இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி
கற்சிலையாக மாற்றப்பட்ட லோபமுத்ரா, தனது கணவரின் வருகைக்காகக் காத்திருக்கிறது. விந்திய மலை தலைவணங்கி, அதன் குருவான அகஸ்திய முனிவரின் வருகைக்காகக் காத்திருக்கிறது.
இருபெரும் திராவிடக் கழகங்களை தேர்தலில் வீழ்த்தி ஆட்சி அமைத்துள்ள த.வெ.க இந்த உணர்வைப் பின்பற்றி ஆட்சி செய்யவேண்டும், மத்திய மாநில உறவுகளைப் பேணவேண்டும்
சுவாமி விவேகானந்தர், மகரிஷி அரவிந்தர், நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் ஆகிய வங்கத்தில் பிறந்த தேசபக்த சிங்கங்களுக்குத் தோள் கொடுத்த தமிழகம், இன்றைய வங்காளத்தின் அரசியல் வழியில்
பரிசோதனை மட்டுமே செய்து கொண்டார் என்றால் 'ஆஞ்சியோகிராம் செய்து கொண்டேன்' என்றும் அடைப்பை நீக்கும் சிகிச்சை செய்து கொண்டார் என்றால் 'ஆஞ்சியோபிளாஸ்டி செய்து கொண்டேன்' என்றும்
இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி
கற்சிலையாக மாற்றப்பட்ட லோபமுத்ரா, தனது கணவரின் வருகைக்காகக் காத்திருக்கிறது. விந்திய மலை தலைவணங்கி, அதன் குருவான அகஸ்திய முனிவரின் வருகைக்காகக் காத்திருக்கிறது.
இருபெரும் திராவிடக் கழகங்களை தேர்தலில் வீழ்த்தி ஆட்சி அமைத்துள்ள த.வெ.க இந்த உணர்வைப் பின்பற்றி ஆட்சி செய்யவேண்டும், மத்திய மாநில உறவுகளைப் பேணவேண்டும்
சுவாமி விவேகானந்தர், மகரிஷி அரவிந்தர், நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் ஆகிய வங்கத்தில் பிறந்த தேசபக்த சிங்கங்களுக்குத் தோள் கொடுத்த தமிழகம், இன்றைய வங்காளத்தின் அரசியல் வழியில்
பரிசோதனை மட்டுமே செய்து கொண்டார் என்றால் 'ஆஞ்சியோகிராம் செய்து கொண்டேன்' என்றும் அடைப்பை நீக்கும் சிகிச்சை செய்து கொண்டார் என்றால் 'ஆஞ்சியோபிளாஸ்டி செய்து கொண்டேன்' என்றும்
தென்மாவட்டங்களில் பிரசித்தி பெற்ற சிவாலயங்களில் முக்கிய ஸ்தலமான திருநெல்வேலி அருள்மிகு நெல்லையப்பர்- காந்திமதியம்மன் திருக்கோயில் ஆனிப் பெருந்திருவிழாவின் சிகர நிகழ்வாக தேரோட்டம் இன்று கோலாகலமாக பக்தர்கள் தேர் வடம்பிடித்து இழுக்க விமர்சையாக நடைபெற்றது.
தமிழகத்தில் பழைமைவாய்ந்த திருநெல்வேலி நெல்லையப்பர் கோயிலில் ஆண்டுதோறும் ஆனிப் பெருந்திருவிழா கோலாகலமாக நடைபெறும். அதன்படி, இந்த ஆண்டுக்கான விழா கடந்த ஜூன் 24 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து திருவிழா நாள்களில் காலை மற்றும் மாலையில் பல்வேறு வாகனங்களில் சுவாமி-அம்மன் வீதியுலா நடை வீதியுலா நடைபெற்றது. நின்றசீர் நெடுமாறன் கலையரங்கில் பக்தி இன்னிசை, நாட்டியம், கலை நிகழ்ச்சிகள், பட்டிமன்றம், சொற்பொழிவு ஆகியன நடைபெற்றன.
எட்டாம் திருநாளான சனிக்கிழமை காலையில் சுவாமி நடராசப் பெருமான் வெள்ளை மற்றும் பச்சை சாத்தி எழுந்தருளி உள்பிரகாரத்தில் வீதியுலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார். மாலையில் சுவாமி கங்காளநாதர் தங்கச் சப்பரத்தில் எழுந்தருளி வீதியுலா வந்தார்.
இரவில் தேர்கடாட்சம் வீதியுலாவும், சுவாமி தங்ககைலாய பர்வத வாகனத்திலும், அம்மன் தங்கக்கிளி வாகனத்திலும் வீதியுலா நடைபெற்றது. விழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இதையொட்டி அதிகாலை 3 மணிக்கு மேல் 4 மணிக்குள் சுவாமி-அம்மன் தேருக்கு எழுந்தருளினர். காலை 8.15 மணிக்கு மேல் திருத்தேர் வடம் பிடித்து இழுக்கப்பட்டது. தமிழ்நாடு சட்டப் பேரவைத் தலைவர் மு.அப்பாவு, இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் பி.கே. சேகர் பாபு, ஆட்சியர் கா.ப.கார்த்திகேயன், மக்களவை உறுப்பினர்கள், சட்டப்பேரவை உறுப்பினர்கள் திருநெல்வேலி நயினார் நாகேந்திரன், பாளையங்கோட்டை மு.அப்துல் வஹாப், உள்ளிட்டோர் திருத்தேரை வடம் பிடித்து இழுத்து தொடங்கி வைத்தனர்.
தேரோட்டத்தையொட்டி திருநெல்வேலியின் 4 ரத வீதிகளும் விழாக்கோலம் பூண்டிருந்தது. ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.நெல்லை தூத்துக்குடி தென்காசி குமரி உட்பட தென்மாவட்ட பக்தர்கள் கேரளாவில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.பிரசித்தி பெற்ற ராஜபாளையம் மாயூரநாத சுவாமி கோயில், வாசுதேவநல்லூர் அர்த்தநாரீஸ்வரர் கோயில் தேரோட்டமும் இன்று கோலாகலமாக நடைபெற்றது
கடந்த வாரம் சமூக வலைதளங்களில் வைரலான ஒரு தகவல் இது. படத்துடன் பலராலும் பகிரப்பட்ட இந்த தகவலில் தமிழக அரசு மட்டும் ஏன் இப்படி ஸ்டிக்கர் ஒட்டும் அரசாக இருக்கிறது என்று கேள்வி கேட்டு பகிரப்பட்டது.
