்ற பெயரே இவருக்கு நிலைத்தும்விட்டது.

தமிழிலக்கியத்தில் பெரும் காதற்கொண்ட இனியவன், இலக்கிய விவாதங்கள், திறனாய்வுகள், கவியரங்குகள் உள்ளிட்டவற்றை நடத்தும் வகையில் 1977ல் ‘இலக்கியவீதி’ என்ற அமைப்பைத் தொடங்கி நடத்தி வந்தார். இதனால் இவர் பெயருடன் இலக்கியவீதி என்ற அமைபின் பெயரும் ஒட்டிக் கொண்டது. இந்த அமைப்பின் மூலம், பிரபல எழுத்தாளர்களின் உரை, புத்தக வெளியீடுகள், புத்தக திறனாய்வுகள், பிரபலங்களின் நினைவேந்தல்கள், எழுத்தாளர்களுக்கு விருது வழங்குதல் உள்ளிட்ட நிகழ்ச்சிகளை மனமுவந்து நடத்தினார்.

ஓவியம், சிற்பம், பாட்டு உள்ளிட்ட கலைகளில் திறமையானவர்களையும் அடையாளம் கண்டு, நிகழ்ச்சிகளில் அறிமுகம் செய்துவைத்தார். சென்னை கம்பன் கழகத்தின் செயலராகப் பொறுப்பேற்று, பேச்சாளர்களை ஊக்குவித்தார். 250க்கும் மேற்பட்ட சிறுகதைகள்,17 குறுநாவல்களை எழுதியவர் இனியவன். தமிழக அரசின் ‘கலைமாமணி’ விருதும் பெற்றவர்.

வயது மூப்பு காரணத்தால், ஜூலை 2 ஞாயிறு இரவு, பெருங்களத்துார், விஷ்ணு நகரில் உள்ள இல்லத்தில் அவர் காலமானார். இலக்கியவீதி இனியவனின் உடலை அவர் மகள் வாசுகி பத்ரிநாராயணன் சென்னை மருத்துவக் கல்லுாரிக்கு தானமாக வழங்கினார்.

இவையெல்லாம் இலக்கியவீதி இனியவன் குறித்த செய்திகள். எனக்கும் அன்னாருடன் ஆழ்ந்த அனுபவங்கள் உண்டு. எழுத்தில் விவரிக்க முடியாதவை பல என்றாலும், சொல்லப்பட வேண்டியதும் சில உண்டு.

2002. மஞ்சரி டைஜஸ்ட் மாத இதழுக்கு இதழாசிரியராகப் பொறுப்பேற்றிருந்த புதிது. அப்போது எனக்கு வயது 27. இதழின் கடைசிப் பக்கங்களில் என் எண்ணங்களை, கருத்துகளை எழுதத் தொடங்கினேன். “உங்களோடு ஒரு வார்த்தை” என்ற தலைப்பில் பல வார்த்தைகளை எழுதிக் கொண்டிருந்தேன். இலக்கிய உலகில் பெரியவர்கள் சிலர் அவற்றைப் படித்துவிட்டு, ஊக்கமும் உற்சாகமும் அளித்தார்கள். இதழின் திடீர் மாற்றத்தை வரவேற்று தொலைபேசியிலும் அஞ்சல் அட்டையிலும் கருத்துகளைப் பகிர்ந்தார்கள். அவர்களில் முக்கியமானவர்கள் நம் நெல்லை மண்ணின் ஆளுமைகள். வல்லிக்கண்ணன், தி.க.சி., தீப நடராஜன் இப்படி… இவர்களின் கடிதங்களைப் பாதுகாத்து வைத்திருக்கிறேன்.

ஒரு நாள் காலை. அலுவலகத்துக்கு ஒரு தொலைபேசி அழைப்பு. அழைத்தவர், இலக்கியவீதி இனியவன் என்றார். இதழின் உள்ளடக்க கட்டுரைகளைப் பாராட்டி விட்டு, “உங்க கடைசிப் பக்கக் கட்டுரையைப் படித்தேன். அதில் ஒரு திருத்தம் சொல்லவேண்டும்” என்றார். “சொல்லுங்கள்” என்றேன். சொன்னார். என் அந்த அனுபவப் பக்கக் கட்டுரையில் ஒரு வார்த்தை. ‘சுவற்றில்’ என்று அந்நாளைய வழக்குச் சொல்லில் எழுதியிருந்தேன். “அங்கே ‘ற்’ வராது. சுவர்+இல்=சுவரில். கயிறு+இல்=கயிற்றில். இந்த வேறுபாட்டைப் புரிந்து கொண்டால், மீண்டும் சுவற்றில் எழுத மாட்டீர்கள்” என்றார். அவன் சொன்னபடியே, அதன் பின் நான் சுவரிலேயே எழுதத் தொடங்கிவிட்டேன். சுவர் இல்லாமல் சித்திரம் வரைய முடியுமா என்பதை பேச்சினூடே பலர் சொல்வார்கள். இலக்கியவீதி இனியவன் அன்று முதல் எனக்கு சுவராகிப் போனார்.

