Home Blog Page 5598

பொதிகை மலையும், கம்பீரமான அகத்தியர் சிலையும்

 

courtallam - 2026பொதிகை மலை என்பது மேற்குத் தொடா்ச்சி மலைகளில்  தென்பகுதியில் ஆனை மலைத் தொடரில் அமைந்துள்ளது. இதற்கு அகத்தியர் மலை என்று மற்றொரு பெயரும் உண்டு. பொதிகை மலையின் ஒருபகுதி தமிழ்நாட்டின் திருநெல்வேலி மாவட்டத்தில் அமைந்துள்ளது. இதன் உயரம் சுமார் 1,866 மீட்டா்கள் ஆகும். இந்த மலையிலிருந்து தான் தமிழ்நாட்டில் மட்டுமே பாயும் முக்கிய நதியான தாமிரபரணி ஆறுஉருவாகிறது. சங்க காலத்தில் பொதியம் என்றும், பொதியில் என்றும் வழங்கப்பட்ட மலையை இக்காலத்தில் பொதிகை மலை என்றும் கூறுவர். சங்ககாலத்தில் வையை என அழைக்கப்பட்ட ஆற்றை இக்காலத்தில் வைகை எனவும் அழைப்பது போன்றது இது. வடக்கில் இமயமலையும், தெற்கில் பொதியமலையும் தமிழர் சென்றுவந்து கண்ட ஓங்கி உயர்ந்த மலைகள்.

அகத்தியர் வாழ்ந்த, தென்றல் தவழ்ந்தோடும் பொதிகை மலையை, அகத்தியர் மலை என்றும் அழைக்கின்றனர்.  தமிழ்இலக்கணம், சித்த மருத்துவம், சோதிடம் ஆகியவற்றைப் படைத்து, சித்தர்களுக்கு எல்லாம் தலையாய சித்தராக விளங்கும் தமிழ் முனிவர் அகத்தியரை இறைவனாகவே சித்தர் வழிபாட்டில் ஈடுபடுபவர்கள் வணங்கி வருகின்றனர்.

அகத்தியர் வாழும் இப்பொதிகை மலையில் கடல் மட்டத்திலிருந்து சுமார் 6,132 அடி உயரத்திலுள்ள அகத்தியரைத் தரிசிக்கச் செல்வதை புனிதப் பயணம் என்றும் சாகசப் பயணம் என்றும் கூறலாம்.

அபூர்வ மூலிகைகள், மனதைக் கவரும்அருவிகள், சிற்றோடைகள், ஆறுகள், எங்கு காணினும் இயற்கையின் கொடையான பசுமையான அடர்ந்த மரங்கள் நிறைந்த காடுகள், புல்வெளிகள் ஆகியவற்றைத் தன்னகத்தே கொண்டுள்ள இப்பொதிகை மலை இயற்கை நமக்கு அளித்த கொடை.

இந்த அடர்ந்த காட்டில் சிறு அட்டை முதல் மான், காட்டெருமை, கரடி,சிறுத்தை, புலி, யானை, செந்நாய், பாம்பு, உடும்பு மற்றும் காடுகளில் உள்ள ஊர்வன, பறப்பன உள்ளிட்ட அனைத்து வனவாழ் உயிரினங்களும் உள்ளன. கயிற்றின் துணையுடன் சில பகுதிகளில் பயணிக்க வேண்டும்.

