Home Blog Page 360

செந்தில் பாலாஜிக்காக வரம்பு மீறி செயல்படும் முதல்வர்; வறுத்தெடுத்த அண்ணாமலை!

stalin old tweets - 2026

‘உச்சநீதிமன்ற கண்காணிப்பில் உள்ள செந்தில் பாலாஜியை முதல்வர் பாதுகாப்பது ஏன்? அவருக்காக முதல்வர் ஸ்டாலின் வரம்பு மீறி செயல்படுகிறார்’ என குற்றம் சாட்டியுள்ளார் தமிழக பாஜக., தலைவர் அண்ணாமலை.

கோவையில் செய்தியாளர்களை சந்தித்த அண்ணாமலை இதுபற்றி தெரிவித்தது….

“உச்ச நீதிமன்ற கண்காணிப்பில் உள்ள செந்தில் பாலாஜியை முதல்வர் பாதுகாப்பது ஏன்? அவருக்காக முதல்வர் ஸ்டாலின் வரம்பு மீறி செயல்படுகிறார். செந்தில் பாலாஜியை டிஸ்மிஸ் செய்த அறிவிப்பை வாபஸ் பெறுவதாக ஆளுநர் கூறவில்லை. உச்சநீதிமன்ற தீர்ப்புகளை மேற்கோள் காட்டியுள்ளார்.

ஆளுநர் பொத்தாம் பொதுவாக நடிவடிக்கை எடுப்பதாக கூறுகின்றனர். அப்படி எனில், திமுக.,வின் அமைச்சர்கள் அனைவரின் மீதும் நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். செந்தில் பாலாஜி மீது எங்களுக்கு தனிப்பட்ட விருப்பு வெறுப்பு இல்லை. அவர் செய்த குற்றங்களைத் தான் பாஜக., எதிர்க்கிறது” என்றார்.

முன்னதாக சென்னை விமான நிலையத்தில் அண்ணாமலை கூறுகையில், ‘அதிமுக ஆட்சியில் விஜயபாஸ்கரை நீக்கம் செய்ய ஆளுநருக்கு பரிந்துரைத்தார் அப்போதைய எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின். தற்போது அமைச்சரை நீக்க ஆளுநருக்கு அதிகாரம் இல்லை என்கிறார். இது ஆளுநர் அதிகாரத்தில் முதல்வர் ஸ்டாலினின் இரட்டை நிலைப்பாட்டை காட்டுகிறது. செந்தில் பாலாஜி ஊழல் செய்திருப்பதாக உச்சநீதிமன்றமே சுட்டிக்காட்டியுள்ளது’ எனக் கூறினார்.

அண்ணாமலை வெளியிட்ட அறிக்கையில், “செந்தில் பாலாஜி விவகாரத்தில், முதல்வர் ஸ்டாலின் இரட்டை வேடம் போடுகிறார் என்பதை நினைவுப்படுத்துகிறோம். 2018ல் அப்போதைய எதிர்க்கட்சி தலைவர், ஒரு அமைச்சர் மீது ஊழல் குற்றச்சாட்டு இருப்பதால், அவரை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று ஆளுநருக்கு கோரிக்கை வைத்தார். அன்றும், இன்றும் என்ன மாறிவிட்டது? செந்தில்பாலாஜி கைது செய்யப்பட்ட குற்றவாளி என்பதை திமுக.,வின் நாடகம் மாற்றாது” என்று கூறியுள்ளார்.

செந்தில் பாலாஜியை அமைச்சரவையில் இருந்து ஆளுநர் நீக்கியது சரியா?

governor walkout2 - 2026

வானிலை பாலு

இன்று 29.06.2023 தமிழக அமைச்சரவையிலிருந்து இலாகா இல்லாத அமைச்சர் திரு செந்தில் பாலாஜியை தமிழக ஆளுநர் திரு ஆர்.என். ரவி அவர்கள் நீக்கியிருக்கிறார். இது சாரியா? சரிதான் சில கட்சிகளின் தலைவர்களும் ‘சரியல்ல; ஆளுநர் வரம்பு மீறிவிட்டார்’ என சில கட்சிகளும் கருத்து தெரிவித்துள்ளன.

சட்ட வல்லுநர்கள் சிலர் முதலமைச்சரின் பரிந்துரையின் பேரில் மட்டுமே ஆளுநர் ஒருவரை அமைச்சராக நியமிக்கலாம் அல்லது நீக்கலாம் எனக் கருத்து தெரிவித்துள்ளனர். வேறு சில சட்ட வல்லுநர்கள் ஒரு அமைச்சர் அந்த மாநிலத்தின் ஆளுநரின் மனதுக்குப் பிடிக்கும் வரையில் மட்டுமே அமைச்சராக நீடிக்க முடியும் என்ற சட்ட விதியைச் சுட்டிக்காட்டுகின்றனர்.

இது இப்போது ஒரு நீண்ட சட்டப் போராட்டத்திற்கு வழி வகுக்கும். உயர்நீதி மன்றம், உச்சநீதிமன்றம் என இந்தச் சட்டப் போராட்டம் தொடர்ந்து நடக்கும்.
இந்த விஷயத்தைப் பொறுத்த வரையில் நாம் கவனிக்க வேண்டிய விஷயங்கள் சில நமக்கு நியாயம் என்ன என்பதைச் சொல்லும்.

(1) செந்தில் பாலாஜி மீது தொடுக்கப்பட்டிருக்கும் வழக்கு அவர் அஇஅதிமுக செய்த ஒரு குற்றாத்திற்காக. குற்றம் அவர் அரசு வேலை தருவதாகச் சொல்லிப் பலரிடம் பணம் வாங்கினார். நீதிமன்றத்தில் அவர் நான் அந்தப் பணத்தை வாங்கவில்லை என வழக்காடவில்லை. மாறாக நான் வாங்கிய பணத்தைத் திரும்பிக் கொடுத்துவிட்டேன். எனவே வழக்கை முடித்து வையுங்கள் என உயர் நீதிமன்றத்தில் கோரினார். விநோதமாக உயர் நீதிமன்றம் அவர் கோரிக்கையை ஏற்று வழக்கைத் தள்ளுபடி செய்தது. வழக்கு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டபோது உச்ச நீதிமன்றம் வழக்கை மீண்டும் விசாரிக்க உத்தரவிட்டது.

(2) இது தொடர்பாக அவரது இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. சோதனையில் பல ஆவணங்கள் கிடைத்ததாக சோதனை செய்த அதிகாரிகள் கூறுகின்றனர்.

(3) அவரை கைது செய்ய முற்பட்டபோது அவர் தனக்கு உடல்நலமில்லை எனச் சொல்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

(4) இப்போது வழக்கு, குற்ற விசாரணைக்காக அவரைக் கைது செய்யலாமா என்பதிலிருந்து, சோதனையின்போது மனிதாபிமற்ற முறையில் அவர் துன்புறுத்தப்பட்டார் என்ற வகையில் திரும்பியது. ஆளுங்கட்சி அமைச்சராக இருப்பதால் அவருக்கு நீதிமன்றத்தில் பல சலுகைகள் கிடைப்பதுபோன்ற ஒரு தோற்றம் ஏற்பட்டுவிட்டது.