திராவிட இலக்கிய அரசியல் தோற்றங்கள், வழக்காடுகள், சூழல்கள் அவரின் பிம்பத்தை ஒரு மாதிரி வெளிக்காட்டியிருந்தாலும், அவர் உள்ளமெல்லாம் வைணவத் தமிழும் பக்தியும் உட்புகுந்திருந்ததை விரைவிலேயே உணர்ந்து கொண்டேன். அந்த ஒன்றேகூட அவர் என்னை தன் சொந்தப் பிள்ளையாய் பாவிப்பதற்கு ஒரு காரணமாகவும் இருந்திருக்கக் கூடும்! அதை நன்றாய் உணர ஒரு வாய்ப்பையும் அவரே ஏற்படுத்தித் தந்தார்.

20 வருடங்கள் ஆகிவிட்டது. ஆனாலும் உள்ளத்தில் அந்த உத்திரமேரூர் கூட்டம் அவர் குறித்த பிம்பத்தை வலுவாய்ப் பதிய வைத்துவிட்டது. அது இலக்கியவீதியின் வெள்ளிவிழா ஆண்டுக் கூட்டம் என்று நினைவு. அந்தக் கூட்டத்தின் அழைப்பிதழைக் கூட பத்திரமாய் வைத்திருக்கிறேன்.

ஒரு அம்பாஸிடர் கார் ஏற்பாடு செய்திருந்தார். மயிலாப்பூரில் நான் ஏறிக் கொண்டேன். தென்கச்சி கோ. சுவாமிநாதன் அவர்களையும் ஏற்றிக் கொண்டு, வழியில் தாம்பரம் அருகே மெழுகுவத்தி தொழில் செய்து வந்த இலக்கிய ஆர்வலர் வீட்டுக்கும் சென்று, ஒரு சிற்றுண்டி முடித்து விட்டு தொடர்ந்தோம்.

iniyavan with candle - 2026

அப்போது மஞ்சரியில் ‘தென்கச்சி பதில்கள்’ எழுதிக் கொண்டிருந்தார் தென்கச்சி சுவாமிநாதன். அத்துடன் நானும் வானொலியில் பகுதி நேர அறிவிப்பாளராக சென்று வந்ததால், வானொலி, மஞ்சரி, இதழியல் என வெகுநேரம் பேசிக் கொண்டு வந்தோம். வண்டி மதுராந்தகம் சென்றது. அங்கே ஒரு கூட்டம். மதுராந்தகத்தில் ஒரு பள்ளிக்கூடத்தில்! அங்கே சில இடங்களைச் சுட்டிக் காட்டி, வேறு சில இடங்களின் பெயர் சொல்லி, தனது இளமைக் கால அனுபவங்களை விவரித்தார் இனியவன். அங்கே வைத்துதான் இலக்கிய ஆளுமையான மதுராந்தகம் ரகுவீர பட்டாச்சார்யரையும் அறிமுகம் செய்து வைத்தார்.