#அகத்தியர்_மலை

#பொதிகை_மலை

#Agastiar_Hills

#Pothigai_Hills

#KSRadhakrishnanpostings

#KSRpostings

கே.எஸ்.இராதாகிருஷ்ணன்

நாகேஷ் திரையரங்கம்: தயாரிப்பாளருக்கு நோட்டீஸ்

madras high court - 2026

நாகேஷ் திரையரங்கம் படத்தை வெளியிட தடை கேட்டு மறைந்த நகைச்சுவை நடிகர் நாகேஷின் மகனும் நடிகருமான ஆனந்த்பாபு சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குப் போட்டுள்ளார்.
சமீபத்தில் நாகேஷ் திரையரங்கம் படத்தின் டீசரை நடிகர் ரஜினிகாந்த் வெளியிட்டார். நடிகர் ஆரி, ஆஷ்னா சவேரி நடிப்பில் இசாக் இயக்கியுள்ள இப்படத்தை ட்ரான்ஸ் இண்டியா மீடியா எண்டெர்டெயின்மெண்ட் நிறுவனர் ராஜேந்திர. எம் ராஜன் தயாரித்துள்ளார்.
மேலும் ஆனந்த்பாபு இப்படத்தை வெளியிட நஷ்டஈடு தரவேண்டும் என்று கூறி வருவதாக சொல்லப்படுகிறது.
ஆனந்த்பாபு அனுப்பியுள்ள மனுவிற்கு படத்தின் தயாரிப்பாளர் விளக்கம் தரவேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது..

தமிழ்நாடு சமூக நீதிக்காக போராடும் மாநிலம்: ஜனாதிபதி வேட்பாளர் மீராகுமார் பேச்சு!

IMG 20170701 213717 - 2026

தமிழ்நாடு எப்போதும் சமூக நீதிக்காக போராடும் மாநிலம் என ஜனாதிபதி வேட்பாளர்
மீராகுமார் கூறியுள்ளார்.

ஜனாதிபதி தேர்தலில் காங். கூட்டணி கட்சிகளின் வேட்பாளர் மீராகுமார் தனக்கு
ஆதரவு கேட்டு சென்னை வந்தார். அப்போது திமுக செயல் தலைவர் ஸ்டாலினை சந்தித்து
ஆதரவு கோரினார்.

அதனைதொடர்ந்து மீராகுமார் செய்தியார்களிடம் கூறியதாவது:- சமூக நீதி மற்றும்
ஜனநாயக் மரபுகளை காப்பதில் மாபெரும் சக்தியாக விளங்குபவர் திமுக தலைவர்
கருணாநிதி. கடந்த சில நாட்களில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சில
நிகழ்வுகள் நடந்துள்ளன. மதசார்பின்மை,சமூக நீதிக்கு மு.க.ஸ்டாலின் குரல்
கொடுத்து வருகிறார்.

ஊடக சுதந்திரம்,பேச்சுரிமைக்காக போராடி வருகிறேன். ஜனநாயகத்தின் மீது மதிப்பை
கொண்டது தமிழகம். தமிழ்நாடு எப்போதும் சமூக நீதிக்காக போராடும் மாநிலம்.
ஜனாதிபதி தேர்தலில் எம்.எல்.ஏ,எம்.பிக்கள் மனச்சாட்சிப்படி வாக்களிக்க
வேண்டும் என்றார்.

பின்னர் திமுக, காங்கிரஸ் மற்றும் இந்தியன் யூனியன் முஸ்லீம் லீக்
எம்.எல்.ஏக்களிடம் மீராகுமார் ஆதரவு கோரினார்.

மீராகுமாருடன் தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசரும் ஸ்டாலினுடன்
சந்தித்தார். இந்திய கம்யூனிஸ்ட் தேசிய செயலாளர் டி.ராஜா, மார்க்சிஸ்ட் எம்.பி
டி.கே ரங்கராஜனும் சந்தித்தனர்.

ஜி.எஸ்.டி., வரி ரொம்ப கம்மி என்கிறார் திருப்பூர் தொழிலதிபர்

IMG 20170701 WA0024 - 2026

அரசு நிர்ணயித்ததை விட அதிக வரி கட்டியே தீருவேன்அடம் பிடிக்கும்தொழிலதிபர்
டேவிட்

ஜி.எஸ்.டி., அமலான நாளில், ஜி.எஸ்.டி., வரி விதிப்பை வரவேற்று, திருப்பூர்
பின்னலாடை அமைப்பை சேர்ந்த ஒருவர் பிரியாணி விருந்து அளித்ததுடன்,
நிர்ணயிக்கப்பட்ட வரியை விட அதிகம் செலுத்த விரும்புவதாக கூறி, ‘‘ அதிக வரி
கட்டியே தீருவேன்’’ என கிளம்பி உள்ளது ஆச்சரியத்தை ஏற்ப்படுத்தி உள்ளது.