தெலங்கானா உள்ளிட்ட மாநிலங்களில் ரேஷன் கடைகளில் பயனாளர்கள் பெறும் பொருள்களுக்கு முறையான ரசீதுகள் வழங்கப்படுகின்றன. அதில், இலவச அரிசியில் மத்திய அரசின் பங்கு, மாநில அரசின் பங்கு, ஒவ்வொருவருக்கும் மத்திய அரசின் சார்பில் மானியம் எவ்வளவு வழங்கப்படுகிறது ஆகிய விவரங்கள் இடம்பெற்றுள்ளன.
ஆனால், தமிழகத்தில் ரேஷன் கடைகளில் எந்த ரசீதும் வழங்கப்படுவதில்லை. இலவச அரிசியில் மத்திய அரசின் பங்கை மறைத்துவிட்டு, தமிழக அரசு ஸ்டிக்கர் ஒட்டி, ஏதோ தாங்களே இலவச அரிசி வழங்குவதாக மக்களிடம் நல்ல பெயரை வாங்க முயற்சி செய்கிறது என்ற குற்றச்சாட்டை பலரும் முன்வைத்தனர்.
தமிழக அரசு செயல்படுத்தி வரும் பொது வினியோக திட்டத்தில், மத்திய அரசின் தேசிய உணவு பாதுகாப்பு திட்டம், பிரதமர் கரீப் கல்யாண் அன்ன யோஜனா (திட்டம்) உள்ளிட்டவை சேர்க்கப்பட்டுள்ளன. இதனால், ஒவ்வொருவருக்கும் கூடுதல் அரிசியும், கோதுமையும் வழங்கப்படுகிறது.
தமிழக அரசு திட்டத்தில் மானிய விலையில் சர்க்கரை, எண்ணெய், பருப்பு உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்படுகின்றன.
இந்நிலையில், அண்மையில் மத்திய அரசு செயல்படுத்தி வரும் திட்டங்களுக்கு ரசீதுகளில் தனியே குறிப்பிட வேண்டும் என்ற உத்தரவு போடப்பட்டது. இதன்படி, தெலங்கானா உள்ளிட்ட மாநிலங்களில் ரேஷன் கடைகளில் ரசீது வழங்கப்படுகிறது. அந்த ரசீதுகளில், மொத்தம் எவ்வளவு அரிசி வழங்கப்படுகிறது. அதில் மத்திய அரசின் பங்கு எவ்வளவு, இதற்கு மத்திய அரசு வழங்கும் மானியத் தொகை எவ்வளவு, மாநில அரசின் பங்கு மற்றும் மானியம் எவ்வளவு ஆகிய விவரங்கள் இடம்பெற்றுள்ளன. இதற்கு கட்டணம் எதுவும் செலுத்த தேவையில்லை, அதாவது இலவசம் என்பதை அந்த ரசீதுகளில் குறிப்பிட்டுள்ளனர்.
இவ்வாறு தெலங்கானா மாநிலத்தில் ரேஷன் கடை ஒன்றில் வழங்கப்பட்ட ரசீது ஒன்று இந்தத் தகவல்களைக் குறிப்பிட்டு, சமூகத் தளங்களில் வைரலானது. அந்த ரசீதில்,
பயனாளிகளுக்கு 24 கிலோ ரேசன் அரிசி மொத்தம் வழங்கப்படுகிறது. அதில் மத்திய அரசின் பங்கு 20 கிலோ, அதற்கு ஒரு கிலோவுக்கு மத்திய அரசுக்கு ஆகும் செலவு ரூ.36.7 , ஒவ்வொரு பயனாளிக்கும் மத்திய அரசு வழங்கும் மொத்த மானியத் தொகை ரூ.734 என்றும், மாநில அரசின் பங்கு 4 கிலோ, மாநில அரசுக்கு ஆகும் செலவு ரூ.39.18, மாநில அரசு வழங்கும் மானியம் ரூ.156.72 என்றும் தெளிவாக அடுத்தடுத்துக் குறிப்பிட்டு ரசீது வழங்கப்பட்டுள்ளது.
இதேபோல் தான், தமிழகத்திலும் ரசீது வழங்கப்பட்டிருக்க வேண்டும். மத்திய அரசின் உணவுப் பாதுகாப்புத் திட்டத்தில் சேர்ந்துள்ளதால் மத்திய அரசின் உத்தரவு அப்படித்தான் உள்ளது. ஆனால், தமிழகத்தில் உள்ள ரேஷன் கடைகளில் இப்படி எல்லாம் ரசீது கொடுக்கப் படுவதில்லை. எல்லாம் வெறும் துண்டுச்சீட்டுதான். பேனாவிலும் பென்சிலிலும் கிறுக்கிக் கொடுக்கப்படுவதுதான்! ரேஷன் கடை பணியாளர், ஒரு துண்டுச் சீட்டில் என்ன பொருள்கள் உள்ளதோ, அல்லது பயனாளர் என்ன கேட்கிறாரோ அதை பேனாவால் எழுதி, எடை போடுபவரிடம் கொடுக்க, அவரும் அதன்படி பொருட்களைக் கொடுத்தனுப்பி, அந்தத் துண்டுச்சீட்டை கிழித்துப் போட்டு விடுகிறார்.