(5) மாநில அரசு அவரது இலாக்காக்களை வேறு அமைச்சர்களுக்கு மாற்றப் பரிந்துரைத்தது. ஆளுநர் அதனை ஏற்றார். ஆனால் செந்தில் பாலாஜி இலாக்கா இல்லாத அமைச்சராக நீடிப்பதை என்னால் அனுமதிக்க முடியாது என அரசுக்கு எழுதினார்.

(6) அரசு ஆளுநரின் கடிதத்தை அலட்சியம் செய்து, செந்தில் பாலாஜி இலாக்கா இல்லாத அமைச்சராக நீடிப்பார் என ஒரு அரசாணை வெளியிட்டது. இதனால் ஆளுநரின் ஈகோ சீண்டிவிடப்பட்டது.

(7) இப்போது ஆளுநர் அமைச்சரை நீக்கி ஆணை பிறப்பித்திருக்கிறார். இது சரியா தவறா என்பதை இனி வழக்காடித்தான் முடிவு செய்ய முடியும்.

(8) ஒரு அரசு ஊழியர் குற்ற வழக்கில் கைதானால், 24 மணி நேரத்திற்கு மேல் காவலில் இருந்தால் அவர் தானாக பதவியில் இருந்து இடை நீக்கம் செய்யப்படுவார். பின்னர் குற்றவாளி எனத் தீர்ப்பளிக்கப்பட்டால் அவர் பதவிநீக்கம் செய்யப்படுவார். இதற்கு Moral Turptitude class என்ற பிரிவு பயன்படும். ஆனால் அமைச்சர்களை அவ்வளவு சுலபமாக கைது செய்ய முடியாது என்பதால் இந்த விதி அவர்களுக்குச் செயல்படுத்தப்படுவதில்லை.

(9) நியாயப்படி பார்த்தால் செந்தில் பாலாஜி பணத்தைத் திருப்பிக் கொடுத்ததாகச் சொன்னதன் மூலம் குற்றாத்தை ஒப்புக்கொண்டிருக்கிறார். எனவே அவர் தானாகவே பதவி விலகி இருக்கவேண்டும்.

(10) ஒருவர் அவதூறாக பிராசாரம் செய்திருக்கிறார் என தமிழக அரசு குறிப்பாக எதிர்க்கட்சி ஆதரவாளர்களை கைது செய்கிறது. அவர் பதிவிட்டிருப்பது பற்றிய ஆதாரம் இருந்தால் நேரடியாக வழக்குப் பதிவுசெய்து வழக்காடலாம். அதில் மேலும் விசாரிப்பதிற்கு என்ன இருக்கமுடிண்டும்? ஆனால் இங்கே குற்றத்தை ஒப்புகொண்ட ஒருவருக்கு அரசு வக்காலத்து வாங்குகிறது. இது சரிதானா என்று தமிழக அரசு சிந்திக்க வேண்டும்.

அன்று ஆளுநரிடம் கோரினார்; இன்று அதிகாரம் இல்லை என்கிறார்… இதுதான் ஸ்டாலின்!

stalin press meet - 2026

தமிழக அமைச்சரவையில் இருந்து இலாகா இல்லாத அமைச்சராக இருந்து வந்த செந்தில் பாலாஜியை நீக்கியுள்ளார் ஆளுநர் ரவீந்திர நாராயண ரவி. இந்நிலையில் செந்தில் பாலாஜி நீக்கம் குறித்து தனது கருத்தைத் தெரிவித்த முதலமைச்சர் ஸ்டாலின், அமைச்சர் செந்தில் பாலாஜிய நீக்க ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு அதிகாரம் இல்லை, இதை சட்டரீதியாக எதிர்கொள்வோம் என்று கூறியுள்ளார்.

ஆளுநர் என்ற பதவிக்கான கௌரவத்தை காப்பாற்றாமல், பாஜகவின் அடிவருடியாக செயல்படுகிறார் ஆளுநர் ரவி. அந்தப் பதவிக்கே அவர் தகுதி இல்லாதவர் என்று டி.கே.எஸ்.இளங்கோவன் கூறியுள்ளார்.

ஒருவர் அமைச்சரவையில் இருக்க வேண்டுமா, வேண்டாமா என்பது முதலமைச்சரின் அதிகாரத்துக்கு உட்பட்டது. அரசியல் சட்டத்தைக் கொச்சைப்படுத்தும் வகையில் ஆளுநர் செயல்பட்டுள்ளார். நீதிமன்றத்துக்குச் சென்றால் ஆளுநர் ரவி மீண்டும் குட்டுப்படுவார் என்று, காங்கிரஸ் எம்.எல்.ஏ. செல்வப்பெருந்தகை காட்டத்துடன் விமர்சித்துள்ளார்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும் செய்தியாளர்களிடம் பேசிய போது, அமைச்சரை நீக்குவதற்கு ஆளுநருக்கு அதிகாரம் இல்லை என்று கூறியுள்ளார். ஆனால், அவரே முன்னர் அமைச்சர்களை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோது கோரிக்கையும் வைத்துள்ளார். ஆளுநருக்கு அமைச்சரை நீக்குவதற்கு அதிகாரம் இல்லை என்றால் ஏன் ஆளுநரிடம் போய் அமைச்சர்களை நீக்க வேண்டும் என்று அந்நாளில் கோரிக்கை வைத்தார் என்ற கேள்வி இப்போது பரவலாக எழுப்பப்பட்டு வருகிறது.

செந்தில் பாலாஜியை அமைச்சரவையில் இருந்து நீக்கம் செய்து, ஆளுநர் அறிவித்துள்ளார். அமைச்சரை பதவி நீக்கம் செய்ய ஆளுநருக்கு அதிகாரமில்லை என்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கூறியிருக்கிறார். ஆனால் கடந்த ஏப்ரல் 13, 2017-ல் ஆர்.கே.நகர் இடைத் தேர்தல் ரத்து செய்யப்பட்ட போது அது தொடர்பாக அப்போதைய தமிழக ஆளுநர் பொறுப்பு வகித்த வித்யாசாகர் ராவிடம் இதே மு.க.ஸ்டாலின் கையெழுத்திட்ட கடிதத்துடன் துரைமுருகன், உள்ளிட்ட திமுகவினர் மும்பை சென்று முறையிட்டனர்.

அந்த மனுவில், “முதல்வர் மற்றும் அமைச்சர்களை உடனடியாக ராஜினாமா செய்ய ஆளுநர் உத்தரவிட வேண்டும். அவர்கள் ராஜினாமா செய்யத்தவறும் பட்சத்தில், அப்பதவிகளை நிர்வகிக்கும் உரிமையை இழந்த அவர்கள் அனைவரையும் ஆளுநர் பதவி நீக்கம் செய்ய வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளார். இதே போல பல உதாரணங்கள் உள்ளன… என்ற கருத்துக்கள் பரவலாக சமூக வெளிகளில் பகிரப்பட்டு வருகின்றன.

ஆளுநர் உத்தரவும் திடீர் நிறுத்தி வைப்பும்!

governor ravi letters - 2026

செந்தில் பாலாஜி இலாகா இல்லாத அமைச்சராக தொடர்வார் என முதல்வர் ஸ்டாலின், ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு பதில் கடிதம் அனுப்பினார்.

