Home Blog Page 5597

“நாம் தான் நில ஆக்ரமிப்பாளர்கள்!”–பெரியவா

10406745 859208287442471 99817598003990377 n - 2026

“நாம் தான் நில ஆக்ரமிப்பாளர்கள்!”–பெரியவா
(வராஹத்தையும் தெய்வமாகப் பார்த்த பெரியவா)

(பன்றிகள் வசித்துக் கொண்டிருந்த இடத்தில் முகாமுக்கு
கொட்டகை போட்டுக் கொடுத்த கிராம மக்கள்)

கட்டுரையாளர்-ஸ்ரீமடம் பாலு
புத்தகம்-காஞ்சி மகான் தரிசனம் (180)
தட்டச்சு-வரகூரான் நாராயணன்

ஆந்திர மாநிலத்தில் யாத்திரை.
ஒரு குக்கிராமத்தில் முகாம்.

பின் தங்கிய மக்களே வசித்து வந்த ஒரேயொரு தெரு.
எனவே, சற்றுத் தள்ளினாற்போல், கிராம மக்கள்,
ஒரு கீற்றுக் கொட்டகை போட்டுத் தந்திருந்தார்கள்.

கொட்டகை முழுவதும் பசுஞ்சாணி தெளித்து சுத்தம்
செய்திருந்தார்கள். ஒரு மூலையில் மகாப்பெரியவாளுக்குத்
தனி இடம். கொட்டகைக்கு வெளியே நின்று கிராமத்தாருடன்
சம்பாஷித்து விட்டு, சிப்பந்திகள் எல்லாரும் உள்ளே நுழைந்த
போது, ஒரு தாய்ப்பன்றி, ஏழெட்டுக் குட்டிகளுடன் உள்ளே
நுழைந்து விட்டது. வெகு சுவாதீனமாக!

சிப்பந்திகள் கற்களை வீசி எறிந்தார்கள்…..
…சூ…சூ…போ..போ.. என்று.. (பீஜாக்ஷர மந்திரங்கள் போல்
ஒற்றைச் சொற்களை இரைந்து சொன்னார்கள்)

ஊஹூம். பெரியதாக இருந்த தாய்ப்பன்றி அசையவேயில்லை;
பயப்படவேயில்லை..என்றால் குட்டிகளோ ஆனந்தமாக
அட்டகாசம் செய்துகொண்டு தாயின் மேல் விழுந்து புரண்டன.

பெரியவாள் சிப்பந்திகளை அழைத்தார்கள்.

“அவற்றை விரட்ட வேண்டாம். இந்த இடம் முன்னர் ஆடு,
பன்றிகள் வசித்துக் கொண்டிருந்த இடம்.அவற்றை விரட்டி
விட்டு, நமக்குக் கொட்டகை போட்டுக் கொடுத்திருக்கிறார்கள்.
நாம் தான் நில ஆக்ரமிப்பாளர்கள்! பகவான் ‘வராஹ அவதாரம்’
செய்து பூமியை ரட்சித்திருக்கிறார். அம்பாளின் அம்சமாக
வாராஹி தோன்றியிருக்கிறாள். தெய்வங்களைப் பூஜை
செய்கிற நாமே, அவற்றை விரட்டியடித்தால் எப்படி?
அதுகள், தானாகப் போகிற போது போகட்டும். பகவானைப்
பிரார்த்தனை பண்ணிக் கொண்டு இந்தப் பக்கமாக
உட்கார்ந்திருப்போம்.

கொஞ்ச நேரம் கழித்து, அந்த நாற்கால் பிராணிகள்
நாலுகால் பாய்ச்சலில் வெளியேறிவிட்டன.

மறுபடியும் அந்த இடத்தில் தண்ணீர் தெளித்து, சுத்தம் செய்து
சிப்பந்திகள் அலுவல்களைத் தொடங்கினார்கள்.

பெரியவாள் கண்களை மூடிக் கொண்டு ஜபம் செய்து
கொண்டிருந்தார்கள். வராக ஸ்தோத்திரமாக இருக்குமோ?
வாராஹி மந்திரமாக இருக்குமோ?

சந்திரமௌலீஸ்வரருக்குத்தான் தெரியும்!

நெல்லை- தருவை வாழவல்லப பாண்டீஸ்வரர் திருக்கோயில்

tharuvai temple - 2026

அண்மையில் மேற்கொண்ட நெல்லை பயணத்தில் உருப்படியாக சில தலங்களை தரிசிக்க முடிந்தது. நவதிருப்பதி கோயில்கள், திருச்செந்தூர் முருகன்… கூடவே இரண்டு சிவன் கோயில்கள். ஒன்று தருவை வாழவல்லப பாண்டீஸ்வரர் கோவில்! (முன்னாள் தலைமைத் தேர்தல் ஆணையர் டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி சாரின் ஊர்க் கோவில். அவர் சொல்லிக்கேட்ட அழகில் மயங்கி, சென்று பார்த்தது.) இந்தக் கோவிலைத் தேடிப் போய், ஓமாநல்லூர் என்றொரு ஊரில் ஒரு சிவன் கோவில் கண்ணில் பட்டது. அதையும் பார்த்து வந்தேன். இந்த தருவை கோவிலில் முருகப் பெருமானைப் பார்த்த மாத்திரத்தில் மனத்தில் பெருமான் அமர்ந்து கொண்டார். ஒரே கல்லில் ஆன விக்ரஹம். மயில், மீதமர்ந்த நிலையில் முருகன், கையில் வேலும் கொடியும் என திருவாசியுடன் அமைந்த ஒரே கல்லிலான உருவம். … தலத்தின் கட்டுரை இங்கே…

தமிரபரணி ஆற்றின் கரையில் அமைந்துள்ள கிராமம் தருவை. பாளையங்கோட்டையில் இருந்து சுமார் 10 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. மிகப் பழைமையான வரலாற்றைக் கொண்ட தலமாகத் திகழ்கிறது தருவை.

தருவை கோயிலில் உள்ள கல்வெட்டுகளில் கிரந்த லிபி மற்றும் தமிழ் வட்டெழுத்துகளில் கோயிலைப் பற்றிய குறிப்புகள் காணப்படுகின்றன. இந்தக் கோயில் 13ம் நூற்றாண்டைச் சேர்ந்த பாண்டிய மன்னர்களால் கட்டப்பட்டுள்ளது. சுமார் 350 ஏக்கர் பரப்பில் பரந்து விரிந்த இந்த தருவை கிராமத்தில் கலையழகும் தெய்வீக அழகும் நிரம்பும்படி கோயில் எழுப்பப்பட்டுள்ளது. குறிப்பாக சுந்தர பாண்டியன் (1216-1239) காலத்தில் இங்கே கிராமக் கோயில்கள் பல எழுப்பப்பட்டுள்ளன. அவற்றில் ஒன்றான இந்தக் கோயிலில் வாழவல்லப பாண்டீஸ்வரர் என்ற திருப்பெயருடன் பிரதான சுயம்பு லிங்க மூர்த்தியை எழுந்தருளச் செய்துள்ளனர். மேலும் இந்தக் கோயிலில் உள்ள கல்வெட்டுகளின்படி, இந்த ஊருக்கு முற்காலத்தில் கூபக ராய நல்லூர் என்ற பெயர் விளங்கியிருக்கிறது. இந்த கிராமம் பாண்டிய மன்னனால் அவன் தளபதி கூபகராயனுக்கு தானமாக வழங்கப்பட்டதாகவும், நெல்லை மாவட்டத்தில் கங்கைகொண்டான் கிராமத்தில் உள்ள கோயிலுக்கு அவனது இந்தக் கோயிலில் இருந்து அரிசியும் பாலும் வழங்கப்பட்டதாகவும் கல்வெட்டு குறிப்பிடுகிறது.

தருவை கிராமத்தில் மேலும் வரதராஜ பெருமாள் ஆலயமும், உய்யக்கொண்ட அம்மன் கோயிலும் உள்ளன. தற்போது கோயிலில் சுற்றுச் சுவர் எழுப்பப்பட்டு வருகிறது. மேலும், ஆலய முகப்பில் தோரண வாயிலும் கட்டப்படவுள்ளது.

பரிகாரம்: இங்குள்ள முருகப் பெருமானுக்கு கல்யாண முருகன் என்பது திருப்பெயர். கல்யாண வரமருளும் கார்த்திகேயனாக இங்கே வரமருளும் இந்தப் பெருமானிடம் வேண்டிக் கொண்ட நூற்றுக்கும் அதிகமானோருக்கு உடனேயே திருமண யோகம் கூடியுள்ளது. இந்த சந்நிதியில் குறுகிய காலத்தில் அறுநூறுக்கும் அதிகமான கல்யாணம் நடந்தேறியுள்ளதாம். திருமணம் ஆகாதவர்களுக்கு உடனே அந்த பாக்கியம் கிடைக்கிறது என்கிறார்கள். முருகப் பெருமானுக்கு சண்முகார்ச்சனை, அபிஷேகம் செய்து வழிபடுகிறார்கள். மனமுருக வேண்டிக் கொண்டவர்களுக்கு விவாஹம் உடனே கை கூடும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

தமிரபரணி ஆற்றின் கரையில் அமைந்துள்ள கிராமம் தருவை. பாளையங்கோட்டையில் இருந்து சுமார் 10 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. மிகப் பழைமையான வரலாற்றைக் கொண்ட தலமாகத் திகழ்கிறது தருவை.