தொடர்ந்து உத்திரமேரூர் சென்றது வண்டி. அங்கே தமிழ் இலக்கிய மன்றக் கூட்டம். வெறும் வரலாற்றுப் பாடங்களில் குடவோலை முறையைப் படித்துவிட்டு உத்திரமேரூரை பல்லவர் கால பழைய ஊராக உருவகப் படுத்தி வைத்திருந்த எனக்கு, ஊரின் பன்முகத்தன்மை அன்று தான் தெரிந்தது. மாலும் மருகனும் அருகருகே ஆலயம் கொண்ட கதையும் அவற்றின் கம்பீரமும் புலப்பட்டது. அதை விட, இனியவன் அவர்களிடம் கொண்ட அவ்வூர் அன்பர்களின் அளவற்ற நேசமும், விரல் சொடுக்கில் விரைந்து பணி செய்யும் அந்நியோன்யமும் அழகாய்த் தெரிந்தது. அதன் பின்னர் எத்தனையோ முறை ஆன்மிகப் பயணமாக உத்திரமேரூர் சென்றிருக்கிறேன் என்றாலும், அந்த முதல் பயணம், அதுவும் இலக்கிய வீதியுடனான இலக்கியப் பயணம் இன்றளவும் நெஞ்சில் நிறைந்திருக்கிறது. அந்த நிகழ்ச்சியில் எடுத்த புகைப்படத்தை ஒரு பொக்கிஷமாக இன்றளவும் என் தொகுப்பில் சேகரித்து வைத்திருக்கிறேன். (அந்தப் படம் தான் நான் இங்கே பதிவு செய்திருப்பது!)

thamizhmandram iniyavan - 2026

நான் தினமணியில் இணையதள செய்தி ஆசிரியர் பொறுப்பில் இருந்த போது, சில காலம் மயிலாப்பூரில் இருந்தும், பின் வில்லிவாக்கத்தில் இருந்தும் அம்பத்தூர் எஸ்டேட்க்கு பயணிக்கும் போது, அண்ணாநகர் பக்கமும் எட்டிப் பார்ப்பதுண்டு.அப்படி சில முறை அவர் வீட்டுக்கும் சென்றுள்ளேன். இலக்கிய உலகம், தினமணி கட்டுரைகள், அலுவலக விவகாரங்கள் என மனம் விட்டுப் பேசுவதுண்டு. அவரின் வாரிசு வாசுகி பத்ரி Vasuki Badri என்னையும் ஒரு சகோதரனாக நினைத்துப் பழகினார். குடும்ப நிகழ்ச்சிகள் ஓரிரண்டில் கலந்து கொள்ளும் வாய்ப்பும் அமைந்தது. ஒவ்வொரு நிகழ்ச்சிக்கும் அழைப்பு அனுப்புவார்.

அவரது ‘கம்பன் காதல்’ அலாதியானது. சென்னைக் கம்பன் கழகத்துக்கு பொறுப்பில் வந்தார். சிறப்பாக நிகழ்ச்சிகளை நடத்திக் காட்டினார். இலக்கிய, அரசியல் ஆளுமைகள் பலருடன் நல்ல தொடர்புகளைக் கொண்டிருந்தார். இதெல்லாம் ஊரறிந்த கதைதான்!

ஆனால், உள்ளார்ந்த நட்புடன் தனிப்பட்ட வகையில் நெருக்கம் பேணியதும் துவண்ட போது ஆறுதல் அளித்ததும் நிமிர்ந்த போது தட்டிக் கொடுத்து தலை கோதியதும் அவரின் தனிச்சிறப்பு. முக்கியமாக நான் குறிப்பிட வேண்டிய விஷயம் இது.

தினமணி-யில் இணையம் மட்டுமல்லாது, வெள்ளிமணி, தமிழ்மணி, தினமணி ஆசிரியர் குழு விவகாரங்கள் என என் முழு நேரத்தையும் அதிலேயே செலவழித்து, தினமணியை விட்டால் வேறு உலகம் இல்லை என்ற ரீதியில், ஒரு பைத்தியம் போல் வேலை செய்து வந்த நேரம்… திடீரென அதில் இருந்து வெளியேறும் நெருக்குதல் வந்தபோது, முதல் ஆளாய் ஆறுதல் அளித்தது இனியவன் அவர்களே! 2015ல் இரு பக்க கடிதம் எழுதி அனுப்பியிருந்தார். அதில் வாழ்க்கையின் போக்கு, எப்படி நம்பிக்கையுடன் உலகை எதிர்கொள்ள வேண்டும், கடந்த காலக் கசப்புகளை மறந்து விட்டு இனிப்புகளை அசைபோடும் உள்ளத்தை வளர்ப்பதெப்படி என, இனியவனாய் எழுதிய ஒரு தெம்பூட்டும் ஆறுதல் கடிதம் அது! (சென்னையில் என் வீட்டில் பத்திரமாய் உள்ளது. நிச்சயம் அதை ஒருநாள் பொதுவெளியில் பகிருவேன்.)