அமைச்சர் செந்தில் பாலாஜி மீதான மோசடி வழக்கை விசாரிக்க, அமலாக்கத் துறைக்கு அனுமதி அளித்து, கடந்த மாதம் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. அதைத் தொடர்ந்து, அவரை அமைச்சர் பதவியில் இருந்து நீக்கும்படி, மே 31ல், முதல்வருக்கு, ஆளுநர் ரவி கடிதம் எழுதினார். அதற்கு முதல்வர், ‘வழக்கு உள்ள காரணத்தினாலேயே, அமைச்சர்கள் பதவி விலக வேண்டிய அவசியமில்லை’ என பதில் கடிதம் அனுப்பினார்.

இதற்கிடையே செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை கைது செய்ததால், அவரது இலாகாக்களை இரு அமைச்சர்களுக்கு பகிர்ந்தளித்து, செந்தில் பாலாஜியை இலாகா இல்லாத அமைச்சராக நீடிக்க ஆளுநருக்கு தமிழக அரசு பரிந்துரைத்தது. ஆனால், துறை மாற்றத்துக்கு ஒப்புதல் அளித்த ஆளுநர், ‘இலாகா இல்லாத அமைச்சராக செந்தில் பாலாஜி நீடிப்பதை ஏற்க முடியாது’ என தெரிவித்தார்.

இதை கண்டு கொள்ளாமல், ‘இலாகா இல்லாத அமைச்சராக செந்தில் பாலாஜி நீடிப்பார்’ என, முதல்வர் அறிவித்தார். அதற்கான அரசாணையும் வெளியிடப்பட்டது. இந்த நிலையில், செந்தில் பாலாஜியை அமைச்சரவையில் இருந்து நீக்கம் செய்து, நேற்று (ஜூன் 29) மாலை ஆளுநர் ரவி உத்தரவிட்டார். பின்னர் நள்ளிரவு அவரே அந்த உத்தரவை வாபஸ் பெற்றார்.

இது தொடர்பாக ஆளுநர், முதல்வர் ஸ்டாலினுக்கு அளித்த கடிதத்தில், ‘செந்தில்பாலாஜி விவகாரத்தில், அட்டர்னி ஜெனரலின் கருத்தைக் கேட்பது விவேகமானது என மத்திய உள்துறை அமைச்சர் எனக்கு ஆலோசனை வழங்கி உள்ளார். இதன் அடிப்படையில் நான் அட்டர்னி ஜெனரலின் ஆலோசனையை நாடி உள்ளேன். இதனால், என்னிடம் இருந்து மறுஉத்தரவு வரும் வரை, செந்தில்பாலாஜியின் நீக்கம் உத்தரவு நிறுத்தி வைக்கப்படுகிறது’ என விளக்கமளித்தார்.

இந்த விவகாரம் தொடர்பாக அமைச்சர்கள், தமிழக அட்வகேட் ஜெனரல் சண்முக சுந்தரம் மற்றும் மூத்த வழக்கறிஞர்களுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனையில் ஈடுபட்டார். இந்த நிலையில், முதல்வர் ஸ்டாலின், ‘செந்தில் பாலாஜி இலாகா இல்லாத அமைச்சராக தொடர்வார்’ எனக் குறிப்பிட்டு ஆளுநர் ரவிக்கு பதில் கடிதம் அனுப்பியுள்ளார்.

செந்தில் பாலாஜி அமைச்சரவையில் இருந்து நீக்கம்: ஆளுநர் ரவி நடவடிக்கை!

stalin met senthil balaji - 2026
#image_title

இலாகா இல்லாத தமிழக அமைச்சராக முதலமைச்சர் ஸ்டாலினால் அறிவிக்கப்பட்டு மருத்துவமனையில் உள்ள செந்தில் பாலாஜி அமைச்சரவையில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.

Tamil Nadu Governor RN Ravi dismisses jailed V Senthil Balaji from the Council of Ministers with immediate effect.

இதுகுறித்து ஆளுநர் மாளிகை வெளியிட்ட அறிவிக்கையில் தெரிவிக்கப்பட்டு இருப்பதாவது…

செய்தி வெளியீடு எண்.40
நாள்: 29.06.2023

அமைச்சர் திரு.வி.செந்தில் பாலாஜி, வேலை வாங்கித் தருவதாகக் கூறி, பணமோசடி செய்தல் உள்ளிட்ட பல்வேறு ஊழல் வழக்குகளில் கடுமையான குற்றவியல் வழக்குகளை எதிர்கொண்டுள்ளார். அமைச்சர் பதவியை துஷ்பிரயோகம் செய்து, விசாரணையில் செல்வாக்கு செலுத்தி, சட்டம் மற்றும் நீதி வழங்கப்படுவதை தடுக்கிறார். தற்போது அமலாக்க இயக்குனரகம் விசாரித்து வரும் குற்ற வழக்கில் நீதிமன்றக் காவலில் உள்ளார். அவர் மீது ஊழல் தடுப்புச் சட்டம் மற்றும் இந்திய தண்டனைச் சட்டத்தின் கீழ் மேலும் சில குற்ற வழக்குகள் மாநில காவல்துறையால் விசாரிக்கப்பட்டு வருகின்றன. அமைச்சர்கள் குழுவில் திரு.வி.செந்தில் பாலாஜி நீடிப்பது, நியாயமான விசாரணை உள்ளிட்ட சட்ட நடைமுறைகளை எதிர்மறையாக பாதிக்கும், இது இறுதியில் மாநிலத்தில் அரசியலமைப்பு இயந்திரத்தை சீர்குலைக்க வழிவகுக்கும் என்ற நியாயமான அச்சங்கள் உள்ளன. இந்நிலையில், மாண்புமிகு ஆளுநர் திரு.வி.செந்தில் பாலாஜியை அமைச்சர்கள் குழுவிலிருந்து உடனடியாக நீக்கியுள்ளார்.

ராஜ் பவன், சென்னை-22
நாள்: 29.06.2023

அறநிலையத் துறையின் அடுத்த அராஜகம்; திருச்செந்தூர் கோயிலில் பக்தர்களுக்கு தடை ஏன்?!

1747373 tiruchendur subramanya swamy temple - 2026

அறநிலைய அபகரிப்பு துறையின் அடுத்த அராஜகம், திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆனி திருவிழாவில் கோவிலுக்குள் பக்தர்களுக்கு தடை விதித்துள்ளது அறநிலைய அபகரிப்பு துறை என்று பாஜக.,வின் மாநிலச் செயலர் -அ.அஸ்வத்தாமன் அறிக்கை வெளியிட்டுள்ளார். அவரது அறிக்கை:

சிதம்பரம் நடராஜர் கோவிலில் இதே போல திருவிழாவை முன்னிட்டு கனகசபை என்கிற ஒரு 300 sq.ft அளவே இருக்கும் ஒரு சிறிய இடத்தில் பக்தர்களை அனுமதிக்க முடியாது என்று நிர்வாக காரணங்களுக்காக எடுத்த முடிவை, அரசியல் ஆக்கி, அங்கு அத்துமீறி உள்ளே சென்று ரவுடிசம் செய்து அப்பட்டமான criminal trespass ல் ஈடுபட்ட அறநிலைய அபகரிப்பு துறையே ,

இன்று திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆனி திருவிழாவில் கோவிலுக்குள் ஒரு பக்தர்களை கூட அனுமதிக்காத கயமையை செய்கிறது. எவ்வளவு பெரிய முரண்பாடு!