பயனாளிகள் வாங்கிய பொருள்களைப் பட்டியலிட்டு, அவர்களுக்கு குறுஞ்செய்தி வரும். அதில் என்னென்ன பொருட்கள், எவ்வளவுக்கு வாங்கப்பட்டது போன்ற விவரங்கள் மட்டுமே இருக்கும். இது போல் மானிய விவரங்கள் எதுவும் இருக்காது. ஸ்மார்ட் போன் மூலம் TNEPDS ஆப்பினைத் திறந்து தகவல்களைப் பார்ப்பவர்கள் மேற்கண்ட விவரங்களைத் தான் தெரிந்து கொள்ள முடியுமே தவிர மானிய விவரங்கள் அதிலும் இடம் பெறாது.
ரேஷன் கடைகளில் எந்த ரசீதும் வழங்கப்படுவதில்லை என்பதால், பயனாளர்கள் தங்களுக்கு மத்திய அரசு எவ்வளவு அரிசி வழங்குகிறது, மானியம் எவ்வளவு கொடுக்கிறது என்பது தெரிவதில்லை. எல்லாவற்றிலும் ஸ்டிக்கர் ஒட்டும் மாநில அரசு, இதிலும் மறைமுகமாக மத்திய அரசின் பங்கை மறைத்து, தங்கள் பெயரை மக்களிடம் சேர்த்துக் கொள்கிறது என்ற குற்றச்சாட்டினை பொதுவெளியில் பலரும் முன்வைத்துள்ளனர். எனவே, நேர்மையான அரசாக இருந்தால், இதை எல்லாம் பொதுவெளியில் தெரியப்படுத்தி, நேர்மையான முறையில் ரசீதுகளை வழங்கி, நேர்மையான நிர்வாகத்தை அளித்திருக்கும் என்றும் கருத்துகள் பரவலாக உலாவருகின்றன.
உலகக் கோப்பை கிரிக்கெட் வரலாற்றில் கோப்பைகளை அடுத்தடுத்து வென்று, வெல்ல முடியாத அணியாக உலகை வலம் வந்த மேற்கு இந்திய தீவுகள் அணிக்கு இன்று ஒரு சோகமான நாள். முதல் முறையாக உலகக் கோப்பை போட்டிகளில் விளையாட முடியாத சூழ்நிலைக்கு இன்று அந்த அணி தள்ளப்பட்டுள்ளது கிரிக்கெட் ரசிகர்களிடம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்கான தகுதிச்சுற்று ஆட்டங்கள் ஜிம்பாப்வேயில் நடைபெற்று வருகின்றன. இந்தப் போட்டிகளில் கலந்து கொண்ட 10 அணிகளில் இருந்து ஜிம்பாப்வே, ஸ்காட்லாந்து, வெஸ்ட் இண்டீஸ், ஓமன், இலங்கை ஆகிய 6 அணிகள் சூப்பர் 6 சுற்றுக்கு முன்னேறின. இவற்றுக்கு இடையில் இரு குழுவாகப் பிரித்து, இரு குழுக்களில் இருந்தும் தலா இரண்டு அணிகள், இந்தியாவில் வரும் அக்டோபர், நவம்பர் மாதங்களில் நடைபெறும் ஒருநாள் உலகக்கோப்பைத் தொடருக்கு தேர்வாகும்.
இந்நிலையில், சூப்பர் 6 தொரின் இன்றைய ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீஸ்- ஸ்காட்லாந்து அணிகள் விளையாடின. இந்த ஆட்டத்திற்கான டாசை ஸ்காட்லாந்து வென்று பந்துவீச்சை தேர்வு செய்தது. இதை அடுத்து, வெஸ்ட் இண்டீஸ் முதலில் பேட்டிங் செய்தது. இதில் வெஸ்ட் இண்டீஸ் 43.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 181 மட்டுமே ரன் எடுத்தது.
பின்னர் 182 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஸ்காட்லாந்து ஆட்டத்தை தொடங்கியது. பிரண்டன் மெக்முல்லன் மேத்யூ க்ராஸ் உடன் ஜோடி சேர்ந்து இருவரும் அரைசதம் அடித்து அசத்தினர். ஆட்டத்தின் முடிவில் ஸ்காட்லாந்து அணி 43.3 ஓவர்களில் 3 விக்கெட்டை மட்டும் இழந்து 185 ரன்கள் எடுத்தது.
இதனால், ஸ்காட்லாந்து அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஏற்கெனவே ஜிம்பாப்வே, நெதர்லாந்து ஆகிய அணிகளுடனான போட்டிகளில் தோற்று, கடைசி இடம் பிடித்த வெஸ்ட் இண்டீஸ் அணி தகுதிப் போட்டியில் தோற்று வெளியேறியது.
முன்னாள் சாம்பியனான வெஸ்ட் இண்டீஸ் அணி கிரிக்கெட் வரலாற்றில் முதல்முறையாக, இந்தியாவில் நடைபெறும் உலகக் கோப்பை தொடரில் விளையாடும் வாய்ப்பை இழந்தது ரசிகர்களிடம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
இந்த மாநாட்டில் பேசிய பிரதமர் மோடி, இந்தியாவை தன்னம்பிக்கை கொண்டதாக மாற்றுவதில் கூட்டுறவு சங்கங்கள் முக்கிய பங்கு வகிக்கும் என்றார்.
இன்று நாம் உலகிலேயே அதிக பால் உற்பத்தியாளர் என்றால் அதற்கு பால் கூட்டுறவு சங்கங்களே காரணம். சர்க்கரை உற்பத்தி செய்யும் நாடுகளில் இந்தியாவும் ஒன்று என்றால் அதற்கு கூட்டுறவு நிறுவனங்களும் காரணமாக இருக்கலாம் என்றார்.
மேலும், கார்ப்பரேட் துறை போன்ற வசதிகளும், தளங்களும் கூட்டுறவுகளுக்கு வழங்கப்படுகின்றன. விவசாயிகளின் நலன் மற்றும் விவசாயத்திற்காக மத்திய அரசு ஆண்டுக்கு 6.5 லட்சம் கோடி ரூபாய் செலவழிக்கிறது. கடந்த 4 ஆண்டுகளில் விவசாயிகளுக்கு ரூ.2.5 லட்சம் கோடி வங்கிக்கணக்கில் செலுத்தப்பட்டு உள்ளது. பிரதம மந்திரி கிசான் திட்டத்தின்கீழ் கோடிக்கணக்கான விவசாயிகள் பலன் பெற்று வருகின்றனர்… என்று மத்திய அரசின் ஊக்கமளிப்பை கோடிட்டுக் காட்டினார்.