கடந்த ஏழெட்டு வருடங்களாக நேரில் சந்திக்கும் வாய்ப்பு அருகிப் போனதால் பார்க்க இயலாமல் போனது. ஆனாலும் அவரின் மகளார் வாசுகி அவர்கள் எங்களின் இணைப்புப் பாலமாய் கைபேசியைப் பயன்படுத்திக் கொண்டிருந்தார். அவர் நேற்றிரவு அமரரானார் என்று இன்று தகவல் கண்ணில் பட்டது… அதுமுதல் அவரது ஆன்ம சம்பந்தமான மனம் மட்டும் என்னுடன் பேசிக் கொண்டிருக்கிறது!

  • செங்கோட்டை ஸ்ரீராம்

அடுத்த இரு நாட்களுக்கு இங்கெல்லாம் ‘கன மழை’தான்!

rains weather rain women - 2026
#image_title

அடுத்த இரு நாட்களுக்கு தமிழகத்தின் மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் கன மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வானிலை மைய அறிவிப்பின் படி…

நீலகிரி, கோவை, தேனி மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும். திருப்பூர், திண்டுக்கல், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, விருதுநகர் மற்றும் மதுரை மாவட்டங்களில் கனமழை பெய்யும்.

நீலகிரி, கோவை மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும். திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் நாளை கனமழை பெய்யும்.

நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் நாளை மறுநாள் கனமழை பெய்யும்.

சென்னையில் வானம் மேகமூட்டமாகக் காணப்படும்; நகரின் சில பகுதிகளில் இன்று மிதமான மழை பெய்யும். அதிகபட்சம் 36 டிகிரிசெல்ஷியஸ் வெப்பநிலை பதிவாகும்.

தமிழக தெற்கு கடலோரம், மன்னார் வளைகுடா மற்றும் அதையொட்டிய குமரி கடல், இலங்கை கடலோரம், தமிழக வடக்கு கடலோரம் உள்ளிட்ட பகுதிகளில், மணிக்கு 65 கிமீ., வேகத்தில் சூறாவளிக் காற்று வீசுகிறது. லட்சத்தீவுகள், கேரள கடலோரம் மற்றும் அதையொட்டிய தென் கிழக்கு அரபிக்கடல், கர்நாடக கடலோர பகுதிகளிலும், மத்திய கிழக்கு அரபிக்கடல் பகுதிகளிலும், மணிக்கு 55 கிமீ., வேகத்தில் சூறாவளிக் காற்று வீசுகிறது. எனவே, மீனவர்கள் இன்றும், நாளையும் இப்பகுதிகளுக்குள் செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கப் பட்டிருக்கிறார்கள்.

தமிழ்நாடு, புதுச்சேரியில் 03.07.2023 காலை 0830 மணி முதல் 04.07.2023 காலை 0830 மணி வரை பெய்துள்ள மழையளவுகள் (சென்டிமீட்டரில்)

சின்னக்கள்லார் (கோவை) 13
சின்கோனா (கோவை) 11
வால்பாறை PTO (கோவை), பரூர் (கிருஷ்ணகிரி) தலா 8
சோலையார் (கோவை), ஏற்காடு (சேலம்) தலா 7
பார்வூட் (நீலகிரி) 6

வால்பாறை PAP, வால்பாறை தாலுகா அலுவலகம் (கோவை), நாலுமுக்கு (திருநெல்வேலி), மே மாத்தூர் (கடலூர்), ஊத்தங்கரை, நெடுங்கல், பாம்பார் அணை (கிருஷ்ணகிரி) தலா 5

ஜம்புகுட்டப்பட்டி (கிருஷ்ணகிரி), கலசப்பாக்கம் (திருவண்ணாமலை), உளுந்தூர்பேட்டை (கள்ளக்குறிச்சி), தேக்கடி, பெரியாறு (தேனி), குண்டார் அணை, அடவிநயினார்கோயில் அணை (தென்காசி), காக்காச்சி (திருநெல்வேலி), தேவாலா (நீலகிரி) தலா 4

கேஆர்பி அணை (கிருஷ்ணகிரி), செஞ்சி (விழுப்புரம்), DSCL கலயநல்லூர், BASL மணலூர்பேட்டை (கள்ளக்குறிச்சி), ஆட்சியர் அலுவலகம், கடலூர் (கடலூர்), செங்கோட்டை (தென்காசி), மாஞ்சோலை, ஊத்து (திருநெல்வேலி), சிவலோகம், சித்தார் (கன்னியாகுமரி), கூடலூர் பஜார், மேல் கூடலூர் (நீலகிரி) தலா 3