இவர்கள் தங்கள் கட்டுப்பாட்டில் உள்ள கோவிலில், திருவிழாவில் கோவிலுக்கு உள்ளே கூட, ஒரு பக்தர்களையும் அனுமதிக்க மாட்டார்களாம். ஆனால் சிதம்பரம் நடராஜர் கோவிலில் கனக சபையின் மீது திருவிழா நேரத்தில் எல்லா பக்தர்களையும் அனுமதிக்க வேண்டும் என்று உள்ளே புகுந்து ரவுடிசம் செய்வார்களாம்.

உங்கள் ஆட்டம் எல்லாம் மக்கள் விழிப்புணர்வு பெறுகிற வரையில்தான். அறநிலைய அபகரிப்பு துறை மக்கள் போராட்டத்தால் துரத்தப்படுகிற நாள் வெகுதொலைவில் இல்லை.

பக்தர்கள் அனுமதிக்கப்பட்டால் தான் அதற்கு பெயர் திருவிழா! அறநிலையத்துறை அதிகாரிகள் 5 பேர் நின்று கொண்டிருந்தால் அதற்கு பெயர் திருவிழா அல்ல ! அதற்கு பெயர் வேறு . ஏற்கனவே அறநிலைய அபகரிப்பு துறையின் கட்டுப்பாட்டில் உள்ள பல கோவில்களில் சிலைகளும், நகைகளும் காணாமல் போயிருக்கும் நிலையில் இப்படி பக்தர்கள் உள்ளே அனுமதிக்கப்படாமல் அறநிலைய அபகரிப்பு துறை அதிகாரிகள் மட்டும் உள்ளே அனுமதிக்கப்படுவார்கள் என்பது சந்தேகத்தை எழுப்புகிறது.

பக்தர்களுக்காகத்தான் கோவிலில் கட்டப்பட்டது. அந்த பக்தர்கள் உண்டியலில் போடுகிற காசில் தான், அறநிலையத்துறை அதிகாரிகள் மாதமாதம் சம்பளம் பெறுகிறார்கள். அந்த காசில் தான் அமைச்சர் சேகர்பாபுவின் காருக்கு பெட்ரோல் போடப்படுகிறது. அப்படிப்பட்ட பக்தர்களையே அனுமதிக்க மாட்டோம் என்று சொல்லுவதற்கு அறநிலைய அபகரிப்புத்துறை அதிகாரிகளுக்கும் அமைச்சர் சேகர்பாபுவுக்கும் என்ன உரிமை இருக்கிறது ? பக்தர்களை அனுமதிக்க மாட்டேன் என்று சொல்வதற்கு நீங்கள் யார்?!

எனவே, அறநிலைய அபகரிப்பு துறையும், அதனுடைய அமைச்சர் சேகர்பாபு அவர்களும் உடனடியாக இந்த விஷயத்தில் தலையிட்டு திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் ஆனி வர்ஷாபிஷேக நிகழ்வுக்கு அனைத்து பக்தர்களையும் அனுமதிக்க வேண்டும்.

சிதம்பரம் கோயில் நிர்வாகத்தில் தலையிட்டால்… கடும் விளைவுகளைச் சந்திக்க நேரிடும்: அண்ணாமலை எச்சரிக்கை!

bjp annamalai - 2026
#image_title

இந்து சமயத்தின் புனிதமான எந்தக் கோட்பாட்டின் மீதும் நம்பிக்கை இல்லாத நாத்திகத்தைப் பரப்பி, இந்து கடவுள்களை கொச்சைப்படுத்தும் கூட்டத்திற்கு அடைக்கலமாகத் திகழும் திமுக, சிதம்பரம் நடராஜர் கோவிலின் நிர்வாகத்தில் இதற்கு மேலும் தலையிட்டால், விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று மிக பணிவன்புடன் தெரிவித்துக் கொள்கிறேன்… இன்று பாஜக மாநில தலைவர் கே அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

அத்துமீறும் அறநிலையத்துறை என்ற தலைப்பில் இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:

ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேல் தொன்மை வாய்ந்த சிதம்பரம் நடராஜர் கோவிலின் வழிபாட்டு நடைமுறைகளை சிதைக்கும் வகையில் தமிழக அரசின் இந்து சமய அறநிலையத்துறை தொடர்ச்சியாக செயல்பட்டு வருகிறது. வருடாவருடம் நடைபெறும் ஆனித் திருமஞ்சனம் விழாவின் முடிந்து நான்கு நாட்களுக்கு, சிதம்பரம் நடராஜர் கோவிலில் உள்ள கனகசபை, மக்கள் பயன்பாட்டிற்கு அனுமதிக்கப்படாது என்பது அனைவரும் அறிந்ததே. இந்து சமய அறநிலையத்துறை நிர்வாகத்தின் கீழ் இல்லாத சிதம்பரம் நடராஜர் கோவிலை, தமிழக அரசு கட்டுப்படுத்த நிளைப்பது பக்தர்களை மட்டும் அல்ல, மாண்புமிகு சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் மாண்புமிகு உச்சநீதிமன்றத்தை அவமதிக்கும் செயலாகும் என்பதை, அரசு அதிகாரிகளும், அமைச்சரும் நினைவில் கொள்ள வேண்டும்.

13.12.1951.2591/1951 மனு மீதான விசாரணைக்குப் பிறகு, மாண்புமிகு சென்னை உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில், சிதம்பரம் தீக்ஷிதர்கள், இந்திய அரசியலமைப்புச் சட்டப்பிரிவு 2660 வழங்கப்பட்ட அதிகாரத்தின் கீழ் இந்து சமயத்தின் ஒரு உட்பிரிவு (Derominated community) என்றும். 638/1951 என்ற மனுவின் மீதான விசாரணைக்கு பிறகு வழங்கிய தீர்ப்பில், சிதம்பரம் நடராஜர் கோவிலின் நிர்வாக அதிகாரம் தீட்சிதர்களுக்கு மட்டுமே உள்ளது என்றும் தெளிவுபடுத்தியுள்ளனர்.

இதனை எதிர்த்து, 1963 ஆம் ஆண்டு, மெட்ராஸ் மாகாண அரசு உச்சநீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. மேலும், 1959 ஆம் ஆண்டு இயற்றப்பட்ட இந்து சமய அறநிலையத்துறை சட்டவிதி 107ன்படி. இந்து சமயத்தின் உட்பிரிவுகள் (Denominated Community) நிர்வகிக்கும் கோவில்களில், தமிழக அரசுக்கு எந்தவித அதிகாரமும் இல்லை என்பதை மிகத் தெளிவாக குறிப்பிட்டுள்ளனர். இன்று நடக்கும் அத்துமீறல் போல் முந்தைய திமுக ஆட்சியிலும் சிதம்பரம் நடராஜர் கோவிலை இந்து சமய அறநிலையத்துறையின் நிர்வாகத்தின் கீழ் கொண்டு வர. 2009ஆம் ஆண்டு அரசாணை பிறப்பிக்கப்பட்டது

இந்த அரசாணைக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில், உச்ச நீதிமன்றம், தமிழக அரசு வெளியிட்ட அரசாணை சட்டத்திற்குப் புறம்பானது என்று அறிவித்தது. 2014ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் தமிழக அரசு இந்த அரசாணை திரும்பப் பெறப்பட்டது.