கோடிக்கணக்கான சிறு விவசாயிகள் இடைத்தரகர்கள் குறுக்கீடு இல்லாமல் பலன் பெறுகின்றனர் என்பதை சுட்டிக் காட்டிய பிரதமர் மோடி, நாடு முழுவதும் கூட்டுறவு சங்கங்களை ஊக்கப்படுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்தியாவை தன்னம்பிக்கை கொண்டதாக மாற்றுவதில் கூட்டுறவு சங்கங்கள் முக்கிய பங்கு வகிக்கும் என்று உறுதிபடக் கூறினார்.
2014ஆம் ஆண்டுக்கு முன், விவசாயிகள் தங்களுக்கு அரசாங்கத்திடம் இருந்து உதவி கிடைப்பது மிகக் குறைவு என்றும், சிறிதளவு கிடைத்தாலும் அது இடைத்தரகர்களின் கணக்கில் சேரும் என்றும் அடிக்கடி கூறி வந்தனர். நாட்டின் சிறு மற்றும் நடுத்தர விவசாயிகள் அரசின் திட்டங்களின் பலன்களை இழந்து தவித்தனர்.
கடந்த 2014ஆம் ஆண்டுக்கு முந்தைய 5 ஆண்டுகளில் விவசாயத்திற்காக ரூ.90 ஆயிரம் கோடி செலவிட்டார்கள். நாம் பிரதம மந்திரி கிசான் திட்டத்திற்காக மட்டுமே அதைவிட 3 மடங்கு அதிகமாக செலவு செய்துள்ளோம். 9 ஆண்டுகளில் சர்க்கரை ஆலைகளில் இருந்து ரூ.70 ஆயிரம் கோடி மதிப்புள்ள எத்தனால் வாங்கப்பட்டுள்ளது, என்று குறிப்பிட்ட பிரதமர் மோடி, சமையல் எண்ணெய்கள், பருப்பு வகைகள் இறக்குமதியை குறைக்க வேண்டும். அவற்றின் உற்பத்தி இங்கே பெருக வேண்டும் என்றார்.
அமிர்தக்கால – நேரத்தில், நாட்டின் கிராமங்கள் மற்றும் நாட்டின் விவசாயிகளின் திறனை அதிகரிக்கும் வகையில், நாட்டின் கூட்டுறவுத் துறையின் பங்கு மிகப்பெரியதாக இருக்கும். வளர்ச்சியடைந்த இந்தியா, தன்னிறைவு பெற்ற இந்தியா என்ற தீர்மானத்திற்கு அரசும், கூட்டுறவு அமைப்புகளும் இணைந்து இரட்டை பலம் தரும் என்றார்.
தில்லியில், இரண்டு நாட்கள் நடைபெறும் இந்தியக் கூட்டுறவு மாநாடு, சர்வதேச கூட்டுறவு தினக் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக நடைபெறுகிறது. இதில் தொடக்க கூட்டுறவு சங்கம் முதல் தேசிய அளவிலான கூட்டுறவு அமைப்பைச் சேர்ந்த 3600க்கும் மேற்பட்ட பங்குதாரர்கள், சர்வதேச கூட்டுறவு அமைப்புகளின் பிரதிநிதிகள், பல்வேறு அமைச்சகங்கள், பல்கலைக்கழகங்கள், கல்வி நிறுவனங்கள் ஆகியவற்றின் பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டார்கள். இந்த மாநாட்டில் கூட்டுறவு சங்கங்கள் எதிர்கொள்ளும் பிரச்னைகள், முன்னுள்ள சவால்கள் என பல்வேறு விஷயங்கள் தொடர்பாக ஆலோசனை நடத்தப்படுகிறது.
இன்றைய உலகம் முரட்டு சக்திகளின் போர் அரங்கம். அங்கு நல்ல தன்மையும் நற்குணங்களும் மட்டும் ஒருபோதும் வெற்றி கண்டு விட முடியாது.
அதனால்தான், கடந்த ஆயிரம் ஆண்டுகளாக எவ்வளவோ பக்தி, நற்பண்பு, பணிவு உடையவர்களாக இருந்தும் நம் முன்னோர்கள், நற்பண்பு என்பதை வாசனையையும் அறியாத ஆக்கிரமிப்பாளர்களால் நசுக்கப்பட்டு வந்துள்ளதை காண்கிறோம்.
அந்த ஆக்கிரமிப்பாளர்கள் பண்பில் குறைந்தவர்களாக இருந்தாலும், அரிய சாதனைகள் புரிய துடிக்கும் உணர்வு கொண்டவர்களாகவும் ஒன்றுபட்டு இயங்கும் தன்மை பெற்றவர்களாகவும் , ரஜோகுணம் உடையவர்களாகவும் இருந்ததால் எளிதில் நம்மை முறியடித்தார்கள்.
ஆனால், நம் முன்னோர்கள் வெற்றி காணும் நோக்கத்துடன் வீறுடன் செயல்பட்டபோது அரக்கர் சாம்ராஜ்யம் அழிக்கப்பட்டதைச் சரித்திரத்தில் காண்கிறோம்.
உண்மையில், ‘ வீரபோக்யா வசுந்தரா ‘ ( வீரர்களுக்கே இவ்வுலகம்) என்ற வாக்கியத்தில் இவ்வுலகில் வெற்றிகரமான வாழ்வுக்கான சூட்சுமம் பொதிந்திருக்கிறது.
அமைச்சர் செந்தில்பாலாஜி விவகாரத்தில் ஆளுநர் உத்தரவு நிறுத்தி வைத்ததற்கு எதிராக வழக்கு! வழக்கறிஞர் எம்.எல்.ரவி தாக்கல் செய்த மனு சென்னை உயர் நீதிமன்றத்தில் விரைவில் விசாரணை!