தருவை கோயிலில் உள்ள கல்வெட்டுகளில் கிரந்த லிபி மற்றும் தமிழ் வட்டெழுத்துகளில் கோயிலைப் பற்றிய குறிப்புகள் காணப்படுகின்றன. இந்தக் கோயில் 13ம் நூற்றாண்டைச் சேர்ந்த பாண்டிய மன்னர்களால் கட்டப்பட்டுள்ளது. சுமார் 350 ஏக்கர் பரப்பில் பரந்து விரிந்த இந்த தருவை கிராமத்தில் கலையழகும் தெய்வீக அழகும் நிரம்பும்படி கோயில் எழுப்பப்பட்டுள்ளது. குறிப்பாக சுந்தர பாண்டியன் (1216-1239) காலத்தில் இங்கே கிராமக் கோயில்கள் பல எழுப்பப்பட்டுள்ளன. அவற்றில் ஒன்றான இந்தக் கோயிலில் வாழவல்லப பாண்டீஸ்வரர் என்ற திருப்பெயருடன் பிரதான சுயம்பு லிங்க மூர்த்தியை எழுந்தருளச் செய்துள்ளனர். மேலும் இந்தக் கோயிலில் உள்ள கல்வெட்டுகளின்படி, இந்த ஊருக்கு முற்காலத்தில் கூபக ராய நல்லூர் என்ற பெயர் விளங்கியிருக்கிறது. இந்த கிராமம் பாண்டிய மன்னனால் அவன் தளபதி கூபகராயனுக்கு தானமாக வழங்கப்பட்டதாகவும், நெல்லை மாவட்டத்தில் கங்கைகொண்டான் கிராமத்தில் உள்ள கோயிலுக்கு அவனது இந்தக் கோயிலில் இருந்து அரிசியும் பாலும் வழங்கப்பட்டதாகவும் கல்வெட்டு குறிப்பிடுகிறது.

தருவை கிராமத்தில் மேலும் வரதராஜ பெருமாள் ஆலயமும், உய்யக்கொண்ட அம்மன் கோயிலும் உள்ளன. தற்போது கோயிலில் சுற்றுச் சுவர் எழுப்பப்பட்டு வருகிறது. மேலும், ஆலய முகப்பில் தோரண வாயிலும் கட்டப்படவுள்ளது.

பரிகாரம்: இங்குள்ள முருகப் பெருமானுக்கு கல்யாண முருகன் என்பது திருப்பெயர். கல்யாண வரமருளும் கார்த்திகேயனாக இங்கே வரமருளும் இந்தப் பெருமானிடம் வேண்டிக் கொண்ட நூற்றுக்கும் அதிகமானோருக்கு உடனேயே திருமண யோகம் கூடியுள்ளது. இந்த சந்நிதியில் குறுகிய காலத்தில் அறுநூறுக்கும் அதிகமான கல்யாணம் நடந்தேறியுள்ளதாம். திருமணம் ஆகாதவர்களுக்கு உடனே அந்த பாக்கியம் கிடைக்கிறது என்கிறார்கள். முருகப் பெருமானுக்கு சண்முகார்ச்சனை, அபிஷேகம் செய்து வழிபடுகிறார்கள். மனமுருக வேண்டிக் கொண்டவர்களுக்கு விவாஹம் உடனே கை கூடும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

இங்குள்ள கல்வெட்டுகள் சிலவற்றில் 4 வேதங்களும் எழுதப்பட்டுள்ளதாகக் கூறுகின்றனர். அவை மண்டபத்தின் பக்கவாட்டில் சுவரில் பதிக்கப்பட்டுள்ளன. தலத்தின் தீர்த்தம் அக்னி தீர்த்தம். இங்குள்ள மூலவர், மிகப் பெரிய லிங்க உருவில் காட்சி தருகிறார். உற்று கவனித்தால் சஹஸ்ர லிங்கம் சேர்ந்து செய்யப்பெற்ற லிங்கம் என்பது தெரியும். சதுர ஆவுடையில் பெரிய உருவில் திகழும் லிங்கப் பெருமான். இந்த அமைப்பில், இங்கே முதலில் லிங்கப் பெருமானை நிறுவி, பின்னர் சந்நிதி எழுப்பப் பட்டிருக்கலாம் என்கின்றனர்.

இங்கே சிவபெருமானுக்கு அன்னாபிஷேகம் வெகு பிரசித்தம். வயிற்றில் பிரச்னை, குடல் தொடர்பான நோய்கள் உள்ளிட்டவற்றுக்கு பெருமானுக்கு அன்னாபிஷேகம் செய்வதாக வேண்டிக் கொண்டு, அதன் பின்னர் அன்ன பிரசாதத்தை எடுத்து சாப்பிடுகின்றனர். அதன் மூலம் கோளாறுகள் சரியாவதை உணர்கின்றனர். இங்குள்ள அன்னை அகிலாண்டேஸ்வரி, திருவானைக்காவலைப் போல் திருநாமம் கொண்டு சிறப்பாக தனி சந்நிதியில் அருள் புரிகிறார்.

சந்நிதிகள்: வாழவல்லப பாண்டீஸ்வரர், அகிலாண்டேஸ்வரி அம்பாள், கன்னி விநாயகர், சுப்பிரமணியர், அனுமன், குபேர மகாலட்சுமி, பைரவர், நவக்கிரஹம், ஐயப்பன், தட்சிணாமூர்த்தி, சண்டிகேஸ்வரர் ஆகியோருக்கு தனி சந்நிதிகள் உள்ளன.

தனிச்சிறப்பு: நெல்லை மாவட்டத்தில் 5 தலங்களில் சிறப்பான நடராஜர் உருவங்கள் உள்ளன. செப்பறை நடராஜர், கரிசூழ்ந்தமங்கலம் கோயில் போல், தருவையில் உள்ள இந்தக் கோயிலும் நடராஜர் திருவுருவுக்கு தனிச்சிறப்பு பெற்ற கோயில். இங்குள்ள முருகப் பெருமான் மூலவர் விக்ரஹம், திருவாசியுடன் ஒரே கல்லில் ஆன சிற்பத்தில் செதுக்கப்பட்டுள்ளது.

இருப்பிடம்: நெல்லை மாவட்டம், பாளையங்கோட்டையில் இருந்து சுமார் 10 கி.மீ., தொலைவு. மேலப்பாளையத்தை அடுத்து உள்ளது தருவை கிராமம்.

திருவிழாக்கள்: ஆடிப் பூர பெருந் திருவிழா, சங்கடஹர சதுர்த்தி, கந்த சஷ்டி, சூரசம்ஹாரம், தேய்பிறை அஷ்டமிகளில் காலபைரவருக்கு சிறப்பு பூஜை, பெüர்ணமிகளில் திருவிளக்கு பூஜை, நடராஜர் தரிசனம் ஆருத்ரா தரிசனம் உள்ளிட்டவை முக்கியத் திருவிழாக்கள்.

தகவலுக்கு: 94862 52278

 

குடங்கை அழகெனும் கூகையூர் ஸ்ரீ ஸ்வர்ணபுரீஸ்வரர் திருக்கோயில்

kukaiyur - 2026

சேலம்-விழுப்புரம் மாவட்ட எல்லையில், வசிஷ்ட நதியின் வடகரையில் அமைந்திருக்கிறது கூகையூர் சொர்ணபுரீஸ்வரர் கோவில். இந்தக் கோவில் ஆகாய தலமாக போற்றப்படுகிறது. நாயன்மார்களில் ஒருவரான திருநாவுக்கரசரால் பாடல் பெற்ற இந்தத் திருத்தலத்தை இன்னொரு ‘சிதம்பரம்’ என்கிறார்கள்.

கூகை என்னும் குறுநில மன்னன் ஆண்டதால், இந்தப் பகுதி ‘கூகையூர்’ என்றழைக்கப்பட்டதாக கூறப்படுகிறது. திருநாவுக்கரசர் தனது ஷேத்திர கோவையில் ‘கூழையூர்’ என்று பாடி வழிபட்டதால் ‘கூழையூர்’ என்றும், திருமூலர் இப்பகுதியில் உள்ள குகையில் தங்கி யோகத்தில் ஆழ்ந்ததால் ‘குகையூர்’ என்றும், வியாழ பகவான் வழிபட்டதால் ‘சொர்ணபுரி’ என்றும் இவ்வூர் அழைக்கப்பட்டது.