2021ஆம் ஆண்டு திமுக ஆட்சிக்கு வந்த நாள் முதல், சிதம்பரம் நடராஜர் கோவிலில் தொடர்ச்சியாக நிர்வாக இடைஞ்சல் ஏற்படுத்தி, கோவிலை அறநிலையத்துறை கைப்பற்ற அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

சிதம்பரம் நடராஜர் கோவிலின், நிர்வாக கட்டுப்பாட்டில் உள்ள நகைகள், தணிக்கைக்கு உட்படுத்தப்பட வேண்டும் என்ற அரசின் கோரிக்கை. தீக்ஷிதர்களால் ஏற்கப்பட்டு, அரசால் தணிக்கைக்கு உட்படுத்தப்பட்டது, அதில் எந்த குறையும் கண்டுபிடிக்க முடியாமல் விரக்தியில் இருந்த இந்தத் திறனற்ற திமுக அரசு, தொடர்ச்சியாக சிதம்பரம் நடராஜர் கோவிலில் எதோ ஒரு பிரச்சினையை உருவாக்கவேண்டும் என்று முனைப்போடு செயல்பட்டு வருகிறது.

அதிகாரவரம்பை மீறும் செயலாக, சென்ற ஆண்டு மே மாதம், தமிழக அரசு ஒரு அரசாணை வெளியிட்டது. கனகசபை மீது அனைவரும் ஏறி வழிபடலாம். என்ற அறிவிப்புடன் வெளியான அந்த அரசாணையைக் கூட தீக்ஷிதர்கள் எதிர்க்கவில்லை. ஆனித் திருமஞ்சனம் விழாவின் போது கோவில் நகைகள் அனைத்தும் தில்லை நடராஜருக்கு அலங்காரமாக அணிவிக்கப்படுவதால். பாதுகாப்புக் காரணங்களுக்காக, நான்கு நாட்கள், பொதுமக்கள் பயன்பாட்டிற்கு அனுமதிக்கப்படவில்லை. கனகசபை

இந்து சமய அறநிலையத்துறையின் நிர்வாக அதிகாரத்தின் கீழ் இல்லாத ஒரு கோவிலில் அத்துமீறி நுழைந்து, கோவில் நடைமுறையில் தலையிட்ட அதிகாரிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படவேண்டும்.

சிதம்பரம் நடராஜர் கோவிலுக்குச் சொந்தமான, 3500 ஏக்கர் நிலத்தைப் பராமரித்து வரும் தமிழக அரசின் சிறப்பு வட்டாட்சியர். கடந்த 15 ஆண்டுகளாக அந்த நிலத்தின் மூலமாக வந்த வருவாய் கணக்குகளை தெரிவிக்கவில்லை என்றும், கடந்த 15 ஆண்டுகளாக அந்த நிலத்தின் மூலமாக வரும் வருவாயை, சிதம்பரம் நடராஜர் திருக்கோவிலில் செலுத்தவில்லை என்றும் குற்றச்சாட்டு உள்ளது

இதற்கு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் திரு சேகர் பாபு பதில் அளிக்கவேண்டும்.

இந்து சமய அறநிலையத்துறையின் நிர்வாகத்தில் உள்ள, 37000க்கும் மேற்பட்ட கோவில்களின் வருவாய் செலவினங்களை தனியார் தணிக்கைக்கு உட்படுத்தவேண்டும் என்ற, மாண்புமிகு சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பைக் கூட மதிக்காமல் செயல்பட்டு வரும் அமைச்சர் திரு சேகர் பாபு, தனது அதிகார வரம்பை உணர்ந்தால் நன்று.

இந்து சமய அறநிலையத்துறையின் நிர்வாகத்தின் கீழ் உள்ள கோவில்களின் சொத்துக்கள், கொள்ளை அடிக்கப்படுவதை கைகட்டி வேடிக்கை பார்ப்பதையும், கோவில்களில் ஆட்சியின் அவலங்களை மறைக்க புதுப்புது பிரச்சனைகளை உருவாக்குவதையும் திறனற்ற திமுக நிறுத்திக் கொள்ளவேண்டும்.

திறனற்ற திமுகவின் செயல்பாடுகள், இந்து சமயத்திற்கு எதிராக மட்டும் அல்ல அரசியல் அமைப்புச் சட்டம் மற்றும் நீதிமன்றத் தீர்ப்புகளுக்கும் எதிரானது. இந்து சமயத்தின் புனிதமான எந்தக் கோட்பாட்டின் மீதும் நம்பிக்கை இல்லாத நாத்திகத்தைப் பரப்பி, இந்து கடவுள்களை கொச்சைப் படுத்தும் கூட்டத்திற்கு அடைக்கலமாகத் திகழும் திமுக. சிதம்பரம் நடராஜர் கோவிலின் நிர்வாகத்தில் இதற்கு மேலும் தலையிட்டால், விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று மிக பணிவன்புடன் தெரிவித்துக் கொள்கிறேன்… இன்று குறிப்பிட்டுள்ளார் கே அண்ணாமலை.

சிதம்பரம் விவகாரத்தில்… சேகர் பாபுவுக்கு தேவநாதன் யாதவ் மிரட்டல்… அல்ல எச்சரிக்கை!

devanathan yadav - 2026

சமூகவலைத் தளங்களில் வெளியான போலி அறிக்கை தொடர்பாக, யாதவ மகா சபை தலைவர் டாக்டர் தி. தேவநாதன் யாதவ் கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும், அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபுவுக்கு மிரட்டல் அல்ல எச்சரிக்கை என்று குறிப்பிட்டு சிதம்பரம் நடராஜர் கோவில் விவகாரத்தில் கண்டனம் தெரிவித்துள்ளார்… அவரது அறிக்கை

சிதம்பரம் நடராஜர் கோயிலில் சாமி தரிசனம் செய்ய வந்த முதியவர் மீது தாக்குதல் நடத்திய தீட்சிதர்களை வன்மையாக கண்டிக்கிறோம் என எனது பெயரில் சமூகவலைத் தளங்களில் வெளியான கண்டன அறிக்கை போலியானது

திமுக விஷமிகள் சிலர் திட்டமிட்டு வெளியிட்ட இந்த போலியான அறிக்கையை யாரும் நம்ப வேண்டாம். சிதம்பரம் நடராஜர் கோயிலில் தீட்சிதர்களின் வழிபாட்டு உரிமையில் யாதவ மகா சபை எப்போதும் தலையிட்டதில்லை சிதம்பரம் நடராஜர் கோயிலில் தீட்சிதர்களுக்கு எதிராக நடவடிக்கை மேற்கொண்டு வரும் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபுவின் செயல்பாடுகள் வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.