அதிமுக., ஆட்சி காலத்தில் போக்குவரத்து அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி 81 பேருக்கு போக்குவரத்து துறையில் வேலை வாங்கித் தருவதாக ரூ.1.62 கோடி வாங்கிய குற்றச்சாட்டின் அடிப்படையில் அவர் மீதான வழக்கு நிலுவையில் உள்ளது.
இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்துக்குச் சென்ற போது ஊழல் சட்டத்தின் கீழ் ஆரம்ப கட்டத்தில் இருந்து முழுமையாக விசாரிக்குமாறு உத்தரவிட்டிருந்தது. இதை அடுத்து, சட்ட விரோத பண பரிவர்த்தனை தொடர்பான வழக்கில் மத்திய அமலாக்கத்துறையினர் விசாரணை மேற்கொண்டு, அமைச்சர் செந்தில் பாலாஜியை கைது செய்தனர். அப்போது நெஞ்சு வலி காரணமாக செந்தில் பாலாஜி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, அவருக்கு அறுவை சிகிச்சையும் நடைபெற்றது. தற்போது சிகிச்சையில் இருக்கும் அவரது போலீஸ் காவலும் நீட்டிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் செந்தில் பாலாஜியிடம் இருந்த துறைகள் முதல்வர் ஸ்டாலினின் பரிந்துரையின் பேரில், அமைச்சர்கள் முத்துசாமி, தங்கம் தென்னரசு ஆகியோருக்கு பிரித்துக் கொடுக்கப்பட்டு, செந்தில் பாலாஜி துறை இல்லாத அமைச்சராக நீடித்து வருகிறார். ஆனால், அவர் துறை இல்லாத அமைச்சராக நீடிப்பதால் அமலாக்கத்துறையின் விசாரணைக்கு பாதிப்பு ஏற்படும் என்றும், அதனால் அவரை அமைச்சர் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்றும் முதலில் கடிதம் எழுதினார் ஆளுநர்.
ஆனால், அதை முதல்வர் ஏற்காத நிலையில், நீதிமன்ற விசாரணைகள் காரணமாக, ஆளுநர் ரவீந்திர நாராயண் ரவி நேற்று முன்தினம் அமைச்சரை பதவி நீக்குவதாகக்கூறி, அதிரடி உத்தரவு ஒன்றைப் பிறப்பித்தார். அப்போது செந்தில் பாலாஜியை நீக்குவதற்கான காரணத்தையும் குறிப்பிட்டு முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு 5 பக்க கடிதமும் அனுப்பி இருந்தார். அதில் அரசியல் சாசனத்தின் 154, 163, 164 ஆகிய பிரிவுகள் எனக்கு அளித்துள்ள அதிகாரத்தின் படி செந்தில் பாலாஜியை அமைச்சரவையில் இருந்து உடனடியாக டிஸ்மிஸ் செய்து உத்தரவிடுவதாக குறிப்பிட்டிருந்தார்.
இந்த நடவடிக்கைக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் கண்டனம் தெரிவித்து சட்ட ரீதியாக சந்திக்கப் போவதாகவும் தெரிவித்தார். அமைச்சரை தன்னிச்சையாக நீக்க ஆளுநருக்கு அதிகாரம் கிடையாது என்று சிலர் கருத்து தெரிவித்தார்கள்.
இந்நிலையில், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் தலைமை வழக்கறிஞர் கருத்தைக் கேட்டுவிட்டு முடிவெடுக்கலாமே என்று ஆளுநருக்கு தகவல் அளித்தார். அதன் அடிப்படையில், செந்தில் பாலாஜியை நீக்கிய உத்தரவை அன்றிரவே நிறுத்தி வைப்பதாக ஆளுநர் ரவீந்திர நாராயண் ரவி அறிவிப்பு வெளியிட்டார். அதில் தலைமை வழக்கறிஞரின் கருத்தைக் கேட்கும் வரை உத்தரவை நிறுத்தி வைப்பதாக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு ஆளுநர் ரவீந்திர நாராயண் ரவி கடிதம் அனுப்பி இருந்தார்.
இதற்கு பதில் அளித்து முதல்வர் மு.க.ஸ்டாலின், நேற்று 6 பக்க கடிதத்தை ஆளுநருக்கு அனுப்பி வைத்தார். அதில் எனது அமைச்சர்களை நீக்க ஆளுநருக்கு அதிகாரம் கிடையாது என்றும் முதல்வரின் ஆலோசனைப்படி தான் நீங்கள் செயல்பட முடியும் என்றும் தெரிவித்திருந்தார். மேலும், அரசியல் சாசனம் 164(1) பிரிவின்படி ஒரு அமைச்சரை நியமிக்கவோ, அல்லது நீக்கவோ முதல்வரின் ஆலோசனைப் படிதான் ஆளுநர் செயல்பட முடியும். அரசியல் சாசனம் 164(2)-ன்படி முதல்வரும், அமைச்சரவையும், தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டசபைக்கு பொறுப்புடையவர்களாக இருக்கிறார்கள். எனவே செந்தில் பாலாஜியையோ, எனது அமைச்சர்களையோ டிஸ்மிஸ் செய்ய உத்தரவிடுவதற்கு உங்களுக்கு எந்த அதிகாரமும் கிடையாது. எனவே நீங்கள் எனது ஆலோசனை இல்லாமல் செந்தில் பாலாஜியை டிஸ்மிஸ் செய்தது சட்டப்படி செல்லாது என்று குறிப்பிட்டிருந்தார்.
இந்நிலைய்ல், செந்தில் பாலாஜி விவகாரத்தில் உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியபடி ஆளுநர் ரவீந்திர நாராயண் ரவி அட்டர்னி ஜெனரல் வெங்கட்ரமணியிடம் கருத்து கேட்க முயற்சி மேற்கொண்டுள்ளார். ஆனால் அட்டர்னி ஜெனரல் தற்போது விடுமுறையில் கேரளா சென்றுள்ளதால் வருகிற திங்கட்கிழமைதான் தில்லி வருவார் என்று தெரிகிறது. இதனால், தான் எடுத்த நடவடிக்கை குறித்தும் அதற்கு முதல்வர் குறிப்பிட்டுள்ள சட்டப் பிரிவைகளை சுட்டிக் காட்டியும் அட்டர்னி ஜெனரலுக்கு ஆளுநர் ரவீந்திர நாராயண் ரவி விரிவான கடிதம் தயாரித்து அனுப்பியுள்ளார்.