ஹரூர் (தர்மபுரி), பெனுகொண்டாபுரம் (கிருஷ்ணகிரி), போளூர், தண்டராம்பேட்டை (திருவண்ணாமலை), RSCL-3 அவலூர்பேட்டை (விழுப்புரம்), DSCL தியாகதுர்கம், KCS மில்-1 கடவனூர், DSCL ரிஷிவந்தியம் (கள்ளக்குறிச்சி), புதுச்சேரி (புதுச்சேரி), குடிதாங்கி, பண்ருட்டி, வானமாதேவி (கடலூர்), கொடைக்கானல் (திண்டுக்கல்), பெரியகுளம் AWS (தேனி), நடுவட்டம், அவலாஞ்சி, மேல் பவானி, தாலுகா அலுவலகம் பந்தலூர் (நீலகிரி), டேனிஷ்பேட்டை, கரியகோவில் அணை (சேலம்), மங்களபுரம் (நாமக்கல்), பேச்சிப்பாறை, பாலமோர் (கன்னியாகுமரி) தலா 2

தருமபுரி PTO (தர்மபுரி), தளி (கிருஷ்ணகிரி), ஆம்பூர், வடபுதுப்பட்டு, வாணியம்பாடி, ஆலங்காயம் (திருப்பத்தூர்), ஆரணி, கீழ்பென்னாத்தூர் (திருவண்ணாமலை), விழுப்புரம் (விழுப்புரம்), கேசிஎஸ் மில்-1 மூங்கில்துறை, மணிமுத்தாறு அணை பொதுப்பணித்துறை, அரியலூர் கேம்ப் ஏரியா (கள்ளக்குறிச்சி), வடகுத்து, விருதாச்சலம், கொத்தவாச்சேரி, தொழுதூர் (கடலூர்), கொடைக்கானல் படகு குழாம் (திண்டுக்கல்), மஞ்சளார் (தேனி), கந்தர்வகோட்டை (புதுக்கோட்டை), இராமநதி அணை, கடனா அணை, கருப்பாநதி அணை (தென்காசி), கன்னடநதி அணைக்கட்டு (தென்காசி) திருநெல்வேலி), பெருஞ்சாணி அணை, கன்னிமார், திற்பரப்பு, சூரலக்கோடு, புத்தன் அணை (கன்னியாகுமரி), வொர்த் எஸ்டேட் செருமுள்ளி (நீலகிரி), சிறுவாணி அடிவாரம் (கோவை), சேலம், ஆனைமடுவு அணை, வீரகனூர், சந்தியூர் KVK AWS (சேலம்) தலா 1.

‘திகில் தொடர்’ ஆன செந்தில் பாலாஜி ஆட்கொணர்வு மனு! இருவரின் மாறுபட்ட தீர்ப்பால் 3வது நீதிபதி கையில் முடிவு!

stalin met senthil balaji - 2026
#image_title

அமைச்சர் செந்தில்பாலாஜி கைது தொடர்பாக அவரது மனைவி தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனுவில் இரு நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பு வழங்கினர். செந்தில் பாலாஜி கைது சட்டவிரோதமானது. அவரை விடுவிக்க வேண்டும் என்று ஒரு நீதிபதியும், நீதிமன்ற காவல் சட்டவிரோதமில்லை என மற்றொரு நீதிபதியும் மாறுபட்ட தீர்ப்பு வழங்கியதால், மூன்றாவது நீதிபதி கையில் முடிவு சென்றுள்ளது.


  • அமைச்சர் செந்தில் பாலாஜி சட்டவிரோதமாகக் கைது செய்யப்பட்டதாக அவரது மனைவி தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனு விசாரணைக்கு ஏற்பு- நீதிபதி நிஷா பானு.
  • ஆட்கொணர்வு மனு விசாரணைக்கு உகந்ததல்ல – நீதிபதி பரத சக்கரவர்த்தி
  • உடனடியாக விடுவிக்க வேண்டும் – நீதிபதி நிஷா பானு
  • நீதிமன்ற காவல் சட்டவிரோதமில்லை – நீதிபதி பரத சக்கரவர்த்தி