திமுக ஆட்சிப் பொறுப்பேற்றதில் இருந்து சிதம்பரம் தீட்சிதர்களுக்கு எதிராகப் பேசியும், அவர்களை மிரட்டியும், அவர்களின் வழிபாட்டு உரிமைகளில் தலையிட்டும் அராஜகப் போக்குடன் இந்து சமய அறநிலையத்துறை செயல்பட்டு வருகிறது. உச்சநீதிமன்ற வழிகாட்டுதலின் படி, தீட்சிதர்களின் பரம்பரை வழிபாடு பூஜை விஷயத்தில் இந்து சமய அறநிலையத்துறை தலையிட முடியாது. கோயில் நிர்வாகம், அரசின் கையில் இல்லாதபோது, தீட்சிதர்களை மிரட்டுவதும், காவல்துறையை ஏவிவிடுவதும் சரியான செயல்பாடுகள் அல்ல.

சிதம்பரம் கோயில் விவகாரத்தில் மூக்கை நுழைத்து குறிப்பிட்ட ஜாதியினருக்கு எதிராகவும், பொதுமக்களுக்கு எதிராகவும் இச்சமூகத்தை திருப்பிவிடும் விஷமத்தனமான செயல்பாடுகளையும் வன்மையாக கண்டிக்கிறேன். அமைச்சர் செந்தில்பாலாஜியின் வழியில் சேகர்பாபு செயல்படுவதாக தெரிகிறது. செந்தில்பாலாஜிக்கு ஏற்பட்ட அதே கதிதான் சேகர்பாபுவுக்கும் ஏற்படும். இந்த அராஜகப் போக்கை அவர் உடனடியாக கைவிட வேண்டும் என யாதவ் மகா சபை கேட்டுக் கொள்கிறது.

சேகர்பாபுவின் அத்துமீறிய நடவடிக்கைகளும், தீட்சிதர்களுக்கு எதிராக அவரது பேச்சையும் முதலமைச்சர் ஸ்டாலின் ஏன் இன்னமும் கண்டிக்கவில்லை? எனவே அமைச்சர் சேகர்பாபுவை உடனே பதவிநீக்கம் செய்ய வேண்டும்.

திருக்கோயில்கள் ஆன்மிக நம்பிக்கை இந்து தர்மத்திற்கு எதிரான கோட்பாடுகளை கொண்டுள்ள திமுகவின் இந்த செயல்பாடுகளை நிறுத்திக் கொள்ளாவிடில் வரும் நாடாளுமன்றத் தேர்தல் மூலமாக மக்கள் இந்த ஆட்சிக்கு சாவுமணி அடித்துவிடுவார்கள் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டுகிறேன். இது மிரட்டல் அல்ல, எச்சரிக்கை.

ரூ.80 கோடி செலவுள்ள கருணாநிதி பேனா நினைவுச் சின்னம்! திட்ட மதிப்பீட்டில் குழப்பமாம்!

pen memorial for karunanidhi - 2026

முன்னாள் முதல்வர் கருணாநிதி நினைவாக வங்கக் கடலில் ரூ.80 கோடியில் பேனா நினைவுச் சின்னம் அமைக்கப்படும் என்று திமுக., அரசு அறிவித்தது. தற்போது நினைவுச் சின்னம் அமைப்பதற்கான திட்ட மதிப்பீடு தயாரிப்பதில் குழப்பம் ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

கருணாநிதிக்கு சென்னை மெரினாவில் 2.21 ஏக்கரில் நினைவிடம் கட்டும் பணி தற்போது 39 கோடி ரூபாயில் நடந்து வருகிறது. இந்த நினைவிடம் வரும் ஆக. 7ம் தேதி திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இங்கே ரூ. 80 லட்சம் செலவில் கருணாநிதி அருங்காட்சியம் அமையவுள்ளதாம். இதற்கான வேலை நடந்து வரும் நிலையில், பணிகள் முடிக்கப்படாமல் உள்ளதால் நினைவிடத் திறப்புக்குப் பிறகும் பணிகளைத் தொடர முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன் தொடர்ச்சியாக வங்கக் கடலில் 134 அடி உயரத்துக்கு ரூ.80 கோடி செலவில் பேனா சினைவுச் சின்னம் அமைக்கப்படவுள்ளது. மெரினா கடற்கரையில் இருந்து இந்தப் பகுதிக்குச் செல்வதற்காக 360 மீட்டர் நீளத்துக்கு பாலம் ஒன்றும் அமைக்கப்படவுள்ளது. இதற்கு மத்திய சுற்றுச்சூழல் துறை அனுமதி வழங்கியுள்ளது.

இந்நிலையில், இந்தப் பாலத்தின் கட்டுமான பணிக்கு திட்ட மதிப்பீடு தயாரிக்க வேண்டும். இதை நேரடியாக பொதுப்பணித்துறையே மேற்கொள்வதா அல்லது தனியார் நிறுவனம் மூலம் மேற்கொள்வதா என்பதில் குழப்பம் ஏற்பட்டுள்ளது.

தேவை பொது சிவில் சட்டம் மட்டுமல்ல; சம மத உரிமைச் சட்டமும்தான்!

uniform civil code - 2026
#image_title

–B.R. மகாதேவன்

அரசின் சலுகைகள், சிறப்பு நலத்திட்டங்கள், உதவிகள் எல்லாம் ஜாதியின் பெயரில் அமையலாம் (இடப் பங்கீடு, நலத்திட்டங்கள்);

வர்க்கத்தின் பெயரில் (வறுமைக் கோட்டுக்குக் கீழே உள்ளவர்களுக்கு சலுகைகள், நலத்திட்ட உதவிகள்) அமையலாம்;

இட அமைப்பின் அடிப்படையில் அமையலாம்; கிராமப்புறத்தினருக்கு சலுகைகள், நலத்திட்ட்டஙள் உருவாக்கப்படலாம்;

பாலின அடிப்படையிலும் அமையலாம்.

ஆனால், மதத்தின் பெயரில் அதிலும் சிறுபான்மை என்ற சலுகை மிக மிகத் தவறு.

இஸ்லாமும் கிறிஸ்தவமும் மன்னர் பரம்பரைகள். இந்து மன்னர்களிடமிருந்து ஆட்சி உரிமை, சொத்துகள் எல்லாம் பறிக்கப்பட்டன. இந்து கோவில்களின் சுதந்தரம் பறிக்கப்பட்டது.

ஆனால், கிறிஸ்தவ மன்னர்களான பிரிட்டிஷார் நாட்டைத் தமது பிரதிநிதிகள் வசம் கொடுத்துவிட்டுச் சென்றிருக்கிறார்கள். எனவே, அவர்கள் இல்லையே தவிர அவர்களுடைய காலனிய ஆட்சியும் நிர்வாக அமைப்பும்தான் தொடர்கிறது.

இஸ்லாமிய மன்னர்கள் பிரிட்டிஷாரால் ஒடுக்கப்பட்டுவிட்டதால் இந்திய சுதந்தரத்தின்போது இஸ்லாமிய மன்னர்கள் சொற்பம் தான் இருந்தனர். ஆனால் இஸ்லாமியர்களின் நிரந்தர ஒரே மன்னரான அல்லா-நபியின் அதிகாரம் குறையவில்லை. மசூதிகள் தனி அரசாக, தனி சொத்துரிமையுடன் நீடிக்கவே செய்கின்றன.

பிரிட்டிஷார்களின் காலத்தில் சர்சுகளிடம் கொடுக்கப்பட்ட சொத்து, உணர்ச்சிவசப்பட்டுச் சொல்வதானால், இந்திய அரசிடம் இருக்கும் சொத்தைவிட மிக அதிகம்.