இந்தக் கடிதத்தின் மீது வருகிற திங்கட்கிழமை அட்டர்னி ஜெனரல் கருத்து தெரிவிப்பார் என தெரிகிறது. அதன் பின்னரே, ஆளுநர் ரவீந்திர நாராயண் ரவி செந்தில் பாலாஜியை நீக்கிய உத்தரவு குறித்த முடிவு தெரியும்!
இன்று ஆனி மாதம் அனுஷம் நட்சத்திரம். காட்டுமன்னார்கோவிலில் சுவாமி நாதமுனிகள் அவதரித்த நாள் இன்று .
நடப்பாண்டு சுவாமியின் 1,200-வது அவதார உற்சவத்தைக் பக்தர்கள் கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள். சுவாமி நம்மாழ்வாரிடம் இருந்து பெற்ற நாலாயிர திவ்ய பிரபந்தத்தை தொகுத்து, இசையமைத்து அதனை நாடு முழுக்க பரப்பியவர் சுவாமி நாதமுனிகள். அதனைத்தான் இப்போது நாம் பின்பற்றிக் கொண்டிருக்கின்றனர்.
காட்டுமன்னார்கோவிலில் சதுர்வேதி மங்கலம் எனப்படும் குப்பங்குழியில், சுவாமி நாதமுனிகள் திருமாளிகையில் கடந்த 10 நாட்களாக சுவாமியின் அவதார உற்சவம் நடைபெற்று வருகிறது.
திருப்பல்லாண்டு தொடக்கமாக பிரபந்த சேவாகாலம், பல்வேறு வாகனங்களில் சுவாமி வீதியுலா, சம்பிரதாய காலட்சேபங்கள் என பல்வேறு நிகழ்ச்சிகள் அங்கு நடைபெற்று வருகின்றன.
ஸ்ரீமந்நாதமுனிகள் திருநட்சத்திரம். இன்று 01/07/2023 ஆனி அனுஷம். நம் ஸ்ரீ வைஷ்ணவ சம்பிரதாயத்தின் முதல் ஆச்சாரியர் இவரே. நாலாயிர திவ்வியப் பிரபந்தம் எனக் கொண்டாடப்படும் ஆழ்வார்களின் அருளிச் செயல் திவ்ய மங்கள பாசுரங்கள் அனைத்திற்கும் தாளம் மற்றும் பண் குறித்து வெகு துல்லியமாக குறிப்புக்களை ஏடுப்படுத்தினவர். இது அவருக்கு 1200 வது திருநட்சத்திரம்.
ஒரு சுவாரசியம் சொல்வர். அந்த காலகட்டத்தில் அரசவை ஆடல் பெண்டீர்கள் இருவருவரில் தங்களில் யார் சிறந்தவர் என கேள்வி உண்டாயிற்று. இதனை போட்டி வைத்து தீர்மானிக்க எண்ணிய அரசன் யாரை நடுவராக கொள்ளலாம் என்று பார்த்த போது இவரே நாட்டியத்திலும் பண் இசைத்து பாடுவதில் வல்லவர் என்பதை அறிந்து இவரையே போட்டிக்கு நடுவராக இருந்த இதனை தீர்த்து வைக்க கோர, இவரும் ஒப்புக்கொண்டு இந்த போட்டியை ஆரம்பிக்க சொல்ல இரண்டு பேரும் சம அளவில் சம பலத்துடன் மிக நேர்த்தியாக அபிநயம், காலப்பிரமானம், தாள லயம் மற்றும் லாவகத்துடன் ஆட யாரை தேர்ந்து எடுப்பது என குழப்பம் ஏற்படுகிறது. இதுவே மூன்று நாட்கள் நடக்கிறது. ஆதலால் இம்முறை கோவில் வைத்து ஆட ,அன்றே தீர்ப்பு சொல்வதாக சொல்கிறார். குறிப்பிட்ட தினத்தில் ஊரே திரண்டு நிற்கின்றனர், இவர் யாரை தேர்ந்தேடுக்க போகிறார், எப்படி தீர்ப்பு சொல்லப்போகிறார் என்று காண காத்து கிடக்கின்றனர்.
இவரும் அவர்கள் இருவரிடமும் ஓர் பூச்செண்டினை கையில் கொடுத்து, அதனை வைத்துக்கொண்டு ஆட சொல்ல, போட்டி முடிவில் அவர்கள் இருவர் கைகளில் வைத்து இருந்த பூச்செண்டினை பிரிக்க அதல் ஒருத்தி வைத்து இருந்த செண்டில் மாத்திரம் அடைப்பட்டுயிருந்த மலர் தேனீ செத்துவிட்டு இருந்தது. மற்றையவளின் செண்டில் உயிருடன் இருந்தால் அவளையே ஆகச் சிறந்தவள் என தேர்ந்தெடுப்பதாக சபைக்கு அறிவிக்கார். இவரின் நுண்ணறிவு மற்றும் இசை ஞானத்தை மெச்சி அரசன் தன் கீரீடம் போலும் பட்டில் செய்த கீரீடத்தை அணிவித்து பரிசு அளித்து கௌரவிக்கிறார்.
இவர் தேவகானத்தில் மிக சிறந்து விளங்கினார். இதனை உரிய முறையில் பயன்படுத்த எண்ணி தாம் பெற்ற வந்த ஆழ்வார் பாசுரங்கள் அனைத்திற்கும் இசைக்கு ஏற்ப அபிநயம் எனப்படும் அடவு பிடித்து ஆட தம் மருமக்கள் இருவருக்கும் பயிற்சி கொடுத்தார்.