கி.பி. 7-ம் நூற்றாண்டில் செங்கற்களால் கட்டப்பட்ட சொர்ணபுரீஸ்வரர் கோவிலை, மூன்றாம் குலோத்துங்க சோழன் உத்தரவின் படி கி.பி.1184-ம் ஆண்டு குறுநில மன்னன் பொன்பரப்பின ராஜராஜ கோவலராயன் கற்கோவிலாக மாற்றிக் கட்டினான். இந்த தலத்தில், உயிர்கள் அனைத்தும் உய்யும் பொருட்டு போக வடிவம், யோக வடிவம், வேக வடிவம் ஆகிய மூன்று நிலைகளையும் ஒரே திருமேனியில் தாங்கியபடி, ஆகாயலிங்கமாக இறைவன் எழுந்தருளியுள்ளார்.

சிவபெருமானை மதிக்காமல் யாகம் நடத்தினான் தட்சன். அவன் நடத்திய யாகத்தில் தேவர்கள், சப்த ரிஷிகள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். இதனால் இறைவனின் கோபத்திற்கு ஆளான ரிஷிகள் அனைவரும், தங்கள் ரிஷி பதவியை இழந்து, வேதங்களை மறந்து நைமிசாரண்யத்தில் இருந்து வெளியேற்றப்பட்டனர்.

பிறகு சுக பிரம்ம மகரிஷியின் ஆலோசனைப்படி, வசிஷ்டர் முதலான சப்த ரிஷிகள், வசிஷ்ட நதிக்கரையோரம் 5 இடங் களில் சிவ லிங்கங்களை பிரதிஷ்டை செய்து வழிபட்டனர். அந்த 5 தலங்களே வசிஷ்ட நதிக்கரையோர பஞ்சபூத தலங்கள் என்று போற்றப்படுகிறது. இவற்றுள் ஆகாய தலமாக விளங்குகிறது கூகையூர் சொர்ணபுரீஸ்வரர் திருக்கோவில்.

வியாழ பகவானுக்கு தரிசனம் :

ஒரு முறை இந்திரன், தேவலோகத்தில் தனது சிம்மாசனத்தில் தேவர்கள் சூழ அமர்ந்திருந்தான். அப்போது தேவர் களின் குருவான வியாழ பகவான் அங்கு வந்தார். மாயையால் செல்வச் செருக்கும், அதிகார ஆணவமும் இந்திரனின் கண்களை மறைத்த காரணத்தால், தன்னுடைய குருவுக்கு அவன் எழுந்து நின்று மதிப்பளிக்க தவறினான். இதனால் கோபம் கொண்ட வியாழ பகவான் அங்கிருந்து வெளியேறினார். தேவகுரு இல்லாததாலும், அவரது சாபத்தாலும் இந்திரசபை பொலிவிழந்தது.

தனது தவறை உணர்ந்த இந்திரன் வியாழ பகவானை பல இடங்களிலும் தேடினான். ஆனால் அவரோ தன்னை யார் கண்ணுக்கும் தெரியாத அரூபியாக மாற்றிக்கொண்டு, தனது கவுரவத்தை இழந்த வருத்தத்தில் வனாந்தரத்தில் வாசம் செய்தார். அப்போது கூகையூரில் நெல்லி வனத்தில் எழுந்தருளி இருந்த இறைவனை, மலர் தூவி, வேதங்கள் ஓதி தம் குறை தீர்க்க வேண்டினார். அவருக்கு சிவபெருமான் தரிசனம் தந்தருளினார்.

அப்போது சாபம் பெற்ற இந்திரனும் தமது தவறை உணர்ந்து, இங்கு வந்து வியாழ பகவானை வணங்கினான். அதன்பிறகு மீண்டும் தேவகுருவாக வியாழ பகவான் புகழுடன் வீற்றிருந்தார். வியாழ பகவானுக்கு அருளாசி புரிந்ததால் பொன்பரப்பின ஈஸ்வரன் (சொர்ணபுரீஸ்வரர்) எனும் திருநாமம் இங்குள்ள இறைவனுக்கு ஏற்பட்டதாக கூறுகிறார்கள். இந்த திருத்தலத்தில் உள்ள சொர்ண புரீஸ்வரரை வழிபடுபவர்களுக்கு கல்வியும், தொழிலும் சிறப்பாக அமையும் என்பது ஐதீகம். இத்தல இறைவனை வழிபட்டால் நவக்கிரக தோஷங்கள் நீங்கும் என்று கூறப்படுகிறது.

ஆலய அமைப்பு :

கூகையூரின் வடகிழக்கு பகுதியில் பரந்த நிலப்பரப்பில் மேற்கு நோக்கி அமைந்துள்ளது சொர்ணபுரீஸ்வரர் கோவில். மூலவர் சொர்ணபுரீஸ்வரர். அம்பாள் திருநாமம் பெரியநாயகி. தலவிருட்சம் நெல்லிமரம், தீர்த்தம் வசிஷ்டநதி. இந்தக் கோவிலின் பிரதான வாசல் மேற்கு முகமாக ஐந்து நிலை ராஜகோபுரத்துடன் கூடியது. இதையடுத்து வலப்பக்கம் 12 தூண்களுடன் கூடிய பெரிய வசந்த மண்டபம் உள்ளது.

தொடர்ந்து பலிபீடம் மற்றும் பெரிய அதிகார நந்தி, பந்தல் மண்டபத்தைக் கடந்தால் கருவறையை அடையலாம். கருவறையில் கிழக்கு நோக்கியபடி சொர்ணபுரீஸ்வரர் கம்பீரமாக வீற்றிருக்கிறார். மூலவரின் கருவறை பிரகாரத்தில் தென்புறம் நர்த்தன கணபதி, சூரியன், சந்திரர்கள் மற்றும் நாயன்மார்கள், தெற்கு நோக்கிய தட்சிணாமூர்த்தி, மேற்கில் அண்ணாமலையார், வடக்கில் பிரம்மா, விஷ்ணு, சொர்ண துர்க்கை விக்கிரகங்கள் உள்ளன. பிரகார வலத்தில் கற்பக விநாயகர், அழகிய வேலைப்பாடு கொண்ட சுப்ரமணியர், சொக்க நாதர், சண்டிகேசுவரர் ஆகியோரை தரிசிக்கலாம்.

ஆரம்ப கால கட்டத்தில் இருந்த அம்மன் சன்னிதி முதல் பிரகாரத்தின் திருச்சுற்றில் வடமேற்கு மூலையில் அமைந் திருந்தது. தற்போது இந்த இடத்தில் ஆதி அம்மன் எழில்மிகு தோற்றத்துடன் அருள்பாலிக்கிறாள். அதன்பிறகு குலோத்துங்க சோழன் காலத்தில் அம்மனுக்கு தனி சன்னிதி அமைக்கப்பட்டது. அதில் உள்ள அம்மன் பெரியநாயகி என்ற பெயருடன் வீற்றிருக்கிறாள். மேலும் ஆலயத்தில் பைரவர் சன்னிதி, நவக்கிரகங்களும் இருக்கின்றன.

கோவிலின் மேற்கு திருச்சுற்று மண்டபத்தில் விநாயகர், ஒரே கல்லில் வடிவமைக்கப்பட்ட வள்ளி- தெய்வானை சமேத முருகப்பெருமான், ஸ்ரீதேவி- பூதேவி சமேத திருமால், ஆதி மகாவிஷ்ணு, ஜேஷ்டாதேவி ஆகியோர் அருள்பாலிக்கிறார்கள். தென்புறம் பிரதோஷ நாயகர், நடராஜர் மூர்த்தங்கள் உள்ளன.

தீவினை அகற்றும் காலபைரவர் :

இந்த கோவிலில் காலபைரவர் சேத்திரபாலகராகவும், சொர்ணஆகர்ஷண பைரவராகவும் வேண்டுவன எல்லாம் அருளுகிறார். அவரை வழிபட பகை, பயம், வறுமை நீங்கி இழந்தவற்றை மீண்டும் பெற்று வளமுடன் வாழ்வார்கள். அஷ்டமியில் நெய்விளக்குடன் முந்திரி மாலை அணிவித்து, அபிஷேகம் செய்து அன்னதானம் செய்தால் குழந்தை பேறு கிடைக்கும். தீவினைகள் அகலும். நல் வினைகள் சேரும்.

108 சிவலிங்க வழிபாடு :

சொர்ணபுரீஸ்வரர் கோவிலில் உள்ள அம்பாள் பெரிய நாயகி, பக்தர்களுக்காக 108 சிவலிங்கங்களை தனது சன்னிதியில் நிறுவி வழிபடுவது இங்கே விசேஷமான ஒன்று. இந்தக் கோவிலில் திருமண வயதை எட்டிய கன்னியர்களும், காளையர்களும் இங்கு வழிபட்டு வெள்ளிக் கிழமை ராகு காலத்தில் துர்க்கை தேவிக்கு கால் மண்டலம் திருவிளக்கு ஏற்றி வழிபட விரைவில் திருமணம் நடை பெறும். இங்கு மணம் செய்துக்கொண்டால் நன்மக்கட்பேறு பெறுவதுடன், இல்லறவாழ்வில் பிரிவே வராது என்பது பக்தர்கள் நம்பிக்கை.