எனவே, சுதந்தரம் என்ற பெயரில் நடந்த ஆட்சி/அதிகார மாற்றத்தில் இந்து மன்னர்களும் இந்து வழிபாட்டு மையங்களும் தான் செல்வாக்கு/சுதந்தரம் இழந்தன. ஒழிக்கப்பட்டுவருகின்றன.

பொது மத உரிமைச் சட்டம் இதை மாற்றி அமைக்கவேண்டும்.

அனைத்து மத அமைப்புகளும் ஒரேவிதமாக நடத்தப்படவேண்டும். கோவில்களைப் போல் மசூதியும் சர்ச்சும் அரசின் கட்டுப்பாட்டுக்குள் செல்லவேண்டும். அல்லது மசூதி, சர்ச் போல் இந்து கோவில்களுக்கு சுதந்தரம் தரப்படவேண்டும்.

சிறுபான்மை நிறுவனங்களுக்கு அவர்களுடைய கலாசாரத்தைப் பாதுகாத்துக்கொள்ள பெரும்பான்மை சமூகம் உதவவேண்டும் என்பது நல்லெண்ணத்தின் அடிப்படையில் செய்யப்படவேண்டிய செயல். சிறுபான்மை அமைப்புகள் அதற்கு நன்றியுடன் நடந்துகொள்ளவேண்டும். பெரும்பான்மையின் கலாசாரம், மதம், மதிப்பீடுகள் இவற்றை அழிக்க முற்படக்கூடாது.

பசியாக இருப்பவருக்கு உணவு கொடுப்பது அன்பினால் தான்.. ஆனால், உண்ட வீட்டில் ரெண்டகம் செய்யக்கூடாது.

பாபர் அல்ல; ராமரே என் மரியாதைக்குரியவர் என்று சொல்லவேண்டும். ஒளரங்க ஜீபும் திப்புவும் அல்ல; சத்ரபதி சிவாஜியும் ராஜராஜசோழனே எம் மன்னர் என்று சொல்லவேண்டும்.

மத நிறுவனங்களுக்கு சிறுபான்மை என்று சொல்லி, மதத்தின் பெயரில் சலுகை தருவது மிக மிகத் தவறு. நீச்சல் குளம் இருக்கும் வீடுகள் கூட குறைவுதான். அவர்கள் எல்லாம் சேர்ந்துகொண்டு நாங்கள் சிறுபான்மையினர். எங்களுக்கு சலுகை கொடுங்கள், தனி சட்டம் கொடுங்கள் என்று கேட்டால் எவ்வளவு அபத்தமாக அராஜகமாக இருக்கும். கிறிஸ்தவ இஸ்லாமிய நிறுவனங்கள் எல்லாம் சிறுபான்மை என்று சொல்லி சலுகை கேட்பது அப்படியான அராஜகம் தான்.

வேலூர் கிறிஸ்தவ கல்லூரியில் இந்து பட்டியல் ஜாதியினருக்கு இட ஒதுக்கீடு தரமாட்டேன். மதம் மாறினால்தான் தருவேன்; அதுவும் உயர் ஜாதி கிறிஸ்தவருக்கு மட்டுமே தருவேன் என்பது சமூக நீதிக்கு எதிரான அராஜகம்.

கிறிஸ்தவ நிறுவனங்கள் சலுகை கேட்பதுகூட பெரிய விஷயம் இல்லை. அவர்கள் விஷயத்தில் அவர்கள் தந்திரமாக இருக்கிறார்கள் என்று புரிந்துகொள்ளலாம். அதை பெரும்பான்மை சமூகம் எதனால் கொடுக்கிறது என்பதுதான் புரியவில்லை. அதிலும் தமது சகோதரர்களுக்கு இல்லாத உரிமைகளை அள்ளிக் கொடுப்பதென்பது அசட்டுத்தனம். நல்லவராக இருக்கலாம். ரொம்ப நல்லவராக இருக்கக்கூடாது.

தமிழில் திருவள்ளுவர் மட்டுமல்ல; பாத்திரமறிந்து பிச்சையிடு என்று சொன்னவளும் இருக்கிறாள்.

அடுத்ததாக, மதத்தின் பெயரில் சலுகை தரப்படுவது குடிமகன்களுடைய அடிப்படை உரிமைகளுக்கு எதிரானது.

இஸ்லாமும் கிறிஸ்தவமும் இந்தியாவில் மக்கள் தொகை அடிப்படையில் மட்டுமே சிறுபான்மைகள். உலக அளவில் அவர்களே வல்லாதிக்க சக்திகள்.

அதோடு, இந்தியாவிலும் அரசியல், கல்விப்புல, சமூக, ஊடக அதிகாரங்களில் உச்சத்தில் இருக்கின்றன.

இஸ்லாமும் கிறிஸ்தவமும் விற்பதும் ஒருவகை போதைப் பொருள்தான். தன்னைத் தவிர பிறரை அழிக்க நினைக்கும் ஒரு மதம் நல்வழிப்படுத்தும் அமுதம் அல்ல. ஏற்றி சம நிலை பிறழச் செய்யும் அபின் தான்.

அவர்களுக்குத் தரப்படும் சலுகை என்பது சாராய வியாபாரி மல்லையாவுக்குத் தரப்படும் ஊக்கத் தொகைகளைப் போன்றது.

இந்துக்களை மதம் மாற்றுவதையே முழு நேரத்தொழிலாகக் கொண்டிருக்கும் அமைப்புகள் அவை. அப்படியான கிறிஸ்தவ இஸ்லாமிய மத நிறுவனங்களுக்குச் சலுகை என்பது திருடர்களுக்கு தங்கப் பதக்கங்கள் தருவதைப் போன்றது.

நாம் என்னதான் உண்மைகளைச் சொன்னாலும் ஜாதிக் கொடுமையினால்தான் மதம் மாறினார்கள் என்று புதிய ஏற்பாட்டு வசனங்களைத்தான் சொல்வார்கள்.

மனு ஸ்மிருதிதான் இந்த தேசத்தை ஆண்டது என்றே பேச்சுக்கு வைத்துக் கொள்வோம்…

அது மட்டுமே உலகில் பிறப்பின் அடிப்படையில் சமூகத்தைப் பிரித்தது என்றே வைத்துக்கொள்வோம்.

ஆனால், இன்றைக்கு நம் தேசம் அரசியல் சாசனத்தின் அடிப்படையில்தான் ஆளப்படுகிறது. அதை எழுதிய 80% பிராமண உறுப்பினர்களைக் கொண்ட குழுவின் தலைவராக பாபா சாஹேப் இருந்திருக்கிறார். அனைவரையும் சமமாக மதிக்கும் ஸ்மிருதி விதிமுறைகளைத்தான் அவர்கள் அனைவரும் ஒன்று கூடி வகுத்திருக்கிறார்கள்.

அதில் ஜாதிக்கொடுமைக்கு இடம் இல்லை.