ஆக தமிழகத்தில் இயல் இசை நாட்டிய கதைகள் என தமிழ் வளர்த்த முதல் முத்தமிழ் வித்தகர் இவரே. அப்படி அவர் ஏற்படுத்தினதே அரையர் சேவை என ஸ்ரீராமாநுஜரின் காலத்தில் ஸ்ரீ ரங்கத்தில் ஏற்படுத்தி வைத்து…. அது இன்று வரை தொடருகிறது. அரையர் ஸ்வாமி தலையில் அணிந்திருந்திருக்கும் பட்டு குல்லாய் வழக்கம் நாதமுனிகளுக்கு பரிசுப்பெற்றபோது அவருக்கு சிறப்பு செய்யப்பட்ட ஒன்றாகும். இன்று வரை தொடர்கிறது. அரையர் சேவை வெகு சிறப்பு வாய்ந்த ஒன்று. வைகுண்ட ஏகாதசியின் போது பகல் பத்து, இரா பத்து உற்சவ காலங்களில் இன்றளவும் பாசுரங்களுக்கு அபிநயக்க அரையர் சேவை நடத்திடப்படுகிறது. சேவிக்க கண் கோடி வேண்டும்.
காட்டுமன்னார் கோவிலில் உள்ள வீரநாராயணப்பெருமாள் பெயரில் தான் அருகில் ஓர் ஏரி இருக்கிறது. இப்படி சொன்னால் உடனே புரியும் வீராணம் ஏரி. சுமார் 12 கீலோமீட்டர் நீளத்தில் 4 கீலோமீட்டர் அகலத்தில் தமிழகத்தில் உள்ள மிக பிரமாண்டமான ஏரி இது. ஒரு காலத்தில் படகு பயணமாக இங்கு இருந்து புறப்பட்டு அதாவது திருச்சி யில் இருந்து கோயம்புத்தூர் வரை சென்றதாக ஓர் குறிப்பு உண்டு என்று சொன்னால் உங்களால் அதை நம்ப முடிகிறதா?
ஆனால் இது ஆவணமாக பதிவு செய்து வைத்தவர் பிரிட்டிஷ் அரசின் இப்பகுதி ஆற்காடு கலெக்டர் பிரான்ஸிஸ் ஐசஸ் என்பவர், 1906 ஆம் ஆண்டு இதனை பதிவு செய்து உள்ளார். அன்று இது ஆற்காடு நவாப் ஆளுகைக்கு கீழிருந்து இவர்கள் வசம் கைமாற்றப்பட்ட சமயம் அது.
ஸ்ரீ ராமாநுஜருக்கு ஸ்ரீ மந்நாதமுனிகள் மீது அளவற்ற பக்தி உண்டு. இது அவர் ஏற்படுத்தி வைத்த சிம்மாசனாதிகள் விஷயத்தில் தெள்ளத்தெளிவாக தெரியும். 93 வயது வரை வாழ்ந்த நாதமுனிகள் அவர் பரமபதித்ததும் கூட ஓர் அற்புதமான காவியமே.
அவர் பரமபதித்த அந்நாளில் காலை வேளையில் கோவிலுக்கு சென்றபோது இவர் அகத்திற்கு (வீட்டிற்கு) ஓர் பெண் சிறிய குரங்குடன் இரண்டு வில்லாளி வந்து விசாரத்து திரும்பியதாக இவர் வீடு வந்ததும் சொல்லப்பட, உடனே இதனை கண்டு உணர்ந்த நாதமுனிகள் அவர்களை தேடி பின் தொடருகிறார்.
வந்தவர்கள் சாட்ஷாத் சீதா ராம லக்ஷமணனே என சொல்லி அவர்களை தேடி அலைய, ஓர் இடத்தில் சீதை சூடின மாலையில் உதிர்ந்த பூ அடையாளம் காட்டுகிறது. இன்று வரை அந்த இடம் பூ விழுந்த நல்லூர் என்றே அழைக்கப்படுகிறது.
எதிர் பட்ட அனைவரிடமும் கேட்டுக்கொண்டே செல்ல ஒருவர் மாத்திரம் கண்டோம் என பதில் கொடுக்கிறார். அந்த இடமே இன்றும் கண்டமங்கலம் என்று அழைக்கப்படுகிறது.
அவர் காட்டின திசையில் சிறிது தூரத்தில் குரங்கின் பாதடிகள் மண்ணில் காணும் படி தெரிகிறது. அவ்விடமே குரங்கடி என்றும் நாளடைவில் குரங்குடி என்றானது.இவ்வடையாளங்களை வைத்து பின் தொடர்ந்து வந்த நாதமுனிகள் தூரத்தில் இவர்களை பார்த்து மூர்ச்சையாகி விழுந்து பரமபத்திததாக செய்தி உண்டு.
அங்கு உள்ள கிராம மக்கள் இந்த இடத்திற்கு சொர்க்க பள்ளம் என்றே பெயர் வைத்து உள்ளனர். இது இன்றும் காட்டுமன்னார்கோயிலிருந்து ஜெயங்கொண்டம் செல்லும் வழியில் சொர்க்க பள்ளம் என்ற இடத்தில் இவரது திருவரசு உள்ளது. இது கங்கை கொண்ட சோழபுரத்தில் இருந்து கிழக்கே ஒரு கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது.
“ I remember a headmistress in a primary school in England who was worried about a particular little girl. The girl was always fidgeting and couldn’t seem to sit still. The headmistress thought she might have attention deficit disorder, so she sent her to see a doctor.
The doctor examined the girl and said, ‘There’s nothing wrong with her. She’s just a dancer.’
The headmistress was puzzled. ‘A dancer?’ she asked. ‘But she’s never danced before.’
‘She doesn’t have to have danced before,’ the doctor said. ‘She’s just got the natural talent and the passion for it.’
The headmistress took the doctor’s advice and enrolled the girl in a dance class. The girl thrived in the class and went on to become a successful dance director.
This story is a reminder that we all have natural talents and passions that we should be encouraged to explore. When we find something that we’re good at and that we love doing, we’re more likely to be happy and fulfilled in life.”