செந்தில் பாலாஜி ஆட்கொணர்வு மனு மீதான விசாரணை முடிந்து ஜூலை 4 இன்று தீர்ப்பு அளிப்பதாக தெரிவிக்கப்பட்டிருந்ததால் பரபரப்பு நிலவியது

சட்ட விரோத பண பரிமாற்ற தடை சட்டத்தின் கீழ் அமைச்சர் செந்தில் பாலாஜியை கடந்த மாதம் அமலாக்கத்துறை கைது செய்தது. இதற்கிடையே செந்தில் பாலாஜியை சட்ட விரோதமாக கைது செய்ததாகக் கூறி அவரது மனைவி மேகலா தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்யப்பட்டது.

மேகலா தரப்பில் வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ மற்றும் அமலாக்கத்துறை சார்பில் மத்திய அரசின் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா ஆகியோர் தங்கள் வாதத்தை முன்வைத்தனர்.

இரு தரப்பு வாதங்களும் முடிவடைந்த நிலையில் இன்று இந்த வழக்கில் நீதிபதிகள் நிஷா பானு, பரத சக்கரவர்த்தி அமர்வு தீர்ப்பளித்தது. அதில் ‘இந்த மனு விசாரணைக்கு உகந்ததுதான், அமைச்சர் செந்தில் பாலாஜி சட்ட விரோதமாக கைது செய்யப்பட்டுள்ளார்’ எனக்கூறி உடனடியாக விடுவிக்க வேண்டும்’ என நீதிபதி நிஷா பானு தீர்ப்பளித்தார்.

மற்றொரு நீதிபதியான பரத சக்கரவர்த்தி, ‘இந்த மனு விசாரணைக்கு உகந்தது அல்ல. காவல் முடிந்த பிறகு செந்தில் பாலாஜியை சிறையில் அடைக்க வேண்டும்’ எனக்கூறி மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். தமிழர்

இரு நீதிபதிகளும் மாறுபட்ட தீர்ப்பு அளித்துள்ளதால், இந்த வழக்கினை 3வது நீதிபதி விசாரிக்க பரிந்துரைக்கப் பட்டுள்ளது.

குற்றால சீஸன் ‘செம’! அருவியில் தடை… அனுமதி… தடைன்னு போகுது!

courtallam falls july4 - 2026

தென்காசி மாவட்டம் திருக்குற்றாலம் அருவிகளில் நீர்வரத்து நன்றாக உள்ளதால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சியுடன் நீராடி வருகின்றனர்.

ஜூன் மாதம் முதல் வாரத்தில் தொடங்க வேண்டிய சீசன் தாமதமாகவே இந்த வருடம் தொடங்கியது. தற்போது கேரளத்தில் கனமழை பெய்து வருவதால், அதை ஒட்டிய மேற்கு தொடர்ச்சி மலை தமிழக மாவட்டங்களில் மழையும் சாரலுடன் கூடிய காற்றும் அடித்து வருகிறது. திருக்குற்றால மலையில் கடந்த சில நாட்களாக நீர் பிடிப்பு பகுதிகளில் நல்ல மழை பெய்து வருவதால் அருவிகளில் நீர் வரத்து அதிகரித்துள்ளது.

இதனால் அவ்வப்போது அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்படுவதும் மழை அளவு குறைந்த நிலையில் அருகில் நீர்வரத்து மிதமாக இருப்பதும் என தொடர்கிறது. அருவியில் நீர்வரத்து அதிகமாக இருக்கும் போது போலீசார் சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு தடை விதித்து வருகின்றனர்.

குற்றாலம் பேரருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டு, பின் அனுமதிக்கப்பட்டது. அதுபோல், ஐந்தருவியில் அனைத்து ஐந்து கிளைகளிலும் தண்ணீர் வேகமாக விழுவதால் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டிருந்தது.

இதனிடையே பழைய குற்றாலம் அருவியில்.இன்று காலை முதல் தண்ணீர் நன்கு விழத் தொடங்கியதால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். குற்றால அருவிகளிலேயே பழைய குற்றால அருவி தண்ணீர் நன்றாக பரந்து விழும் என்பதால் இங்கே குளிப்பதில் சுற்றுலா பயணிகள் பெரும் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

இந்நிலையில், கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி ஆகிய மாவட்டங்களில் இன்று கன மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் வெளியிட்டுள்ளதால், அருவிகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.