கூகையூர் குடங்கையழகு :

பெரியநாயகி அம்மன் கருவறை முன்புறம் உள்ளது, ‘கூகையூர் குடங்கையழகு’ எனப்போற்றப்படும் குபேரஸ்தான மண்டபம். இந்த குடங்கையை (மண்டபத்தை) தாங்கி நிற்பது நான்கு இசைத்தூண்கள். இவை சிற்பக்கலையில் வல்லுனர்களான தேவ சிற்பிகளால் வடிக்கப்பட்டது என்று கூறப்படுகிறது. இந்த தூண்கள் கல்நாண்களுடன் கூடிய ஏழு ஸ்வரங்களை உள்ளடக்கிய வீணைகளாக செதுக்கப்பட்டவை.

இவை ஏழு ஸ்வரங்களின் ராகங்களை வெளிப்படுத்துகின்றன. இதன் விதானத்தில் எழில்மிகு சிற்பங்கள் செதுக்கப்பட்டுள்ளன. இதன் நடுவில் 9 சதுரங்களை உள்ளடக்கிய தாமரை மொட்டு வடிக்கப்பட்டு இருக்கிறது. இதில் சோழர்கால சிற்பக்கலை காணப்படுகிறது. இந்த குடங்கையழகையும், விதான சிற்ப எழிலையும் மற்றும் இசைத்தூண் களையும் உலகத்தரம் வாய்ந்த கலைக்கு ஒப்பிடுகிறார்கள் சிற்ப வல்லுனர்கள். முகூர்த்த நாட்களின் போது இந்த மண்டபத்தில் ஏராளமான திருமணங்கள் நடைபெறுவது வழக்கம். இங்கு மணமுடிக்கும் மணமக்கள் வாழ்க்கையில் சகல ஐஸ்வரியங்களும் பெற்று வளமுடன் வாழ்வார்கள் என்பது ஐதீகம்.

திருவிழாக்கள் :

இந்தக் கோவிலில் சித்ரா பவுர்ணமி தேர்த் திருவிழா, ஆடிப்பூரம், ஆடிக் கிருத்திகை, ஆவணி சதுர்த்தி, புரட்டாசி நவராத்திரி, ஐப்பசி கந்தசஷ்டி விழா, ஐப்பசி அன்னாபிஷேகம், கார்த்திகை தீபம், மார்கழி திருவாதிரை, ஆருத்ரா தரிசனம், மகர சங்கராந்தி, தமிழ் புத்தாண்டு, தைப்பூசம், மாசிமகம், பங்குனி உத்திரம் ஆகிய விழாக்கள் கொண்டாடப்படுகிறது. தினமும் காலை 6 மணி முதல் 11 மணி வரையும், மாலை 5 மணி முதல் இரவு 7 மணி வரையும் கோவில் நடை திறந்திருக்கும்.

சேலத்தில் இருந்து 74 கிலோமீட்டர் தூரத்திலும், சின்னசேலத்தில் இருந்து 12 கிலோமீட்டர் தூரத்திலும், சேலம்-ஆத்தூர்-விருத்தாசலம் சாலையில், சின்னசேலம் கூட்டு ரோட்டில் இருந்து 6 கி.மீ. தூரத்திலும் உள்ளது கூகையூர். ஆத்தூர், தலைவாசல் மற்றும் சின்னசேலம் கூட்டுரோட்டில் இருந்து குரால் கிராமம் வழியாக கூகையூர் செல்ல ஏராளமான பஸ்கள் உள்ளன.

குரு பரம்பரை வைபவம் – ஸ்ரீ ராமானுஜர்

sriramanujar - 2026

‘நான் இப்போது நிற்பது கச்சி மாநகரமா! முக்தி பூமியான காஞ்சியா!! அதோ தேவாதிராஜன் வரதராஜன் விமானம் தெரிகிறதே!’’ என்று ஸ்ரீ ராமானுஜர் மூர்ச்சை தெளிந்து கண்களில் நீர் வழிய நின்றார். சீதையைக் கண்ட பின்பு பெருமாளை சந்திக்கும் முன்பு மதுவனத்தில் புகுந்த மாருதியைப் போலவும், ராவணவதம் கேட்ட சீதா பிராட்டியார் போலவும் சந்தோஷமானார். என்ன செய்யப் போகிறோம் என்று அறியாதபோது வேடுவ, வேடுவச்சி உருவில் தேவாதிராஜனும், பெருந்தேவி தாயாரும் ஆட்கொண்டதை நினைத்து பலவாறு புலம்பி அழுதார்.

நானும் அவர்களை புரிந்து கொள்ளாமல் இருந்து விட்டேனே! என்னே! என் மடமை! பகவானின் இந்த ஸௌலப்யம் (சுலபமாக தரிசனம் கிடைக்கும் தன்மை) கிருஷ்ணாவதாரம் போல உள்ளதே என்று புலம்பினார். சுவாமி நம்மாழ்வார், கிருஷ்ணன் உரலில் எளிதாகக் கட்டுப்பட்ட நினைத்து ‘‘எத்திறம் உரவினோடு இணைந்து இருந்து ஏங்கிய எளிவே!’’ என்று பகவானின் எளிமையை நினைத்து ஆறு மாதகாலம் மூர்ச்சித்து இருந்திருக்கிறார். ஸ்ரீராமானுஜர் தன்னைத்தானே மெல்ல தேற்றிக்கொண்டு எழுந்து, ‘‘ஹே கிருஷ்ணா, ஹே யாதவக் குலத்தோன்றலே, அர்ஜுனனை உயவடைய வைத்ததுபோல எனக்கும் அருளினீரே,’ என்று பெருமகிழ்ச்சி கொண்டார். தன்னுடைய அந்த உணர்வை கீழேயுள்ள ஸ்லோகங்களால் வெளிப்படுத்தி பகவானைத் தொழுதார்.

‘‘ஸகேதி மத்வா ப்ரஸபம் யதுக்ரம் ஹே
க்ருஷ்ண, ஹே யாதவ ஹே ஸகேதி
அஜானதா மஹிமானம் தவேதம் மயா ப்ரமா
தாத் ப்ரணயேன வாபி
யச்சாபஹாஸாந்த மஸக்ருதோஸி விஹார
ம்ய்யாசன போஜனேஷு
ஏகோதவாய் யச்யுத தத்ஸமகவும் தத்க்ஷா
மயே த்வாமஹம ப்ரமேயம்’’

அதாவது, ‘‘அச்சுதனே! உன்னுடைய இந்த மஹிமையை அறியாத நான், கவனமின்மையாலும், அன்பினாலும் உன்னை நண்பனென எண்ணி, ஏ கிருஷ்ணா, ஏ யாதவா, நண்பா! என்று விளையாடும்போதும், படுத்திருக்கும்போதும், உட்கார்ந்திருக்கும்போதும், உண்ணும்போதும், பலர் முன்னிலை யிலும் உன்னை அவமதித்திருக்கிறேனே, அவை அனைத்தையும் பொறுத்தருளும்படி வேண்டி கேட்டுக் கொள்கிறேன்,’’ என்று அர்ஜுனனைப்போல் வேண்டிக் கொண்டார். அர்ஜுனனை பகவான் தன் எளிமையாலே பிரமிக்கச் செய்தபடி, என்னையும் ஆட்கொள்வார் என்று தமக்குள்ளேயே தேற்றிக் கொண்டார்.

காஞ்சியிலுள்ள பெரிய ராஜமார்க்கத்தில் நடந்தார். பல்லவ ராஜ்ஜியத்தில் ராஜமார்க்கம் என்பது அயோத்தியிலுள்ள ராஜவீதியைப் போன்றதொரு பெரிய வீதி. அத்திகிரி பேரருளாளன் சந்நதியில் வந்து நின்று திருப்பொலிந்த சேவடிகளை சேவித்து ஆனந்தக் கண்ணீர் மல்கியவராக புளகாங்கிதமானார். மீண்டும் மீண்டும் ஆனந்தத்தாலே உவகையடைந்தார். பகவான் விடியற் காலையிலேயே சட்டென்று மறைந்ததன் கருத்தறிந்து மீண்டும் அந்தக் கிணற்றிலிருந்து தீர்த்தத்தைக் கொண்டுவர துடித்தார். ஏதோவொரு பேரின்பத்தில் தோய்ந்தெழுந்தபடி இருந்தார்.