நாடு முழுவதும் ஜூலை. 1 ல் இருந்து ஜி.எஸ்.டி., வரிவிதிப்பு அமலுக்கு
வந்துள்ளது. சரக்கு மற்றும் சேவைகளின் மீதான இவ்வரி குறித்து எதிர்மறையான
கருத்துக்கள் பரவலாக காணப்பட்டாலும், ஜி.எஸ்.டி., வரி விதிப்புக்கு ஆதரவான
கருத்துக்களும் ஆங்காங்கே உருவாகி வருகிறது.

அந்த வகையில், திருப்பூரை சேர்ந்த பின்னலாடை தொழில் அமைப்பினர் ஜி.எஸ்.டி.,
வரி விதிப்புக்கு ஆதரவாக கருத்து தெரிவித்ததோடு, ஜி.எஸ்.டி., அமலான முதல்நாளான
நேற்று (சனிக்கிழமை) தனது தொழில் நிறுவனத்தில் பணி புரிபவர்களுக்கும்,
நண்பர்களுக்கும் பிரியாணி விருந்தளித்து கொண்டாடி உள்ளார்.

திருப்பூர் வால்ரஸ் இன்டர்நேஷனல் உரிமையாளர் டேவிட் என்பவர் ஜி.எஸ்.டி., வரி
விதிப்பால் நாட்டுக்கும், நாட்டு மக்களுக்கும் நண்மை தான் ஏற்படும் என்று
தெரிவித்ததோடு, பிரியாணி விருந்தளித்து நண்பர்களை குஷிப்படுத்தி உள்ளார். இது
குறித்து டேவிட் கூறுகையில், ‘ ஜி.எஸ்.டி., வரி விதிப்பு தேசத்தின்
வளர்ச்சிக்கான ஆரம்பம் தான். இதன் மூலம் வெளிப்படையாக தொழில் செய்து,
நேர்மையாக வரி செலுத்தி மகிழ்ச்சியாக வாழலாம். திருப்பூர் பின்னலாடை தொழில்
வளர்ச்சிக்கு ஜி.எஸ்.டி., வரி விதிப்பு மிக உதவியாக இருக்கும். மிகச்சிறிய
வியபாரிகளாக இருந்தாலும், ஜி.எஸ்.டி., சுய உதவிக்குழுக்களாக 10 பேர் சேர்ந்து
குழுவை உருவாக்கி செயல்படுவோம். இதற்கான பொதுவான குழுவை உருவாக்கி அதன் மூலம்
அனைவருமே முறையாக வரி செலுத்திட வழி வகை செய்யப்படும்.

மேலும் தற்போது நிர்ணயிக்கப்பட்டுள்ள ஜி.எஸ்.டி., வரியை விட அதிகமாக வரி
செலுத்தி நாட்டின் வளர்ச்சிக்கு உதவிட அனைவரும் முன்வர வேண்டும். நான் அரசு
நிர்ணயித்துள்ள வரியை விட அதிகமாக வரி செலுத்த விரும்புகிறேன். அதற்காக
வாய்ப்பினை அரசு உருவாக்கி தர வேண்டும். எனது அடிப்படை தேவைக்கு போக மீதி
வருமானம் அனைத்தையுமே அரசுக்கு வரியாக செலுத்தி இந்த நாட்டின் வளர்ச்சிக்கு
உதவ விரும்புகிறேன். இது போல அனைவருமே முன் வர வேண்டும் என்றார்.

ஜி.எஸ்.டி., வரி அதிகமாக இருக்கிறது, குறைக்க வேண்டும் என பல தரப்பினரும்
கூறி வரும் நேரத்தில், ஜி.எஸ்.டி., வரி அமலாகிய நாளில் பிரியாணி விருந்து
அளித்த தொழிலதிபர் டேவிட், அரசு நிர்ணயித்த ஜி.எஸ்.டி., வரியை விட அதிகம் வரி
செலுத்த தானாக முன்வருவது ஆச்சரியமான விஷயம் தானே.

இதுதான் பெரியாரிஸம்

sekar subhavee - 2026

கல்யாணப் பத்திரிக்கையில் என் பெயரோடு சாதியைப் போட்டது…என் அண்ணன் மகனின் முடிவு. அதில் நான் எப்படித் தலையிட முடியும்.

– சுப_வீரபாண்டியன்.