This anecdote is a powerful reminder that we should not judge people based on their behavior. The girl in the story was fidgeting and couldn’t seem to sit still, but this did not mean that she had a disorder. It simply meant that she had a lot of energy and that she was passionate about dance.
The headmistress in the story was wise to listen to the doctor’s advice. She enrolled the girl in a dance class, and the girl thrived.
This story is a reminder that we should all be encouraged to explore our natural talents and passions. When we find something that we’re good at and that we love doing, we’re more likely to be happy and fulfilled in life.That is a powerful real life story from Sir Ken Robinson’s book- The Element: How Finding Your Passion Changes Everything is a powerful and inspiring exploration of the importance of finding our true calling in life.
Sir Ken Robinson was a British author, speaker, and international advisor on education in the arts to government, non-profits, education and arts bodies. He was director of the Arts in Schools Project (1985–1989) and Professor of Arts Education at the University of Warwick (1989–2001), and Professor Emeritus after leaving the university. In 2003, he was knighted for services to the arts. Robinson was born in Liverpool, England, on March 4, 1950.
Robinson was a passionate advocate for creativity and innovation in education. He argued that schools should be places where students are encouraged to explore their talents and interests, and that the arts play a vital role in developing creativity. His TED Talk “Do Schools Kill Creativity?” has been viewed over 60 million times and is one of the most popular TED Talks of all time. He died in 2020 at the age of 70.
Stories abound in his book just as his talks all over the world did. He was hilarious and self-deprecating as only the confident can be. Just to recount a few more of the stories- Robinson tells the story of a dyslexic genius who was told by his teachers that he would never amount to anything.In his inimitable style, however the genius went on to become a successful mathematician and computer scientist.
Robinson tells the story of a businessman who was told by his boss to be more like everyone else. However, he refused to conform and went on to become a successful entrepreneur. That is the great philosopher statesman Earl Nightingale also advocated. These are just a few of the many funny and inspiring anecdotes that Robinson tells in The Element.
Nani Palkhivala, the courtroom genius was an accidental lawyer. He lost out to a lady while vying for an English professor’s post in a government college, in then Bombay. And Nani never forget to entertain the good lady every year, for beating her to it. India too owes her a treat said Fali S Nariman. Nani took to his career, after emulating Greek orator Demosthenes who was said to have treated his stammer and speech impediment by talking with pebbles in his mouth and shouting above the roar of the ocean waves.Nani got over his stammer to be in his Element, in his profession, by loving it the way the passionate did or do.
It was the cricket writer Robin Marlar who said,” Mine is the only profession where I am paid to do what I love”. How many of us aspire and achieve it?
Sir Kenneth Robinson is in his element in The Element as only he could be. It is of an unputdownable must read genre!
(Writer is author of multiple books and practicing advocate in the Madras High Court)
தமிழக அரசு பேருந்தின் வண்ணம் இப்போது கருணாநிதிக்கு ராசியான மஞ்சள் கலருக்கு மாறுகிறதாம். இது குறித்து விட்ட பதிவில் வெளியான புகைப்படம் பேசுபொருள் ஆகிவிட்டது.
புதிய தொழில்நுட்பத்தில் புனரமைக்கப்பட்ட அரசுப்பேருந்தின் வெளித்தோற்றம். Refurbished Buses with latest technical features. அனைத்து புனரமைக்கப்பட்ட பேருந்துகளுக்கும் இந்த வண்ண அமைப்பு இறுதிசெய்யப்பட்டுள்ளது. This livery has been finalised for all refurbished buses.@tnstcbuspic.twitter.com/O4ivzynuEH
புதிய தொழில்நுட்பத்தில் புனரமைக்கப்பட்ட அரசுப்பேருந்தின் வெளித்தோற்றம். அனைத்து புனரமைக்கப்பட்ட பேருந்துகளுக்கும் இந்த வண்ண அமைப்பு இறுதி செய்யப்பட்டுள்ளது… என்று இதில் குறிக்கப்பட்டுள்ளது.
தற்போது அரசு பேருந்துகள் இரு வேறு வண்ணங்களில் உலா வருகின்றன. நீலம் மற்றும் பச்சை வண்ணங்களின் வடிவங்களில் உள்ள பேருந்துகள் வெளியூர்களுக்கும் நகரப் பேருந்துகள் டவுன் பஸ் களுக்கு ஒரு வண்ணமும் கொடுக்கப்பட்டுள்ளன இது தவிர ரெட்பஸ் என்ற வகையில் உள்ளூர் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. அவற்றுடன் இப்போது மஞ்சள் வண்ணத்தில் பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.
எனினும் பள்ளி, கல்லூரி வாகனங்கள் தனித்து தெரிய மஞ்சள் வண்ணம் ஏற்கெனவே பூசப்பட்டது. இப்போ, அரசுப் பேருந்துக்கும் அதே வண்ணம் பூசினால், மாணவர்களுக்கு மீண்டும் குழப்பம் தான் மிஞ்சும்…. என்று சிலர் கருத்திட்டுள்ளனர். மஞ்சள் வண்ணம் பள்ளி கல்லூரி வாகனங்களுக்கு தனித்து தெரிவதற்காக பயன்படுத்தப்படும் சூழ்நிலையில் அரசு பேருந்துகளுக்கும் மஞ்சள் வண்ணம் என்பது சற்று குழப்பத்தை ஏற்படுத்தக் கூடும் என்பது உண்மைதான்.
பேருந்துகளுக்கு வண்ணம் பூசி பயன் இல்லை, தரம் என்பது உள்ளே உள்ள பொருட்களின் செயல்பாட்டைப் பொறுத்து உள்ளது. முதலில் மழையில் ஒழுகாத, உடைந்து தொங்கும் படிகள், கிழிந்து தொங்கும் இருக்கைகள் இல்லாமல் பஸ்களை ஓட்ட செயல்படுத்துங்கள்…. என்ற காட்டமான விமர்சனங்களும் இதற்கு எழுந்துள்ளன.