எந்தக் கிணற்றின் நீர் பருகுவதற்கு ஏற்றதோ, எதனால் பெரிய பிராட்டியார் உவகை அடைவார்களோ, அந்தக் குறிப்பறிந்து, தினமும் திருமஞ்சனத்திற்காகவும், பிரசாதம் செய்வதற்காகவும் கொண்டு வந்து சமர்ப்பித்தார். பகவானும் திருவுள்ளம் உகந்தார். இந்த தண்ணீரின் சுவை மிகமிக அருமை என தேவாதிராஜன் நினைத்தான்போலும். தளிகை அமுது பிரசாதங்கள் முன்பைவிட மிகவும் சுவையாக இருந்தன. திருவாராதனத்தை பகவான் மிகவும் உகந்து ஏற்றுக் கொண்டார். சாலைக் கிணறு தண்ணீரையே தினமும் மனமுவந்து ஏற்றுக் கொண்டார். அதற்கு இரண்டு காரணங்கள் உண்டு.

ஒன்று ஜலத்தின் சுவை, மற்றொன்று ராமானுஜரின் கர ஸ்பரிசம். இவர் கைப்பட்டதன் காரணமாகவே நன்றாக உள்ளதென மற்ற சந்நதிகளின் சுவாமிகளும் நம்பினர். இந்த சாலைக் கிணறு இன்றும் தேவாதிராஜன் சந்நதியிலிருந்து ஒன்றரை கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. ஸ்ரீராமானுஜர் தினந்தோறும் சாலைக் கிணற்றிலிருந்து நீர் இரைத்துக் கொண்டு பெரிய பெருமாள் (காஞ்சி வரதன்) சந்நதியிலுள்ள திருமடைப்பள்ளியில் கொண்டு சேர்த்து வந்தார். அந்த ஜலத்தைக் கொண்டுதான் பரிசாரகர்கள் அமுது படியை செய்து எம்பெருமானுக்கு சமர்ப்பித்தனர்.

மகானாகிய, அவதார புருஷராகிய ஸ்ரீ ராமானுஜரே இவ்வாறு நடந்து கொண்டது, ஒவ்வொரு பக்தனும் எப்படியிருக்க வேண்டும் என்பதற்கு தகுந்த உதாரணம். மகானாக இருந்தாலும் பகவத் சந்நதியில் எல்லோரும் சமமே. யாரும் தன்னைத்தானே மகான் என நினைத்துக் கொள்ளக் கூடாது என்று நினைவூட்டுகிறார் போலும். இதற்கு நடுவே, காசி க்ஷேத்ரம் செல்ல எண்ணிய யாதவப் பிரகாசர், நடுவே ராமானுஜரைக் காணாது, தேடித்தேடி அலைந்தார். சற்றே கவலை கொண்டாலும், உடனே மகிழ்ச்சியும் அடைந்தார். காரணம், ராமானுஜரை நாம் முடிக்க எண்ணினோம்.

ஆனால், காலமே அவரை முடித்து விட்டது என்று நினைத்துக் கொண்டார். பிறகு தேடுவதுபோல் தேடி, போலியாக சிறிது நேரம் துக்கப்பட்டு, ஒருநாள் கழித்து மற்ற சிஷ்யர்களை அழைத்துக் கொண்டு காசி சென்றடைந்தார். அங்கு சென்று பாடங்களை நடத்திவிட்டு மீண்டும் காஞ்சிபுரமே செல்ல ஆயத்தமானார். மீண்டும் மூடுபல்லக்கில் எழுந்தருள, யாதவப் பிரகாசரின் சிவிகை வேத கோஷங்களுடன் புறப்பட்டது. இப்படி இருக்கையில், யாதவப் பிரகாசர், ராமானுஜருடைய குடும்பத்தாருக்கு என்ன பதில் உரைப்போம்? என்னை நம்பி அவருடைய தாயார், ராமானுஜரை ஒப்படைத்தாரே! காணவில்லை, வழி தவறிச் சென்று விட்டார்.

தேடிப்போன இடங்களிலெல்லாம், என் சிஷ்யர்களும் காணக் கிடைக்காது திரும்பி வந்து விட்டனர்’ என்று சொன்னால் அது தன் கையாலாகத தனத்தை வெளிப்படுத்துகிற மாதிரி ஆகிவிடுமே!’ என்று மிகவும் வருத்தத்தோடு இருந்தார். அப்படி ஒருநாள் தன் சிஷ்யர்களுடன் கங்கையில் நீராடும்போது, மாக ஸ்நானம் செய்து மனமுருக கங்காதரனை பிரார்த்தித்தார். வேதத்திலுள்ள ‘அகமர்ஷண ஸூக்தம்’ என்கிற பாகத்தை உச்சரித்துக் கொண்டே ஸ்நானம் செய்தபோது, கோவிந்தன் கையில் (ராமானுஜரின் ஒன்றுவிட்ட சகோதரர்) ஒரு லிங்கம் வந்து சேர்ந்தது.

மிகவும் ஆச்சர்யம் அடைந்து அந்த லிங்கத்தை தன் குருநாதன் யாதவப் பிரகாசரிடம் காட்டினார். யாதவப் பிரகாசரும், சந்தோஷமுற்று, ‘‘ஹே! கோவிந்தரே! கங்காதரனே, கங்கா ஸ்நானத்தின் பலனாக உம் கைக்கு கிடைத்திருக்கிறார். இப்படி யாருக்கும் கிடைத்ததில்லை என்பதால், நீர் ஒரு தெய்வப் பிறவி,’’ என்று சொல்லி பாராட்டினார். யாதவப் பிரகாசரின் ஏனைய சீடர்கள் அனைவரும் இதைக் கண்டு அதிசயித்தனர். ‘‘சிவபெருமானின் பூரண கடாட்சம் உமக்கு வாய்க்கப் பெற்றதே! அதுவே நீர் செய்த பாக்யம்’’ என்று கூறி ஓரிடத்தில் அந்த லிங்கத்தை தற்காலிகமாக பிரதிஷ்டை செய்து, ருத்ரம், சமகம் சொல்லி அந்த லிங்கத்திற்கு அபிஷேகம் செய்தார் யாதவ பிரகாசர்.

பிறகு, ‘‘இந்த லிங்கம் உம்மிடமே இருக்கட்டும்’’ என குருநாதன் சொல்லி கோவிந்தரை மகிழ்வித்தார். கோவிந்தரின் கையில் இப்படி லிங்கம் கிடைத்ததால், இவரை ‘உள்ளங்கை கொணர்ந்த நாயனார்’ என்று அழைத்தனர். யாதவப் பிரகாசர் தன் சிவிகையில் ஏறிக்கொள்ள, எல்லா சீடர்களும் ‘சிவபெருமான் வந்தார். பார்வதி நேசன் வந்தார், கங்காதரன் வந்தார். ஹைமவதீ மணாளன் வந்தார்’ என்று கட்டிய வசனத்தை கோஷித்தார்கள். இந்தப் பட்டாளம் மீண்டும் காஞ்சிபுரம் நோக்கிப் புறப்பட்டது. ராமானுஜர் இல்லாமலேயே, திரும்பிச் செல்கிறோமே என்கிற நெருடல் யாதவப் பிரகாசரிடம் இருந்தது.

எனினும், எல்லாம் கங்காதரன் செயல் என்று தனக்குள் சொல்லி மனதைத் தேற்றிக்கொண்டார். சில நாட்கள் கடந்தன. யாதவப் பிரகாசருக்கு உடல்நிலை சரியில்லாமல் போயிற்று. வழியில் ஒருமாத காலம் ஒரு கிராமத்தில் தங்கி நோய் தீர்ந்தவுடன் மீண்டும் புறப்பட்டனர். நான்கு மாதங்கள் கடந்து காஞ்சிபுரத்திற்கு வந்தனர். அங்கே ராமானுஜரைக் கண்டதும் அனை வருக்கும் பேராச்சரியம். முக்கியமாக யாதவப் பிரகாசர், கண்களில் நீர்த் துளிக்க, ‘‘எப்படி காணாமல் சென்று விட்டீர். எங்கு போனீர்? சாப்பிடுவதற்கு என்ன செய்தீர்?

எப்படி, யார் துணையுடன் இங்கு வந்து சேர்ந்தீர்?’’ என்று கேள்விமேல் கேள்வி கேட்டுத் தன் திகைப்பை வெளிப்படுத்தினார். ராமானுஜரோ, எல்லா துக்கங்களையும் மறைத்துக்கொண்டு, இவர்தானே கொல்ல நினைத்தார் என்கிற உண்மையையும் மறைத்துக் கொண்டு, நடந்த வரலாற்றை அப்படியே கூறி, இந்த காஞ்சி வரதனும் பெருந்தேவியும் வேடுவ, வேடுவச்சியாக வந்து தம்மைக் காப்பாற்றிய அற்புதத்தைக் கூறி விம்மி அழுதார். யாதவப் பிரகாசருக்கு நெஞ்சில் முள் தைத்தாற்போன்று இருந்தது. இருப்பினும் அதை வெளிக் காட்டிக்கொள்ள இயலாதிருந்தார்.