“எல்லாமே பணம்-ஆஸ்பத்திரியில்”

179751 520985591284350 386318859 n - 2026

“எல்லாமே பணம்-ஆஸ்பத்திரியில்”

(உடம்புக்குக் கொஞ்சம் அசௌகரியம் வந்தாலும்,
ஆஸ்பத்திரியில் சேர்த்து விடுகிறார்கள். வியாதிக்கு
மருந்து வேணும்தான்.ஆனால்,’அருமருந்து’ ஒண்ணு
இருக்குங்கிறது தெரிகிறதில்லே!”- பெரியவாள்.

கட்டுரையாளர்-ஸ்ரீமடம் பாலு
புத்தகம்-காஞ்சி மகான் தரிசனம் (139)
தட்டச்சு-வரகூரான் நாராயணன்.

(ஒரு சிறு பதிவு)

நடுத்தர வயது பக்தர்.பரம்பரையாக ஸ்ரீமடத்தின் பக்தர்.

“அப்பாவை ஆஸ்பத்திரியில் சேர்த்திருக்கேன்.
பிரக்ஞை இல்லை.”

சிறிது நேரம் நிறுத்தி,

“பணம் ஏராளமாகச் செலவாகிறது.பணம்,பணம்
என்று பிடுங்குகிறார்கள்.
தண்ணீருக்குப் (Drips) பணம்;
காற்றுக்குப் (Oxygen) பணம்;
கட்டிலுக்குப் (Bed) பணம்…”

“அப்பாவுக்கு என்ன வயசு?”–பெரியவா

“சதாபிஷேகம் ஆயிடுத்து.”—பக்தர்.

“அவரை டிஸ்சார்ஜ் பண்ணி அழைச்சிண்டு வந்து,
வீட்டில் ஒரு கட்டிலில் படுக்க வை. ரொம்ப
உஷ்ணமில்லாமல் கஞ்சி,பால் மாதிரியான பானங்கள்
கொடு. அவர் காதிலே படுகிறாப் போல தினமும் விஷ்ணு
சஹஸ்ரநாமம் சொல்லு. எல்லாருமா பகவன் நாமாவைச்
சொல்லணும். சிசுருஷை பண்ணு. உனக்குப் பணச்செலவும்
இல்லை.அவரும் கடைசி காலத்தை அமைதியாகக் கழிப்பார்.”

மனத் திருப்தியுடன்,பிரசாதம் பெற்றுக்கொண்டு சென்றார்.

அவர் போன பிறகு அருகிலிருந்த அடியார்களிடம்,

“இப்போதெல்லாம் யாருக்கும் தர்மம் தெரியறதில்லே.
உடம்புக்குக் கொஞ்சம் அசௌகரியம் வந்தாலும்,
ஆஸ்பத்திரியில் சேர்த்து விடுகிறார்கள். வியாதிக்கு
மருந்து வேணும்தான்.ஆனால்,’அருமருந்து’ ஒண்ணு
இருக்குங்கிறது தெரிகிறதில்லே!”-என்றார்கள் பெரியவாள்.

ஜூலை-1 முதல் ஜிஎஸ்டி: வரிந்து கட்டும் எதிர்க்கட்சிகள்

GST - 2026

ஜி.எஸ்.டி எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரி இன்று நள்ளிரவு முதல் நாடு முழுவதும் அமலுக்கு வருகிறது. ஜி.எஸ்.டி அறிமுக விழாவிற்காக நாடாளுமன்றத்தில் சிறப்பு கூட்டத் தொடருக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றது. ஜி.எஸ்.டி (சரக்கு மற்றும் சேவை வரி) வரி நாடு முழுவதும் நாளை அமலுக்கு வருவதால் பல பொருட்களும் விலை உயரும் என எதிர்பார்க்கப் படுகிறது.

நம் நாட்டில் தற்போது உற்பத்தி வரி, விற்பனை வரி, சேவை வரி உள்ளிட்ட பல்வேறு விதமான மறைமுக வரிகள் உள்ளன. இந்த வரிகளுக்கு மாற்றாக நாடு முழுவதும் ஒரே சீரான வரியான சரக்கு, சேவை வரி என்ற ஜி.எஸ்.டி. வரியை அமல்படுத்த மத்திய அரசு முடிவு செய்தது. இதன்படி, ஜூலை 1-ந் தேதி (நாளை) முதல் நாடு முழுவதும் ஜி.எஸ்.டி. வரி அமல்படுத்தப்படுகிறது.