திருமா போன்ற சர்ச் பெல் பாய்ஸ் இன்றும் சனாதன ஆட்சிதான் நடக்கிறது என்று சொல்வதன் முக்கிய காரணம் அப்போதுதான் மத மாற்ற வேலைகளைத் தொடர, தார்மிக நியாயம் கிடைக்கும். அரசியல் சாசனம் எழுதி அண்ணல் அம்பேத்கர் வாழ்க… சமத்துவம் மலரச் செய்த ஈ.வெ.ரா வாழ்க என்று முழங்கியபடியே சனாதன ஆட்சிதான் நடப்பதாகவும் புலம்புவது அதனால்தான்.

இப்போது சனாதன ஆட்சிதான் நடக்கிறதென்றால் அம்பேத்கரும் ஈ.வெ.ராவும்தான் சனாதனவாதிகள் (கடவுளே என்னைக் காப்பாற்று)

அம்பேத்கர், ஈ.வெ.ராவின் வழிகாட்டுதலின்படித்தான் ஆட்சி நடக்கிறதென்றால் சனாதன ஆட்சி இல்லை.

இரண்டில் ஒன்றுதான் உண்மையாக இருக்க முடியும்.

தேச அளவில் காங்கிரஸும் மாநில அளவில் திராவிட இயக்கமும் தான் இத்தனை காலம் ஆட்சிசெய்துள்ளன. அவர்கள் காலத்தில் நியமிக்கப்பட்ட அதிகார வர்க்கம்தான் இப்போதும் அதிகாரத்தில் இருக்கின்றன.

அப்படியென்றால் ஜாதிக் கொடுமையைக் காரணம் காட்டி இன்றும் ஏன் மத மாற்றம் நடக்கிறது?

சுமார், 100 ஆண்டுகாலம் செல்வாக்குடனும் 70 ஆண்டுகாலம் அரசியல் செல்வாக்குடனும் இருந்த பின்னரும் ஜாதிக் கொடுமையை நீக்க முடியவில்லையென்றால் காங்கிரஸும் திராவிட இயக்கமும் இத்தனை ஆண்டுகளில் என்னதான் செய்திருக்கிறார்கள்?

சுமார் ஐம்பது ஆண்டுகளாக இந்துக்களின் அரசியல் பேரியக்கமான பாஜக சமூக, பொருளாதார, அரசியல் செல்வக்குடன் முன்னிலைக்கு வந்துவிட்டிருக்கிறது.

அவர்களும் அரசியல் சாசனத்தின் படிதான் ஆட்சி செய்கிறார்கள். பகவத் கீதையைவிட அரசியல் சாசனமே உயர்ந்தது என்று சொல்லும் அளவுக்கு அதை மதிக்கிறார்கள்.

அப்படியென்றால் இன்னும் ஏன் மத மாற்றம் நடக்கிறது?

இதைவிட இவர்களிடம் கேட்க வேண்டிய முக்கியமான கேள்வி: இப்போதுதான் ஜாதிக் கொடுமைகளில்லையே. தாய் மதத்துக்குத் திரும்பி வாருங்கள் என்று ஏன் பேச ஆரம்பிக்கவில்லை?

பெரு வெள்ளக்காலத்தில் நிவாரண முகாம்களுக்குச் சென்று தங்கிக் கொள்ளலாம். மழை ஓய்ந்து வெள்ளம் வடிந்ததும் சொந்த வீடுகளுக்குத் திரும்பத்தானே வேண்டும் (புரிவதற்காகச் சொல்லப்படும் உவமை மட்டுமே).

அப்படி அவர்களைத் திரும்பச் செய்ய என்ன நடவடிக்கை எடுத்திருக்கிறார்கள்?

சிறுபான்மைகளுக்கு சலுகை என்பது பெரும்பான்மைகளை சிறுபான்மை பக்கம் நகரத்தானே வைக்கும்.

அப்படியே சிறுபான்மைச் சலுகை தரவேண்டுமென்றால் பெரும்பான்மையாக ஆகும் முயற்சிகளை நிறுத்தவேண்டும். சிறுபான்மைச் சலுகை வேண்டுமென்றால் மத மாற்றப் பணிகளை நிறுத்தவேண்டும். பாகிஸ்தானின் படையில் வேலை செய்வேன். இந்திய அரசு சம்பளம் தரவேண்டும் என்று சொல்வதைப் போன்ற அராஜகம் இது.

ஏழைகளுக்கு சலுகை என்பதற்காக ஒருவர் தன்னை ஏழை என்று சொல்லிக் கொள்வதைத் தடுக்க நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன.

ஜாதிச் சலுகை கிடைக்க பொய்யாக சான்றிதழில் இந்துவாகக் காட்டிக் கொள்ளும் க்ரிப்டோ நபர்கள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளன?

இன்றும் ஒருவர் மதம் மாறுகிறார் என்றால் ஜாதிக் கொடுமையினால்தான் மாறுகிறேன் என்று கலெக்டரிடம் அல்லது திமுக அறிவாலயத்தில் அல்லது கமலலயத்தில் சாட்சியம் கொடுக்கவேண்டும்.

சொல்ல விரும்புவது மிகவும் எளியது: மதம் சார்ந்து மக்கள் அனைவரையும் சமமாக நடத்தவேண்டும். மதம் சார்ந்த நிறுவனங்கள் அனைத்தையும் ஒரே மாதிரியாக நடத்தவேண்டும்.

பொது சிவில் சட்டமானது திருமணம், விவாகரத்து, வாரிசு உரிமை, தத்தெடுத்தல் போன்ற தனிநபர்/குடும்ப விஷயங்களில் மட்டுமே சமத்துவத்தைக் கொண்டுவர முயற்சி செய்கிறது.

உண்மையில் சமத்துவ மறுப்பு என்பது வேறு இடத்தில் வெகு வேகமாக வெகு வெளிப்படையாக நடந்து வருகிறது. சிறுபான்மை மத உரிமை என்ற பெயரில் அது சட்டபூர்வ அங்கீகாரத்துடன் மூர்க்கத்தனமாக நடந்துவருகிறது.

முதலில் தடுக்கப்படவேண்டியது அதுதான்.

முழு சமத்துவம் கொண்டுவரப்படவேண்டிய இடமும் அதுதான்.

வர்க்கம், ஜாதி, இடம், ஒரு எல்லை வரை பாலினம் இவற்றின் அடிப்படையில் மட்டுமே பாகுபடு அதுவும் நலத்திட்ட நோக்கில் பார்க்கப்படலாம்.

மதம் சார்ந்து சிறுபான்மைகளுக்குத் தரப்படும் சலுகைகள், நலத்திட்டங்கள், அதீத உரிமைகள் எல்லாம் உடனே தடுத்து நிறுத்தப்படவேண்டும்.

வல்லாதிக்க மதங்களுக்குத் தரப்படும் சலுகை என்பது சமத்துவ மறுப்பு; சமத்துவ மீறல்; சமத்துவ ஒழிப்பு.

உண்மையான சமத்துவத்தை மலரச் செய்யும் சட்டத்தையும் இயற்றுங்கள் ஏகாத்ம மானவவாதிகளே

பொது சிவில் சட்டம் என்பது அந்த திசையை நோக்கிய முதல் காலடியாக இருக்கட்டும். ஒன் ஸ்டெப் அட் அ டைம் என்பது சரிதான். ஆனால், அடுத்த காலடி உடனே எடுத்து வைக்கப்படவும் வேண்டும். இல்லையென்றால் நொண்டியடிப்பதுபோல் ஆகிவிடும்.