ராமானுஜரோ நடந்தவை எல்லாவற்றையும் மறந்துவிட்டு மீண்டும் யாதவப் பிரகாசரிடமே தொடர்ந்து படிக்கலானார். கோவிந்தன் என்கிற உள்ளங்கைக் கொணர்ந்த நாயனார், தம் கிராமமாகிய மழலை மங்கலம் அல்லது மேலமங்கலம் (தற்போது மதுர மங்கலம் என்றழைக்கப்படுகிறது) சென்று நடந்தவற்றை குடும்பத்தினரிடமும், கிராம மக்களிடமும் கூற அவர்கள் ஆச்சரியமடைந்தனர். அந்த லிங்கத்தைப் பார்த்துப் பார்த்து மகிழ்ந்தனர். கோவிந்தரும் மிகுந்த பக்தி சிரத்தையுடன் லிங்கத்திற்கு செய்ய வேண்டிய அபிஷேகங்களைச் செய்து பிரசாதங்களை நிவேதித்தார்.

இப்படி கங்காதரனின் பக்தியில் அவர் திளைத்திருந்தபோது, ஒருநாள் கனவில் சிவபெருமான் தோன்றினார். ‘‘உள்ளங்கை கொணர்ந்த நாயனாரே! எம்மையடைந்து நீர் மிகவும் சந்தோஷத்துடன் உள்ளீர். யாமும் உம் பக்தி கண்டு பரவசமடைகிறோம். என் ரூபமான லிங்கம் உம் கையில் உள்ளது. அந்த லிங்கத்தை காளஹஸ்தி என்ற இடத்தில் பிரதிஷ்டை செய்து ஒரு கோயிலையும் நிர்மாணம் செய்வீராக’’ என்று கூறினார். இந்தச் செய்தி கிராமம் முழுவதும் பரவியது. ஒரு கிராமமே காளஹஸ்தியை நோக்கி, கோவிந்தன் தலைமையில் புறப்பட்டது.

காளஹஸ்தி வந்து சேர்ந்த பிறகு சுவாமியை எங்கு பிரதிஷ்டை செய்வது என்று சிவபெருமானை நோக்கி கண்மூடி, நெக்குருக, மனமுருக வேண்டினார் கோவிந்தன். சிவபெருமானும் ஓரிடத்தைக் காட்டிக் கொடுத்தார். அங்கேயே லிங்கம் பிரதிஷ்டை செய்யப்பட்டது. இப்படி அமைந்ததுதான், தற்போதுள்ள காளஹஸ்தி க்ஷேத்ரம். கேட்டவருக்கு அதை அப்படியே அள்ளித்தரும் பெருமானாகவே இங்கு சிவபெருமான் பிரதிஷ்டையானார். அதற்குக் காரணம் கோவிந்தனின் உள்ளொழுகிய பிரார்த்தனை தான்.

யார் இங்கு வந்து கஷ்டத்துடன் மனமுருக பிரார்த்தித்தாலும், அவர்களின் யோக்யதையை ஆராயாமல் உடனே அனுக்ரஹம் பண்ண வேண்டும் என்று கோவிந்தன் பிரார்த்தித்தபடியால், சிவபெருமானும் அப்படியே அருள்கிறார். இன்றும் பக்தர்கள் மனமுருக பிரார்த்தித்து, வேண்டிய வரம் கிடைக்கப்பெற்று வாழ்க்கையில் முன்னேறுகின்றனர். மேலும், இத்தலம் ராகு-கேது தலமாகவும் விளங்குவதால், சர்ப்பதோஷம் உள்ளவர்கள் அந்த தோஷம் நீங்க சிவபெருமான் அருள்பாலிக்கிறார்.

சிவபெருமான், உள்ளங்கை கொணர்ந்த நாயனாரையே கோயில் நிர்வாகம் செய்யும்படி செய்து, இலச்சினை, மோதிரம் கொடுத்து அங்கேயே தங்கும்படியும் செய்தார். கோயில் நிர்வாகம் முழுவதையும் கோவிந்தனே கவனித்துக் கொண்டார். இன்றளவும் சீரும் சிறப்புமாக கோயில் கொண்டாடப்படுகிறது. ஒரு சமயம் காஞ்சிபுரம், வரதராஜன் சந்நதியில் கைங்கர்யம் செய்யக்கூடிய இருவர் ஸ்ரீரங்கம் சென்று தன் ஆசார்யரான ஸ்ரீஆளவந்தாரை தரிசித்தனர். அவரை நமஸ்கரித்து, ஸ்ரீராமானுஜரைப் பற்றி பலவாறு புகழ்ந்து கூறினர். ‘‘ஸ்ரீராமானுஜர் என்பவர் யாதவப் பிரகாசர் என்கிற வேதாந்தியிடம் பாடம் பயின்று வருகிறார்.

யாதவப் பிரகாசரோ, வேதங்களிலுள்ள முக்கிய பகுதிகளுக்கெல்லாம் தவறான அர்த்தங்களையே போதித்து வருகிறார். அதற்கு ஸ்ரீராமானுஜர் கண்டனமும் தெரிவித்து வருவதுண்டு. இப்படித்தான் ஒருசமயம், ‘ஸத்யம், ஞானம், அனந்தம், ப்ரஹ்ம’ என்ற வேத வாக்கியத்திற்கு தப்பான அர்த்தங்களை யாதவப் பிரகாசர் போதிக்க, அதைக் கண்டித்து ஸ்ரீராமானுஜர் மிகச் சரியான விளக்கங்களை மிக நேர்த்தியாக அளித்தார். அதைக் கேட்டு கோபமடைந்த யாதவர் ஸ்ரீராமானுஜரை மிரட்டவும் செய்தார்,’’ என்று நடந்த விஷயங்களையெல்லாம் கூறினர்.

கட்டுரை: கோமடம் மாதவாச்சாரியார்

சிங்கிள் ‘ஏ’ சொதப்பிச்சு; ட்ரிபிள் ‘ஏ’ குப்புறத் தள்ளிடுச்சி: புலம்பும் இயக்குனர்

anbanavan asarathavan atangkathavan - 2026

‘த்ரிஷா இல்லைனா நயன்தாரா’ படம் சர்ச்சை கிளப்பினாலும், ‘சி’ சென்டர், ‘அடல்ட்ஸ் ஒன்லி’ என்ற பிராண்டிங் காரணமாக அப்பட ஹீரோ ஜி.வி.பிரகாஷ் முதல் இயக்குநர் ஆதிக் ரவிசந்திரன் வரை பலருக்கும் வேறு வாய்ப்புகளைக் கொடுத்தது. ஆனால், இப்போது சிம்புவை வைத்து ஆதிக் ரவிசந்திரன் இயக்கிய ‘அன்பானவன் அடங்காதவன் அசராதவன்’ படம், பெரும் பின்னடவைக் கொடுத்திருக்கிறது.

பல மாதங்களுக்குப் பிறகான சிம்பு படம் என்ற எதிர்பார்ப்போடு படம் பார்க்கச் சென்ற சிம்பு ரசிகர்களுக்கே படம் கடும் மன உளைச்சலை உண்டாக்கியதாகக் குமுறிக் கொண்டிருக்கிறார்கள்.

படத்தை இயக்கிய ஆதிக் ரவிசந்திரனோ புலம்புகிறார் இப்படி … ‘நான் நினைச்ச மாதிரி முழுப்படமும் எடுத்திருந்தா இந்த மாதி ரியான விமர்சனம் வந்திருக்காது. எடுத்த வரைக்குமே நான் நினைச்சதை முழுசா படத்துல கொண்டுவர முடியலை. இன்னும் சொல்லப்போனா, இந்தப் படம் எந்த மாதிரியான சூழல்ல எடுக்கப்பட்டதுனு ரசிகர்களுக்குத் தெரிய வாய்ப்பில்லை. அதனாலதான் ரசிகர்கள் மத்தியில் இவ்ளோ வெறுப்பு. இதப்பத்தி நான் பேச விரும்பல. ஆனா, ஒண்ணு மட்டும் சொல்லிக்கிறேன்… நான் சொல்ல வந்த விஷயத்துல, 25 சதவிகிதம்தான் படத்துல வந்திருக்கு. நான் தயாரிப்பாளருக்காக விட்டுக்கொடுக்கப் போயி படம் பாதில நின்னுருச்சுனு நினைச்சு… ப்ச்… வேண்டாங்க! இதப் பத்தி நான் பேச விரும்பலை. ஆனா, இப்போ எல்லா தப்பும் என் மேல விழுந்திருச்சு. பரவாயில்லை!’’ என்று விரக்தியான குரலில்.