ஜி.எஸ்.டி. வரி விதிப்பு முறையை அறிமுகப்படுத்துவதற்காக வெள்ளிக் கிழமை இன்று நள்ளிரவு நாடாளுமன்றத்தில் சிறப்புக் கூட்டம் நடைபெறுகிறது. நாடாளுமன்ற மைய மண்டபத்தின் நடைபெறும் இந்த விழாவுக்கு குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி முன்னிலை வகிக்கிறார். பிரதமர் மோடி ஜி.எஸ்.டி. வரி விதிப்பு முறையை தொடங்கி வைத்துப் பேசுகிறார்.

விழாவில் கலந்து கொள்ளுமாறு அனைத்துக் கட்சி தலைவர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ஆனால், விழாவில் பங்கேற்க மாட்டோம் என்று காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் தெரிவித்துள்ளன. இந்நிலையில், ஜி.எஸ்.டி அறிமுக விழாவில் பீகார் முதல்வர் நிதிஷ்குமாரும் பங்கேற்கமாட்டர் என்று அம்மாநில அரசு தெரிவித்துள்ளது. இருப்பினும் ஐக்கிய ஜனதா தளத்தின் சார்பில் பீகார் அமைச்சர் விஜேந்திர யாதவ் பங்கேற்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

குடியரசுத் தலைவர் தேர்தலில் 17 எதிர்க்கட்சிகள் பா.ஜ.க. கூட்டணி வேட்பாளருக்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், நிதிஷ்குமார் மட்டும் ஆதரவு தெரிவித்து இருந்தார். இருப்பினும் நிதிஷ் குமார் தனது முடிவை வாபஸ் பெற வேண்டும் என்று லாலு பிரசாத் யாதவ் உள்ளிட்ட பலர் வலியுறுத்தி வருகின்றனர். இத்தகைய நிலையில், இன்று நள்ளிரவு நடைபெறவுள்ள ஜி.எஸ்.டி. அறிமுக விழாவில் நிதிஷ்குமார் பங்கேற்காமல் தவிர்த்துள்ளார்.

ஆமா… கேரள சீஃப் மினிஸ்டரு பேரு என்னா?

binarayi vijayan - 2026

ஆமா கேரளத்து சீஃப் மினிஸ்டரு பேரு என்னா?

இப்படி ஒரு கேள்வியை ஒரு குழந்தையிடம் கேட்டு, அது சொல்லும் மழலைச் சொல்லில்… பேர் டர் என்று கிழிந்து விடுகிறது.

ஒரு ஆசிரியை அதை சரிசெய்து சொல்லிக் கொடுக்க, அந்தக் குழந்தை விளையாட்டுத் தனத்தில் மீண்டும் மீண்டும் அது முதலில் என்ன சொன்னதோ அதையே சொல்லி… கிச்சு கிச்சு மூட்டுகிறது.

ஆமாம்… அப்படி என்னதான் சொன்னது அந்தக் குழந்தை… கேட்டுத்தான் பாருங்களேன்.

வாட்ஸ் அப்பில் வைரலாகப் பரவி வரும் வாய்ஸ் அப் இது…!

அத்துமீறும் சீனாவுக்கு பதிலடி: எல்லையில் இந்திய ராணுவம் குவிப்பு

indo china border - 2026

புதுதில்லி:

சீனாவுக்கும் பூடானுக்கும் ஏற்கெனவே பிரச்னையில் இருந்துவரும் எல்லைப் பகுதியில் சீனாவின் பீப்பிள்ஸ் லிபரேஷன் ஆர்மி, சாலைக் கட்டுமானப் பணிகளை மேற்கொண்டு வருகிறது.

சிக்கிம் பகுதியில் இந்தியா, சீனா, நேபாள எல்லைகளின் மும்முனைச் சந்திப்பில் உள்ளது டோக்லாம். இந்த இடம் தங்களுக்கு சொந்தம் எனக் கூறி அங்கு சாலை அமைக்கும் பணியில் சீனா ஈடுபட்டுள்ளது. அதற்கு இந்தியாவும், பூடானும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. சில நாட்களுக்கு முன்னர் இந்திய நிலப் பகுதியில் ராணுவ போஸ்ட்களை அத்துமீறித் தாக்கியது சீன ராணுவம். இதை அடுத்து அங்கே இந்தியா தனது ராணுவத்தை கூடுதலாக நிறுத்தி வருகிறது. எனவே பதிலுக்கு பதில் எனும் வகையில், பழைய 1961ம் வருட போரை இந்தியா நினைவில் கொண்டு சீனா மீதான கடும் போட்டி மனப்பான்மையை கைவிட வேண்டும் என்று எச்சரிக்கை விடுக்கும் வகையில் சீனா செயல்பட்டது. இது இந்தியத் தரப்புக்கும் கடும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. இருப்பினும் இந்தியா தனது ராணுவத்தை வாபஸ் பெறும்படி சீனா வலியுறுத்தி வருகிறது. மேலும் பீஜிங்கில் உள்ள இந்திய தூதரகத்திடம் இது குறித்து எச்சரிக்கையையும் விடுத்து வந்தது சீனா.
இந்நிலையில், எல்லைப் பகுதிக்கு உடனடியாக விரைந்தார் இந்திய ராணுவ தளபதி ஜெனரல் பிபின் ராவத். காங்டாக்கின் 17 மலைப்பிரிவு தலைமையகம் மற்றும் கால்போங்கில் 27 மலைப் பிரிவு ராணுவ தலைமையகத்தை பார்வையிட்டு பிபின் ராவத் ஆய்வு நடத்தி வருகிறார். ஆய்வு முடிந்து, ராணுவ தளபதி இன்று மாலை தில்லி திரும்புகிறார். இதை அடுத்து 33 கார்ப்ஸ் மற்றும் 17 பிரிவு தளபதிகள் உள்பட அனைத்து உயர்மட்ட அதிகாரிகளும் கலந்து கொள்ளும் விரிவான ஆலோசனைக் கூட்டம் நடைபெறும் என தகவல் வெளியாகி உள்ளது.
இந்நிலையில், சீனாவுக்கு பதிலடியாக, எல்லைப் பகுதியில் இந்தியாவும் 3000 ராணுவ துருப்புகளை நிறுத்தியுள்ளது.

நேரலையில் மயங்கிச் சரிந்த பெண் நிருபர்: வைரலாகும் வீடியோ

pak lady reporter fell down - 2026

நேரலை நிகழ்ச்சியின் போது மயங்கிச் சரிந்தார் பெண் நிருபர் ஒருவர். இது குறித்த வீடீயோ காட்சி இணையாதளங்களில் வைரலாகிவருகிறது

பாகிஸ்தானில் பெண் நிருபர் ஒருவர் நேரலை  ஒளிபரப்பின் போது மயக்கமடைந்து சுருண்டு விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பாகிஸ்தானின் லாகூர் பகுதியில் பி.டி.ஐ கட்சியின் பெரும் பொதுக் கூட்டம் நடைபெற்றது. இதை நேரடியாக பல சேனல்கள் ஒளிபரப்பின. அப்போது, சேனல் ஒன்றின் நிருபர் இர்ஷா கான் என்ற பெண்ணும் அங்கு இருந்தார். கூட்டம் தொடர்பான தகவல்களை கிரேன் ஒன்றில் மீது ஏறி அமர்ந்தபடி நேரலையாக வழங்கிக் கொண்டிருந்தார். அப்போது திடீரென்று அவர் கண்கள் மேலே சொருகின. மைக் மெதுமெதுவாக கீழே விழ, திடீரென்று மயங்கி மேலிருந்து விழுந்தார். அவர் விழுவதைக் கண்டதும் கீழே கூடியிருந்த கட்சித் தொண்டர்கள் தாங்கிப் பிடித்தனர். இருந்தாலும் தரையில் விழுந்துவிட்டார் இர்ஷா. அங்கிருந்தவர்கள் அவரை உடனடியாக அருகில் இருந்த மருத்துவமனையில் சேர்த்தனர்.