ஜிஎஸ்டி.,யின் தாக்கம் எங்கே எதிரொலிக்கும்?

gst - 2026

ஜூலை 2 இன்று காலை.. பால் வாங்க பக்கத்து பொட்டிக் கடை மாதிரியான சிறிய ரக கடைக்கு போனேன்.. அப்படியே பேஸ்ட் இருக்கா.. என்று கேட்டேன்..
இருக்கு என்று, கையில் கொடுத்தவர்… சார் இனிமே இதெல்லாம் வெலை கூடிடும். இது பழைய ஸ்டாக். அதனால் அதே விலைக்கு தாரேன் என்றார்.
என்னாது…? என்று ஆச்சரியமாகக் கேட்டபோது…
நீட்டி முழக்கிக் கொண்டே போனார். எல்லாம் விலை கூடிடும். ரொம்ப ஏறிப் போச்சு… என்று ரொம்ப சீரியஸாக வைத்துக் கொண்டார் முகத்தை!
ம்ம்ம்.. சரிதான்! இதெல்லாம் உங்களுக்கு சொன்னது யாரு? நீங்க எதுனா பேப்பர்ல படிச்சீங்களா என்று கேட்டேன்.
இல்லை சன் டிவி நியூஸ்ல கேட்டேன். எல்லா சனமும் ரொம்ப புலம்புறாங்க… என்றார்.
சர்தான்…! நீங்க என்ன… ஒரு இருபது லட்சத்துக்கு வியாபாரம் செய்வீங்களா – கேட்டேன்.
அய்ய… இன்னா சார் நீங்க.. என்னயப் போயி இப்டி கேக்கிறீங்க? என்றார்
அப்ப என்ன..? கவலையை விடுங்க! இதெல்லாம் பெரிய வியாபாரிங்களுக்குதான் இடிக்கும்… என்றேன்.
சரி சார்.. ஜிஎஸ்டி நல்லதா? கெட்டதா?
உங்கள மாதிரி சின்ன வியாபாரிகளுக்கு ரொம்ப ரொம்ப நல்லது. திருட்டுத்தனம் செய்து கள்ள மார்க்கெட்ல செல்போனும் எலக்ட்ரானிக்ஸும் விக்கிறவன், வரி கட்டாம செருப்பு வியாபாரத்துலேர்ந்து துணிமணி வியாபாரம் வரைக்கும் மொத்தமா எடுத்து அத குடும்பத்த சேர்ந்த பத்து பயலுகளுக்கு பிரிச்சிக் கொடுத்து சிறு குறு வியாபாரின்னு கணக்கு காட்டி மொத்தமா வியாபாரம் செய்யிறவனுக்கெல்லாம் இது கெட்டது… என்றேன்.
கடைக்கு வர்ற பயலுஹ எல்லாம் என்னல்லாமோ சொல்லி குழப்பிட்டு போயிடுறானுங்க .. உங்கள மாதிரி சனங்ககிட்ட கேட்டாதான் தெளிவா தெரியுது… என்றார்.

பின்குறிப்பு: ஆவின் பால் முதல் ஆரோக்யா பால் வரை, ரோட்டின் பக்கம் போய் வாங்கினா எம்.ஆர்.பி.யில் கிடைக்கும். இவர் சுமார் ஒரு கி.மீ. தொலைவு சென்று மொத்தமாக வாங்கி வந்து விற்பனை செய்வதால், எல்லாவற்றிலும் ரூ.1 கூடுதலாக வைத்து வாங்குவார்.
பெட்ரோலுக்கு 10 பைசா கூடினாலும், ஆட்டோக்காரர் எப்படி விலைவாசி ஏறிப் போச்சுங்க பத்து ரூவா போட்டுக் கொடுங்க என்று கேட்பாரோ அந்த மனோநிலையில்தான் இங்கே பெரும்பாலான மக்களும்!
ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு ரேட்! முக்காடு போட்டு தடாலடியா ஒரு பாய் அம்மா வந்தா பத்து ரூபாக்கு விக்கிற அதே காய்கறிக்காரம்மா, நெத்தில பொட்டு வெச்சி கொஞ்சம் பம்மி பம்மி வர்ற பிராமண அம்மாவிடம் பதினைந்து ரூபாய்னு சொல்லி கறந்திடுறாங்க…!
ஆக மொத்தத்தில், ஜிஎஸ்டி எப்படி நுகர்வோரிடம் நேரடியாக டீல் செய்யும் கடைநிலை வியாபாரியிடம் வேலையைக் காட்டுகிறது என்பதில்தான், இதன் முழு பிரசாரமும் இருக்கிறது!

கருணாநிதியுடன் ஜனாதிபதி வேட்பாளர் மீராகுமார் சந்திப்பு!

IMG 20170701 235006 1 - 2026

ஜனாதிபதி தேர்தலில் காங். கூட்டணி கட்சிகளின் வேட்பாளர் மீராகுமார் தனக்கு
ஆதரவு கேட்டு சென்னை வந்தார்.

திமுக செயல்தலைவர் மு.க. ஸ்டாலினை அவர் நேரில் சந்தித்து ஆதரவு திரட்டினார்.
இதனை தொடர்ந்து காங்கிரஸ் மற்றும் இந்தியன் யூனியன் முஸ்லீம் லீக்
எம்.எல்.ஏக்களிடம் மீராகுமார் ஆதரவு கோரினார்.

பின்னர் சென்னை கோபாலபுரம் சென்று தி.மு.க. தலைவர் கருணாநிதியை சந்தித்து
பேசினார். அப்போது கருணாநிதியிடம் உடல் நலம் குறித்து விசாரித்தார்.

கருணாநிதியுடன் ஜனாதிபதி வேட்பாளர் மீராகுமார் சந்திப்பு!

IMG 20170701 235006 - 2026

ஜனாதிபதி தேர்தலில் காங். கூட்டணி கட்சிகளின் வேட்பாளர் மீராகுமார் தனக்கு
ஆதரவு கேட்டு இன்று சென்னை வந்திருந்தார்.

திமுக செயல்தலைவர் மு.க. ஸ்டாலினை அவர் நேரில் சந்தித்து ஆதரவு திரட்டினார்.
இதனை தொடர்ந்து காங்கிரஸ் மற்றும் இந்தியன் யூனியன் முஸ்லீம் லீக்
எம்.எல்.ஏக்களிடம் மீராகுமார் ஆதரவு கோரினார்.

பின்னர் இரவு சென்னை கோபாலபுரம் சென்று தி.மு.க. தலைவர் கருணாநிதியை சந்தித்து
பேசினார். அப்போது கருணாநிதியிடம் உடல் நலம் குறித்து விசாரித்தார்.

ஏய்க்கும் ஒரு சிலரால் தேசத்தின் வளர்ச்சி பாதிப்பு: மோடி பேச்சு

pm modi - 2026

புது தில்லி:

ஜிஎஸ்டி வரிவிதிப்பு சனிக்கிழமை இன்று நாடு முழுவதும் அறிமுகமானதைத் தொடர்ந்து, ஜிஎஸ்டி வரி விதிப்பு குறித்து விளக்குவதற்காக கூட்டங்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதில், தில்லியில் ஐ.சி.ஏ.ஐ.கருத்தரங்கில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர்…

இந்தியப் பொருளாதாரத்தில் ஜிஎஸ்டி புதிய பாதைக்கு வித்திட்டுள்ளது. சென்ற வருட இறுதியில், பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு பிறகு நாட்டில் மிகப்பெரிய மாற்றம் ஏற்பட்டுள்ளது.  ஒரு சிலர் மட்டுமே கொள்ளையடித்து வருவது நாட்டின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கு மிகப் பெரும் தடையாக உள்ளது.  37 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலி நிறுவனங்கள் கண்டறியப்பட்டுள்ளன.

ஆடிட்டர்களின் கையெழுத்து பிரதமரின் கையொப்பத்தை விட வலிமையானது. ஆடிட்டர் எனப்படும் பட்டயக்கணக்காளரின் கையெழுத்தை நம்பியே கணக்கு வழக்குகளை அரசு ஏற்றுக்கொள்கிறது. அரசின் நம்பிக்கையை சீர்குலைக்கும் வகையில் பட்டயக்கணக்காளர்கள் நடந்துகொள்ளக்கூடாது. டாக்டர்கள் வியபாரத்திற்காக மக்களை தவறாக பயன்படுத்தவில்லை. அதுபோன்று பட்டயக் கணக்காளர்கள் சமுதாய பொருளாதாரத்தை ஆரோக்கியமாக பாதுகாக்க வேண்டும்.

நேர்மையாக வரி செலுத்துபவர்கள் ஜிஎஸ்டி வரிவிதிப்பை ஊக்குவிப்பதற்குத்.தேவையான அனைத்தையும் நம்மிடம் இருந்தே பெறும் வகையில் தன்னிறைவு அடைய வேண்டும்.

வரும் 2022-ஆண்டில், நாம் நம் நாட்டின் 75-ம் சுதந்திர தினத்தை கொண்டாடும் போது நாடு தன்னிறைவு பெற வேண்டும். அப்போது, வீடில்லாத மக்கள் என்று எவரும் இருக்கக் கூடாது. அனைவருக்கும் குடியிருக்க சொந்தமாக வீடு இருக்க வேண்டும் என்பதே இலக்கு.  இவ்வாறு மோட பேசினார்.

‘கடவுளைப் பார்க்க முடியுமா?’-18 வயது பையன்.

246400 479182102136836 1433845875 n - 2026

‘கடவுளைப் பார்க்க முடியுமா?’-18 வயது பையன்.

(கடவுளைப் பார்க்க நானும் ஆர்வமாகத்தான் இருக்கேன். இன்னும் தேடிக் கொண்டிருக்கேன்!”-என்று மேலோட்டமாகச் சொன்ன பெரியவாளின் பதில் கீழே)

கட்டுரையாளர்-ஸ்ரீமடம் பாலு
புத்தகம்-காஞ்சி மகான் தரிசனம் (114)
தட்டச்சு-வரகூரான் நாராயணன்

பதினெட்டு வயதுப் பையன், விவேகானந்தர் போன்ற சில மகான்களின் சரித்திரங்களைப் படித்திருப்பான் போலிருக்கிறது.

‘கடவுளைப் பார்க்க முடியுமா?’ என்று சுளீரென்று ஒரு கேள்வியைப் பெரியவாளைப் பார்த்துக் கேட்டான்.

(‘முடியும்’ என்ற பதில் வந்தால் ‘எங்கே எனக்குக் காட்டுங்கள்’ என்று மடக்கி விடலாம் என்றெல்லாம் திட்டம் போட்டுக் கொண்டு வந்திருப்பான் போல் தோன்றியது.)

(‘கடவுளை நீங்கள் பார்த்திருக்கிறீர்களா? அவருக்கு எத்தனை முகங்கள்,கைகள்? புடைவையா,வேஷ்டியா?கறுப்பா,சிவப்பா? என்று வரிசையாகக் கேட்டு,பெரியவாளைத் திக்குமுக்காடச் செய்யலாம் என்ற எண்ணமும் இருந்திருக்கக்கூடும்.)

வயதுக் கோளாறு! கொஞ்சம் படித்து விட்டு,எல்லாவற்றையும் கரைத்துக் குடித்து விட்டதாக நினைத்துக்கொள்ளும் ஈகோ!

பெரியவாள்.சிரசைத் தூக்கி அவனைப் பார்த்தார்கள். “கடவுள் இருக்கிறார்னு மகான்களெல்லாம் சொல்லியிருக்கா. சாஸ்திரம் சொல்றது. இவை இரண்டும் நம்பத்தகுந்தவை என்பதால், நாமும் ஒப்புக் கொள்கிறோம். கடவுளைப் பார்க்க நானும் ஆர்வமாகத்தான் இருக்கேன். இன்னும் தேடிக் கொண்டிருக்கேன்!”

பையனுக்கு வேகம் தணிந்து விட்டது. சுவாமிகள், ‘நான் கடவுளைப் பார்த்திருக்கிறேன்’ என்று சொல்லியிருந்தால் அவர்களைக் குடைந்திருக்கலாம்.’ஒப்புக்கொள்கிறோம்’
என்று தெள்ளத் தெளிவாகக் கூறி விட்டார்களே? அப்புறம், வாதம் செய்ய என்ன இருக்கிறது?

பெரியவாள் அந்தப் பையனை அருகில் உட்காரச்சொன்னார்கள். “உன் மாதிரி புத்திசாலிப் பசங்கள் அந்தக்காலத்திலேயும் இருந்திருப்பார்கள்னு நினைக்கிறேன். நான் கேள்விப்பட்ட ஒரு கதையைச் சொல்றேன். கேட்கிறியா?”–பெரியவாள்.

பையன் அக்கறையில்லாமல் தலையை அசைத்தான்.

அணுக்கத் தொண்டர்களுக்கெல்லாம் உள்ளூர ஆத்திரம்.

(உபநிடதங்களில் ஒரு வாக்கியத்தின் ஆழ்பொருளை அறிந்து கொள்வதற்காக, பெரியவாளின் திருமுகத்திலிருந்து விளக்கம் வராதா என்று – அறநூல் விற்பன்னர்கள் தவித்துக் காத்துக் கொண்டிருக்கும் சந்நிதியில், அந்த அஸத்துப் பையனுக்குக்
கதை சொல்கிறாரா, கதை!)

பெரியவாள் சொல்கிறார் பையனிடம்; ஒரு முனிவர்கிட்டே, மேதாவியான சிஷ்யன் இருந்தான். ஒருநாள்,’கடவுள் இருக்காரா?’ன்னு ஆசிரியரைக் கேட்டான்.

‘இருக்கார்’

“அப்படியானால்,என் கண்ணுக்குத் தென்படலையே’ன்னான். “கடவுள் இருப்பதை, அநேக அடயாளங்களால் ஒப்புக் கொள்ளலாமே தவிர, கண்ணாலே பார்க்க முடியாதுன்னார்.

“பார்க்க முடியாத பொருளை எப்படி நம்புவது?ன்னான்.

“ஆமாம்..நீ சொல்றது சரிதான்.நீ சிந்திக்கத் தெரிந்த புத்திசாலி நெறையக் கேள்வி கேட்கிறே. நான்,என் குருநாதர் சொன்னதையும், வேத – புராணங்கள் சொன்னதையும் அப்படியே நம்பி ஏத்துண்டுட்டேன்.கண்ணுக்குத் தெரியாத ஒரு பொருளை எப்படி ஒப்புக்கொள்றதுன்னு இப்பதான் எனக்கும் சந்தேகம் வருது.–ஆசிரியர்.

பையன் கொஞ்சம் திமிராக நிமிர்ந்து உட்கார்ந்தான். கடைசியில் சுவாமிகள்,கடவுள் இல்லை;இல்லவேயில்லை கட்சியில் சேர்ந்து விடுவார் போலிருக்கிறதே!

பெரியவாள் தொடர்ந்தார்கள்.கதையை

“முனிவர் இருந்த இடம் மரங்கள் அடர்ந்த சோலை. ஒரு பெருங்காற்றில் மரத்தின் கிளைகள் வேகமாக அசைந்தன. ஜில்லுன்னு காத்து.உடம்புக்கு ரொம்ப இதமா இருந்தது.
முனிவர்,சிஷ்யனைப் பார்த்து, ‘அந்த மரக்கிளைகளெல்லாம் ஏன் இப்படி அசுரத்தனமாக அசைகின்றன?” என்று கேட்டார்.

“சுவாமி! இப்போ பெரிய காற்று வீசித்தே அதனாலதான்”

“காற்றா..அப்படீன்னா?வீசித்தா..அப்படீன்னா? நீ பார்த்தாயா? அடாடா…எனக்குக் காட்டியிருக்கப்படாதோ? நானும் ரொம்ப நாளா யத்தனம் பண்ணிண்டிருக்கேன்,காற்றைப்பார்க்கணும்னு

“நீயோ,காற்று வீசியது என்கிறாய். நானும் அந்த சுகத்தை அனுபவிச்சேன். ஆனால், அது காற்றின் வேலை என்பதை என்னால ஒப்புக் கொள்ள முடியவில்லை. கண்ணால் பார்க்க
முடியாத ஒரு பொருள் இருக்கிறது என்று எப்படி ஒப்புக் கொள்வது’ என்றாராம் முனிவர்.

உடனே,சிஷ்யன் எழுந்து முனிவர் கால்லே விழுந்து, புரிஞ்சுடுத்து’ன்னு சொல்லி கண்ணாலே ஜலம் விட்டானாம்.

அதி நவீன நாகரிகப் பையனும், மகாப் பெரியவா திருவடிகளில் நான்கு முறை நமஸ்காரம் செய்துவிட்டு,கண்களில் நீர் வழிய நின்றான்.

“உன் அகத்திலே ரேடியோ இருக்கோ? எலெக்ட்ரிக் லைட் இருக்கோ? எலெக்ட்ரிக் ஃபேன் இருக்கோ?”–பெரியவா

“இருக்கு”-நாகரிகப் பையன்.

“இதெல்லாம் எப்படி வேலை செய்யறது?”–பெரியவா

“எலெக்ட்ரிஸிட்டியாலே….”-பையன்

“அந்த ஸிட்டி’யை நீ பார்த்திருக்கியோ?”–பெரியவா

பையன் திக்குமுக்காடிப் போனான்.பெரியவா பிரசாதம் கொடுத்து ஆசீர்வதித்து அனுப்பினார்கள்.அருகில் இருந்த எல்லோரும் ‘இந்தக் குழந்தைக்கு என்ன அதிருஷ்டம்!
பெரியவா எத்தனை நேரம் அவனோட பேசியிருக்கா!’ என்று ஆச்சர்யப்பட்டார்கள்.

கடவுள் இருக்கிறார் – இருக்கவே இருக்கிறார்.